முதலாளிகள் பலவிதம்





(1975ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
புதிதாக உத்தியோகமாகிக் கொழும்பிற்குப் போனதன் பின், அப்போது தான் முதற் தடமையாக ஊருக்கு வந்திருந்தான் செல்வம். தன் சகபாடி சுந்தரம் ஊரோடு கடை திறந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அவனைப் பார்க்கச் சென்றான்.

“எப்பிடி முதலாளி? எப்பிடி “பிஸினெஸ்” எல்லாம்?*
என்று, பாதி நக்கலாகக் கேட்ட செல்வத்திற்குச் சுந்தரம் சொன்னான்.
“மச்சான், மூவாயிரம் ரூபாய் முதல் போட்டுக் கடைபோட்ட என்னை “முதலாளி” எண்டா, எங்கடை “எம்.பி”யிற்ர ஐயாயிரம் ரூபா முதலைப் “பொத்தி” வேலை எடுத்த நீ ஆர்?”
– ‘கடுகு’ குறுங்கதைத் தொகுதி, முதற் பதிப்பு: ஆடி 1975, ஐ.சாந்தன் வெளியீடு, மானிப்பாய்.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.