மறக்க முடியாத நாள்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 26,069
அலாரம் அடிக்கும் சப்தம் கேட்டு கண் விழித்தேன், நேரம் காலை 5.30 மணி என்று காட்டியது, நாள் செப்டம்பர் 15 எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று.
மெதுவாக எழுந்து முகம் கழுவிவிட்டு, எனது ஷு-க்களை அணிந்து கொண்டு ஜாக்கிங் போக கிழம்பினன். 5.45-க்கு வீட்டு கதவை பூட்டி விட்டு கிழே லிஃப்டில் கீழே இறங்கி வந்தேன்.
வழக்கம் போல், வாட்ச் மேன் அண்ணனுக்கு ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு ஓட துவங்கினேன். சரியாக அரை மணி நேரம் மீண்டும் லிஃப்ட் – மீண்டும் வீடு.
பின்னர், காலை உணவை தயார் செய்து வைத்துவிட்டு, குழிக்க சென்றேன், அப்போது எனக்கு கைபேசியில் அழைப்பு வந்தது, யார் என்று பார்த்தேன் அலுவலகத்தில் இருந்து.
சார், நான் அஜய் பேசுறேன்.
சொல்லு அஜய் என்ன? இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டிருக்க
முக்கியமான விசயம் சார் , கொஞ்சம் சீக்கிரம் வாங்க
என்னன்னு சொல்லு அஜய்
சார் , விசயம் ஹைலி கான்ஃபிடன்ஸியல்(Highly Confidential)
ஓகே, சீக்கிரம் வாரேன்.
அவசரமாக குழித்து , சாப்பிட்டு விட்டு, கருப்பு நிற உடை அணிந்து கொண்டேன். மறக்காமல் எனது துப்பாககி மற்றும் கைகடிகாரம் இரண்டையும் எடுத்து வைத்து கொண்டு கிழம்பினேன்.
பார்க்கிங்கில் நின்ற எனது பைக்கை உயிர்ப்பித்து விரைந்தேன்.
அடுத்த 25வது நிமிடத்தில் அலுவல பார்க்கிங்கில் பைக்கை விட்டு விட்டு உள்ளே சென்றேன்.
“இங்கே என்னை பற்றி, நான் இந்திய நாட்டின் உளவு அமைப்பான, ‘ரா’ வில் (RAW-Research and Analysis Wing) சீஃப் அனலிஸ்டாக இருக்கிறேன். இந்த பதவிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இதற்கு முன் ஃபீல்ட் ஏஜண்டாக இருந்தேன்(Field Agent)”
சொந்த வாழக்கையை பற்றிய விவரங்களை பிறகு நேரம் கிடைத்தால் பார்க்கலாம், இப்போது அஜயை பார்க்க வேண்டும்.
அஜய் என்ன முக்கியமான் விசயம்
பேசிக் கொண்டே இருவரும் எனது அறைக்கு சென்றோம்.
சார் கடந்த இரண்டு மாதமாக நம்ம “அப்ஸர்வேசன்ல ” (Observation) இருந்த கிரிமினல்சோட, போன் கால்ஸ் (Phone Calls)மற்றும் இ- மெயில்கள (e-mail)பார்த்ததுல இப்ப முக்கியமான இன்பர்மேசன்(Information) கிடச்சிருக்கு சார்.
என்ன இன்பர்மேஸன்(Information) அஜய்.
அவங்க எல்லாருக்கும் ஒரே ஒரு ஆள் கிட்ட இருந்து மெயில் போயிருக்கு அதுல சப்ஜெக்ட் மற்றும் கண்டண்ட்ல (Subject and Content)எதுவும் இல்ல ஆனா அட்டாச்மெண்ட்(Attachment) மட்டும் இருக்கு.
அது என்னனு பாத்ததுல, நிறைய படங்கள் தான் இருக்கு கிட்டத்தட்ட 500 மேற்ப்பட்ட படங்கள்.
அப்புறம் என்ன அத வச்சு இன்வெஸ்டிகேஷன ஆரம்பிங்க.
அந்த படங்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கு சார்.
விண்டேஸ் மீடியா பிளயர்-ல் ஏதாது பாட்டு பிளே பன்னா பின்னாடி படம் வரும் பாத்திருப்பீங்கல்ல அந்த மாதிரி இருக்கு.
ஆனா எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு சார்.
500 படங்ககளுக்கும் பெருசா வித்தியாசம் இல்ல, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சின்ன மாற்றம் தான் இருக்கும்.
என்ன சார் பண்ணாலாம்.? நம்மல டைவர்ட் (Divert) பன்ன இப்படி அனுப்பியிருப்பாங்களோ?
இருக்காது ஆஜய்.
சரி நான் என்னனு பார்க்குறேன் நீ அந்த படங்கள் எல்லாத்தையும் எனக்கு அனுப்பிவை அப்படியே அமுதனை வரச்சொல்லு.
அவன் எதுக்கு சார் இப்போ
சொன்னது செய் அஜய்..
ஒகே சார்.
அமுதன் பக்கா கிரிமினல், ஐஐடியில் படித்தவன் ஹேக்கிங்கில்(Hacking) கில்லாடி, ஒரு முறை ரிசர்வ் பேங்க சர்வரை(Reserve Bank Server) ஹேக் பண்ணும் போது மாட்டிக்கிட்டான். அவனது திறமையை பார்த்து “ரா”-வில் சேர்த்து கொண்டார்கள்.
நல்லவன் தான் ஏன் கிரிமினல் வேலை செஞ்சான்னு தான் தெரியல. எனக்கு ஆறு மாத்ததிற்கு முன் ஒரு சிக்கலான கேஸில் நிறைய உதவிகள் செஞ்சான். அப்போதிருந்தே எங்களுக்குள் நட்பு ஏற்ப்பட்டது. அப்போது ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது நான் அவனிடம் “எப்படி உன்ன போலீஸ் புடுச்சாங்க” என்றேன்
அவங்க எங்க புடுச்சாங்க, நானாகத்தான் மாட்டிக்கிட்டேன் என்றான்.
ஏன் மாட்டிக்கிட்ட
அது இப்ப வேண்டாம் சார் என்று ஒரு வெற்று புன்னாகையை உதிர்த்துவிட்டு போய்விட்டான்.
இப்போது “மே ஐ கம் இன்” அமுதனின் குரல்
வா, அமுதன்
“நான், அமுதன் மற்றும் அஜய் மூவரும் அலுவலகத்தில் தமிழில் தான் பேசிக்கொள்வோம். மொழிபற்று சற்று அதிகம் எங்களுக்கு.”
என்ன விசயம் சார், நீங்க கூப்பிட்டதா அஜய் சொன்னார்.
முக்கியமான விசயம் தான் , நம்ம கண்காணிப்புல இருந்த கிரிமினல்ஸ் எல்லாருக்கும் ஒரு மெயில் வந்திருக்கு அதில 500-க்கும் மேற்ப்பட்ட படங்கள் மட்டும் தான் இருக்கு.
அதுல, ஸ்டெக்னோகிராபி(Stegnography) பயன் படுத்தி தகவல்கள அனுப்புராங்களோன்னு எனக்கு சந்தேகம். அத நீதான் எனக்கு பாத்து சொல்லனும்.
அதுக்கென்ன சார், பார்த்து சொல்றேன்.
உனக்கு தேவையான தகவல்கள் அஜய்ட வாங்கிக்கோ, உடனே வேலைய ஆரம்பிக்கனும் எனக்கு மாலைக்குள் தகவல் வேணும்.
ஓகே சார்.
*****
நான் அந்த படங்களை ஆராய துவங்கினேன், அஜய் சொன்னது போல் அனைத்து படத்திற்கும், ஒற்றுமை இருந்தது.
நான் டேட்டா பேஸை(Data Base)-யை ஆராய துவங்கினேன், கடந்த இருவருட தகவலை எடுத்து பார்க்கலானேன்.
எனது கைபேசி அதிர்ந்தது, பார்த்தேன் அப்பாவிடமிருந்து அழைப்பு
அப்பா, நல்லயிருக்கீங்களா??
நான் நல்லயிருக்கேன், நீ நல்ல இருக்கியா?
நல்லாயிருக்கேன்பா, அம்மா எப்படி இருக்காங்க?
நல்லா இருக்கா, நீ எப்போ ஊருக்கு வர?
சீக்கிரம் வரேன்பா. இப்ப வேலை இருக்கு வீட்டுக்கு போய்டு கூப்பிடுறேன்பா
என்று வைத்துவிட்டேன்.
மதியம் வரை பாதி தகவலை தான் ஆராய முடிந்தது. அதிலிருந்து பயன் தரும் வகையில் ஏதும் கிடைக்கவில்லை.
சாப்பிட்டுவிட்டு வந்து மீண்டும் , இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. கண்ணை மூடினால் இலக்கியாவின் உருவம் தான் வந்தது.
சும்மா உட்காத்திருந்தேன்.
இரவு ஏழு மணி யானது, அமுதனும் நானும் கிழம்பி அருகில் இருக்கும் தேனீர் கடைக்கு சென்றோம். வழக்கமாக நாங்கள் அமரும் மேஜைக்கு சென்று அமர்ந்தோம்.
அமுதன் ஏதாவது தகவல் கிடச்சதா?
இல்ல சார் அவங்க ஸ்டெக்னோகிராபி பயன் படுத்தல வேறு ஏதோ டெக்னிக்க பயன் படுத்திருக்காங்க.
இன்னைக்கு நைட் அது என்னனு கண்டுபிடுச்சு சொல்றேன் சார்.
நானும் பழைய தகவல்கள பார்த்தேன் சொல்லும் படிய எதும் கிடைக்கல , நாலைக்கு 2009-ம் ஆண்டு தகவல்கள பார்க்கலாம்னு இருக்கேன்.
நீங்க ரிலாக்ஸா போங்க நான் என்னனு கண்டு பிடுச்சு சொ்றேன் சார்.
ஓகே அமுதான் , நாளைக்கு பார்க்கலாம்.
***
இரவு 8.45 மணி நான் வீட்டிற்கு வந்தேன், வழக்கம் போல், இரவு உணவை நானே தயார் செய்துவிட்டு, அப்பாவிற்கு போன் செய்து சிறிது நேரம் பேசினேன். அப்புறம் சாப்பிட்டுவிட்டு படுத்தேன்.
தூக்கம் தளி கூட வரவில்லை, சரியாக டியூன் செய்யாத டி.வி போல எண்ணற்ற காட்சிகள் மனக்கண் முன் ஓடியது, கடைசியாக இலக்கியாவை காண்பித்தது.
ஓராண்டுக்கு முன் இதே தினம் செப்டம்பர் 15 , சந்தோஷமான பகல் பொழதையும், அதற்கு நேர் மாறான இரவையும் தந்துவிட்டு சென்றது.
இலக்கியா, என் காதலி பெயருக்கேற்றார் போல், அழகா இருப்பாள். என்னையும் திரும்பி பார்க்க வைத்தவள்.
பள்ளியில் படிக்கும் போது பெரிதாக என்ன சறிதாக கூட பெண்களிடம் பேசியது கிடையாது. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை, பேச தோனவில்லை. நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை என் அதீத தனிமைகூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
இப்படி இருந்த நான் +2 முடித்ததும் கல்லூரியில் சேர்நதேன், முதல் வருடம் எந்த வித்தியாசமும் இல்லாமல், கடந்த வருடங்களை போலவே சென்றது.
இரண்டாம் வருடம் , பாதிவரை அப்படி தான் சென்றது. இரண்டாம் ஆண்டின் பாதியில் , விளையாட்டு போட்டிகள் நடத்தினார்கள்.
நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம், அப்போது அவள் அந்த பக்கமாக ஆரஞ்சு நிற சுடிதாரில், மாலை வேளையில் தரையிறங்கும் சூரியன் போல் நடந்தது சென்றால்.
அப்போது தான் அவளை நான் முதல் முதலில் பார்த்தேன். அவளை மறுமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது இதற்கு முன் இப்படி தோன்றியதே இல்லை.
மறு நாள் , காலையில் எனது வகுப்பில் படிக்கும் ஒருத்தியுடன் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
நான் இவளை கூப்பிட்டு அவளது பெயரை கேட்டேன். “இலக்கியா” என்றாள் எந்த யோசனையும் இல்லாமல். எந்த டிப்பார்ட்மெண்ட் என்றேன் ஐ.டி என்றாள்.
இப்படியாக இரண்டாம் ஆண்டின் பின் பாதி அவளின் பின்னால் சென்றது.
மூன்றாம் ஆண்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளிடம் பேசசென்றேன். அவள் என்னை கண்டு கொள்ளவேயில்ல.
இதுவரை இப்படி யாரும் என்னிடம் நடந்து கொண்டது கிடையாது
அந்த திமிர் எனக்கு பிடித்திருநதது.
சில மாதங்கள் சென்றன, அவளை பார்த்து சில வாரங்கள் ஆகியிருந்தது.
“ முன்பு பெயரை கேட்டவளிடமே, இல்ககியாவின் கைபேசி எண்ணையும் கேட்டேன்” இப்போது எந்த வித யோசனையும் இல்லாமல் கேட்டதும் கொடுத்துவிட்டாள்.
அன்று மாலை அவளுக்கு எனது பெயரை போட்டு குறுந்தகவல் ஓன்றை அனுப்பினேன். உடனே பதில் வந்தது
இலக்கியா: தெரியும் உன் நம்பர் என்டஇருக்கு?
நான் : எப்படி?
இலக்கியா: நீ என் நம்பர் வாங்கும் போது எனக்கு உன் நம்பர் கிடைக்காதா?
(திமிரான பதில்)
நான்: ஓகே
இலக்கியா: என்ன ஓகே? எதுக்கு மெசேஜ் பண்ண
நான் : சும்மா பேசத்தான்
இலக்கியா : அப்ப பேசு
நான் : ஏன் முதல் தடவ நான் பேசும் போது கண்டுக்காம போன.
இலக்கியா: கேண்டீன்ல வச்சு எப்படி பேச அதான்
நான் : ஓகே
இலக்கியா : மறுபடியும் என்ன ஓகே?
………………………………..
………………………………..
………………………………..
………………………………..
நான் ; சரி நேரம் ஆச்சு, நாளைக்கு பேசலாம்
இலக்கியா: சரி குட் நைட்
நான் : குட் நைட்
இப்படியாக எங்கள் பேச்சு துவங்கியது. பின்னர்
அவ்வப்போது நேரிலும், பல சமயங்களில் கைபேசியிலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
அவள் பேசி, பேசி நான் கேட்டு இருவரும் ஒரு புரிதல் ஏற்ப்பட்டது.
******
நான்காம் ஆண்டு எல்லாரும் பரபரப்பாக காம்பஸ் இண்டர்வியூவிற்கு(Campus Interview) தயாராகி கொண்டிருந்தார்கள். என்னை தவிர.
இல்லக்கியா சற்றே தீவிரமாக தாயாராகி கொண்டிருந்தாள். அருகில் இருந்து பார்ப்பதாலோ என்னவோ அவளது முயற்சியில் அதீத தீவிரம் தெரிந்தது.
நான் எதிர் பார்த்தது போல் அவளுக்கு வேலை கிடைத்தது. இன்னும் இரண்டு மாததில் அவள் பெங்களூர் செல்ல வேண்டும். அவள் பிரியப்போவதை என்னாள் ஏற்று கொள்ள முடியவில்லை. என்னை அதிகம் பாதித்திருந்தால்.
இதை அவளிடம் சொல்லியும் விட்டேன்.அவள் கேட்டாள்
என்ன லவ் பண்றியோ?
தெரியலையே
என்ன பதில் இது
தெரியலைன்ன தெரியலைன்னு தான் சொல்ல முடியும்.
இப்படிததான் காதல் துவங்கியது.
சில மாதங்களில் அவள் பெங்களூர் சென்றாள், பின்னர் இணையம் வழி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
நானும் பின், சிவில் சர்வீஸ்(Civil Service) தேர்வுக்காக படிக்க ஆரம்பித்தேன். ஒரு வருட உழைப்பு. பின்னர் தேர்வில் வெற்றியும் கிடைத்தது.
எங்கள் காதல் பற்றி ஒரு சுபயோக சுப தினத்தில் வீட்டில் சொன்னோம். ஆச்சர்யமாக எந்த எதிர்ப்பும் இல்லை.
எனக்கு டெல்லியில் போஸ்டிங்(Posting) போட்டார்கள். அவளும் ஏழு மாதம் கழித்து மாற்றல் வாங்கி அங்கே வந்து சேர்ந்தாள்.
இருவர் வீட்டிலும் கலந்து பேசி அடுத்த வருடம் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
எங்களுக்கும் சந்தோஷம் இன்னும் ஒரு வருடம் காதலிக்கலாமே.
நான் இப்போது இருக்கும் வீட்டை பார்த்து பார்த்து அலங்கரித்தது அவள் தான், அவளின் ரசனைக்கேற்ப்ப வடிவமிக்கப்பட்ட வீடிது.
இருவருக்கு ஒரே ஊரில் வேலை என்பதால் ஒன்றாக செலவிட அதிக நேரம் கிடைத்தது.
இவ்வாறாக நாட்கள் மகிழ்ச்சியாக சென்றன. பிரச்சனை வந்தது விதியின் வடிவில்.
வார இறுது நாளில் அவளது ஹாஸ்டலில்(Hostel) இருந்து, காலையிலேயே என்னை பார்க்க அவளது ஸ்கூட்டியில் வந்துவிட்டாள்.
நானோ அவள் வந்த பிறகு தான் கண்விழிக்கவே செய்தேன்.
அன்று நீல வண்ண சுடிதாரில் , அதற்கு மேட்சான தோடு மற்றும் வலையல்கள் அணிந்து கூடுதல் அழகுடன் இருந்தாள்.
என்னை அவசர படுத்தி கிழம்பவைத்தால், நம்ம சினிமாக்கு போறோம் டிக்கேட் புக் பண்ணிட்டேன் என்று கண்சிமிட்டினாள் அழகாக.
அப்புறம் என்ன நானும் கிழம்பினேன்.
இருவரும் எனது பைக்கில் , சென்றோம். படம் பார்த்துவிட்டு அப்படியே ஷாப்பிங் சென்று விட்டு இரவு எட்டு மணிக்கு தான் வீட்டிற்கு வந்தோம்.
வந்தவள் உடனே அவளது ஸ்கூட்டியயை எடுத்து கொண்டு ஹாஸ்டலுக்கு கிழம்பிவிட்டாள். நான் உடன் வருகிறேன் என்றேன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று போனவள் தான் திரும்ப வரவே யில்லை.
போகும் போது சாலை விபத்தில் இறந்துவிட்டாள், என்னைவிட்டும் போய்விட்டாள்.
அன்று , நான் அவள் மறுத்த போதும் உடன் சென்றிருக்க வேண்டும், அவளை தனியாக விட்டிருக்க கூடாது
அன்று சினிமாவிற்கு போகாமலே இருந்திருக்கலாம்
இப்படி துண்டு துணடான நினைவுகள் ஒடிக்கொண்டிருக்குமபோதே.
கைபேசி அழைத்தது,
என்ன அமுதன் இந்த நேரத்துல
கண்டு புடுச்சுட்டேன் சார், நீங்க கொடுத்த படங்கள் எல்லாம் “சவுண்ட்- ஃபார்மஸ்” (Sound-Forms) சார்
( நான் இப்போது அதை புரிந்து கொள்ளும் மன் நிலையில் இல்லை)
சரி காலை சீக்கிரம் வா இத பத்தி பேசுவோம் என்றேன்
ஒகே சார்
***
எனக்கு முன்னமே அமுதன் வந்திருந்தான்,
சொல்லு அமுதன் என்ன கண்டு புடுச்ச நீ??
அந்த படங்கள் எல்லாமே ஒரு ஆடியோ ஃபைலோட(Audio File) மாற்று வடிவம் சார் ,
உதாரணமா ஒரு பாட்ட இப்படி நாம படங்களா மாற்றலாம் சார்.
டெக்னிக்கலா சொல்லனும்னா இதுக்கு பெயர் ” சவுண்ட் ஃபார்மஸ்”
படங்கள எல்லாம் ஒன்னு சேர்த்தா அதில இருந்து ஆடியோவை பிரித்து எடுத்துட்டா நமக்கு தேவையான தகவல் கிடச்சுரும் சார்.
வெரி குட் அமுதன்.
இதுல இருந்து ஆடியோவ எடுக்க முடியுமா?
முடியும் சார், ஆனா கொஞ்சம் நேரம் தேவைப்படும்,
சீக்கிரம் எடுக்க முயற்சி பண்ணு
ஒகே சார்.
நான் 2009 -ம் ஆண்டின் தகவல்களை பார்க்க துவங்கினேன், அப்போது சின்ன சிக்கல் ஒரு ஆறு மாததிற்கான தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன.
காரணம் அறிய அப்போது இந்த பதவில் இருந்த மல்கோத்ராவை தொடர்பு கொள்ள முயர்சி செய்தேன்.
அவர் மர்மமான முறையில் இறந்து விட்டார் என்கிற செய்தி மட்டும் தான் கிடைத்தது.
அழிந்த தகவல்களுக்கும் , மல்கோத்ராவின் மரணத்திற்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று எனக்கு பட்டது.
ஏதோ தப்பு நடக்குது என்று மட்டும் புரிந்தது, உடனே அமுதனை அழைத்து
நீ கண்டுபிடித்த விசயம் பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றேன். நமக்குள் இருக்கட்டும் காரணத்தை இரவு சொல்கிறேன்.
சரி சார்.
நான் அழிந்த தகவல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்தது.
கால் வாசி தகவல்களை மீட்டெடுக்க முடிந்தது, சில ஆவணங்கள் மற்றும் தற்போது வந்திருப்பது போலவே படங்களும் கிடைத்தது.
அனைத்தையும் எனது பென்டிரைவில் காப்பி எடுத்துக் கொண்டேன்.
5.30க்கு அமுதனை அழைத்தேன், சார் என்னும் 15 நிமிஷத்துல மொத்த வேலையும் முடித்துவிடுவேன்.
சரி எல்லாம் முடிந்தது , எல்லா தகவலையும் எடுத்துட்டு உன் வீடிற்கு போ இங்கே கம்பியூட்டரில் எதுவும் இருக்க வேண்டாம் அழித்து விடு. நான் இரவு வருகிறேன்.
எதுக்கு சார் இதெல்லாம்?
சொல்றத செய் காரணத்தை இரவு சொல்கிறேன்.
ஒகே சார்.
*****
நான் அமுதனின் வீட்டு கதவை தட்டினேன் , 30 நொடிகளில் வந்து கதவை திறநதான்.
என்ன சார் முக்கியமான விசயமா?
ஆமா, நீ ஆடியோ ஃபைல எடுத்துட்டியா??
அதுல சின்ன வேலை மட்டும் பாக்கி இருக்கு சார் இப்ப முடிச்சுருவேன்
அதுக்கு முன்னாடி இன்னோரு மிக்கியமான விசயம்
என்ன சார்??
நீயும் நானும் நினைக்குற மாதிரி இந்த “சவுண்ட் – ஃபார்ம்ஸ்” முதல் முறையா பயன் படுத்தப்படல 2009-ல பயன் படுத்தியிருக்காங்க.
ஆனா இந்த விசயத்த வெளில சொல்லல.
எப்படி சார் கண்டுபிடுச்சீங்க??
நான் செய்த அனைத்தையும் சொன்னேன்.
பிறகு எனது பென்டிரைவை கொடுத்து, இதில் இருக்கும் படங்களில் உள்ள ஆடியோவை கேட்ப்போம் என்றேன்.
சரியாக அரை மணி நேரத்தில், ஆடியோ- ஃபையில் கிடைத்தது. அதை கேட்ட எங்களுக்கு பேரதிர்ச்சி.
அதில் “மும்பை தாக்குதல் பற்றிய பேச்சுகள் இடம் பெற்றிருந்தன்”
சார் இது அப்பவே கிடச்சிருந்த , தாக்குதல தடுதிருக்கலாம்
அப்பவே கிடச்சிருக்கு , ஆனாலும் யாரோ மறச்சிருக்காங்க.
சரி, இப்ப இந்த ஆடியோ என்ன சொல்லுதுன்னு கேட்ப்போம்.
இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள்
“வரும் ஏப்ரலி-ல் சென்னையய் தாக்குவது பற்றிய திட்டத்தை விவர்ப்பதாக இருந்தது”
சார், இத உடனே நம்ம ஆப்ரேஷன் ஹெட்டிடம் சொல்வோம்.
அவசரப்படாத, கொஞ்சம் யோசி, ஏன் மல்கோத்ரா இறந்தார்னு யோசிச்சியா?
அவருக்கு மும்பை தாக்குதல் பற்றி தெரிந்திருக்கலாம், அதனால, அவரை கொளை செய்துவிட்டு இந்த தகவல்கள் அனைத்தையும் யாரோ அழித்திருக்கிரார்கள்.
நம்ம அலுவலகத்தில யாரோ நமக்கு எதிரா வேலை பார்க்கிறாங்கன்னு நினைக்கிறேன்.
அதனால இந்த முறை நாம் நேரடியாக “டிஃபன்ஸ் மினிஸ்ட்ரியை” (Defence Ministry)தொடர்பு கொள்வோம்.
அதே போல் நம் அலுவலகத்தில் இருக்கும் அன்னிய உளவாளியையும் கண்டுபிடிப்போம்.
அமுதன் நீ என்ன சொல்ற??
ஓகே சார்..
சரி, நீ ஏன் போலீஸ்ட மாட்டிகிட்டன்னு இன்னும் சொல்லல..
அத இன்னொரு நாள் சொறேன் சார், என்று ஒரு வெற்று புன்னகையை உதிர்த்தான்.
கதை அந்தரத்தில் நிற்கிறதே. முடிவாக ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை அல்லது புரியவில்லை .
இதன் இரண்டாம் பாகம் எழுதலாம் என்கிற எண்ணத்தில் இப்படி முடித்திருக்கிறேன். தங்களுக்கு என்ன புரியவில்லை?