கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 6,023 
 
 

RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் காட்சி ஒரு பெரிய திரையில் ஓடிக் கொண்டிருந்தது.

“என்னய்யா செய்கிறார்கள் இந்த மனிதர்கள்?”

“தெரியவில்லை சார். அவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் ஒத்திசைக்கப்பட்ட பாணியில் ஒரு சேர நகர்த்துகிறார்கள். இது போன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்களை நாங்கள் பார்த்து விட்டோம். எதற்காக அப்படி செய்கிறார்கள், அதன் அர்த்தம் என்ன என்று யாருக்கும் புரிபடவில்லை.”

“மனிதர்களை பற்றி, அவர்களின் குணாதிசியங்கள், அவர்களின் வாழ்வு முறை என்று எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோம் என்று நினைத்திருந்தேன். கடைசியில் இப்படி ஒன்று புதிராத புதிராக முளைத்திருக்கிறதே!”

“இந்த வீடியோக்களைப் பார்த்தால் மனிதர்கள் ஏதோ சமிக்ஞை செய்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவர்களின் இயக்கத்தில் ரகசிய செய்திகள் புதைந்திருக்கலாம். அதன் குறியீட்டை உடைக்க நம்மிடம் இருக்கும் தலைசிறந்த கிரிப்டோகிராஃபர்களை கூப்பிட்டிருக்கிறோம்.”

“சரி, நல்லது. இன்னும் பத்து நாட்களில் நாம் பூமி மேல் தாக்குதல் தொடுக்கப் போகிறோம். அதற்குள் இந்த புதிரை அவிழ்க்க வேண்டும்.”

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *