மூர்த்திகளின் ஏற்றுமதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2025
பார்வையிட்டோர்: 54 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாக்டர் சதாசிவம் M. A., Ph., D. I., C. S., ஆங்கில படிப்பை ட முடித்துக் கொண்டு தம் சுயநாடு திரும்பினார். இந்தியச் சிற்பக் கலையில் தென்னாட்டு வெண்கலப் பதுமைகள்” என்ற கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்றவர். தம் நாட்டிற்கு வருவதற்கு முன் ஐரோப்பாக் கண்டத்தில் சுற்றுப் பிராயணம் செய்து தம் அறிவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அவரது அவா. பிரெஞ்சுத் தலைநகர் பரி(பாரிஸ்)யில் சிறந்த காட்சிச் சாலை இருக்கிறதென்றும், அதில் அருமையான பதுமைகள் உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தார். அக்காட்சிச் சாலையைக் கண்டுவிட்டே போகவேண்டும் என்று உறுதி செய்து கொண்டு பரியில் இறங்கினார். ஒரு உணவு விடுதியில் தங்கிக் காட்சிச்சாலையுள் சென்றார். அங்கே வைத்திருந்த அழகான இந்தியப் பதுமைகளை யெல்லாம் கூர்மையாகப் பார்த்துச் சென்றார். “இத்தனை அருமையான விலை மிகுந்த பொருள்களை இந்தியர்கள் ஏன் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்? இவைகளின் அருமைகளை நம் இனத்தார் அறிந்திருந்தால் இவ்வாறு வேறு நாட்டாருக்கு அனுப்பியிருப்பார்களா என்று எண்ணி எண்ணிப் பரிதவித்தார். சில விக்கிரகங்களைக் கண்டவுடன், “இத்தனை அதிசயமான பொருள்களை எவ்வாறு மனம் துணிந்து கொடுத்தனர்?” என்று தயங்கினார். அங்கு ஒரு அருமையான நடராஜ விக்கிரகம் தோன்றிற்று. அதைக் கண்டவுடன் வயிறு எரிந்தது, இரத்தம் கொதித்தது. ‘விலை மதிப்பற்ற இப்பொக்கிஷப் பொருளை எந்தத் துணிவுடன் யார் வெளியேற்றினாரோ?” என்று பல்லைக் கடித்தார். “அப்பாவியைக் கண்டால் குத்திக் கொன்று விடுவேன்!’ என்று குதித்தார். ”சிற்பத்தின் அருமைகள் போனால் போகட்டும், இவ்வழகிய மூர்த்தியிடம் பக்தியும் இல்லையோ நம் இனத்தார்க்கு?” என்று வெகுண்டார். “நமது நாட்டில் பூஜை செய்து வழிபடுவோமே, இங்கேயோ ஒரு சொட்டு நீரும் ஒரு சிறு பூவும்கூடக் காணாமல் ஆராதனையில் நம்பிக்கை அற்றவரால் இம்மூர்த்தி சிறைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறதே!” என்று வருந்தினார்.அம்மூர்த்தியின் அழகில் சிறிதுநேரம் ஈடுபட்டுக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே யிருந்தார். சதாசிவம் இத்தனை ஆர்வத்துடன் நடராஜ விக்கிரகத்தைப் பார்ப்பதைக் கண்ட காட்சிச்சாலைச் சேவகன் இவரை விளித்து, ”ஐயா, உமக்குச் சிற்பத்தில் விஷேச நாட்டம்போல் இருக்கிறது. இவ்வுருவம் மிகச் சிறந்தது இதனைக் காட்சிச்சாலை அதிபர் ஒரு அதிசயப் பொருள் வர்த்தகரிடம் 1,000 ரூபாய்க்குப் பத்து நாட்களுக்கு முந்தித்தான் வாங்கினார்” என்றான். அதைக் கேட்டவுடன் ஆச்சரியப்பட்டு,இதில் என்ன விஷேசம் அவர் கண்டார் என்று கேட்டார். சேவகன் இது நாலாவது குலோத்துங்கச் சோழன் காலத்தது என்றும், அவ்வுருவின் பீடத்தில் வருடமும் இடமும் எழுதி இருக்கிறதென்றும் சொன்னான். சதாசிவத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே பீடத்தை உற்றுநோக்கினார். “சகம் 1214” என்றும் ‘சோழ மண்டலத்து மருகல் நாட்டு மருகல்'” என்றும் செதுக்கப்பட்டிருக்கிறது. உடனே ஆனந்தத்தினால் குதித்தார். “இது என் ஊர்க் கோவில் நடராஜா” என்று கூவிக் குதித்தார். மறு வினாடியே ஆனந்தம் போய்த் துக்கம் வந்தது. “எங்கள் குடும்பத்தார் வழிபட்டுத் துதி செய்த நடராஜாவா இப்போது இங்கே கிடக்கிறது? அது ஏன் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டது?” என்று கதறினார். மறு நிமிடம் கோபம் வந்தது. “என் பெற்றோர் துதித்த இம்மூர்த்தியை எந்தத் துஷ்டப் பயல் இந்நீசருக்கு விற்றுவிட்டான்!” என்று பல்லைக் கடித்தார். இதன் உண்மைச் சரிதம் அறியவேண்டும் என்ற ஆசை தோன்றியது. அது ஆழமாக அவர் நெஞ்சிடை பதிந்தது. 

‘”சேவகரே! இந்தப் பதுமையை உங்கள் தலைவர் யாரிடம் வாங்கினார்?” என்று வினயமாகக் கேட்டார். அவன் உடனே கையேட்டைப் பார்த்து ‘இது மான்ஷியர் புஸ்ஸி என்ற அதிசயப் பொருள் வர்த்தகரிடம் வாங்கப்பட்டது. இதனை அமேரிக்கர் 5,000 ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள்’ என்றும், ‘தலைவர் அதை வெளியேற விடமாட்டார்’ என்றும், இது ஒரு பெரிய பொக்கிஷமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டு வருகிறது. என்றும் பிரசங்கம் செய்யத் தொடங்கினான். சதாசிவம் அவ்வர்த்தகரை காண வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டு பித்துப் பிடித்தவன் போல் உணவும் அருந்தாமல் அவர்த்தகர் வீட்டைத் தேடிக்கொண்டு சென்று அவனைக் கண்டு பிடித்தார். அவர் சென்ற வேளையில் புஸ்ஸியே இருந்தான்.

“ஐயா, தாங்கள் அருமையான இந்தியப் பதுமைகளை வைத்திருக்கிறீர்களாமே, பார்க்கலாமா?” என்று கேட்டார். 

“ஆமாம், நீங்கள் இந்தியர் போலத் தோன்றுகிறது. இந்தியாவில் இல்லாத அற்புத விக்கிரகங்கள் இங்கே என்ன இருக்கும்?” என்று கண் சிமிட்டிச் சொன்னான். 

“ஐயா. இந்தியாவில் அற்புதப் பொருள்கள் இருந்தது உண்மை. அவை இந்திய மக்களுக்குப் பயன்படுவதாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பார்வைக்கும் அவை கிடைப்பது அரிது, இருட்டு அறைகளிலும் மண்டபங்களிலும் சேமித்து வைத்திருப்பதனால் அவைகளின் அருமை எப்படி அறிய முடியும்? மேலும், அருமையான பொருள்கள் எல்லாம் வெளிநாடு சென்றதாகக் கேள்வி.” 

“ஆமாம், பெருமை தெரியாத ஆட்களுக்குப் பெருமை பொருந்திய பொருள் என்னத்திற்கு? பன்றியின் முன் கிடக்கும் முத்துமாலை…” என்றான். இதனைக் கேட்ட சதாசிவம் முகம். கோபத்தால் சிவந்தது, உதடு துடித்தது. ஆனால் அதனை மறைத்துக்கொண்டார். 

“இன்று கண்காட்சிச் சாலையில் ஒரு நடராஜ விக்கிரகத்தைக் கண்டேன். அதனைத் தாங்கள் விற்றதாகச் சொன்னார்கள். அறிய வந்தேன்.”

“ஆமாம், அது ஒரு அருமையான பொருள். அதற்குக் கிராக்கி அதிகம். அவசரத்தினால் குறைவான விலைக்கு விற்றுவிட்டேன். இப்போது அதற்கு ஐந்து மடங்கு விலை கிடைக்கும்.” 

“அதைப்போலப் பிற பொருள் இருந்தால் பார்க்க வேண்டும். என்ற ஆசை எனக்கு உண்டு.” 

“நீங்கள் என்ன வாங்கவா போகிறீர்கள்? இந்தியர்கள் விற்பார்களே ஒழிய வாங்கமாட்டார்கள்!” 

இதைக் கேட்ட சதாசிவத்திற்கு உள்ளம் புழுங்கியது. 

“நான் படியாத இந்தியன் அல்ல; சிற்பக் கலையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறேன்” 

“எங்கே பெற்றீர்கள்?” 

“லண்டன் பல்கலைக் கழகத்தில்.”

“தாங்கள் டாக்டர் சதாசிவமோ?” 

“ஆம், அப்பெயர் எப்படித் தெரிந்தது?” 

“நான் ஊகித்தேன். சமீபத்தில் இந்தியச் சிற்பத்தில் தேர்ச்சிபெற்று வெண்கலச் சிலைகளைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதிய இந்தியர் சதாசிவம் என்று அறிவேன். உம்முடைய கட்டுரையையும் வாசித்துள்ளேன். அதில் சில ஐயங்களும் எனக்கு உண்டு. அவைகளைப் பற்றிச் சாவதானமாக உங்களுக்கு எழுதி அனுப்புகிறேன்” 

இதைக் கேட்டதும் சதாசிவம் ‘இவனிடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்’ என்று எண்ணினார். 

“தாங்கள் காட்சிச் சாலைக்குத் தந்திருக்கும் விக்கிரகத்தைப் போன்ற மற்ற விக்கிரகங்கள் தங்களிடம் இருக்கின்றனவோ?” 

“ஆம், அதற்குச் சேர்ந்த சந்திரசேகர மூர்த்தியும் பிட்சாடன மூர்த்தியும் என்னிடம் இருக்கின்றன. அவைகளை அமெரிக்கா ஹார்வர்டு காட்சிச் சாலைக்குப் பேசிக் கொண்டிருக்கிறேன்.” 

“அவைகளைப் பார்க்கலாமா?” 

“தங்களைப் போன்ற அறிவாளிகள் பார்த்தால் மிகுந்த ஆனந்தம் எனக்கு ஏற்படும். வாருங்கள் உள்ளே. இதோ இந்தப் பீடத்தின் மேல் அவை இருக்கின்றன.” 

“என்ன அழகான மூர்த்திகள்!” என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் சதாசிவம். பிறகு விக்கிரகங்களின் ஒவ்வொரு பாகத்தையும் உற்றுநோக்கினார். பீடத்தில் “மருகல் நாட்டு மருகல்” என்று செதுக்கப்பட்டிருந்தது. 

“அடடா! இவையும் எங்கள் ஊர்த் தெய்வங்களா? ஐயோ பாவமே! இந்த நாஸ்திகனிடமா இவை சேர்ந்து விட்டன? இவன் எத்தனை அறிவு படைத்தவனாயினும் இப்புண்ணிய மூர்த்திகளை வாணிபப் பொருள்களாக்கிப் பண்டமாறுதல் செய்கிறானே!'” என்று மனத்தில் எண்ணி வருந்தினார். 

“ஐயா, இந்த விக்கிரகங்களை எவ்விதமாகச் சம்பாதித்தீர்? எந்த ஊரிலிருந்து கிடைத்தன?” 

“டாக்டர்! உங்களுக்குத் தெரியாததல்ல. உங்கள் நாட்டில் ‘ரிஷிமூலம் கேட்க வேண்டாம்’ நதிமூலம் அறிய வேண்டாம்! என்ற ஒரு பழமொழி உண்டல்லவா? ஆகவே இதனைக் கேட்பது உமக்கு அழகல்ல.’ 

சதாசிவம் திடுக்கிட்டுப் போனார். “இந்தியரின் பழக்க வழக்கங்களை எத்தனை நுட்பமாக இவன் அறிந்திருக்கிறான்” என்று எண்ணி, ஐயா, நீங்கள் இந்தியரின் பழமொழிகளை யும் செவ்வையாக அறிந்திருக்கிறீர்கள். இந்தியாவில் வேலையில் இருந்தீரா?” என்று கேட்டார்.

“ஆமாம்; முப்பது ஆண்டுகள் இந்தியச் சுங்கத் தொழிலில் (Ex- cise) இருந்து உபகாரச் சம்பளம் பெற்று வருகிறேன். அப்போது எனக்குச் சிற்பக் கலையை உணர்வது ஒரு ஆசைப் பணியாக (Hobby) இருந்தது. அதை ஒட்டித்தான் விக்கிரகங்களைச் சேகரித்தேன். வெகு பணம் கொடுத்து வாங்கினேன். இவைகளின் அருமையை அறியும் கற்றோர்களுக்கும், கற்பிக்கும் நிலையங்களுக்குமே யன்றி, பிறருக்கு விற்பனை செய்வது கிடையாது?” 

‘எண்ணம் சரிதான், உண்ைைம எதுவோ?’ என்று எண்ணினார் சதாசிவம். 

“தங்களை வற்புறுததிக் கேட்பது தவறு. இதுவரையில் எனக்குப் பல அருமையான சங்கதிகளைக் கூறி மகிழ்வித்ததற்காக நான் மிகுந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். 

“சதாசிவம் உடனே இரயிலடிக்குச் செல்லவில்லை. விடுதியில் உணவு அருந்திவிட்டு ஆங்கில ஸ்தானதிபதி (பிரிட்டிஷ் கான்ஸல்) நிலையத்திற்கு சென்றார். தம் முகவரிச் சீட்டை அனுப்பியதும் ஸ்தானதிபதி வெகு மரியாதையுடன் இவரை வரவேற்றார். பி. எச். டி: க்கும் ஐ. ஸி. எஸ். ஸூக்கம் அத்தனை மதிப்பு உண்டு. 

”ஐயா, மான்ஷியர் புஸ்ஸி என்பவரைத் தெரியுமா?” 

“ஆம், நன்றாகத் தெரியும். அவைரைப்பற்றி என்ன தெரியவேண்டும்?” 

“அவரை இப்போதுதான் சந்தித்தேன். அவரிடம் அருமையான இந்திய விக்கிரகங்கள் இருக்கின்றன. அவை எப்படி வந்தன?” 

“அவர் ஒரு அதிசயப் பொருள் – வர்த்தகர், ஜாதி – யூதர். ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரியும். முந்தி இந்தியாவிலே சுங்க இலாகவில் இருந்தார். அப்போது சிற்பம் கற்றுக்கொண்டாராம். ஓய்வு எடுத்துக்கொண்டதும் இந்த வர்த்தகம் செய்துவருகிறார். ஆனால் அவருடைய அந்தரங்க நிலைமை அறியக்கூடவில்லை. லட்சக் கணக்கான விலையுயர்ந்த பொருள்களைச் சம்பாதித்திருக் கிறாராம். ‘எவ்வாறு?’ என்று இரகசியப் போலீசும் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ‘கோட்சொல்லி’ – கதைகள் உண்டு. இருந்தாலும் அவைகளுக்குச் சாட்சியம் கிடைக்கவில்லை. அவரைப்பற்றி ஏதாவது ஒரு குறித்த சங்கதி இருக்கும் பட்சத்தில் தெரியபடுத்தினால் விசாரிக்கிறேன்.” 

“அவரிடம் ‘மருகல் நாட்டு மருகல்’ – சிலைகள் இருக்கின்றன. எவ்வாறு வந்தன அறிய ஆவல்கொண்டிருக்கிறேன். ” 

“ஒரு நடராஜாவைக் கண்காட்சியில் விலைக்கு வாங்குகையில் இத்தகவல் விசாரிக்க வேண்டி வந்தது. துப்புக் கிடைக்கவில்லை. அவருக்குப் புதுச்சேரியில் ஒரு தரகர் இருக்கிறாராம். அவர் மூலமாகத்தான் கிடைத்ததாம்.”

இதற்கு மேல் சங்கதி ஒன்றும் தெரியவில்லை. சதாசிவம் தலை இறங்கவிட்டுக் கொண்டு இரயிலடிக்குப் புறப்பட்டு இந்தியாவிற்குக் கப்பல் ஏறினார். 

மருகல் நாட்டு மருகலில் சிவாலயத்தில் சதாசிவம் ஐ.ஸி.எஸ். ஸூக்கும் வெகு மரியாதையுடன் உபசரிப்பு நடந்தது. அபிஷேகம் அஷ்டோத்தர அருச்சனை, தீபாராதனை, பரிவட்டம், மாலை முதலிய மரியாதைகள் வரிசையாக நடந்தன. இவைகளில் சதாசிவத்தின் மனம் செல்லவில்லை. 

கு”குருக்களே! உத்ஸவ மூர்த்திகள் எங்கே? தீபாரதனை செய்யும். என்று ஆத்திரத்துடன் சொன்னார். இருட்டு மண்டபத்தில் ஒரு மூலையில் சின்னஞ்சிறு உற்சவர்கள் கற்பூர வெளிச்சத்தில் தோன்றினார்கள். ஓம் “குருக்களே! நான் பாடசாலையில் வாசிக்கும்போதே, பெரிய ஆகிருதிகளாக இருந்தன. இவைகள் வேறோ!” என்றார் சதாசிவம்.

“ஆமாம்: முன்னிருந்த பெரிய விக்கிரங்கள் களவு போயின. இவை புதியவை. தருமகர்த்தா யாசகம் எடுத்துச் செய்து வைத்தார்.” 

“எப்போது, யார் காலத்தில் களவு போயின?”

“தாங்கள் வெளிநாட்டில் இருந்தபோது தங்கள் தகப்பனார் சிதம்பரமையர் தருமகர்த்தாவாக இருந்தார். என் தகப்பனார் ஐயாசாமிக் குருக்கள் முறை அர்ச்சகராக இருந்தார். அப்போது களவு போயிற்று. உடனே ஸ்ரீமான் ஐயர் புது விக்கிரகங்களைச் செய்து புண்ணியம் சம்பாதித்துக் கொண்டார். திருடர் புகுந்த தீட்டைப் போக்க ஸம்ப்ரோட்சணமும் செய்தார்.”

“இந்த ஊர் பந்தோபஸ்த்தான ஊராயிற்றே, எப்படிக் களவு போயிற்று?” 

“ஆருத்திரா தரிசனத்தில் சுவாமி ஊர்ப் புறப்பாடு ஆனபிறகு எல்லா ஊழியர்களும் ‘களைத்துப் போய் வீடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். அன்று இரவு சில பிரான்மலைக் கள்ளர்கள் கன்னக்கோலிட்டு ஆலயத்துள் சென்று நடராஜா முதலிய பழைய விக்கிரகங்களைக் கொள்ளை கொண்டு சென்றார்கள். ஆனால் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. சுவாமியினுடைய மகிமை என்ன! போலீசார் என்ன பிரம்மப் பிரயத்தனப்பட்டும் துப்புக் கிடைக் கவில்லை. மூன்று கள்ளர்களை அடித்தும் பார்த்தார்கள். அவர்கள் பழைய பேர்வழிகளானதினால் சிறை சென்றார்கள். உண்மையும் தெரியவில்லை. ஈசன் செயல்” என்று சொல்லி முடித்தார் குருக்கள். 

“ஐயோ, என் தகப்பனார் காலத்திலா போயிற்று? என்ன அபக்கியாதி! இங்கே இதை விசாரித்தால் அவமானம்” என்று எண்ணி மௌனமாக இருந்துவிட்டார் சதாசிவம்.

ஆனால், நெஞ்சு சும்மா இருக்குமா? உடனே போலீசு இலாகாவில் இரகசியமாக விசாரித்தார். 

”ஊரார், பிரான்மலைக் கள்ளர் வேலை என்று தான் சொல்லுகிறார்கள். சிதம்பரமையர் வாக்கு மூலமும் அதுவே. அர்ச்சகரும் அதுவே சாதித்தார். உட்கதவின் பூட்டு நெம்பிப் பிடுங்கப்பட்டிருந்தது. இதைச் செய்யப் பத்து ஆள் வேண்டும். ஆலய அதிகாரிகள் உடந்தை இல்லாதிருந்தால் இக் காரியம் நடந்திருக்குமா? யாதொரு சந்தடியும் இல்லாமல் இப்பெரிய சம்பவம் அக்கிரகாரத்தில் மாத்திரம் எவ்வறு நடந்தது? மேலும் கள்ளர்கள் ரூ. 1,000 நகைகளை அங்கேயே போட்டு விட்டு விக்கிரகங்களை எடுத்துக் கொண்டு போவார்களா? அவைகளோ மிகப் பளுவு ; ஒரு இரவில் எப்படி நாடு கடத்தினார்கள்?” என்று போலீசு அதிகாரியின் தினசரியில் குறிக்கப்பட்டிருந்தது. என்ன சங்கதியோ தெரியவில்லை. இறுதியில் கேசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று முற்றுப்புள்ளி போடப்பட்டிருந்தது.

“சதாசிவத்தின் நெஞ்சு தடுமாறியது. கொதிப்பு அடங்கவில்லை. தம் குடும்பத்திற்கன்றோ அவமானம்? கிணறு வெட்டப்பூதம் புறப்பட்டதுபோல் ஆயிற்று. பரிக்காட்சிக்கு ஏன் சென்றோம்? முடிவில் என்ன பயனில்லாத சங்கடம் ஏற்பட்டது” என்று எண்ணி வெகு கவலையுடன் வீடு சேர்ந்தார். 

வீடோ பிதிரார்ச்சித வீடு. தற்கால ஐ. ஸி. எஸ். ஆபீஸர் குடியிருக்க யோக்கியதை இல்லை. இப்பொழுது தலைமை நகரத்தில் ஒரு பங்களாவில் இருக்கிறார். ஏன் புராதன வீட்டுக்குச் சென்றார்? விதியும் ஆர்வமும் இழுத்தன என்றால் சரியா? 

இந்தியாவில் இல்லாத சமயத்தில் பெற்றோர்கள் இந்நிலவுலக வாழ்வைத் துறந்தார்கள். இறுதியாக அவர்கள் முகம் பார்க்கவும் இவர் கொடுத்து வைக்கவில்லை. வீட்டைக் கண்டதும் பெற்றோரை எண்ணிக் கண்ணீர் விட்டார். சேவகன் வந்தான். சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். லப்பப் 

பகல் போஜனம் ஆனவுடன் தம் தகப்பனார் வைத்திருந்த புஸ்தகப் பெட்டியை எடுத்துத் திறந்து ஒவ்வொரு நூலாக எடுத்துத் தம் தகப்பனாரை நினைத்துக் கொண்டார். பகவத்கீதை கைக்கு அகப்பட்டது. அந்நூலைத் தகப்பனார் தினந்தோறும் பாராயணம் செய்வதுண்டு. ஒரு பக்கத்தில் படித்த குறிப்புக்காக ஒரு கடிதம் வைக்கப் பட்டிருந்தது போல் காணப்பட்டது. சதாசிவம் எடுத்துப் பார்த்தார். அதில் என்னவோ எழுதியிருந்தது. வாசித்தார். திடுக்கிட்டார்! என்ன அப்படிப்பட்ட செய்தி? 

“அன்புள்ள சிதம்பரமையருக்கு, எவருக்கும் தெரியாமல் வெகு எச்சரிக்கையுடன் திருவாதிரையின் போது விக்கிரகங்களை வெளிப்படுத்தியது போற்றத்தக்கது. அர்ச்சகனை நம்பலாம் என்று இருக்கிறேன்: அதிகப் பணம் கொடுத்தால் வெளியில் சொல்லமாட்டான். பிரான் மலைக்கள்ளர் ஏற்பாடு என்று போலீசுக் காரர் எவ்விதம் நம்பினார்களோ? அக்கிரகாரத்தில் நடுவில் பூட்டை உடைத்துப் புக முடியுமோ என்று அவர்கள் சந்தேகிக்க வில்லைபோலும்! விக்கிரகங்கள் அருமையானவை, பரிந்துரைக்கு வெகு ஆனந்தம். ரூ.250 அனுப்பி இருக்கிறேன். உமக்கு ரூபாய் 100, அர்ச்சகருக்கு ரூபாய் 50. அனுப்பிய கூலிக்கு ரூபாய் 100 வைத்துக் கொள்ளவும். இது இரண்டாம் பேருக்குத் தெரியக்கூடாது. இரகசியம்? 

– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *