கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 13, 2025
பார்வையிட்டோர்: 3,038 
 
 

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

31. மரண சாசனம்

தலையூர் அரண்மனை ஒரே பரபரப்பாக இருந்தது. படை யின் தலைமைத் தளபதி பராக்கிரமன்; மலையொன்று தனது முடியைச் சாய்த்துக் கொண்டிருப்பது போல் தலையைக் குனிந்து கொண்டு நின்றான். தலையூர் மன்னன் காளி, அரண் மனையின் ஆலோசனை மண்டபத்தை இப்போதுதான் அளந்து பார்த்துக் கணக்கிட விரும்பியது போல் அடிமேல் அடி வைத்து அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருந்தாள். செல்லாத்தாக் கவுண்டர், தனது அடர்ந்த மீசையை விரல்களால் தடவி விட் டுக் கொண்டும் சில நேரங்களில் மீசை முடிகளில் ஒன்றி ரண்டை இழுத்துப் பிடுங்கிக் கீழே எறிந்து கொண்டும் ஆத்தி ரம் மிகுந்த ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். ஆலோ சனை மண்டபமே வினாக்குறி உருவெடுத்திருந்த அந்தச் சமயத் திலும் மதுக்கிண்ணத்தை உதடுகளில் பதித்து உறிஞ்சிக் கொண்டே தனது உடல் வலியை சமாளித்துக் கொண்டு ஒரு நாற்காலி யில் சாய்ந்திருந்தான் மாந்தியப்பன்! 

வளநாட்டை இழந்துவிட்ட கலக்கம் ஏமாற்றம் துன்ப துயரம் இவற்றால் வாடிப் போயிருந்தார் செல்லாத்தாக் கவுண்டர். 

தலையூர்ப் படையின் துணையுடன் எதிரிகளைப் பந்தாடி வளநாட்டிலிருந்து விரட்டியடிக்கலாம் என்றும் ஆரிச்சம்பட்டியை யும் வளநாட்டு ஆதிக்கத்திலேயே வைத்திருக்கலாமென்றும் கண்ட கனவு பொய்த்ததே என்று மாந்தியப்பனின் நெஞ்சு முணுமுணுத்துக் கொண்டிருந்தது. 

குடையூரில், பறக்க விட்ட கொடியைச் சங்கரமலையிலும் பறக்க விடலாம் ஆரிச்சம்பட்டியிலும் பறக்க விடலாம் மாரிக்கவுண்டன்பாளையத்திலும் பறக்க விடலாம் என்று மார் தட்டிப் பாய்ந்த மாவீரம் மண்ணாகிப் போய்விட்டதே யென புழுங்கிக் கொண்டிருந்தான் பராக்கிரமன். 

போரில் ஏற்பட்ட தோல்வியையும் தனது ஆணை நிறை வேற்றப்படாமல் முதல் தடவையாகத் தனது படை வீரர்கள் புறங்காட்டி ஓடி வந்ததையும் – தலையூர்க் காளி அவ்வளவு பெருங்கவலைக்குரிய நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் ஒரு திட்டமிட்ட படையெடுப்பின் மூலமும், அந்த யுத்தத்திற்குத் தானே தலைமை தாங்கி நடத்துவதின் மூலமும் இழந்த வெற்றியைப் பெற்று விடலாமென்றே அவன் நம்பி னான். அப்படியொரு நம்பிக்கையிருக்கும்போது, அவன் முகம் சுண்டிப் போய் இருப்பானேன்? 

அவனது உள்ளத்தைக் குழப்பிக் கொண்டிருந்ததெல்லாம் ராக்கியண்ணன் அமரராகி விட்டதுதான்! 

தனது ஆசான் மறைந்து விட்டார் என்பதிலே கூட கவலை வந்து இதயத்தைக் கசக்கிப் பிழிகிறது என்று கூறி விட முடி யாது. அவர் மீதே ஆத்திரங் கொண்டு கைது செய்து வரு மாறு கட்டளையிட்டவன்தானே; அதனால் அவர் கொல்லப் பட்டு விட்டார் என்ற துயரத்தால் சோர்ந்து போய் விட்டான் என்றும் சொல்வதற்கில்லை. 

அவனைக் குழப்புகிற பிரச்சினையே; மாரிக்கவுண்டன் பாளையத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ராக்கி யண்ணனின் உடல் நல்லடக்கத்திற்கு அவன் போவதா இல் லையா என்பதுதான்! 

ஆசான் சாவுக்குக் காரணமே அவனது தலையூர்ப் படை கள்தான் என்கிற போது அவரது உடல் அடக்கத்துக்கு அவன் செல்வதென்றால்; அதனால் விளையக் கூடியவை எப்படி யெல்லாம் இருக்கக் கூடும்! சுற்றியிருப்போர் என்னவெல்லாம் பேசுவார்கள்! 

“அக்ரமக்காரன் வந்து விட்டான் பார்; ஆசானையே கொன்று குவித்து விட்டு இப்போது அழுவதற்காக வந்து விட்டான் பார்!” என்று மாரிக்கவுண்டன் பாளையத்துக்கு வருவோரில் பெரும்பாலோர் நேரடியாகப் பேசாவிடினும் மறைமுகமாகவேனும் பேசத்தானே செய்வர்!” இப்படியும் தலையூர்க் காளி நினைத்தான். 

போகாமல் தவிர்த்து விட்டால்; அப்போதும் “பாரய்யா – எப்படியோ நடந்தது நடந்து விட்டது; அதற்குப் பிராயச் சித்தமாகவாவது அந்தத் தலையூர்க் காளி மாரிக்கவுண்டன் பாளையம் வந்திருக்க வேண்டுமல்லவா? என்ன இருந்தாலும் அவனுக்கு மட்டுமல்ல; அவன் குடும்பத்துக்கே போர்ப்பயிற்சி ஆசானாக ராக்கியண்ணனும் அவரது மூதாதையரும் விளங் கியவர்களாயிற்றே!” என்றும் பலர் பேசக் கூடுமே! இப்படி யும் காளி மன்னனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

போக வேண்டாமென்று தடுத்திட்ட உணர்வை விட, போய் வருவதுதான் நலமென்று தூண்டுகிற உணர்வுதான் மிஞ்சி நின்றது! 

மாரிக்கவுண்டன்பாளையம் போவது என்றே அவன் இறுதி யாக முடிவெடுத்து விட்ட போது செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் வாயை மூடிக் கொண்டு இருந்து விடவில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி அவன் பயணத்தை நிறுத் தத்தான் பார்த்தனர். 

தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கும் எதிரிகள் தலையூர் மன்னனைக் கண்டவுடன் வெறியும் ஆத்திரமும் அதிகம் கொண்டு அங்கேயே ஒரு போர்க்களத்தை உருவாக்கக் கூடும். அதை எதிர்பார்த்துப் பெரும்படையுடன் சென்றிடவும் முடியாது. துக் கம் விசாரிக்கப் போகுமிடத்துக்குப் படையுடன் செல்வது பரிகாசத்துக்கிடமாகும். அதற்காகத் தனிமையில் மிகச் சாதா ரண பாதுகாப்புடன் சென்றால் உயிருக்கே கூட ஆபத்து விளைத்திடக் கூடும். 

இந்தக் காரணங்கள் அனைத்தும் தனது வீரத்திற்கு விடப் படும் அறைகூவலாகத் தலையூர் மன்னனுக்குத் தோன்றியதால் அவற்றை அவன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பராக் கிரமனுக்கு ஆணையிட்டுப் பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய் திடக் கூறினான். அதற்கு மேல் தடை கூறிட செல்லாத்தாக் கவுண்டர் முயற்சி மேற்கொள்ளவில்லையென்றாலும் தலையூர் மன்னனின் நெஞ்சில் வெறுப்பு நெருப்பை மூட்டிட வேண்டிய அளவுக்கு மூட்டிவிடத் தவறவில்லை. 

“மாரிக்கவுண்டன்பாளையத்துக்கு அந்த மசச்சாமி குன் றுடையான் வந்திருப்பான். அவன்தான் ராக்கியண்ணனின் இறுதிக் காரியம் அனைத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளான். அவன் நமது தலையூர்ப்படையிடம் தனது குடையூரை இழந்து விட்ட போதிலும் சங்கரமலைக் கோட்டையை நாம் கைப்பற்ற முடியாமல் திரும்பி விட்ட நிகழ்ச்சியினால் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பான்! அவனுக்குப் பக்கத்தில் சின்னமலைக்கொழுந்து இருப்பான்! ஆரிச்சம்பட்டியில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, அவனைப் பெரிய வெற்றி வீரனாக நினைக்கத் தூண்டியிருக் கும். அவனும் ஏற இறங்கப் பார்த்து அலட்சியம் காட்டுவான். இதையெல்லாம் விட என் மனத்தை அலைக்கழிக்கும் ஒன்று; பொன்னர் – சங்கர் என்ற அந்தப் பொல்லாச் சிறுவர்கள் அங்கேயிருப்பார்கள் என்பதுதான்! ராச்சாண்டார் மலையில் தலையூரின் துணைத் தளபதி திருமலையை வீழ்த்தி வெற்றி கண்டவர்கள் அவர்கள்! ஆரிச்சம்பட்டியைக் கைப்பற்றிய மாந் தியப்பனை விரட்டியவர்கள் அவர்கள்! மாயவர் கொண்டு வந்த சோழப்படையின் உதவியுடன் வள நாட்டு ஆட்சியையே என்னிடமிருந்து அபகரித்து விட்டவர்கள் அவர்கள்! சங்கர மலையில் ராக்கியண்ணனை வீழ்த்திய தலையூர்ப்படை பராக் கிரமன் தலைமையில் அங்கே வெற்றி முரசு கொட்டப் போகும் வேளையில் அதனைத் தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள்! எல் லாவற்றுக்கும் மேலாக அந்தப் பொன்னர் – சங்கர்தான் தலை யூர் மன்னனுக்கு எமன்கள் என்று செம்பகுலன் மேல் ஆவே சம் வந்து காளிதேவியே கூறியிருக்கிறாள் என்பதையும் மறந்து விடக் கூடாது! நமது பகைக் கும்பலுக்குப் பக்கத்திலே இப் போது இருப்பது யார்? அந்தத் துரோகி மாயவர்! அதையும் அலட்சியப்படுத்தி விடக் கூடாது! இந்தச் சூழலில் மாரிக் கவுண்டன் பாளையத்துக்குப் பயணம் தேவையா?’ என்று செல்லாத்தாக் கவுண்டர் எடுத்துரைத்தது காளி மன்னனைத் தடுத்து நிறுத்துவதற்காக என்பது போலத் தோன்றினாலும் தலையூரான் மனத்தில் அந்தப் பகையுணர்ச்சி மங்கிப் போய் விடக் கூடாது என்பதுதான் அவரது பிரதான நோக்கமாக இருந்தது. 

ஆசான் சாவுக்கு வரவில்லை என்ற அவப் பெயர் தனக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத் தலையூர் மன்னன் மாரிக் கவுண்டன்பாளையத்துக்குப் புறப்படுவதில் எந்தத் தடையும் குறுக்கே நிற்க முடியவில்லை. மது மயக்கத்தில் உடல்வலியைச் சிறிது மறந்திருந்த மாந்தியப்பனையும் தன்னுடன் வருமாறு காளி மன்னன் அழைத்தபோது, மாந்தியப்பன் நடுங்கித்தான் போய்விட்டான். 

இத்தனை பகைவர்கள் மத்தியில் எப்படிப் போவது அப்பா?’ என்று செல்லாத்தாக் கவுண்டரைக் கெஞ்சும் தோரணையில் பார்த்தான். பகைவர்களைப் பற்றிய ஒரு பயங் கரமான குறிப்பைச் செல்லாத்தாக் கவுண்டர் தலையூர் மன்ன னிடம் தந்தது; ஏற்கனவே கனன்று கொண்டிருக்கும் வெறுப்பை வளர்ப்பதற்காகத்தானே தவிர; அவருக்கே தெரியும் அவரது பகைவர்கள் நல்ல பண்பாளர்கள் என்று! அதனால் மாந்தியப் பனுக்குத் தைரியமூட்டி அவனையும் காளி மன்னனுடன் அனுப்பி வைத்தார். 

மாரிக்கவுண்டன்பாளையம் மக்கள் கடலில் மிதந்து கொண் டிருப்பது போல் அவ்வளவு பெருங் கூட்டம். கொங்கு வேளா ளப் பெருமக்கள், வேட்டுவப் பெருமக்கள் மற்றும் பல்வேறு வகுப்பினர், வேறுபாடு கருதாமல் ஆசான் ராக்கியண்ணனின் முக தரிசனம் காணச் சாரைசாரையாக எல்லாப் பாதை களிலும் வந்து கொண்டிருந்தனர். காணியாளர்கள், நிலக் கிழார்கள், குறுநில ஆட்சியாளர்கள், எல்லைக் காவல் ஆட்சி யாளர்கள், தமது பரிவாரங்களுடன் ராக்கியண்ணனின் பாச றையில் நிறைந்திருந்தார்கள். 

குன்றுடையான், சின்னமலைக் கொழுந்து, மாயவர், பொன் னர், சங்கர், வீரமலை, வையம்பெருமான் ஆகியோர் ராக்கி யண்ணனின் உடல் வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களது குடும்பத்துப் பெண்கள் மற்றும் உறவுக்காரப் பெண்கள் அனை வரும் வேறொரு பகுதியில் பாசறைக்குள்ளே சோக சித்திரங்களாகக் காணப்பட்டனர். தாமரைநாச்சியார், சிலம்பாயி, முத்தாயி, பவளாயி, அருக்காணித் தங்கம், குப்பாயி -இவர் களைச் சூழ்ந்து நூற்றுக்கணக்கில் மகளிர் கண்கலங்க வீற்றிருந்தனர். 

தலையூர் மன்னன் வந்து விட்ட செய்தியை ஒரு வீரன், மாயவர் காதில் போடவே, அவர் எழுந்து பாசறையின் வாயிற்பக்கம் சென்றார். தலையூரான் மாந்தியப்பனுடன் வந் திறங்குவதைப் பார்த்து, அவனை மாயவர் எதிர்கொண்டு மௌனச் செய்கையின் மூலம் அழைத்துக் கொண்டு ஆசான் உடல் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்கு வந்தார். 

என்ன இருந்தாலும் ஆசான் உடல் பெரிய இரும்புத் தூண் ஒன்று சாய்ந்து கிடப்பது போல் கிடப்பதைக் கண்டதும் தலை யூர்க் காளியின் கண்கள் அவனையறியாமலே கலங்கி விட்டன. தளபதி பராக்கிரமன் கையிலிருந்த மல்லிகை மாலையை வாங்கி ஆசானின் கழுத்தருகே கொண்டு போன காளி மன்னன் என்ன நினைத்தானோ தெரியவில்லை அந்த மாலையை ஆசானின் பாதங்களுக்குச் சூட்டி, அந்தப் பாதங்களைத் தொட் டுக் கும்பிட்டுத் தனது குரு பக்தியைக் காட்டிக் கொண்டான். 

கருமேகம் சூழ்ந்து கொள்ளாதபோது நிலவு அழகாகவும் இருக்கிறது. தெளிவாகவும் இருக்கிறது. ஒளி மழையும் பொழி கிறது. அதுபோலத்தான் செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப் பன் ஆகியோரின் துர்ப்போதனைகள் கிளம்பாத போது தலை யூர்க் காளி, குணத்தில் தங்கம் போலப் பிரகாசிப்பான்! அவர் களின் துர்ப்போதனை கோள் மூட்டல் – இவை கருமேக மென மறைத்துக் கொள்ளும்போது அவன் தன்னையே இழந்து, விடுவான்! 

ஒருக்கணம் அந்தத் தீமை அவனைத் தீண்டாத நிலையில் ஆசானின் மீதுள்ள அன்பையும் மரியாதையையும் மெத்த பண் புடன் உணர்த்திய காளி மன்னன், எங்கே அமரலாம் என்று சுற்றுமுற்றும் விழியோட்டிய போது – குன்றுடையான், தனது அடக்கமான இயல்புக்கேற்ப விரைந்து வந்து தனது இருக்கையில் அவனை அமர்த்திவிட்டு, அவன் வேறொரு இருக்கைக்குச் சென்று விட்டான். குன்றுடையானைப் பின்பற்றி சின்ன மலைக் கொழுந்தும் எழுந்து விடவே தலையூரானுக்குப் பக் கத்து இருக்கையில் மாந்தியப்பன் உட்கார்ந்து கொண்டான். 

அவர்களிருவரும் இருந்த இருக்கைகளுக்கு நேராக – ஏதோ தற்செயலாக குன்றுடையான் குடும்பத்துப் பெண்களும், ஆரிச்சம்பட்டிக் குடும்பத்துப் பெண்களும் இருந்தனர். ஒரு பெரும் சாவுக்கு வந்திருப்போர் அனைவருமே அந்த மனித ரின் சிறந்த வாழ்க்கை பற்றியும், ஈடு இணையற்ற வீரங் குறித் தும், தலை தாழாத தன்மான உணர்வு குறித்தும் எண்ணியவ ராய் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசியவராய் சோகக் கடலில் சங்கமித்திருந்தனர். அதனால் மகளிர் கூட்டத்தின் பக்கம் அவர்கள் கண்கள் திரும்பினாலும் அங் குள்ள எல்லாப் பொருள்களையும் பார்ப்பது போலத்தான் அவை பார்த்துத் திரும்பின. ஆனால் மாந்தியப்பனின் குரங்கு மனமும், அந்த மனத்தால் இயக்கப்படுகிற விழிகளும் மகளிர் பக்கம் மொய்த்தது மொய்த்ததுதான்! அங்கிருந்து விடுபடவே யில்லை. 

சோகச் சூழலை வெளிப்படுத்த சங்கு ஒன்று அந்தப் பாச றையில் முழங்கிக் கொண்டிருந்தது. ஆசான் அன்புடன் வளர்த் ததும், அவர் வழக்கமாக ஏறிச் செல்வதுமான குதிரை அவருக் கருகே நின்று கொண்டிருந்தது. துக்கம் கேட்கவும், மறைந்து விட்ட பெரும் வீரரின் முகம் காணவும் அலை மோதிக் கொண்டிருந்த கூட்டம், தலையூரான் வருகையினால் மூக்கின் மீது விரல் வைத்து வியப்பு தெரிவித்தது. ஆசான் உடலுக்கு மரியாதை செலுத்த வரிசையில் நின்று வருவோர், அவரைப் பார்த்து வணக்கம் செலுத்தி விட்டு, தலையூர்க் காளியை உற் றுப் பார்த்து விட்டே அங்கிருந்து நகர்ந்து கொண்டிருந்தனர். 

மகளிர் கூட்டத்தில் மொய்த்திருந்த மாந்தியப்பனின் விழி கள். ஒரு கட்டத்தில் திடீரென நிலைத்து நின்று வெறித்து நோக்கின! அவன் அருக்காணி தங்கத்தை அங்கே பார்த்து விட்டான். செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவில் அவ ளிடம் அவன் சேட்டை செய்தது நினைவுக்கு வந்தது. அவள் தன் னிடம் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டாள் என்பதும் மறந்து விடவில்லை. அவனது மூளை விஷமத்தனமாகத் தனது வேலையைத் தொடங்கியது. ஏற்கனவே மது போதையில் வெறி யேறிப் பொங்கிக் கொண்டிருக்கும் மூளை! அதனால் விஷமத் தனமான கலகத்திற்கு வித்திடவும் அதற்கான தூபம் போடவும் அந்த மூளைக்கு துணிவு மிக அதிகமாகத் துளிர்த்திருந்தது. தலையூர் மன்னனுக்கு அருக்காணித் தங்கத்தைக் காட்டி அவன் உள்ளத்தில் நஞ்சு தெளிக்கத் திட்டமிட்ட மாந்தியப்பன், மெது வாகத் தலையூரானைத் தொட்டான். அவன் மாந்தியப்பனை நோக்கி மிகத் தாழ்வான குரலில், என்ன?” என்று கேட் டான். மாந்தியப்பன் காளியிடம். அதோ! அந்தக் கூட்டத் தில் ஒரு இளம் பெண் இருக்கிறாளே, தெரிகிறதா? அவள் தான் பொன்னர் சங்கரின் தங்கச்சி அருக்காணி தங்கம்! நன்றாகப் பார்த்துக் கொள்ளவும், பிறகு விபரமாகப் பேசு கிறேன்! என்னுடைய மூளையில் ஒரு பெரிய ராஜதந்திரமே உதயமாகியிருக்கிறது. அதை இங்கு பேச வசதியில்லை” என்றான். 

தலையூர்க்காளியும், மாந்தியப்பன் ஜாடையாகச் சுட்டிக் காட்டிய மகளிர் கூட்டத்தைப் பார்த்தான். அருக்காணி தங்க மும், குப்பாயியும் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். ஏறத் தாழ இருவருக்கும் ஒரே வயது. அசைப்பில் கூட இருவரும் ஒருவரைப் போலவே தோற்றமளித்தனர். தலை சீவிப் பின்ன லிட்டிருப்பதிலிருந்து ஆடையுடுத்தியிருப்பது வரையில் இரு வரும் ஒன்று போலவே திகழ்ந்தனர். ‘இருவரில் யார் அந்த அருக்காணி தங்கம்?’ என்று அவன் கேட்கவில்லை. அப்படி யெல்லாம் அந்த இடத்தில் கேட்பது பண்புடைய செயலாகவும் அவனுக்குப்படவில்லை. ஏதோ, “ராஜதந்திரம்” என்று மாந்தி யப்பன் சொன்னதால் கொஞ்சம் கவனித்துப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான். மாந்தியப்பன், தனது அருகில் இருந்த பராக்கிரமனின் காதில் மிக ரகசியமாக, “நீயாவது சரியாகப் பார்த்து வைத்துக் கொள்! பிரம்மாண்டமான ராஜதந்திர திட்டத்துக்கு வழி வகுத்திருக்கிறேன்” என்று சொன்னதும், பராக்கிரமன் தனது பெரிய விழிகளால் வலை போட்டுத் தேடினான். 

“இரண்டு பெண்களும் ஒரே மாதிரி தெரிகிறார்களே, இதில் நீங்கள் சொல்லும் அருக்காணி யார்?”என்று பராக்கிர மன் மாந்தியப்பனின் காதோரம் வந்து கேட்டான். 

”சிகப்புச் சேலை! சிகப்புச் சேலை!” என்று மாந்தியப்பன் கிசுகிசுத்தான். பராக்கிரமன் நிதானமாகப் பார்த்துக் கொண் டான் என்றாலும் அவன் கண்ணுக்கு அருக்காணியும் குப்பாயி யும் ஒரே மாதிரிதான் தெரிந்தார்கள். அந்தக் கூட்டத்திலும் அந்தச் சூழ்நிலையிலும் அதற்கு மேல் அவன் மாந்தியப்பனிடம் விளக்கம் கேட்க விரும்பவில்லை. 

அதற்குள் வீரமலை அந்தப் பாசறையின் மேடை மீது வந்து நின்றான். அந்த மேடை, ஆசான் உடல் இருந்த மேடைக்குச் சற்று தொலைவில் இருந்தது. வீரமலையின் கையில் ஒரு மூங் கில் குழாய் இருந்தது. அந்த மூங்கில் குழாயின் இரு முனை களும் மூடப்பட்டு முத்திரை குத்தப்பட்டிருந்தது. 

“எல்லோரும் கவனத்தை என் பக்கம் திருப்புமாறு வேண்டு கிறேன்” என்று வீரமலை உரத்த குரலில் பேசியதும், முன்னை விடப் பன்மடங்கு அமைதி அங்கே கூடியிருந்தோரிடம் காணப் பட்டது. வீரமலை, தொடர்ந்து பேசினான்: 

“இதோ என் கையிலிருக்கும் முத்திரை குத்தி மூடப்பட் டுள்ள மூங்கில் குழாய் ஆசான் அவர்கள் என்னிடம் ஒப் த்தது; அவர் இறந்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட வேண்டுமென்று ஆணையிட்டுள்ள மரண சாசனமாகும். இதை முதலில் இங்குள்ள முக்கியமான பெரியவர் களிடம் காட்டுகிறேன். 

வீரமலை மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து தன்னிட முள்ள மூங்கில் குழாயையும், அது சரியாக மூடப்பட்டு முத் திரையிடப்பட்டுள்ளதா என்பதையும் எல்லோரும் சரியாகப் பார்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக தலையூர்க் காளியிட மும், மற்றும் காணியாளர்கள், எல்லைக் காவல் ஆட்சியாளர் களிடமும் காட்டினான். அனைவரும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினாலும் கூட, அதற்குள்ளிருப்பதாகச் சொல்லப்படும் மரண சாசனத்தில் ஆசான் என்ன எழுதியிருப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த் துக் கொண்டிருந்தனர். அவர்களின் முன்னாலேயே மூங்கில் குழாயில் உள்ள முத்திரையை வீரமலை அகற்றினான். குழாய்க் குள்ளிருந்து ஓலையை எடுத்தான். அந்த ஓலையை தலையூர்க் காளியிடமும் பொன்னர் சங்கரிடமும் குறிப்பாகக் காட்டி நீங்களும் ஆசானின் மாணவர்கள் என்பதால் அவரது கை யெழுத்துத்தானா என்பதை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங் கள் என்றான். காளி மன்னன், பொன்னர் சங்கர் மட்டு மின்றி அங்குள்ள காவல் ஆட்சியாளர்கள், காணியாளர்கள் அந்தக் கையெழுத்தைப் பார்த்து ஒப்புதல் அளிப்பது போலத் தலையை ஆட்டினர். மீண்டும் வீரமலை மேடையில் ஏறிக் கொண்டு அந்த ஓலைகளைக் கையில் ஏந்தியவாறு “இதோ நமது ஆசான் ராக்கியண்ணன் எழுதியுள்ள சாவு முறி” எனப்படும் மரண சாசனப் பத்திரத்தை உங்கள் முன்னால் படிக்கிறேன்” என்று கூறிவிட்டுப் படிக்கத் தொடங்கினான். பாசறையில் குழுமியிருந்தோர், ஊசி ‘விழுந்தால் கூட அதன் ஒலி கேட்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு நிசப்தமாக, வீர மலை என்ன படிக்கப் போகிறான் என்பதை மெத்த ஆவ லுடன் கவனித்தனர். பாசறைக்கு வெளியே அலைமோதிக் கொண்டிருந்த கூட்டமோ ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு வீரமலையின் குரல் கேட்கத் துடித்துக் கொண்டிருந்தனர். 

எத்தனையோ செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கூறிய வீர மலை, ஆசானின் மரண சாசனம் பற்றி எதுவுமே இதுவரை யில் கூறவில்லையே அதில் என்ன எழுதப்பட்டிருக்குமோ என்று மேடையை நோக்கி வீரமலையை அண்ணாந்து பார்த் துக் கொண்டிருந்தார் மாயவர்! 

32. மரகதப்பச்சை மாணிக்கக் கிளி! 

மரண சாசனம் எழுதப்பட்டிருந்த ஓலையை வீரமலை படிக் கத் தொடங்கி விட்டான். 

“மாரிக்கவுண்டன்பாளையத்து பயிற்சிப் பாசறை ஆசான் ராக்கியண்ணனாகிய நான், நல்ல திடகாத்திரத்துடனும் – சித்த சுவாதீனத்துடனும் எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி இருதய சுத்தியுடன் எழுதி வைத்துள்ள மரணசாசனம். இந்த மரண சாசனத்தை நான் முன் கூட்டியே எழுதி மூங்கில் குழா யில் அடைத்து முத்திரை பதித்து வைத்திருக்கிறேன் என்றாலும் இதனை என் மரணத்துக்குப் பிறகு பிரித்து உற்றார் உறவினர் ஊர்ப் பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படையாகப் படித்து அறிவிக்குமாறு எனது மாணவர்களில் ஒருவரான வீர மலைக்கு வாய்மொழியாகக் கூறியுள்ளேன். எனது மரணம் இயற்கையாக அமைந்தாலும் அல்லது போரில் ஈடுபட்டு உயி ரிழந்து வீர சுவர்க்கம் அடைய நேரிட்டாலும் உடனடியாக இந்த மரணசாசனத்தில் கண்டுள்ளவை நடைமுறைக்கு வரு வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டுமென்பது எனது ஆசையாகும். எனது மூதாதையர் இந்த மாரிக்கவுண் டன்பாளையத்தில் பாசறை அமைத்து வழிவழியாகக் கொங்கு வேளாளப் பிள்ளைகளுக்கும் வேட்டுவ குலப் பிள்ளைகளுக் கும் போர்ப் பயிற்சி பலவற்றைக் கற்றுத் தந்தனர் என்பதும், அவர்களைப் பின்பற்றி நானும் இந்தப் பாசறையை நடத்தி வருகிறேன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று! மாரிக் கவுண்டன் பாளையத்தில் எங்கள் மூதாதையர் இந்தப் பாசறை அமைப்பதற்கு முன்பு எமது பழம்பெரும் முன்னோர்கள் வள நாட்டுக்கு அருகாமையில் உள்ள வீரப்பூர் காட்டில் பெரும் பாசறை அமைத்து சேர, சோழ, பாண்டிய நாட்டு வீரர்கள் எல்லாம் வந்து போர்ப் பயிற்சி பெற்றுச் செல்லுகிற அள வுக்கு சிறந்து விளங்கினார்கள். கால ஓட்டத்தில் பல்வேறு படையெடுப்புகள், வேளாண் குலத்தாருக்கிடையே ஏற்பட்ட உட்பகை, அந்த உட்பகையைப் பயன்படுத்திக் கொண்டு எதிரி கள் பெற்ற வெற்றி, இவற்றின் காரணமாக வீரப்பூர் காட்டில் மிக விரிவான முறையில் நடைபெற்ற எங்கள் முன்னோரின் பாசறை அங்கிருந்து இடம் பெயர்ந்து மாரிக்கவுண்டன்பாளை யத்துக்கு வர நேர்ந்தது என்பது வரலாறு! வளநாட்டுக்கும் தலையூருக்கும் அந்தக் காலத்திலேயே ஏற்பட்ட பகையின் விளைவாக ஏற்பட்ட படையெடுப்பு, முற்றுகை போன்ற குழப் பங்களால் வீரப்பூர் பாசறையைக் காலி செய்து விட்டு வெளி யேறிய எனது முன்னோர், விலை உயர்ந்த சில கலைப் பொருள்களைக் கையில் எடுத்துக் கொண்டு வர முடியாமல் வீரப்பூர் காட்டுப் பகுதியிலேயே சில ரகசிய இடங்களில் புதைத்து வைத்து விட்டு வந்து விட்டனர் . அந்தக் கலைப்பொருள் களில் மிக அழகானதும், விலை மதிப்பில்லாத அளவுக்குப் பெருமை உடையதுமான ஒன்று உண்டு. மரகதப் பச்சையும், மாணிக்கக் கல்லும் கொண்டு இழைக்கப்பட்ட கிளியின் உரு வம் அது. அந்தக் கிளி வைரம் இழைத்த ஒரு தங்கக் கூண்டுக் குள் இருப்பது போன்ற அமைப்பு உடையது. கிளியும், கிளி யின் கூண்டும், சிறிதுகூட சிதைந்து போகாதவாறு பாதுகாக்க ஒரு வெள்ளிப்பேழையில் வைக்கப்பட்டு அனைத்தும் வீரப்பூர் காட்டில் மிக ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் அதை நான் தேடிக் கண்டுபிடித்துக் கைப்பற்றாததற் குக் காரணம் உண்டு. பல ஆண்டு காலமாக வீரப்பூர் காடு தலையூர் மன்னனின் ஆதிக்கத்தில் இருப்பதாலும் அந்தக் காட் டைச் சுற்றி தலையூர்ப் படைவீரர்கள் பாதுகாப்பு எப்போதும் விழிப்போடு இருப்பதாலும் தனியொருவனாக நான் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. ஒரு படையெடுப்பின் மூலமே அந்த முயற்சியில் வெற்றி காண முடியும். அந்த மரகதப் பச்சை மாணிக்கக் கிளியை குன்றுடையாரின் மகள் அருக் காணித் தங்கத்துக்குப் பரிசாக வழங்க வேண்டுமென்பது என் நீண்டநாள் அவா! குன்றுடையான் குடும்பத்துடன் எனக்கு எப்படியோ ஒரு பாசத் தொடர்பு ஏற்பட்டு விட்டது. குன் றுடையான் மக்களைக் கொல்வதற்கு தலையூர்க்காளி மன்ன னும் செல்லாத்தாக்கவுண்டரும் திட்டம் தீட்டியபோது, அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாகக் கூறி அதற்காக என் குழந்தைகளை இழந்து குன்றுடையான் குழந்தைகளைக் காப்பாற்றினேன். அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றினேன் என்றாலும், குன்றுடையானும் தாமரையும் காணமற்போன தங்கள் குழந்தைகள் பொன்னர் சங்கரை நினைத்து நினைத்து அழுது புலம்பியதை நானறிவேன். உண்மையை அவசரப்பட்டு வெளியிடக் கூடாது எனக் காத்திருந்தேன். பொன்னரும் சங்கரும் ஆற்றல்மிகு வீரர்களாக வளரும் வரையில் அவசரப் படாமல் இருந்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு குன்றுடை யான் குடும்பத்தின்மீது ஏற்பட்ட பரிவு எல்லையற்றதாகும். அந்தத் தொடர்பில் அவர்களின் அருமைச் செல்வி அருக் காணித் தங்கத்தின் மீதும் அளவு கடந்த பிரியம் ஏற்படலா யிற்று. எப்படியாவது வீரப்பூர் காட்டில் புதைந்து கிடக்கும் எங்கள் மூதாதையரின் கலைச் செல்வமான அந்த மரகதப் பச்சை மாணிக்கக் கிளியை அருக்காணித் தங்கம் பரிசாக அடைய வேண்டும். அந்தக் கிளி புதைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய குறிப்பை இந்த மூங்கில் குழாயில் தனியாக ஒரு ஓலையில் எழுதி அந்த ஓலையை மடித்து முத்திரை பதித் துள்ளேன். அதை அருக்காணித் தங்கம் வைத்துக் கொள்ள வேண்டியது…” 

ஆசானின் மரண சாசனத்தைப் படித்துக் கொண்டிருந்த வீரமலை, சற்று நிறுத்தி விட்டுத் தன் கையில் உள்ள மூங்கில் குழாயைக் கவிழ்த்துப் பார்த்தான். அதற்குள்ளிருந்து, மடித்து முத்திரை குத்தப்பட்ட ஒரு துண்டு ஓலை விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தான். அருக்காணித் தங்கம் அறிய வேண்டி யது என அந்த ஓலையின் மேல் எழுதப்பட்டிருந்தது. உடனே வீரமலை மேடையிலிருந்து கீழே இறங்கி, அந்த துண்டு ஓலைச் சுருளை எடுத்துப் போய் பெண்களின் கூட்டத்தில் அமர்ந் திருந்த தாமரைநாச்சியாரிடம் கொடுத்து, “அம்மணி! இதைத் தங்கள் மகளிடம் தந்து விடுங்கள்” என்றான். தாமரைநாச்சி யார் அதனை வாங்கிக் கொண்டாள். 

அதற்குள் மாயவர் வீரமலையைப் பார்த்து, “வீரமலை! மரண சாசனம் மிச்சத்தையும் படி!” என்று உரக்கக் கத்தி னார். வீரமலை மீண்டும் மேடையில் ஏறி, மரண சாசன ஓலைகளைப் பிரித்தான். எல்லோரும் ஆச்சரியத்துடனும் ஆவல் ததும்பிடும் நிலையிலும் காத்திருந்தனர். தலையூர் மன் னனுக்கும், மாந்தியப்பனுக்கும், தளபதி பராக்கிரமனுக்கும் முகமெல்லாம் கறுத்துப் போயிற்று. இருப்பினும் சமாளித்துக் கொண்டு, கம்பீரம் குறையாமல் அமர்ந்திருந்தனர். குன்றுடை யான் பிள்ளைகளைக் கொல்ல தலையூர் மன்னன் திட்டம் தீட் டிய செய்தியை ஊர் மக்கள் புதிதாகக் கேள்விப் பட்டதால் எல்லோரும் தலையூரான் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

வீரமலை, ஆசானின் மரண சாசனத்தை விட்ட இடத்தி லிருந்து தொடர்ந்து படித்தான். 

“புதைக்கப்பட்டுள்ள மரகதப் பச்சை மாணிக்கமிழைத்த கிளி பற்றிய ரகசியக் குறிப்பை, அருக்காணித் தங்கமே வைத்க்கொண்டு, தனது மணவிழாவின் போது அந்தக் குறிப்பை தனது அண்ணன்மார்களான பொன்னர் – சங்கரிடம் தர வேண்டியது. தங்கையின் மணவிழா நிறைவேறியதும், அவ ளுக்கு மணவிழாப் பரிசாக அந்தக் கிளியை சங்கர் எடுத்து வந்து தர வேண்டியது. அதற்குரிய திறமையும் வலிமையும் பொன்னருக்கும் சங்கருக்கும் உண்டென்ற நம்பிக்கையுடன் தான் இதனை எழுதியுள்ளேன். இதைத்தவிர பொன்னருக்கும் சங்கருக்கும் ஒரு முக்கிய கடமை உண்டு. அந்தக் கடமைதான் என் சபதத்தை நிறைவேற்றுவதாகும். என் மனைவி அழகு நாச்சியாரின் கல்லறை முன் எடுத்துக்கொண்ட சபதமாகும் அது. தலையூர்க்காளியும் செல்லாத்தாக் கவுண்டரும் பொன்னர் – சங்கரைக் கொல்லத் திட்டம் போட்டனர். நான் பொன்னர் சங்கரைக் காப்பாற்ற என் குழந்தைகளைப் பலி கொடுத் தேன். அதற்குப் பரிகாரமாகப் பொன்னரும் – சங்கரும் அந் தத் தீயவர்களை பழிவாங்க வேண்டும். அதுவரையில் அவர் கள் பிரமச்சரிய விரதம் கடைப்பிடிக்க வேண்டும். என் சப தத்தை என்னால் வளர்க்கப்பட்ட அந்த பிள்ளைகள் நிறை வேற்றுவதைத் தங்கள் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். என் இல்வாழ்க்கைத் துணைவி அழகுநாச்சியாரின் நினைவாக மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் நாள்தோறும் விளக்கேற்றும் உபயத்தை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என் மரணத்துக்குப் பிறகும் அந்தப் பணி என் மனைவியின் நினைவாகத் தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். என் மரணத்துக்குப் பிறகு இந்தப் பாசறையின் சகல உரிமை களும், இதைத் தொடர்ந்து நடத்தும் பாத்யதையும், என் தோட் டம் துரவு வீடுகள் அனைத்தும் எனது விசுவாசமுள்ள மாண வன் வீரமலையின் பொறுப்புக்கு வருகிறது என்பதையும் தெரி வித்துக் கொள்கிறேன்.” 

இறுதியாகத் தன்னைப் பற்றித் தனது ஆசான் எழுதியுள்ள மரண சாசனக் குறிப்பைப் படித்த போது வீரமலையின் குரல் தழுதழுத்தது. விழிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தலை சுற்றி மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தவனை, மாயவர் ஓடிச் சென்று பிடித்துக் கொண்டார். வீரமலை, தனது கையில் உள்ள மரண சாசன ஓலைகளை மாயவரிடம் ஒப்படைத்து விட்டு அந்த மேடையிலேயே சாய்ந்து விம்மி விம்மி அழத் தொடங்கினான். குழுமியிருந்த அனைவருமே விம்மியழும் ஒலி எழுந்தது. 

தலையூர்க்காளி மன்னன், மன்னன், மாந்தியப்பனையும் பராக்கிர மனையும் ஓரக்கண்ணால் பார்த்து, “போகலாம்” என்பது போல ஜாடை காட்டவே அவர்கள் எழுந்தனர். 

ஆசான் ராக்கியண்ணனை அடக்கம் செய்வதற்கான ஏற் பாடுகள் விரைவுபடுத்தப்பட்டன. அந்தப் பரபரப்பில் தலை யூர்க்காளி மன்னன் அங்கிருந்து புறப்பட்டு விட்டது குறித்து யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால் ஒன்று, வெளிப்படையாகவே தலையூர்க்காளி மன்னனுக்கும் பொன்னர் சங்கருக்கும் ஒரு பெரிய மோதல் ஒருவரையொருவர் வீழ்த்திட முனையும் மோதல் உருவா கப் போகிறது என்பதற்கு ஆசானின் மரண சாசனம் முகவுரை எழுதியிருப்பதாகவே அனைவரும் தீர்மானித்துக் கொண்டனர். 

தலையூர்க்காளியின் ரத வண்டி மாரிக்கவுண்டன் பாளை யத்தை விட்டு வெகு தொலைவு வந்து விட்டது. ரத வண்டிக் குப் பின்னால் ஒரு சில வீரர்கள் குதிரைகளில் பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தனர். ரத வண்டியை பராக்கிரமனே ஓட்டி வந்தான். பின்னால் உள்ள இருக்கைகளில் காளி மன்னனும், மாந்தியப்பனும் அமர்ந்திருந்தனர். 

நீண்ட நேரம் மெளனம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த ரத வண்டியில் ஒரு கனைப்புக்கிடையே மாந்தியப்பனின் குரல் மௌனத்தைக் கலைத்து சிலிர்த்துக் கொண்டு கிளம்பியது. 

“காளி மன்னன் கவலைப்பட்டு இப்போதுதான் நான் பார்க்கிறேன். கதிரவனே திசை மாறினாலும் காளி மன்ன னின் வெற்றியை எவனும் தட்டிப் பறிக்க முடியாது என்று பெயர் பெற்றதெல்லாம் கற்பனைதானா?” 

மாந்தியப்பனின் இந்தப் பேச்சு தலையூரானைத் தலை நிமி ரச் செய்தது! 

”மாந்தீ! நான் அஞ்சி நடுங்கவில்லை. என்னையும் உன் தந்தையையும் தீர்த்துக் கட்டுவதற்காகவே அந்த ஆசான் ராக்கி யண்ணன்; பொன்னர் சங்கரை வளர்த்து விட்டு இப் போது மரண சாசனமும் எழுதி வைத்துள்ளாரே; அதை நினைத்துப் பார்க்கிறேன்! அந்தத் திட்டத்தை எப்படி முறி யடிப்பது என்று சிந்திக்கிறேன்! அவ்வளவுதான்!” 

“சூழ்ச்சியை சூழ்ச்சியால்தான் வெல்ல வேண்டும். அதற்கு ஒரு அற்புதமான யோசனை என் மூளையில் உதயமாயிருக்கிறது!” 

“என்ன யோசனை? தைரியமாகச் சொல்லலாம்; நம்மோடு பராக்கிரமன் மட்டும்தானே இருக்கிறான் எந்த ரகசியமும் வெளியே போகாது!” 

“பொன்னர் – சங்கர் இருவரும் நமது விரோதிகளாக ஆனால்தானே அவர்கள் நம்மை பழிவாங்க நினைப்பார்கள்!” அவர்கள் விரோதிகளாக ஆகாமலே இருந்து விட்டால்?”

“என்ன மாந்தியப்பா சொல்லுகிறாய்? அவர்கள் இனிமேல் தானா விரோதிகளாகப் போகிறார்கள்? ஏற்கனவே நம்மைப் பழி தீர்க்க சபதம் எடுத்துக் கொண்டுள்ள பகைவர்கள்தானே!” 

“அந்தப் பகையை வெறும் புகையாக ஊதி விடத்தான் ஒரு ராஜதந்திரமான சிந்தனை எனக்கு உதித்திருக்கிறது!” 

“சொன்னால்தானே புரியும்!” 

”சொல்லுகிறேன்! அந்த அருக்காணித் தங்கத்தை தலையூர்க் காளியின் மனைவியாக ஆக்கிக் கொண்டால் – பிறகு பொன் னரும் சங்கரும் காளி மன்னனின் மைத்துனர்கள்! பகை உணர்வு, தானாகவே ஒழிந்து போகிறது!’ 

“நான் வேட்டுவ குலம்! அருக்காணித் தங்கம் கொங்கு வேளாளர் குலம்! சம்பந்தமாவது மண்ணாங்கட்டியாவது!” 

“அவசரப்படாமல் கேட்க வேண்டும்! அவசரமும் ஆத்திர மும் அறிவை மறைத்து விடும் அந்த அருக்காணித் தங்கத் தின் கையில் வீரப்பூர் காட்டில் புதைந்துள்ள மரகதப் பச்சை மாணிக்கக் கிளி பற்றிய ரகசியத்தை ராக்கியண்ணன் ஒப் படைத்துள்ளார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் – அந்த விலை உயர்ந்த கிளியையும் நமக்கு சொந்த மான வீரப்பூர் காட்டிலிருந்து கைப்பற்றலாம்; அருக்காணித் தங்கத்தையும் தலையூர்க்காளியின் தாரமாக்கிக் கொள்ளலாம்!’ 

“அதற்குத்தான் என்ன வழி என்று கேட்கிறேன்!” 

“சுலபமான வழியிருக்கிறது! நமது தளபதி பராக்கிரமனிடம் நான் சொல்லுகிற வேலையை ஒப்படைக்க வேண்டும். பராக் கிரமன் அந்த வேலையை திறம்பட முடிக்க வேண்டும். “

“பராக்கிரமனிடம் என்ன வேலையை ஒப்படைப்பது?” 

“பராக்கிரமன், நேரடியாகப் போருக்குச் சென்று சாதிக்க முடியாத வேலை! புத்தி சாதுர்யத்தால் செய்து முடிக்கக்கூடிய வேலை!” 

“பொறுமையை சோதிக்காமல் சொல்லு மாந்தியப்பா!” 

“என்ன மாயாஜால வித்தை செய்தாவது, பராக்கிரமன் வளநாட்டுக் கோட்டைக்குள் நுழைந்து அருக்காணி தங்கத்தை தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டும். அதில் பராக்கிரமன் வெற்றி பெற்றால் அருக்காணியுடன் அந்த மரகதக் கிளி ரகசி யமும் வந்துவிடும். அருக்காணித் தங்கம், தலையூர் மன்னன் மஞ்சத்துக்கு வந்த பிறகு தப்ப முடியுமா? கற்பிழந்த தங்கையை பொன்னரும் – சங்கரும் காளி மன்னனுக்கே கட்டி வைக்க ஒப்புக் கொள்வார்கள். பிறகு தலையூரின் சம்பந்திகளாகி விடு வார்கள். சண்டை சச்சரவு இல்லை. தலையூரான் தலையும் தப்பும்!” 

“வளநாட்டுக் கோட்டையிலிருந்து அருக்காணித் தங்கத்தை அபகரிப்பதா? அதர்மத்தின் உச்சிக்கே போகச் சொல்கிறாயே!” 

“பொன்னர் – சங்கர் என நினைத்து ஆசானின் இரண்டு குழந்தைகளை காளிதேவிக்குப் பலி கொடுத்தோமே; அதை விட அதர்மமான யோசனை ஒன்றையும் நான் சொல்லி விட வில்லையே! பகையை தந்திரமாக சமாளிக்கத்தானே வழி சொல்லுகிறேன்! நமது வீரப்பூர் காட்டுக்குள்ளேயிருக்கும் அந்த மரகத மாணிக்கக்கிளி நமது அரண்மனைக்குச் சொந்த மாக வேண்டாமா? அருக்காணியை தலையூரின் ராணியாக ஆக்குவதால் பொன்னர் சங்கர் அடங்கி ஒடுங்கி ஆமை போல் ஆகிவிட மாட்டார்களா?” 

மாந்தியப்பன், எப்படியும் தலையூர்க்காளியை குன்றுடையான் குடும்பத்தின் மீது மோதவும் இழந்த வளநாட்டைத் தான் மீண்டும் பெறவும் – காளி மன்னனை உசுப்பி விடுகிறான் என்பது தலையூரான் அறிவுக்கு எட்டவில்லை! 

எனவே அவன் மாந்தியப்பன் கூறிய திட்டம் குறித்து, அந் தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் யோசிக்க ஆரம்பித்து விட்டான். 

ரத வண்டி, தலையூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

33. தடையுடைத்த தடந்தோள் 

தலையூர் அரண்மனை வாசலில் ரத வண்டி வந்து நின்றதும், அதுவரையில் மாந்தியப்பனின் திட்டம் குறித்து சிந்தித்துக்  கொண்டே மௌனமாக இருந்த காளி மன்னன், மாந்தியப்பன் தோளைக் குலுக்கி, ‘மாந்தி! உன் யோசனை ஏற்கப் படுகிறது. பராக்கிரமா! இந்தக் காரியத்திலாவது நீ வெற்றி பெறுவாயல்லவா?” என்று வினயமாகக் கேட்டுக் கொண்டே கீழே இறங்கினான். தனது திட்டத்தைத் தலையூர் மன்னன் ஏற் றுக் கொண்டதால் மாந்தியப்பனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, பராக் கிரமனும் மன்னன் முன் தலைதாழ்த்தி, எப்படியும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவேன்” என்று உறுதி கூறி நின்றான். 

அரண்மனைக் காவலர்கள், துணைத் தளகர்த்தர்கள், மற்றும் பிரதானியர் பணிந்து வரவேற்க, சிந்தனை தேக்கிய முகத் துடனே காளி மன்னன், தனது ஆலோசனை மண்டபத்துக் குள் நுழைந்து வெள்ளியாலான ஆசனமொன்றில் அமர்ந் தான்.”பயணம் எப்படியிருந்தது?’ எனக் கேட்டுக் கொண்டே செல்லாத்தாக் கவுண்டர் அவனருகில் வந்து உட்கார்ந்தார். மன்னன் வருகைக்காகக் காத்திருந்தவன் போல அரண்மனைக் காவலன் ஒருவன், அவன் முன்னால் முதுகு வளையக் குனிந்து வணங்கி விட்டு முத்திரையிடப்பட்ட ஓலையொன்றை மெத்த மரியாதையுடன் நீட்டினான். ‘என்ன இது? யார் அனுப்பி யது?” என்று வினவியவாறு காளி மன்னன் ஓலையைக் கையில் வாங்கி, அதனைப் பிரித்துப் படிக்குமாறு செல்லாத்தாக் கவுண்டரிடம் கொடுத்தான். ஓலையைப் பிரித்துப் பார்த்த செல்லாத்தாக் கவுண்டரின் விழிகள் அகன்று விரிந்தன. 

“உறையூர் மன்னர் அக்களதேவச் சோழரிடமிருந்து வந் துள்ள ஓலை” என்றார் செல்லாத்தாக் கவுண்டர்! இந்த விப ரத்தைச் சொல்லும்போதே அவர் முகம் வெறுப்பால் கறுத்துப் போயிருந்தது. அக்களதேவச் சோழ மன்னனின் பெயரைக் கேட்டவுடன் தலையூர்க்காளிக்கும் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. ஆத்திரத்தால் உடல் பதறியது. தனது புரவலர் செல்லாத்தாக் கவுண்டரின் வளநாட்டைக் கைப்பற்ற மாயவருடன் படையனுப்பித் தனது பகைவர்களான பொன்னர் – சங்கர் கரத்தை வலுப்படுத்தியவன் உறையூர்ச் சோழன் என்ப தால்; அந்த ஓலைக்குத் தரவேண்டிய மதிப்பைக் காளி மன் னன் தரவில்லை. அலட்சியமாகக் கேட்டான், “அக்கள தேவன் என்ன எழுதியிருக்கிறான்” என்று! 

செல்லாத்தாக் கவுண்டர் அவன் கேள்விக்குப் பதிலாக அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கினார். 

“தலையூர்க் காளி மன்னர்க்கு உறையூர் மாமன்னர் அக்கள தேவச் சோழர் அன்புடன் விடுத்திடும் அழைப்பாவது…’ 

இந்த வரிகளைப் படித்து விட்டு செல்லாத்தாக் கவுண்டர் கேலியாகச் சிரித்துக் கொண்டே “ஓகோ! இவர் உறையூர் மாமன்னரோ? மன்னர்களுக்கெல்லாம் மன்னரல்லவா மாமன்ன ராக இருக்க முடியும்? இவர் எப்போது மாமன்னர் ஆனார்?’ என்று கேட்டார். 

அமர்ந்திருந்த காளி மன்னன் எழுந்து நின்று செல்லாத்தாக் கவுண்டரைப் பார்த்து, எல்லைக் காவல் ஆட்சி நடத்துகிற நமது வேட்டுவ குலப் பங்காளிகள் பதினெட்டு பேர் ஆளுகிற பகுதிகளை பதினெட்டு நாடுகள் என்று அழைக்கிறோம். அந்த நாடுகளுக்கு நான் தலைவனாக இருப்பதால் மன்னன் என்ற பட்டம் எனக்கு உண்டல்லவா; அது போல் என்னைப் போன்ற ஒன்றிரண்டு சிற்றரசுகளைத் தன் ஆதிக்கத்தில் வைத்துள்ள உறையூர்ச் சோழன்; “மாமன்னன் எனத் தன்னை அழைத் துக் கொள்கிறான். அது போகட்டும் என்ன எழுதப்பட் டுள்ளது ஓலையில்? முழுவதையும் படியுங்கள்!” என்றபடி மண்டபத்துக்குள் உலவிடத் தொடங்கினான். 

“குன்றுடையார் மக்கள் பொன்னர் சங்கர் எனும் இரு இளைஞர்களின் வீரம் பற்றிக் கேள்வியுற்று மகிழ்ச்சி அடைந் தோம். அவர்கள் தீரத்துடன் போராடி அவர்தம் குடும்பத்திற்கு உரிமையுடைய வளநாட்டைக் கைப்பற்றியிருப்பது எந்த வகை யிலும் குற்றமுடைய ஒன்றாகக் கருத முடியாததாகும். உரி மையை மீட்பதற்குப் போரிடுவோர்க்கு உதவிடுவது உறையூர்ச் சோழ அரசின் பொறுப்பு என உணர்ந்த காரணத்தினாலேயே உறையூர்ப் படையை பொன்னர் சங்கருக்குத் துணையாக அனுப்பினோம். எமது படையின் துணையுடன் அந்த இளைஞர்கள் பெற்றுள்ள வெற்றி போற்றத் தகுந்தது. எனவே அவர் களை வளநாட்டு ஆட்சிக் காவலர்களாக அங்கீகரிப்பதற்கு உறையூர் அரசு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினை நிறை வேற்ற; நிகழும் ஆவணி இருபது ஞாயிற்றுக் கிழமையன்று உறையூர் அரண்மனையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொன்னர் – சங்கரை சிறப்பித்து, வளநாட்டின் நாட்டுக் காவல் ஆட்சி அங்கீகாரம் வழங்கும் அந்த விழாவுக் குத் தங்கள் வருகையும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நிமித் தமே இந்த அழைப்பு அனுப்பப்படுகிறது.” 

ஓலையைப் படித்து முடித்த செல்லாத்தாக் கவுண்டர், காளி மன்னனின் முகத்தை நோக்கினார். தனது உயிர் குடிப்பதற் காகவே பிறந்துள்ள பொன்னர் சங்கருக்கு பக்க பலமாகப் படையனுப்பியது மட்டுமல்ல; தனக்குத் துரோகம் செய்து விட் டுப் போன மாயவரின் வஞ்சக வலையில் வீழ்ந்து விட்டது மட்டுமல்ல; தனது படை வலிமையாலும் செல்வாக்கினாலும் கட்டிக் காக்கப்பட்ட வள நாட்டு ஆட்சியை அபகரித்த அந்தப் பொடியன்களை ஆட்சிக் காவலர்களாகவும் அங்கீகரிக்கப் போகிற செயலுக்கு விழா எடுத்து, அந்த விழாவுக்குத் தனக்கு அழைப்பும் அனுப்பி மிகவும் புண்படுத்தி விட்டதாகக் கருதிய காளி மன்னன் கையைத் தூணில் அறைந்து கர்ச்சனை செய்து உறுமினான். 

“நானும் போகப் போவதில்லை. நம்மைச் சார்ந்த பதி னெட்டு நாட்டு வேட்டுவ குல ஆட்சிக் காவலர்களையும் உறையூர் விழாவுக்குப் போகாமல் தடுத்து விடுகிறேன்” என்று காளி மன்னன் ஆங்காரமாகக் கத்தியதைத் தனக்கு மிகவும் சாதகமாக எடுத்துக் கொண்டு செல்லாத்தாக் கவுண்டர் தனது வழக்கமான தூபம் போடும் பேச்சைத் தொடங்கினார். 

“ஆமாம்; அப்போதுதான் உறையூர் சோழனுக்கும் கொஞ் சம் உறைக்கும். மாயவரைப் பெரிதாக மதித்து பொன்னர் சங்கருக்குப் படையுதவி புரிந்ததால் அல்லவா தலையூரின் நட் பையும் அத்துடன் தலையூரைச் சார்ந்த பதினெட்டு நாட்டுத் தலைவர்களின் நட்பையும் இழக்க வேண்டியதாயிற்று என்ற மனக் கலக்கம் உறையூர்க்காரனுக்கு இப்போது ஏற்பட்டால் தான் இனி எதிர்காலத்திலாவது ஒழுங்காக இருப்பான். அது மட்டுமல்ல; ஏ, அப்பா! தலையூர்க்காளி எவ்வளவு தன்மான முள்ள வீரனாக விளங்குகிறான் என்று சோழநாட்டில் உள்ள குடி மக்கள் அனைவரும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதுக்குள்ளாகவாவது புகழ்ந்து பாராட்டுவார்கள்.” 

செல்லாத்தாக் கவுண்டர் தலையூர்க்காளியை இப்படி வான ளாவப் போற்றிப் பேசியே தனது செல்வாக்கை அந்த அரண் மனையில் உயர்த்திக் கொண்டிருப்பவர் என்பதை அறியா மலே அவர் மீது அபார நம்பிக்கையும் மதிப்பும் கொண்டுள்ள தலையூர்க்காளி, ”ஆமாம்!” என்பது போலத் தனது கொத்து மீசையைத் தடவிக் கொண்டு புன்னகை புரிந்தான். அத்துடன் விடவில்லை செல்லாத்தாக் கவுண்டர். 

“நாம் விழாவுக்குப் போகாமல் இருந்தால் மட்டும் போதாது. அந்த விழாவில் முக்கிய கதாநாயகர்களாகக் கலந்து கொள்ளப் போகும் பொன்னர் சங்கர் என்னும் பொடிப்பயல்களை உறையூரில் எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும்.” 

“உறையூர் விழாவில் அவர்களை அவமானப்படுத்துவதா? அது எப்படி முடியும்?” என்று தனது புரவலரான கவுண்ட ரைப் பார்த்துக் காளி மன்னன் கேட்டான். 

”உறையூர்க் கோட்டையின் வாயில் காக்கும் வீரர்களுக்குத் தலைமை வீரனாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் நமது தளபதி பராக்கிரமனின் தம்பி விக்கிரமன் என்பதை மறந்து விட வேண்டாம். பொன்னர் சங்கரை அவமானப்படுத்தி உறையூர்ச் சோழனுக்குப் பகைவர்களாக்க விக்கிரமன் மூலம் வழி காண வேண்டும். அந்த வேலையைப் பராக்கிரமன் இப் போதே செய்து முடிக்க வேண்டும். வேறொன்றுமில்லை; தம்பி விக்ரமனுக்கு அண்ணனிடமிருந்து ஒரு தகவல் போனாலே போதுமானது” என்று கூறிய செல்லாத்தாக் கவுண்டர், பராக் கிரமனைப் பரிவுடன் நோக்கி ‘என்ன தளபதியாரே! நான் சொல்வது சரிதானா?” எனக் கேட்டார். 

“உறையூரில் நமது ஆளாகத்தானே விக்ரமனையே விட்டு வைத்திருக்கிறேன். அதனால் கவலை வேண்டாம். இன்றைக்கே அவனுக்குச் செய்தி அனுப்பி விடுகிறேன்” என்று பராக் கிரமன்; அந்தப் பணியை முடித்து விட்டது போலவே பதில் கூறினான். 

அதுவரையில் வாய் திறவாமல் கவனித்துக் கொண்டிருந்த மாந்தியப்பன் “எல்லாமே நன்மைக்குத்தான் நடைபெறுகின் றன என்று துள்ளிக் குதித்து எழுந்தான். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் காளி மன்னன் ஆவலுடன் எதிர்பார்த்தான். 

“அருக்காணித் தங்கத்தைத் தூக்கிக் கொண்டு வர வேண் டும்; அவளிடமிருக்கும் மரகதப் பச்சை மாணிக்கக் கிளி பற் றிய ரகசிய இடத்தை அறிய வேண்டும்; அவளையும் தலையூ ரின் ராணியாக்கி விட வேண்டும் என்று சொன்னேன் அல்லவா – அதற்கு வசதியாகத்தான் உறையூரில் பொன்னர் சங்கருக்கு விழா நடக்கிறது.” 

”மாந்தியப்பா! நீ என்ன சொல்கிறாய்? அருக்காணியைக் கடத்தி வரும் திட்டத்துக்கும் உறையூரில் பொன்னர் சங்கர் வரவேற்கப்படுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?” 

சந்தேகம் கண் பார்வையில் மிதந்திட காளி மன்னன் கேட்டான். 

“நிறையத் தொடர்பு இருக்கிறது. பொன்னரும் சங்கரும் உறையூர் போகும் நேரத்தில் வள நாட்டு அரண்மனையில் நமது திட்டத்தை மிகச் சுலபமாக நிறைவேற்றி விடலாம் அல் லவா? கடவுளாகப் பார்த்து அந்தப் பொடியன்களை உறையூ ருக்கு அனுப்பி வைக்கிறார். அந்தச் சமயத்தை நாம் நழுவ விடாமல் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும். 

இப்போது தலையூர் மன்னனுக்கு ஒரு புதிய தெம்புடன் கூடிய நம்பிக்கை பிறந்தது. 

“ஆமாம்! மாந்தியப்பன் சொல்வதும் சரிதான். வள நாட்டில் பொன்னர் சங்கர் இல்லாத பொழுதுதான் எதிர்ப்பு அதிகமின்றி நமது திட்டம் வெற்றி பெறும்.” 

காளி மன்னன் அந்த வெற்றியைக் குறித்து அழுத்தம்திருத்த மாகப் பேசினான். மாந்தியப்பன், தனது அற்புதமான மூளைத் திறத்தை தலையூர்க்காளி மன்னன் மேலும் பாராட்ட வேண்டு மென்று விரும்பினான். 

“என் மூளை மிக வேகமாக வேலை செய்கிறது. எனது தந்தையின் யோசனைப்படி உறையூரில் பொன்னர் – சங்கர் அவமானப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு உறையூர்ச் சோழன் அக்களதேவன் மீதுதான் கோபம் ஏற்படும். சிறுவர்களான படியால் சீறிக் கிளம்புவர். அதன் விளைவாக உறையூர்ச் சோழன் உறவு முறியும். அப்படி நடந்து விடுமானால் அந்தப் பொடியன்களுக்குப் படை உதவி செய்ய பிறகு எவன் முன் வரப் போகிறான்! பலவீனப்பட்டு நிற்கப் போகிற பொன்னரும் சங்கரும் வேறு வழியில்லாமல் தலையூருக்கு வருவார் கள். அருக்காணியைக் கடத்தி வந்ததைப் பற்றி எங்களுக்கு வருத்தமில்லை. அவளையே மணந்து கொண்டு எங்களுக்கு சம்பந்தியாகி விடுக என்று பேரம் பேசுவார்கள். சம்பந்தியாகி விட்டால் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை. காளியம்மன் செம்பகுலன் மீது ஆவேசமாக வந்து எச்சரித்த அந்தப் பகை வர்கள் பொன்னரும் சங்கரும் தலையூரின் அடிமைகளாகி விடுவார்கள்.’ 

மாந்தியப்பனின் அபாரமான கற்பனையைக் கேட்டு அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்ட செல்லாத்தாக் கவுண் டர், “நீ என் மகன் என்பதை நிரூபித்து விட்டாயடா! பகை வர்களை அணைத்துக் கெடுக்க வேண்டும் என்ற ராஜ தந்திரத் துக்கு நீ கொடுத்திருக்கிற செயல் வடிவம் வெற்றி பெற்று விடுமேயானால் தலையூர்க்காளி மன்னனின் கொடியை உறை யூர்க் கோட்டையிலே கூட ஒரு காலத்தில் ஏற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” எனக் கூறி மகிழ்ந்தார். 

தந்தையும் மகனும் தங்களின் சுய நலத்துக்காக பகைத்தீயை வளர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் நட்புறவும் வைத்துள்ள தலையூர்க்காளி அவர்களது நடிப்பில் மேலும் மயங்கினான். 

“என்ன இருந்தாலும் எனக்காகத் தங்கள் குலத்தையே காட் டிக் கொடுக்கும் கோடரிக் காம்புகளாகத் திகழ்கிறார்களே! இவர்கள் செய்வது துரோகம் என்றாலும் அந்தத் துரோகம் எனக்காகவும் என் தலையூருக்காகவும் பயன்படும்பொழுது, ‘துரோகம்” என்பதை மறந்து விட்டு இவர்களுக்கு என்றைக் குமே நன்றியுணர்வுடன் கடமைப்பட்டவனாக அல்லவா நான் இருக்க வேண்டியுள்ளது! காட்டிக் கொடுப்பவர்களை நம்பக் கூடாது என்றாலும் இவர்களைப் பொருத்த மட்டும் என்னை என்றைக்குமே காட்டிக் கொடுக்க மாட்டார்கள் எனக்காக யாரையும் காட்டிக் கொடுப்பார்கள் என்பதால்தானே எனக்கு இவர்களிடம் இத்தனை பாசம்!’ 

செல்லாத்தாக் கவுண்டரையும், மாந்தியப்பனையும் மனத்துக் குள் இவ்வாறு பாராட்டிக் கொண்டே, தலையூர்க் காளி “பராக்கிரமா!” என்று கட்டளையிடும் தோரணையில் அழைத்தான். 

“வளநாட்டு அரண்மனையிலிருந்து அருக்காணித் தங்கத்தை இங்கு கொண்டு வர வேண்டியதும் – உறையூரில் பொன்னர் சங்கர் அவமானப்படுத்தப்பட வேண்டியதும் உன் முழுப் பொறுப் பில் விடப்படுகின்றன.” 

“இரண்டையும் சிறப்பாகச் செய்து முடிக்கிறேன் அரசே!’ 

“வள நாட்டிலிருந்து அந்தப் பெண்ணைத் தூக்கி வருவதற்கு உன் இயல்புக்கு ஏற்ப முரட்டுத்தனமான திட்டங்கள் எதையும் தீட்டி விடாதே! சாகசச் செயல் மூலம் அவளைக் கடத்தி வரு வதுதான் நல்ல வழி!” 

“அப்படியே செய்கிறேன்” எனப் பணிந்து வணங்கி விட்டு பராக்கிரமன் விடைபெற்றுப் புறப்பட்டான். அவன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் தலையூர் ஒற்றன் ஒருவன் ஆலோ சனை மண்டபத்துக்குள் நுழைந்து ‘அரசே! வளநாட்டிலிருந்து பொன்னரும் -சங்கரும் அவர்களுடன் மாயவரும் அலங்கரிக் கப்பட்ட ரத வண்டியில் அமர்ந்து ஓரளவே பாதுகாப்புடன் உறையூர் செல்லும் வழியில் போய்க் கொண்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது” என்றான். 

“அவர்கள் உறையூருக்கு ஏன் போகிறார்கள் என்ற தகவல் உனக்கு முன்பே எமக்குக் கிடைத்து விட்டது! பரவாயில்லை; தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை ஊன்றிக் கவனிக்கச் சொல்” எனக் கூறிவிட்டு தலையூர்க்காளி, செல்லாத்தாக் கவுண்டருடனும், மாந்தியப்பனுடனும் ஆலோசனை மண்டபத் திலிருந்து உணவருந்தும் கூடத்திற்குக் கிளம்பினான். ஒற்றனும் காளி மன்னனின் கட்டளையை நிறைவேற்ற உறையூர் நிகழ்ச்சி களைக் கவனிக்கும் பணியைத் தொடர அங்கிருந்து விரைந்து சென்று விட்டான். 

உறையூர் நகரம் முழுதும் வண்ண வண்ணத் தோரணங் களாலும் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகர மாந்தர் அனைவருமே புத்தாடை பூண்டு வீதிகளில் உற்சாக மாக நடந்து அரண்மனையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த னர். வாழை, கமுகு போன்ற மரங்கள் வீதிகளின் இரு மருங் கிலும் நீண்டுயர்ந்த மூங்கில் மரங்களுடன் இணைத்துக் கட்டப் பட்டிருந்தன. பனை, தென்னை ஓலைகளால் ஆன கூந்தல்கள் எல்லா ராஜ வீதிகளிலும் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டப் பட்டு வானத்தையே மறைக்கும் வகையில் நிறைந்து காணப் பட்டன. ஆங்காங்கு நெருக்கமாக நெற்கதிர்களைக் கயிறுகளில் முடிந்து தொங்க விட்டிருந்த காட்சி சோழ நாட்டின் வளப்பத்திற்குச் சான்று கூறிக் கொண்டிருந்தது. உறையூர் அரண்மனைக்குள்ளும் உற்சாகப் பெருவெள்ளம். கொலு மண்டபத்துக்குச் சென்றமர்ந்து அங்கு வர இருக்கும் பொன்னர் சங்கரை வரவேற்று வாழ்த்தளித்து வள நாட்டு ஆட்சிக் காவலர்களாக அவர்களை அங்கீகரிக்க இருக்கும் நிகழ்ச்சியை எண்ணியவாறு அக்கள தேவச் சோழன் அணிமணிகள் பூண்டு மகுடம் புனைந்து அந்தப்புரத்திலிருந்து புறப்பட்டான். அறுபது வயதைக் கடந்தாலும் கூட நரைதிரை விழாமல் உடற் கட் டுடன் கம்பீரமாகத் தோற்றமளித்த அக்கள தேவனை இருபுற மும் மெய்காப்பாளர் சூழ கொலு மண்டபம் நோக்கி அழைத் துச் சென்றனர். பட்டு விரித்த தரையில் சோழன், அவனது கொடியின் சின்னமான புலியின் நிமிர்ந்த நோக்குடன் நடை போட்டுக் கொண்டு வந்தான். 

கொலு மண்டபத்தில் குறு நில மன்னர்கள் பலரும் வீற்றிருந் தனர். அவர்களையன்னியில் மாராயன், பேரரையன், அரை யன், மூவேந்த வேளான், தொண்டைமான், பல்லவராயன், காலிங்கராயன், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், வாணகோவரையன், மாவலி வாணராயன், விழுப்பரையன், மழவரையன், சோழகோன் போன்று வழிவழியாக சோழ நாட்டுக்குரிய பட்டங்களை அரசிடமிருந்து பெற்ற அரசின் அதிகாரிகள் பலரும் அந்த அவையில் அமர்ந்திருந்தனர். கிராம அவைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், கிராமப் பணிகளை நிறைவேற்றும் மத்தியஸ்தன், கரணத்தான், பாடி காப்பான், தண்டுவான் போன்றோரும் குழுமியிருந்தனர். 

அக்கள தேவன் மண்டபத்திற்குள் நுழைந்து புலிச் சின்னம் பொறித்த தங்க ஆசனத்தில் அமரும் வரையில் அனைவரும் எழுந்து நின்று, பின்னர் வணங்கி அவரவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர். 

அரசனது இருக்கையை ஒட்டி, சற்றுக் கீழ்ப்புறமாக முன் வரிசையில் மூன்று இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவை பொன்னருக்கும் -சங்கருக்கும் அவர்களுடன் வரும் மாயவருக்கும் என்பதுணர்ந்து மண்டபத்திலிருந்த எல்லோருடைய கண் களும் அவற்றையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. 

“இன்னும் ஏன் வரவில்லை?” என்பது போல அக்கள தேவச் சோழன், தனது தளபதியைத் திரும்பிப் பார்த்தான். மன்னரின் மனதைப் புரிந்து கொண்ட தளபதி கொலு மண்டபத்திலிருந்து அவசரமாகப் புறப்பட்டு கோட்டை நோக்கி நடந்தான். 

இதற்கிடையே பொன்னர் சங்கர், மாயவர் மூவரும் வந்த ரத வண்டி உறையூருக்குள் நுழைந்து விழாக் கோலம் பூண்ட வீதிகளையெல்லாம் கடந்து அரண்மனை வாசலுக்கு வந்து சேர்ந்தது. 

அந்த வாயிற்புறத்தின் அழகும், பொன்னர் சங்கரை வர வேற்பதற்காக மேலும் அலங்கரிக்கப்பட்டிருந்த விதமும் அவர் களை வெகுவாகக் கவர்ந்தது. ரத வண்டியின் சாரதி, அதனை வாயிற்புறத்துக்குள்ளே செலுத்திய போது ஆச்சரியமொன்று அவர்களுக்குக் காத்திருந்தது. அரண்மனை வாயிற் கதவு மின் னல் வேகத்தில் மூடிக் கொண்டதுதான் அந்த ஆச்சரியம்! 

வாசல் காக்கும் வீரர்களின் தலைவனான விக்ரமன் ரத வண்டியின் முன்னால் வந்து நின்றான். 

“பொன்னர் சங்கர் தானே நீங்கள்?’ 

”ஆமாம்!” 

‘உறையூரின் அடிமைகளாக அங்கீகரிக்கப்பட இருக்கிற நீங்கள் அரண்மனையின் பிரதான வாசல் வழியாக நுழையக் கூடாது. பின்புறத்தில் ஒரு வழியிருக்கிறது. அந்தப் பக்கமாகச் செல்லுங்கள்.” 

“என்ன?” 

“இது சோழ மன்னர் உத்திரவு!” 

சங்கர் புயலானான்! ‘இது சகிக்க முடியாத அவமானம்! மாயவரே! இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது!” என்று உரக்கக் கூவினான். ‘பொறு தம்பி!” என்று சங்கரை அடக்கினான் பொன்னர்! 

மாயவர், ரத வண்டிக்கு முன் நின்ற விக்ரமனை உற்று நோக்கினார். பிறகு சங்கரைப் பார்த்துச் சொன்னார். 

“இது உறையூரின் உத்திரவு இல்லை! தலையூரின் சூழ்ச்சி!” 

“அப்படியானால்?” என்று உறுமினான் சங்கர்! 

“தடையை மீறலாம்!” என்றார் மாயவர். 

“மீற விடமாட்டோம்!” என்று பயங்கரமாக பயமுறுத்தி னான் விக்கிரமன். பயமுறுத்தியது மட்டுமல்ல பல நூறு வீரர் களைச் சேர்த்துக் கொண்டு, ரத வண்டியை இப்படியும் அப் படியும் அலைக்கழித்து இறுதியாகக் கீழே உருட்டி விட்டான். குதிரைகள் மிரண்டோடின. சாரதி காயமுற்றான். பொன்னர்- சங்கர், மாயவர் மூவரும் தரையில் வீழ்ந்தனர். 

வீழ்ந்த அந்தக் கணமே சங்கர் அடிபட்ட புலியின் வேகத் தோடு அந்தக் கோட்டைக் கதவின் மீது பாய்ந்தான். அவன் பலமனைத்தும் எப்படித்தான் அவனது வலது தோளில் திரட் டப் பட்டுக் குவிந்து விட்டதோ தெரியவில்லை அந்தத் தோளினால் கோட்டைக் கதவை ஒரு மோது மோதினான். 

கதவு மூன்று நான்கு பகுதிகளாகப் பிளந்து சிதறித் திறந்து கொண்டது. 

அந்த ஒலி அக்கள தேவனின் அத்தாணி மண்டபத்துக்குள்ளே பெரும் இடி விழுந்தது போன்ற ஒலியாகக் கேட்டது. 

கோட்டைக் கதவை உடைத்துக் கொண்டு பகைவர்கள் யாரோ நுழைந்து விட்டனர் என்று ஒரே பரபரப்பு! 

‘ஆ!” எனச் சினந்து எழுந்தான் அக்கள தேவச் சோழன்! 

34. அவையில் நடந்த அங்கீகார விழா! 

உறையூரிலிருந்து செய்திகளை மூட்டை கட்டிக் கொண்டு வந்த ஒற்றன், தலையூர் மாளிகையின் அந்தரங்க மண்டபத்தில் காளி மன்னனிடம் அனைத்தையும் விபரமாகச் சொல்லத் தொடங்கினான். 

“கோட்டைக் கதவு எதிரிகளால் உடைக்கப்படவில்லை என்பது சில நொடிகளுக்குள் அக்கள தேவச் சோழருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. நமது விக்கிரமன் எண்ணிச் செயல் பட்டது வேறு! ஆனால் நடந்து விட்டதோ வேறு! கோட்டை யின் பிரதானக் கதவைச் சாத்தி பொன்னர் சங்கரை அவ மானப்படுத்தினால் அவர்கள் சினந்து கொண்டு திரும்பிச் செல்வார்கள். சோழனுக்கும் அவர்களுக்கும் பகை வளரும் என்பதுதான் திட்டம். ஆனால் அந்த மாயவர் விக்கிரமன் யார் என்பதைப் பொன்னர் – சங்கருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அதனால் நூறு யானைகளின் பலத்தோடு அந்த சங்கர் கோட் டைக் கதவைத் தனது மத்தகம் போன்ற தோளினால் மோதிச் சிதற அடித்து விட்டான். சோழர் தளபதி கோட்டை வாயிற் புறத்துக்கு வந்தவுடனேயே மாயவர் அவர் காதில் ஏதோ சொன்னார். விக்ரமனின் உத்திரவு கேட்டு பொன்னர் சங்கர் வந்த ரதத்தை உருட்டி விட்ட வீரர்கள்; திடீரென மாறி தளபதியின் உத்திரவுப்படி அதே விக்ரமனைச் சூழ்ந்து கொண்டு அவன் கைகளில் விலங்கிட்டுச் சிறைச்சாலைக்கு இழுத்துச் சென்றார்கள். 

ஒற்றன் இதைச் சொன்ன போது, தலையூர்க் காளியின் கண்கள் நெருப்புத் துண்டங்களாயின. 

“என்ன? விக்ரமனைச் சிறையில் போட்டு விட்டார்களா? அவனை விசாரணை கூடச் செய்து என்ன. நடந்தது என்று அறிந்திட சோழ மன்னன் நினைக்கவில்லையா?’ என ஆத்தி ரத்துடன் கேட்டான். ஒற்றனோ அதற்கு நிதானமாகப் பதில் அளித்தான். 

”அரசே! உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மைக்கு எதற்காக விசாரணையென்று எண்ணியிருக்கக் கூடும். எத்த னையோ விசாரணைகளில் உண்மைக் குற்றவாளிகள் விடுவிக் கப்பட்டு விடுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடு கிறார்கள். இது நம்முடைய மனச்சாட்சிக்கே தெரிந்த விஷயம்; விக்ரமன் குற்றவாளி என்பது! நமது நாட்டில் நமது கோட்டை யின் தலைமைக் காவலன் ஒருவன் இவ்வாறு நடந்து கொண் டிருந்தால் என்ன செய்திருப்போம்?” 

யோசிக்காமல் பதில் சொன்னான் காளி மன்னன்; “தலையை வெட்டி எறிந்திருப்போம்!” என்று! 

“அதனால் சோழ நாட்டில் நமது விக்கிரமனுக்குக் கொடுக் கப்பட்ட தண்டனை மிகக் குறைவானது என்பது புரிகிறதல் லவா அரசே!” 

மிகப் பணிவாகவும் குழைந்தும் நெளிந்தும் ஒற்றன் பேசிய தால் தலையூர்க்காளி; அவன் தனக்கு அறிவுரை கூறுகிறானே யென்று கருதி பொங்கி எழவில்லை. காளி மன்னன் அமைதி யாகச் சிந்திக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட ஒற்றன்; அதுதான் சமயமென்று கருதி காளி மன்னன் சென்று கொண்டிருக்கும் பாதையிலிருந்து சற்று வேறு திசையில் அவ னைத் திருப்பலாமென்று நம்பிக் கொண்டு தொடர்ந்து பேசினான். 

“நான் உங்கள் ஒற்றன். உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்ட பணியாள். வேட்டையாடும்போது நீங்கள் வீசும் வேலோ, விடும் அம்போ -நேராகச் சென்று நீங்கள் வைத்த குறியின் மீது பாயும்! நானோ ஒற்றன்! நேராகப் பாயும் வேலோ அம்போ அல்ல! வளைந்து வளைந்து சென்றும், ஒளிந்து ஒளிந்து சென்றும் வன விலங்குகள் எங்குள்ளன என்பதை மோப்பம் கண்டு அறிவிக்கும் நாயைப் போன்றவன். எனவே என் மூலம் கிடைக்கும் செய்திகளுக்குத் தாங்கள் முக்கியத் துவம் அளிக்க வேண்டும்.” 

“இப்போது முக்கியத்துவம் அளிக்காமலா இருக்கிறேன். ஏன் உனக்கு இந்தச் சந்தேகம்? எதையும் என்னிடம் ஒளிக் காமல் சொல்லலாம்!” 

“சொல்லலாம் – ஆனால் தாங்கள் அதை நம்புவது என்பது எளிதான காரியமல்லவே! மனம் திறந்து தங்களிடம் பேசியதால்தானே மாயவருக்கும் தங்களுக்கும் மனக்கசப்பே ஏற்பட்டு அவர் நம்மிடமிருந்து பகையாளிகளுக்கே உறவாகி விட்டார்.” 

“மாயவர் விஷயமே வேறு! என்னுடைய ஒவ்வொரு நட வடிக்கையிலும் குறுக்கிட்டுத் தடுத்துக் கொண்டேயிருந்தார். எனக்குத் துணையாக இருந்து எனது விரோதிகளை வீழ்த்த வேண்டிய பொறுப்பில் இருந்தவர் வேண்டாத யோசனை களைச் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?” 

“அதனால்தான் நானும் எதையும் வெளிப்படையாகச் சொல்ல பயப்படுகிறேன் அரசே! ஆனால் ஒன்று; என் உயிரை விட நான் ஆற்ற வேண்டிய கடமையை நான் உயர்வாகக் கருதுவதால் தங்களிடம் சொல்லிவிட வேண்டுமென்ற துணி வும் எனக்கு ஏற்படாமல் இல்லை” 

“அஞ்சாமல் சொல்லலாம். அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் என்னைப் பொறுத்தது. எனக்கு ஒரு நம்பிக்கையிருக்கிறது. நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளா விட்டால் நீயும் அந்த மாயவரைப் போல எனக்குத் துரோகம் செய்து விட்டுப் போய்விட மாட்டாய் என்று திடமாகவே நான் நம்பியிருக்கிறேன்.” 

“அரசே! மோப்பம் பிடித்து வன விலங்குகளைக் காட்டும் வேட்டை நாய் என்று என்னைச் சொல்லிக் கொண்டேன் அல்லவா?” 

”ஆமாம்!” 

“இந்த வேட்டை நாய் மோப்பம் பிடித்துத் தங்களுக்கு அடையாளம் காட்டும் இரண்டு மிருகங்கள் மனித உருவில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.” 

ஒற்றன், யாரைச் சொல்லப் போகிறான் என்பதை ஓரளவு உணர்ந்து கொண்ட காளி மன்னன்; ஒற்றனின் வாயிலிருந்தே அந்தப் பெயர்களை வரவழைக்கலாமே என்ற கருத்துடன்; 

“நீ யாரைச் சொல்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு விடையளிக்க ஒற்றன் முனைந்த போது அந்தரங்க மண்டபத் திற்குள் யாரோ வரும் ஓசை கேட்டது. காளி மன்னனும், ஒற்றனும் திரும்பிப் பார்த்தனர். செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் வந்து கொண்டிருந்தனர். காளி மன்னனுக்கு பயம்; ஒற்றன் ஏதாவது துணிச்சலாக உளறி விடப் போகி றான் என்று! அதனால் அவன் வாயை அடைக்க மிகுந்த சாதுர்யத்தோடு பேச்சின் திசையை மாற்றினான். திசை மாற் றப்பட்டதே தவிர, ஒற்றனுக்கச் சொல்லித் தெளிய வேண்டிய பதிலை அவன் அளித்து விட்டான். 

“பாரதத்திலே, துரியோதனன் – சகுனி இவர்களைப் பற்றித் தெரிந்திருந்தும் கர்ணன் கடைசி வரையில் அவர்களது பேச் சையே கேட்டுக் கொண்டிருந்தான். காரணம் என்ன தெரியுமா? அவனது இளமைப் பருவத்தில் துரியோதனன் கூட்டத்தார் தான் அவனுக்கு ஆதரவாக இருந்தார்கள். அவனை அங்க தேசாதிபதி ஆக்கினார்கள். அவர்களுக்கு நன்றிக் கடன் கழிப் பதற்காகக் கர்ணன் அவர்கள் கிழித்த கோட்டைத் தாண்டாமல் இறுதி வரையில் வாழ்ந்தான். அவர்களுக்காகவே வீழ்ந்தான்.” 

“என்ன திடீரென்று மகாபாரத உபன்யாசம் நடக்கிறது? அதுவும் ஒற்றரிடம்?” என்று செல்லாத்தாக் கவுண்டர் சிரித்துக் கொண்டே கேட்டார். 

“ஒன்றுமில்லை! பராக்கிரமன் தம்பி விக்ரமனை உறையூர்ச் சோழன் சிறையில் போட்டு விட்டதைப் பற்றி ஒற்றன் கவ லைப்பட்டதற்காக ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; கடமையைச் செய்ததற்காக கர்ணன் உயிரையே விட்டு விட வில்லையா; என்று!” 

செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் திகைப்புற்று; “என்ன? விக்ரமன் சிக்கிக் கொண்டானா?” என ஒரே குரலில் அலறினர். 

“ஆமாம் மிச்சமுள்ள செய்திகளையும் ஒற்றன் சொல்லட்டும்” என்று காளி மன்னன் கூறவே; ஒற்றனுக்கு இயல்பாகவே ஏற் பட்ட சலிப்புடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, உறை யூர் நிகழ்ச்சிகளை விவரித்தான். 

“இனிய வரவேற்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட சம்பவத் திற்காக உறையூர் அரசு மிகவும் வருத்தப்படுகிறது என்று அக் கள தேவச் சோழர் அவையிலேயே தெரிவித்தார். பொன்ன ரும் சங்கரும் மாயவரும் கொலுமண்டபத்தில் அவர்களுக் கென போடப்பட்டிருந்த சிறப்பு ஆசனங்களில் அமர்த்தப் பட்டனர். அந்த இரண்டு வீரர்களுடைய தோற்றத்தையும் அடிக் கடி பார்த்துப் பார்த்துப் சோழமன்னர் பூரித்துப் போனார். வளநாட்டு எல்லைக் காவல் ஆட்சித் தலைவர்களாகப் பொன்ன ரையும் -சங்கரையும் சோழ அரசு அங்கீகரிப்பதற்கான செப் புப் பட்டயம் ஒன்றை அமைச்சர் அரசரிடம் கொடுத்தார். சோழ அரசர் அதைத் தனது கரத்தில் ஏந்தியவாறு, பொன்ன ரையும் சங்கரையும் தனது அருகே வரும்படி அழைத்தார். பொன்னரும் – சங்கரும் மாயவரின் முன்னே ‘தலை தாழ்த்தி வணங்கி விட்டு அவரது வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு சோழ மன்னர் அருகில் போய் நின்றனர். அந்தக் காட்சியைக் கண்டு பரவசமுற்ற அவையினர் அக்கள தேவச் சோழ மன்னர் வாழ்க!” என்று முழங்கினர். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. பொன்னர்’ சங்கரின் தன்மான உணர்வு தலை தூக்கி நின்ற அந்த நிகழ்ச்சி என் னையே புல்லரிக்கச் செய்து விட்டது.” 

ஒற்றன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காளி மன்னன் சிரித்தவாறு “போதும்! போதும்! நீ உணர்ச்சி வசப்பட்டு விடாதே! நடந்ததை மட்டும் சொன்னால் போதும்!” என்றான். அந்தச் சிரிப்பில் சினமும் கலந்திருந்தது. 

பதற்றமடையாமல் ஒற்றன் நிதானமாக; உறையூர்க் கொலு மண்டபத்தில் மேலும் என்ன நடந்தது என்பதை விவரித்தான். 

“செப்புப் பட்டயத்தை அக்கள தேவச் சோழர் கையில் வைத்துக் கொண்டே பொன்னர் – சங்கரையும் அவையோரை யும் பார்த்துப் பேசினார்.” 

“என்ன பேசினார்? என்ன நடந்தது?” 

“பொன்னர் சங்கரின் வீர தீர பராக்கிரமம் பற்றி மாய வர் விளக்கியதோடு, இவர்களின் தந்தை குன்றுடையாருக்கு நியாயமாகச் சேர வேண்டிய நாட்டுரிமை குறித்தும் நம்மிடத் திலே எடுத்துக் கூறினார். அதன் பொருட்டே நமது சோழர் படை பொன்னர் – சங்கருக்குத் துணையாக அனுப்பப்பட்டது. அதுவுமன்னியில் வளநாட்டைக் காவல் ஆட்சி புரிந்து வந்த செல்லாத்தாக் கவுண்டரும், அவருக்குத் துணையாக இருக்கும் தலையூர்க்காளி மன்னனும் நமது சோழ மண்டிலத்துக்கு அடங்கியிருப்பவர்களைப் போலக் காட்டிக் கொண்டாலும் கூட அது வெறும் நடிப்பு என்பதை நாம் உணர்ந்து விட் டோம். நமது ஆட்சிக்கு அவர்கள் மதிப்பளிக்காது நடந்து கொண்டதால் கூட நமக்கு வருத்தமில்லை. அவர்களின் ஆட் சிக்குட்பட்ட மக்கள் படுந்துயருக்கு அளவேயில்லை. விவசாயிகள், தொழிலாளிகள் வணிகர்கள் எனப் பலதரப்பட்ட பிரி வினரும் துயர வாழ்வே மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. நீர் வளங்குன்றி நில வளம் நசித் துப் போய் வறுமையின் பிடியில் குடி மக்கள் வாடுவதைப் பற்றிச் சிறிதும் சலனமடையாமல், தங்களின் ஆடம்பரமான கோலாகலக் கேளிக்கை வாழ்க்கையிலேயே வள நாட்டு அர அதற்குத் தோழனாக தலையூர் அரசும் இருப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். அதனால்தான் மாய வரின் வேண்டுகோளை நாம் தயங்காமல் ஏற்றுக் கொள்ள நேரிட்டது. நமக்கு நாடு பிடிக்கும் ஆசை கிடையாது. நமது சோழர் குலத்தைப் பொறுத்தவரையில் நமது மூதாதை இராஜ ராஜ சோழர், இராஜேந்திர சோழர் இவர்களெல்லாம் கடற் படை கொண்டு கடாரம் வரை சென்றார்கள். வென்றார்கள். இலங்கைத் தீவிலும் தமிழ் மக்களைக் காக்க அவர்களின் கடற் படை சென்று வெற்றிக் கொடி நாட்டியதுண்டு. இப்படிப் பரந்து விரிந்திருந்த சோழ சாம்ராஜ்யம் இறுதியாக மூன்றாம் இராஜேந்திர சோழருக்குப் பிறகு சாம்ராஜ்ய அந்தஸ்தை இழந்து விட்டது என்பதை அவையோர் அறிவீர்கள். அதன் பின்னர் சோழ மண்டிலம் பல பகுதிகளாகப் பிரிந்தது. அவற் றில் ஒரு பகுதியே நமது உறையூரின் ஆளுகைக்குட்பட்ட பகுதி. இந்தப் பகுதிக்கு அடங்கியது தலையூர் எனினும் தலையூரையும் அதனைச் சார்ந்த பதினெட்டு வேட்டுவர் குல நாடுகளையும் ஓரளவு சுதந்திரத்துடன் இயங்க நாம் சம்மதித்திருக்கிறோம். தலையூர் நாட்டின் பக்க பலத்துடன் இருந்தாலும் கூட வள நாட்டு அரசு என்பது நமது உறையூர் அரசைத் தனது பேரர சாகக் கொண்டு இயங்க வேண்டியதாகும். நமது அதிகார வரம்பைக் கடுமையாகக் கடைப்பிடிக்காத காரணத்தால் வள நாடு, தனது விருப்பம் போல் ஆட்சி நடத்தி மக்களின் வெறுப்பையும், நமது வெறுப்பையும் சம்பாதித்துக் கொண் டது. இப்போது அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டு வளநாட்டுப் பரிபாலனம் குன்றுடையாருக்கும் அவரது குமாரர்களுக்கும் கிடைத்திருக்கிறது. படையெடுப்பின் மூலம் பொன்னரும் சங்கரும் வள நாட்டை மீட்டிருந்தாலும் கூட, அவர்களை அந் தப் பகுதியை ஆளுகின்ற பொறுப்புக்கு உரியவர்களாக்க சோழ நாட்டின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரத்தைத்தான் இந்த அவையில் உங்கள் அனைவரின் நல்லாசிகளுடன் வழங்கப் போகிறேன்”

சோழ மன்னர் ஆற்றிய உரையை ஒரு எழுத்து விடாமல் ஒற்றன் கூறிக் கொண்டிருந்த போது தலையூர்க்காளி குறுக்கிட்டு; 

“இந்த ராமாயணமெல்லாம் எதற்கு? நடந்ததை சீக்கிரம் சொல்!” என்றான். 

“அரசரிடம் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டுமல்லவா? சோழ மன்னர், தனது பேச்சை முடிக்காமல் தன் கையிலிருந்த செப்புப் பட்டயத்தை பொன்னர் சங்கர் இருவர் கைகளிலும் கொடுத்தார். அவர்களும் மிகவும் மரி யாதையுடன் அந்தப் பட்டயத்தைப் பெற்றுக் கொண்டனர்.” 

“அது சரி; ஏதோ அதிசயம் நடந்தது? தன்மான உணர்வு தலை தூக்கியது; என்றாயே அது என்ன?” 

அவசரப்பட்டான் தலையூர்க்காளி! 

ஒற்றன், “இதோ சொல்லி விடுகிறேன்” என்று கூறி காளியைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டான். 

“உங்களிருவரையும் வள நாட்டு ஆட்சிக் காவலர்களாக அங்கீகரிக்கும் இந்தப் பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளவைகளை ஊன்றிப் படித்து அதன்படி நடந்து கொள்வீர்களாக” என்று அக்கள தேவச் சோழர் சொன்னதுமே சங்கரின் முகம் மாறிப் போய் விட்டது. அவன் புன்னகை எப்படியோ மறைந்து போய் விட்டது. 

”உம்; பிறகு?” என்றான் தலையூர்க்காளி ஒற்றனிடம்! 

“சோழ மன்னரே அந்த செப்புப் பட்டயத்தில் உள்ள குறிப்புகளை பொன்னர் – சங்கருக்கு விளக்கிச் சொன்னார்!” 

“என்ன குறிப்புகள்?” 

காளி மன்னனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. 

“வள நாட்டுக் குடிமக்களை வாட்டம் சிறிதுமின்றி வாழ வைப்போம். குடி மக்களின் குறைபாடுகளை அறியவும், அது குறித்து ஆவன செய்யவும் கிராம சபைகளை அமைத்துச் செயல்படுவோம். நல்லோரை வாழ வைப்பதும், தீயோரை அடக்கியொடுக்கித் திருத்துவதும் கிராம சபையின் கடமை யெனக் கொண்டு வள நாடு முழுதும் அதன் வழிக் காரியங் கள் ஆற்றுவோம். ஏரி, குளம், ஊருணி முதலிய நீர் நிலை களைப் பாதுகாத்து விளைவு பெருக்கிட ஏரிவாரியங்களை நியமித்தும், புன்செய் மற்றும் தோட்டங்களைப் பராமரிக்க தோட்ட வாரியங்களை நியமித்தும், பொன் நாணயங்களை ஆராய்ந்திட பொன் வாரியங்களை நியமித்தும், நிலவரி மற் றும் பிற வரிகளை வசூலித்து அரசுக்குச் செலுத்திட பஞ்ச வார வாரியங்களை நியமித்தும், இவையன்னியில் கழனி களைக் கவனிக்க கணக்குகளை ஆய்வு செய்ய அலுவலர் களை நியமித்தும், இந்த நியமனங்களைத் தேர்வு மூலம் செய் தும், குடி மக்களின் நலன்களைப் பேணுவோம். சோழ அர சின் நிர்வாகப் பணிகளுக்காகச் செயல்படும் முறைகளைத் தவறாது பின்பற்றி, வளநாட்டு மக்களை வளமான வாழ்வு நலமான வாழ்வுக்குரியவர்களாக ஆக்குவோம் எனச் சூளு ரைப்பதுடன், இந்த நிர்வாகப் பணிகள், மற்றும் பாதுகாப்புப் பணிகள், கல்விப் பணிகள், இஃதன்னியில் எஞ்சிய பணிகள் அனைத்தையும் உறையூர்ச் சோழ அரசின் அனுமதி பெற்று நிறைவேற்றுவோம் என வாக்குறுதியும் வழங்கி; உறையூர்ச் சோழருக்கு ஆண்டுதோறும் முறையாகக் கப்பம் செலுத்து வோம் என்றும் இந்த அவையில் சத்தியம் செய்கிறோம்; என்று அக்கள தேவச் சோழர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல பொன்னர் கூடச் சற்றுப் பொறுமையாக இருந்தான். அவன் முகம் கறுத்துப் போயிருந்ததே தவிர ஆத்திரத்தை அவன் விழிகளில் காண முடியவில்லை. ஆனால் சங்கர் எரி மலையைப் போலப் பொங்கினான். குமுறினான். பொன்னர் கையிலிருந்த அந்த செப்புப் பட்டயத்தை வெடுக்கென்று இழுத்து “சே! இது என்ன எங்களை அங்கீகரிக்கும் பட்டயமா? அல் லது உறையூருக்கு எங்கள் வளநாட்டை அடிமையாக்கும் கரு வியா?” என்று கேட்டுக் கொண்டே கொலு மண்டபத்தில் வீசி எறிந்தான்.” 

இந்த நிகழ்ச்சியை ஒற்றன் சொல்லி முடித்ததும் – தலையூர்க் காளி ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்; அப்படியா? அதன் பிறகு என்ன நடந்தது?” என்று மெத்தப் பரபரப்புடன் கேட்டான். 

“அந்த அவையில் உள்ளோர் அசைவற்றுப் போய்த் தூண் களோடு தூண்களாக நின்றனர். அக்கள தேவச் சோழர் சிலை யானார்.மாயவர் திகைத்துப் போய் நின்றார். பொன்னர். சங்கரைப் பிடித்து இழுத்து தம்பி! பொறுமையாக இரு” என்றான். 

“அதன் பிறகு?” 

“அக்கள தேவர், சிலையாக நின்ற நிலையிலிருந்து மாறி – நினைவு வந்தவராக; மெல்லப் படிகளிலிருந்து கீழே இறங்கி வந்து – அவையில் – தரையில் வீசியெறியப்பட்ட அந்த செப்புப் பட்டயத்தைத் தனது கையில் எடுத்தார். 

“எடுத்து என்ன செய்தார்?” 

“அவர் அதை எடுப்பதற்குள் சோழத் தளபதி, உடைவாளை உருவி வீரர்களுக்கு ஆணையிடவே; வீரர்கள் விலங்குகளுடன் பொன்னர் – சங்கர் இருவரையும் சூழ்ந்தனர்.” 

35. வந்தாளே ஒரு வடிவழகி 

அந்த அத்தாணி மண்டபமே அதிரும்படி அக்களதேவச் சோழர்; பொன்னர் சங்கரைச் சூழ்ந்து சென்ற வீரர்களை நோக்கி ‘நில்லுங்கள்” என்று ஆணையிட்டார். விலங்கு களுடன் சென்ற வீரர்கள் விசை முடுக்கப்பட்ட பொம்மை களைப் போல பின் வாங்கினர். செப்புப் பட்டயத்தைக் கையில் பிடித்துக் கொண்டே சோழ மன்னர், சங்கரின் அரு கில் வந்தார். சங்கரின் விழிகளில் முதலில் கிளம்பிய தீயின் ஜீவாலை தணிந்திருந்தது என்றாலும் கனல் முழுமையாக அணையாமல் இருப்பதை உறையூர் மன்னர் உற்றுக் கவனித் தார். சங்கர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கக் கூடும் என்று மண்டபத்தில் குழுமியிருந்தோர் எதிர்பார்த்தனர். அக்கள தேவர், அர்த்தம் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த் தார். பிறகு சங்கரைப் பார்த்து அமைதியாகவே பேசினார். 

“இளம் வீரனே! சோழ மண்டிலத்துக்கு சொல்லொணாத அவமானத்தை விளைவித்திருக்கிறாய்; இருந்தாலும் எனக்கு உன்மீது கோபம் இல்லை. பரிந்தூட்டும் பாலமுதத்தை தாயின் கையிலிருந்து கீழே தட்டி விடும் பச்சிளங் குழந்தையை அந்தத் தாய், தண்டிக்க முடியுமா என்ன? ஏன் தட்டி விட்டாய்? என்று அன்னை அந்தக் குழந்தையிடம் கேட்க மாட்டாள். கேட்டுப் பயனில்லை. காரணம் ; அந்தக் குழந்தை, பேசும் பரு வத்தை அடைந்திடவில்லை. ஆனால் நீ பேச முடியும். அத னால் கேட்கிறேன்; செப்புப் பட்டயத்தை இகழ்ந்துரைத்து ஏன் தட்டி விட்டாய்?” 

சோழனின் கேள்விக்குப் பதில் ஏதும் கூறாமல் அண்ணனை அழைத்துக் கொண்டு அவையிலிருந்து வெளியேறி விடலாமா என்று முதலில் நினைத்த சங்கர், அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாக நெஞ்சை நிமிர்த்தியவனாக அக்களதேவருக்கு முன்னால் சென்றான். 

“மன்னர் அவர்களே! பட்டயம் தந்தீர்களே; அதனை நாங் கள் பாலமுதமாகக் கருதவில்லை. பாஷாணம் ஊற்றித் தயா ரிக்கப்பட்ட பாயசமாகக் கருதுகிறோம். எங்கள் பகுதியில் எங் கள் மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்துக் கும் தங்கள் நாட்டின் அனுமதி பெற வேண்டும். ஆண்டு தோறும் உங்களுக்கு நாங்கள் கப்பம் வேறு கட்ட வேண்டும். இப்படியொரு அங்கீகார விழாவில் கலந்து கொள்ள நாங் கள் இங்கு வரவில்லை” 

“வள நாட்டை மீட்கப் படைத்துணை புரிந்ததை மறந்து விட்டுப்பேசலாமா? இனி என்றும் எமது நாட்டுப் படை வீரர் கள் உங்கள் நாட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பார்களே; அதெல்லாம் தேவையில்லையா?” 

“இப்படியொரு நிலை வரக் கூடும் என்று சந்தேகப்பட்டுத் தான் நான் அப்போதே மாயவரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டேன். ஆனால் அன்று மாயவர் சொன்னது வேறு; இன்று நடப்பது வேறு!” என்று பொன்னர் குறுக்கிட்டுப் பேசவே, மாயவர் அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல் திண றினார். இருப்பினும் நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே என்ற நெருக்கடிக்கு ஆளானவராய் பொன்னரையும் சங்கரையும் பார்த்து முக வாட்டத்துடன் தனது மௌனத்தைக் கலைத்தார். 

“அரசே! என் வேண்டுகோளையேற்று பொன்னர் சங்கருக்குப் பக்கபலமாக சோழப் படையை அனுப்பினீர்கள். சங்கர், மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்ற போதிலும் அப் போதே சோழப் படையைப் பயன்படுத்திக் கொள்ள பொன்னர் விதித்த நிபந்தனை; ‘படையை அனுப்பிவிட்டு அதற் குப் பதிலாக வள நாட்டை அடிமை நாடாக ஆக்கிக் கொள் ளக் கூடாது” என்பதுதான்!’ 

க்கள தேவச் சோழர் ஆச்சரியத்துடன், “அப்படியா?” என்று கேட்டார். 

“ஆமாம் மன்னவா ; நானும் அந்த நேரத்தில் எப்படியும் வளநாடு கைப்பற்றப்பட்டு செல்லாத்தாக் கவுண்டரின் ஆட்சி வீழ்ந்து – அத்துடன் தலையூர்க் காளிக்கு அந்த நாட்டின் மீதி ருந்த ஆதிக்கமும் தகர்ந்தால் போதுமென்ற நினைப்புடன் பொன்னரின் நிபந்தனையைத் தங்கள் சார்பில் ஏற்றுக் கொண்டு விட்டேன். தங்கள் ஒப்புதலைப் பெறாமல் நான் அவ்வாறு உறுதியளித்தது தவறுதான்! அதைவிடப் பெரிய தவறு என் உறுதிமொழியை பொன்னர் சங்கர் இருவரும் நம்பும்படி நான் நடந்து கொண்டது!” 

”மாயவரே! தலையூருக்கு ஒரு வகையில் வளநாடு அடிமை யாக இருந்தாலும் தலையூரும் சரி, வளநாடும் சரி; நமது சோழ ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டவைகள்தானே! அப்படி யிருக்கும் போது இப்போது நான் என்னவோ புதிதாக வள நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகிறேன் என்று இந்த இளம் வீரர்கள் நினைப்பது சரியல்லவே!” 

பொன்னர் தனக்கேயுரிய நிதானத்துடன் – ஆனால் திட்ட வட்டமாகத் தெரிவித்தான். “அடிமைத்தனம் தொடர வேண்டு மென்று ஆண்டவன் கட்டளையா? இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ள என் உள்ளம் இடம் தரவில்லை. கேடுகள் ஒழிய வேண்டும் வள நாட்டு மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் தாங்கள் எங்களுக்குத் துணை புரிந் தீர்கள் என்பது உண்மையானால் அதற்குப் பதிலாக உறையூ ருக்குக் கப்பம் கட்டுகிறவர்களாக நாங்கள் இருக்க வேண்டு மெனக் கூறுவது எங்கள் தன்மான உணர்வுக்கும் உரிமை வேட்கைக்கும் விடப்படும் அறைகூவல் அல்லவா?” 

“அப்படியானால் சோழ நாட்டுடன் வள நாட்டுக்கு எந்த வகையான தொடர்பும் இருத்தலாகாது என்பது பொன்னர் சங்கரின் கருத்தோ?” 

சோழ மன்னரின் இந்தக் கேள்வியில் அவரது மன உளைச் சல் தெரிந்தது. அதற்கு சங்கர் உடனடியாக விடையளித்து விட்டான். 

“தொடர்பே இருக்கக் கூடாதென்றால் எங்களை அங்கீ காரம் செய்யும் இந்த விழாவுக்கு வந்திருக்கவே மாட்டோம்! உறையூர், வள நாட்டை விடப் பெரிய நாடு! படை பலம் மிக்க நாடு! பரப்பளவில் மக்கள் தொகையில் எல்லாவற்றி லுமே பெரிய நாடு! இத்தகைய சோழர் நாடு; இன்றைக்கு ஆதிக்கப் பிடிப்பிலிருந்து விடுபட்டுள்ள வளநாட்டை நட்பு முறையில் அங்கீகரித்து அதன் சுதந்திரத்துக்கும் சுக வாழ்வுக் கும் உறுதுணையாக இருக்க வேண்டுமேயன்றி -அடிமையாக் கும் தன்மையில் அங்கீகாரம் அளிப்பது எம்மைப் போன்ற உரிமை வேட்கையுள்ளவர்களால் ஒப்புக்கொள்ளக் கூடியதா?” 

சோழ வேந்தனுக்கு எதிராகச் சொல்லப்பட்டது அந்தப் பதில் என்ற போதிலும் – அந்தப் பதில் கேட்டு அக்களதேவர் சீற்றம் கொள்ளவில்லை. பொன்னர் சங்கரின் விவேகம், வீரம் இரண்டையும் இணைக்கும் உரிமை தாகம் இவற்றை எண்ணிப் பார்த்து மனத்துக்குள் மகிழ்ந்து பாராட்டிக் கொண் டார். அவர்கள் மீது அவருக்கு மேலும் ஒரு படி மதிப்பு உயர்ந்தது. இருப்பினும் அவர்களது முடிவை உடனடியாக ஏற் றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். 

“அப்படியானால் நட்பு அடிப்படையிலே கூட சோழ நாடு உங்களோடு உறவு கொள்ளத் தயாராயில்லை என வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் விரும்புகிறபடி வளநாடு சுதந்திர பூமி யாக நீடிக்குமா? நீடிக்க முடியுமா? தலையூர்ப் படையும் அத னைச் சார்ந்த பதினெட்டு நாட்டுப் படைகளும் பெரும் படை யெடுப்பு ஒன்றை வளநாட்டின்மீது நடத்தினால் உங்கள் சுதந் திரம் நிலைக்குமா?” 

சங்கர் இதயத்தில் ஒரு சவுக்கடியின் மின்னல் வீச்சு.சுளீர் என்று! துடித்துப் போய் விட்டான்! 

“உறையூர் சோழருக்கு ஒன்றுரைப்பேன்! இளங்கன்றுகள் பயமறியாது துள்ளுவதாக எண்ணிட வேண்டாம்! எவருக்கோ பணிந்து, வளைந்து, குனிந்து அடிமையாக இருப்பினும் பர வாயில்லை; ஆட்சிச் சுகத்தை அனுபவித்தால் போதுமென்று நாங்கள் அலையவில்லை. எதிரிகளின் பிரளயம் போன்ற படை வரிசைகளால் தாக்குண்டு நாங்கள் பிணமானாலும் சரி; சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டே சாகிறோம் என்ற நிம்மதி மட்டும் எங்களுக்குப் போதுமானது! அதற்கு மாறாக தங்களின் படைவீரர்களின் துணையைப் பெற்று; பகையை அழித்துவிட்டு – தங்களுக்கு நாங்கள் கப்பம் கட்டுகிற அடிமை யாக இருப்பதை எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை. அப்படித் தூக்கத்தில் ஒரு கனவு கண்டால் கூட அது எங்கள் வீரத்துக்கும் உரிமை வேட்கைக்கும் பெரும் இழுக்கு மன்னரே; பெரும் இழுக்கு! அந்தக் கினவுக்குப் பிறகு நாங்கள் வாழ்வதே கூட இந்தப் பூமிக்குப் பெரிய சுமை!” 

சங்கரின் உரை அக்களதேவரை உலுக்கி விட்டது. தாவிப் பாய்ந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டார். அதே போல் பொன்னரையும் இழுத்துச் சேர்த்து அணைத்துக் கொண்டார். அவரது கண்களில் புத்தொளி! அவையோரைப் பெருமிதத் துடன் நோக்கினார்! பூரிப்பு பொங்கிடப் பேசினார்! 

“இந்த இளஞ்சிங்கங்களின் மான உணர்வு என்னை மட்டு மல்ல; உங்களனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது என்பதை அறிகிறேன். கொங்குச் சீமையின் கோபுரக்கலசங்களாகப் பொன்னரும் சங்கரும் வரலாறு படைக்கப் போகிறார்கள் என்று ஏதோ ஒரு இனந்தெரியாத உணர்வு எனக்கு நம்பிக் கையூட்டுகிறது! அவர்கள் விரும்புவது போலவே வளநாடு எல்லா உரிமைகளும் பெற்று சோழநாட்டுக்கு நட்பு நாடாகத் திகழும். எனவே இந்தச் செப்புப் பட்டய அங்கீகாரம் திரும்ப பெறப்படுகிறது. பொன்னரும் -சங்கரும் என்றைக்கும் உறை யூரின் உற்ற நண்பர்கள் என்ற முறையில் நமது நட்பு நாடு களில் ஒன்றாக வளநாடு அங்கீகரிக்கப்படுகிறது. அதற்கு அடையாளமாக அவர்களுக்கு இந்த முத்தாரங்களை அணி விக்கிறேன்” 

சோழர், தனது மார்பில் அசைந்தாடிக் கொண்டிருந்த முத் தாரங்களைக் கழற்றி இருவர் கழுத்திலும் அணிவித்தார். “பொன்னர்-சங்கர் வாழ்க!” என்று அவையோர் முழங் கினர். அப்போது மாயவர், தனிக்குரலாக ஆனால் தழு தழுத்த குரலாக அடக்க முடியாத ஆனந்தப் பெருக்கில், அக்களதேவச் சோழர் வாழ்க!” என்று கூறினார். பொன் னரும் சங்கரும் உறையூர் அரண்மனை விருந்தினர்களாக ஓரிரு நாட்கள் தங்கி விட்டுப் போகுமாறு சோழ மன்னர் கேட்டுக் கொண்டார். பொன்னர், சங்கரைப் பார்க்க சங்கர், பொன்னரைப் பார்க்க இருவரையும் பார்த்து விட்டுச் சோழர்; “நட்பு முறையில்தான் கேட்டுக் கொள்கிறேன்” என் றதும் சகோதரர்கள் இருவரும் புன்னகை சிந்தியவாறு தலை யசைத்து ஒப்புக் கொண்டனர். 

உறையூர்க் கொலு மண்டபத்தில் அந்த இளைஞர்களுக்குக் கிடைத்த சிறப்பினையும் சோழ மன்னர், அவர்கள் மீது கொண்டு விட்ட அன்பினையும் – ஒற்றன் மூலம் தெரிந்து கொண்ட தலையூர்க்காளி மன்னன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ் கினான். செல்லாத்தாக் கவுண்டருக்கும் மாந்தியப்பனுக்கும் இதயம் வெந்துகொண்டிருந்தது. 

உலைக்களத்துத் தீயில் உருவாகும் கட்டாரி, கத்திகளைப் போல வெந்துபோன அவர்களது உள்ளத்திலிருந்து சூழ்ச்சிகள் உருவாயின. தந்தையும் மகனும் போட்டி போட்டுக் கொண்டு தலையூர்க் காளியிடம் திட்டங்களைத் தெரிவித்தனர். அவர் களையும் அவர்களது திட்டங்களையும் ஒற்றனுக்குப் பிடிக்காது என்பதை அறிந்திருந்த காளி மன்னன் ஒற்றனுக்கு விடை கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தான். ஒற்றன் சென்ற பிறகு செல்லாத்தாக் கவுண்டர் மாந்தியப்பன் இருவரும் தலை யூர்க் காளியின் மூளையைச் சலவை செய்ய ஆரம்பித்தனர். 

“பொன்னர் – சங்கர் இருவரும் உறையூர் அரண்மனையில் விருந்தினராகத் தங்கியிருக்கும் இந்த அருமையான நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்ச்சியின் சிகர மான அந்த மாயவரும் பொடியன்களுடன் உறையூரில் இருப் பது நமக்கு இரட்டிப்பு வாய்ப்பாகும். சின்னமலைக்கொழுந்து, வையம்பெருமான் இருவருமே ஆரிச்சம்பட்டிக்குச் சென்றிருப் பார்கள். அந்த பயல் வீரமலை மட்டும் தான் வள நாட்டுக் காவல் பொறுப்பை ஏற்றிருப்பான். மற்றபடி அரண்மனையில் தாமரைநாச்சியும் அவளது மருமகள்கள் முத்தாயியும் பவளாயி யும்தான் இருக்கப் போகிறார்கள். அருக்காணித் தங்கத்தை தூக்கிக் கொண்டு வந்து விட இதைக் காட்டிலும் தோதான ஒரு சமயம் நமது தளபதி பராக்கிரமனுக்குக் கிடைக்கப் போவதில்லை. இன்றைக்கே பராக்கிரமனை வள நாட்டுக்குப் போகச் சொல்வது நல்லது” 

இருவரும் இணைந்து வழங்கிய யோசனையைக் கேட்ட தலையூரான்; பராக்கிரமன்தான் முன்னமே என்னிடம் உத் திரவு பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டானே! இந்நேரம் அவன் வளநாட்டில் இருப்பான்” என்றான். 

“அதுதான் இல்லை; பராக்கிரமன் இன்னமும் வளநாடு புறப்படவில்லை. வடிவழகியுடன் இருக்கிறான்” 

நமட்டுச் சிரிப்புடன் மாந்தியப்பன் இப்படியொரு தகவ லைக் கொடுத்ததும் தலையூரான் சிறிது அயர்ந்து போனான். “அது யார் அந்த வடிவழகி?” என்று ஆவல் ததும்பக் கேட் டான். தளபதி பராக்கிரமனுக்குத்தான் இதுவரை திருமணமே ஆகவில்லையே; பிறகு எப்படி ஒரு வடிவழகி வந்தாள் என்ற சந்தேகம் தலையூர்க் காளியைக் குழப்பியது! 

“வடிவழகி, பராக்கிரமனுக்கு மனைவியல்ல – ஆசை நாயகி! சுரங்கத்துக்குள் தங்கம் இருப்பது போல அவள் தளபதி மாளி கைக்குள்ளேயே இருக்கிறாள். என்னைத் தவிர இந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. நான் இப்போது சொல்லிவிட்ட தால் யாரும் தெரிந்ததாகவும் காட்டிக் கொள்ளக்கூடாது. அவளிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் தளபதி பராக்கிரமன் எங்கும் செல்வதில்லை” 

“அப்படியொருத்தியை எங்கே பிடித்தான்?” காளி மன்னன் இப்போது அந்த ஆராய்ச்சியில் இறங்கிவிட்டான். 

“அரசு காரியமாக அடிக்கடி உறையூருக்குச் சென்ற போது அந்த நடனக்காரி இவன் கண்ணில் பட்டிருக்கிறாள். கொண்டு வந்துவிட்டான்! மொண்டு மொண்டு குடிக்கிறான் அவளிடம் இன்பத்தை! அளவற்ற அழகியென்று சொல்லி விட முடியாது – ஆனால் ஆள் மயக்கி! தயவு செய்து நான் சொன்னதாகச் சொல்லிவிடக் கூடாது! இப்போதுதான் அவர்கள் இருவரை யும் பார்த்து விட்டு வருகிறேன். அதனால்தான் தீர்மானமாகச் சொன்னேன்; அவன் இன்னும் வளநாட்டுக்குப் புறப்படவில்லையென்று!” 

மாந்தியப்பன் மேலும் கொடுத்த தகவலுக்குப் பிறகு தலையூ ரானுக்குத் தனது தளபதி மீது சிறிது எரிச்சலே கூட ஏற்பட்டது. 

“ஓகோ! அவன் ஆசைநாயகியின் உல்லாச மண்டபத்தி லேயே உருகிக்கிடப்பதால்தான் தலையூர்ப்படை தோல்வியைத் தழுவியது என்ற அதிசயச் செய்திக்கு இடம் கிடைத்து விட் டது! சரி; சரி மாந்தீ! நீ மறுபடியும் போய்ப் பராக்கிர மனைப் பார்! அவன் இன்னமும் வளநாட்டுக்குப் புறப்படா மல் இருப்பதால் நான் சினமுற்றிருப்பதாகச் சொல்லி, சீக் கிரம் அவனை அங்கு அனுப்பி வை!’ 

காளி மன்னன் கூறியதைக் கட்டளையாகவே பாவித்து, மாந்தியப்பன்; தளபதி பராக்கிரமனின் மாளிகை நோக்கிப் புறப்பட்டான். 

பராக்கிரமன் மாளிகையில் மாந்தியப்பன் தாராளமாக நுழைய என்றைக்குமே தடையிருந்தது கிடையாது! காவலர்கள் கழுத்து வலிக்கக் குனிந்து அவனை வரவேற்று உள்ளே அனுப்பி னார்கள். படுக்கையறை வரையில் போய் நின்றான். வாயிற் கதவு சாத்தப்பட்டிருந்தது. தாளிட்டிருக்குமோ என்று சந்தேகத் தில் மெல்லத் தள்ளிப்பார்த்தான். கதவு திறந்து கொண்டது. முழுமையாகக் கதவைத் திறக்க அவன் விரும்பவில்லை. ஏனென் றால் உள்ளே அவர்கள் முழுமையாகத் திறந்த நிலையில் ஒரு வர் மீது ஒருவர் சாய்ந்து தழுவிக் கொண்டிருந்தனர். பராக் கிரமன் கையில் உள்ள மதுக் கிண்ணம் வடிவழகியின் பலாச் சுளை இதழுக்கும் – அவள் கையில் இருக்கும் மதுக் கிண்ணம் அவனது பெருத்த உதடுகளுக்கும் முத்தமீந்து கொண்டிருந்தன! 

“நான் இன்றே வளநாடு புறப்பட்டிருப்பேன் என்று காளி மன்னர் கருதிக் கொண்டிருப்பார்!” 

“உங்கள் நண்பர் மாந்தியப்பன் போய் எதுவும் உளறிவிட மாட்டாரே?” 

“ஏய்; வடிவழகி! அவன் எனக்கு மட்டுமா நண்பன்? உனக் கும் கூடத்தானே?” 

“அதெல்லாம் எப்போதாவதுதானே! இலையில் சோறு பரி மாறுவதற்கு முன் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஊறு காயை ஒரு விரலால் எடுத்து நாவில் தடவிக் கொள்வதில் லையா; அது போல நீங்கள் இல்லாத சமயத்தில் அவர் எனக்கு ஊறுகாய்!” 

“என்ன இருந்தாலும் அவன் கொண்டு வந்து உன் மேனி யில் குவித்திருக்கும் நவரத்தின மணிமாலைகளை என்னால் கொடுக்க முடியுமா? இன்றைக்குக் கூட அவன் வந்தது, நான் வளநாடு போயிருப்பேன் – உன்னோடு விளையாடலாம் என் றுதான்! பாவம்; நான் இருந்து தொலைத்துவிட்டேன்! ஏய் – மறைக்காமல் சொல்! நான் ஒன்றும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்னை விட அவனிடம் அதிகமாக இன்பம் – காணுகிறாயா?” 

”சே! சே! இது என்ன கேள்வி? இதற்கு நான் சுருக்கமாக ஒரு பதில் சொல்லட்டுமா?” 

”உம்! சொல்லடி வடிவு!’ 

“அவர் என்னிடம் இன்பம் காணுகிறார். நான் உங்களிடம் இன்பம் காணுகிறேன். போதுமா? இன்னும் புரியும்படி சொல்லவா?’ 

“வேண்டாம்! வேண்டாம்! நன்றாகவே விளங்கி விட்டது!” 

இந்த அந்தப்புர உரையாடல் கேட்டு மாந்தியப்பனின் முகத் தில் அசடு வழிந்தது என்றாலும் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு அங்கேயே நின்று கவனித்தான். பராக்கிரமன் சொன்னது போல அன்று அவன் அனுபவித்திருக்க வேண்டிய விருந்து – அந்த விருந்தை பாரதக் கதையில் வரும் கடோற் கஜனைப் போல பராக்கிரமன் அனுபவித்துக் கொண்டிருக் கிறான். படுத்திருக்கும் யானையின் மத்தகத்தின் மீது சாய்ந்து கிடக்கும் மானைப் போல் பராக்கிரமன் தோள் மீது அவள் சாய்ந்திருந்தாள். மதுக் கிண்ணங்கள் அடிக்கடி நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. மாந்தியப்பனோ அசையாமல் நின்று வாயில் ஊறும் உமிழ்நீரை மட்டும் “மொடக்” “மொடக்’ என்று விழுங்கிக் கொண்டிருந்தான். 

அதற்குள் காலியாகி விட்ட மதுக் குடங்களை தங்கள் கால் களால் உருட்டி விட்டனர் பராக்கிரமனும் வடிவழகியும்! 

போதை உச்சிக்கு ஏறிவிட்டது! பராக்கிரமன் அவளை இறு கத் தழுவினான் – அவள் சற்து விலகிக் கொண்டு; இரண்டு பெரிய அகல்விளக்குகளில் ஒன்றைக் காட்டி அணையுங்கள்” என்று அன்பு பொங்க ஆணையிட்டாள்! 

ஒரு விளக்கு அணைந்ததும், அவர்களின் நிழல் உருவங்கள் சல்லாத் துணியால் ஆன திரையில் இன்ப ரசக்கேளிக்கை நடத்தியதைக் காண விரும்பாமல் மாந்தியப்பன் கதவை மெது வாக மூடிக் கொண்டு கதவுக்கு வெளியே நின்றான். 

எவ்வளவு நேரம் நிற்பான் பாவம்; கால் வலி எடுத்து விட்டது. 

இறுதியாக ஒருவாறு துணிவை வரவழைத்துக் கொண்டு கதவைத் தனது விரல்களைக் சொடுக்கித் தட்டினான். 

உள்ளேயிருந்து ”யார்?’ என்று ஒரு குரல் பதற்றமுடன் கேட்டது. 

“நான்தான் மாந்தியப்பன்!” 

பிறகு சிறிது நேரம் அறைக்குள்ளிருந்து யாரும் பேசவில்லை. மாந்தியப்பன் உள்ளே நுழையாமல் கதவுக்கருகிலேயே காத்துக் கொண்டிருந்தான். அவன் மூன்று நான்கு முறை பெருமூச்சு விட்ட பின்னர் நிலை குலைந்த உடைகளுடன் பராக்கிரமனும் வடிவழகியும் கதவைத் திறந்து கொண்டு எட்டிப் பார்த்தனர். ‘உள்ளே வாருங்கள்!” என்று மொழி யுதிர்த்தும் விழியசைத் தும் வடிவழகி வரவேற்றாள். 

“இன்னும் நீ வளநாடு கிளம்பவில்லையென்று காளி மன் னன் காதுக்கு எப்படியோ செய்தி எட்டியிருக்கிறது. என்னைக் கேட்டார். எனக்குத் தெரியாது என்றேன். எதற்கும் போய்ப் பார்த்து விட்டு – தளபதி இன்னும் புறப்படாமல் இருந்தால் புறப்படுமாறு விரைவு படுத்தச் சொன்னார். அதனால் ஓடி வந்தேன்! நல்ல நேரத்தில் என்னால் இடையூறு ஏற்பட்டதற்கு மிகவும் வருந்துகிறேன்’ 

“பரவாயில்லை! பரவாயில்லை!’ எனக் கூறிக் கொண்டே பராக்கிரமன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான். அவளோ; தனக்கும் வெட்கமும் நாணமும் உண்டு என்பது போல் அழ காய்ச் சிரித்து அளவாய்த் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். 

“புறப்பட்டுப் போய் விட்டதாக காளியிடம் சொல்லி விடவா?” 

“ஓ! தாராளமாகச் சொல்லிவிடலாம்!” 

“நீ எப்போதுதான் புறப்படப் போகிறாய்?” 

“விடியற்காலையில்! என்னுடன் இளவரசியையும் அழைத் துச் செல்ல வேண்டாமா? அதனால்தான் தாமதம்!” 

“எந்த இளவரசி?” 

“சோழ நாட்டு இளவரசி!” 

“என்ன; சோழ நாட்டு இளவரசியா?” 

“ஆமாம்! ஆமாம்!” 

“உறையூர்ச் சோழனின் மகளையா?” 

“ஆமாம்; அக்களதேவச் சோழனின் மகளைத்தான்! அந்த இளவரசியைத்தான் குறிப்பிடுகிறேன்!”

– தொடரும்…

– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *