பொன் விதை




(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்திரிகாவின் மனதுக்குள் அந்த விதை விழுந்தது.
கோல்டன் வெட்டிங் ஆனிவர்சி, ‘ என்ற தங்க எழுத்துக்கள் மிள்ள. மாவிலைத் தோரணங்களோடு சிவப்பு ரோஜா கொத்துக்களும், வண்ண பலூன்களுமாயிருந்த விசாமைான ஹாலின் மத்தியில் அந்த முதிர்ந்த தம்பதிகள் நின்றது. மறக்கவில்லை. எழுபது வயதிலும் குன்றாத அழகுடன் தங்க நிற பட்டில், முத்து நகைகளுடன் திருமதி தேவசகாயம், கணவரின் பாராட்டில் முகம் சிவந்து கவிழ்ந்தது இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.
வாழ்விலும் தாழ்விலும், சுஈத்திலும் – துக்கத்திலும் ஒருவரையொருவர் பிரிவதில்லை என்று வாக்கு தந்து இணைந்த வாழ்க்கையில் நிச்சயம் அவர்களுக்கு வெற்றிதான்.
புருஷனும் மனைவியும் கை பிணைத்து சுற்ற. எதிரேயுள்ள முகம் மாறுவதில்லை. ஆனாலும், பின்னணியில் சுழன்று மாறி மறையும் கால காட்சிகள்… வேகம் கூடுகையில் தழுவும் பின்னணி மசமசப்பாகி எதிர் முகமும், இறுக்கும் பிடியில் மட்டுமே நிலையாகும்.
அவ்வுணர்வு விளிம்புகளை அவள் தன் மூன்றாண்டு மண வாழ்வில் அனுபவித்திருந்ததால் வியப்பு கூடியது,
ஆரம்ப கால தாம்பத்தியத்தில் சில நேரம் தனித்து சமாளிக்க முடியாமல் பெற்றோரிடம் ஓடியவள் தான்.
“அப்பா… அவர் குடிக்கிறார்ப்பா.”
‘”ஐயோ” அம்மா ஓசையில்லாது அலற, அப்பா தன்மையாய்த் தாங்கினார்.
“தினமுமா சந்திரி? தனியா உட்கார்ந்தா, சிநேகிதங்களோட பேச்சும் சிரிப்புமாவா? எத்தனை பெக்? குடிச்ச பிறகு…ஆர்ப்பாட்டம், உன்னை… படுத்தறதுன்னு..?”
“இல்லப்பா. அப்படியெல்லாம் எதுமில்ல. பார்ட்டிக்கு போனா மட்டும். பிறகு சாதுவா வந்து தூங்கிடுவார். ஆனா, திறுத்து சொன்னா பிடிவாதமா முடியாதுங்கறாரே?”
“சந்திரி, கொஞ்சம் விட்டுப் பிடி”
“வெளியூருக்குப் போனா கூட எங்கிட்ட சொல்றதில்ல.” “பெட்ரோல் கம்பெனி மானேஜர்ன்னா. சுற்று வட்டார கிராமங்களில் உள்ள எல்லா பெட்ரோல் பங்க் பிரச்சினைக்கும் இவர் ஓடனும் நான்.”
“நம்ப வீடு, உறவுன்னா போ யோசிக்கறாரே… அவங்க உறவுக்காரங்கள்னா ஒரே ஆட்டம் பாட்டம் தான். ”
“சில பேர் அப்படித்தான், பழக வருஷமாகும்.”
“எதுக்கெடுத்தாலும் ‘என்னை ஏன் எதிர்பார்க்கறே…? ஹேவ் யுவர் ஓன் லைப்’ங்கறார்ப்பா.”
”ஏதாவது வேலைக்கு போறியா? குழந்தையை நாங்க பார்த்துக்கறோம்”
“அதுவும் கூடாதாம். நானும் வேலைக்கு போயிட்டா வீடு. வீடா இருக்காதாம். தவிர, குழந்தை ரம்யாவை நான் தாள் லளர்க்கணுமாம். ‘கிளப்’, பெயிண்டிங், நிட்டிங் எத்தனை இல்லைன்றார். எனக்கு அதிலே எல்லாம் ஈடுபாடே இல்லையேப்பா! ஸ்கூல்ல டீச்சிங் பிடிக்கும். அதுக்கு வழி விட மாட்டேங்கறார்.”
“பேசாம இன்னுமொரு குழந்தை பெத்துக்கோ, ‘” என்று தீர்வு சொன்னாள் அம்மா!
ஆகுடம் போல இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு அலைகள் சற்று அடங்கித்தான் விட்டன. புகுந்த வீட்டாரிடம் அவளுக்கு நேசம் வளர்ந்து வலுப்பெற்றது. ஒன்றிரண்டு சிநேகிதிகள் நெருக்கமாகி, பரஸ்பரம் பிரச்சனைகள் குறித்துப் பேசி சிரிக்க முடிந்தது. அத்தோழிகள் கை கொடுக்க, ஆபிஸ் விருந்துகளில் ஐம்பது பேருக்கானாலும் சமைத்துப் பரிமாறுவது சவாலான சந்தோஷமாயிற்று. ஸ்பாஸ்டிக் பள்ளியில் பருதி நேடி வேலை இடைக்க, ஓய்வும் அர்த்தமுள்ளதாகியது.
இருபது வருட தாம்பத்தியத்திற்குப் பில் திடீரென உணர்ந்தாள்… இப்போது சண்டைகள் கிளம்புவதில்லை. இழைகளை சிக்கல் நீக்கி சுற்றியதில் கூடு தயாரானது. அது அடைந்து கிடக்க வேண்டியதாயுமில்லை. வாசல் வைத்த கூடு. விட்டு வந்து முடங்கி தூங்கலாம் என்ற சொகுராய் மாறிப் பறந்து போனது.
எல்லாவற்றுக்கும் அவளது அபிப்ராயம் கேட்டார். அவள் கணவர். அவளது யோசனைகளைக் கேட்டு சிலாகித்தார். ‘ஏன்’ சுந்தரி, ரமணிக்கு டிரான்ஸ்பர் பார்ட்டியை பாண்டியனில் வைப்போமா, வீட்டிலேயா?.
‘ஒவ்வொரு வீட்டைப் பார்க்கும் போது, நம் பிள்ளைக்க மணிங்க இல்லையா??
‘விடுமுறைக்கு எங்கே போகலாம் சொல்லு? நீயே முடிவு செய்தா, பிறகு ஏன் இங்கே கூட்டி வந்தீங்கன்னு மூஞ்சியைத் தூக்கி வச்சுக்க முடியாது நீ!’ சிரிப்பார்.
‘நேத்து காக்டெயிலுக்கு வறுத்து வச்சியே கார வடகம், ஜோரு போ’
அவர்களது இருபத்தி நாள்தாம் திருமண நாளன்று மெல்ல கேட்டாள்:
“ஏம்பா, நம்ப வெள்ளி விழாவுக்கு இன்னும் ஒரு வருஷந்தான். இல்லியா?”
“ம்ம். நாள் போறது தெரியவேயில்லை. சதா பயந்து, முக்கு சிந்தின அதே பெண்டாட்டியா நீன்னு கூட யோசிக்கறேன்.”
“கடவுள் கிருபையிருந்தா, கோல்டன் ஆனிவர்சரி கூட கொண்டாடலாம் – தேவசகாயம் தம்பதிகள் மாதிரி
“ஓ… அவங்களை நினைவு வச்சிருக்கியா?”
“உங்க குடும்ப நண்பர் தானே அவர்) அந்த கோலாகலத்தை மறக்க முடியவ.
“நமக்கு கல்யாணமான புதுசு இல்லியா?”
“மூத்தவ பிறந்தாச்சு. அப்பவே எனக்கொரு ஆசை. நாமும் இப்படி ஒருநாள் கொண்டாடணும்னு.”
“நோ… நமக்குள்ளே எளிமையா ஏதாவது இருக்கலாமே தவிர ஆடம்பர அமர்க்களம் வேண்டாம்.
“ஏனாம்?”
‘பொசுக்’கென்று அமுங்கின ஆசைகள், வெள்ளி விழா ஆண்டு நெருங்க மீண்டும் கொப்பளித்தன.
அதை உதாசீனப்படுத்த மனமில்லாமல் கணவர், அநாதை விடுதி, முதியோர்இல்லம், பார்வையற்றோர் பள்ளி என்று எங்கும் விருந்தும் இனிப்புமாய் பரிமாற ஏற்பாடு செய்தார். அவளுக்கு பொன்வளையலும், பட்டுப் புடவையும் பரிசளித்தார்.
எதிர்பார்த்திருந்த நாள்அன்று, பெற்றோரை சுட்டி முத்தமிட்டு, இரு வெள்ளி நட்டுகளை நீட்டினாள் – உப்பிய வயிற்றுடன் பேறு காலத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்த அவர்களது ஒரே மகள் ரம்யா.
“ரொம்ப அழகாயிருக்கு ரம்யா. இதுவரை இப்படி நட்டு வாங்கிக்கணும்னு நான் யோசிக்கவேயில்லை. ஆனா இனி தினம் இதிலேதான் சாப்பிடுவோம்,’ என்றாள் சந்திரிகா.
சிநேகிதர்களும் வந்து பேசி, பாராட்டி பரிசளித்துவிட்டு போனார்கள். விருந்து தயாரிக்க, உணவிடும் இடங்களுக்கு போய் வர என்று நாள் பறந்தது. முதியோர் இல்லங்களில், நடுங்கும் விரல்கள் ‘நல்லாயிரும்மா’ என்று தொட்டு ஆசீர்வதிந்த போது புல்லரித்தது. சிறு மொட்டுகள் ‘ஹாப்பி ஆனிவர்சரி’ என்று பாட மனது பொங்கியது.
“கன்கிராட்ஸ்ம்மா, ப்பா, நாளைக்கு பரீட்சை. நா ராத்திரியே கிளம்பணும்,” என்று மகன் வந்து நின்றான்.
உறவுகள் மறக்காது வாழ்த்தி கடிதங்கள் எழுதியிருந்தனர். மதியம் சற்றே. படுத்துறங்கினாள்.
சாயங்காலமாய் குளித்து புதுபுடவையை கட்டுகையில், அவர் சொன்னது போல கூச்சமாய் தானிருந்தது.
“ஹோ ஹோ…டம்மா யூ லுக் லவ்லி, ” பாராட்டினாள் மகள், கோயிலுக்கு போய் வரலாமேன்னு உடுத்தினேன். வெள்ளி ருபாயா 25 சேர்த்து வச்சிருக்கேன். உண்டியல்ல சேர்த்துட்டு வரலாம்.
அப்படியே என்னை பஸ் ஏத்தி விட்டுருங்கம்மா,”மகன் எர் பேக்குடன் கிளம்பினான்.
கோயிலுக்கு போய், பலகாரங்களுடன் மகனுக்கு விடை கொடுத்து அனுப்பிய பின், ‘சந்திரி, அப்படியே ஒரு டிரைவ் போயிட்டு வரலாமா?” என்று கேட்டார், அவள் கணவர்,
“என்னை வீட்டில் இறக்கி விட்டுருங்கப்பா. அவர்இன்னைக்கு போன் பண்ணாலும் பண்ணுவார்.” என்றாள் மகள்.
பத்தாவது நிமிடம் காரில் இருவர் மட்டுமிருக்க, அவர் கை அவள் தோளைச் சுற்றிக் கொண்டது.
‘இந்தப் புடவையிலே பத்து வயசு குறைஞ்சிருச்சு உனக்கு, “இவ்வளவு ஜரிகை வைத்ததை எடுத்திருக்க வேண்டாம்.!” ‘நல்லாத்தானே இருக்கு.”
மிதமான வேகத்தில் மிதந்தது. எதிரே மின்னி நெருங்கும் கார் விளக்குகள் கூட இன்று அவளுக்குப் புதுமையாய்த் தோன்றின.
“எங்கே போறோம்?
“சும்மா ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர். உம் பொண்ணு எத்தனை நாசூக்கா விலகிட்டா பார்த்தியா?” அவள் இடுப்பில் அவரது விரல்கள் பரவின.
“ஷ்ஷ்… நான் அப்படி நினைக்கல,” அவள் முகம் சூடானது.
“சந்திரி, நிஜம் சொல்லு. உனக்கு ஏமாற்றமா?”
“நீ ஆசைப்பட்டது போல கொண்டாட்டம் ஏதுமில்லாம்..?”
“வாழ்க்கை ஏமாற்றமேயில்ல. அதுவே நிறைவில்லையா?”
“அந்த பொன் விழா போல்… தடபுடலக..?”
“நமக்குக் கல்யாணமான முதல் வருஷம் உல்லாசமா உருண்டிருச்சு. மறுவருஷம் ரம்யா பிறந்தா. மூணாவது வருஷம் நீங்க பிரமோஷன், வேலை, மாற்நல்னு அலைபாய்ஞ்சிங்க எனக்குத் தனிமை. நீங்க என்னை விட்டு விலகினார் போல ஒரு தவிப்பு. ‘இனி வாழ்க்கை அவ்வளவு தான்’னு ஒரு அலுப்பு எல்லாம் மொய்த்த நேரத்தில்… தேவசகாயத்தின் திருமண பொன்விழா நிறைய நம்பிக்கையை தந்ததுங்க”.
புரிகிறது என்பது போல, அவள் தோளைத் தட்டினார்.
“அந்த நிறைவை நானும் அனுபவிக்கணும்ங்கற எதிர்பார்ப்பு. உந்துதலை அது எனக்குள்ள விதைச்சது போல ஓர் உணர்வு”
கார் ஊர்ந்து நின்றது.
“ரெயில்வே கிராசிங்கா? திரும்பிடலாமே?”
“என்ன அவசரம்?” அவர் கண் சிமிட்டினார்.
அவர் காரை விட்டிறங்கி நிற்க, அவள் ஜன்னல் வழியே பள்ளத்தில் தெரிந்த குடிசைகளை, புளிய மரத்தை, பல் குத்திக் கொண்டிருந்த கிழவனை என்று ஒவ்வொன்றையும் அதிசயமாகப் பார்த்தாள். காரை விட்டு இறங்கியவள், காற்றின் குளுமையில் கண்மூடி தலையை உயர்த்தினாள். கண் திறந்த போது கருவானம் எங்கும் வாரியிறைத்த வைரங்களாய் நட்சத்திரங்களும், வெள்ளித் தட்டாய் நிலாவும்… ரொம்பவே ரசித்தாள்.
அருகில் வந்து நின்ற கணவரிடம்,
“உலகம் முழுசும் ஏதோ இன்னைக்கு விசேஷ அழகாய்த் தெரிகிறது! இதைவிட சந்தோஷம் வேறென்ன வேண்டும்?”
“இப்போ உனக்கு ஒரு பரிசு”
மிக அருகிலிருந்த அந்த பழகிய முகத்தை புதிது போல ஆர்வமாய்ப் பார்த்தவள் கிசுகிசுத்தாள், “என்ன?”
“இதுதான்” என்று அவர் நீட்டிய பரிசில் புன்னகை வந்தது.
அரையடி நீள வெள்ளரிப் பிஞ்சை நீளவாக்கில் நேர்த்தியாய் அரிந்து, அல்லிப்பூப்போல விரிந்த இதழ்களுக்குள் காரப்பொடியும், உப்பும் தூவி…
”உனக்குப் பிடிக்குமே!”
“தாங்க்ஸ்ப்பா” குரல் கம்மியது. மனசு நிறைய கொண்டாடிட்டோம்.”
பார்வைகள் சில கணங்கள் கோர்த்து நின்றன.
“ரயில் வந்திருச்சு போல?”
காரினுள் அமர்ந்து, சிறு பிள்ளைகளைப் போல ஓடும் ரயிலை வேடிக்கை பார்த்தளர். இருவருக்கும் மனம் நிறைந்திருந்தது.
– தினமலர்-வாரமலர், டிசம்பர் 1995.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.