முழங்கால்கள் முடங்கட்டும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 311 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென் ஆப்பிரிக்காவில் ‘நு’ என்றொரு விநோத மிருகம் உள்ளது. அது தன் எதிரிகளை எதிர்க்க விந்தை யான வழக்கத்தைக் கையாள்கிறது. மற்ற மிருகங் களையோ, மனிதர்களையோ எதிர்க்கும்போது முழங் காலில் நின்றுதான் எதிர்க்கும். அதே நிலையில் நின்றால் தான் அதற்கு சக்தி பிறக்குமாம், சக்தி வந்தவுடன் எழுந்திருக்கும். சில வேளைகளில் முழங்காலில் நின்று கொண்டே எதிர்த்துச் சண்டையிடவும் செய்யும்.

ஆதிச்சபையார் யாக்கோபின் நிருபத்தை எழுதிய பக்தன் யாக்கோபிற்கு ‘ஒட்டக முழங்கால்’ எனப் பட்டப்பேர் கொடுத்தார்களாம். இடைவிடாது ஜெபிக்கும் அவரது முழங்கால் ஒட்டகத்து முழங்கால் போல கடினமாக இருக்குமாம். ஜெபவீரன் எனப் பேர் பெற்றார்.

சாத்தானும் நமது முழங்காலுக்குத்தான் அதிகம் பயப்படுவான். முழங்கால்கள் கடவுளுக்கு நேராக முடங்குதல் மனத்தாழ்மையை அணிந்து கொள்வ தாகும்.

சில பட்டுப் பூச்சிகள் எந்தச் செடியின் இலைகளைத் தின்கிறதோ அந்த இலையின் நிறமாகவே பட்டுநூல் இருக்குமாம். அப்படியே கிறிஸ்துவின் சிந்தையாகிய – மனத்தாழ்மையை அணிந்து கொண்டு-கிறிஸ்துவையே அண்டி – முழங்கால்களை முடக்கி வாடாத ஜீவ கிரீடத்தைப் பெற்றுக்கொள்வோம்.

“தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” (ஏசாயா 35:3)

“முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்” (ரோமர் 14:11)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *