மழைக்குறி





(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13
அத்தியாயம் பத்து
வேலைகள் எல்லாம் ஓய்ந்தன.
இக்பாலும் வீட்டிற்குப் போய் ஒரு மணித்தியாலத்திற் கும் மேலானது. தேவராசாவும் ரணசிங்காவும் மாட்டுத் தாள் விரிப்பிலே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். மயில்வாகனம் கல்லாமேசையிலே குப்புறப்படுத்து விட்டான். நள்ளிரவு மெயில் வண்டியின் வருகையும் நடந்து முடிந்தது.

குப்பி மண்ணெய் விளக்கினை எடுத்துச் சென்று தன்னு டைய துருப்பிடித்த சின்னஞ்சிறிதான றங்குப்பெட்டியைத் திறந்தான். றங்குப் பெட்டியின் உட்புற மூடியில் அந்தச் சதைப் பிடிப்பான பெரியவுரின் படம். உதட்டுக்குக் கீழே சுண்டங்காய் அளவுவீக்கம். போட்டிருந்த தலையணியிலே சிகப்பு நட்சத்திரம். உடுப்புகளின் அடியில் கையை விட்டுத் தடவினான். தட்டுப்பட்ட பொருளை மெல்லமெல்ல வெளியே எடுத்தான்.
எடுத்தபோது சுழன்று நெளிந்து அவன் அங்கலாய்த்த விதம் அவனை சந்தேகப் பிராணிபோலக் காட்டியது. அரவ மில்லாமையை ஊர்ஜிதம் செய்துவிட்ட அவன் கண்கள் அந்தப் பொருள் வெகுவாக ஆகர்ஷித்தது.
சொரசொரப்பான கொழுத்த மரப்பிடியிடையில் பொருத்தியிருந்தது நெளிவு பட்ட உருக்கு வளைவு. ‘இந்தக் கிறிஸை இரண்டு கிழமைக்குக் கவனமாய் வைச்சிருந்து விட்டுத் தா’ உலப்பனை விவசாயி பொடிஹாமி அந்தப் பொருளைச் சுருட்டிய கடுதாசியில் போட்டுத் தந்த போது சொன்ன சொற்கள் காதில் ரீங்காரித்தன.
அந்தக் கிறிசைக் கைகளில் எடுத்து ஒருபிடி பிடித்துப் பார்த்தான். அவனுள் ஏதோ வெறிபிறந்தது அவனைச் சிப்பிலியாட்டம் செய்தது. பைத்தியக்காரனைப் போல ஓங் கிக் குத்தும் பாவனையில் கைகளை பயிற்சிசெய்து பார்த்தான்.
கல்லா மேசையடியிலிருந்து ஏதோ அரவம் கேட்பது போலிருந்தது. ஆனாலும் அவனுள் பிரவகித்த புத்துணர்வு புறவுலகினையே மறக்க வைத்துவிட்டது. அந்தக் கிறிசை ஆவல் தீரத் தீரப் பிடித்துப் பார்த்தான். கேவலமான, இழி வான. கொலை வெறி உணர்வுக்கு முற்றிலும் மாறான ஒரு உணர்வில் மிதக்கின்றேன் என்ற ஒன்றில் மட்டும் அவனுக்கு அணுவளவுச் சந்தேகம் கூடவில்லை.
மாமேதை லெனின் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு நினைவில் வந்தது: ஆயுதங்களின் உபயோகங்களை அறிந்து கொள்ள ஆயுதங்களினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்காத ஒரு அடக்கியொடுக்கப்பட்ட வர்க்கம் அடிமையளாக நடத் தப்படுவதற்கு மாத்திரம் தகுதியானது.
அடுத்தநாட் காலையில் முதலாளியார் துருவினார்.
“உன்ரை பெட்டிக்கை கிறிஸ் கிடந்துதாம். உண் மையோ பொய்யோ. ஆரைக் கொலை செய்யப் போறாய். கொலை செய்யக் கூடியனீ எண்டெனக்குத் தெரியும். ஆனாக் கொலை செய்ய முந்தி கடையை விட்டு விலகினாய் எண்டா பேந்து எனக்குப் பொலிஸ் கோடு எண்டலைய வேண்டி வராது”
உடனே சின்னத்தம்பி பதிலின்றித் தன்னுடைய றங்குப் பெட்டியை எடுத்து வந்து எல்லாவற்றையும் தரையில் கொட்டிக் காண்பித்தான். நான்கு வேட்டிகளும் இரண்டு சேட்டுகளும் குலைந்தன. கிகப்புப் பிளாஸ்ரிக் கவரிட்ட ஒரு புத்தகம் அடியிலிருந்தது.
“அதுக்கிடையிலை ஆரிட்டையோ ஒளிச்சுமறைச்சுக் குடுத்திட்டான்”
மயில்வாகனம் சொன்னான்.
“ரணசிங்காவும் தேவராசாவும் உங்களுங்கடை பெட்டி யளைக் கொண்டாங்கோ.’
அவர்களும் தங்களுடைய பெட்டிகளைக் கொண்டு வந்து கொட்டினார்கள்.
ரணசிங்கா பெட்றோமக்ஸ் மான்ரில் பெட்டிக்குள் தன் னுடைய திறைசேரியைச் சேகரித்து வைத்திருந்தான். அத் தனை விசேஷமாக எதுவும் தேறவில்லை. ஒரு குப்பி நிரம்பிய தேங்காய் எண்ணெய்.
தேவராசாவின் பெட்டிக்குள் ஒரு வாழைநார்ப்பட்டு வேட்டி. அவனது பக்கத்து வீட்டுக்காரர் இந்தியா போய் வந்த போது காசு கொடுப்பித்து அவன் வாங்கிய ஒரு வேட்டி அது தவிர டெரலின் சேட்டு இரண்டு.
“ஒரு வேளை பக்கத்துக் கடையிலை உவன்ரை தோழன் ஜமால்டீனிட்டை குடுத்திருப்பானோ? நீங்கள் கேட்டுப் பாருங்கோ.”
மயில்வாகனம் யூகித்தான்.
”தேவராசா! நான் சொன்ன தெண்டு ஜஸீமா ஜுவலரி முதலாளியிட்டை சொல்லி ஜமால்டீனைக் கூட்டியா”
ஆக்ஞையும் பிறந்தது.
“பொலிசுக்கு றிப்போட் பண்ணக்கு முந்தியாயே உண் மையைச் சொல்லிப் போடுங்கோ. ஆர் கிறிஸ் வைச்சிருக்கிறது?”
ஜமால்டீன் வந்ததும் எல்லாரையுமாகச் சேர்த்து முத லாளியார் கேட்டார். ஜமால்டீன் ஏற்கனவே தேவராசா விடமிருந்து விடயத்தைப் பிடுங்கி விட்டான்.
“கிறிஸ் மட்டுமா தொவக்கு, கத்தி, கோடாரி, எல் லாம் உங்களைப் போலை முதலாளிமாரிட உறிஞ்சல இருந்து தற்காப்புச் செய்யிறதிக்கு வேணும்”
ஜமால்டீனின் அசாதாரண பதில் முதலாளியாரின் கோபத்தை மூட்டிற்று.
அதே கோபவேகத்தோடு ரெலிபோன் டயலைச் சுழற்றிப் பொலிசுக்குத் தகவலும் கொடுத்தார். ஒருசில நிமிஷங்களுள் தனலக்சுமி ஸ்ரோர்ஸ் வாசலண்டை ஜீ ப் உறுமலுடன் தனலக்சுமி வந்து நின்றது. முன்னால் றைவருக்குப் பக்கத்தேயிருந்து ன்ஸ்பெக்ரர் இறங்கினான். சினிமாப் போஸ்ரர்களில் உள்ள ஸ்ரார்களின் வதனத்தை ஒத்த முகம். அரும்பியிருந்த மீசையை மிக அழகாக நறுக்கி விட்டிருந்தான். புடைத்துத் திரண்டிருந்த தசைக்கோளங்கள் காக்கி உடையின் அடக் கத்திலும் தன்னுடைய வலிமையை வெளிகாட்டின அவனைத் தொடர்ந்து நான்கு ஐந்து ஏவல் உருவங்கள் ஜீப்பிலிருந்து இறங்கின. பூட்ஸுகளும் ரீங்காரித்தன.
இன்ஸ்பெக்ரர் கடையினுள் நுழைந்ததும் நுழையாதது மாக நாகலிங்கம் எழுந்து நின்று வாயெல்லாம் பல்லாக வர வேற்றார். உபசரித்தார் குளிருட்டும் பெட்டியிலிருந்து ஐந் தாறு கொக்காகோலா சோடாப் புட்டிகளை எடுத்து நிதான மின்றி உடைத்தான் மயில்வாகனம். கொக்காகோலா நுரை தள்ளியது.
ஒவ்வொருபொலிஸ் மகனுக்கும் ஒவ்வொரு போத்தலாகக் கையளித்தான். பொலிஸார் முறுவலோடு வாங்கித் திரும்பி நின்று கொண்டு குடித்தனர். இன்ஸ்பெக்ரர் மயில்வாகனத் தின் திணிப்பைத் தவிடு பொடியாக்கித் தன்னை வளைத்தோ நெளித்தோ மாற்ற முடியாது என்ற ரீதியிலே உரங்காட்டி ஃபஸ் பண்ணினான்.
“யாரிலை உங்களுக்குச் சந்தேகம்?”
இன்ஸ்பெக்ரர் கேள்வி கேட்டான்.
நாகலிங்கத்தார் சின்னத்தம்பியையே முதன்முதலில் சுட் டிக் காட்டினார்.
“இவன் முரட்டுச் சிங்களவன்”
முதலாளியாரின் உள்ளம் சொன்னது, இன்ஸ்பெக்ரரின் நோட்டத்தின் விளைவாகவே முந்தியிருந்த இன்ஸ்பெக்ரர் சனூன் எத்துணை அன்னியோன்னியமாக என்னோடு தொடர்பு கொண்டிருந்தார்? ஆஃகா! அவர் மட்டும் இட மாற்றலாகிப் போயிராவிட்டால் எனக்கு எத்துணை உதவி தருவார்? இவன் பேசுகிற புஸ்புஸ் சிங்களமே புரியுதில்லையே!
அந்த விடிகாலைச் சூரியகதிர்கள் உறைந்திருந்த பனிப் படலத்தைக் குலைத்து ஆவியாக்கிக் கொண்டிருந்தது. கூதலுக் காக மஃபிளரைத் தலையிலே சுற்றிக்கொண்டு பேக்கரியில் வாங்கிய சுடுபாணை அணைத்த வண்ணமுமாய் அங்கொன்றும் இங்கென்றுமாகச் சிதறிய தலைகள் தவிர ஜனநடமாட்டம் குறிப்பிடும் படியாகஇல்லை. தொலைவிலுள்ள கண்டிப் பாட சாலைகளுக்குப் போகப் புறப்பட்ட மாணவியரின் யூனிஃபோம் வெளிறலின் கீறல்கள் வெண்மைப் பனிப்படலத்தைக் கிழித் தது. மண் மண்டிக் கிடந்த வெட்டுக்களில் ஒன்றிரு கடைப் பலகைகளே விலக்கப்பட்டிருந்தன.
“நல்ல பிள்ளையாய் உண்மையைச் சொல்லு உனக்கேது கிறிஸ்?”
சிங்களத்திலே இன்ஸ் பெக்ரர் கேட்டான்.
“உங்களைப் போலைப் பக்கபலமாய் பொலிசை வைச்சிருக் கிற முதலாளியள் கூட வேலைக்காறரை அடிக்கிறதுக்கு பிரம்பு வைச்சிருக்கேக்கை; எங்களடை உயிரைத் தற்காப்புச் செய் யிறதுக்கு எண்டாலும் எங்களிட்டை என்னைப் போலத் தொழிலாளி விவசாயி யளிட்டை என்னதான் இருக்கு? பொங்கை றாக்கியிலே பிரம்பைப் பாருங்கோ”
“அடே! வாய்மூடு கனக்கக்கதைக்க வேண்டாம். தெரிந்துதா?”
இன்ஸ்பெக்ரர் வெருட்டினான்.
தேவராசாவுக்கு பொலிசின் பிரவேசத்தைக் கண்டு வயிற்றில் புளி கரைத்துவிட்டதைப் போலிருந்தது.
“உன்னட்டை கிறிஸ் இருக்கா?”
திரும்பவும் இன்ஸ்பெக்ரர் கேட்டான்.
“இருந்தால் கைமாட்சோடை என்னைக் கூட்டிக்கொண்டு போகலாம்”
சின்னத்தம்பி உரமாகச் சென்னான்.
இன்ஸ்பெக்ரர் இதுவேதோ போலியான தகவல் என்றே நினைத்தான். தன்னுடைய சகாக்களை கடைபூராவும் பரி. சோதனை போடும்படி பணித்தான்.
கடை பூராவும் சீர்குலைவது கண்ட நாகலிங்கத்தார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டவர் போலானார்.
“இந்தச் சிவப்புச் சேட்டுக்காராளையும் வெருட்டிப் பாருங்கோ'”
முதலாளியார் இன்ஸ்பெக்ரரின் காதினுள்ளே ஓதினார். அவருக்கு ஜமால்டீன் மேலுள்ள சந்தேகத்தை தெரிவித்தார்.
“உன்ரை முழுப் பெயரென்ன?”
“எம்.எச்.எம். ஜமால்டீன்”
“எங்கை இருக்கிறாய்?”
“பக்கத்திலயுள்ள ஜஸீமா ஜுவலரியில”
“இங்கை கிறிஸ் வைச்சிருந்ததைக் கண்டியா அல்லது நீயேதன் வைச்சிருக்கிறாயா?”
“இல்லை”
வாய்த்துடுக்கான பதில்கள் எதுவுமே ஜமால்டீனிடம் இருந்து வராததைக் கண்ட முதலாளியார் ஜமால்டீன் நன் றாகப் பயந்து விட்டான் என்றே நினைத்துக் கொண்டார். ஆனால் அவரது நினைப்போ அடுத்த கணமே துகள் துகளாய்க் கொண்டிருந்தது. ஜமால்டீன் சின்னத்தம்பிக்குத் தமிழிலே சொன்னான். இன்ஸ்பெக்ரருக்கு தமிழ் தெரிந்திருக்க நியாய மில்லை. அதனால் அவன் இப்போது செவிடன்.
“உப்பிடிப்பட்ட ஆயுதங்கள நாங்க வைச்சிருக்கிறபடி யாத் தான் எங்கட உயிராவது எங்கட கையிலயிருக்கும். உதுவும் இல்லாக்காட்டி நமக்கெண்ணு ஒண்ணுமேயீக்காது. எங்கட மனச்சாட்சி தான் எங்கட ஆயுதம்.”
மயில்வாகனம் உடனேயே ஜமால்டீன் சொன்னதை சிங்களத்தில் மொழி பெயர்த்து இன்ஸ்பெக்ரருக்குப் புரியும் படி சொன்னான்.
“நீ என்ன கொம்யூனிஸ்ரோ'”
இன்ஸ்பெக்ரர் கேட்டான்.
“கனக்கக் கதைக்க வேண்டாமெண்டு சொல்லி போட்டு ஏன் கேள்வி கேடகிறீங்கள்”
ஜமால்டீன் பதில் சொன்னான்.
“கதையிலிருந்து தெரியுது”
இன்ஸ்பெக்ரர் நுணுக்கமான தனது கண்டுபிடிப்பை வெளியிட்டான்.
“ஏதோ காவலிக் கழிசறை ரௌடியள் தான் கொம் யூனிஸ்ட்கள் எண்டது உங்கடை நினைப்பு. உது இப்ப வெற்றியடைஞ்சாலும் நிரந்தர வெற்றியாய் இருக்காது எண்டது மட்டும் உறுதி”
“நிரந்தர வெற்றியைப் பற்றி அவங்களுக்கு என்ன கவலை?”
சின்னத்தம்பி நக்கலடிக்க ஜமால்டீன் முலாம் பூசினான்.
“நொன்சென்ஸ்”
இன்ஸ்பெக்ரர் சீறினான்.
“சூரியனைப் பார்த்து நாய் குரைக்குது.”
ஜமால்டீன் தொடர்ந்தான்.
“கீப் யுவர் மௌத் ஷ்சட்”
இன்ஸ்பெக்ரருக்கு ஆவேசம் வந்துவிட்டது.
மயில்வாகனம் புதிய கோல்ட்லீஃப் பைக்கட்டை உடைத்து கொஸ்ராக்களுக்கு நீட்டினான். அவர்கள் சிகறெட்டை எடுத்து பற்றவைத்தபோது தங்களுடைய தொப்பிகளை எல்லாம் கழற்றி விட்டார்கள்.
அதற்கிடையில் ஒருவன் இன்ஸ்பெக்ரருக்கு சல்யூற் அடித்துவிட்டுச் சொன்னான்.
“சேர் தேயர் இஸ் நோ இவிடன்ஸ் அற் ஓல்”
இன்ஸ்பெக்ரர் ஸ்ரூலிலே அமர்ந்து கொண்டு தன் னுடைய டையரியில் ஏதோ சில குறிப்புகளை எழுதினான். ஒவ்வொருவரதும் முழுப் பெயர் சொந்த வீட்டு விலாசங் களை எல்லாம் கேட்டான். அதற்கப்புறம் அவன் பார்வை கண்ணாடி அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த புதியரக மீன் எண்ணெய்ப் போத்தலிலே லயித்தது. தன்னுடைய கண்களுக்கே இது நாள் வரை அகப்படாத புதியரகமாக இருக்கிறதே; என்ற வியப்பும் புதுமையும் ததும்பப் பார்த்தான்.
“மன்னிக்கவும். உங்களுக்குத் தேள்வையில்லாமைக் கரைச்சல் தந்திட்டம்.”
முதலாளியார் குழைந்தார்.
“பரவாயில்லை. இந்த கொட்லிவர் ஓயில் என்ன பிராண்ட்? எவ்வளவு காசு?”
இன்ஸ்பெக்ரர் கேட்டான்.
“பிரிட்டிஷ் மேட். வேணுமெண்டா கொண்டுபோங்கோ மயில்வாகனம் மூண்டு போத்திலைப் பாக் பண்ணிக் குடு”
இன்ஸ்பெக்ரர் தன்னுடைய சட்டைப் பையுள் கைவிட்டு மணிப்பேர்சை எடுப்பது போலப் பாசாங்கு செய்தான்.
“ஐய்யய்யோ காசு என்னத்துக்கு? எல்லாம் சந்தோஷ மாய்த் தான் ஐயா
முதலாளியாரின் மொழி கேட்டு இன்ஸ்பெக்ரர் புன் நகை பூத்தான்.
“மாத்தயாகே நம மொக்கதே?”
தலையைச் சொறிந்தபடி முதலாளியார் கேட்டார்.
“ஏட்றன் டீ சொயிசா. ஹரி அபி யமு”
“ஆ! போமஸ் துதி”
இன்ஸ்பெக்ரரும் அவனுடைய சகாக்களும் கிளம்பினார் கள் அதன் முன்னரே மயில்வாகனம் மூன்று போத்தல்களை யும் அழகாகக் கட்டி எடுத்துச் சென்று ஜீப்பின் முன்பக்க சீற்றில் வைத்திருந்தான்.
“மட்டத் எக்கக் தெண்ட”
“மட்டத் போத்தலய எக்கக்'”
மயில்வாகனத்தை வேறு இரு பொலிசார் சுரண்டிக் கேட்டார்கள். ஆனால் ஜீப் புறப்பட்து.
“இது முதல் முறை எண்டபடியா சின்னத்தம்பிக்கு மன்னிப்புத் தாறன். இனிமேல் கேள்விபட்டன் எண்டால் நீ ஊருக்கு வெளிக்கிடுவாய்.”
ஜமால்டீன் வெளியேறினான். ரணசிங்கா பின் பக்கமாகச் சென்று பீடி பற்ற வைத்தான். தேவராசா ஓட்டமும் நடையுமாய் வாளிக்கிணற்றடிக்குப் போனான் அவனுடைய கையிலே இருந்த வாளிக்குள் மாற்றுச் சாரமும் வெட்டுப் பட்ட சவர்க்காரமும் இருந்தது. சின்னத்தம்பி பின்பக்கச் சுவரோடையில் சாரத்தை உயர்த்தி சலங்கழித்து விட்டு ரணசிங்காவுக்குப் பக்கத்திலே வந்து குந்தினான்.
உள்ளேயிருந்து முதலாளியார் மயில்வாகனத்தைக் கேட்டார்:
“நீ என்ன கனவா கண்டனீ?”
”இல்லை. உண்மையாய் என்ரை இரண்டு கண்ணாலையும் கண்டனான்”
“அப்ப எங்கை வைச்சிருப்பன்?”
“கடவுளுக்குத்தான் தெரியும்.'”
“ஆரேன் அவன்ரை கூட்டாளியளிட்டைக் குடுத்திருப்பான்”
“ஆர் அவன்ரை கூட்டாளியள்?”
“கொம்யூனிஸ்ட் ஆக்களாய் இருப்பினம். அவையளுக் கெல்லாம் கத்தி – கிறிஸ் – துவக்கு – எல்லாம் விளையாட்டுச் சாமன் தானே”
“நீ உண்மையாய்க் கண்டியா?”
‘”ஓம்”
“சின்னப்பெடியளாய் இருந்தால் பிரம்பாலை நாலு ஐந்து அடி போட தன்பாள்ளை கக்கிப் போடுவாங்கள், இவன் தலைக்கு மேலாலை வளர்ந்திட்டான். இப்புடி வருவான் எண்டு தெரிஞ்சிருந்தா உவனைக் கடையிலை கூட சேர்த்திருக்க மாட்டன், ”
“உவன் முந்தியே கொம்யூனிஸ்ற் ஆள்தான். ஆனால் அப்ப பேசிறதில்லையாக்கும்.”
“சீ!”
“ஓ!”
“உனக்கு எப்பிடித் தெரியும்?'”
“நான் விசாரிச்சு அறிஞ்சனான்.”
“எங்கை விசாரிச்சனீ?”
“எங்களின்ரை ஊரிலை செம்பாட்டுப் பள்ளன் ஒருத்தன் நான் கம்பளையில நிற்கிறன் எண்டறிஞ்சு எனக்குச் சின்னத் தம்பியைத் தெரியுமே எண்டு கேட்டான். அவனோட கதைச் சாப் பிறகு தான் விஷியம் தெரிஞ்சுது.”
“அப்ப ஆள் மிச்சம் தடிப்புத்தான்”
“பின்னே?”
“உவ்வளவு தடிப்பானவன் எண்டு நான் கனவிலை கூட நினைக்கேல்லை”
முதலாளியார் பின்புறமாய் வந்து எங்காவது குழி தோண்டி கிறிஸைப் புதைத்திருக்கிறானோ என்று நோட்டம் விட்டார்.
“புளுத்த மூத்திர நாத்தம் அடிக்குது. வெளியிலை போயிருந்தால் என்ன குறைஞ்சு போமே”
“உங்களின்ர வீட்டிலை மட்டும் யூறோப்பியன் ரெயினேஜ் இருக்கலாம். நாங்கள் தான் றோட்டிலை போயிருக்க வேணும். அப்பிடித்தானே”
சின்னத்தம்பி பதிலடி தந்தான்.
“ஓம் அப்புடித் தான்,”
மூலதனத்தின் அம்மணமான சர்வாதிகாரத் தொனி முதலாளியாரின் இறுமாப்புப் பேச்சிலே அத்துவிதமாய்க் கலந்திருந்தது.
“எங்கடை எரிமலை வெடிக்கேக்குள்ளை உங்களின்ர யூறோப்பியன் றெயினேஜ் எல்லாம் சேர்ந்து வெடிக்கும் என்பதை மட்டும் மறக்காதையுங்கோ”
“என்ன டைனமற் வைப்பியே”
“ஒருகோடி டைனமற் செய்யக்கூடிய காசை நீங்கள் தான் முடக்கியி ருக்கிறியளே. பேந்து என்ன எண்டு நாங் கள் டைனமற் செய்யிறது?”
“காணும் காணும். நல்ல காலமாய் கிறிஸ் சங்கதி யாலை பொலிசிட்டை ஆப்பிட்டுச் சப்பாத்தாலை உதை வாங்காமைத் தப்பிட்டாய். அம்மன் கோவிலிலை போய் ஒரு பால் அபிஷேகம் செய்”
கூறிக்கொண்டே சின்னத்தம்பியின் தோளிடை கைபோட் டார் முதலாளியார். இந்த விநோதத்தைக் கண்டு முறுவலித்தான் ரணசிங்கா.
“என்னட்டை மறைக்காம கிறிஸ் எங்கையிருந்து, என் எத்துக்கு வாங்கீனி, இப்ப எங்கை கிடக்குது எண்ட விஷயங்களைச் சொன்னீ எண்டா சத்தியாமாய் உனக்கொரு கணக்கப்பிள்ளை வேலை தருவன். மயில்வாகனத்தை பண் டாறவளையிலுள்ள கடைக்கு விட்டிட்டு உன்னை அவன்ரை இடத்துக்குப் போடுறன். பேந்து உனக்குச் சம்பளம் நூற்றி இருபத்தைஞ்சு. மாசாமாசம் உன்ரை இஷ்டப்படி சிலவழிக்கலாம். கொழும்பிலை எனக்குப் பங்காயிருக்கிற சிப்பிங் ஏஜண்ட் கொம்பனியிலை கவுண்மேந்து உத்தியோக காரச் சம்பளத்தில் வேலை.”
“வடை கட்டி எலி பிடிக்கிற பொறி விளையாட்டு என்னிலை வாய்க்காது”
முதலாளியாருக்கு முகத்திலே அறைந்தமை போன்றி ருந்தது. முகம் இருள சின்னத்தம்பியை அணைத்திருந்த இறுக்கமும் தளர்ந்தது.
“இன்கொம்டாக்ஸுக்கு ஒரு கணக்கும் எங்களுக்கு இன்னொரு கணக்கிலை சம்பளமும் தாறனியளா சின்னத்தம் பிக்குக் கணக்கப்பிள்ளை வேலை போட்டுக் குடுக்கப்போறியள்'”
ரணசிங்கா சமயமறிந்து தாக்கினான்.
முதலாளியாரின் மூளையே வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. ஒன்றும் பேசாமல் விறுக்கென உள்ளே போனார்.
இது நடந்து இரு வாரங்களின் “பின்னால் கம்பளையில் கிறிஸ் குத்து” என்கின்ற தலைப்போடு மாலைத்தமிழ்த் தினசரியில் வெளியான செய்தியை மயில்வாகனம் முதலாளி யாருக்கு உரக்கப் படித்துக் காட்டினான்.
“கம்பளையைச் சார்ந்த திரு.ஸீ.எம்.டீ. மல்லவ ராச்சி என்பவரை அடையாளந் தெரியாத நபர் ஒருவர் கிறிஸால் நான்கு தடவைகள் குத்திகொலை செய்தார்”
‘”ஆர்.ஆர். பெரென்ன”
முதலாளியார் மிக அங்கலாய்த்தார்.
“மல்லவராச்சி”
“என்ர கோதாரி எங்களிட்டை நெடுகச் சாமான் வாங் கின மனிசன். இந்த ஊரிலை இருக்கிற நான்கூடக் கேள்விப் படேல்லையே”
படபடவென சால்வையைக் கதிரையிலிருந் தெடுத்துத் தோளில் போட்டுக் கொண்டார்.
“உங்காலை அங்காலை போய்க் கேட்டுக்கிட்டு விசாரிச்சுப் போட்டு வாறன்”
கடைக்குள்ளே பொருள் கொள்வனவு செய்வோர் வேண்டுகோளின் பிரகாரம் சிலனத்தம்பி சுழன்று கொணடிருந்தான்.
அவனுடைய சிந்தனையெல்லாம் பொடிஹாமியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. எப்போ உலப்பனைக்குப் போகலாம்? பொடிகாமியோடு போயிருந்து நடந்தவற்றைப் பற்றியும் அத்துணை உத்வேகக் காரணி பற்றியும் விசாரிக் கலாம்? தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்ப்பதற்காகக் கொலை செய்தானா? வேண்டும் என்றே அடங்காத மனோ பாவங் கொண்டு கிறிசுக்கு வேலை தந்தானா? ஒன்றுமே சின்னத்தம்பிக்குப் புரிந்தபாடு இல்லை!
குழம்பினான்.
மிக மிகக் குழம்பினான்.
ஐயங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து அவன் சிந்தனையைக் குழப்பிற்று.
முன்னொரு முறை மல்லவராச்சி வீட்டில் தனக்குக் கிடைத்த கல்லெறியை நினைவில் மீட்டினான். மறுகோணத் தில், பொடிஹாமியின் சின்னக் குடிலையும் மனக்கண் எடை போட்டது.
நாற்புறமும் தென்னங் கீற்றுகளாலும் காய்ந்து சரு காகி விட்ட வைக்கோல் கீற்றுகளாலும் ஆனகுடிசை. தள பாடங்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவுமேயில்லை. நீண்ட முனையோடு அமைந்த ஏர்க்கலப்பை ஒன்று தான் அங்கிருக்கும் தளபாடம். இரண்டு தண்ணீர்க் குடுவைகள். ஒவ்வொன்றும் அழுக்கேறி முழுமுற்றாக நைந்துவிட்ட சீலைப் பலகணியின் மேலே வைக்கப்பட்டிருக்கும். அம்முட்டிகளைக் சுறள்ஏறிய தகரத்துண்டு மூடியிருக்கும். மல்லவராச்சியின் வீட்டைப்போல் றோயிங் றூம், பெட் றூம், ரெஸ்ஸிங் றூம், பாத்றூம், ஸ்ரோர் றூம், ஸ்ரடி றூம், ஸ்வாமிறூம் ஒன்றுமே யில்லை. ஒரே நாற்சதுர அடைப்பு. தரையில் மண்திட்டு.
மூலையிலே மண்அடுப்பு இருந்தது. மண் அடுப்பின் பக்க வாட்டில் எல்லாம் கரி. மலசலங் கழிக்கும் இடங்கூடச் சுற்றவர இல்லை. சரியான மழைக்கு இந்தக்குடில் நிச்சய மாகத் தாக்கும் பிடிக்காது. ஏன்; சாதாரண தூறலுக்கே தரையில் சகதி வந்திடும். கூரையில் சவர்பாத் இயல்பாகவே உண்டாகி விடும்.
சின்னத்தம்பி தன்னுடைய சித்தாந்தத்தின் அடிப்படை மனிதனை, பொடிஹாமியைக் கண்டு உலப்பனைவரை நடந்து கையுங்கால் வலிக்கச் சென்றதையும் மறந்து மனம்விட்டுப் பேசும் போதெல்லாம் தன்னையறியாமல் புளங்காகிதம் கொள்வான்.
பொடிஹாமிக்கு இல்லையென்று போனாலும் அறுபதுக்கு மேல் இருக்கலாம். முன்தலை மயிர்களின்றி சற்றே வழுக்கை அடைந்திருந்தாலும் ஒருநரைமயிர் கூடவில்லை. சின்ன தாகக் கொண்டை கட்டி முடிந்திருப்பான். கமஞ் செய்து உரமே றிய உடம்பு. என்றுமே அவன் கௌபீனக் கட்டோடு தான் நிற்பான். கௌபீனமின்றி வேட்டியுடுத்த மனிதனாக அவனை என்றுமே பார்க்க முடியாது.
அன்றிரவு உறங்கும் போது பக்கத்தில் படுத்திருந்த ரணசிங்கா சீண்டினான்.
“உன்னட்டைக் கிடந்தகெண்டு அறிஞ்சு பொலிஸ் வந்து பார்த்த படியால் நீயும் கேஸீலை அகப்படத் தான் போறாய்”
“உதுகளுக் கொண்டும் நான் பயப்பிடேல்லை. உப்பிடி எத்தினை ஆயிரம் தொழிலாளியளை எல்லாம் இப்பிடியான சமூக அமைப்பு விழுங்கியிருக்கு.”
அதன்பின்னர் சின்னத்தம்பி வெகுநேரமாக உறக்கமின்றி மல்லாந்து கிடந்தான். ரணசிங்கா போட்ட குறட் டையொலி சின்னத்தம்பியின் அயர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. கொசுக்கள் காதுகளைத் துளை போட்டன. காதோடு கைகளை வைத்து அடைத்தாலும் கொசுவின் ரீங்காரம் நிற்பதாயில்லை.
முகட்டு ஒட்டின் ரகழியில் எலிக்குஞ்சு ஒன்று கொறித் துத் தின்று கொண்டிருந்த பொருளை விட்டுவிட்டு எகிறித் துள்ளிஓடி மறைந்தது. அதைத் தொடர்ந்து சுர்சுர்சுர் எனச் சரசரதத ஓசை வந்தது.
சின்னத்தம்பி தலையை நிமிர்த்திக் கைகளைப் பிடரிக்குத் தாங்கும் நிலைகுத்தாக வைத்துக் கொண்டு பார்த்தான். ஓடுகளைத் தாங்கி நின்ற மரத்தின் ஊடாக மஞ்சள் பாம் பொன்று எலியைக் கலைத்த வண்ணமாக அசைந்து சென்றது.
அத்தியாயம் பதினொன்று
உறுகுணு குமாரி புகைவண்டியில் வழமைப் பிரகாரம் ஜனநெரிசல் இருந்தது. சிரமப்பட்டுப் பி டித்த கோணர் சீற்றில் ரணசிங்காவும் அவனுக்குப் பக்கத்திலே சின்னத்தம்பியும் கோந்து கொண்டு ஒட்டுண்டவர்கள் போலிருந்தார்கள். ரணசிங்காவின் தாயாருக்குக் கடுமையான சுகவீனம் எனத் தந்திவந்திருந்தது. சின்னத்தம்பியும் சேர்ந்து வெளிக்கிட்டதைத் தடுக்கவே முதலாளியார் எத்தனித்தார். ஆனால் வாய்க்கவில்லை.
வாயிலிலும் ஜன்னலிலும் தலையணையிலிருந்து பிதுங்கி வெளிப்படும் பஞ்சைப் போலப் பயணிகள் அடைபட்டிருந் தார்கள். ஆனால் முதல் வகுப்பு ஆசனங்கள் பலவும் காலி யாகவே இருந்தன.
தற்செயலாகத் தலையைத் திருப்பியபோது; தேவராசா வின் தகப்பனார் வெறும் மேலோடும் வெள்ளைச் சால்வை வெள்ளை வேட்டியுடனும் வந்து நின்றார். உடனே அவரை அழைத்துத் தன்னிருக்கையில் இருத்தி விட்டுத் தான் எழுந்து ஜன்னலோடு சாய்ந்து நின்றான்.
“எங்கை துலையாலையே இந்தப் பக்கம்?’
சின்னத்தம்பி கேட்டான்.
“கதிர்காமத்துக்கு நேத்திக்கடன். மனிஷியைக் கூட்டி யரக் காசு காணாது. தனிய வெளிக்கிட்டனான். உதாலை தேத்தண்ணி குடிக்கத் தன்னும் போகேலாது போலை கிடக் குது. எப்பிடித் தேவராசா பாடு?”
“சுகமாயிக்கிறான்”
“நீ எங்கை போறாய்.”
“மத்துகமத்திற்கு” என்று கூறி விட்டு ரணசிங்காவிற்கு,
“மேயா தேவராசாகே தாத்தா” என அறிமுகம் செய்தான்.
“என்ன விஷியமாய்ப் போறியள்?”
“இவர் எங்களோடை கடையிலை நிற்கிறவர். தாயுக்குச் சுகமில்லையெண்டு செய்தி வந்துது அதான் போறம்.”
“சிங்கள ஆளே.”
“ஓம்.”
“முகச்சாடையிலை தெரியுது.”
“தேவுக்கு எப்ப கலியாணம் செய்து வைக்கப் போறீங்கள்?”
“அதெல்லாம் காலநேரம் வந்தால் தானே. இரண்டு தங்கச்சிமாருக்கும் அவன் தானே சீதணந் தேடிக் குடுக்க வேணும். அவனைத் தான் நம்பியிருக்கிறம். ஒரு காலத்திலை முதலாளியாய் வருவான் தானே.”
”ஓமோம்”
கிண்டல் செய்தான் கின்னத்தம்பி,
“தறுதாலிப் பெடியன். அப்ப ஒழுங்காய்ப் படிச்சிருந் தால் இப்ப நாங்கள் எல்லாம் எவ்வளவு சுதியாய்க் கொழும் பிலை கண்டிலை வீடெடுத்துச் சீவிக்கலாம், உவனோடை படிச்ச முன்வீட்டுப் பெடியன் இப்ப பெரிய டாக்குத்தர். படிப்பு ஏறாமல் தான் கடைக்கு வந்தவன்.”
“கம்பளையிலை தேவராசாவுக்குப் பொருத்தமான நல்ல பொம்பிளை இருக்கிறாள். செய்து வைப்பமா?”
ரணசிங்கா, சின்னத்தம்பி ஆப்பில் அகப்படும் வேடிக்கை கண்டு முறுவலித்தான்.
*பகிடிக் கதை கதையாதை”
”இல்லை. உண்மான் சொல்றன். கொஞ்சம் முட்டுப் பட்டவை தான். சோனகக் குடும்பம் முந்தி மன்னார்ப் பக்கத்திலை இருந்தவையாம்”
“சோனகரோ?”
“ஓம். எண்டாலும் நல்லாக்கள்”
“உனக்கென்ன விசரே. சோனகரோடை சம்பந்தம் பண்ண நாங்கள் என்ன வந்தான் வரத்துக் குடிகள் எண்டு நினைச்சியா?”
“இல்லைப் பாருங்கோ. அவளின்ரை தமையன் பெடி யன் கூட எங்களோடான் கடையிலை நிற்கிறவன்”
“அதுக்கு எனக்கென்ன?”
“செய்து போடுறது நல்லது!”
“அளவுக்கு மிஞ்சின பகிடி விடாதை”
“இதென்ன பகிடி”
“உந்தப் பேய்க் கதை கதைச்சாய் எண்டால் பேந்து எனக்குப் பொத்திக் கொண்டு வரும். நீதேவின்ரை தங்கைச்சி மாரிலை ஒருத்தியைக் கட்டுறதெண்டாச் சொல்லு நீ சொல்லுற பள்ளத்துக்கை தேவுவைத் தள்ளிறன்”
“எனக்கு வயது நாற்பதாகுது! இனியும் கலியாணம் எண்டால்? பேரப்பிள்ளை காணிற வயசிலை?”
“உனக்கு மட்டும் கட்டேலாது. எங்களுக்குத்தான் சுட்ட வேணும். அப்பிடித் தானே உன்ரை நியாயம்?”
“ஏன் கோவிக்கிறியள்? இந்தக் காலத்திலை ஆர் சாதி சமயம் பார்க்கிறவை? தேவுக்குப் பொருத்தமாயிருக்குது எண்டு நீங்கள் பார்த்துச் சரியாய் நினைச்சால் கட்டி வையுங்கோ இல்லாட்டி விட்டு விடுங்கோவன்.”
“மற்றவை ஆடுமாடு மாதிரி மனிசனிலை குலம் கோத் திரம் பாக்காமல் செய்யினம் எண்டதுக்காக வேண்டி நாங்களும் கிணத்துக்கை விழுகிறதே.”
“காலத்துக் கேத்ததாய்க் கொஞ்சம் மாறுறது நல்லம் தானே”
“உந்த விசர் அலம்பலை அங்கொடையிலை போய்ச் சொல்லு. “
“ஒரு காலத்திலை இந்த விசர் அலம்பல் தான் வேதமாய் வரும்”
“அந்தக் காலம் வரேக்கை நாங்கள் எல்லாம் எந்தெந்தப் பிறப்போ ஆர் கண்டது”
“நானும் நீங்களும் இருக்க மாட்டம் எண்டாப்போலை வேறை மனிஷர் ஒருவரும் இருக்க மாட்டினமே. அவைய ளுக்கு வாழ்க்கை இருக்க மாட்டுதே”
தேவராசாவின் தந்தையாருக்கு சிந்தனை இலயிப்பு ஏற் படவில்லை மாறாக. மடியை அவிழ்த்து வெற்றிலைபாக்கு சுண்ணாம்போடு போட்டு மொன்று கொண்டார். கதிர்காம நேத்திக்கடனாகச் சேமித்து வைத்திருந்த வெள்ளி ஒருரூபாய் நாணய முடிப்பு அவர் மடியிலிருந்தது. வேறுசில பச்சைத் தாள்களும் ரெயில் ரிக்கற்றும் இருந்தது.
“என்ரை வீட்டை நீ வந்தனீ – எல்லே”
“ஓ!”
மறுபடியும் நறுக்குப் புகையிலைத் துண்டை வாயிலே போட்டுக் குதப்பினார். வாய் சிவந்தது. அவரால் பேசமுடி யாத அளவிற்கு வாய் முற்றிலும் எச்சில்.
சின்னத்தம்பியின் நினைவலைகளில் தேவராசாவின் வீடு வந்தது.
சுற்றவர இலந்தை முள்ளுவேலி. ஒருபக்கச் சுவர் கிடை யாது வீழ்ந்ததிலே அமைந்த செம்மண் திட்டியிலே புல்லு மேடையாய் முனைந்திருந்தது நாளிலே கோர்வையாக்கப்பட்ட பனங்கிளங்குகள் முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. கூரையிலே காயப்போட்டிருந்த கமுகம்பாளை பொரித்த றாலாக மாறியிருந்தது. தரையடங்கிலும் வெங்காயக் கூடை கள் பாதி பின்னியும் பாதி பின்னாமலும் சிதறுண்டு கிடந் தன. மரப்பலகை பொருத்தப்பட்ட ஒரு நீளக்கட்டில் திண் ணையில் இருந்தது. தட்டியில் சுட்டியிருந்த தென்னவோலை கள் காய்ந்து கருகி விட்டிருந்தன.
ஹவுஸ் கோட்டோடு எட்டிப் பார்த்த தேவராசாவின் தங்கைக்காரி சின்னத் தம்பியைக் கண்டதும் தாயாருக்கு அறி விக்க அடுப்படிக்குள் ஓடினாள். சாயம் போய் வெளிறிவிட்ட சேலைக்கேற்ற நிறமான தேவராசாவின் தாயார் வெளியே வந்து தடுக்குப் பாயை விரித்து உட்கார வைத்தாள். தேவ ராசாவின் தங்கை மூக்குப் பேணி முட்டி வழிய ஊற்றித் தந்த வெறுந் தேநீரை முடறு விம்மக் குடித்ததை அவன் மறக்கவில்லை. குசலம் விசாரித்த பின்னால் தேவராசாவின் தாயார் கேட்டாள்;
“தம்பிக்கு ரோட்டிலை இருக்கிற சிங்கப்பூர்ப் பென்சன் காரன் தம்பிமுத்துவைப் பழக்கமே”
“அவளவாயில்லை. என்ன விஷேஷம்”
சின்னத்தம்பி கேட்டான்.
“என்ரை தாலி அடைவு”,
குரலைத் தாழ்த்திச் சொன்னாள்.
“தரமாட்டாராமோ அல்லது விலைப்பட்டுப் போச்சாமோ”
“சீ. அப்பிடி யெண்டுமில்லை தேவு அனுப்பிற காசிலை கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டிக் கொண்டு வந்தநாங்க தான் தம்பி, அவருக்கு இத்தறியிலை எண்ணூற்றி நாப்பது ரூபாய் குடுத்தாச்சு. ஒருவரியத்துக்கு முந்திப் பொயிலைத் தோட்ட வேலை செய்யேக்கை ஒரு சதமுமில்லாமை தாலிக் கொடியை அடைவு வைச்சம் இப்ப வட்டியும் முதலுமாய் ஆயிரத்தி நானூறுக்கு மேலை வளந்திட்டுது. உன்னாலை ஏலுமேண்டா அவரிட்டைச் சொல்லி வட்டியைத் தெண் டிச்சு விடச்சொல்றியா'”
“அவர் பெரிய கசவாரம் எண்டு தான் ஊர் எல்லாம் பேச்சு”
“ஓம் மோனை இந்த மனிசன் தெரிஞ்சு கொண்டு பாம்புப் புத்துக்கை கவிைட்டுட்டுது. என்ன செய்ய”
“ஏன் உவ்வளவு தொகையிலை அடைவு வைச் சனியள்?”
“பொயிலைத் தோட்டம் செய்யிறதெண்டா சும்மா லேசான வேலையே ஐஞ்சாறு வண்டில்லை முதல்லை குழை பறிப்பிக்கவே இருநூறு வேணும். தோட்டங் கொத்திக் குழை பதிப்பிச்சுச் சாறக் கூலி பொங்கை வரும். பொயிலை நட்டுவிட்டால் ஓண்ட விட்ட ஒரு நாளுக்கு எண்டாலும் மிசின் பிடிப்பிச்சு இறைக்க வேணும். ஒருக்கா இறைச் சவுடனை மிசின் வைச்சிருக்கிறவன் கொண்டா ஐஞ்சு ரூபாய் எண்டு ஒத்தைக் காலிலை நிற்பான். இந்தக் காலத்திலை ஒருதரும் துலா மிதிக்கிறேல்லை. என்ரை அப்பு தோட்டம் செய்யேக்கை எல்லாம் துலாவாலை தான் இறைச்சவை. அப்பத்தை விளைச்சல் இப்ப ஏது?”
சின்னத்தம்பிக்கு தலைமைத் தோழர் எழுதிய “கிராமப் பகுதிகளில் வர்க்கங்களை வகுத்தல் எப்படி’ என்றகையேடு ஞாபகத்திற்கு வந்தது.
தேவராசாவின் தாயார் தொடர்ந்து மொழிந்தாள்.
“அழுக்கணவன் படாமை மருந்தடிப்பிக்கவே நளவர் நாள்கூலி பத்துக் கேக்கினம். பொயிலை வெட்டத் தீவார் அதுக்கு மேலாலை கேக்கினம். பொயிலை வெட்டி உணர்த் திறதெண்டால் உயிர் போய் வரும். நானும் பெட்டையள் ரண்டும் மனிசனும் நிண்டு வேலை செய்தாலும் வாற நளவர் சுளை பிடுங்காமைப் போக மாட்டினம். பொயிலை விக்கும் வரை காத்துக் குடிச்சுக்கொண்டே இருக்கிறது. நாலுபேரும் சோறு தின்ற காசே பொங்கை வரும். சங் கக்கடையிலையும் இருநூறுக்குக் கிட்ட கடன். பொயிலைத் தீர்ப்போடை வைச்ச அடைவுகளை எடுத்து கடனு ளும் அடைக்கத் தான் சரி. ஒருசதமும் மிஞ்சாது.”
“இதென்ன சாமான்?””
“வெங்காயக் கூடையள்”
“என்னத்துக்கு?'”
“சங்கத்திலை குடுக்கிறதுக்குத் தான் பின்றது. ஒரு கூடைக்கு ஆறுசதம் தருவினம். இதுகள் இரண்டும் இப் படிக் கூடை உழைக்கிறதாலையும் நெசவு அடிக்கிறதாலையும் தான் சீவியம் ஒருமாதிரியாக் கொண்டிழுக்கக் கூடியதாய் இருக்குது. இதுவும் இல்லாட்டி பேந்து பேசத் தேள்வை யில்லை.”
எங்கை பொன்னுத்துரை அண்ணரைக் காணன்
“அவர் தோட்ட வேலை ஒழிஞ்சு சும்மா நிக்கிற நேரத்திலை என்ரை அண்ணற்றை மோன் போட்டிருக்கிற கடையிலை நிக்கிறவர்.”
“எது கடை”
“உந்த முச்சந்தியிலை இருக்கிற கடை தான்.”
“தேத்தண்ணீக் கடையே”
“ஓ! அதைக் கொண்டு தான் அதுகளும் சீவியத்தை நடத்துதுகள். நல்ல கவுண்மேன்ந்து உத்தியோகமாய் அந்தப் பெடியன் பாத்துக் கொண்டிருந்து தெண்டா இத்தறியிலை என்ரை மோளைச் செய்து இருப்பன். நல்ல மூளைசாலி ஆள். இந்தக் காலத்திலை மூளையைப் பாத்தே வேலையைக் குடுக்கிறான். எல்லாம் களவுகள் தான. என்ரை அப்பு விசுவரை இந்த உலகத்திலை தெரியாத சனம் அந்தக் காலத்திலை இல்லை. முதல் முதலாய் வெள்ளைக்காறனுக்கு அடுத்தபடியாய் குதிரைவண்டில் வைச்சோட்டிய மனிசன் அவர் ஓராள் மட்டும் தான். இவற்றை அப்புவும் இலே சுப்பட்ட ஆள் இல்லை. அந்தக்கால வெள்ளைக்காரன் மிலிட்டரியிலை இருந்தவர். றோட்டிலை சப்பாத்துச் சத்தம் கேட்டுதெண்டவுடனை ஒரு எறும்பு தன்னும் அசையாது நாங்கள் தான எல்லாத்தையும் வித்துத்துலைச்சுப் போட்டம்.”
புழுக்கொடியல் கூடக் கட்டித் தந்தாள்.
நினைவுகளைக் குலைக்க வைத்தது வனபம்பரோபைலாப் பாட்டு. நிற்கவோ நடக்கவோ இருக்கவோ முடியாத நிலை மையிலும் குஷியடைந்த அந்த இர ணுவவீரக் குழுவிறகு வாய் சும்மா இருப்பதற்கு வாய்ப் பூட்டில்லை.
“வாய்ப்பூட்டு ஒண்டு வித்தால் வாங்கியேந்து உந்தக் கடுகாலிகளுக்குப் பூட்டலாம்.”
பொன்னுத்துரையர் சொன்னார்.
“தேவராசவுடை விஷியத்திலை நீங்கள் வீட்டிலைபேசிப் பறைஞ்சு முடிவுக்கு வாருங்கோ. அவனுக்குக் காயுதம் எழுதுங்கோவன்,”
சின்னத்தம்பி அளுத்கம ஸ்ரேசனில் இறங்கிய போது சொன்னான். Digitized by Noolaham Foundation,
“எனக்கெண்டா யோசிக்கிறதுக்கு ஒண்டுமில்லை. நீ சொன்னதெண்டு மனுஷிட்டை கேட்டுப் பாக்கிறன்**
பொன்னுத்துரையரின் பதிவோடு உறுகுணு குமாரியும் புறப்பட்டது.
மத்துசும பஸ்ஸிலே சனமில்லை. ஆனால் றைவருடைய வரவுக்காக அரைமணி நேரம் பயணிகள் காத்திருந்தபடி புழுங்கியவிந்தனர். கொண்டக்டர் டிக்கற் தந்து விட்டு இறங்கிப் போட்டான்.
“என்ன கடும் யோசினே”
ரணசிங்கா சின்னத்தம்பியின் – நிஷ்டையைக் கலைத்த படி கேட்டான்
“தேவராசா விஷ்யமாய்த் தான்”
சின்னத்தம்பி சொன்னான்.
பத்திரிகை விற்கும் பையனிடமிருந்து ரணசிங்கா அத்த ஒன்றை வாங்கிப் படித்து அலுப்படைந்தவன்; சுருட்டி வைத்தான்;
“தகப்பனார் சொன்னது மாதிரி நீயே அவன்றை தங்கச்சி ஒருத்தியைக் கட்டினால் என்ன.”
“கலியாணம் எண்டால் பண்டக்காய் வியாபரம் எண்டு நீயும் நினைக்கிறியா?”
சின்னத்தம்பியின் பதில் கேட்டு ரணசிங்கா சிரித்துக் கொண்டான்
“சேத்துக்குள்ளை கால் வைச்சால் தான் சேறு எண்டது தெரியவரும். அனுபவங்களை உன்னாலை ஒதுக்க முடியாது நான் உன்ரை இடத்திலை இருந்தன் எண்டா நிச்சியமாய் தேவராசாவின்ரை தங்கைக்காரியைக் கட்டச் சம்மதிப்பன் “
“நீ கட்டுறியா?”
”ஓம் ஆனால் நான் சிங்களவன். உவையள் உதுக்குச் சம்மதியாயினம்”
“எங்களைப் போலை ஓட்டாண்டியளுக்குக் கலியாணம் வெறும் கனவு தான். கடை வேலைகாரன் எண்டா காலு சுவருக்கிள்ளையும் சமாதியாயிட்ட உருவம் தான்””
மத்துகம பஸ்ஸ்ராண்டில் இறங்கினார்கள்.
கடைவீதியிலிருந்து வெகுதூரம் நடந்தார்கள்.
ஒதுக்குப்புறமாக நான்கு சேரிக் குடிசைகள், ஒன்றன் பின் ஒன்றாய் அமைந்திருந்தது. அந்தக் கடைசிக் குடிசை ரணசிங்காவினுடைய வீடு.
அங்கே தோரணத்தை வாயிலில் வளைத்துக் கட்டியி ருந்தார்கள். ரணசிங்காவின் நெஞ்சு வெடித்துத் தூளாகி விடும் போலிருந்தது. ஏனெனில் அது அவமங்களப் பெரஹராவின் அறிகுறி.
ரணசிங்கா வீட்டினுள் ஓடினான்.
அங்கே அவனது தாயார் நித்தியமான நித்திரையில் ஆழ்ந்து விட்டிருந்தாள்
அத்தியாயம் பன்னிரண்டு
சின்னத்தம்பி ரணசிங்காவின் வீட்டிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கே புறப்பட்டுக் கொழும்பு வந்து ஒன்பதரை உடறட்ட மெனிக்காவில் ஏறியிருந்தான. ரணசிங்கா கூடி வரவில்லை. அவன் திரும்பவும் கடைக்கு வருவானா என்பதும் சின்னத்தம்பிக்கு சந்தேகமாகவே இருந்தது. அவனுடைய தாயாரின் இழப்பு அவனை நடைப்பிணம் போலாக்கிற்று. அரிய நண்பனைப் பிரிந்தமை சின்னத்தம்பிக்கு என்னமோ போலிருந்தது.
கம்பளை வரை அசந்து தூங்கி விட்டான். காலை, மத்தி யானப் பட்டினி வேறு. அகோரமான வெயிலின் ரயில் பிர யாணத்தினால் கண்கள் நன்றாகச் சிவந்து போயின. மேலடங் சிலும் ஜலம் ஜலமாய் வேர்த்துக் கொட்டியது. தார் றோட்டு அனல் தார்க் குழம்புகள் சின்னத்தம்பியின் வெற்றுக் கால்க ளோடு ஒட்டிக் கொண்டிட கடையை நோக்கி நடந்தான்.
பிசுபிசுவென்ற வியர்வையின் துர்நெடி அவனிலிருந்து பிறந்தது. கலைந்து போன கிராப்பு, ரயில் அழுக்குப் படிந்த வேட்டி, அவனுடைய தலை சுற்றி விழாக் குறையாக அவன் கடையினுள்ளே நுழைந்தவுடன்
“உவர் தான் ஆள்”
முதலாளியாரின் சுட்டு விரல் அவளைச் சுட்டெரித்தது.
“ஏறு ஜீப்பிலை”
இன்ஸ்பெக்ரர், பொலிஸார், ஜீப்வண்டி நின்றதை அதன் பின்னர்தான் சின்னத்தம்பியால் உணர முடிந்தது ஒரு மிடறு தண்ணீர் தன்னும் குடிக்க வாய்ப்பில்லை.
“என்னத்துக்கு முதலாளி”
பரிதாபத்தோடு கேட்டான்.
“அதைப்போய் ஸ்ரேசனிலை கேளன்”
ஈவிரக்கமற்ற மனிதப் பிறவியின் குரலாக அவனுக்குப் பட்டது.
“நான் சரியாய் களைச்சுப் போய் வாறன்”
சின்னத்தம்பி தன்னுடைய நிலைபரத்தை உணர்த்தவே விரும்பினான்.-
“ஸ்ரேசனிலை நல்ல பஞ்சுமெத்தையில் பாலுஞ் சோறும் திண்டு போட்டுப் படுக்கலாம்; போ”
மயில்வாகணம் சொன்னான்.
“ம்… ம்… ஏறு ஜீப்பிலை”
இன்ஸ்பெக்டர் மறுபடியும் தொணதொணத்தான்.
‘”ஏன் எண்டு சொன்னாத் தான் ஏறுவன்”
“உதுக்கும் உவன்ரை வாய்க்குமாய் நல்ல வெளுவை போடுங்கோ இன்ஸ்பெக்ரர்”
முதலாளியார் உபதேசிக்கலானர்.
சின்னத்தம்பியின் உதடுகள் உலர்ந்து போய் வெள்ளை. யாகப் பொருக்கு வெடித்திருந்தது.
“ஏறுறியோ இல்லையோ”
இன்ஸ்பெக்ரர் அவனோடு மோதித் தள்ளிக் கொண்டு வந்து பலாத்காரமாக ஜீப்பில் ஏற்றுவித்தான். தெருவிலும் அண்டைக் கடைகளிலிருந்தும் பலரும் வேடிக்கை பார்த்த னர். இத்பாவின் உள்ளத்தில் முதல் முறையாக சின்னத் தம்பி மீதான பாசம் பிறந்தது. தேவராசாவும் மிகுந்த அனுதாபத்தோடு சின்னத்தம்பியைப் பார்த்தான். மறுமுனை யில் முதலாளியாரும் மயில்வாகனமும் ஏதோ மிகப் பொறுப் பான கடமையைச் செய்து முடித்து விட்டதைப் போன்ற பெருமிதம் எய்தினர்.
ஜஸீமா ஜுவலரியில் நின்ற ஜமால்டீன் நெஞ்சம் நெருப் பாய்த் தீ கக்கும் உணர்வுடன் இந்த நிகழ்ச்சியைப் பார்த் துக் கொண்டு நின்றான்.
ஜிப் பறந்தது.
நூதனசாலை மிருகத்தை அடைத்துக் கொண்டு போவதைப் போல் வேடிக்கை பார்த்தவர்கள் அம்மிருகத்தை பார்வையிடத் துடிக்கும் பெருந் துடிப்புடன் ஜீப்பைத் தொடர்ந்து ஸ்ரேசன் வரையிலும் ஓடினார்கள். ஜீப்பிலிருந்து சின்னத்தம்பியை இறக்கிக் கொண்டு சென்றார்கள். ஜன்ன லின் ஊடாக நடப்பதை பார்ப்பதற்கு ஜனத்திரள் மொய்த் துக் கொண்டது. ஒரு போலீஸ்காரன் வந்து மொய்த்துக் கொண்டிருந்த ஜனங்களைக் கோல் கொண்டு கலைத்தான். சிறியவர்கள் எல்லோரும் சிரித்துக்கொண்டே ஓடி மறைந் தார்கள். அந்தப் பொலீஸ்காரன் ஜன்னல் கதவுகளை அடித்து மூடினான்.
நான்கு பொலிஸ்காரர்கள் தங்களுடைய தொப்பியையும் மேலே போட்டிருந்த நீட்டுச் சட்டையையும் கழற்றினார்கள். பெனியன் அவர்களது மதர்மதர்த்திருந்த உடற்கட்டின் கோளங்களைக் காட்டிற்று.
முதல் இன்ஸ் பெக்ரர் சின்னத்தம்பியைப் பார்த்துச் சிங்களத்திலேயே கேட்டான்:
“நீ கிறிஸ் வைச்சிருந்தாய் தானே”
வஞ்சகத்தை வஞ்சகத்தாலே அறுக்கும் நுணுக்கம் தெரிந்த சின்னத்தம்பி உறுதியோடு சொன்னான்:
”இல்லை”
“ஏன் பொய் சொல்லுகிறாய். உன்ரை கடைக் குள்ளை கிறிஸ் வைச்சிருந்தனி எண்டு றிப்போட் வந்து ரண்டு கிழமைக்குள்ளை மல்லவராச்சி கிறிஸாலை குத்தப் பட்டிருக் கிறார். அது உனக்குத் தெரியுமா. கேள்விப்பட்டிருக்கிறியா’
“கேள்விப்பட்டன்”
“பேந்து ஏன் தொந்தரவு செய்கிறாய். உண்மையை ஒத் துக் கொண்டாய் எண்டால் நிச்சயமாய் நான் உன்னை வழக் கிலை போடாமல் செய்வன். இல்லாட்டித் தான் தொந்தரவு”
*ஆக உலகத்திலை ஒரு கிறிஸ் தானே இருக்கு. நான் வைச்சிருக்க, மல்லவராச்சியைக் கொலை செய்யவும்.”
“அப்ப நீ வைச்சிருந்தியா”
“இல்லை.இல்லை.இல்லை.’
“ஆரைக் கொலையாளியாய் இப்ப பிடிச்சிருக்கிறம் எண்டு உனக்குத் தெரியுமே”
“தெரியாது.நான் மத்துகமத்திலை இருந்து இப்பதான் வாறன்.”
“உலப்பனையிலை இருக்கிற பொடிஹாமி எண்டவனைத் தான்”
சின்னத்தம்பி பிரமிப்புற்றான். அவனது நயனங்களிலே, பிடிபட்டு விட்டாரா என்ற ஐயம் நெளிந்திருந்தது. அவனது முகமாறுதலை இன்ஸ்பெக்ரர் நன்றாக அவதானித்துக் கொண்டான்.
“அதுக்கு எனக்கென்ன”
சின்னத்தம்பி தன் மனச்சலனத்தை மூடி மறைத்தான்.
“உன்ரை உயிர்ச் சினேகிதனாம். மயில்வாகனம் ரிப் போர்ட் தந்திருக்கிறான். நீயும் இந்தக் கொலைக்கு உடந்தை தான்.”
இன்ஸ்பெக்ரர் சொன்னான்.
“பொய் ரிப்போட். எனக்குத் தெரியாது”
சின்னத்தம்பி பதில் கொடுத்தான்.
“நீ தான் கிறிஸை ஒழிச்சு வைச்சு பொடிகாமியிட்டைக் கொடுத்திருக்கிறாய். அல்லாவிட்டால் வேறை யாரோ உன்ரை தோழர்மாரிட்டைக் குடுத்து ஒழிச்சு ஒழிச்சுக் கடைசியாய்ப் பொடிகாமியீட்டைப் போயிருக்கும். உலப்பனையிலை முப்பது நாப்பது பேர் இதிலை உடந்தையாம். இங்கை உன்னைப் போலை ஏழெட்டுப் பேர் உடந்தையாம். பொலிஸ் நிச்சிய மாய் எல்லாரையும் கண்டு பிடிக்கும்.”
இன்ஸ்பெக்ரர் சொன்னான்.
“கள்ளன் யார் எண்டு தெரியாத பொலிசின்ரை கண்டு பிடிப்புக்கள் எப்பிடியானது எண்டு எனக்குத் தெரியும், ஊருக்கும் தெரியும்.”
சின்னத்தம்பி கேந்தி மூட்டினான்.
“ரைற். செவின் எயிற் நைன்! வட பலண்ட கோ”
இன்ஸ்பெக்ரர் கட்டளையிட்டான்.
மல்லன் மாதிரியிருந்த ஒருவன் எழும்பினான். யானைக் காதும், மூக்கும், பற்கள் பார்ப்பதற்கு அசிங்கமாக இருந் தன. ஆனாலும் அவனோர் பொலீஸ வீரன். சின்னத்த பி அவனைவிட மூன்றில் ஒரு பங்கு சிறியவன்.
திடுதிப்பெனச் சின்னத்தம்பியினுடைய தலையைக் குனிய வைத்து முதுகில் ஓங்கிக் குத்தினான்.
சின்னத்தம்பியால் நிமிரவே முடியவில்லை. அவனது இத யத்தை வெகுவாகத் தாக்கியது குத்து. அவன் நிமிரும் முன் னரே இன்ஸ்பெக்ரரின் கண்ஜாடைச் சிக்கினலைப் பெற்று விட்ட மற்ற மூன்று பெனியன் பொலிஸாரும் எழுந்து விட் டனர். தொடைக் காலைக் குடுத்து ஒருவன் சின்னத்தம்பியை நிமிரச் செய்தான்.
“பற புத்தா; கியண்டகோ”
வேறொருவன் பு றக்கையால் விலா எலும்பிலே குத்தினான் எலும்பு ஓடிந்து விடும் போலிருந்தது. அடிபட்ட இடத்தி லேயே நான்காமவனும் கை முட்டியால் இடித்தான்.
சின்னத்தம்பி உதைப்பந்து ஆகினான்.
நான்கு மூலைகளிலும் நான்கு பொலீஸார்கள். நவீன சூரபன்மர்கள். சின்னத்தம்பி ஒருவனிடம் அடி வாங்கி அயர்ந்து சோர்ந்து தள்ளாடித் தப்பிவர இரண்டாமவன் குத்தத் தொடங்குவான்; அவனுக்கும் கைவலித்து ஓயும் போது மூன்றாமவன் உதைப்பான். இப்படியே பம்பரமாய் நைந்தது சின்னத்தம்பியின் சின்ன உடம்பு.
இடப்புறக் கண்ணடியிலே ஒருவன் குத்தியகுத்து சின்னத் தம்பியின் மனக் கட்டுப்பாடுகளை யெல்லாம் மீற வைத்தது. தேக்கி வைத்த சொல்லவெண்ணா ஆத்திரத்தோடு குத்திய வனைப் பிடித்து கை முட்டியால் நையப்புடைக்கும் நோக்கோடு வாயிலே இடித்தான்.
அந்தப் பொலிசின் பற்கள் இரண்டு உடைந்தன. அவன் வாயிலிருந்து இரத்தம் சிந்தியது. அந்தப் பொலிசை இம்சைப் படுத்தியது கண்ட மற்ற மூவரும் குண்டுத் தடியை எடுத்து சின்னத்தம்பியின் தலையில ஓங்கி அடித்தார்கள்.
சின்னத்தம்பி அப்படியே பிடரி பட மயங்கி வீழ்ந்தான்.
பற்கள் உடைய அடிவாங்கிய பெ லிசு தன் ஆத் திரத்தைத் தீர்ப்பதற்காக பூட்ஸ் கால்களோடு சின்னத்தம்பி யின் மார்பில் ஏறி மிதித்தான்,
சின்னத்தம்பியின் சுயநினைவு முற்றாக இற்றுப் போய் விட்டது.
இன்ஸ்பெக்ரா மூலையிலிருந்த பெரிய வெள்ளை ஜாடியி லிருந்து நீரைக் கொணர்ந்து சின்னத்தம்பியின் முகத்தில் வீசினான்.
“பற புத்தா கியண்டகோ”
“தேசிகமினிஹா கியண்ட பரிதா.”
“கெரியில சொல்லுடா, சொள்ளு கள்ளதோணி.”
கிறில் விழுந்த கிராமஃபோன் இசைத்தட்டுகள் மீண்டும் ஒலிக்குமாற் போல் பொலிஸாரின் குரல்கள் கேட்டு சின்னத் தம்பி அருண்டான்.
“இன்னும் அடி வேண்டுமா. இல்லாட்டி உண்மையைச் சொல்றியா. கிறிஸ் வைச்சிருந்தாய் தானே”
இன்ஸ்பெக்ரர் நேரமுணர்ந்து கேட்கும் உத்தியோடு கேட்டான்.
*தங்மட்ட ஹொந்தட்ட பென்னே”
சின்னத்தம்பி சொல்லிக் கொண்டே கையை ஊன்றி “மொக்கத பெயின்னே”
இன்ஸ்பெக்ரர் கேட்டான்.
“பொலிசியநம் ஒக்கோம பிரதிகாமி தமாய்'”
பதில் கேட்ட பொலிஸார் பாய்ந்து வந்து அவனை மூர்க் கத்தனமாகத் தாக்கினார்கள் அவனுடைய ஆண் உறுப்பிலே இன்ஸ்பெக்ரரின் பூட்ஸ் பட்டது. ஆண் உறுப்பிலிருந்து இரத்தம் வழிந்தது. சின்னத்தம்பியால் வலி பொறுக்கமுடி யயில்லை. அகோரமாயிருந்தது.
கோபாவேசத்தோடு எழுந்து இன்ஸ்பெக்ரரையே அடிக் சுப் போனான். அதற்கிடையில் மற்றப் பொலிஸார் அவனை மடக்கி கைகளைப் பின்புறமாகக்கட்டி நெஞ்சுச் சேட்டைக் கிழித்து விட்டார்கள். ஒருவன் தன்னுடைய தலையாலேயே அவன் மார்பை மோதினான்.
சின்னத்தம்பி இரண்டாவது தடவையாக மூர்ச்சை யாகினான்.
அவனுடைய வாயிலிருந்தும் இப்போது இரத்தம் கொட் டியது. நாசியிலே மூக்குச்சளி நுரைத்தது.
விபரீதமான போக்கைக் கண்டவுடன் இன்ஸ்பெக்ரருக்கு குலைநடுக்கம் ஏற்படலாயிற்று. ஜன்னல்களையும் வாசற் கதவு களையும் இழுத்து மூடிவிட்டு லொக் அப் நொம்பர் ஒன்றிலே நடக்கும் இச்சம்பவத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார் களே. ஆனாலும் தான் மிகக் கேவலமாக கவட்டுக்குள்ளே பூட்ஸுகளை விட்டு ஆண்குறியில் தாக்கியதும் ஆண்குறியி லிருந்து இரத்தம் வழிந்ததையும் இந்தப் பொலிஸ் கான்ஸ் டொபிள்கள் பார்த்தார்கள். அவர்கள் யாதாவது செய்து தன்னுடைய உத்தியோகத்திற்கு உலை வைப்பார்களோ என் றும் எண்ணினான்.
ஒருவாறு நிதானமாகி டயலைச் சுழற்றி அம்புலன்சை வரவழைத்தான். மற்றப் பொலிசாருக்கும் இலேசான நடுக் கம் ஏற்பட்டது. சின்னத்தம்பியின் நிலைமையைப் பார்க்கப் பார்க்க அவர்களின் நடுக்கமும் கூடி வந்தது.
அம்புலன்சிலிருந்த ஊழியர்கள் சுன்வஸ் கட்டிலில் சின்னத்தம்பியை ஏற்றினார்கள்.
தெருவெங்கும் ஜனம் குவியத்தொடங்கியது. சின்னத் தம்பியைக் காவிவரக் கண்ட ஒரு கிழவி பொலிசைத் திட்டிக் கதறினாள்.
மரியாவத்தை ஆசுப்பத்திரியில் சின்னத்தம்பியைச் சேர்ப் பித்த போது டொக்டர் இன்ஸ்பெக்ரரைக் கேட்டார்.
“இவ்வளவு படுகேவலமாய் ஏன் அடித்தீர்கள்”
“உண்மையை வரவழைக்கத் தான்”
“யு ஆர் ரியலி ருத்லெஸ் பீங்ஸ்”
“இற் இஸ் அவர் டியூட்டி”
சின்னத்தம்பிக்கு உணர்வு தட்டவே மூன்று நாட்களா யின. டெக்ஸ்ரோஸ் நீராகாரம் குழாய் மூலமாக ஏற்றப் பட்டது. மிஸ்ஸி ஒரு நாளைக்கு ஆறு தடவைகள் ஊசி போட்டு விட்டிருந்தாள். அவனுடைய படுக்கையின் பக்கத் தில் பொலிஸ் வாறன்ட் கார்ட் தொங்கியது. உடல் வெப்ப நிலைமை படிப்படியாகக் குறைந்து குறைந்து கொண்டே வந்திருந்ததை மிஸ்ஸி கீறிய வரைகோட்டுப் படம் காட்டித் தந்தது.
முதலாளியார் சின்னத்தம்பியைப் பிணையிலே விடுவித்திருந்தார்.
அன்று மாலையில் இக்பாலின் வாப்பாவும் உம்மாவும் பாத்திமாவும் சின்னத்தம்பியைப் பார்த்துப் போக வந்தி ருந்தார்கள். பாத்திமாவின் கரத்திலிருந்த பிளாஸ்ரிக் கூடை யிலே வற்றலான பியர்சும் பட்டர் ஃபுரூட்டுகளும் நிறைந் திருந்தன.
பாத்திமா வர்ண பிஜாமா உடுத்தியிருந்தாள். விதவை யவள் என்பதற்கு ஒருவித அடையாளமும் அவளிடம் இல்லை. நவநாகரீக நங்கைத் தலைவி நானே என்கின்ற கோதாவில் இருந்தது அவளது நெஞ்சு நிமிர்வு. ரைற் பிரேஸியர் போட்டு இருந்தாள். குதியுயர்வான வெள்ளை வெளேரென்ற காலாணிகள் இவளுக்கு எப்படிக் கிடைத் தன என்பதைக் கால்களை நோட்டமிட்ட சின்னத்தம்பி யோசித்தான். வாடகையா ஒரிஜினலா?
தலைவாரி இரட்டைப் பின்னலிட்டதில் அவளது வயது கூடக் குறைந்து விட்டதோ?
“தம்பிக்கு இப்ப எப்புடியிருக்கு”
“நல்லம்”
சின்னத்தம்பி சொன்னான்.
இக்பால், ஜமால்டீன், தேவராசா எல்லோரும் ஏற்க னவே அவனை வந்து பார்த்து விட்டுப் போய் விட்டார்கள். அப்போது அவனுக்கு சுய நினைப்பு இருந்ததில்லை.
“நீ ஏன் மவனே உந்த வம்பு தும்புக்கெல்லாம் போய் பளாயாகிறே. சொம்மா இருந்தாத் தான் எல்லாருக்கும் நல்லவனாவாய்.”
பாத்திமாவின் உம்மா சொன்னதைத் தொடர்ந்து வாப்பாவே தொடர்ந்தார்.
“ஆமா தம்பி ஊரு விஷயங்களைப் பத்தி நாமள் கவலைப் பட்டாக்கா ஒண்ணும் நடக்காது. நாமள் தான் கஷ்டப்படுவம். இனியாவது நீ மிச்சம் கவனமாயிருக்கணும் இல்லாட்டி உன்னோட உயிரைக் கூட கொண்டு போயிடுவாங்க”
சின்னத்தம்பி முகட்டை வெறித்துப் பார்த்தான். பாத்தி மாவின் வாயிலிருந்து எதுவும் வராத போதும் பேசத் துடித்த அவளது உதடுகளை சின்னத்தம்பியால் உணரவே முடிந்தது.
குறைச் சுருட்டைத் தூர எறிந்து காறித் துப்பி விட்டு அவனுடைய முதலாளியார் அவனது கட்டிலண்டை வந்தார். கழுத்தோரம் அவருக்கு மிக வியர்த்துக் கொட்டியதால் கைக் குட்டையினால் அவர் ஒற்றும் போது அவரது கழுத்திலிருந்த எட்டுவடச் சங்கிலி தங்கத்தரிசனம் தந்தது. அவருடைய வாயில் வெற்றிலைச் சிகப்பு
“ஏ மவளே! தம்பிக்குக் கொஞ்சம் அரோட் மாவில கரைச்சிக் கொடேன்”
பாத்திமாவுக்குக் கட்டளையிட்டாள் உம்மா.
அதன் படியே அவளும் ஃப்பிளாஸ்க் போத்தலை எடுத்துக் கரைத் தாள். அந்தச் சின்னஞ்சிறிய மேசையில் அவனுடைய மருந்து கள் எல்லாமே வைக்கப்பட்டிருந்தன.
“இஞ்சை பாருங்கோவன். உவன் கிறிஸ் வைச்சிருந்த வன் தான் எண்டு உண்மையைச் சொல்லியிருந்தா இப்புடிப் பொலிசிட்டை அடியும் உதையும் வாங்கியிருப்பானே! இது இலேசான விஷயமில்லை. நான் இப்ப ஆயிரம் ரூபாய்ப் பிணை யிலை எல்லே ஆளை விடுவித்திருக்கிறன்”
முதலாளியார் சொன்னார்.
“ஆயிரமா?”
இக்பாலின் வாப்பா பிரமித்தார்.
“வேறை யென்ன? சும்மா தேள்வையில்லாத விழல் அலுவல்களிலை எல்லாம் உவைக்கு என்ன வேலை. உப்பிடித் தான் முந்திக் கடையிலை நிண்ட இம்மானுவேல் ரோட்டிலை சிவப்புப் பெயிண்டாலை சிங்களத்திலை பொலிஸ் – ராணுவ அட்டூழியம் ஒழியட்டும் எண்டு எழுதினதுக்குப் பிடிச்சு ஆயிரம் ரூபாய் பிணையிலை விடுவிச்சனான். பாவங்கள், என்னை நம்பி வந்து பிழைக்குதுகள் எண்டு பாத்தால் இதுகள் எங்க ளின்ரை தலையைக் கூடக் கொண்டு போறன் எண்டு நிக்குதுகள்’»
முதலாளியார் சொன்னார்.
“தொரை சொல்றது நியாயம் தான்.
இக்பாலின் வாப்பா தஞ்சாவூர்ப் பொம்மை போலத் தலையாட்டினார். சேட்டுப் போட்டு அதன் மேல் சாம்பல் வர்ணக் கோட்டுப் போட்டிருந்தார். அரையில் நீலநிற பிளேன் சரம் கட்டியிருந்தார். சுமாரான கிருதா மீசையை வளர்த்திருந்தார்.
“சின்னப் பிள்ளையளாய் இருந்தால் அடிச்சுக் கிடிச்சு எண்டாலும் ஒருமாதிரித் திருத்தலாம். இது எங்கடை கொத்த வயசு. அடிக்கக்கு முந்தித் திருப்பியடிக்கிற காலம். ஒத்து வர்றவனாய் இருந்தா..இந்தளவுக்கு உவனை ஒரு கடை முதலாளியாக்கி விட்டிருப்பன். சொல்ற சொல்லுக் கேட் டாத்தானே. குழந்தைப்பிள்ளை மாதிரித் தான் பிடிச்ச முய லுக்கு மூண்டு கால் எண்டு நிண்டா நான் என்ன செய்யி றது நீங்கள் என்ன செய்யிறது.
முதலாளியார் வாப்பாவைக் கேட்டார்.
“அது உண்மை”
வாப்பாவும் ஒத்துப் பாடினார்.
“உவங்களுக்கு நியாயம் கூட வேறை. நீதிகூட வேறை. நாங்கள் அநியாயம் எண்டு சொல்றதை அதாட்டாய் நிண்டு கொண்டு நியாயம் என்பினம். அதுக்கு இரத்தம் சிந்தவும் தாங்கள் தயாராம். பெரிய தியாகமாம். இலச்சியமாம். கனவுகளை எல்லாம் உண்மை எண்டு நினைச்சு அவதிப்படுற விசரங்கள் உவங்கள். முழு விசரங்கள்.”
முதலாளியார் பிலாக்கணம் வைத்தார்.
“என்னோட மவன் இக்பால் எல்லாம் இந்த விஷயத்தில தங்கமானவன்’
இக்பாலின் உம்மா சொன்னாள்.
“அவன் சரியான நல்ல பிள்ளை”
முதலாளியார் சான்றிதழ் தந்தார்.
இக்பாலின் உம்மாவின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிகின்றது.
”உந்தக் கொம்யூனிஸ்ற் விசரங்கள் விசர்வேலையளைத் மங்களோடை வைச்சுக் கொண்டாப் பறவாயில்லை. எங்க ளின்ரை கையைக் கடிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டெல்லே நிக்கினம். அப்ப நாங்கள் சும்மா நிக்கலாமோ. தன்னைக் கொல்ல வாற பசுவைக் கூடக் கொல்ல வேணும் எண்டு தான் பகவத்கீதை சொல்லுது”
முதலாளியார்.மறுநயும். பிலாக்கணம் பாடினார்
சின்னத்தம்பி எதுவித சலனமுமின்றி உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தான். பாத்திமா போட்டு விட்ட அரோட்மா நீராகாரம் சூடாறிக் கொண்டிருக்கவே, பாத் திமா உம்மாவைத் தீண்டினாள்.
‘மவனே அரோட்மா ஆறிப் போகீது. குடியேன்”
இது உம்மா.
பாத்திமாவின் வாப்பா போட்டிருந்த சாம்பல் வர்ணக் கோட்டு அவருக்கு அதிக அளவிலான வியர்வையைத் தந்து கொண்டிருந்ததால் மேல் சேட்டின் பொத்தானைக் கழற்றி விட்டார். ராக்கியிலிருந்த தட்டில் பாத்திமா பழங்களை வைத்து விட்டு வெற்றுக் கூடையை எடுத்துக் கொண்டாள். அவளுடைய நயனங்கள் உள்ளத்திலே தேங்கியிருந்த எண் ணங்களை வெளிப்படுத்தவே முயன்றன. ஆனால் தோல்வியே அடைந்தன. அவர்கள் விடைபெறும் போது பாத்திமாவின் கண்கள் கலங்கின. முகம் உம்மென்று இருந்தது. வாயின் உதடுகனைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
நான்காம் நாள் அரியரெத்தினமும் அவனுடைய நண் பர்கள் இருவருமாகச் சின்னத்தம்பியைப் பார்த்துப் போக வந்திருந்தார்கள்.
“உனக்கெப்பிடி விஷயம் தெரிஞ்சுது”
சின்னத்தம்பி கேட்டான்.
“கம்பளையிலையிருந்து வாசிற்றிக்கு வாற ஒரு பெட்டை என்னோடை படிக்குது. அது தான் இப்புடியெண்டு சொன்னது.”
அரியரத்தினம் சொன்னான்.
“எப்பிடிப் படிப்பெல்லாம்?”
“என்ன படிப்பு? பணக்காரருக்கும் ஏழையளுக்கும் இடையிலை இருக்கிறா வரம்மை உயத்திற படிப்புத்தானே.”
“உவை ஆர் உன்ரை சிநேகிதரா”
“ஓம் இவன்ரை பேர் திருச்செல்வம். சங்கத்தாளையிலை பிறப்பு வளர்ப்பு. இவன்ரை பேர் விஜயரத்தினம் யாழ்ப் பாணத்தவன் தான். கொழும்பிலை சென் பீட்டர்ஸிலை படிச்ச வன். தாய் தேப்பன் எல்லாம் வெள்ளவத்தையில வீடு வாங்கி இருக்கினம்.”
சின்னத்தம்பியின் கண்கள் அவர்கள் இருவரையும் எடை போட்டது. இருவரும் இரு துருவங்களாகவே அவனுக்குப் பட்டனர்.
விஜயரத்தினம் மடிப்புக் குலையாத டெட்ரன் சைற் – ஸிப் கால்சட்டை போட்டிருந்தான். றிங்கோ ஸ்ரைல் கன்ன மயிரை நீள வளர்த்து மீசையும் தாடியும் இல்லாமல் வெட்டி யிருந்தான். திருச்செல்வம் வெள்ளை வெளேரென்ற வேட்டி மட்டுமே உடுத்து மேலில் வெள்ளை. சேட்டும் அணிந்திருந் தான். திருச்செல்வத்திற்கு திரணையாக அரும்பியிருந்த மீசையோ அவலட்சணத்தைத் தான் தந்தது. மண்வெட்டி யாட்டம் மேலுதட்டுப் பற்கள் முன்தள்ளி நின்றது.
”கொத்தான்ர வழக்குத் தீர்ந்து விட்டுதா இல்லாட்டி இன்னும் தவணைக்குத் தள்ளிப் போட்டிருக்கினமா
“அது தீர்ந்து போச்சுது”
“என்ன தீர்ப்பு”
“நீ சொன்னது நூற்றுக் நூறு சரியடா.” “விஷியத்தைச் சொல்லன்”
“ஆறு மாசத்துக்கை வீட்டை விட்டு வெளிக்கிட வேணு மாம். கோர்ட் உத்தரவு.
“எப்ப தீர்ந்தது”
“ரண்டு மாசத்துக்கு முந்தி. நீ சொன்னது போலை இது பூர்ஷ்வா ஜனநாயகழ் தரன்ரா”
“சீச்சீ. உப்பிடி யெல்லாம் பேசிப் போடாதை. உவங் கள் ஆயிரமாயிரம் தந்திரங்களைப் பாவிச்சு எங்களைப் போலை ஆக்களையெல்லாம் நல்ல வடிவாய் ஏமாத்துவாங்கள். வீட் டிலை வாடகைக்குக் குடியிருக்கிறவனை எழுப்பேலாது எண்டும் சட்டமிருக்குது தானே. கோட்டிலை உள்ளவங்கள் சட்டம் படிச்ச புலிகள் தானே.”
“உண்மையிலை சின்னத்தம்பி எனக்கு இப்பத்தான் நீதி யெது அநீதியெது எண்டதை அநுபவம் மூலமாய் விளங்கி யிருக்குது. ஓடுற ஆத்திலை விஷம் போடுற கொம்பாதி கொம்பர் கூட்டம் இனி ஒண்டுஞ் செய்யேலாது.”
“வாசிற்றிலை எப்பிடி”
“எல்லாம் பூர்ஷ்வாக்கள் தான். இல்லாட்டி வாசிற்றிக் குள்ளை நுழைய ஏலுமா? கொஞ்சப்பேர் ஹிப்பிப்பஷன் போலை ஃபஷனுக்கு கொம்யூனிசம் பேசினை
“முந்தியொரு ஸ்ரைக் நடந்ததெல்லோ”
“அதெல்லாம் தனிப்பட்ட ஆக்களுக்காக ஸ்ரைக்.”
”அதுசரி. நீங்கள் இப்பஎன்ன யோசினையோட இருக் கிறியள்? புதிசாய்க் காணியேதும் வாங்கப்போறியள் தானோ அல்லாட்டி ஏதேனும் வீடு வாடைக்குப் பாத்துக் கொண்டிருக்கிறியளோ?'”
“வீடு கட்டாமலுக்குச் சும்மா இருக்கேலாது ஏனெண்டா என்ரை தங்கச்சிக்கு கொடுக்கிற சீதணம் வேறையில்லை. சீதணம் இல்லாததாலை எத்தினை குமருகள் கரை சேராமல் இருக்கேக்கை நாங்கள் ஒண்டும் அணியம் பண்ணாமல் இருக்கேலாது.”
“என்னெண்டு கட்டப் போறியள்”
“ஈடு வைச்சுத் தான்”
“எதை ஈடு வைப்பியள்”
“தோட்டக் காணியை வேறை கிடக்கிற நகையளை எண்டாலும் விக்கிறது தான். உந்தத் தோட்டக்காணியைக் கூடச் சீதனமாய் எழுதிறதுக்குத் தான் கலியாணப் பேச்சுக் கால்லை அத்தானாக்கள் நிண்டவையாம்.
”காணி வழங்கியாச்சுதோ?”
“சீ. இனித்தான் எல்லாம்”
“உன்னட்டை ஸ்ரேற் அன் ரெவல்யூஸன் இருக்குதா. ஒருக்காத் தாறியா”
அரியரெத்தினம் ஆசையோடு கேட்டான்.
“என்ரை புத்தகம் போஸ்ட் ஒஃபிஸீக்குக் கிட்டஇருக் கிற பச்சை கேட்வீட்டு கனகசபை மாஸ்டரிட்டை இருக்குது. உதாலை போகேக்கை போய்க் கேட்டு வாங்கிக் கொண்டு போ.”
“அப்ப நாங்கள் வாறம்”
விடைபெற்றனர்.
அன்றைய மதியத் தபால் விநியோகத்தில் சின்னத்தம்பிக் கும் ஒருகடிதம். ஆசுப்பத்திரிக் கட்டில்எண், வார்ட் எண் குறிக்கப்பட்ட விலாசம்.
ரணசிங்கா கடிதம் எழுதியிருந்தான். நடந்த நிகழ்வைப் பற்றி ஜமால்டீன் எழுதியிருந்தானாம். சுகம் விசாரித்தான். தான்இனிக் கம்பளைக்குத் திரும்பிவரப் போவதில்லையாம். அங்கேயே மீன்வியாபாரம் செய்வானாம். நேர்ஸ் தந்த கடி தத்தை மீண்டும் உறையிலிட்டுத் தலையணையின் கீழே வைத் தான்.
மாலையில் உலப்பனை பொஹாமியின் உறவினனான ஜேமிஸ், சின்னத்தம்பியிடம் வந்தான். ஜேமிஸைக் கண்ட தும் சின்னத்தம்பிக்கு எல்லையில்லாதமகிழ்ச்சியே உண்டானது .
“எப்பிடி ஜேமிஸ். நலமா?”
சின்னத்தம்பி சிங்களத்திலேயே விசாரித்தான்.
”உன்னைக் கேட்க வேண்டிய கேள்வியை நீ என்னைக் கேட்கிறியே. அண்ணனைப் பொலிசிலை பிடிச்சிட்டாங்கள். உன்னை இங்கை கொண்டந்து போட்டிட்டாங்கள்.”
”அதுசரி உன்ரை அண்ணனுக்கு ஏது கிறிஸ்”
“ஸ்…… ரகஸியமாப் பேசு”
“எனக்குக் கூடஏன் எதுக்கு எண்டு தெரியாது வைச் சிருக்கச் சொன்ன படியா வைச்சிருந்தன். திரும்பவும் உன் னட்டைத் தந்தன்”
குரலை மிகத்தாழ்த்திக் கொண்டான். பக்கத்திலே படுத் திருந்த நோயாளிகள் பராக்கில் இருந்து கொண்டனர்.
“அது பெரிய கதை”
“மல்லவராச்சியை இவன் ஏன் கொல்லப் போனவன்? தனிப்பட்ட ஆத்திரத்திலையா கொண்டவன்?”
“இருபத்தேழு கமக்காறற்றை சார்பிலை நம்மடை பொடிஹாமி அண்ணன் இதைச் செய்திருக்கிறான் அந்தக் கிறிஸ்கூட இருபத்தேழு பேற்றை பங்குக்காசிலை தான் வாங்கினது.”
“மல்லவராச்சியைக் கொலை செய்தாப் போலை நம்மடை கஷ்டம் தீருமா? மல்லவராச்சியின்ட இடத்துக்கு இன்னொரு வன் வருவான் தானே
“ஆரிப்ப இதை இல்லை எண்டது’*
“அப்ப ஏன் பொடிஹாமி குந்தினான்?”
“மல்லவராச்சி உலப்பனையில வயல்காணி குத்தகைக்கு விடுற விஷயம் உனக்குத் தெரியுமே”
“ஓம்”
“அப்பிடிவிட்ட காணிக்குக் குத்தகை வாங்கிறதோடை வயல் செய்தால் விளையிற நெல்லிலை அரைப்பங்கு அவனுக் குத் தரவேணும் எண்டுதான் நெடுகச் சொல்றவன். அருவி வெட்டிற அண்டு ஆட்களை எல்லாம் அனுப்பிப் போடுவான் அந்த ஆட்கள் தடியோடை வந்து நெல்லைக் கிளப்பிக் கொண்டு போவாங்கள். விவசாயம் செய்யிறவை இலவு காத்த கிளியளாய்த்தான் சும்மா இருப்பினம்.”
“இது வருஷம் முழுவதும் நடக்கிற காரியம் தானே”
“பொறன். பொடிஹாமியைப் போலைதான் வேறொரு கமக்காற ஆள் கமறாலகே எண்டுபேர் அவன் இந்தமுறை ஒருசல்லியும் குடுக்கவுமில்லை விளைஞ்ச நெல்லிலை ஒரு விதை யைத் தன்னும் மல்லவராச்சியின்ரை ஆட்கள் தொடவும் விடேல்லை.’
“கமறாலாக்கு என்ன நடந்தது”
“வீட்டிற்கு நெருப்பு வைச்சாங்கள். கமறாலகேயும் ஒரு பெடியனும் தான்உயிர் தப்பிச்சினம். இப்பவும் நாவலப் பிட்டி ஆஸ்ப்பத்திரியிலை தான். அவன்ரை மனுஷி ஒரு பிள்ளைத்தாச்சி. அவளும் நெருப்போடை சாம்பலாய்ப் போனாள்.”
“வீடு முழுக்க எரிஞ்சு போச்சுதா”
“ஓம் அந்த நெருப்புத்தான் மற்ற எல்லாரையும் நெருப் பாக்கி இந்தத் திட்டத்தைப் போட்டுது. ஒவ்வொர்தரும் பிள்ளைக்குட்டிக்காரர். பெரடிஹாமி தான் துணிஞ்சான். செய்து முடித்தான்.”
“வீடு எரிஞ்சது பற்றி பொலிசுக்குத் தெரியாதா?'”
“அது தற்செயலாய் நடந்தது தானே எண்டு இன்ஸ் பெக்ரரே சொல்லிச் சமாளித்தான்.”
“பொடிஹாமி அண்ணனைக் கண்டியா?”
“ஓம் இருபத்தாறு பேருக்குப் பதிலாகத்தான் ஒருவர் சாகிறது போல் தனக்குவேறு பாக்கியமில்லை என்று அவர் சொன்னார்.”
ஐந்தாம் நாள் சின்னத்தம்பியைக் கூட்டிவர லொரியில் வந்திருந்தான் மயில்வாகனம்.
“மிகவும் பலவீனமான கேஸ். இரண்டு கிழமைக் கெண் டாலும் பூரண ஓய்வு தேவை. கடுமையான உடல் வேலை செய்தால் உயிருக்கே ஆபத்து. இதயத்திலே கடுமையான நோவு இருக்கிறது.”
டொக்டர் மயில்வாகனத்திடம் சொன்னார்.
சாக்குக் கட்டிலைப் பின்புற ஓடையில் போட்டு சின்னத் தம்பியைப் படுக்க வைத்தார்கள்.
“முதலாளியாருக்கு உன்னிலை சரியான கரிசினை. இல் லாட்டி வீட்டிலை இருந்து கொசுவலை குடுத்து அனுப்பி யிருப்பரே.”
தேவராசா கொசுவலை கட்டிய போது கூறினான். சின்னத் தம்பி பதிலுக்குச் சிரித்தான். இக்பால் தாயாரின் கட்டளைப் படி வேளை தவறாமல் மருந்து தந்தான்.
அத்தியாயம் பதின்மூன்று
ஹில் வீதியிலேயுள்ள ஓர் அழகான வீட்டின் வாச ல் லண்டை அடுக்கடுக்காக ஜாகுவார், பிளிமௌத், பென்ஸ், ஸீஃபையர், போக்ஸ் வகன், இம்பாலா கார்கள் நேர்த்தி யாக அடுக்கப்பட்டிருந்தன. ஹில் வீதியின் பெருமையைக் காத்துக்கொண்டிருந்த வண்ணம் பிரமாண்டமான ஒரு பூ மரம் பூச்சொரிந்து வீதியையே பூந்தொட்டில் ஆக்கியது. அம்மரத்தின் கொம்பர்களில் இலைகள் இல்லை.
அந்தப் பிரமுகர் வீட்டு வரவேற்பறையில் பல எக்ஸ்ரா- குஷன் செற்றிகள் போட்டிருந்தும் சிலர் இருக்க இடமின்றி நின்று கொண்டிருந்தார்கள். ஒரு பையன் அங்குள்ளவர் களுக்குக் குவளை நிறைந்த குளிர்பானங்களை ஸ்றோ போட்டு விநியோகித்துக் கொண்டிருந்தான். பலவகையான ரிச்கேக்கு கள் அங்குள்ள ரிபோயில் வைத்திருக்கப்பட்டது. வரவேற் பறையோடு தொடர்பான ஹோலின் முடிவிலே இங்கிலிஷ்- ரப் போட்ட பாத்றூம் இருந்ததது. பாத்றூமின் அரைப் பங்கை முழு அளவிலான கண்ணாடியும் மற்ற அரைப்பங்கை மாபிள் சுவரும் மூடியிருந்தது. பாத்றூம் தவிர்ந்த மற்றைய வீட்டுப் பகுதிகள் மூடப்பட்டிருந்தது.
வரவேற்பறையிலிருந்து ரேடியோகிராம் போலவே வாச லின் வலப்புறத்திலிருந்தது நாய்க்கூண்டு. ஆளுயரத்திற்கு வளர்ந்து நின்றது. மிகவும் கெம்பீரமாக நின்றது. அதன் கெம்பீரம் இராணுவ வீரனின் கெம்பீரத்தைக் காட்டிலும் பலபடிகள் சிறப்பாயிருந்தது. காதுச் சவ்வுகள் நாக்கைப் போல் நீளமாயிருந்தன.
ஹில் வீதியிலுள்ள எந்த வீட்டிலிருந்து பார்த்தாலும் கம்பளை நகரம் பூராவும் ஆகாய விமானத்திலிருந்து பார்ப் பதைப் போலத் தெரியும். மேட்டுக்குடியினருக்கான மேட்டு நிலம் ஹில்வீதி. கம்பளையிலுள்ள சகல தனியாள் நிறுவன உடமையாளர்களும் அந்த வீட்டில் குழுமியிருந்தார்கள். சிலர் பகுதி பகுதியாக வெளி வாசலோரம் நின்று அளவளாவி னார்கள். எல்லாம் லக்ரோ-கலமைன்கள் பூசிய முகங்கள் அழுக்குக் கண்டறியாத உடைகள், மென்மையின் இனிமை யான சுகத்தில் மிதக்கும் உள்ளங்கள்.
“வீ வில் ஹாவ் ரு ரேக் ஏ கொம்ப்றமைஸ்'”
தோட்ட முதலாளிமார் சம்மேளனத் தலைவர் ராஜ பக்ஸா சொன்னவுடன் எல்லோரும் அமைதியடைந்து அவ ருடைய முகத்தையே பார்த்தனர்.
“இற் இஸ் ஏ மஸ்ற் ஃபோர் அஸ் ரு பிறிவன் திஸ் டிஸ்ஓடர். பிளீஸ் ஃப்ரன்ட்ஸ் டிஸ்கஸ் வித்தின் யுவர் செல்ப் ஃபோர் ஏ நிகோஷியேஷன் அன்ட் இன்ஃபோம் ரு மீ. ஓ. கே.’
அவரது அறிவித்தலைத் தொடர்ந்து முணுமுணு மந்திரச் செபம் குழுக்களிடையே நடந்தது.
நாகலிங்கத்தார் கந்தையாபிள்ளையைக் கேட்டார்.
“எத்தினை மணி?””
“இரண்டு ஐம்பது.”
“ஊர்வலம் எத்தினை மணிக்கு வீகுலவத்தைக் கூட்ட மேடைக்கு போகுமாம்?”
“மூண்டுக்கு எண்டாங்கள். உவங்கள் எல்லாம் வெள் ளக்காறனைப் போலைச் சொன்ன சொன்ன ரைமுக்கு செய்யிற வங்களா?”
“கந்தையாபிள்ளைக்கு அவ்வளவு பெரிய கடை இல்லை. சிறிய சுருட்டுக்கடை தான். ஆனாலும் நல்ல வருவாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி அவரால் சிரித்துப் பேச முடிகின்றது. களவாக லைசென்ஸ் இல்லாமல் சீமைச் சாரா யம் விற்பாராம். களவாக நகைகூட அடைவு பிடிப்பாராம். கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதான்.”
நாகலிங்கத்தார் நினைத்துக் கொண்டார்.
“ரோட்டிலை எல்லாம் இண்டியன் கொடிகள் உதயசூரி யன் ரேட்மார்க்கோடை ஏன் தொங்குது”
கந்தையாபிள்ளை கேட்டார்.
“அது கொங்கிரஸ் கொடி அதுவும் ஊர்வலத்திலை சேர்ந் திருக்காம்.”
“உவங்களையெல்லாம் துவக்கிலை மருந்துபோட்டு சுட்டுத் தள்ள வேணும். எங்கடை உப்பைத் தின்னுறதுமில்லாமல் செய்யிற வேலையளைப் பாருங்கோவன்.”
“கொங்கிறஸிலை அவ்வளவு பழுதில்லை’
நாகலிங்கத்தார் சொன்னார்.
“எண்டாலும் உதவாது. உங்களின்ர கடையிலை நிக்கிற சின்னத்தம்பி உந்த விஷியங்கள்ளை கொஞ்சம் தடிப்பு எண்டு கேள்விப்பட்டனான். உண்மை தானே”
“கொஞ்சம் தடிப்பில்லை”
“பின்னை”
“மிச்சம் தடிப்பு”
“ஓஃகொஃகோ'”
கந்தையாபிள்ளை வாய்விட்டுச் சிரித்தார்.
“இப்ப கொஞ்ச நாளைக்கு முந்தி அவன் பொலிசிட்டை அடிவாங்கி ஆஸ்பத்திரியிலை இருந்தவன் எல்லோ”
“ஓ!”
“இப்ப நடக்கிற ஊர்வலத்திலை கூட்டத்திலை ஆள் சேரேல்லையா”
“வலு மும்மரம். செங்கொடிச் சங்கத்திலை அவன் தான் செயலாளர்.”
“எட கோதாரி. உப்பிடிக் கொத்தவையை ஏன் கடை யிலை வைச்சிருக்கிறியள். பாம்புக்குப் பால் குடுத்து வளக் கிறியளே.
“என்ன செய்யிறது? விழுங்கவும் ஏலாது. துப்பவும் ஏலாது. சுரண்டினவுடனை இந்தா லேபர் கந்தோர் அந்தா சட்டம் எண்டு பயப்படுத்துறாங்கள். அறப்படிச்ச எலியள் கூழ்ப்பானைக்குள்ளை விழுகிற மாதிரி சில சோஷலிஸ்ட் புண்ணியாத்மாக்கள் இயற்றின சட்டங்களால் இப்ப எங்கடை பக்கம்தான் இடி.”
நாகலிங்கத்தார் குளிர்பானம் குடித்த வாய்க்கு வெற்றிலை போட்டுக் கொண்டு வெற்றிலைப் பொட்டலத்தைக் கந்தையா பிள்ளையிடம் நீட்டினார்.
“அதுசரி உங்கடை மூண்டு பொம்பிளைப்பிள்ளையளையும் கட்டிக் குடுத்திட்டியளா?””
“அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுது.”
“மருமக்கள் என்ன வேலை?”
“ஒருத்தன் டாக்குத்தர். கொழும்பிலை பிறைவேட்டாய் நடத்திறார். மற்றவன் சனிட்டரி இன்ஸ்பெக்ரர்.”
“ஏன் இவ்வளவு இழக்கமாய் இறங்கினியள்?'”
“அது கிரகபலன்”
“சும்மா சொல்லுங்கோ'”
“பெட்டையிலை கொஞ்சம் பிழையான விஷியம் இருந்துது.”
“என்ன பிழை’
நாகலிங்கத்தார் துருவித் துருவிக் கேட்பது கந்தையா பிள்ளைக்குப் பிடிக்கவில்லை. முகத்தைச் சுளித்துத் தனது அசுவாரஸ்யத் தன்மையை வெளிக்காட்டினார். ஆனாலும் நாகலிங்கத்தார் விட்டபாடில்லை.
“பரவாயில்லை. இதிலை என்ன வெட்கம்”
”அந்த மூதேசி கோவியப் பெடியனோடை தொடுப்பு வைச்சுப் போட்டுது”
“கருவைக் கலைச்சியளா”
“ஓம்”
கஹாட்டப்பிட்டியாவிலிருந்து பேரிரைச்சலோடு ஊர் வலம் புலப்பட்டது. அங்கே ஹில் வீதியில் குழுமியிருந்த அமைதியின் ஊடாக ஊர்வலக் கோஷம் மிகத் துல்லியமாகக் கேட்டது.
“அபே மார்க்கய”
“விப்ளவ மார்க்கய”
“துப்பத் மினிஹட”
”ஜெயவேவா”
“அபிட்ட எப்”
“அதிராஜ்ய வாதய”
“அபிட்ட ஓணே”
“சமாஜ வாதய”
கனவான்களின் காதுகளைக் குண்டு ரவைகளாகத் துளை போட்டன ஊர்வலக் கோஷங்கள். அவர்களிடையே இனம் புரியாத பரபரப்பும் சுறுசுறுப்பும் உதயமாகின.
“இற்ஸ் த டெஸ்டினேஷன் மினிற்”
ராஜபக்ஸா சொன்னார்.
“கோல் ஃபோர் தி பொலீஸ்.”
சாக்காறியா அங்கலாய்த்தார். ஹைலன்ட் ஹோட்டல், ஹைலன்ட் சலூன், ஹைல்ன்ட் லோண்டிரி, ஹைலன்ட் ஸ்ரோர்ஸ், ஹைலன்ட் ஸுபலஸ், ஹைலன்ட் ஜுவலர்ஸ், ஹைலன்ட் பிக்சர்மாட் அனைத்துக்கும் அவர் முகாமையாளர்.
பெர்னான்டோ டயல் செய்தார்.
”ஹலோ இன்ஸ்பெக்ரர்”
மறுமுனையிலிருந்து வந்த கீச்சுக் குரலிலோ தெளிவில்லை. ஏதோ சொற்சிலம்பாடினார்கள்.
”சொறி. தே ஹாவ் கொற் லைசென்ஸ். வீ கான்ற் ஒப்ளிக் தற் றிகுவெஸ்ற் ஆப் யூவர்ஸ்”
இன்ஸ்பெக்ரரின் இறுதிச் சொற்கள் அங்குள்ளவர்களுக் குத் தெளிவாகக் கேட்டது.
பெர்னான்டோ கையிலிருந்த ரெலிபோன் றிசீவரை விஜயதுங்கா ஆத்திரத்தோடு பிடுங்கினார். வெலிக்கல்லையி லுள்ள விஹாரையின் தர்மகர்த்தர். நகரத்திலே கடைகளும் வைத்திருந்தார்.
“நாங்கள் ஊரிலை பெரிய வி. ஐ.பிக்கள் சொல்றம். இந்த ஊரிலை பொலிஸ் கடமை பாக்கிறதெண்டு உங்களுக்கு சொல்லைக் கேட்டுத்தான் விருப்பமிருந்தால் எங்களின்ரை சொல்லைக் நடக்க வேணும் புரிகிறதா”
விஜயதுங்கவின் மிரட்டலுக்கு இன்ஸ்பெக்ரர் ஒன்றும் பயந்து விடவில்லை.
“ஐ.ஜி.பியிடமிருந்து உமக்கு டிஸ்மிஸ் நோட்டிஸ் அனுப்பி வைக்காட்டி என் பெயர் விஜயதுங்காவில்லை.
ரெலிபோன் றிசீவரை ஆத்திரத்துடன் வைத்துவிட்டு அவன் பற்களை நெருடினான்.
அதன் பின்னர் ராஜபக்ஸாவே டயல் பண்ணி இன்ஸ் பெக்ரரை அழைத்தான். அவர் முன்னாள் உப – மந்திரி. ஐ.ஜி.பியை எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டவர். இன்றைய அரசிலும் அவருக்கு நல்ல மதிப்பிருந்தது. இன்ஸ் பெக்ரரே இவருடைய தயவில் தான் காட்டுப்புற இடத்தி லிருந்து கம்பளைக்கு இடமாற்றலாகி வந்திருந்தார். அவரின் முணுமுணுப்புக்கு இறுதியில் இன்ஸ்பெக்ரர் பணிந்தார். ராஜ பக்ஸாவின் முகம் மலர்ந்தது. எல்லோரின் முகங்களும் மலர்ந்தது.
“ஓல் வுட் பி சக்ஸஸ். நவ் வி குட் டிஸ்பேர்ஸ்”
குழுமியிருந்த கும்பல் குலைந்தது. ‘பட்’ ‘சட்’ என்ற ஓசையுடன் கார்க் கதவுகள் திறக்கப்பட்டும் சாற்றப்பட்டும் புகையைக் கக்கிக் கொண்டும் புறப்பட்டன.
“என்ன செய்யப் போகினம்”
“ஊர்வலத்தைக் கலைக்கப் போகினமாக்கும்”
ஹில்வீதியால் இறங்கி நடந்து வரும்போது கந்தையா பிள்ளைக்கு நாகலிங்கம் சொன்னார்.
“மூண்டாவது பெட்டையை எங்கை கட்டிக் குடுத்தீங்கள்”
விட்ட இடத்திலிருந்து தொடங்கினார் நாகலிங்கம்.
“அவன் கொழும்பிலை கப்பல் சாமான்கள் இறக்கிற கொம்பனியிலை பாட்ணர். யாழ்ப்பாணத்திலை நாலு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறான். கொழும்பிலை பம்பலப் பிட்டியிலை சொந்தக் காணி வாங்கி வீடு கட்டியிருக்கிறான். நல்ல பசையான மருமகன் அவன்தான். கிளறிக்கல் உத்தி யோககாரர் கூட எடுக்கிற சம்பளம் மாசச் செலவுக்குத்தான் ன் எடுத்து காணும். ஆ மிஞ்சினா அவையள் பாங்கிலை கட ஒரு சின்ன வீடு கட்டிப் போட்டு மார் தட்டுவினம்.கடன் குடுக்கும் மட்டும் பேந்து குடும்பச் சிலவுக்கு அந்தரப் படுவினம்”
“அப்ப ஏன் எங்கடை ஆக்கள் கிளறிக்கல் மாப்பிளை எண்டவுடன் குண்டியிலை தட்டின புளுகத்தோடை திரியினம்,”
“கிளறிக்கல் எண்டால் குற்றமில்லாத மாப்பிளை எண்டு தான். பென்சன், வறண்ட், வீட்டு அலவன்ஸ், எல்லாமிருக் கும். சம்பளமும் நானூறு ஐந்நூறு எண்டு வந்தால் பிள்ளை யளுக்கு வசதியான சீவியம் தானே. கொம்பனி உத்தியோ கங்கள் உப்பிடி வருமே”
ஊர்வலம் இப்போது ஹில் வீதியிலிருந்து இறங்கி வந்த அவர்களுக்குத் தெரிந்தது.
சில சிகட்புச் கொடிகளும் சில நீலக்கொடிகளும் கலந் திருந்தன. வேறும் சில இந்திய மூவர்ணக் கொடிகளாயிருந்தன.
பல தொழிலாளப் பெண்களின் கைகளிலே சுலோக அட்டைகளிருந்தன.
“அரசியல் அதிகாரம் துப்பாக்கி முனையிலே”
“மக்கள் படை இல்லையேல் மக்களுக்கு எதுவுமில்லை”
“போராட்டம் – விமர்சனம் – மாற்றம்”
மாஓ, லெனின், மாக்ஸ் படங்களும் அந்தப் பீடுநடை ஊர்வலத்திலே வந்து கொண்டிருந்தன.
ஊர்வலக் கோஷங்களை அலட்சியம் செய்தபடி கந்தையா பிள்ளை நாகலிங்கத்தாரைக் கேட்டார்.
“கடை வேலையாட்களின்ரை கோரிக்கை என்னவாம்?'”
“முதலிலை கக்கூசாம், பேந்து சம்பள உயர்வாம், பேந்து எட்டு மணித்தியால வேலையாம், பேந்து நினைச்சவுடனை தேவைப்பட்டால் லீவாம், பேந்து இருக்கிறதுக்கு வீடாம், பேந்து…… இப்புடியாய்ப் போய்போய்க் கடைசியிலை அவையள் தான் முதலாளியள். நாங்கள் அவையிடை அடிமையள்.”
“பொலிஸ் எவடத்திலை மறிக்கப் போகுதாம்”
“தெரியேல்லை’
புகையிரத நிலையத்துடன் ஒட்டிய பொட்டல் வெளியின் கோடியில் பதின்மூன்று பொலிஸ் வீரர்களை ஒரு ஜீப் வண்டி வந்து இறக்கிவிட்டுச் சென்றது. போயா தினமாதலால் போக்குவரவு அநேகமாக ஸ்தாம்பித்து விட்டிருந்தது. ஊர் வலத்தைப் பார்ப்பதற்காக கூடி நின்ற குழந்தைகளும் கிழ வர்களும் தாய்மாரும் பொலிஸாரைக் கண்டவுடன் கலையலானார்கள்.
பொலிஸார் நிற்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்ட தும் நீலக் கொடிகாவிகள் பீதியுற்று ஒதுங்கலானார்கள்.
“எல்லாப் பிற்போக்காளரும் காகிதப் புலிகளே!” என்கின்ற வாசகம் பொருந்திய சிகப்பு அட்டை அந்த ஊர் வலத்தில் மிதந்து வந்ததன் அர்த்தம் அப்போது தான் புலனாகிற்று.
“மரியாவத்தல பொலிஸ் பட்டனோட நிற்கிறாங்களாம்” ஜமால்டீன் சொன்னான்.
“உது புதினமே. அவங்கள் நிக்காட்டித்தான் புதினம்”
சின்னத்தம்பி பதில் தந்தான். அவனை இக்பால் தாங்கிக் கொண்டே வந்தான். அவனால் செம்மையாகக் காலூன்றி நடக்கவே முடியவில்லை. அவனது ஆண்குறியில் பட்ட ரணம் முற்றாக மாறவில்லை. தலைவர் லியனகேயே அவனை ஊர்வலத் தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தடுத்தார். அவ னது உடல் நிலை அத்தனை கேவலமயப் பட்டிருந்தது.
“ஊர்வலத்தைக் குலைச்சிட்டாங்க எண்ணா?”
“இதைப்போலை ஆயிரம் ஊர்வலம் வரும்”
“நாங்க இதோட ஊர்வலத்தை நெறுத்திட்டு குறுக்கு வழியாலை வீகுலவத்தைக்குப் போயிடுவம்”
“பேய்க்கதை கதையாதை. பயப்பிடாதை.”
இக்பாலிற்கு சின்னத்தம்பியின் மீது என்றுமே இல்லாத பாசம் அவன் பொலிசில் உதைபட்டதன் பின்னர் உருவெடுத் திருந்தது.
ஊர்வலக் கோஷங்கள் உரமேற புகையிரத நிலையத்தைத் தாண்டிச் சென்றது அந்தத் தொழிலாளர் அணி.
முழுத் தெருவையே வழிமறித்து ஒவ்வோர் அங்குலத் திற்கு ஒவ்வொரு பொலிசாகக் கருங்கல்லின் சுவரெனப் பொலிஸார் நின்றார்கள். பொலிசைக் கண்டதும் சின்னத் தம்பிபின் கால் சுளுக்குப் பறந்தது. மிகுந்த உரத்தோடும் துணிச்சலோடும் எகிறி நடந்தான். பொலிஸார் தங்களது பின் காற்சட்டைப் பையில் செருகியிருந்த பட்டன் தடியை எடுத்துக் கொண்டார்கள். பட்டன் தடியில்லாத பொலிஸார் தங்கள் தங்கள் பொல்ற்றுகளைக் கழற்றினார்கள்.
தன்னுடைய அடிநாள் – பிரியத்துக்குகந்த பச்சைக்கொடி ஒன்று தன்னுமே இந்த ஊர்வலத்தில் பங்கு கொள்ளாதது ஏன் என்ற கேள்வி இக்பாலை இது வரையில் அரித்துக் கொண்டிருந்தது. அதுவும் தங்களுக்கு அற்ப கக்கூசு கட்டா ததை ஆதரிக்குமா? இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
உருக்கின் சுவராய் நின்ற பொலிஸாரை வியனகே தன்னுடைய நெஞ்சை நிமிர்த்தி உடைத்த போது பட்டன் ஓங்கப்பட்டது. சின்னத்தம்பி பட்டனைப் பறித்தான். இரண் டாவது தடவையாக அவனது நெஞ்சில் பிரளய இடி பட்டுக் கொண்டது. சுருண்டு தெருவோரம் வீழ்ந்தான். ஜமால்டீன் மடியிடை அவனது தலையை வைத்துத் தாங்கிக் சொண்டான். விம்மிப் புடைத்து சின்னத்தம்பி விட்டிருந்த பெருமூச்சு சின்னத்தம்பி என்கிற உயிரின் இறுதிப் பெரு மூச்சானது.
அதன் பிறகு – தர்மத்தின் அகோரத்தில் இக்பாலிடம் புத்தம் புதிய உணர்வு பிறந்து கொண்டிருக்கின்றது.
(முற்றும்)
– மழைக்குறி, முதற் பதிப்பு: ஜனவரி 1975, ஆர்.எஸ். அச்சகம், யாழ்ப்பாணம்.