மீன் குஞ்சுகள்





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத் திரையில் சூரியனின் ஒளித்தடம் துவங்கத் தொடங்கிவிட்டது. பீடி ஒன்றைப் பற்ற வைத்தபடி கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீனித் தம்பி. மார்கழி மாதப் பனிக்குளிரில் அவனது உடம்பு வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது. கடற்கரையில் அவனது சக தொழிலாளர்களான மார்க்கண்டுவும் வீர சொக்கனும் நின்றிருந்தார்கள். அவனைக் கண்டதும் புலனசைத்தார்கள். இந்தச் சில வாரங்களும் தொழில் இல்லாததால் வள்ளங்கள் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் சோளகம் பிறந்துவிடும்; தொழிலும் தொடங்கிவிடும்.
நண்பர்கள் மூவரும் கடலில் இறங்கிக் கணுக்காலளவு நீரில் நின்றபடி சோளகம் பிறக்கப் போவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதைப்பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அலைகள் மெதுவாக வந்து போய்க் கொண்டிருந்தன.
“சோளகம் பிறக்கும் பொழுது அடுத்த பருவத்தோட தாமெல்லாம் கடலுக்குப் போகலாம் போலிருக்கே” என்று குதூகலத்துடன் கூறினான் மார்க்கண்டு. உண்மை தான். சோளகம் பிறந்துவிட்டால் அந்தச் கடலோரப் பிரதேச மீனவ மக்கள் மத்தியில் எத்தனை குதூகலம் வாழ்க்கையில் வசந்தம் வருவது போன்ற மகிழ்ச்சிச் கரையிலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள்எல்லாம் கடலில் ஓடத் தொடங்கிவிடும். மீனவப் டெண்கன் குழந்தைகளுக்குக் கூட சிறுசிறு தொழில்கள் கிடைத்து விடும். பிற இடத்து மீன் முதலாளிகள்கூட அங்கே படையெடுத்து வரத் தொடங்கி விடுவார்கள்.
“எங்கட பாடு பரவரயில்லை” மார்க்கண்டுவின் கூற்றை ஆமோதிப்பது போல வீரசொக்கன் கூறினான் அபிப்பிராயம் எதுவும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த சீனித்தம்பியின் பார்வை கடல் நீரில் பதிந்திருந்தது. கடலின் நீருள் ஓடி விளையாடும் மீன் குஞ்சுகளை நோக்கியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.எங்கிருந்தோ வந்த பெரிய மீன் ஒன்று மீன் குஞ்சுகளைத் தனது இரையாக்கிக் கொண்டிருந்தது. சீனித்தம்பி இந்தக் காட்சியை நண்பர்களுக்குச் சுட்டிக் காட்டியபடியே ”இதைப் பார்க்கிறபோது உங்களுக்கு என்ன தோணுது?” என்று நண்பர்களிடம் கேட்டான். அவர்களுக்கு அவனது மன வோட்டம் புரியவில்லை கேள்விக் குறியோடு சீனித்தம்பியை நோக்கினார்கள்.
“இந்தக் காட்சி நம்ம வாழ்வைத்தான் பிரதி பலிக்குது. சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் முழுங்குகிற மாதிரியே நம்ம உழைப்பை எல்லாம் சம்மாட்டிக அமுக்கி விடுவாக …வள்ளங்களுக்குச் சொந்தக்காரர் என்கிற ஒரே காரணத்தாலே நம்ம உழைப்பில் பெரும் பங்கை அபகரித்து விடுகிறாரே! ம்…நமக்குக் கிடைக்கிறதெல்லாம் சொறீப கூலிதானே! சோளகம் பிறந்திட்டா எங்க வயிறு என்னவோ நிரம்பும்தான் . ஆனா வாழ்வு முன்னேறுமா? …இல்லியே!” என்று கவலையுடன் கூறினான் சீனித்தம்பி. அவனது கூற்றிலுள்ள உண்மை மார்க்கண்டுவுக்கும் வீர சொக்கனுக்கும் புரிந்தது.
மூவரும் கடலை விட்டு வெளியே வந்து மணற் பரப்பில் நடந்தார்கள். கடற்கரை மணலில் துரித்துக் கொண்டிருந்த ஊரிகள் கால்களில் குத்தின. சீனித்தம்பி மடியிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைத்து, புகையை ஒரு முறை நன்றாக உறிஞ்சி இழுத்துவிட்டு, “சொந்தத்தில் நம்மெட்ட வள்ளம் இருந்து விட்டால் நாம் விரும்பிய மாதிரிச் சம்பாதிக்கலாம். பிச்சைக் கூலியை எதிர்பார்த்து சம்மாட்டி கிட்ட கையேந்தி நிற்கவேண்டிய தில்லை…” என்றான் ஆதங்கத்துடன்.
வள்ளம் வாங்குவதற்கு வழி? பாவம்! ஏழை மீனவர் களால் வள்ளம் வாங்குவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா இங்கே!
சோளகம் பிறந்து விட்டது! இருள் முற்றாக விலகாத அந்த அதிகாலை நேரம் கடற்கரையில் மீனவத் தொழிலாளர்களும், சம்மாட்டிகளும், வியாபாரிகளும் மீன்பிடித் துறையருகே கூடியிருந்தனர். நீர்க் காக்கைகளும், நாரைகளும், கொக்குகளும், மற்றும் மீன்தின்னிப் பறவைகளும் ஒலி எழுப்பியபடி பறந்து கொண்டிருந்தன. கீழ்வானம் வெளுத்துக்கொண்டு வந்தது. இரவு மீன் பிடிக்கச் சென்ற வள்ளங்கள் கரைக்கு வரத் தொடங்கி விட்டன. எல்லா இரைச்சலையும் மீறிக்கொண்டு ஏலம் கூறுபவர் களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
“முப்பது ரூபா…”
“நாப்பது ரூபா…”
“அம்பது…”
“யாரு அம்பது?… யாரு அம்பது ரூபா? … அம்பது ரூபா மூணாந்தரம்…”
”அறுபது…’ என்றான் இரத்தினம்.
“அறுவது ரெண்ணாந்தரம்.. காசிம் காக்கா, நீங்க கேக்கலியா?… அறுவது மூணாந்தரம்…” கண்மணி, சொக்கநாதன் சம்மாட்டியின் மீன்களுக்கு ஏலம் கூறிக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் உ.சக்ககவா இரிக்கி…சரி போவட்டும்; அறுவத்தி மூணு…” காசிம் காக்கா கேட்டார்.
”அறுவத்தி மூணு… அருவத்தி மூணு… அறுவத்தி மூணு…கடைசித் தடவை… ம்.. ஒருத்தரும் மேல் கேக்கலியா… காசிம் காக்காவுக்குத்தான் வாசி… எடுங்க காக்கா” கண்மணி ஏலத்தை முடித்தாள்.
இத்தனை சலசலப்புக்குமிடையில் கடலை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் கௌரி. பரந்து கிடக்கும் நீலக்கடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில வள்ளங்கள் கரையை நோக்கி வந்து கொண் டிருந்தன. அவற்றில் ஒன்றில்தான் சீனித்தம்பியும் இருப் பான். ஒவ்வொரு வள்ளமும் கரையை நெருங்க நெருங்க அதில்தான் அவன் இருப்பதாகக் கௌரி எண்ணிக் கொள்வாள். அந்த நம்பிக்கையில் ‘சுள்’ என்று அடிக்கத் தொடங்கிவிட்ட காலை இளம் வெயிலையும் பொருட் டுத்தாமல் வள்ளங்கள் வருவதையே பார்த்துக் கொண் டிருந்தாள். சுருங்கடல் தொடர்ச்சியான பேரலைகளை வீசி எறிந்து கொண்டிருந்தது. மீனவர்களின் வள்ளங்கள் தூரத்தே கரும்புள்ளிகள் போலக் காட்சியளித்துக் கொண்டிருந்தன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் கௌரிக்கும் சீனித்தம்பிக்கும் திருமணம் நடந்தது.அது ஏழ்மைக்கும் வறுமைக்குமிடையில் நடந்த ஒரு திருமணம். பசிக்கும் பட்டினிக்குமிடையில் நடந்த திருமணம் கௌரி வயதில் சின்னவளானாலும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு வேண்டிய திறமையும் குணாதிசயங்களும் அவளிடம் இருந்தது. அதுதான் அவள் கொண்டு வந்த தாய் வீட்டுச் சீதனம். இந்தக் குறுகிய காலத்தில் தம்பதியினரின் அன்பு இறுகிப் பிணைந்துவிட்டது. சீனித்தம்பி, வீரசொக்கன், மார்க்கண்டு ஆகிய மூவரும் வீரமுத்துச் சம்மாட்டிக்குச் சொந்தமான ஒரு வள்ளத்தில்தான் தொழில் புரிந்தனர். மூவரும் நெருங்கிய நண்பர்கள். வீரசொக்கனுக்கு இன்னமும் கலியாணமாகவில்லை.
அநேகமான வள்ளங்கள் எல்லாம் கரைக்கு வந்து விட்ட போதிலும் கணவன் சென்ற வள்ளம் வந்து சேராததால் கௌரி கலங்கினாள். “சந்நிதி முருகனே… அம்மாளாத்தை… அவர் சுகமாக வந்து சேரணும்” என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டத் தொடங்கி விட்டாள். தினமும் கணவன் கடலால் திரும்பும்வரை அவள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிம்மதி யின்றித் தவிப்பது வழக்கம். அதிலும் என்றைக்குமில்லாதவாறு இன்று அதிக தாமதம் ஏற்பட்டு விட்டதால் அவள் மிகவும் குன்றிப் போயிருந்தாள். ‘அவருக்கு என்ன ஆயிடுச்சோ?’ அவள் இதயத்தில் கேள்விகள் பலமாக ஒலிக்கத் தொடங்கின.
ஏனைய வள்ளங்கள் எல்லாம் வந்து மீன்களும் விற்பனைக்கு வந்து விட்டதால் வீரமுத்துச் சம்மாட்டியும் நிலை கொள்ளாமல் தவித்தார். எங்கே தனது வள்ளம் கடலோடு போய்விட்டதோ என்ற பயமும் அவர் மனத்தில் எழுந்தது. கரையோரத்தில் மீன் விற்பனை இன்ன மும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. கண்மணியும் இன்னும் சிலரும் வலைப்பாட்டிலிருந்த இராலை அள்ளிச் சாக்குகளில் கொட்டித் தரம் பிரித்தனர். அவர்கள் செய்யும் வேலைக்காக இறாலுடன் கலந்து வரும் சிறிய மீன்கள் ஊதியமாகக் கிடைக்கும். இன்னும் சிலர் ஐஸ் கட்டிகளை உடை த்து மீன்களுடன் கலந்து பெட்டிகளில் அடைத்துக் கொண்டிருந்தனர்.
கரையோரப் பகுதிகளில் வலைகளைக் காயப் போட்டுவிட்டு, அநேகமான தொழிலாளர்கள் கூலியையும் இரண்டொரு மீன்களையும் சம்மாட்டிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு தமது குடிசைகளை நோக்கி நடந்தனர் வேலையை முடித்துக் கொண்டு குடிசையை நோக்கி நடந்த அந்தோனியிடம் வீரமுத்துச் சம்மாட்டி கேட்டார். “அவுகளைக் கண்டியா எலே…?”
“காணல…ஆனா பயப்படும்படி ஒண்ணுமில்ல.கடல் செத்துப் போய்த்தான் இருந்தது… வருவாக…” அந்தோனியின் வார்த்தைகள் கௌரியின் மனதிலும் பாலை வார்த்தது. கலங்கிய கண்களுடன் நின்றிருந்த அவளைப் பார்த்த அந்தோனி, “தங்கச்சி பயப்படாத… நான் சொல்லுறேன் பயப்பட வேணாம்… நம்பளை ஆண்டவன் கடலில் வாழ வெச்சிரிக்கான். கண்ணீரை விட்டுணு இருந்தா சரிப்யாபோயிடுமா? எதுக்கும் பயப்படாதே… ஆண்டவன் பாத்துப்பான்… கண்ணைத் தொடைச்சுக்கோ” என்றபடி மடியிலிருந்த சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தான் காற்று துணை புரிபாததால் “நாசங் கட்டின காத்து…” என்று முணுமுணுத்த அடியே மீண்டும் தீக்குச்சியைக் கிழித்தான். சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்ட அந்தோனி, “தங்கச்சி” என்று உற்சாகமாகக் கூறினான். “அதோ பாரு வள்ளம் ஒண்ணு வருதது அவுக வள்ளந்தான் புள்ளே…”
அந்தோனி காட்டிய திசையில் தூரத்தே ஒரு வள்ளம் வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் கௌரியின் முகம் மலர்ந்தது. வீரமுத்துச் சம்மாட்டியும் வள்ளத்தை உன்னிப்பாகப் பார்த்துவிட்டு அது தனது வள்ளந்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, மகிழ்ச்சியில் கௌரியம்மாவிடம், “அதோ வருகுது…என் வள்ளம் தான்” என்றார் உற்சாகத்துடன் வேகமாகக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்த வள்ளத்தில் துடுப்பு வலித்துக் கொண்டிருந்த சீனித்தம்பியைக் கண்டதும் கௌரி குதூகலத்துடன் கரைக்கு ஓடினாள். இதுவரை இருளடைந்திருந்த அவள் முகம் பிரகாசமடைய ஆரம்பித்தது.
வள்ளம் கரையை அண்மித்ததும் சீனித்தம்பியும் நண்பர்களும் தண்ணீரில் இறங்கி வள்ளத்தைக் கரைக்குத் தள்ளினர். சுரையில் நின்ற சிலரும் உதவிக்குக் கை கொடுத்தனர். கரையில் வள்ளத்தைத் தொடுத்து விட்டு வளையும் வலையையும் தூக்கிக் கொண்டு வந்தான் சீனித்தம்பி. மிகுந்த களைப்பு அவனது முகத்தில் பிரதி பலித்திருந்தது. வள்ளத்தை எட்டிப் பார்த்து வீரமுத்துச் சம்மாட்டிக்கு ஒரே குதூகலம்! சுறாவும் சீலாவும் நிறையப்பட்டிருந்ததே காரணம். வள்ளத்திலிருந்தே மீன்களை அள்ளிக் குவித்தபடியே மார்க்கண்டு கூறி னான்; “ராத்திரி காத்து பலமாயிருந்தது. துமியும் தொடங்கவே பயந்தே போயிட்டோம்.”
“லே… கெட்டிக்காரக… அதனால் என்ன? நிறைய மீன் பட்டிருக்கே… பலே பலே…” என்று குதூகலித்தார் சம்மாட்டி இவர்களின் உள்ளக்கிடக்கையை உணராதவ ராக. இவரது வார்த்தைகள் சீனித்தம்பிக்கும் நண்பர் களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தின. அசதி மறுபுறம், மீன்களை அள்ளிக் கூடைகளில் குவித்தபடி ஏலம் கூறத் தொடங்கினாள் கண்மணி.
”இந்தா அம்மே… தினமும் நான்தான் வாங்கிக் கிறேன். நியாயமாக ஒரு கூலியைப் போட்டுத் தர வேண்டியது தானே? நூற்றி நாப்பது தர்ரேன்…” என்றார் காசிம் காக்கா.
”இல்லை மொதலாளி. இருநூறுன்னாலும் போட்டுத் தரணும்… நல்ல மானுளுவைச் சுறா. பாரை, சீலா எல்லாம் இருக்கு.”
“சரி சரி நீ விடப் போறியா?… நூற்றி எழுபத்தியஞ்சு…எடுக்கவா…” என்றபடி சம்மாட்டியின் பக்கம் திரும்பி, ”என்ன சம்மாட்டியார்?… எடுக்கவா?” என்றார் காசிம் காக்கா.
“என்ன காக்கா? உங்களுக்கு ரெண்ணு விலை சொல்லுவேனா? ஏதோ நியாயமாகக் கொடுங்க..”
மீன் நல்ல விலைக்கு விற்பனையான போதிலும் சினித்தம்பிக்கும், வீரச்சொக்கனுக்கும் மார்க்கண்டுவுக்கும் வழக்கமான அதே கூலியைத்தான் கொடுத்தார் சம்மாட்டி. கறிக்குக் கொடுத்த மீன்களில் தான் சிறிது தாராளம் இருந்தது மனதில் தோன்றிய எரிச்சலையும் ஏமாற்றத்தையும் அடக்கிக் கொண்டு சீனித்தம்பியும் நண்பர்களும் மனதில் குமுறினார்கள். சீனித்தம்பி தனக்குக் கிடைத்த மீன்களைக் கௌரியிடம் கொடுத்து விட்டுச் சோர்வுடன் நடந்து செல்கையில், “என்னிடம் சொந்தமாக ஒரு வள்ளம் இருந்தால் என அவனது மனம் அலை பாய்ந்தது.
அவனைத் தொடர்ந்து வந்த வீரசொக்கன், இன்னிக்கென்னாலும் ஒரு ஐந்து ரூபா போட்டுத். தந்திருக்கலாமே” என்று தனது மனக்கிடக்கையைக் கூறி அங்கலாய்த்தான். அங்கே வந்து கொண்டிருந்த மார்க்கண்டுவும் அவனது ஆதங்தத்தை ஆமோதிப்பவன் போல, “நாம் நாணயமா வேலை செய்யுறோம். சம்மாட்டி பலே ஆளா இருக்காரு…கூடக் கேட்டால் பாய்வாரு… வேற வேல ஆட்கள் இருக்காக என்பாரு… ம்… காசு ஆசை பிடிச்ச பிசாசு..” என்றான் வெறுப்புடன்.
“இந்தச் சம்மாட்டிகளே இப்படித்தான். நமக்கு ஒரு வயிறு, குடும்பம் இரிக்கென்னே நினைச்சுப் பார்க்க மாட்டாக. நமம உழைப்பாலேதானே பணம் சம்பாதிக்கிறாக என்ற எண்ணமே அவுகளுக்கு இல்லை…” என்றான் சீனித்தம்பி. “… ம்… நம்ம கிட்ட ஒரு வள்ளம் இருந்துட்டா விரும்பின மாதிரிச் சம்பாதிக்கலாம்…” வாழ்க்கையின் மீதுள்ள தாகம் விளைவிக்கின்ற கனவுகள் அந்தச்சமயத்தில் அவனது இதயக் கூட்டுக்குள் எட்டிப் பார்த்தது.
“ஏலாத காரியத்தை நெனைச்சு என்ன மச்சான் விரயோசனம்…ம்…” என்ற வீர சொக்கனைப் பார்த்து, “லே… அப்படிச் சொல்லாதே… நெனைச்சா சாதிக்க முடியாத காரியம் எதுவுமே இல்லை… சிறுகச் சிறுகப் பணம் சேர்ப்போம். காலம் நேரம் கூடிவராமலா போகும்” என்றான் சீனித்தம்பி,
“இப்பவே கடன்… நாம எங்கே பணம் சேர்க்கிறது?” என்றான் மார்க்கண்டு.
“நீதான் உழைப்பதைக் கள்ளுக் கொட்டிலிலேயே கொட்டிடுவியே…அப்புறம் ஏது மிச்சம்?” என்று அவனை மடக்கினான் சீனித்தம்பி.
சிறுது நேரம் மௌனமாக நடந்து வந்த வீரசொக் கன் சொன்னான்; “எங்களுக்குச் சொந்தத்தில் ஒரு வள்ளம் கிடைச்சால் பாதிவரும்படி வள்ளத்தில் கடலுக்குப் போகிறவனுக்குத்தான். உழைக்கிறவனுக்கு இல்லாத வரும்படி மற்றவனுக்கு எதுக்கு?'”
நண்பர்கள் மூவரின் மனதிலும் வள்ள ஆசை வந்து விட்டது!
“அம்மே சாப்பிட்டாகளா?” டவுனால் திரும்பிய சீனித்தம்பி கௌரியிடம் கேட்டான்.
“அவவுக்குச் சுகமில்லை… இருமிக்கிட்டே இருக்கா… கஞ்சிகூட வேணாமாம்… மருந்து எடுத்தா நல்லதுங்க…” கெளரி சொன்னதும் அறைக்குள் நுழைந்த சீனித்தம்பி தாயின் உடலைத் தொட்டுப் பார்த்தான். “உடம்பும் காயுது போலிருக்கே. லே… கௌரி. கசாயம் கொஞ்சம் காச்சு… நான் வீரசொக்கன் கடயில் ஆஸ்பிரின் குளிசை இரிக்கான்னு பார்த்துட்டு ஓடி வாரேன்…”
“வந்த களையோட போறீக கொஞ்சம் கூழ் குடிக்கிறீகளா?”
“அப்பொறமா வந்து குடிக்கிறேன். கசாயத்தை அடுப்பில வை. கொத்தமல்லி, சுக்கு எல்லாம் இரிக்கா?”
“ஓ… நீங்க சிக்கிரமா வரப்பாருங்க…”
அம்மா இவனைப் பெற்றதோடு நோயாளியாகி விட்டாள். அதற்கப்புறம் நித்திய நோயாளிதான். அம்மா தான் முதலில் செத்துப்போவாக என்று சின்ன வயதி லேயே இவன் நினைத்துக் கவலைப்பட்ட துண்டு. ஆனால் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது. திடகாத் திரமாக இருந்த அப்பாதான் திடீரென்று ஒரு நாள் கடலோடு போய்விட்டார். அம்மா வருடக் கணக்கில் படுக்கையோடு கிடந்து போராடிக் கொண்டிருக்கிறாள்.
சீனித்தம்பி உச்சிவெயிலில் நடந்துவந்து வீரசொக் கனின் பெட்டிக்கடையை அடைந்தான். அதைக் கடை என்று சொல்ல முடியாது. வீட்டில் ஒரு பகுதிதான் கடை வள்ளமும் ஒன்று சொந்தத்தில் வாங்கவேண்டும் என்ற அவாவில் வருமானத்தை அதிகரித்து பணம் சேமிக்க வேண்டும் என்பதற்காக வீரசொக்கன் இந்தப் பெட்டிக் கடையை அமைத்திருந்தான். சுற்று வட்டத்தில் வேறு கடைகள் இல்லாததால் அவனது கடையில் வியாபாரம் சுமாராக நடந்தது. பீடி, சுருட்டு, என்வலப், முத்திரை சீனி, தேயிலை இப்படிப் பொருட்களின் பட்டியலை ஒரே பார்வையில் கூறிவிடலாம். அவனது அம்மாவும் தங்கை யும் அவன் தொழிலுக்குப் போகும் வேளைகளில் கடையைக் கவனித்துக் கொள்வார்கள்.
கடையில் எவரையும் காணவில்லை. அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் சத்தம் கேட்டது. “லே…ஆஸ்பிரின் வெச்சிருக்கிறியா?” என்று சீனித்தம்பி குரல்கொடுத்ததும் குசினியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வீரசொக்கன் சாப் பாட்டை முடித்துக் கொண்டெழுந்தான். சாரத்தை அவிட்டு அதன் மேற் பகுதியால் வாயைத் துடைத்தபடி பெரிய ‘ஏவறை’ ஒன்றை விட்டுக் கொண்டு வெளியே வந்த வீர சொக்கன் சீனித்தம்பியைக் கண்டதும், “என்ன உச்சி வெயில்ல வந்திருக்கே?” என்று கேட்டபடியே உட்கார் என்று சாக்குக் கட்டிலைக் காட்டினான்.
“நான் இப்ப இருக்க வரல்ல… அம்மே காய்ச்சலில் கிடக்கிறாக… ஆஸ்பிரின் வைச்சிருக்கியான்னு பார்க்க வந்தேன்…” வீரசொக்கனிடம் ஆஸ்பிரின் வில்லையை வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குத் திரும்பினான் சீனித்தம்பி.
“அம்மே… ஆஸ்பிரின் குளிசை… காய்ச்சல் வெளுத்து கௌரி காசாயம் வாங்குது… குடியுங்கென்னா…லே காச்சினியா? கொண்டு வா… அம்மே… கசப்பாகத்தான் இருக்கும். அதுக்காகக் குடிக்காமல் விட்டா காய்ச்சல் மாறிவிடுமா?” தாயை எழுப்பி கசாயத்தையும் ஆஸீபிரீ னையும் கொடுத்துவிட்டு சாப்பிடுவதற்குக் குசினிக்குச் சென்று தட்டின் முன்னே உட்கார்ந்தான் சீனித்தம்பி. சோற்றையும் பாரை மீன் குழம்பையும் விட்டு மேலே கருவாட்டுப் பொரியலையும் வைத்துவிட்டுகணவன் சாப் பிடுவதையே ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கௌரி
”நீ சாப்பிட்டியா? இல்லித் தானே? கொட்டிக் கலாமே…வா…வா… என்றழைத்தான் சீனித்தம்பி. தட்டைக் கழுவி கையிலேந்தியபடி சாப்பிட்டாள் கௌரி. குந்திக்கின் னு சாப்பிட்டேன். என்ன அவசரம்?” என்று சொன்னதும் கௌரியும் சீனித்தம்பி அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
“கௌரி… பணம் எவ்வளவு சேர்ந்திருக்கு? நாம் மூணு பேரு மாகச் சேர்ந்தென்னாலும் ஒரு வள்ளம் வாங்க என்று மார்க்கண்டுவும் சொக்கணும் சொன்னாக”
“இன்னும் முன்னூறு ரூபாவே சேறலை… நாம் எப்ப தான் பணம் சேர்க்கப் போகிறோம்? எப்படித்தான் அவள் பதிலுக் வள்ளம் வாங்கப் போகிறோம்?” என்று குச் சலித்துக் கொண்டாள்.
“நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது. இருந்து பாரேன். என்றைக்காவது ஒரு நாள் எங்கட வள்ளம் கடலிலை ஓடத்தான் போகுது. காலம் மாறும்… காத்து எப்பவும் ஒரேதிசையில் வீசாது… காலம் வரும். இன்றைய கனவுகள் தான் நாளைய நனவுகள்” அவன் அடித்துக் கூறினான். இப்போதெல்லாம் சீனித்தம்பிக்கு வள்ள நினைவுதான். கடந்த சில நாட்களாக அந்த வேட்கையில் அவனது குறிப்பறிந்து கௌரியும் அவனது இலட்சியம் நிறைவேற அயராது உழைத்தாள். கூடவே சிக்கன வாழ்க் கையையும் கடைப் பிடித்தாள். காலம் கனியுமா?
மனிதர்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்று: எதிர்பாராத செலவுகள் அடுத்தடுத்து வந்து சீனித்தம்பி யின் சேமிப்பைக் கரைத்து விட்டன தாயாரின் நோய். கௌரியின் பிரசவச் செலவு, இப்படிப் பல செலவுகள்! மார்க்கண்டுவாலும் சேமிக்க முடியவில்லை பிரமச்சாரியான வீரசொக்கனிடம் தான் பணம் சிறிது பதுங்க ஆரம்பித்தது கூடவே அதிஸ்டமும் அவனை நாடி வந்தது.
பொன்னுச் சம்மாட்டியின் மகள் இராசம்மாளின் கண்கள் இவன் மீது விழுந்தன மகளின் மன எண்ணத்திற்கு மதிப்பளித்து பொன்னுச்சம்மாட்டி வீரசொக்கனைத் தனது மகளுக்குத் திருமணம் பேசி வந்தார். சிறு தொகையையும், தனது வள்ளங்களில் ஒன்றையும் சீதனமாகக் கொடுக்க முன் வரவே வீர சொக்கனும் கலியாணத்திற்குச் சம்மதித்தான். திருமணம் நிறைவேறியது. வீரசொக்கனுக்கு சொந்தமாக வள்ளம் கிடைத்ததும் சீனித் தம்பியும மார்க்கண்டுவும் பூரித்துப் போயினர்.
வீரமுத்துச் சம்மாட்டியிட மிருந்து விலகி இன்றுதான் முதன் முதலில் வீர சொக்கனின் வள்ளத்தில் மீன்பிடிக்கப் போவதற்குத் தயாராகினார்கள் சீனித்தம்பியும் மார்க்கண்டுவும். வீரசொக்கனின் வீட்டிற்கு வந்த இருவரும். அவன் இன்னமும் தயாராகாமல் நிற்கவே, “என்ன இன்னிக்கு கடலுக்கு வரல்லியா?” என்று கேட்டனர்.
வீரசொக்கன் சிரித்தான். “இன்னிக்கு நான் வரல்ல…” என்றான். கலியாணம் பண்ணிய புதிதில் எல்லோரும் இப்படித்தான் என எண்ணியபடி சீனித்தம்பியும், மார்க்கண்டுவும் கடலுக்குப் புறப்பட்டனர். தமது சொந்தவள்ளத்தில் போவது போன்ற மகிழ்ச்சியுடன் இருவரும் கடலில் இறங்கினர். சுறா, வாளை. சீலா, பாரை என்று வழக்கத்திலும் பார்க்க அதிக மீன்கள் பிடிபட்டன.
காலையில் கரைக்குத் திரும்பியபோது வீரசொக்கன் அவர்களுக்காக காத்திருந்தான். மீன்களைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது. மீன் 180 ரூபாவிற்கு ஏலம் போனது. வீரசொக்கன் மட்டுமின்றி சீனித்தம்பியும் மார்க்கண்டுவும் கூட மகிழ்ந்தனர். ஆனால் இருவரின் மகிழ்ச்சியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. வழக்கமாக மற்றச் சம்மாட்டிகள் கொடுக்கும் அதே கூலியையும் இரண்டொரு மீன்களையும் மட்டுமே வீரசொக்கன் கொடுத்த போது அவர்களது இதயங்கள் சுக்கு நூறாகின. மகத்தான ஏமாற்றத்தை அவர்களால் தாங்க முடியவில்லை. வள்ளங்கள் கரைக்கு வந்து விட்டன. சம்மாட்டிகளுக்குக் கொண்டாட்டம். வீரசொக்கன் சம்மாட்டி உட்பட.
மார்க்கண்டுவும் சீனித்தம்பியும் கடலில் கணுக் காலளவு நீரில் நின்றபடி உரையாடிக் கொண்டிருந்தனர். சீனத்தம்பயின் பார்வை கடல்நீரில் பதிந்திருந்தது. கடல் நீருள் விளையாடிக் கொண்டிருந்த மீன்குஞ்சுகளை எங்கிருந்தோ வந்த பெரிய மீன் ஒன்று இரையாக்கிக் கொண்டிருந்தது. “என்ன பார்க்கிறே?” என்று கேட்டான் மார்க்கண்டு.
“மீன் குஞ்சுகளை பெரிய மீன் இரையாக்குகிறது. இதே சின்ன மீன்கள் பெரிய மீன்களான பின்னர் சின்ன மீன்களைச் சாப்பிடாமலா விடப் போகின்றது? இதை நினைத்தேன். சிரிப்பு வருகிறது” என்றான் சீனத்தம்பி.
அவன் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறான் என்று மார்க்கண்டுவுக்குப் புரிந்தது. சீனித்தம்பி தொடர்ந்து கூறினான். “ஒரு தொழிலாளி பணக்காரனாகி விடுகிறதால் தொழிலாளர் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. தொழிலாள வர்க்கத்தினருடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படனும். உழைக்கிறவனுக்கு உழைப்பில் பங்கு இருக்கணும்…”.
உண்மைதான்! காலம் கனியுமா?
– தீபம்
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.