மனம் நிறைவு




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருவனுக்கு உணவுக்குறைவு உடைக்குறைவு இருக் கலாம்; ஒருவன் ஈரங்காணும் வீட்டிற் குடியிருக்கலாம் ; ஒருவன் தொழிலுக்குரிய கருவிகள் பழுதுபட்டிருக்க லாம். உடல் வலிமையும் மனத் திறமையு முடையவர்களா யிருப்பின் இக் குறைபாடுகளை யெல்லாம் எளிதில் நிறைவு செய்துகொள்ளலாம். இதைவிட்டு அவர்கள் மனநிறை வின்றியிருந்தால் அது பெருங் குற்றமேயாகும். உலகத் தோற்றமுதற்கொண்டு மக்கள் இம்மாறுபாடான மனம் நிறைவின்றியிருப்பாராயின், உலகமே இப்போது காட்டு மிராண்டிகளின் இருப்பிடமாக இருக்கும்.

நம் திறமைக்கும் ஆற்றலுக்கும் தக்கபடி கிடைப்ப வைகளில் மகிழ்ச்சியும், தவிர்க்கமுடியாத கெடுதல் காலத் தில் பொறுமையும் பெற்றிருப்பதே உண்மையான மனநிறைவு ஆகும்.
தான் கண்ட நன்மையோடு மனநிறை வடையாதவன் சிலர் நன்மைமேல் தனக்கு நன்மைகள் வரவேண்டுமென் றெண்ணுவான். சிலர் பட்டமேற்பட்டம் பெற்றாலும் பேராசையால் மேலும்மேலும் உயர் பட்டங்களைப் பெறு வதையே விரும்புவர். ஆதிகாலத்தில் தனக்குத் தெரிந்த நாடுகளையெல்லாம் வெற்றிகொண்ட ஓரரசன், இன்னும் அவ்வாறு பெறுவதற்கு வேறு நாடொன்று மில்லையே என்றழுதானாம்.
பெருநிதி பெற்று உயர்நிலை யடைந்தோர்க்கு மன வமைதியென்பது இராது; இடுக்கண்மே லிடுக்கணே இருந்து கொண்டிருக்கும். ஒருவன் உயிர்வாழ்க்கைக்கு வேண் டிய அளவு பொருளுடையவனா யிருந்து மனநிறைவும் பெற்றிருப்பானாயின், அவன் இடுக்கணற்று அமைதியுற்று மகிழ்ச்சியோடிருப்பன். மனநிறைவு என்பது நல்லதே; நீக்கக்கூடிய துன்பங்களை நீக்கிக்கொள்ளாமல் அவற்றி னால் வருந்திக்கொண்டிருப்பது போலி மனநிறைவே யாகும். அது மனநிறைவுக்கு மாறாக உயிர்க்குக் கேடு தருவதொன்றாகும்.
- பேராசைப் பேயன்
நாளுக்கொரு பொன்முட்டை யிடும் ஒரு வாத்து ஒருவனிடம் இருந்தது. ‘சேரச்சேரப் பொன்னாசை, பெறப்பெறப் பிள்ளை யாசை, ‘ என்பதுபோல், இவ்வாத்துக்காரனைப் பேராசைப் பேய் பிடித்துக்கொண்டது. அவன் ஒருநாளிரவு படுக்கையில், ‘இவ் வாத்தின் வயிற்றிற் பொன்முட்டைகள் இருக்கின்றன; அஃது ஒரு நாளைக்கு ஒரு முட்டைதானே நமக்கு இட்டுக் கொடுக்கின்றது; நாம் ஏன் அம் முட்டைகளை யடையப் பலநாட்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும்! அவைகளை யெல்லாம் ஒரேநாளிற் பெற்றுக்கொள்ள நம்மால் முடியாதா! அதனைக் கொன்றுவிட்டால் நம தெண்ணம் நிறைவேறிவிடுமே!’ என எண்ணினான்.
அவன் இவ்வெண்ணத்துடன் பொழுது விடிந்ததும் எழுந்து. போய் வாத்துக்கூண்டைத் திறக்கவே, அவ்வாத்தண்டை அன்று இடவேண்டிய ஒரே பொன்முட்டை இட்டு இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு போய் வைத்துவிட்டு, ஒரு சூரிக்கத்தியுடன் திரும்பிவந்து அவ்வாத்தின் கழுத்தை யரிந்து, அதனைக் கொன்று, அதன் வயிற்றையும் பிளந்து பார்த்தான். பார்த்தவன் அங்கு. ஒரு பொன்முட்டையுங் காணாமல் வருந்தி ஏக்கங்கொண்டவனாய், ‘என் பொன் வாத்தே! உன்னையும் இழந்து பொன்னையு மிழந் தேனே! பேராசையினால் ஆராமை மேற்கொண்டேனே ! உயிரோடிருந்தால் என் வீடெல்லாம் பொன்மயமாய்விடுமே !”- என்று சொல்லி எண்ணியெண்ணி மனம் புண்ணாயழிந்து, சின்னாட்களில் உயிருந் துறந்தான்.
- மந்திரி தந்தாசர்
இங்கிலாந்தில் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் தந்தாசர் என்னும் அரசியல் நிபுணர் ஒருவர் மந்திரியாக இருந்தார். நாட் டுக்கு நலம் செய்யும் பொறுப்புக்களை யெல்லாம் மன்னர் அவரிடமே விட்டுவைத்தார். அவர் நாடோறும் நாட்டுநன்மை களைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருப்பார். அயல்நாட்டுத் தொடர்பு வினைகளிலும் அவர் தம்மரசே மேன்மைபெறச் செய் வார். வேறுபாடுகளுக்கும் தந்நாட்டுக்கும் ஒன்றுக்கொன்றுள்ள சண்டை சச்சரவுகளில் தம் நாடே வெற்றிபெறச்செய்வார். இவ்வாறு மன்னனுக்கும் மக்கட்கும் மகிழ்ச்சிதரும் வேலைகளையே செய்வதில் அவருக்கு ஓய்வு ஒழிவு கிடையாது. பேரின்மேற் பேரும் பெருமையின்மேற் பெருமையும் பெறுவதே அவர்தம் நோக்கம்.
புத்தாண்டு பிறந்து ஒருநாள் தந்தாசர் நண்பரொருவர் அவரைக் காணவந்து, “நண்பரே! இப்புத்தாண்டில் சென்ற வாண்டுக்குமேல் தாங்கள் ஒவ்வொருநாளும் உளமகிழ்ச்சிகொண்டு வாழ்வீராக !” என்றார். அதற்குத் தந்தாசர் சொல்லுகின்றார், ஐயா, சென்ற வாண்டில் ஒருநாளும் எனக்கு ஓய்வும் மன நிறைவும் இருந்ததேயில்லை. இவ்வாண்டில் எப்படியோ !”
கணக்கற்ற வெற்றியும் மட்டற்ற பெருமையும்கூட மக்கட்கு மனநிறைவு கொடுக்கவில்லையே ; என. வருந்திப் போயினர் நண்பர்.
- வறுமையிற் செம்மை
ஒரு நகரில் தாய் தந்தையரற்ற பெத்தாள் என்னும் ஒரு பெண் பிள்ளையைச் செல்வப் பேறுபெற்ற அவளுடைய மாமன் மாமியர் வளர்த்துவந்தனர். அவர்கள் பணக்காரராக இருந்த போதிலும் அளவறிந்து வாழ்க்கையும் அறிவறிந்த ஒழுக்கமு முடையவர்கள். அக்குலமகன் அடிக்கடி தம் வீட்டுப் பிள்ளை களோடு மனக்கிளர்ச்சியுடன் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருப் பார். அவர் அப்பிள்ளைகளுக்கு இடைநடுவில் என்ன கற்பிப்பார் என்றால், எவர்மேலும் குற்றஞ் சொல்லாதீர்கள்: எக் குடும்பத் தையும் பழிக்காதீர்கள் ; ஒருவர் உடையையும் தொழிலையும் பற்றி இழிவாக பேசாதீர்கள்; ஆகிய இவையும் இவைபோன் றனவுமாம்.
சிலகாலம் சென்றபின், பெத்தாளும் பெரிய பெண்ணானாள் ; அவளுக்குத் திருமணமும் நடந்தேறியது. ஆனாலும் அவள் இ சிறந்த வாழ்க்கையில் சிலவாண்டுகளே இருந்தாள். மாமன் மாமியர் மருவிய கணவன் ஆகிய மூவரும் மேலுலகெய்தினர். இவள் தன் னந்தனியாக இருந்து திக்கற்றவர்களாய்த் தவித்தாள்; சிலநாட்கள் தன்னுழைப்புக்கொண்டே பிழைத்துவந்தாள். இப்படியிருக்க அவளுடைய சிறு குடில் தீப்பிடித்துவிட்டது. அவள் திடீரெனப் பலகணியின் வழியே வெளியில் குதித்தாள். கீழே விழுந்தாள். அதனால் அவளின் வலக்கை யொடிந்து வலதுகாலும் ந நசுங்கிப் போயிற்று. மருத்துவசாலையில் வலது முழங்கையை வாங்கிவிட்டு வலக்காலைக் குணப்படுத்தி யனுப்பிவிட்டனர். எனினும் அக் கால்களும், கைகளும் ஒன்றுக்கும் உதவாமற் போயின. பிறகு அக்கம்பக்கத் தன்பர்களுதவியால் சிலநாட்கள் காலங்கழித்தாள். ஆனாலும் ஆயுள் வரையில் அவ்வாறே வாழ்வோமென்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. அதனால் முடிவாகத் தீரவெண்ணி ஓர் அறக் கூழ்ச்சாலையிற் சேர்ந்துகொண்டாள். அங்கிருந்துகொண்டு சோறுண்பது, அவளுக்கு அவமானமாகத் தோன்றவில்லை; ஏனெனில் நற்குணமும் நன்னடக்கையுமே சிறந்ததென்பது அவள் கொள்கை. அவள் அங்குப் பொறுமையும் அமைதியும் மனக்களிப்பு முள்ளவளாக நடந்துவந்தாள். அவள் அங்குச் சிறுவர்களுக்கு அறிவுரை கூறுவாள்; முதியோர்களிடம் இரக்கங் காட்டுவாள். தானறிந்த நல்லொழுக்க நிலைகளையெல்லாம் அங்குள் ளார்க்கு எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களுடன் வேடிக்கை யாகப் பேசுவதிலும் காலங்கழித்துக்கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்துவருவாள். இவ்வாறான அவளுடைய நடவடிக்கைகளே அச்சாலைக்கோர் அழகும் மேன்மையுங் கொடுத்தன. சாலையைப் பார்வையிட வந்தவர்களெல்லோரும் பெத்தாளின் அறச் செயல்களைக் கண்டு மெய்ச்சி, வேண்டும் உதவிகளும் செய்துபோயினர்.
க. வேலையை இகழ்வோர் வீணரே யாவர்.
உ. உழைத்துச் செய்வதே உண்மை வாழ்க்கை.
ங. உழைத்து உண்பதே சுவையோ டுண்கை.
ச. உழைப்பு இன்றேல் உண்பொருள் இல்லை.
ரு. ஆராமை தானே அழிவைக் கொடுக்கும்.
சு. கைசெய் யுணவு காட்டும் ஆர்வு.
எ. செல்வமோ டுயர் நிலை சேர்க்கும் ஆராமை.
அ. உண்மை யுணர்வே உளத்தார்வு அளிக்கும். -ஓர் உழைப்பாளி.
கூ: எனக்கு வறுமையும் வேண்டாம், வளமையும் வேண்டாம்; போதுமான உணவை எனக்குக் கொடு; மீறின உணவு உன்னை மறுக்கச்செய்து, ‘எவனவன் கடவுள் என்று கேட்கச்செய்யும்; அல்லது என்னை வறியோ னாக்கிச் தாக்கித் திருடச்செய்து உன்னையும் பழிக்கச்செய்யும். -பழமொழிகள்.
க. எனக்குள்ளது எனக்குப் போதும்; மேலும் மேலும் ஆசைப்பட்டால் உலகின்கண்ணுள்ள எ எல்லாமும் போதாது. -மான்டெக்னி.
கக. பதிற்றுப் பத்தாயிரம் ஆசையை விற்று மன நிறைவு என்னும் முத்துமணியை வாங்குகின்றவன், பேரறிவாளியாவான். – பாலு.
கஉ. போதுமென்ற மனமே பொன்செய்யு மருந்து. -பழமொழி
கங. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே. -குமரகுருபரர்.-
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |