பொக்கிஷம்!




“ஏங்க! இந்த வருஷம் அட்சயத் திருதியை அன்னிக்கு நீங்க ஏதாவது நகை வாங்கித் தரீங்களா?” ஆர்வமுடன் கேட்டாள் பத்மாசனி.

“அடி அசடே ! அட்சயத் திருதியை அன்னிக்கு நகை வாங்கினாதான் ஆச்சா? ஏன், இப்படி எடுத்துக்கோயேன். என்னென்னிக்கு நகை வாங்கித் தரேன்னோ அன்னிக்கெல்லாம் அட்சயத் திருதியை ன்னு நெனைச்சி சந்தோஷப்படு!” என்றான் சுந்தரம்.
“ஆமாம். நீங்க எங்க வாங்கிக் கொடுத்தீங்க? நானா சீட்டுல சேர்ந்து மாசா
மாசம் பணம் கட்டி குருவி போல சேர்த்து தம்மாத்துண்டு மோதிரம் வாங்கினேன்.”
“ஏன்..நான் வாங்கித் தரல்லியா…போன வருஷம் நம் வெட்டிங் டேக்கு புதுசா ஒரு
செட் வளையல் வாங்கிக் கொடுத்தேனே அத மறந்துட்டியா? அதுக்கப்புறம் உன்
பிறந்த நாளன்னிக்கு பிரேஸ்லேட் கேட்டே. அதுவும் வாங்கிக் கொடுத்தேன்.நான் எதுவும் வாங்கிக் கொடுக்காத மாதிரி பேசறே?”
“இருங்க..வெட்டிங் டே வளையல் எப்படி வாங்கினது…உங்க மனசாட்சியக் கேட்டுப்பாருங்க. என்னோட உடைஞ்சு போன பழைய காசிகா மணியப் போட்டு வாங்கினது. அதேமாதிரி பிரேஸ்லேட்டும் பழச போட்டு வாங்கினோம். நீங்க ஒத்த ரூபா
செலவு பண்ணல. எல்லாம் எங்க வீட்டில சீதனமா போட்டது. என்னம்மோ நீங்க
உங்கக் கைக்காச செலவு பண்ணி வாங்கிக் கொடுத்தாமாதிரி பீத்திக்கிறேளே ?”
“அடியே….எப்படியிருந்தாலென்ன? நகை உனக்குத்தானே ! நானா மோதிரம், மை னர் செயின்னு வாங்கிப் போட்டுக்கிட் டேன்? ” கொஞ்சம் சூடாகவே பதில் சொன்
னான் சுந்தரம்.
“அதுக்குத்தான் இந்த வருஷம் அட்ஷயத் திருதியை அன்னிக்கு உங்கக் கையால்
ஏதாவது நகை வாங்கிக் கொடுங்கன்னு கேட்குறேன்..”
தலை கவிழ்ந்தவாறு கடைக்கண்களால் அவளைப் பார்த்தபடி சில வினாடிகள்
யோசனை செய்தான். பிறகு கேட்டான் விஷமச் சிரிப்போடு.
“சரி, வாங்கித் தர்றேன். எந்த நகையா இருந்தாலும் பரவாயில்லயா?”
சுந்தரம் இப்படி கேட்டதும் பத்மாசனி முகத்தில் சந்தோஷம் பொங்கி வழிந்தது. பரவாயில்லை கணவன் இசைந்து விட்டான். கணிசமானதொகையில் நல்ல காத்திரமான நகைவாங்கிவிட வேண்டி யது தான் என ஆசை கொண்டாள்.
‘ம்..என்ன வாங்கலாம்..காசு மாலை..வேண்டாம் அது அவுட் ஆஃப் பேஷன்!
இரட்டை வடம் செயின்…ஆங்..அதுதான் சரி . அஞ்சு சவரன்ல நல்ல எடையோட பார்க்க அம்சமா இருக்கும்.’ மனதில் நினைத்துக் கொண்டவள், முகம் கொள்ளாச் சிரிப்போடு புருஷனைப் பார்த்தாள்.
“அப்பா ! இப்ப தான் வழிக்கு வந்தீங்க! உங்க மனசு மாறதுக்குள்ள சட்டுன்னு புறப்படணும்..” என்று யோசனை செய்த வள், ” சரி, உங்க பட்ஜெட் என்ன; ஜி.ஆர். டி.க்கு போகலாமா? அங்கதான் நிறைய அயிட்டங்கள் இருக்கும்..” எனக் கேட்டாள்.
ஆர்வம் குறையாமல் கேட்டவளைக் குறு குறுவென்று பார்த்த சுந்தரம், ” டியர் ! வந்து.. அவ்வளவு தூரம் போகணுமான்னு யோசிக்கிறேன் !”தன்தலையைச் சொரிந் தான்.
“சரி. நம்ம நகர்லயே சரவணா ஸ்டோர்ஸ் புதுசா ஒரு பிரான்ச் ஆரம்பிச்சிருக்காங்க
அங்க வித விதமான டிசைன்களில் நிறைய அயிட்டங்கள் இருக்கு. அங்க போகலாம், என்ன சொல்றீங்க ?”
“வேண்டாம். நான் கேள்விப் பட்ட ஒரு கடைக்குப் போவோம். அங்கேயும் பிரமாதமான நகைங்க இருக்கு. நல்ல டிசைனா பார்த்து உனக்குத் தேவையா னதை வாங்கிக்கலாம். சரி, நீ என்ன அயிட்டம் வாங்கப் பிரியப்படறே?”
“புதுசா இரட்டை வடம் சங்கிலி போட்டுக்கணும்னு ஆசை ! எங்கிட்ட இருக்கறதெ
ல் லாம் ஒத்தை வடம்தான். “
“ஓ.கே. அது மட்டும் போதுமா ? வளையல், புது டிசைன்ல தோடு இதெல்லாம் வேணாமா?”
பத்மாசனிக்கு ஒரே பூரிப்பாக இருந்தது. வாயெல்லாம் பல்லாக சிரித்தாள். ” ஏது ஏது அய்யாவுக்கு அரியர்ஸ் பணம் ஏதாவது நிறைய கிடைச்சிருக்கா?எங்கிட்டக்கூட சொல்லல்லை.! அது சரி, எந்தக் கடைக்குப் போகலாம் ?” மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள்.
“கல்யாண் கடை!”
“கல்யாண் கடையா… அங்க நாம எதிர்பார்க்குற நகைங்க கிடைக்குமா ?”
“என்ன அப்படி கேட்டுட்டே ? வித விதமான ஜோடி வளையல்கள்; செயின்கள்; தோடுகள், அப்புறம் இன்னும் என்னன்னவோ அயிட் டங்கள்…எல்லா நகைகளும் சும்மா மினு மினுன்னு மினுக்கும்..அப்படியே… ஒரிஜினல் கோல்டு போலவே ஜொலிக்கும். நீயே பார்த்து ஆச்சர்யப்படுவே !”
பத்மாசனி முகம் சட்டென மாறியது.
“ஒரிஜினல் கோல்டு போலவே இருக்கு மா? அப்படின்னா…..” இடுப்பில் வலது கை
வைத்தபடி கொஞ்சம் கோபத்துடன் கேட்க
“யெஸ் டியர்!…உனக்குத் தேவையான அயிட்டங்களை சீப்பா வாங்கிக்கலாம்.
ஆசையோட அள்ளிக்க….லா…..ம்….விலையும் சீப்…”
“ஓஹோ! கவரிங் நகைக்குதான் இத்தனை ஆர்ப்பாட்டமா ..” பத்மாசனி சொல்லி முடிப்பதற்குள் அங்கிருக்காமல் நொடியில் காணாமல் போனான் சுந்தரம்.
அரைமணி நேரம் வெளியே சுற்றி விட்டு வீடு திரும்பியவன் கொஞ்சம் அச்சத்து
டன் உள்ளே நுழைந்தான். சோஃபாவில் அமர்ந்தவாறு பத்மாசனி எங்கேயோ பராக் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘கோபம் போய் சாந்தமாயிருப்பாளா? இல்ல எரிந்து விழுவாளா?’ மனதில் சந்தேகம்.
திக் திக் என்று அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் அவள் எதிரில் போய் நின்றான். ஏற இறங்க பத்மாசனியைப் பார்த்தவன் பிறகு வாய் திறந்தான்.
“ஸாரி பத்மா! இன்னி தேதிக்கு உனக்கு கோல்டு நகை வாங்கித் தர எனக்கு வசதி கிடையாது. உனக்கே தெரியும். ஜெட் வேகத்தில் தங்க விலை ஏறிக்கொ ண்டே போகறது. அதே நேரம் மனசுல தங்கம் வாங்குற ஆசை அதள பாதாள த்துக்கு சரிந்து போய்க் கொண்டே இருக்கறது. இதுதான் எதார்த்தம்! இருக்கற நகைங் களை பத்திரமாக பாது காத்து வெச்சு ண்டாலே போதும். அதுவே திருப்திதான். ஆனாலும் வசதி வந்து, கையில் பணம் புரளட்டும். அப்போ நிச்சயம் வாங்கிக் கொள்ள லாம் டியர்!”
பேசிய கணவனை கழிவிரக்கத்துடன் பார்த்த பத்மாசனி, ” பரவாயில்லைங்க ! நீங்க வெளியேப் போனதும் நல்லாத் திங்க் பண்ணிப் பார்த்தேன். அட்ஷயத் திருதியை அன்னிக்கு நகை வாங்கினா அப்புறம் நிறைய வாங்கலாம்னு பொது வான பேச்சு அடிபடறது. அதனால் தான் அட்ஷத்திருதியை அன்னிக்கு நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. அதை வெச்சுதான் நானும் உங்கக் கிட்ட சொன்னேன். ஆனாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்ங் குறதை நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன். நீங்க சொல்ற மாதிரி கைவசம் இருக்கற நகைங்களை பத்திரமா பாதுகாத்து வெச்சுண்டாலே பொக்கிஷம்! உங்களுக்கு அநாவசிய மனக் கஷ்டத்தை கொடுத்ததுக்காக வெரி வெரி ஸாரிங்க!” என்று கூறி வருத்தப்பட்டாள் .
“பரவாயில்ல பத்மா! உன் மீது தப்பு கிடையாது. ஏதோ ஆசையில் அப் படி கேட்டுட்டே. ஆனால் சூழ்நிலை உணர்ந்து நீ உன் மனச மாத்திக்கிட்டது பெரிய விஷயம்! அதனால….”
“அதனால?”
“நீ எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் டியர்!” என்று புன்சிரிப்பொன்றை உதிர்தான் சுந்தரம்.