யாரிடம் குறை இல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 1,231 
 
 

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடின்றி பிறத்தல் அரிது” ஒளவையார்.

காலையில் கதிரவன் தான் வருவதை, சிவந்த அந்த கதிர்களால் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தான். பார்த்திபன் விட்டில் காமாக்ஷி இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தாள்.

“ராகினி, எழுந்திரு, நீ கோலம் போட போறேன்னு சொன்னியே”, காமாக்ஷி வந்து எழுப்பிக் கொண்டு இருந்தாள். “மம்ஹும், முனகியபடியே, எழுந்தாள் ராகினி. சமையல் அறையிலிருந்து காமாக்ஷி, நெய்யில் முந்திரிப் பருப்பை வறுக்கும் வாசனை வந்தது.

ராகினி காஃபியைகுடித்துககொண்டே”லதா, அந்த வாசலையும் நன்றாக இழுத்து தொடைச்சுடு”, என்று வேலைக் காரியிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, பார்த்திபன், பையில் பூ, வெற்றிலை, பால் இத்யாதிகளுடன் உள்ளே நுழைந்தார். பார்த்திபன்,காமாக்ஷியின் இரு கண்களும் அவர்களின் இரு பெண்கள் ரம்யாவும், ராகினியும் தான். தன்னுடைய குமாஸ்தா வேலையில், இருவரையும் தன்னால் முடிந்த அளவு படிக்க வைத்து இருந்தார். காமாக்ஷியும், சிறுக கட்டி பெருக வாழ்’ என பார்த்திபன் வாழ்க்கையில், ஈடு கொடுத்து, பெண்களை நன்றாகவே வளர்த்தி இருந்தாள். மூத்தவள் பெயருக்கு ஏற்ப, குணத்திலும், பார்ப்பதற்க்கும் ரம்யமாகவே இருந்தாள். ராகினி ஒரு படி மேலே எல்லாவற்றிலும், படு சுட்டி என்றே சொல்ல வேண்டும். குளித்து, தயாராகி வந்த ரம்யாவை பார்த்திபன் அணைத்துக் கொண்டார். தன் இரு கைகளாலும் திருஷ்டி சுற்றிப் போட்டாள் காமாக்ஷி. மாம்பழக் கலரில் மெரூன் சின்ன பார்டர்ரும், மெரூன் பிளவுஸ்சிலும் அவள் அழகாக இருந்தாள்.

மிகவும் எளிய அலங்காரம் அவளின் தோற்றத்தை எடுத்துக் காட்டியது. கண்ணில் மை கச்சிதமாக வேண்டியஅளவு இட்டிருந்தாள். தலைமயிரை ஷாம்பூ போட்டு பின்னி சின்னதாய் பூவை வைத்திருந்தாள். எல்லாம் நன்றாகவே அமைந்திருந்தது.

ராகினி, அன்று பெரிய கோலம் போட வெளியே சென்றாள். ரம்யாவை பெண் பார்க்க வரும் நாட்களில், அவள் எப்பொழுதும் போடுவது பெரிய கோலம் தான். அவளுடைய சிந்தனையால் சிறிய கோலத்தில் ஆரம்பித்து அதை பெரியதாக போட்டு விடுவது அவள் வழக்கம். குனிந்து கோலம் போட ஆரம்பித்த அவளுக்கு பல எண்ணங்களில் மூழ்கிப் போனாள்.

இதற்கு முன்னால் வந்த பையன் வீட்டுக்காரர்கள், எப்படி பேசி விட்டு போனார்கள். “என்ன தன் அழகாய் இருந்தாலும்,எங்கமனதுக்கு ஒத்துக்கலை,” என்று பையனின் அம்மா சொன்போது, “தங்களிடம், தரகர் எல்லாம் சொன்னார் இல்லையா”. என்று கேட்ட பார்த்திபனுக்கு ம்ம்,என்று சொன்னவள் ,எல்லோரையும் எழுப்பிக் கொண்டு சென்று விட்டாள்.தன் தோழி,சுவாதியின் அக்காவிற்கு, பெண் பார்க்க வந்தவர்கள், “படிச்ச மட்டும் போதுமா? மரபாச்சி மாதிரி இருந்த எப்படி?”என்று சொல்லி எழுந்து சென்றதாய் சொன்னது நினைவில் வந்தது. அத்தை பெண் கனகாவை பார்க்க வந்தவர்களும், பல கேள்விகளால், அவர்களை அழ வைத்தது ராகினியின் நினைவுக்கு வர, அவள் கண்களில் வந்த கண்ணீரை கோலத்தில் விழாமல் இருக்க கையினால் தட்டி விட்டாள். எத்தனை இருந்தாலும், இந்த குறைகளை விட, மனக் குறை என்ற பெரிய குறையை பகவான் அவர்களுக்கு கொடுத்ததை மறந்து விட்டார்கள், என்று நினைத்து கொண்டு நிமிர்ந்த போது, ரம்யா அலங்கார தேவதை போல எதிரே நின்று இருந்தாள். “என்ன இத்தனை நேரம்?” என்று சைகையால் கேட்டாள். ஒடி வந்து அணைத்துக் கொண்டாள் ராகினி.

“தரகரை பார்த்தேன் காமாக்ஷி, பத்து மணிக்கு கூட்டிண்டு வந்துடறேன் என்று சொன்னார். ரம்யா பேச முடியாது என்று சொல்லியாச்சன்னு கேட்டேன்”, என்று சொன்னார் பார்த்திபன்.

“எல்லாம் சொல்லியாச்சு சுவாமி,மிகவும் நல்ல குடும்பம்.அதுக்காக பையனை தப்பாக நினைக்க வேண்டாம். ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை பார்க்கிறான். ஒரே தங்கை தான். ராமச்சந்திரன், சிவகாமி தம்பதியரை போல கிடைக்க கொடுத்து வைக்கணும் என்றார். “என்று பார்த்திபன் மெதுவாக சொன்னது இரு பெண்களின் காதுகளிலும் விழுந்தது.

நல்லபடியாக எல்லாம் முடிஞ்சா, பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கறதாயும், அம்பாளுக்கு புடவை சாத்தறதாயும், வேண்டிண்டு இருக்கேன்” காமாக்ஷி கண்களை துடைத்துக் கொண்டே சொன்னாள்.

சரியாக பத்து மணிக்கு ராமச்சந்திரன், சிவகாமி, பிரகாஷ்,பிரீத்யுடன் தரகரும் வந்தனர். சில நேரம் பேசிய பின் ரம்யாவை கூப்பிட்டு, அவளிடம் பேசியபின்,”எங்க எல்லாருக்கு மேசம்மதம். பிராகஷுக்கும் பூரணசம்மதம்,.கல்யாண தேதிக்குறிக்கலாமே” என்று ராமச்சந்திரன் சொன்ன போது, பார்த்திபன் பேச ஆரம்பித்தார்.

“தப்பா சொல்றேன்னு நினைக்க வேண்டாம், இப்ப நீங்க ரம்யாவை பார்த்ததில் அவள் பேச முடியாது என்பது தெரியும். பின்னால் பிரச்சினை வரக் கூடாது, எதற்கும் பையனிடம் இன்னொரு முறை கேட்டுடறது நல்லது” என்று தெளிவாகக் கூறினார்.

“அன்கிள், இந்த மாதிரி உடல் ஊன முற்றவர்கள் மிகவும் அறிவற்றால் உள்ளவர்களாகவும், மன திடமானவர்களாகவும் இருப்பார்கள். இறைவன் ஒரு குறை கொடுத்தால், இன்னொரு விதமாக அதை சமாளிக்கவும், வெற்றி கொள்ளவும் ஆற்றல் கொடுத்து இருப்பான்” என்று தெளிவாக பேசிய பிரகாஷை தொடர்ந்தார் ராமச்சந்திரன், “என்ன சுவாமி? இதெல்லாம் கண்ணுக்கு எதிரே பகவானால் கொடுக்கப் பட்ட குறை. யாரிடம் குறை இல்லை, எத்தனை பேருக்கு, கடவுள் எல்லாவற்றையும் கொடுத்து இருந்தாலும், அவர்களிடத்தில் பரந்த மன்பான்மையும், நல்ல வார்த்தையால் பேசுவதும் கிடையாதே, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், இல்லை, எல்லாம் தெரிந்து ஒரு தெளிவான முடிவோடு தான் வந்து இருக்கோம்.” என்று சொன்னார். ராமச்சந்திரன், சிவகாமி தம்பதியரின் கால்களை கண்ணிரால் அலம்பினாள் ரம்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *