முகநூல் மாப்பிள்ளை…




வணக்கம் நான் நந்தினி நான் பொறியியல் பட்டதாரி எனக்கு பொழுது போக்கு எல்லோரையும் போல மூஞ்சிபுத்தகம் தான், வேற என்ன, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க பட் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை எனது போட்டோவையும் அனுப்பமாட்டேன் பசங்ககிட்ட நைசா பேசி என் கண்ணின் போட்டோவை மட்டும் கொடுத்து, அவுங்க போட்டோவை வாங்கிடுவேன் எப்பூடி?? பேஸ்புக்கில் எனக்கு இன்னொரு பெயர் உண்டு அது தாங்க பேக் ஐடி அதன் பேர் சிந்து. சரிங்க போர் அடிக்குது நான் சாட்டிங்க்கு போகிறேன்..
” ஹாய், விநோத் எப்படி இருக்கே? ”
” நான் நல்லா இருக்கேன், நீ ஏன்? போட்டோ அனுப்ப மாட்டீங்கற? ”
” இல்லடா உன்னை நேரில் பார்க்க ஆசை, சோ அதுதான்.. கொஞ்சம் வெயிட் பன்னு செல்லம் ”
(இவன் இப்படித்தாங்க எப்பவும் போட்டோ கேட்டுகிட்டே இருப்பான், நான் என்ன இவன மாதிரி அம்மூஞ்சிய உடனே கொடுக்க)
” ஹாய், சதீஸ் எப்படி மச்சி இருக்கே ”
” நான் நலம் சிந்து நீ எப்படி இருக்க? ”
” நலம், நலம் அறிய ஆவல் ”
” ஆவல் எல்லாம் போதும், உன் குரலையும், உன் அழகான கண்ணையும் நான் எப்ப பார்ப்பது ”
” ஏண்டா அலையற, வெய்ட் மச்சி சீக்கிரம் காமிக்கிறேன்
உனக்கு இல்லாததா? ”
(இவன் ஒரு புகழ்ச்சி மன்னன், புகழ்ந்துகிட்டே இருப்பாங்க)
” ஹாய், சிந்து எப்படி இருக்க? ”
” ஹாய் பிரபு, நீங்க ஆன்லைன்ல தான் இருக்கீங்களா? ”
” என்ன சிந்து, நீ எப்ப வருவேன்னு உனக்காகத்தான் நின்னுகிட்டு இருக்கேன்”
” ஏம்ப்பா சேர் இல்லையா? ”
” நாட் ஜோக்ம்மா, உண்மைய சொல்கிறேன் ”
” சரி சரி ஆபிஸ் எப்படி இருக்கு? ”
” போய்கிட்டு இருக்கு! அப்புறம் !! ”
” என் வீட்டில் எனக்கு பொண்ணு பாக்கறாங்க! ”
” அப்படியா குட் ஜாப், சீக்கிரம் கல்யாணம் செய்துக்கப்பா !! ”
” இல்லப்பா. உண்யைத்தான் கண்ணாலம் செய்வேன் முடிவு செய்திருக்கேன் ”
” என்னையவா? ஹா ! ஹா ! வேண்டாம்ப்பா ரொம்ப கஷ்டப்படுவாய் ”
” இல்லப்பா, நீ தான் எனக்கு வேணும் செல்லம் ”
” சரி சரி ஓவரா வழியாத அப்புறம் வழுக்கிடுவாய் ”
(பிரபு இவன் எப்பவும் ஓவர் ஏக்டிங், அப்படியே உசிர கொடுக்கற மாதிரி வழிவான், என்ன செய்வது இவனையும் லிஸ்டில் சேர்த்து இருக்கேன்)
” ஹாய், சாய் எப்படி மச்சி இருக்கே ? ”
” என்ன மச்சியா, மாமான்ன மரியாதையா கூப்பிடுங்க, மரியாதை தெரியாத பொண்ணா இருக்க, இப்படித்தான் சொல்லிக்கொடுத்தாங்களா ? ”
” போதும் போதும் உங்க அட்வைஸ் ! ”
” அப்ப வாம்மா வழிக்கு, எப்படி இருக்காங்க என் மாமனார், மாமியார் ? ”
” ஹலோ நான் உங்களை லவ் பன்னவே இல்ல இதுல எங்கிருந்து வந்தாங்க மாமனார், மாமியார் !! ”
” காலப்போக்கில் லவ் செய்து தானே தீருவாய், அதனால கேட்டேன்ம்மா !! ”
” பார்க்கலாம், பார்க்கலாம் ”
(இவன் கொஞ்சம் திமிராத்தான் பேசுவான் அதனால பிடிகக்கும் என் லிஸ்ட்டில் இவன் தான் முதலில் ஆள் கருப்பா இருந்தாலும் கலக்கலா இருப்பான்)
” ஏம்மா சிந்து, போதும் பேஸ்புக்கில் சாட் செய்தது, வா வந்து சாப்பிடு ”
“சரிப்பா, என்னம்மா மாப்பிள்ளை போட்டோ கொடுத்தா ஈமெயில் ஐடி கேக்கறீயாமே, அம்மா சொன்னா ? ”
” பேஸ்புக்கில் அவன கண்டுபிடிச்சி நல்லவனான்னு பார்க்கத்தான் அப்பா !! ”
” கவலைப்படாதே உன் அப்ப செலக்சன் சோடை போகாது, அப்படி யாராவது நல்லவனை காதலிச்ச சொல்லு, அப்பாவுக்கு காதல் எல்லாம் தடையே இல்லம்மா !! ”
” சரிப்பா ”
ரம்யா எங்க அப்பா மாப்பிள்ளை செலக்ட் செய்துட்விட்டாராம், கல்யாணம் செய்துக்கு என்கிறார், நான் தினமும் சாட்டிங் செய்கிற நண்பர்களை என்ன செய்யலாம், அதில் ஒருத்தனை தேர்ந்தெடுக்கலாம் என்றும் யோசிக்கிறேன் எங்கப்பா காதலுக்கு எதிரி எல்லாம் இல்ல ரம்யா, இவுங்க நாலுபேரையும் ஒரே இடத்தில் சந்திக்கலாமா? எனக்கு சாய் பிடிச்சிருக்குடி அவன ஒகே செய்யலாம் என்று இருக்கேன்.
” போடி சினிமா மாதிரி இருக்கும் நாலு பேரும் நம்ம கம்பெனியில் தானே வேலை செய்கிறார்கள், கேன்டீன்க்கு வரச்சொல்லு மச்சி மீட் பண்ணுவோம் ”
” குட் ஐடியா மச்சி !! ”
அன்று இரவு சாட்டிங்கில் வினோத், சதீஸ், பிரபு, சாய் என நான்கு பேரையும் நம்ம டைட்டில் பார்க் கேண்டீன்க்கு வாங்க நிச்சயம் சந்திக்கலாம் என்று 2 நாள் தள்ளி மாலை 7 மணிக்கு சந்திப்பதாக திட்டம். கடைசி டேபிள்க்கு வாங்க நானும் தோழியும் இருப்போம் என்றேன்.
ரம்யா மற்றும் சரண்யாவை அழைத்து கொண்டு கார்னர் டேபிளில் உட்கார்ந்துருந்த போது வரிசையாக வந்தனர் கூப்பிட்டு உட்கார வைச்சதும், அந்த டேபிளில் மொத்தம் 7 பேர் உட்கார்ந்திருந்தோம்.
” வினோத், சதீஸ், பிரபு, சாய் என அனைவருக்கும் எங்களை தெரியும் ஆனால் இதில் சிந்துங்கறது யார் என வரிசையாக கேட்டனர் (அப்ப சிந்து பேக் ஐடியா என நால்வருக்கும் கொச்ம் கடுப்பு போல) ”
சிறிது மௌனத்திற்கு பிறகு நான் தான் என கூறினேன். எல்லோர் முகத்தையும் பார்க்காமல் சாய் முகத்தை மட்டும் கவனித்தேன்.
” முதலில் பேசியவன் சாய் தான் அவன் தான் அம்மா தாயி ஆள விடு, தெரியாம சாட் செய்துவிட்டேன் என முதல் எஸ்கேப் அவன் தான் !! ”
” அடுத்து ஆட்களும் துண்டைக்காணம் துணிய காணம் என்று ஓட, நான் சாய் போய்ட்டானே என்ன செய்யலாம் என்று யோசித்தேன் ”
கூட இருக்கும் இருவரும் சிரி சிரி என்று சிரித்து இப்ப என்னடி செய்ய போகிறாய் என்று கிண்டலாக கேட்க…
” வேற என்ன செய்யறது எங்கப்பன் பார்த்த இழிச்சவாயனேயே கட்டிக்க வேண்டியது தான் வேற வழி என்று நடையை கட்டினேன், வீட்டுக்கு !! “