யாகப் பூசை!





கோபி கோமதிக் குடும்பத்தில் சிலக் காலமாகவே தினம் தினம் ஏதோவொரு வடிவத்தில் வாழ்க்கைத், தொழில் , பிள்ளைகளின் கல்வி இப்படிப் பிரச்சினைகள் இருந்துக் கொண்டேயிருந்தன. கோமதிக்குத் தன் கணவன் கோபியைக் கண்டாலேப் பிடிக்கவில்லை. ஒரு வார்த்தைப் பேசினால் ஒரு மணி நேரத்துக்குச் சண்டை நடக்கும். கோபி தொழிலுக்குப் போய் வருவதற்குள் எதுசரி ஒருப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். கல்வியில் பிள்ளைகள் எப்படித் தான் முழுநாளும் படித்து விட்டு பரீட்சையெலுதினாலும் தேர்வுக்கான எதிர்ப்பார்த்தப் புள்ளிகளைப் பெற்றிட முடியாத நிலை. என்ன அநியாயமிது. தோசங்கள் கிரகங்கள் வினைகள் பெயரெண் துரதிஷ்டங்கள் ராசி நட்சத்திரத்தின் சூழற்சி மாற்றங்கள் பிறந்த எண்ணின் கோளாறுகள் அப்பப்பா இப்படியேப் போனால் மனிதன் எப்போது நிம்மதியாய் வாழ்வதென்று யோசிக்கும் படியாயிற்று.
கோபிக்கும் கோமதிக்கும் நிம்மதியில்லாதக் காலங்கள்!. என்னவென்றுச் சொல்வது. யாருக்கும் பிரச்சினைகள் வரும்போது எத்தனையோ முறை எத்தனையோப் பேருக்கு இவர்களும் ஜாதி மதம் மொழித் தாண்டிக் கூறிய அறிவுறுத்தல்களைக் கேட்டவர்கள்! அடயிதுக் கூட நல்ல யோசனையாகத்தானிருக்கின்றது. நீங்கள் கூறியப்படி செய்துப் பார்ப்போமே! எனக் கூறியவர்கள், செய்துப் பார்த்துப் பலன் கிட்டியதாய்க் கூறியுள்ளார்கள்.
எத்தனைப் பேருக்குப் பிரச்சினைகள் எந்த மதத்தினருக்கு வந்தாலும் காலை மாலைக் குளித்து முழுகி வீட்டில் முழு மன அமைதியோடு எந்தச் சாதியினராயிருந்தாலும் பரவாயில்லை. விளக்கேற்றி சாம்ராணி வாசனைப் புகைப் பிடித்து இறைவனைத் தொழுதால் மனசு இலகுவாகயிருக்கும். நல்லயிறைச் சிந்தனையோடு வணங்குதலுக்குறிய வாழ்க்கையை நம்பிக்கையோடு நடத்திட நினைக்கும் போதே எல்லாப் பிரச்சினைகளும் முடிவாகிவிடுமென்பது இவர்களின் கருத்தாயிருந்தது.
இருந்தாலும் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியுமென்பார்களல்லவா அதுப் போலிவர்களுக்கும் பிரச்சினைகள் அடுக்கடுக்காய் வந்து ஏழரைச் சனியின் பாதிப்பை உணர்ந்தப் போதுதான் நிலைத்தடுமாறிப் போனார்கள். இவர்கள் மந்திரம், தந்திரம் , செய்வினை யெல்லாவற்றையுமே தூசுக்கும் கணக்கெடுக்க மாட்டார்கள். கோயில், பள்ளிவாசல், சேர்ச், பௌத்த ஆலயங்கள் இதில் ஏதோவொன்றுக்குப் போய்வந்தால் மனதிலமைதியும் ஆறுதலும் கிடைத்து இறைக் கருணைக் கிடைத்தால் அதுவொன்றுத்தான் வாழ்வின் நிம்மதியென நம்பியிருக்கும் போது தான் நித்தமொருப் பிரச்சினை நிம்மதியைக் கெடுத்திடவே! எந்த வகையிலும் எல்லாமேப் பிழைத்தப் போதுதான் மனம் நொந்துப் போனார்கள்.
நாம் தடுமாறும் போதுதான் பல சரியானவர்களும், பிழையானவர்களும் எம்மையடிமைப் படுத்தி ஆளப் பார்ப்பார்கள். அந்த நிலை கோபிக்கும் கோமதிக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது. இவர்கள் வீட்டுப் பிரச்சினை ஒவ்வொரு உறவுகளிடமும், நெறுங்கிய உறவுகளிடமும், நெறுங்கிய நட்புகளிடமும் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து முழுமையாய் அடைந்தப் போது எல்லோருமேயிவர்களுக்கு மேலானவர்களானார்கள்.
ஒருவருக்கொருவர் தெரிந்த விடயங்களைச் சொன்னாரகள். இப்படியானப் பிரச்சினையுள்ளவர்கள் நாட்பத்தியெட்டு நாட்கள் அதாவது ஒருமண்டல நாட்கள் விளக்குப் போடுங்கள் சரயாகிவிடும் என்பார்கள். இன்னுமொருவர் இருபத்தியொரு எலுமிச்சைப்பழம் மாலைக் கட்டிப் போடுங்கள் பிரச்சினைத் தீர்ந்திடுமென்பார்கள். ஒன்பது நாட்கள்த் தொடராய் இந்த மந்திரத்தைப் படியுங்கள் எல்லாம் சரியாகிடும் என்பார்கள். இப்படியேப் பலரும் பலவிதமான ஆலோசனைகளைக் கூறினார்கள். கோபியும் கோமதியும் அசந்துப் போனார்கள் .இத்தனை நாளும் நாம் பேச மற்றவர்கள் கேட்டார்கள். அது ஒருக் காலம் .இந்தக் காலம் மற்றவர்கள் பேச நாம் கேட்க வேண்டியக் காலம். ஆகவே மௌனமாய் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்போம் என அமைதியானார்கள். கோயில் சோதிடரி;டம் சென்று ஜாதகங்களைக் காட்டிட ஆ ஹா இதுவென்ன ஜாதகம் கிரகக்கார ஜாதகமாயல்லவா இருக்கின்றது. இதை நிவர்த்திச் செய்திட பெரியப் பூசைகள் செய்து தோசம் கழித்து மந்திரிக்கப் பட்ட யந்திரம் அணிய வேண்டும். அப்போது தான் தலைக்கு வந்த ஆபத்து , தலைப் பாகையோடுப் போய்விட்டது என்பதற்கு அமைய ஓரளவு நிம்மதியைப் பெறலாம் என்றிடவே கோபி கோமதியிருவருமேப் பயந்து விட்டார்கள். சோதிடரிடம் பதில்க் கேள்விக் கேட்டார்கள். இப்பூசை செய்திட எவ்வளவுப் பணம் தேவையென்று.
அதற்கு சோதிடரோ மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தக் கதைப் போன்று கிட்டத் தட்ட நானிந்தப் பூசையை செய்வதென்றால் ஒரு இலட்ச்சத்தி இருபத்தி ஐய்யாயிரம் எடுப்பேன். இருந்தாலும் இப்போ நீங்கள் சிரமத்திலுள்ளது எனக்கு விளங்குகின்றது. ஆகவே ஒரு இலட்ச்சம் தாருங்கள். நான் சரியாகச் செய்துத் தருகிறேன். கிட்டத் தட்ட மூன்று மணிநேரமாவது யாகம் வார்த்து பூசை செய்ய வேண்டும் என்றார். பள்ளிவாசல் சம்மந்தமாய் தெரிந்த ஒருவருடன் பள்ளியிலொருவரைத் தெரிந்துக் கொண்டார்கள். அங்கேயுள்ளவரும் பிறந்தத் திகதியையும், பெயரையும் வாங்கிக் கொண்டு அலசி ஆராய்தவர் உங்கள் வீட்டுப் பிரச்சினையை சரிச் செய்வதென்றால் ஒன்றரை இலட்ச்சம் தேவைப் படும். செய்ய விருப்பமிருந்தால் காசைத் தயார்ப் படுத்திக் கொண்டு என்னை வந்து சந்தியுங்கள். என வேலைப்பலு அதிகமுள்ளவர்ப் போன்று அந்தயிடத்தில்க் கூறிவிட்டு! இடத்தைவிட்டு நகர்ந்தார்.
சேர்ச்சிக்குச் சென்றதும் அங்குள்ளவொருவரிடம் சேர்ச்சோடுத் தொடர்புள்ள ஒருவர் அழைத்துச் சென்றார். பிரச்சினைகளைக் கேட்டவர் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் தேங்காய் மூடியில் நல்லெண்ணய் ஊற்றித் திரிப் போட்டு விளக்கு வைக்கும் பூசையொன்றுச் செய்ய வேண்டும். அந்தப் பூசை செய்வதென்றால் சுமார் ஒன்றரை இலட்ச்சம் தேவை! விருப்பமென்றால் காசை ஆயத்தப் படுத்திக் கொண்டு வந்து என்னைச் சந்தியுங்கள். ஒருவாரத்துக்குள் செய்யாவிட்டால் இருக்கின்றப் பிரச்சனைகள் இன்னுமின்னும் பூதாகாரமாய் பெரிதாகி விடும். அதன் பிறகு செய்வதென்றால் இன்னும் கடினமாயிருக்கும். சீக்கிரம் யோசித்துப் பார்த்து செய்துக் கொள்ளப் பாருங்கள் என்றார்.
பௌத்த ஆலயத்துக்குச் சென்றப்போது யந்திரம் செய்து சரியான முறையில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ராகு கேது வட்டத்தால் வராதப்படி கூடியச் சீக்கிரமே செய்து முடித்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கிதை தலையனைக்கடியில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் உறங்குங்கள். ஓரளவுப் பிரச்சினைக் குறையுமென்று அரசயிலை, நூல் என்பவற்றைக் கொடுத்தார். மிக விரைவில் பூசை செய்து நிவர்த்தி செய்துக் கொள்ளுங்கள். காசை ஆயத்தப் படுத்திக் கொண்டு என்னை அழையுங்கள் என அவரின் தொலைப்பேசி எண்ணைக் கொடுத்தார். இப்படியே இவர்களும் எல்லோரிடமும் போய் விட்டார்கள். ஒரு இடத்திலுமே சாதாரண காசுக்கு எதுகுமேச் செய்துத் தருவதாகக் கூறவில்லை. கோபியும் கோமதியும் மேலும் மேலும் மனம் நொந்துப் போனார்கள். இப்படியே நாட்கள் ஓடின. அன்றொறு புதன் கிழமை மாலையில் தனது நட்பொன்று கோபியின் தொலைப்பேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி நலம் விசாரித்து விட்டு ,ஒரு விடயம் கூற வேண்டுமென்றுதான் அழைப்பை ஏற்படுத்தினேன்.
இந்தியாவிலிருந்து ஒரு ஜோசியர் வந்துள்ளார் . எமது ஜாதகத்தைப் பார்த்ததும் எல்லாவற்றையும் அச்சுப் போல் சரியாகக் கணித்துக் கூறுகின்றார். இலங்கைக்; காசுக்கு இருநூற்றி ஐம்பது ரூபாய் மட்டுமே வெற்றிலையில் வைத்துக் கொடுத்தால் போதும். இருபது நிமிடத்துக்கு மேல் ஜாதகத்தையப்படியே அலசிக் கூறிவிடுகின்றார். உங்கள் வீட்டுக்கும் அனுப்பிடவாயென்றுக் கேட்டிடவே அழைப்பை எடுத்தேனென்றார். அதைக் கேட்ட கோபியும் சரியென்றுக் கூறிடவே!. மஞசள் நிற மேற் சட்டையும், மஞசள் நிற வேஷ்ட்டியும் நெற்றியில் விபூதி சந்தனக் குங்குமத்தோடு தோல்ப் பட்டையில் மஞ்சள் பைத் தொங்கியப் படி கூறிய முகவரிக்கு வாசலில் வந்து நின்றார்.
நானிந்தியாவிலிருந்து சாமியார் வந்திருக்கின்றேன். வணக்கம்! ஓம் சாந்தியெனக் கைகூப்பினார். பதிலுக்கு இவர்களும் வணக்கம் கூறிக் கதிரையில் அமரும் படிக் காட்டினாரகள். வெள்ளைநிற ஆப்சீட் பேப்பர் கொஞ்சம் கேட்டு ,கோபியின் பெயர், பிறந்தத் திகதி, நேரம் என்பவற்றையும் கேட்டுக் கொண்டார். அவருடையப் பேனாவாலேயே ஒன்பது கட்டங்கள் வரைந்து அவர் முறைப்படி கட்டங்களை நிறைத்தார். ஏதோ வாய் முனு முனுக்கப் பேனாவால் மேலும் கீழும் பார்வையையோட்டினார். கோபியின் ராசி, நட்சத்திரத்தை சரியாகக் கூறினார்.
கோபியின் இன்றைய நடப்புப் பற்றி விளக்கிக் கூறினார். இப்படியே வீட்டிலுள்ளவர்கள் எல்லோரின் ஜாதகத்தையும் பார்த்துக் கூறினார். இதுவெல்லாவற்றையும் சரியானப் பூசைகள் மூலம் செய்துக் கொள்ளுங்கள். பிரச்சினைகள் தொடர்ந்துக் கொண்டேயிருப்பதால் கூடிய சீக்கிரம் செய்து நல்லப்பலனைப் பெற்றிடுங்கள். என்னிடமே செய்ய வேண்டுமென்றக் கட்டாயமில்லை. சரியாகச் செய்யும் யாரையேனும் அழைத்துச் செய்திடுங்கள் என்று சாமியார் கூறிடவே இப்பூசையை செய்ய நீங்கள் எவ்வளவுக் கேட்பீர்கள் என்றார் கோபி.
இந்தியக் காசுக்குப் பெரியத் தொகையாகும். அதனால் சிறிலங்கா காசுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தயார்ப் படுத்தி; கொண்டுக் கூறுங்கள். நல்ல முறையில் செய்துத் தருகிறேன்.|| எனக் கூறிடவே இருவரும் அந்தக் காசை தயார் செய்து, பூசையைச் செய்து குடும்பப் பிரச்சினையிலிருந்து நிம்மதி கிடைக்கச் செய்திடலாமென முடிவெடுத்தார்கள்.
அதன் படி சாமியாரிடம் செய்யும்படி பாரம் கொடுத்தார்கள். பூசையை வெள்ளிக்கிழமை விடியற்காலையில் நான்கு மணிக்கு ஆரம்பிக்க வேண்டுமெனக் கூறிப் பொருட்கலெதுவும் வாங்கி வைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நானே வாங்கி வருகிறேன். உதிரிப் பூக்கள் மாத்திரம் பிடுங்கி வையுங்கள். என்றுக் கூறிடவே சரியென்றவர்கள் வீடு வாசல்க் கழுவித் துப்பரவுச் செய்து குளித்து முழுகி சைவச் சாப்பாடுடன் வேலைகளைத் தொடங்கினார்கள்.
வியாளக்கிழமை மாலையே சாமியாரவர்களும் கோபி வீட்டுக்கு வந்து விட்டார். வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் கரி நாளென்றும் ,பத்தரைமணிக்கு ராகுகாலம் தொடங்கும் முன்னும் பூசை செய்து முடித்து விட வேண்டுமென்பது சாமியாரின் எண்ணப்பாடு. அதன்படி சாமியார் சொன்னப்படி வீட்டில் எல்லோரும் ஆயத்தமானார்கள். சுமார் ஒரு மணியளவில் சாமியார் ஆயத்தமாகி தன் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்தார் அவர் மாலை வரும்போதே ஒரு அறை நிறம்பி வழியுமளவிற்கு பொருட்கள் கொண்டு வந்திருந்தார். வீட்டார்களேத் திகைத்துப் போனார்கள். இவ்வளவுப் பொருட்களை வைத்து என்னப் பூசை செய்யப் போகின்றார் என்று. கோபியிடம் சாமியார் கூறினார்~~நான் வெளியூரில் உள்ளவர்களுக்கெல்லாம் இப்படித்தான் ஒன்லைன் வழியாக பூசை செய்வதை நேரடியாகக் காண்பித்து யந்திரங்களை மாத்திரம் ஒன்லைன் சேவையிணூடே அனுப்பி வைத்திடுவேன். லன்டன்,கனடா, பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற நாட்டவருக்கும் செய்து அனுப்பிக் கொண்டுதானிருக்கின்றேன். எல்லோருமே என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். நேரில் வந்து செய்யும் போது எனக்கான குரு தட்சனையை கவரிலிட்டு வெற்றிலை மேல்வைத்துப் பெற்றுக் கொள்கிறேன். வெளியூரில் உள்ளவர்கள் எனது வங்கிக்கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்டிடுவார்கள்.
அதேப் போன்று ஸ்ரீ லங்கா காரர்களிடமும் ,இந்தியரிடமும் மட்டும்தான் இரண்டு லட்ச்சத்துக்குள் காசு வாங்குவேன். வெளியூரார்களிடம் ஐந்துலட்ச்சம் குறையாமல் வாங்கித்தான் இந்த மாதிரியானப் பூசைகளைச் செய்வேன். காரணமெம்மில் பலப்பேர் கூறுவோமல்லவா இடம், பொருள், ஏவலறிந்து கடமைச் செய்யென்று அதற்கொப்ப எம்மவர்களுக்குத்தான் இரண்டுலட்ச்சம் பெரியக்காசு. அங்குள்ளவர்களிடம் இந்தத் தொகையைக் கேட்டால் என்னை மதிக்க மாட்டார்கள். இதுவென்ன இவ்வளவு குறைந்த விலையிக்குச் செய்கின்றான். அவன் செய்வது சரியாயிருக்குமா? அல்லது பொய்யாக ஏமாற்றி விடுவானாயென்று. அதனாலிடத்திற்கு ஏற்றாற் போல் எனது வசூலையும் மாற்றிக் கொள்வேன் ||என்றார்.
கோபிக் குடும்பத்துக்கும் அவர் கூறுவது சரியென்றேப் பட்டது. சாமியாருமெல்லாவற்றையும் பார்க்கும் போது கண்களைக் கவரும் வகையில் விநாயகருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கும்பம் வைத்து , நவக்கிரகங்களுக்கு ஒன்பது கும்பம் தயார்ச் செய்து யாகத்தடடு ,விபூதி,குங்குமம், சந்தனம், மஞசள், பூமாலைத் தட்டுகள், எழுமிச்சை ஒருத்தட்டு நிறைய, குத்து விளக்குகள், காமாட்சி விளக்கு, பழத்தட்டுகள், தேங்காய்கள், பட்டுத்துணிகள், பால், பலவகையான எண்ணய்வகைகள், சாம்ரானித்தடடு, சூடத்தட்டு, இனிப்பு, காரவுணவு வகைகள், பலாக்கட்டை அப்பப்பா இவ்வளவுப் பொருட்களையும் வைத்து கோபி வீட்டு முன்சாலை அலங்கரிக்கப்பட்டிருந்த விதமேயொரு தனியழகாகத்தானிருந்தது. பார்க்கவே கோயிலைப் போன்று தெய்வீகமாயிருந்தது. இத்தனைப் பொருட்களை வைத்து அவர் செய்கின்றப் பூசைக்கு கேட்டத் தொகைப் பரவாயில்லைத்தான். பொருட்களுக்கே நிறையக்காசு செலவாகியிருக்குமே!. என நினைக்கத் தோண்றியது கோபிக் குடும்பத்தாருக்கு எல்லாவற்றையும் அலங்கரித்து முடித்தவர் அழகாகக் கிழக்குப் பக்கம் பார்த்துப் பலாக்கட்டையில் அமர்ந்துக் கொண்டவர் தன் ஸ்மார்ட் தொலைப்பேசியையெடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். அந்தப் போட்டோவை யாருக்கோ வட்சப் செய்தார். அதன் பிறகுதான் கோபி வீட்டாரை மேற்குப் பாரத்து அமரச் சொன்னார். சாமியாருற்பட அவர்களையும் சேர்த்துவொருப் போட்டோயெடுத்துக் கொண்டார். அதன் பிறகு பூசை வேலைகளையாரம்பித்தார். விநாயகரை நினைத்து இருகைகளாளேயும் நெற்றியில் குற்றிக் கைகூப்பி வணங்கினார். தேவாரம் படித்து காயத்திரி மந்திரம் கூறி, தொடர்ந்து பலவகையான மந்திரங்கள்க் கூறி எல்லாவற்றையும் பக்திமயமாய் செய்து முடித்து இறுதியில் கும்ப நீரால் எல்லோரையும் குளிப்பாட்டினார். கிட்டத்தட்ட நான்கு மணிக்கு ஆரம்பித்தப் பூசை பிரம்ம முகூர்த்தம் கடந்து ஆறுமணி ஐந்து நிமிடம் முதல்,ஏழுமணி முப்பத்து ஐந்து நிமிடத்தில் முடியும் சுபநேரத்தையும் கடந்து .ஏழுமுப்பத்தாறுநிமிடம் முதல் ஆரம்பிக்கும் குளியல் நேரத்தையும் தொட்டுத்தான் பூசை முடிந்தது.
எல்லோருக்கும் மிகுந்த சந்தோசம். வீடு முழுக்க தெய்வீக வாசைன. எல்லோருமே நல்ல யாகப்பூசையில் அமர்ந்தெழும்பிய திருப்தியோடு மனம் மகிழ்ந்தார்கள். இன்றோடு எம்மெல்லாப் பிரச்சினையும் முடிந்து விட்டது. சிலக்காலம் நிம்மதியேயில்லாமல் இருந்த எங்கள் வாழ்வில் இனிமேல் எல்லாமே நல்லதுதான் நடக்குமென
நினைத்துப் பூரித்துப் போனார்கள். சாமியின் தொலைப்பேசிக்கு அழைப்பொன்று வந்தது. அதையவதானித்தவர் கோபி வீட்டில் தனக்கென ஒதுக்கித் தந்த அறைக்குச் சென்று பதில்க் கொடுத்தார்.
ஆமாம் நான் பத்தாயிரம் பெறுமதியான பொருட்கள் வாங்கி வந்துதான் அழகாக அலங்கரித்துப் பூசை செய்தேன். இங்கேயந்திரம் மட்டும்தான் முக்கியப் பொருள் அதற்காக யந்திரத்தை ஐம்பது ரூபா பெறுமதியிலும் உள்வைக்கும் தகடு நாட்பது ரூபாப் பெறுமதியிலும் செய்துக் கொடுத்தால் வேலை முடிந்ததுதான் அப்படிச் செய்தால் வெறும்ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கேட்க முடியும். அப்படிச் செய்யும் போது வயிற்றுப் பிழைப்புக்குச் சரியாயிருக்கும். வசதியான வாழ்க்கை வாழவேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாயிற்குப் பொருட்கள் வாங்கி தெய்வீகக்காட்சியாய் அலங்காரம் செய்துக் காட்டினால்த்தான் ஒன்றறை அல்லது இரண்டு லட்ச்சம் வாங்க முடியும். என்ன செய்வது இன்றையக் காலம் மற்றவர்கள் விழித்துக் கொள்ளும் வரைத்தான் எம்மாலிப்படி சம்பாதிக்க முடியும். மக்கள் விழித்துக் கொண்டால் எம் பாடு சும்மாத்தான். அதுவரை சம்பாதித்துக் கொள்வோமேயென நினைத்துத்தான் இப்படியான வேலைகளைச் செய்கின்றோம். இந்தப்பூசை இந்த வீட்டாருக்குத் திருப்தியாயிருக்கும் போது இன்னும் சிலருக்குச் சொல்வார்கள். அதனாலவர்களும் எம்மைக் கூப்பிட்டு அவர்களுக்கான தேவைகளை செய்துக் கேட்பார்கள்.
அப்போ எமக்கும் கொஞ்சம் தொடராய் வருமானம் வந்ததாயிருக்கும் என்றார் சாமியார். நல்லநேரம் இவர் பேசியதை கோபி வீட்டில் யாரும் காதுக் கொடுக்கவில்லை. அது சாமியாரின் நல்லநேரம் போலும்.