மணம் கமழும் மலர்கள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 22,047
(இது மெல்லிய மலர் உன் மனது கதையின் தொடர்)
ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது.
புவனா ! இவ்வளவு நெருக்கமா ஒரு பெண்ணோடு உட்கார்ந்ததே இல்லை!
அப்படி இருந்தா எப்படி என்று இப்பதான் புரியறது! உங்க வீடு வரை கூட ஸ்கூட்டர் ஓட்ட முடியாது!
இனிமே இப்படிதான் இருப்பாயா? நான் ஆபீஸ் மற்ற வேலை எல்லாம் பார்க்க முடியுமா?
வெங்கட்! என்னை ரொம்ப கேலி பண்ணாதே!
எதோ நான் நினைச்சபடி யாருக்கும் எளிதில் கிடைக்காத பொருள்போல நீ எனக்குக் கிடைச்சிருக்கே!
அந்த சந்தோஷம் என்னை என்னவெல்லாமோ செய்யத் தூண்டுகிறது!
நான் ரொம்ப ஹாப்பி மூடில் இருக்கேன்!
நீயும் நானும் எப்பொழுதும் நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.
நான் தனியாகப் பார்க்க முடியாது! என் மனசிலே ,செய்கையிலே நீ இருந்திண்டே இருப்பே!
உன் நினைப்பு இல்லாமே என்னால் எதுவும் செய்ய முடியாது!
திடீர் என்று ஒரு மாறுதல் என்னுள் எப்படி வந்தது என்றே தெரியலே! எல்லாம் மாயமா இருக்கு!
என்னைப்போல் இன்னொரு பெண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் நான்
இன்னும் சந்தோஷமா இருப்பேன்!
அவன் பரந்த முதுகில் களங்கமில்லாத மனதுடன் முகத்தை சாய்த்துக் கொண்டு, தன இரு கைகளால்
பிரிக்க முடியாத அளவுக்கு அவனை இறுக்கிக் கொண்டு புவனா தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.
மகிழ்வின் எல்லையில் இருந்தாள்.
இது போன்ற நேரம் எந்தப் பெண்ணுக்கு நேர்ந்தாலும் ,அது அவள் வாழ்வின் உள்ள உணர்வுகளுக்கும்,
மட்டிலா மகிழ்வுகளுக்கும் ,இனிமையோடு இணைந்து எங்கோ உயரப் பறந்து பரவசமாகிறாள் ,
என்பதற்கு ஒரு எழிலான சான்று!
திடீரென்று அவள் புறங் கைகள் ஒரு வித இளம் சூட்டுடன் நனைந்து கொண்டிருந்தது!
வெங்கட்! நீ அழறையா!
ஆமாம் புவனா! உன் பேச்சும் செய்கையும் என்னை உருக வைக்கிறது!
ஆனால் அதில் துயரம் இல்லை! இனிமை உணர்வுகளாக என்னை அழ வைக்கிறது! ஐ லைக் இட் !
புவனா! என் அழுகையில் இன்னும் ஒரு அர்த்தம் இருக்கிறது
நீ மனம் மாறி என்னுடன் இணைவதற்கு நான் மட்டும் காரணமில்லை!
உன் அக்கா பிரவீணா! அவள் பட்ட வேதனையும் துயரங்களும் தான் என்னை உனக்கு
இன்னும் நெருங்கியவனாக ஆக்கி உள்ளது! நாளை நம் மனம் போல திருமணம் நடந்தாலும்
உன் அக்காவின் துயரம் என்று நீங்குமோ அன்றுதான் உன்னை விட நான் சந்தோஷமாய் இருப்பேன்!
அவன் பேச்சின் உண்மை அன்பு வார்த்தைகள் புவனாவுக்கு நிலை கொள்ளவில்லை!
ஐயோ கடவுளே! எப்படிப் பட்ட ஒருவனை எனக்குக் கொடுத்திருக்கே!
எப்படி வேண்டினாலும் இப்படிப் பட்ட அன்புள்ளம் கொண்டவன் யாருக்கும் கிடைக்காது! என்ன நல்ல மனசு!
வெங்கட்!யு ஆர் கிப்ட் டு மீ பை காட்! நீ கடவுள் கொடுத்த பரிசு!
வெங்கட்!மை வெங்கட்! அவன் கன்னத்தில் முகத்தைப் பதித்தவள் எடுக்கவே இல்லை!
அதற்குள் சிக்னல் வந்து விட்டது! அதுவும் அறுபது செகண்ட் சிக்னல்!
நல்ல வேளை! அவர்கள் பக்கத்தில் ஒரு கார் நின்றது! அதிலுள்ள மாமி கார் ஓட்டும் மாமாவிடம்
‘காலம் எப்படி முத்திப் போச்சு பாருங்கோ! நடு ரோட்டிலே அதுவும் சிக்னல் போட்டிருக்கும் போது
இப்படி கட்டிண்டு கொஞ்சுவாளா !
உன்னை என்ன பண்ணினாங்க அவங்க! அவங்களுக்குள்ளே எதோ சந்தோஷ சமாசாரம் நடந்திருக்கணம்!
அதை அவங்க ஷேர் பண்ணிக்கிறாங்க! அவங்க அனுபவிச்சுப் போட்டும்! நீ பார்க்காதே! என்று மாமா சொன்னார்.
மேலும் இது நம்ம காலம் இல்லே! பூட்டி பெட்டியிலே போட்டு அடைக்கறதர்க்கு!
பார்த்தா சந்தோஷப் படு! இல்லேன்னா பார்க்காதே!
மாமா விவரம் தெரிஞ்சவர்!
மாமி மாறவே இல்லை! அவளுக்கு என்ன பிராப்ள்ளமோ !
அடையாற்றில் புவனாவின் பிளாட்டுக்கு வந்தார்கள் .
வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டுமோ அந்த அளவுக்கு வசதி சற்று நிறைந்த குடும்பம்.
உள்ளே ஹாலுக்குள் அவனை உட்கார வைத்தாள்.
என்னடி புவனா!ஆபிஸ் போகலையா!சீக்கிரம் வந்திட்டே! பிரவீணா கேட்டுக் கொண்டே வந்தாள்.
புவனாவை விட அழகு! ஆனால் மெலிந்திருந்தாள்! இயற்கையான நிம்மதி முகத்தில் இல்லை!
எதோ நாட்கள் வருகின்றன ,போகின்றன என்ற நிலையில் இருந்தாள் .
பிரவி! இது மிஸ்டர் வெங்கட்! என் நண்பர்! நான்தான் நம்ப வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தேன் .
அப்பா ,அம்மா எங்கே?
அப்பா,அம்மா பக்கத்துக்கு பிளாட்டிலே எதோ பங்க்ஷன்! பொய் இருக்கிறார்கள் .
ஹலோ மிஸ்டர் வெங்கட்! வாங்க ! நான் இவளுடைய அக்கா! கொஞ்சம் இருங்க !காபி போட்டிண்டு வரேன்!
இல்லேங்க! காபி சாப்பிட்டு தான் வரேன்.பரவா இல்லை!
புவனா!கொஞ்சம் உள்ளே வா! காபி போட்டுத் தரேன் ! என்று சொல்லி அவளை உள்ளே கூட்டிக் கொண்டு போனாள்.
அக்கா!
புவனாவை அவள் அக்கா ஏறிட்டுப் பார்த்தாள்.
அக்கா!நீ ரொம்ப நாளா சொல்லுவாயே !ஒரு பையனைப் பாரு என்று!அந்தப் பையன் தான் இந்த வெங்கட்!
நான்தான் பிரபோஸ் பண்ணினேன்! ரொம்பப் பிளைன்! ரொம்ப நல்ல மனசு!
அதுக்கு ஒரு உதாரணம்! இப்போ நான் வரும்போது நான் என்னவெல்லாமோ பேசிண்டு வந்தேன்!
ஆனால் அவன் சொன்ன ஒரு வார்த்தை!
புவனா!நாளை நல்லபடியா நம் கல்யாணம் நடந்தாலும் உன் அக்கா லைப் நன்றாக ஆகும்போதுதான்
நான் உண்மையாக சந்தோஷப் படுவேன்!
பிரவீணா மறுபடியும் அவளைப் பார்த்தாள் .முகத்தில் எந்தவித சலனமும் இல்லை!
என்ன அக்கா!பேசாம இருக்கே!
புவனா!இந்தப் பையனையே கல்யாணம் பண்ணிக்கோ! உனக்கு இவன் நல்ல பொருத்தமானவன் என்று நான் நினைக்கிறேன்.
பிரவீணாவின் இந்த வார்த்தைகள் புவனாவின் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக வந்தது
புவனாவுக்கு சந்தோஷம் தாங்க முடியலே !ஆனால் பதில் சொல்லவில்லை!
அக்கா!ரொம்ப தேங்க்ஸ் அக்கா! பாசத்தின் மிகுதியினால் கண்ணீர் பெருக்கி னாள்.
அடுத்த வாரம்!
புவனாவிற்கு போன் வந்தது!
புவனா!நான் எதிர் பார்த்தபடி கம்பனியில் என்னை யுகே வுக்குப் போகச் சொல்லி விட்டார்கள்.
அநேகமா நான் ஆர்கனைஸ் பண்ணும்படியாக இருக்கும்.இப்போ போயிட்டு பத்து நாளில் வருவேன்.
சென்னையிலே அப்புறம் ஒரு மாசம் இருப்பேன்! பிறகு யுகேலேயே இருக்கும்படியாக நேரிடும்.
ஐ லவ் யு புவனா! நீ கொஞ்சம் பேசு! உன்னை விட்டுப் போக மனசில்லை!
வெங்கட்!கவலைப் படாதே! நீ இப்போ போய் விட்டு வா! திரும்பி பத்து நாளில் வந்த பிறகு பேசலாம்.
நான் இடிந்து போக மாட்டேன்! எனக்கு நீதான்! நீ எங்கு போனாலும் உன்னோடு நான்தான்!
தேங்க்ஸ் புவனா! மறுபடியும் சொல்றேன்!நீ இல்லேன்னா லைப்
என்பதே இருக்காது !தெரியாது!ஐ லவ் யு டார்லிங் ! என் அப்பா அம்மா கிட்டே ஆல்ரெடி உன்னைப் பத்தி சொல்லியாச்சு!
நான் வந்த பிறகு உன்னை அறிமுகப் படுத்துகிறேன்!
வெங்கட் வேலை பார்க்கும் கம்பனி யுஎஸ் சும் யுகே யும் சேர்ந்து நடத்துவது.இவனைப் போல யுஎஸ் லேருந்தும் சில பேர்கள்
வருவார்கள்.யுகேயில் மெயின் ஆபீஸ் வைத்து அதை ஐரோப்பாவில் விரிவடையச் செய்வார்கள் .
லண்டன் விமான நிலையத்திலிருந்து சுவிண்டன் போனான்.அங்குதான் இவர்கள் அலுவலகம்.
இவனைப் போல யுஎஸ் லேருந்து ஒருவன் வந்திருந்தான்.பெயர் சிவராம் .
ஹோட்டல் லாபியில் வெங்கட் உட்கார்ந்திருந்தான்.
ஹாய்! ஐ ஆம் சிவராம் ! ஐ கம் பிரம் நியுயார்க் .
ஹாய்!ஐ ஆம் வெங்கட் பிரம் சென்னை !
அப்போ தமிழ்லே பேசலாமே!
வெங்கட்!யுகே இதற்க்கு முன்னாலே வந்திருக்கிறீர்களா?
வந்திருக்கேன்.லாங் ஸ்டே இல்லை!இப்போதான் அசைன்மெண்ட் ! நீங்க?
நான் எக்ஸ்பாட் டெபுடேஷன் வந்திருக்கேன்!இதே சுவிண்டன் லே தான் ஆபிஸ்! ஆனா பக்கத்துலே மார்ல்பரோலே இருந்தேன்!
மார்ல்பரோ ரொம்ப அழகான ஊரு .பிரிஸ்டல் முப்பது மைல்தான்!
என்ன நாம் ‘பப்’க்குப் போவோமா?
இல்லே !இங்கேயே ‘பார்’ இருக்கே போலாம்.
மிஸ்டர் சிவராம்! உங்களைப் பற்றி சொல்லுங்க !
என்னைப் பற்றி சொல்ல ஒண்ணும் இல்லை!
சென்னையில் படிக்க ஆரம்பித்து யுஎஸ் லே முடிச்சேன்.
ஊர்லே அப்பா அம்மா பொண்ணு பார்த்தாங்க! அந்த சமயம் இங்கே யுகே லே அசைன்மென்ட்!
லீவு இல்லாததனாலே பொண்ணு பார்த்த உடனே நிச்சயம் பண்ணணும் சொன்னாங்க!
அந்தப் பொண்ணுக்கு வெளி நாடு வர இஷ்டம் இல்லை! தவிர அங்கேயே அவளுக்கு ஒரு காதல் இருந்தது!
அவ அப்பா அம்மா கம்பல் பண்ணி பாரின் அனுப்புவதற்காக என்னை செலக்ட் பண்ணினதாக சொன்னாள்
நான் அவளுக்குக் களங்கம் வரக் . கூடாது என்று பெண் பார்த்தாச்சு ஆனால் புது வேலையில் தற்சமயம்
கல்யாணம் பண்ற சூழ்நிலை இல்லை ,தள்ளிப் போடவும் வேண்டாம் .
வேறு மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்லி பழியை என் பேரில் ஏற்றுக்கொண்டேன் .
அந்தப் பொண்ணும் அவள் காதலனும் எனக்கு ஏர்போர்ட்டில் வந்து நன்றி சொன்னார்கள்..
இது நடந்து எவ்வளவு நாள் இருக்கும்?
மூணு வருஷம் ஆச்சு!
அந்த சமயம் யுகேயில் ஒரு வருஷம் தான் இருந்தேன்! திரும்பி யுஎஸ் போயிட்டேன்
சிவராம் !நீங்க ஒரு நிமிஷத்திலே உங்க உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொட்டிடீங்க! அந்த நிகழ்ச்சிக்கு அப்புறம்
வேற பொண்ணு பார்த்தீங்களா!
நேரம் இல்லை!தவிர இன்னொருவர் மனம் நோக என்னால் எந்தத் தொந்தரவும் வரக் கூடாது என்பதில் நான் மிக உறுதி!
வெங்கட் நினைத்துக் கொண்டான்.கடவுள் செயலில் இப்படி ஒரு மிகவும் நேர்மையான மனதுள்ள ஒருவருடன் பணி செய்யும்
பாக்கியம் என்று!
ஆபிஸ் ஆர்கனைசிங் ஆரம்ப வேலைகள் மிகவும் நன்றாக நடந்து கொண்டிருந்தது. நடுவில் உள்ள வீக் எண்டில் பக்கதிலுள்ள
சாலிஸ்பரி தேவாலயம் ,ரோமன் பாத் ,லண்டனுக்கும் போனார்கள்.
இந்த ஒரு வாரத்திலேயே மிக நெருங்கிய நண்பர்களாக ஆகி விட்டனர்.ஆனாலும் வெங்கட் புவனாவைப் பற்றி சொல்லவில்லை.
இருவரும் நடுவில் ஊர் கிளம்பும் நாள் வந்தது.
வெங்கட் சென்னைக்கும் சிவராம் யுஎஸ் க்கும் கிளம்பினார்கள். சுவின்டனில் இருந்து ஹீத்ரு எழுபது மைல் இருக்கும்.
சிவா! நான் திரும்பி ஆபிஸ் வரும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தருவேன்! அது வரை பொறுத்திரு!
வெங்கட்!எவ்வளவோ பேர்களுடன் நான் பழகி இருந்தாலும் உன்னுடன் இருந்த இந்த பத்து நாள் மிகவும் அருமை! பார்க்கலாம்.!.
சென்னை ஏர்போர்டிற்கு புவனா வந்திருந்தாள்.
ஐயோ வெங்கட்! நீ பத்து நாள் ஊருக்குப் போனதே என்னால் தாங்க முடியலே!
இன்னும் ஒரு மாசம் கழித்துத் திரும்பிப் போயிடுவே! என்னாலே முடியாது! ஒண்ணு என்னைக் கல்யாணம் பண்ணிண்டு
கூட்டிண்டு போய்விடு! அல்லது எனக்கு அங்கேயே ஒரு வேலை வாங்கிக் கொடு!
புவனா!எனக்கு மட்டும் உன்னைப் போல ஆசை இருக்காதா! நான் ஒரு மாஸ்டர் பிளான் வச்சிருக்கேன்
நாளைக்கு அந்த காபி ஷாப் வந்திடு!சொல்லறேன்!
வெங்கட்!நீ என்ன பிளான் பண்ணுவியோ தெரியாது.ஊருக்குப் போகும் போது என்னை கழட்டி
விட்டுடாதே!
எதோ தைரியமா அப்போ நீ போயிட்டு வான்னு சொல்லிட்டேன். நீ இல்லாமே ஒரு நாள் தாங்கலே!
அப்பப்பா !என்னாலே முடியாது!
தணியாத காதல் வேகமும் ,நிறைந்த அன்பு எண்ணங்களும் கொண்ட புவனா ஒரு சிறிய பிரிவு கூட
தாங்க முடியவில்லை !
உள்ளத்தின் இனிமை உணர்வுகள் வார்த்தைகளாக சிதறுகின்றன!
அடுத்த நாள்.
காபி ஷாப்லே மீட் பண்ணினார்கள்.வழக்கமான காதல்,ஊடல்கள் இல்லை!
புவனா! நமக்கு நிறைய யோசிக்க நேரமில்லை! எனக்கு உங்க அக்கா!
பற்றி கொஞ்சம் தெரியணும்!
புவனா காபி கப் கீழே வைத்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
என்ன வெங்கட்!
புவனா!!கடவுள் செயலில் யுகே யில் நம் விருப்பு ,வெறுப்புகள் புரியற மாதிரி ஒருவரைப் பார்த்தேன்.
சிவராம் பற்றி முழு விவரமும் சொன்னான்.எப்படியாகிலும் உங்க அக்கா சிவராம் மீட் பண்ணனும்.
மனம் விட்டுப் பேசணும்! நடக்குமா!
ஒ மை காட் !எப்படிப் பட்ட ஐடியா !என்ன மாஸ்டர் பிளான்!
வீ ஆர் வெரி லக்கி டு பீ வித் யு வெங்கட்!
சரி!பிளான் நம்பர் இரண்டு !
நாளை நான் என் அப்பா அம்மாவுடன் உங்க வீட்டுக்கு வரேன். ஒரு பார்மல் கெட் டு கெதர் !
அடுத்த வாரம் நமக்கு நிச்சய தார்த்தம்!.
ஏனென்றால் அப்புறம் ரெண்டு வாரம் தான் இருக்கு!
சிவா நிச்சயம் பங்க்ஷனுக்கு வருவான். ரெண்டு வாரம் இங்கு இருந்து விட்டு என் கூட
இங்கிருந்தே சுவிண்டன் பொய் விடுவோம்.
வெங்கட்!எல்லாம் நடக்குமா! சிவா சம்மதிப்பாரா !
கவலைப் படாதே! நாம யாருக்கும் கெடுதல் செய்யலே! எல்லாம் நல்ல படியாக நடக்கும்.
வெங்கட்!என் அக்கா ஏற்கெனவே மணமாகி டைவர்ஸ் ஆனவள் ஆயிற்றே !
சிவா சம்மதிப்பாரா?
புவனா!உனக்கு எந்தக் கடவுள் பிடிக்கும் .அவரை வேண்டிக்கோ!
வெங்கட்!என்னுடைய தெய்வம் ஷிர்டி யில் இருக்கிறார்.உன்னையே அவர்தான் எனக்குக்
காட்டினார்.பாபா என் வேண்டுகோளுக்கு அருள் செய்வார்.எனக்கு நம்பிக்கை உண்டு!
இங்கு மாலை நேரம் ஆக ஆக நியூ யார்க்கில் பகல் .
சிவா!நான் வெங்கட் பேசறேன்! நீ ரெடியா என்னோட சர்ப்ரைஸ் கேட்க்க?
சரி!சொல்லு!
ஐ ஆம் கெட்டிங் என்கேஜ்டு! புவனா மை சுவீட் ஹார்ட் இஸ் கோயிங் டு மேரி மி !
இந்தா .அவ கிட்டே பேசு!
புவனா திகைத்தாள் .
பேசு புவனா !பேசு! சிவா ரொம்ப நல்லவன் ! பேசு!
சிவா அண்ணே !சவுக்கியமா இருக்கிங்களா !உங்களைப் பற்றி வெங்கட் நிறைய சொல்றார்!
நிச்சய தார்த்ததுக்கு கட்டாயம் வாங்க அண்ணே!எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.
கட்டாயம் வரேன் புவனா !ரெண்டு நாள் வரை அப்பா அம்மா இங்கே தான் இருந்தாங்க !
இப்போ அக்கா வீட்டுக்கு டாலஸ் போய்ட்டாங்க. சொல்லிட்டு கட்டாயம் வரேன் !சரியா!
போனை வெங்கட்டு கிட்டே கொடு!
என்ன வெங்கட்! பெரிய விஷயம் சாதரணமா சொல்றே
அதுதான் சர்ப்ரைஸ் சொன்னேனே !
நீ மூட்டை முடிச்செல்லாம் கட்டிண்டு நேரா இங்கே வா! பத்து நாள் எங்க கூட இரு !
நாம நேர இங்கேருந்து சுவிண்டன் போய்டலாம்.
பாக்கி ஆபிஸ் வேலையை இங்கே பார்த்துக்கலாம்
ஒரு நாள் கழித்து வெங்கட் தன அப்பா அம்மாவுடன் புவனா வீட்டிற்கு விஜயம் செய்து
திருமண விஷயம் பேசினார்கள். நிச்சயதார்த்த நாளும் குறித்தார்கள்.
புவனாவுக்கு கனவு போல இருந்தது.
ஏதோ ஒரு நாள் ரயில் நிலையத்தில் பார்த்த ஒருவரை திருமண ஒப்பந்தம் வரை வந்து விட்டதை
நினைத்து!
நேர்மையான அன்பும் தெளிவான செயல்களும் திகட்டாத ஒரு நல்ல வாழ்வு அமைய அடி கோலும்
என்பதை நினைத்துக் கொண்டாள்.
அப்பப்போ அக்கா முகத்தையும் கவனிப்பாள். அக்காவிடம் சலனமே இல்லை!
நிச்சய தேதி இரண்டு நாள் முன் சிவராம் நேரா மும்பை வந்து லோக்கல் பிளைட்டில் சென்னை
வந்தான்.
ஏர்போர்ட்டில் புவனாவும் வெங்கட்டும் வரவேற்ப்புக் கொடுத்தனர்.
புவனா நல்லா இருக்கியா! நான் நினச்சதர்க்கு மேல இருக்கே! பையன் நல்லபடியாதான்
செலக்ட் பண்ணி இருக்கான்.
புவனாவுக்கு சிவாவை பார்த்த உடனேயே பிடித்து விட்டது. தன அக்காவையும் நினைத்துக் கொண்டாள் .பாபாவை நினைக்க தவறவில்லை!
நிச்சயதார்த்தம் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடை பெற்றுக் கொண்டிருந்தது.
சிவா அங்கில்லை! பக்கத்தில் ஒரு நகைக் கடையில் பரிசுப் பொருள் பார்த்துக் கொண்டிருந்தான்.
நல்ல டிசைன் உள்ள முத்துமாலை எடுக்கப் போனான்.
அது பக்கத்தில் வேறு ஒரு டிசைனில் இன்னொரு மாலை ஒரு பெண் வாங்கிக் கொண்டிருந்தாள்.
ஐயோ நீங்களா!இங்கு சென்னையில் எப்படி ! என்று ஒரு பெண் குரல் கேட்டு திரும்பினான்.
அவனுக்கு ஆச்சர்யமாகி விட்டது!
நீங்க பிரவீணா இல்லை! சென்னையிலா இருக்கிறீர்கள்!
நீங்க சிவராம் தானே! உங்களையும் உங்க அப்பா அம்மாவையும் நீங்க செய்த உதவிகளையும்
நான் மறக்கவே முடியாது!
உலகம் எவ்வளவு சிறியது பார்த்தீர்களா!
இங்கு எங்கு வந்தீர்கள்? ஏதோ மாலையெல்லாம் வாங்குகிறீர்கள் .!
ஆமாம்! பக்கத்திலே என் நண்பனுக்கு திருமண ஒப்பந்தம் நடக்கிறது! அதுதான்!
அப்போ வெங்கட் உங்க பிரண்டா! புவனாதான் என் தங்கை
திடீரென்று பிரவீணா மௌனமானாள் .
மூன்று வருஷத்திற்கு முன் நடந்ததை நினைத்தாள்.
கணவன் கொடுமை தாங்கமுடியாமல் தன தோழியின் வீட்டில் லாங் ஐலண்டில் இருந்தாள்.
தோழியின் கணவர் சுந்தர் மூலமாக இந்த சிவாதான் அவளுக்கு உதவி செய்து அவளை
நியு யார்க் ஏர்போர்ட் கூட்டிக் கொண்டு தன அப்பா அம்மாவுடன் லண்டன் போகும்போது
அதே பிளைட்டில் பிரவீணா வுக்கு இந்தியா போக ஏற்பாடு செய்தான்.
சிவா அப்பாவை விட அவன் அம்மா இவளிடம் மிக அன்பாக இருந்து லண்டன் போகும் வரை
கூட இருந்து அவளை அவள் அம்மாவுக்கு மேல் பாசமுடன் கவனித்துக் கொண்டாள்.
சென்னை பிளைட் போகும் வரை சிவாவை கூட இருக்கச் சொல்லி பத்திரமாக வழி அனுப்பினர்.
போன வாரம் கூட என் அம்மா உங்களைப் பற்றிதான் கவலை பட்டுப் பேசினாள்
அவர்கள் என் அக்கா வீட்டிற்கு டாலஸ் அனுப்பும் போது நீங்க உட்கார்ந்த அந்த கார் சீட்டிலிருந்து
ஏர்போர்ட் வரை “பாவம் அந்தப் பொண்ணு என்ன செய்ய றாளோ !இவ்வளவு நல்ல பொண்ணுக்கு
இத்தனை கொடுமை உண்டா “என்று புலம்பிக் கொண்டே இருந்தாள்.
இந்த வாரம் இந்த நேரம் வரை நான் கனவுலே கூட உங்களை மறுபடியும் பார்ப்பேன் என்று
நினைக்கவே இல்லை!
பிரவீணா! இப்போ எப்படி இருக்கீங்க?
அதுதான் பார்க்கிறீங்களே சிவராம்! அப்படியேதான் இருக்கேன் !
எதோ சிரித்தாள்.ஆனால் அதில் உயிர் இல்லை!
வாங்க போகலாம்!.
உள்ளே மாலையோடு வெங்கட்டும் புவனாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
திடீர்ரென்று வெங்கட்டின் கையை புவனா பலமாக அழுத்தினாள்.
வெங்கட்!அங்கே பாரு!என்னால் நம்பவே முடியலே! என் அக்காவும் சிவாவும் பேசிண்டு வராங்க!
அட!ஆமாம்!எப்படி மீட் பண்ணினாங்க? ஆச்சர்யமாக இருக்கு!
நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .
அக்க!உனக்கு சிவாவைத் தெரியுமா?
தெரியும்!நான் லாங் ஐலண்டில் இருந்து சென்னை வர உதவி செய்தவரே சிவாவும் அவர்
அப்பா அம்மாவும்தான்.
ரொம்ப மனிதாபிமானம் உள்ளவர்கள் .அவர்கள் உதவியை நான் மறக்க மாட்டேன்.அதிலும்
சிவராம் அம்மா ரொம்ப நல்லவர்.
அவள் அக்காவின் பேச்சின் ஒவ்வொரு அன்பான அசைவையும் புவனா உன்னிப்பாக கவனித்துக்
கொண்டிருந்தாள்.
மறு நாள்.
வெங்கட் சிவாவை காப்பியுடன் எழுப்பினான். பால்கனியில் உட்கார்ந்து காபி அருந்தும்போது
சிவா! உனக்கு பிரவீணாவைத் தெரியுமா?
நடந்ததை சிவா சொன்னான்.
பாவம்ரொம்ப .நல்ல பொண்ணு! என்று வருத்தப் பட்டான்.
சிவா!நீ தப்பா நினைக்கலேன்னா. ஒன்னு சொல்லவா!
வெங்கட்!நீ சொல்லவேண்டாம் .நேற்று அவளைப் பார்த்ததிலேருந்து எனக்குள் ஒரு நினைப்பு
வருகிறது!பார்க்கலாம் !
தவறு செய்யாதவர்கள் வாழ்க்கையில் தண்டிக்கப் படக் கூடாது!
சிவா!என்னோட அதிர்ஷ்டம் நீ என்னோட இருக்கே! இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியலே!
அடுத்த நாள்.
இவர்கள் யாவரும் புவனா வீட்டில் விருந்து உண்ணப் போனார்கள்.
எல்லோரையும் விட பிரவீணா அழகாக உடையுடுத்தி சுறுசுறுப்பாக இருந்தாள்.
நிறைய மாறுதல் தெரிந்தது.அவ அப்பா அம்மா அவளைப் பார்த்து பிரமித்துக் கொண்டிருந்தனர்.
சுவீட்,பாயாசம் பரிமாறும்போது
சிவா!இவை எல்லாம் நான் ஸ்பெஷலா உங்களுக்காகப் பண்ணினது!
தேங்க்ஸ் பிரவீ!ரொம்ப டேஸ்டி யாக இருக்கு!ரொம்ப ப்ரெட்டி ஆக டிரஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க!
தேங்க்ஸ் சிவா!உங்க காம்ப்ளிமென்ட் சுக்கும் தேங்க்ஸ்!
சற்று தள்ளிப் போய் அவன் ரசித்து சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்தப் பார்வையில் ஒரு புதிய உணர்வு துளிர் விட ஆரம்பித்தது!
சிவா கை கழுவப் போனான் .
தயாராக டவல் வைத்துக்கொண்டு பிரவீணாவின் அப்பா நின்று கொண்டிருந்தார்.
ஐயா!நீங்க எதற்கு இதெல்லாம்!
தம்பி! நீங்க பண்ணின உதவிகளுக்கு நாங்க எந்நாளும் கடமைப் பட்டிருக்கோம்.அதுவும்
உங்க அப்பா அம்மா எல்லாருக்கும் எவ்வளவு நல்ல மனசு!
எங்க அதிர்ஷ்டம் நீங்க எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க! எங்களை கொஞ்சம் பணி விடை செய்ய
விடுங்க!
ஐயா!பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க !நான் உங்க பையன் மாதிரி!
அதுவும் புவனா வெங்கட் நிச்சயத்திற்கு அப்புறம் உறவினர் ஆயிட்டோம்!
தம்பி!அந்த உறவு இன்னும் பலமாகணும் என்று எங்களுக்கு ஆசை!
அவர் வார்த்தைகளில் அர்த்தத்துடன் ஏக்கமும் நிறைந்திருந்தது.!
சிவா உடன் புரிந்து கொண்டான் !
அங்குள்ள அனைவரும் அசையாமல் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர் !
சற்று தொலைவில் பிரவீணாஒரு வித மகிழ்ச்சி யுடன் இருந்தாள்.கண்களிலுருந்து விழுந்த கண்ணீரில் ஒளி இருந்தது!
எல்லாரும் கிளம்பத் தயாரானார்கள்.
கார் பார்க்கில் சிவா,வெங்கட் ,புவனா மூவரும் எதோ பேசிக்கொண்டார்கள்.
திடீரென்று புவனா உள்ளே போய் விட்டுத் திரும்பினாள். வரும்போதே ஒரு மகிழ்ச்சியுடன் தலை
அசைத்துக் கொண்டு வந்தாள். அவள் பின்னால் அவள் அப்பா அம்மாவும்.
சிவா தம்பி! கொஞ்சம் இருங்க! பிரவீணாவும் உங்களுடன் வருகிறாள். வெகு
நாள் கழித்து
அவர் குரலிலும் முகத்திலும் மகிழ்வு தெரிந்தது!
ஓவியர்களும் சிற்பிகளும் கூட அவர்கள் திறனுடன் வடிவமைக்கும் போது , அவர்களுக்கென்று
ரசித்து ஒரு ஆர்வத்துடன் அவர்கள் படைப்பினை அழகு படுத்தும் நேரங்கள் உண்டு!
அந்த நேரத்தில் வடிவமைக்கப் படும் சிற்பமோ ஓவியமோ உலகப் புகழ் வாய்ந்து விடும்.
நேற்று வரை வாழ்க்கையின் வடிவம் சிதைந்து ,இனி ஒரு உருவம் அமையுமா என்ற அந்தப் பெண்
பிரவீணாவுக்கு, அவளுக்கென்று இறைவன் ஏற்றிய ஒளியில் மிளிர , ஒரு புது வாழ்வின்
விடியலுக்குத் தயாராகி, புதிய புத்துணர்வுடன் தன்னை மறந்து தன அழகின் அருமையை
உள்ளவர்களுக்கு உணர்த்த ,குறு நகையுடன் மலர் விழி ஒளி வீச ஒரு தேவதை போல
அடி எடுத்து வந்தாள்.
இவளுக்குள் இவ்வளவு அழகா!
பெற்றவரும் மற்றவரும் ஒருமித்து வியந்தனர்.
உள்ளமும் உணர்வுகளும் உவகை பூக்க , தளிர் நடை பயின்று தாரகை போல அவள் வந்தாள்.
சிவா அசந்து விட்டான்.!.அன்று ஏர்போர்டில் அபலையாக நின்ற அவள் எங்கே!
இன்று தளிர் நடை போட்டு பவனி வரும் இந்த தேவதை எங்கே!
ஒரு பெண்ணின் மன நிறைவு கண்ணாடி போல பிரதி பலிக்கும் என்பதற்கு இவள் சான்று!
அக்கா நீயா! வைத்த கண் மூடவே இல்லை புவனா!
கார் சீட்டின் முன் கதவைத் திறந்து விட்டு அவளை அமரச் செய்து டிரைவர் சீட்டில் சிவா
அமர்ந்தான்.திரும்பிப் பார்த்தாள்.
எக்ஸ்க்யுஸ் மி அக்கா! பெஸ்ட் ஆப் லக் ! புவனாவும் வெங்கட்டும் காரிலிருந்து இறங்கினர்.
பிரவி! எங்கே போகலாம்! என்றான் சிவா.
முடிந்த வாழ்விற்கு மறு பிறவி கொடுத்த ஒரு உண்மை மனிதனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவள் கண்களில் ஒரு எதிர் பார்ப்பு!
சிவா! என்னை ஏற்றுக் கொள்வீர்களா !
பிரவி! உன் மீது களங்கமில்லை!
வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாத ஒரு சுயனலவாதியின் சூழ்நிலையில் நீ இருக்க
நேர்ந்தது
அது உனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து!
பிரவி!நல்ல களங்கமில்லா உள்ளத்திற்கும் தூய அன்பிற்கும் என்றைக்கும் உயிர் கொடுப்பவன் நான்!
உன் போன்றவர் வாடக் கூடாது! நன்றாக வாழ வேண்டும்.
இனி ஒரு நிமிஷம்,ஒருவினாடி கூட உன்னுள் துயரமோ ,பயமோ
இருக்காது!
நீ என்றுமே பொலிவுடன் ,இனிமையாக என்னுள் இருக்க வேண்டும் !
நீ நலமாய் இருக்க நான் உறுதி அளிக்கிறேன்.
வீட்டில் என் தாய்,தந்தையர் ,அக்கா.மாமா உன்னை அன்போடு வரவேற்க்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிமிடமே உன்னை அழைத்துச் செல்ல நான் தயார்!
பிரவீணா அழ வில்லை.
செயலற்று சிலையாக இருந்தாள்.
அந்த அழகிய முகத்தில் நிர்மால்யமான ஒரு புதிய ஒளி தோன்றியது!
சிவா!உங்க கிட்ட எனக்கு இடம் கொடுத்துட்டீங்க ! இந்த நிமிடம் முதல்
உங்கள் மனமும் செயலும்தான் எனக்கு வழி காட்டி!
எல்லாம் இருண்டு விட்டது என்று இருந்த எனக்கு இறைவனாகப்
பார்த்து உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறார்! நான் சந்தோஷமா
இருக்கேன்!
சிவா!கொஞ்ச நேரம்
நான் உங்க மேல சாஞ்சிக்கலாமா ! எனக்கு ஆசையா இருக்கு!
சாஞ்சுக்கோ பிரவி! நீ என்னுடையவள்.!
மெதுவாக அவளை தன தோளில் சாய்த்துக் கொண்டு தன்னோடு அணைத்து அவள் தலையை மெதுவாகக் கோதினான்!
களங்கமில்லாத அந்தப் பெண்ணின் படபடத்த இதயம் நிதானத்திற்கு
வந்து மெல்ல இசை பாடத் தொடங்கியது!
இவள் போன்ற பெண்ணின் இதயம் மணம் கமழும் நல்ல மலருக்கு ஒப்பானது!
இவர்களைப் போற்றி அழகு பார்த்து வாழ்க்கை வண்ண மயமாக
ரசிக்கும் சிவா போல உயர்ந்த உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.