ரகசியம் – ஒரு பக்க கதை
கதையாசிரியர்: கே.எம்.சம்சுதீன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,896
கடைப்பையனுக்கு முதலாளியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிந்தது. ஒரு இளம் தம்பதி டி.வி.டி பிளேயர் வாங்கினர். உடனே முதலாளி முருகேசன் அவனிடம் சொன்னார்… ”டி.வி.டி&யை அவங்க கார்ல வச்சுட்டு வா…’’
இப்படித்தான் யார் எதை வாங்கினாலும், ‘கார்ல வச்சுட்டு வந்திரு’ என்று சகட்டுமேனிக்குச் சொல்வார். இது அவனுக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன விஷயம். அவருக்கோ சொல்வதில் சலிப்பு வந்ததே இல்லை.‘‘வேண்டாங்க, நாங்களே எடுத்துட்டுப் போயிடுறோம்…’’ என்றபடி அதைக் கையில் தூக்கிக்கொண்டு நழுவினார்கள் அவர்கள்.
வாடிக்கையாளர் சென்றதும் முதலாளியைப் பார்த்துக் கேட்டே விட்டான்.‘‘அவங்க மொபெட்ல வந்து இறங்கினத நாம மாடியிலேர்ந்து பார்த்தோம். அப்படியிருந்தும் அவங்க கார்ல வந்ததா பாவிச்சு…’’‘‘இதோ பாருப்பா… இப்படிச் சொன்னா, ‘நம்மளப் பார்த்தா கார்ல வர்ற பார்ட்டி மாதிரி தோணுது’ன்னு அவங்க உணர்வாங்க. அதுல எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா? வாடிக்கையாளருங்க சந்தோஷம்தான் நமக்கு முக்கியம்…’’ என்றார் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.அடிமட்டத்திலிருந்து முதலாளி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் ரகசியம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது!
– செப்டம்பர் 2010
தொடர்புள்ள சிறுகதைகள்
நிஜத்தின் நிறம்
இரா.கலைச்செல்வி
April 21, 2026
அங்கும் இங்கும்
முத்தமிழ்ப்பித்தன்
April 21, 2026
மாசில்லா வாழ்க்கை
அல்போன்ஸ் மோசஸ்
April 21, 2026