புதிய பரிணாமங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2025
பார்வையிட்டோர்: 142 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொன்னன் சாப்பிட்டுட்டு வந்து மிச்ச வேலையைச் செய்வம்’ மாணிக்க வாத்தியாரின் அழைப்பில் நிமிர்ந்த பொன்னன் மண்வெட்டியை ஒரு ஒரமாக வைத்து நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். 

‘நாம் போக….இந்தப் பளையையும் கொத்திப் போட்டு வாறன் நயினார்’ பொன்னன் பணிவோடு கூறி னான். பொன்னனின் அடுத்த அடுத்த தலைமுறையினர் கஎல்லாம் எவ்வளவோ முன்னேறி விட்ட நிலையிலும் பழக்க தோஷத்தால் அவன் பழையவனாகவே இருந்தான். அதே பணிவு, அதே அடிமைத்தனம். 

பொன்னனின் மகன்மார் அவனது இந்தப் போக்கைக் கண்டித்துப் பேசுவார்கள் ‘ராசா… நான் இன்னும் கொஞ்ச நாளைய ஆள். எப்படியோ இருந்திட்டுப் போறன்… நீங்கள் நல்லாயிருந்திட்டால் போதும்’

அப்புவை மாத்த முடியாது என்று மக்கள் சலித்துக் கொள்வார்கள். ‘அம்மாவின்ரை குறுக்குக் கட்டையும் மாத்தேலாது’ என்று மக்கள்மார் சலித்துக் கொள்வார்கள். 

பொன்னன் தனது மூதாதையர் செய்து வந்த மர மேறும் தொழிலையும், தோட்டக் கூலி வேலைகளையுமே தனக்குத்தெரிந்த நாட்தொட்டு செய்து வருகிறான். வனது வாழ்நாளில்தான் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் மும்முரமாக நடந்தது.ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம், அடிமை குடிமை மறுப்பு முதலான போராட்டங்களில் எல்லாம் அவன் நேராகக் கலந்து கொள்ளாவிட்டாலும் முழுக்க முழுக்க அதை வரவேற்றான். எனினும் அவன் அதிகம் மாறவில்லை. 

‘இருக்கிறது இன்னும் கொஞ்ச நாள்’ இதுதான் அவன் சொல்லும் சமாதானம். 

மாணிக்க வாத்தியாரின் வீட்டிலும், காணியிலும், தோட்டத்திலும் அந்த நாட்தொட்டே பொன்னன்தான் வேலை செய்வான். வாங்கிய கூலிக்கு வஞ்சகமில்லாமல் உழைப்பவனாதலினால் மாணிக்க வாத்தியாருக்கும் அவனில் வலு விருப்பம். சாதி வெறி தலைவிரித்தாடிய அந்த நாட்களிலேயே பொன்னனுக்குக் கிளாசில் தேநீர் கொடுத்துக் கௌரவித்தவர் என்ற வகையில் மாணிக்க வாத்தியார் மீது அவனுக்கும் பெருமதிப்பு உண்டு. மாணிக்கவாத்தியாரின் மகள் சந்திராவின் சீதனக் காணி யில் குலை தள்ளிக் காய்த்திருக்கும் தென்னை மரங்கள் யாவும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பொன்னனால் நாட்டப்பட்டவைதான். வேலியடைப்பு என்றாலும் சரி, குப்பை சுமத்தல் என்றாலும் சரி. தோட்டம் கொத்துதல் என்றாலும் சரி பொன்னன்தான் அங்கே நிற்பான். 

பொன்னனைத் தவிர வேறு கூலியாட்களை அவர் பிடிப்பதில்லை. அவனோடு சேர்ந்து தானும் ஒரு கூலியாக வேலை செய்வது அவரது வழக்கம். இன்று வன்னேரியில் டாக்குத்தராக இருக்கும் அவரது மருமகன் கொண்டுவந்த கொடி எலுமிச்சை மரங்களையும், தோடைமரங்களையும் அடியுரமிட்டு நாட்டுவதற்காகவும், வேலியடைப்புக்கு லை வெட்டவுமே பொன்னனை அழைத்திருந்தார் மாணிக்க வாத்தியார். 

ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த சார்வோலைகளை ஒன்றாகக் கட்டி தலையில் சுமந்தபடி மாணிக்கவாத்தியாரின் வீட்டை அடைந்தான் பொன்னன். தலையிலிருந்த இலைக்கட்டை ‘பொத்’ எனப் போட்டுவிட்டு திண்ணை யில் குந்தியபடி தலைப்பாகையாகக் கட்டியிருந்த சால் வைத்துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். 

‘சாப்பாட்டைக் கொண்டு வானை’ குசினிக்குள் இருந்த மனைவியிடம் கூறுகிறார் மாணிக்க வாத்தியார் அவரது இரண்டாவது மகள் இந்திரா பிட்டும் சம்பலும் கொண்டுவந்து கொடுத்து விட்டு ஆட்டிற்குத் தண்ணீர் எடுத்துக்கொண்டு வைக்கப் போனாள். 

முற்றத்தில் கறுத்தக் கொழும்பான் மாமரத்து நிழலில் அமர்ந்து கொண்டு மாணிக்கவாத்தியாரின் பேரக் குழந்தைகளான அகல்யா, அனுசுயா, இந்திரன் ஆகி யோர் மண்விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

சாப்பிட்டுவிட்டு எழுந்த பொன்னன் அவர்களது விளையாட்டை ஒரு கணம் ரசித்தான். மண்வீடு கட்டித் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகே மட்டையில் தடியொன்று கட்டி பக்குவமாக வைக்கப் பட்டிருந்தது. 

‘உதென்ன ராசா?” பொன்னன் இந்திரனைக் கேட்டான். 

‘துவக்கு……’

‘ஏன் ராசா’ 

‘பிளேனிலை ந்து எங்கட வீட்டுக்குக் குண்டு போட்டால் சுட்டு விழுத்திறதுக்கு அவனது வீரமான பதிலில் பொன்னன் ஒரு கணம் மெய் சிலிர்த்தான். மெய்யே உங்கட பேரன் சொன்னதைக் கேட்டியளே…?’ வாத்தியாரிடம் சொல்லுகின்ற பொன்னனின் கொடுப் புக்குள் ஒரு சிரிப்பு. 

‘மக்கள் போராட்டத்தை சூழ்நிலைதான் உருவாக்கு கிறது அடிக்குமேல் அடியடிச்சால் அம்மியும் நகரத்தானே செய்யும். அறுபதுகளில் உங்கட சாதியொழிப்புப் போராட்டமும் உப்பிடித்தானே உருவானது. இப்ப ஆமிக்காரன் அடிச்ச மாதிரி அப்ப எங்கடை ஆக்கள் ங்களை அடக்கியாளப் பாத்தினம். கடைசியிலை வெற்றி உங்களுக்குத் தானே? இப்பாதையில் போராட் மும் கடைசியிலை வெற்றியும் நீதியின் பக்கம்தான். இருந்து பாரன் மாணிக்க வாத்தியார் நீட்டி முழக்கினார். 

தேநீர் கொண்டு வந்த சந்திரா மகனைப் பெருமிதத் தோடு பார்த்தாள். ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? 

பொன்னனிடம் தேநீரை நீட்டியபடியே பனங்கட்டி எல்லாம் கசிஞ்சு போச்சு’ என்றபடி கடதாசித் துண்டில் பனங்கட்டியை வாயில் பனங்கட்டியை நீட்டினாள். போட்டு விட்டு பேப்பர் துண்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான் பொன்னன். 

‘என்ன பொன்னன் பேப்பரிலை போட்டிருக்கு” கேட்ட சந்திராவின் உதட்டில் ஒரு சிரிப்பு. 

‘எனக்கென்ன தெரியுமாக்கும் வாசிக்க’, என்றபடியே பேப்பரை அவளிடமே நீட்டுகிறான். 

‘இன்றையிலையிருந்து வடக்குக் கிழக்கில ஒருத்தரும் கடலுக்கை மீன்பிடிக்கப் போகேலாதாம். காட்டுக்கிள்ளையும் போகேலாதாம்’. 

‘பாவம் அப்பா மீன் பிடிக்கிறவையும், விறகு வெட்டுறவையும் என்னெண்டாம் சீவிக்கிறது’ வெகுளி போலக் கேட்டான். 

‘அதுதான் பொன்னன் எங்கட கஸ்டங்களை ஆரட் டைச் சொல்லி அழுகிறது? நீதி சொல்ல வேண்டியவங் களே நிலை மாறி நிற்கையுக்கை நாங்கள் தொடர்ந்தும் பேசாமலிருந்து என்ன செய்யுறது? தாவடி மானிப்பாய்
பக்கமெல்லாம் பிளேனிலை வந்து குண்டு போட்டதிலை கிழவன், குழந்தை, குருக்கள் எண்டு கன அப்பாவிகள் செத்துப் போச்சினம். மட்டக்களப்பிலையும், கிளி நொச்சியிலையும் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியளை உயிரேடை எரிச்சுப் போட்டங்களாம். கலிகாலம் முத்திப்போச்சு’ சந்திரா பெருமூச்சு விட்டாள். ‘வன்னேரிப் பக்கமும் ஒரே கரைச்சலாம். இவரும் அசண் டையாய் இந்திடுவர்… அதுதான் எனக்கு நித்தம் பயம்’ 

‘எங்கட பகுதிப் பொடியனையும் நெடுங்கேணியிலை சுட்டுப் போட்டாங்கள். நுளம் பெண்ணை ஓவசியராய் வேலை செய்து கொண்டிருந்த பொடியன். பாவம், இரண்டு பிள்ளையளும் இருக்கு…’

‘பேப்பரிலை நானும் பார்த்தனான் பொன்னன்.’ என்றாள் சின்னவள் இந்திரா. 

இந்திரா கோழிகளை முட்டைவிட அடைக்கச் சென்றதும் பொன்னன் வாத்தியாரிடம் கேட்டான். ‘பிள்ளைக்கு சம்மந்தம் ஒண்டும் பேசயில்லையே ஆக்கும்’ 

‘எங்கே ஊரிலை பொடியள் இருந்தால் தானே? கொஞ்சப் பொடியள் பரலோகம் போட்டுதுகள். இன்னும் கொஞ்சம் வெலிக்கடையிலும், பூசாவிலையும் இன்னும் கொஞ்சம் உயிரைப் பணயம் வைச்சுக் காடு மேடு எண்டு திரியுதுகள்… வசதியுள்ளதுகள் வெளி நாடெண்டு போட்டுதுகள்…… மிச்சமாய் இருக்கிறதுகளுக்கும் வேலை வெட்டியொண்டுமில்லை. வேலையிலை இருக்கிறதுகளும் எக்கச்சக்கமாய் சீதனம் எதிர்பார்க்குதுகள்” வாத்தியார் நெடுமூச்செறிந்தார். 

‘என்னவாக்கும், நம்மட்ட இல்லாத காசு பணமே’ 

‘என்ன பொன்னன் நீ, எல்லாரும் சொல்லுற மாதிரி நீயும் சொன்னால்? பொத்திப் பொத்திச் சேர்த்து வைச் இருக்கிறன் எண்டுதான் ஊரிலை சொல்லுகினம். அவைக்குத்தான் விளங்கயில்லை எண்டா உனக்கு விளங் வில்லை என்னட்டை எங்காலை காசு? எழுவத்தேளிவை காவத்தையிலை சிங்களவன் எல்லாம் அடிச்சுக்கொண்டு போயிட்டான். என்ர சம்பளம் செலவுக்கே மட்டு மட்டு. பிறகு இங்கை வந்து வந்து மிளகாய்த்தோட்டத்திலை கொஞ்சம் சம்பாதிச்சதை வைச்சுக்கொண்டு மூத்தவளின்ர காரியத்தை ஒருமாதிரி ஒப்பேற்றி போட்டன், பணக்கார மாணிக்க வாத்தியார் என்ட பெயர்தான். மகளுக்குச் சீதனமாய் ஒரு சதமும் போடயில்லை’ இல்லைப் பாட்டு பாடினார் வாத்தியார். 

‘மேன் வெளிநாட்டிலையிருந்தும் ஒண்டும் அனுப்பு றேல்லையே ஆக்கும்? என்ர பெறாமேன் நிறைய அனுப்புறான். 

‘அவன் இன்னும் அகதி முகாமிலைதான் இருக் கிறான். அனுப்புறதுக்குச் செலவளிச்ச காசே வந்து சேரயில்லை’. 

‘அப்ப பிள்ளையை ஏதாவது வேலையிலை சேர்க்கூ யில்லையே? படிச்ச பிள்ளையெல்லே பாக்க’

‘என்ன செய்யுறது பொன்னன் எல்லாத்தும் இப்ப காசு வேணும். பத்தாயிரம் இருந்தால் ஆசிரியை வேலை எடுக்கலாம். முந்திக் கொஞ்சக்காலம் எம்பீமார் அடிச்சினம் பிறகு அமைப்பாளர்மார் அடிச்சினம் இப்ப மந்திரிமாரைச் காணவேண்டியிருக்கு. அந்த நாளிலை சீனியர் பாஸ் பண்ணினவுடனை வீடு தேடி வந்துடுவங்கள் தங்கட பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கச் சொல்லி’ 

‘இப்பவும் தேடி வருகினமாம்….’

‘இது சம்பளமில்லாத வேலை. தொண்டர் ஆசிரியர்’ 

‘அப்ப நாங்கள் போவமே காணிக்கு?’ 

‘உண்ணானைப் பொன்னன் உந்த ஓலையிலை இரண்டை சிறகடிச்சிட்டுப்போ, மாட்டுக்குக் கிளிச்சுப் போட்டிடலாம்’ வாத்தியாரின் மனைவி அற்புதம் கூறி ள். வாத்தியாரின் மனைவி சாடிக்கேற்ற மூடி. தன்னோலைகளையெல்லாம் கிடுகாக்கி காசாக் டுவாள். ஆடு, மாடு வளர்ப்பு என ஒரு நேரம் சும்மா இருக்கமாட்டாள். 

பொன்னன் கத்தியை எடுத்து ‘விறு விறு’ என்று ஓலைகளைச் சிறகடித்து விட்டு வாத்தியாருடன் புறப்பட் டான். மீண்டும் காணியில் வேலை தொடங்கியது. 

‘தென்னம் பிள்ளைகளுக்கும் காவோலை தாக்க வேணும் பொன்னன்’ வாத்தியார் கதையோடு கதையாகக் காரியத்தில் கண்ணாக இருந்தார். 

வேலையும் ஓடியது. கதையும் தொடர்ந்தது. 

‘அது சரி பொன்னன், உங்கடை வீட்டுப் பக்கம் நேற் றைக்கு என்னவோ பிரச்சினையாம்? பொடியள் துவக்குக் கொண்டு வந்தவங்களாம். 

‘ஓம் வாத்தியார். சாதிப் பாகுபாடு அழிஞ்சு போச் செண்டதெல்லாம் வெறும் பேச்சுத்தான். கோயிலுக் குள்ளை போன தோடையும், தேநீர்க்கடைப் பிரவேசத் தோடையும் சாதிப் பாகுபாடு எல்லாம் அழிஞ்சு போச்செண்டு சொல்லேலாது நயினார். இப்பவும் நீறுபூத்த நெருப்பாக பல பேருடைய மனதில் சாதிவெறி இருக்கு’ 

‘என்னடாப்பா, சோடிச்சுப் பேசுறாய்? விசயத்தைச் சொல்லன்…ம் பார்த்துக் கொத்து, வேரில் பட்டுவிடும்’. 

‘உங்கட சிவலைத்தம் 9 ஓவசியரின்ர மூத்த மோள் மூன்று மாதத்துக்கு முந்தி இயக்கத்துக்குப் போறன் எண்டு எழுதிவைச்சிட்டுக் காணாமல் போனவளெல்லே. அவள் இயக்கத்திற்குப் போகையில்லையாம்’. 

“அப்ப……”

‘எங்கட சீனியன்ர பொடியன் சிவபாதத்தோட கூடிக் கொண்டு ஓடி வவனிக்குளத்தில் இருந்திட்டு இப்ப சோடியாய் வந்திருக்கினம்’. 

‘ஆர் அந்த மேசன் வேலை செய்யுற பொடியனோடையோ? 

‘ஓம்……’ 

‘இதென்ன அநியாயம்!” 

‘ஏனாக்கும் அநியாயம் எண்டுறியள்?’ 

“பெத்து வளர்த்து ஆளாக்கினவையை விட்டுட்டு உப்பிடி ஓடுறதே?’ வாத்தியார் ஒருவாறு சமாளித்தார். 

‘அந்தப் பிள்ளைக்கும் இருபத்தெட்டு வயசாச்சு. கால நேரத்தோட கட்டி வைச்சிருந்தால் து ஓடியிருக்குமே?’ 

‘எண்டாலும் பெத்ததுக்களுக்கு இப்படி ஒரு தலை குனிவை ஏற்படுத்தியிருக்கக் கூடாதெல்லே’ என்றார் மாணிக்க வாத்தியார். ‘ஓடினதுதான் ஓடினவள் இந்தச் சினியளோனடதான் ஓடவேணுமே? சொந்தத்தில ஒரு பொடியனோடகூடி ஓடியிருக்கலாமே…’ மனதில் நிலை ததை வாத்தியார் வார்த்தையில் வடிக்கவில்லை. 

‘பிறகென்ன நடந்தது?” 

‘எல்லாம் பழைய கதைதான். ஓவசியரின்ர ஆக்கள் சீனியன் வீட்டுக்கு வந்து பலாத்காரமாக தங்கட பெட்டை யைக் கூட்டிக் கொண்டு போகப் பார்த்தவை. அதுக்கிடையில் பொடியனையும் பெட்டையையும் ஒளிச்சுப் போட்டினம் எங்கட ஆக்கள்’ 

‘அப்ப துவக்குச் சூடு’ 

மேலதான் வெடி வச்சவை. ஆரோ இயக்கப் பொடியனாம், அவரும் கூட வந்து எச்சரிக்கை செய் திட்டுப் போயிருக்கிறார். நாளைக்கிடையில பொம் பிளையை ஒப்படைக்காட்டில் நடக்கிறது வேறயாம்.’ 

‘அப்ப சீனியன் என்ன செய்யப் போறானாம்?’

‘அவைக்கு ஒரு இயக்கம் எண்டால், எங்களுக்கு இன்னொரு இயக்கம் ‘சப்போட்’ இருக்கு. எங்கட பொடி யளும் இயக்கத்தில் இருக்கிறாங்கள் தானே?’

வாத்தியார் தலையைச் சொறிந்தார். 

‘பொடியள் கண்ட கண்ட விசயங்களில் தலையிட்டு வீணாகச் சப்போட் இழக்கப் போகுதுகள்’ பொன்னனின் வார்த்தைகளிலுள்ள நியாயம் வாத்தியாருக்கும் புரிந்தது. 

அன்று வேலை முடிந்து பொன்னன் போன பின்னரும் வாத்தியாரின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது. இந்திராவுக்கும் காலாகாலத்தில் கலியாணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளும் ஒரு வேளை இப்படி ஓடிப்போகக் கூடும். அப்புறம் ஊரில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. வாத்தியாரின் மனதில் போராட்டம். 

‘கேட்டியே, ஓவசியரின் பெட்டை செய்த வேலையை’ மனைவியிடம் கேட்டார் வாத்தியார். 

‘ஓம் நானும் கேள்விப்பட்டன்’ 

‘எங்கட இந்திராவுக்கும் காலாகாலத்தில கலியாணம் செய்து வைக்க வேணும். இல்லாட்டில் ஏதும் ஏறுமா றாய்ப் போனாலும் கரைச்சல்’ 

‘அதுதான் தம்பி போன கடிதத்தில எழுதினவ னெல்லே? ஜேர்மனியில் ‘சிற்றிசன் சிப் எடுத்த பொடியன் ஒருத்தன் இருக்கிறானாம். இந்திராவை அங்கை அனுப்பி வைச்சால் கலியாணம் செய்து வைக்கலாமாம்?’ 

‘அவ்வளவு தூரத்திற்கு கண்காணாத இடத்திற்கு அனுப்பிப் போட்டு? 

‘தம்பியை விட்டிட்டு இருக்கையில்லையே? சந்திரா வும் மருமோனும் எங்களோட இருக்கினம்தானே?’

‘அதுகளும் வாற வரியம் சிங்கள ஊருக்கு மாற்றம் வந்தால் விட்டிட்டு கனடாவுக்குப் போற பிளான்’ 

‘நீங்கள் எல்லாத்துக்கும் தடை. பாஸ்போட்டை முதலில் எடுப்பம்.’ 

வாத்தியார் இறுதியில் மனைவியின் பக்கம் சாய்ந்தார். ‘சரி உன்ர விருப்பம்’ 

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்திரா ஜேர்மனிக் பயணமானாள். அங்கே தமையன் முன்னின்று அவளது திருமணத்தைச் செய்து வைத்தான். 

விமானத் தபாலில் கலியாணப் படங்கள் வந்தன. வாத்தியார் பெருமிதத்தில் மிதந்தார். 

‘நல்ல சோக்கான ஆம்பிளை. சோடிப் பொருத்தமும் நல்லாயிருக்குக் கண்டியே?’ மனிசியிடம் பெருமையாகச் சொன்னார். 

‘இப்பிடி ஒரு மாப்பிளை டைச்சது பிள்ளையின்ர அதிஸ்டம் தான். அவள் சீதனமும் கொடுக்காமல் ராசியான சாதகம் எண்டு தியாகுச் சாத்திரியார் சொன்னவர் பாருங்கோ’ அற்புதமும் மகிழ் வோடு கூறினாள். 

இவர்கள் பிறந்தபோதே பெருமையடிப்பதைக்கேட்ட மூத்தவள் சந்திரா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டாள். 

‘தாத்தா,ஊஞ்சலாட்டி விடுங்கோ. முற்றத்திலிருந்த அகல்யா. அழைத்தாள்.’சித்தியின்ர அதிகாரத்தோடு படம்-வந்திருக்குச் செல்லம்’ என்றபடியே பேர்த்தியை ஊஞ்சலாட்ட வந்தார் வாத்தியார். ‘சித்தி வேணாம்’ என்றாள் அகல்யா, 

‘மாப்பிளைக்கு மாசம் பதினையாயிரம் வரும்படி யாம்’ வாத்தியாரின் பெருமிதம் அடங்கியபாடில்லை. சந்தோசமாக ஊஞ்சலாட்டியபடி மனைவியிடம் தனது மகழ்வான மன நிலையைப் பகிர்ந்து கொண்டிருந்தார். 

இந்திரா போனதோட இப்ப ஆடு மாட்டு வேலையும் என்னோடு பொறுத்துப்போச்சு’ வாத்தியாரின் சம்சாரம் களி நீரைச் சுமந்து கொண்டு ஆட்டுக் கொட்டிலுக்குச் சென்றாள். 

‘ஆட்டுக் கொட்டிலும் மேய வேணும். பொன்னனுக்கு ஒருக்கால் சொல்ல வேணும்”. 

‘பொன்னனை விட்டால் உங்களுக்கு வேற ஆளில் லையே அப்பா?’ சந்திரா கேட்டாள். 

‘ஆரெண்டாலும் அவனைப் போல வருமே? அவன்ரை பணிவும், வேலையும், மரியாதையும் வாத்தியார் கூறினார். 

ஒரு வாரத்தின் பின் ஒரு சனிக்கிழமை பொன்னன் ஆட்டுக் கொட்டில் வேய வந்திருந்தான். மேலே ஏறி அவன் வேய கீழே இருந்து வாத்தியார் கிடுகு எடுத்துக் கொடுத்தார். உரையாடலுடன் வேலை தொடர்ந்தது. 

‘பொன்னன் ….. என்ரை மேனுக்கு ஜேர்மனியில் வேலை கிடைச்சிட்டுது. மருமேன்தான் ஒழுங்கு பண்ணிக் கொடுத்தவர் பொன்னன் பழைய சேதியைக் கேட்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தான். 

பிள்ளைக்குப் போன மாதத்திலிருந்து முழுக்கும் வரயில்லையாம்? 

‘மெய்யே?’ இப்போது ஆவலுடன் கேட்டான் பொன்னன். 

வெய்யில் ஏற முன்னர் வேய்ச்சல் முடிந்தது. 

பொன்னன் வாவன் சாப்பிடுவம். மனிசி இட்டலி அவிச்சிருக்கிறா?’ மாணிக்க வாத்தியார் அழைத்தார் 

கைகால் கழுவிக் கொண்டு சாப்பிட அமர்ந்தான் பொன்னன். 

என்ன பொன்னன் இண்டைக்கு ஒரே யோசனை யாய் இருக்கிறாய்? கலகலப்பைக் காணவில்லை’ அற்புதம் இட்டலியை பரிமாறியபடி கேட்டாள். 

‘ஒண்டுமில்லையாக்கும்…’ பொன்னன் சிரித்தான். 

வாசலில் தபால்காரனின் மணி ஒலித்தது. 

நீலநிற வானக் கடிதமொன்றை வாங்கி வந்தாள் சந்திரா, ‘தம்பியின்ரை கடிதம்’ என்றபடி அப்பாவிடம் நீட்டினாள் வாத்தியார் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படித்தார். படித்துக் கொண்டிருக்கும்போதே அவரது முகம் களையிழந்தது மனைவியிடம் கடிதத்தை நீட்டினார். 

அற்புதம் கடிதத்தை வாசித்தாள். 

அன்புள்ள அப்பா, அம்மா அறிவது! 

இந்தச் கடிதத்தை வாசித்ததும் நீங்கள் அதிர்ச்சி யடையக் கூடும். இந்திராவின் அவர் வேறு யாருமல்ல. நமது பொன்னனின் பெறாமகன் முறையானவர் தான். இதை நான் முதலிலேயே மூடி மறைத்ததற்குக் காரணம். இது தெரிந்தால் நீங்கள் கலியாணத்திற்குச் சம்மதிக்க மாட்டீர்கள் என்பதால்தான். இதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 

இந்திரா பாடசாலையில் ஏ.எல். படித்துக் கொண்டி ருக்கும் போதே பரஸ்பரம் விரும்பியவர்கள்தான். எனினும் சமுதாய அமைப்பை மீற முடியாத தயக்கத்தினா லும், பயத்தினாலும் இந்திராவும் அன்னராசாவும் தமது உண்மை காதலுக்கு அணை போட்டனர். இதை எல்லாம் இங்கே ஜேர்மனியில் சில காலத்திக்கு முன்னர் அன்னராக விடமிருந்து தெரிந்து கொண்டேன். எல்லாவற்றையும் பற்றி சந்திராக்காவுக்கும் பெரியத்தானுக்கும் எழுதி ஆலோசனை கேட்டேன். ஒரு நாள் ரெலெக்ஸில் பெரியத் தானுடன் நேராவும் கதைத்தேன். பெரியத்தான் அன்னராசு வீட்டாருடன் தொடர்பு கொண்டு சம்மதம் பெற்றார். பின்னர் நடந்தவை எல்லாம் உங்களுக்குத் தான் தெரியுமே! 

அப்பா, நீங்கள் ஒரு சீர்திருத்தவாதி. சாதிவெறி தலை விரித்தாடிய காலத்திலேயே சிரட்டைக்கும். போத்தி லுக்கும் பதிலாக கிளாசிலும், பேணியிலும் தண்ணி கொடுத்து சாதிக் கொடுமையை எதிர்த்தனீங்கள் தானே? உங்களது முன்னவர்கள் கொடுக்காத ஒரு சமத்துவத்தை நீங்கள் கொடுத்ததுபோலவே, நீங்கள் கொடுக்காத சமத் துவத்தை நான், சந்திராக்கா, பெரியத்தான் முதலான வர்கள் கொடுத்துள்ளோம். திருமணக் கலப்புகள் ஏற் படாத வரையில் சாதிவெறி முற்றாக ஒழியப்போவ தில்லை. இவை கூட ஒரு பரிணாம வளர்ச்சியின் நிலைப் பாடுதான். அகல்யா, அனுசுயா. இந்திரன் முதலான அடுத்த தலைமுறையின் காலத்தில் சாதி என்ற வேறுபாடு முற்றாகவே அழிந்துவிடும். அழிய வேண்டும் என்பது தான் எமது அவா. இங்கே ஜேர்மனியில் நாங்கள் எல்லோரும் தமிழ் அகதிகள்தான். எங்களுக்கிடையே வேறுபாடில்லை. 

அம்மா, தயவு செய்து மூக்கை உறிஞ்சாமல் எங்களைப் அரிந்து கொள்ள முயலுங்கள். இந்திராவை ஒதுக்கி வைத்து புதிய சாதி ஒன்று உருவாவதற்கு வழிவகுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

மேலதிக விபரங்களைச் சந்திராக்காவிடமிருந்தும். பெரியத்தானிடமிருந்தும் தெரிந்துகொள்ளுங்கள். 

அன்பு மகன் சந்திரதாஸ். 

கடிதத்தைப் படித்து முடித்ததும் அற்புதம் கணவனை உற்று நோக்கினாள். அவளது கண்கள் கலங்கியிருந்தன. கடிதத்தில் உள்ளவற்றை ஊகித்துக் கொண்ட சந்திரா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டாள். 

“என்ன வாத்தியார் மோன் எழுதியிருக்கிறார்?” 

மாணிக்க வாத்தியார் ஒரு கணம் பொன்னனை உற்றுப் பார்த்தார். ‘நான் இன்னும் கொஞ்ச நாளைய ஆள். இனி அவையின்ர காலம்தானே? அவையள் நல்லா விருந்தால் போதும்…’ 

சந்திரா நிறைவோடு அப்பாவை நோக்கினாள்.

– மல்லிகை

– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *