மறைமுகமாய் ஒரு நேர்முகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,908 
 
 

அந்த இன்டர்வியூவுக்கு நண்பன் பிரபுவின் பைக்கில் நானும் தொற்றிக்கொண்டு கிளம்பினேன். எங்கள் இருவரில் ஒருத்தருக்குக் கட்டாயம் இந்த வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது.

வழியில்… ஒரு எண்பது வயது மூதாட்டி, சாலையைக் கடக்கத் தடுமாறிக்கொண்டு இருக்க, ‘கொஞ்சம் பொறுடா!’ என்று இறங்கி ஓடினேன், அந்த மூதாட்டிக்கு உதவ! இன்டர்வியூ அவசரத்தில், ‘நீ நிதானமா அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வா’ என்று பைக்கைக் கிளப்பிக் கொண்டு பறந்துவிட்டான் பிரபு.

இன்டர்வியூ கோவிந்தா! அந்தப் பாட்டியம்மாவுக்கு உதவி பண்ணி விட்டுத் திரும்பினால், இந்தப் பக்கம் மக்கர் பண்ணி ஆஃப் ஆகிப் போன கார் ஒன்றை, டிப்டாப்பாக உடையணிந்த நடுத்தர வயது நபர் ஒருவர் தன்னந்தனியாகத் தள்ளப் பிரயத்தனத்தப்பட்டுக்கொண்டு இருந்தார்.

அந்த மனுஷனுக்கு ஹெல்ப் பண்ணப் போய், என் சட்டையெல்லாம் கிரீஸ் கறை! ‘அடடா!’ என்று வருத்தப்பட்டவர், நான் எங்கே போகி றேன் என்று விசாரித்தார். சொன் னேன். ‘‘நல்ல கம்பெனி… நல்ல சம்பளம்… கை நழுவிப் போச்சு! பரவாயில்லை, உங்களுக்கு உதவி பண்ணின திருப்தி!’’ என்றேன். ‘‘சரி! உங்க அட்ரஸைக் கொடுங்க. உங்க வேலைக்கு நான் கியாரன்ட்டி!’’ என்று கேட்டு வாங்கிக்கொண்டார். இருந்தாலும், இந்த கம்பெனி மாதிரி வருமா! சோகத்தோடு வீடு திரும்பி னேன். ஹ¨ம்… பிரபு அதிர்ஷ்டக்காரன்!

ஆனால், ஆச்சர்யம்! வீட்டில் எனக்கு முன்னே பிரபு காத்திருந்தான். ‘‘என்னடா, அதுக்குள்ளேயா இன்டர் வியூ முடிஞ்சுபோச்சு?’’ என்றேன்.

‘‘இல்லடா! கம்பெனி எம்.டி. கார் வழியில் ஸ்ட்ரக் ஆகிடுச்சாம். அவர் ஆபீஸ§க்கு வராததால, இன்டர்வியூ கேன்ஸல் ஆயிடுச்சு!’’ என்றான்.

– 29th ஆகஸ்ட் 2007

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி திருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *