மோதிரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 13,626 
 
 

மைக்கேல் ஜென்னியை ரெண்டு வருஷமாகக் காதலித்து வந்தான்.

மைக்கேல் ரொம்ப கேட்டுக் கொண்டதற்கு ஒத்துக் கொண்டு அவனைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தாள் ஜென்னி. உடனே மைக்கேல் ஜென்னியின் மோதிர விரல் அளவை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டான்.

ரொம்ப சந்தோஷப் பட்டு மைக்கேல் உடனே ஒரு நகைக் கடைக்கு போய் அங்கே இருந்த பெண்ணிடம் ஜென்னியின் மோதிர விரல் அளவைக் கொடுத்து “மேடம்,இந்த அளவுக்கு எனக்கு ஒரு விலை உயர்ந்த தங்க மோதிரம் பார்த்து கொடுங்க” என்று சொன்னான்

அந்தக் கடைக்கார பெண் உடனே கடையில் இருந்த ஒரு விலை உயர்ந்த தங்க மோதிரத்தை மைக்கேலிடம் காட்டினாள். மைக்கேலுக்கு அந்த மோதிரம் மிகவும் பிடித்து இருந்தது.

மைக்கேல் உடனே இந்த “மோதிரம் ரொம்ப நல்லா இருக்கு.இதன் விலை என்ன” என்று கேட்டான்

அந்தப் பெண் மைக்கேலிடம் இருந்து மோதிரத்தை வாங்கி மோதிரத்தின் எடையைப் பார்த்து விட்டு ஒரு காகிதத்தில் கணக்குப் போட்டு “சார்,இந்த மோதிரத்தில் விலை பதினைஞ்சு ஆயிரம் ரூபாய்” என்று சொன்னதும் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீனான் மைக்கேல்.

உடனே அந்தப் பெண் ‘எங்கே இவர் அந்த மோதிரத்தை வாங்காமல் போய் விடுவாரோ’ என்று பயந்து “சார்,நீங்க இந்த மோதிரத்தை வாங்கினா நாங்க உங்களுக்கு ப்ரீயா நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போகிற பெண்ணின் பேரை ‘என்க்ரேவ்’ பண்ணிக் கொடுப்போம்” என்று மைக்கேலுக்கு ஆசை காட்டினாள்.

மைக்கேல், ”சரி, இந்த மோதிரத்தை நான் வாங்கிக்கிறேன்” என்று சொன்னதும் அந்தப் பெண் சந்தோஷப்பட்டு “சார்,நீங்க கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்ணின் பேரைச் சொல்லுங்க” என்று சொல்லி மைக்கேல் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.

மைக்கேல் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.இதைப் பார்த்த அந்தப் பெண் ஆச்சரியப் பட்டு” சார், நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போகிற பெண்ணின் பேர் உங்களுக்கு ஞாபகம் இல்லையா” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அதற்கு மைக்கேல், “எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீங்க ஒன்னு பண்ணுங்க. இந்த மோதிரத்தில் ‘ To my beloved girl friend’ என்று ‘என்க்ரேவ்’ பண்ணிக் கொடுங்க.ஒரு வேளை இந்தப் பெண் என்னை ரெண்டு வருஷம் கழித்து ‘டைவர்ஸ்’ பண்ணி இந்த மோதிரத்தை கழட்டி வீசி ஏறிஞ்சு விட்டா,நான் அந்த மோதிரத்தை அடுத்து காதலிக்கும் பெண்ணுக்குக் கொடுக்க எனக்கு சௌகரியமாய் இருக்கும்” என்று சொல்லி சிரித்தான்.

உடனே அந்த கடைக்கார பெண் “சார், நீங்க ரொம்ப முன் யோசிதம் உள்ளவர் போல் இருக்கே” என்று சொல்லி சிரித்துக் கொண்டே அந்த மோதரத்தை மைக்கேல் இடம் இருந்து வாங்கிப் போய் அவன் சொன்னது போல ‘என்க்ரேவ்’ பண்ணிக் கொடுத்து விட்டு மோதிரத்தின் பணத்தை வாங்கிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *