யதார்த்தம்!





நண்பன் குமாரை நீண்ட நாட்களுக்குப் பின் மயூரன் சந்தித்தான். தன் குழந்தைகளின் நிலைப்பற்றி கதைக் கதையாய்க் கூறினான். அதைக் கேட்ட குமாரும் தொடராய் சில விடயங்களைக் கூறத் தொடங்கினான். அநியாயம் அதை அப்படி செய்திருக்கலாம். நீங்கள் பிழையாக ஆரம்பித்து முடிவில் இப்படி பிரச்சினைப் படுத்தி சிக்கல் நிறைந்த விடயமாய் செய்து விட்டீர்களே!. அதற்கென்று முறையொன்று உண்டு. அப்படிச் செய்திருந்தால் சரியாகயிருந்திருக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். எமது விருப்பத்திற்கும்,அக்கம் பக்கமுள்ளவர்களும், பெரியோர்களும், ஊரார்களும் சொல்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் சரிப்படுத்தி திருத்திடலாமென ஊகிப்பது பிழையே!. அதிலும் இன்றைய நவ நாகரீக தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மலையளவு உயர்ந்திருக்கும் இன்றைய நிலையில் எதையெப்படி செய்தால் சரியாயிருக்குமென்று யோசித்தால்!.வளரும் பிள்ளைகளுக்கு தூரயிருந்து அறிவுரை சொல்வதோடு நிறுத்திக் கொண்டு, முடிவுகளை அவர்கள் கையில் விடுவது சரியாகும்.
காரணம் இன்றைய உலகுக்கு முகம் கொடுத்து எப்படி நாமியங்கினால் சரியாக கொண்டு சென்று ஜெயிக்கலாமென அவர்கள் உணர்ந்து வைத்திருக்கின்றார்கள். எத்தனையோ சிறுபிள்ளைகளைப் பெற்றோரின் இறுக்கமான கட்டுப்பாடுகளில் வளர்த்தாலுங் கூட தன் கடமைகளென வரும் போது வயதுக்கேற்ற உணர்வுகளோடு அனைத்தையும் தைரி;யமாய் செய்துக் கொள்கிறார்கள். ஒரு சில பிள்ளைகள் தன் தனிச் சுதந்திரத்தை தவறாகப் பயன் படுத்தி தவறிழைத்துக் கொண்டு தடுமாறுவார்கள்.
சரியும் பிழையும் கடவுள் கையில். இதில் முயற்சி கால்வாசி, விணைகள் கால்வாசி, எண்ணங்கள் கால்வாசி, இறைவனின் ஆசிர்வாதமும், அதிஷ்டமும் கால்வாசியென இப்படித் தான் ஒரு வேலையின் வெற்றி அமைகின்றது. இவைகளை உணராதப் பட்சத்தில் தான் நாம் ஒவ்வொருத்தரின் செயற் பாடுகளையும் பற்றி ஏதோவொரு தகுதியோடு கதைக்கின்றோம்.
அப்படித்தான் வசந்தன் என்பவனையும் ஆசிரியர் ஒருவர் தன் அன்பான கருத்துக்களினாலேயே திருத்தியெடுத்தார். வசந்தன் நட்பு வட்டாரம் ஒன்று மட்டுமேயிருந்தால் நாம் அழகாய் ஜெயித்திடலாமென அற்புதமாய் இனிமையாய் நம்பினான். பெற்றோர் சொல்லைத் துளியளவும் நம்பவில்லை. அழகழகான உடைகள், விலையுயர்ந்த பாதணிகள், வசதிக்கு மீறிய ஆடம்பர செலவுகள், நினைத்தவுடன் நண்பர்களுடன் ஆசைப்பட்டப் பயணங்கள், காலையில் வெளியில் வந்தால் மீண்டும் பணம் தேவைப்படும் போதுதான் வீட்டு நினைவு வரும்.
வீட்டுக்கு வந்ததும் தகப்பன் தாய் சகோதரங்களுடன் காசுக்காக மட்டும்தான் சண்டை! சண்டை!! சண்டை!!!. அந்த வீட்டிற்குள் வசந்தன் வந்தால் மட்டும் தான் சத்தம் கேட்கும். காசு தரமுடியாதென்று அப்பா அம்மாவான கேசவன்- குமுதினி கூறிவிட்டால் அதுதான் அன்றையப் பிரச்சினையாக வீட்டிலிருக்கும். வசந்தனுக்கு யாரும் எப்படிப் போனாலும் பரவாயில்லை. தனக்குத் தேவைக் காசு. அந்தக் காசு எந்த வகையில் சரி தனக்குக் கிடைத்தால் போதுமென்பது மட்டுமே அவனின் வாதம். இதை எப்படி சமாளித்து சரியானதொரு முடிவெடுத்துப் பிரச்சினை இல்லாத வீடாய் மாற்றுவதென்று பெற்றோறுக்குப் பெரியதொரு சிந்தனையாய் மாறிப் போனது.இங்கே பிழைகள் நல்ல தந்தை தாயோ அல்லது வளர்க்கத் தெரியாமல் வளர்த்த பிள்ளையோ இல்லை. காரணம் பெற்றோரிருவரும் நல்லவர்கள்தான். பிள்ளையையும் நன்றாகத்தான் வளர்த்தார்கள்.
இருந்தும் வசந்தனிந்த நிலைக்கு ஆளானான் என்றால் அதற்குப் பல பிரச்சினைகளிருந்தன. வசந்தன் பாடசாலையில் நன்றாகப் படிக்கும் நல்ல மாணவன் அவனுக்கு நட்பு வட்டாரம் பெரியது. பல நண்பர்கள் ஒன்றுக் கூடி ஏராளமான விளையாட்டுக்கள் விளையாடுவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சில விளையாட்டுக்கள் விணையாவதுமுண்டுதானே! அது போலொரு நாள் வசந்தனுக்கு அறிமுகமில்லாத உணவுப் பொருளாக போதை வஸ்த்துக்களிலொரு வகையைப் பயன்; படுத்தும் சந்;தர்ப்பத்தை வர்மன் எனும் நண்பன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டான்.
பரீட்சைகளில் நல்ல புள்ளிகளெடுத்து முன்னிலையில் வலம் வந்த வசந்தனுக்கு இது தெரியாமல் போய்விட்டது. பாடசாலைக்கருகிலேயே சிற்றுண்றி வியாபாரியாக இருக்கும் மோகன் எனும் சமூக விரோதி இப்படி நடந்துக் கொள்வது அநேகருக்குத் தெரியவில்லை. ஓரளவு வசதியான மாணவர்களை இலாபகமாக கையில் பிடித்துக் கொண்டவன் இரகசியமாகப் போதைகளடங்கிய உணவு வகைகளையும் விற்பனை செய்து சுயலாபமீட்டுவது அவனுக்குச் சரியெனப்பட்டதுப் போலும். ஆனாலது எத்தனை மாணவர்களையும் அவர்கள் சார்ந்த அப்பா அம்மா சகோதர சகோதரிகளடங்கிய வீட்டாரையும் பாதிக்குமென்று உணரமறந்துப் போனான். அவன் இவைகளை விற்று வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்பதை மட்டுமே தனிச் சிந்தனையாகக் கொண்டிருந்தான்.
பீட,p சிகரட், போயிலை, மதுபான வகைகள் என்பவைகளை விற்பனைச்; செய்து அதையொரு வருமானமாக எடுத்து வந்து வீட்டிலுள்ள பொண்டாட்டிப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுக்காதேயென்று மோகனின் தந்தையும் தாயும் தலையால் அடித்துக் கொண்டார்கள். கொஞ்சமாக உழைத்தால் போதும் அதை நேர்மையாக சம்பாதித்து அதில் வரும் சிறிய இலாபத்தில் வாழப் பழகினால் அந்த வாழ்க்கை ரொம்பவே அழகாயிருக்குமென்று எத்தனையோ முறைக் கூறியுள்ளார்கள்.
வியாபாரமென்பது இலாபமில்லாது செய்ய முடியாது. செய்தாலதில் பயனுமில்லை. அந்த விடயமொன்று உண்மைத் தான். அதற்காகப் பாவப்பட்ட பொருட்களை கொல்லைலாபம் வைத்து பாவ சம்பாத்தியம் சமபாதிக்க நினைக்கக் கூடாது. வியாபாரம் செய்வோனும் பிரயோஜனப் பட்டு, வாங்குவோரும் சந்தோசப்பட்டு ஏற்றுக் கொள்ளும் வியாபார சம்பாத்தியம் தான் பலன் தருமென்று அடிக்கடி மோகனுக்கு வற்புறுத்தி சில அறிவுரைகளைக் கூறினாலும் அவன் அவைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அவனுக்கு என்ன செய்துசரி நிறைய உழைத்து வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஒரேக் குறி;க்கோல் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இப்படியான சந்தர்ப்பத்தில் தான் செல்வச் செழிப்பில் கழுத்தில் பத்து சவரன் மதிக்கத்தக்க சங்கிலி, இரண்டு கைகளிலும் பெரிய பெரிய தடிப்பத்தில் கைச் சங்கிலிகள், விரல்களில் தடிப்ப தடிப்ப மோதிரங்கள்,விலையுயர்ந்த சேர்ட்,கலுசன்,பாதணி இப்படிப் பார்க்கவே பணக்காரர் எனத் தெரியுமளவிற்கு உயர்ரக வாகனத்தில் வந்திறங்கிய பாதகன் முரளியின் சந்திப்பு மோகனுக்குக் கிடைத்தது.
முரளியின் வாழ்க்கைப் பற்றிய வரலாறு மோகனுக்குத் தேவைப் படவில்லை. அவனுக்குக் கண்ணில் பட்டது முரளியின் ஆடம்பர வரவும், மற்றையவர்கள் பெரிய வசதியான மனிதனென்ற அடிப் படையில் அவனுக்குக் கொடுத்த மரியாதையும் தான். அவனுடைய காசுக்கும், செயல்களுக்கும் நிறையப் பேர் மயங்கி கையெடுத்துக் கும்பிடுமளவிற்கு மரியாதைக் கொடுத்து ஊரில் அவனுக்கென்று பெயரை வைத்துக் கொன்டான்.
அவன் என்ன தொழில் செய்கின்றான் என்ன ஆதாயம் எப்படி இப்படியொரு சொகுசு வாழ்க்கை! இதுவெல்லாம் ஒன்றுமே யாருக்குமேத் தெரியவில்லை;. யாவருமே அவன் போட்டிருக்கும் உடைக்கும், தங்கத்திற்கும், வைத்திருக்கும் அதி உயர்ரக சொகுசு வாகனத்திற்கும் மதிப்புக் கொடுத்தார்கள். அந்த வகையில் சிறு தொழில்கள் செய்து வாழ்க்கை நடத்திவந்த மோகனுக்கும் முரளியுடைய நட்பு கிடைக்காதாயென ஏங்கிய வேளையில்தான் ஏதோவொரு வகையில் முரளியின் நட்பு மோகனுக்குக் கிடைத்தது. அந்த நட்பு அவனுக்குப் பெரியதொரு வரம் போல் தென்பட்டது. ஏக்கத்தோடு ஏங்கித் தவித்தவனுக்கு வியாபாரத்திற்கு உதவுகிறேன் என முரளி மோகனுக்கு வாக்குக் கொடுக்க, மோகனும் அந்த வாக்கை ஏற்றுக் கொண்டு முரளியை மதிக்க ஆரம்பித்தான்.
டொபி, சொக்லட், பிஸ்கட், பால் ஐஸ்கிரீம், பனிஸ் இதர குளிர்பான வகைகள் போன்றவற்றுடன் தவறான பதார்த்தங்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்தான். வியாபாரம் நன்றாக செழித்து நல்ல வருமானம் தரத் துவங்கியது. நாளைய சந்ததியைத் தவறாகப் பயன் படுத்துகின்;றேனே யென்ற குற்றவுணர்வெல்லாம் கொஞ்சமுமிருக்கவில்லை. நாளைய சந்ததியெனும் இன்றைய வரமான மாணவ மணிகளின் உயர்வை சீர்;குழைக்கின்றோமேயென்ற கவலை சிறிதுமிருக்கவில்லை. மோகனின் சதிச் செயலில் சிக்கிய மாணவச் செல்வங்களிலொருவன் தான் வசந்தன். போதைக்கு அடிமையான நிலையில் எதையும் விளங்கிச் செய்திட முடியாமல் தடுமாறினான். எந்தவொரு விடையத்திலும் சரியும் தவறும் விளங்க வில்லை. அவனின் வீட்டார் பாவம். சம்பாதித்த கொஞ்ச நஞ்ச வருமானத்தையும் அவனுக்கே கொடுத்தாக வேண்டியதாயிற்று. நிலமையை சீர் செய்திட கடவுளிடம் மண்றாடினார்கள். வலியும் வேதனையும் மனதை உருக்கியெடுத்தது. போதை உக்கிரத்தின் தடயமாய் சீராய் வளர்த்த தன் பிள்ளையின் கல்வி சீர் கெட்டுப் போனது. அதற்கு உத்தியாயமைந்த மோகனைக் கடவுள் தண்டிக்க மாட்டாரா?. எல்லாக் குற்றங்களையும் செய்தவர்கள் நன்றாக வாழ்கின்றார்கள். நேர்மையாய் சம்பாதித்து, இருப்பதில் நிறைவைக் கண்டு வாழ்ந்திடுவோமென நினைக்கும் மனிதர்களுக்கு இத்தனை சோதனையா?.கடவுளே!, உன்னைக் கையேந்துகின்ற எமக்கு நீ காட்டும் கருணையென்ன?.துன்பமும் துயரமும் அடங்கிய வாழ் நாட்களா?. இதுவென்னக் கொடுமையென வசந்தனின் பெற்றோர் கடவுளிடம் அழுதார்கள். எத்தனைத் துயரம் வந்தாலும் கடவுளிடம் மட்டும் தானெம்மால் சளிக்காத நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் மகிழ்ச்சிக்காக வேண்டி நிற்க முடியும்.
உள்ளமெல்லாம் சோர்வாக தன் மகனின் நிலையை நினைத்து நினைத்து அழுது வடிந்தப் பெற்றோறுக்கு மனங்குளிரும் படியான சந்தர்ப்பங்களும் அமையும் தானே!.மனித வாழ்வின் யதார்த்தமும் அதுதானே!. அன்றாடம் தம் நிம்மதியிழந்து தவிக்கும் எல்லாப் பெற்றோர் சமுதாயத்திற்கும், பிள்ளைகளின் விடிவு காலங்களுக்கும் கடவுள் ஓர் நேர் வழியை வைத்திருப்பாரென்பது உண்மைப் போலும்.
வசந்தனின் பாடசாலை தலைமை ஆசிரியர் மிகவும் நல்ல மனிதர்!. அவரையும் மீறி அந்தப் பாடசாலை வலாகத்திற்குள் இப்படியோர் சீர்கேடான வியாபார சிக்கல் நடந்தது எப்படியென்றுத் தெரியவில்லை. சில மாணவர்களின் இந்த நிலையை அறிந்தவர் ஆடிப் போனார். வசதியான மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலையில் அறுவறுக்கத் தக்க வியாபாரமொன்று மாணவ மனசுகளைத் தொட்டு சீரழித்து விட்டதேயென நினைக்க அவருக்கு வெட்கமாயிருந்தது.
கடுமையான நடவடிக்கை யெடுக்க வேண்டுமென உறுதிக் கொண்டார். அவருக்குத் தெரியும் தன்னால் தன் மாணவச் சொத்துக்களை பாடசாலை வலாகத்துக்குள்ளேயே வைத்து எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தால் கூடிய சீக்கிரம் திருத்தி விடலாமென்று. அதன் படி போதைக்கு அடிமையான மாணவர்களைத் தனிப் பட்ட முறையில் அவதானித்தார். மோகனைப் பாடசாலை வலாகத்திற்குள் வியாபாரம் செய்யத் தடை விதித்தார். இப்படி மாணவரகள்; நலங் கருதி இன்னும் இன்னும் பலவாறான ஏற்பாடுகளை முன்னெடுத்தவர் கடுமையாக அமுல் படுத்தினார்.
சிறுவர் சீர்திருத்தம் என்றப் பெயரில் அவரே சில ஆலோசனைகளைத் தயார்ப் படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நன்மைகளற்ற போதை வஸ்துப் பற்றிய தீமைகளை விளக்கிக் கூறி தெரிந்தோத் தெரியாமலோ உங்களில் சிலரும் இதற்கு அடிமையாக்கப் பட்டு விட்டீர்கள். இதன் விளைவு யாருக்கும் எந்த நன்மையும் தராது. அதேப் போன்று உங்கள் எல்லோர் நல்லெதிர்காலத்தைப் பற்றி கனவு கண்டுக் கொண்டிருக்கும் உங்கள் பெற்றோறுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சப் போகின்றது. அதனால் நீங்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் தான் உங்களனைவருக்கும் நானும் ஒத்துழைத்து சிறுவர் சீர்திருத்த இடங்களிளோ அல்லது என் இருப்பிடத்திலேயோ வைத்து உங்களை சீர்ப் படுத்திட முடியும்.! என்றதும் ஆசிரியரின் முகத்தைப் பார்த்த சில மாணவரகள் அப்பாவியாய் திகைத்து நின்றாரகள்.
ஆசிரியரின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார்கள். நாம் வீட்டாருக்கும் துரோகம் செய்து, கற்றப் பாடசாலையின் பெயரையும் கலங்கப் படுத்தி எம்மையும் கலங்கப் படுத்திக் கொண்டோம். இதிலிருந்து நாம் வெளியில் வர வேண்டும். எம் கண்களைத் திறந்த உங்களுக்கு எப்படி நன்றிக் கூறுவதென்றேத் தெரியவில்லை. நாம் உங்களுடனேயே கொஞ்ச காலமிருந்து போதையை மறக்கின்ற வரைக்கும் ஏதேனுமொரு நல்லயிடத்தைத் தெரிவு செய்து பயணுள்ள வகையில் காலத்தைப் பயண் படுத்துகின்றோம் எனக் கூறிடவே ஆசிரியரும் அதற்கு இணங்கி ஒத்துழைத்திடவே மாணவர்களின் திருத்தத்தில் எல்லோரும் வெற்றிக் கண்டாரகள். ஆசிரியருக்கும் இவர்களை போதை வகையிலிருந்து மீட்டெடுத்த சந்தோசம் நிறைவைத் தந்தது.
வீட்டுக்கு தன் ஆசிரியரையும் அழைத்துச் சென்றவன் பெற்றோரைக் கட்டிப் பிடித்துக் கதறினான். அப்பா அம்மா நான் தெரியாமல் செய்த தவறால் போதை வஸ்துக்கு அடிமையாகி சிக்களில் மாட்டிக் கொண்டேன். விளைவு உங்கள் பணத்தையெல்லாம் வீணடித்து இந்த ஐந்தாறு மாதங்களாகவே எல்லோர் மனதையும் கஷ்டப் படுத்தி விட்டேன். எனக்கு ஆசிரியர் தெளிவுப் படுத்தியதும் தான் உணர்ந்தேன்!. இந்தளவில் நான் மீண்டு விட்டதை எண்ணும் போது கடவுளுக்கும் என் மேலான ஆசிரியருக்கும் தான் நன்றிகள் கூறிடக் கடமைப் பட்டுள்ளேன்!. இனி மேலும் இந்தப் பிழைகளைச் செய்ய மாட்டேனென அழுதான்.
கேசவனும்-குமுதினியும் ஆசிரியரைக் கைகூப்பி நன்றிகள் கூறிட!, அவரோ! நாமிதையெல்லாம் பெரிதுப் படுத்தி பிள்ளைகள் அறியாது தெரியாது செய்தத் தவறுகளைப் பெரிதுப் படுத்தி தண்டணைக் கொடுக்கின்றோமென்றப் பெயரில் பிள்ளைகளுடன் பேசாது, அடித்து, உதைத்து ஒதுக்கி வைத்து வேதனைப் படுத்த முன் வருவது எமது முட்டாள் குணமாகும். அதையே அன்பாகப் பேசி அவர்களின் தேவைகளை, ஆசைகளையறி;ந்து சரிப் பிழைகளை எடுத்துச் சொல்லும் போது தாமாகவே தத் தமது பிழைகளை உணர்ந்து சமூகத்துக்கு ஏற்றாட் போல் செயற் பட்டிட துணிந்திடுவார்கள். துணிந்து செயற்படும் தைரியத்தை நாம் அறிவுரையின் மூலம் கொடுக்க வேண்டும். அப்போதுத் தான் இளம் பிள்ளைகளை வழி நடத்திட ஏதுவாகயிருக்கும் ||என ஆசிரியர் கூறும் போது யாரோ ஒருவர் ஆசிரியரிடம் ஓடி வந்தார். ஏனிப்படி மூச்சு முட்ட முட்ட ஓடி வாரீங்கள் எனக் கேட்க! அவர் முணு முணுத்தது ஆசிரியருக்கு மட்டுமே விளங்கியது.
ஆமாம்! முரளியென்கின்ற செல்வந்தரை பொலிசார் கைது செய்து விட்டார்களாம். என்னப் பிரச்சினையென்று யாருக்கும் தெரிய வில்லையாம்!. என்றார் வந்தவர். யாருக்குத் தெரியும்! என்ன செய்தாறோ யார் கண்டது. வியாபாரம் தானே செய்தார். அப்போ ஏதேனும் பிழையான தகாத வியாபாரம் செய்திருக்கலாம்.! என்றார் ஆசிரியர். அத்தோடு இன்னுமொரு தகவலையும் வந்தவர் கூறினார். அந்த இனிப்புக்கடை வைத்திருந்த முரளியின் எடுப்பிடியான மோகனுக்கும் பாரிச வாதம் ஏற்பட்டு கை கால் இழுப்பட்டு இயங்காத நிலையில் கடுமையான வருத்தத்தினால் கீழே விழுந்ததில் தலையடிப்பட்டு மயக்க மானதில் வைத்திய சாலையில் சேர்த்துள்ளார்களாம் என்றார்.
இந்த ஆசிரியருக்குப் புரிந்தது. எந்தப் பாவத்தையும் இலகுவாகச் செய்து விடலாம். அந்த இலாபத்தின் கூலி இறுதியில் எப்படியிருக்குமென்று சொல்லிட முடியாது. பணம் தானே! அது எப்படி வந்தாலும் சரியென நினைக்கக் கூடாது. நேர்மையான வழியில் உழைத்து வரும் இலாபம் கொஞ்ச நஞ்சமிருந்தாலும் அதுதான் நிம்மதியைத் தரும். முரளி பெரியளவில் செய்தது தப்பானத் தொழில். மோகன் ஆசையில் செய்ததும் தப்பானத் தொழில். இருவரிடமும் மாட்டிக் கொண்ட மாணவ மணிகளின் காலமும் சீரழிந்தது. அத்தனைப் பெற்றோரின் கண்ணீருக்கும் கடவுள் பதில் தரவும் வேண்டும் தானே!. பல யதார்த்தங்கள் இப்படித்தான் வட்டமிடுகின்றன. ஆனால் இதை உணரத்தான் காலம் தேவைப் படுகின்றது.