பார்த்தால் சொல்லுங்கள்!
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நெடுஞ்சாலை ஓரமாகக் காத்தவராயன் நின்று அவன் வெள்ளையும், கறுப்பும் கலந்த மாநிறத்தவன். அவன் ஒன்றும், அனைவரும் கவனிக்கத் தக்க புகழ் அடைந்தவன் அல்லன். அடிமட்டத்தில் உள்ளவன். ஆட்டுக் குட்டிகளை மேய்த்துக் கொண்டிருந்தவன். ஆத்தா கரைத்துக் கொடுத்த கம்பஞ் மிளகாயைக் கடித்துக் குடித்து வந்திருக்கிறான். அவன் வாயில் இன்னும் புளிப்பு வாசம் மிச்சம் இருக்கிறது.
அவனுக்கு நகரம் பிரமிப்பாக இருக்கிறது. “இங்கு நிச்சயமாக வேலை கிடைக்கும். ஆத்தாவுக்குப்பணம் துணி மூட்டையைத் தலைக்கு மாற்றிக் கொண்டான்.
காலைச் சூரியன் புலர்கிறான். அவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது சாலையோர இட்லிக் கடைக்குப் போகிறான். விலை கேட்டு மலைத்து நிற்கிறான். எச்சில்இலையில் மீந்ததுக்காக நான்கைந்து தெருநாய்கள் சண்டை போடுகின்றன.
வெயில் சூடு ஏறிக் கொண்டிருக்கிறது. சாலையில் சூடு ஈயமாக அப்புகிறது காத்தவராயன் தி.நகர் போக வேண்டும். அவனுடைய ஆத்தாவின் சின்னாத்தா கணவனோட தங்கச்சி கணவன் அங்கே கூட்டுகிற வேலையில் இருக்கிறான். அவனைப் போய்ப் பார்த்து ஒரு வேலை வாங்க வேண்டும். கெட்டியான, முழுக் இளம் மங்கை ஒருத்தி இரு சக்கர வண்டியை ஓட்டிப் போகிறாள். காத்தவராயன் மூக்கின்மீதும், வாயின்மீதும் கை வைத்து கலி முத்திப் போச்க” என்கிறான். அவிழிந்து போன மொடமொட என்ற நாலு முழ வேட்டியைமடித்துத் கட்டுகிறான். பாதமெல்லாம் வெடிப்பு, மழை காணாத கரிசல் காடு போல…
கசாப்பு கடையில் வெள்ளாட்டுக் கடா கட்டிக் கிடக்கிறது. அதை மெல்ல நீவி நீவிக் கொடுக்கிறான் “எங்க ஆடு மாதிரியே இருக்கு” என்கிறான். ஊரிலிருந்த அவனுடைய செல்ல ஆட்டுக் குட்டி ஞாபுகம் வருகிறது. இந்நேரம் அதுக்கு பசிக்கும் ஆத்தா அவிழ்த்து விட்டிருப்பாளா ?” சாலை யோரம் நின்று யோசிக்கிறான். “நான் இல்லாமல் அது மேயாது. நானும் சாப்பிட மாட்டேன். பாவம் அது வாயில்லா உயிர்”
கூனிக் குறுகிக் கடைக் காரனிடம், “வேலை இருக்குங்களா, ஐயா?” என்கிறான். எதற்கு அப்படிக் கேட்கிறான் ? அவன் பணிவு என்று நினைத்துக் கொள்கிறான். அடிமைத் தனம் என்று அவனுக்குத் தெரியவில்லை. என்ன செய்ய ? அது அவனது இரத்தத்தில் கிடக்கிறது. கடைக் காரன் சிரிக்கிறான். அவனுடைய பற்கள் காவி ஏறி இருக்கின்றன, அவன் முகம் சொக்காயித் திருவிழாவிலே சாமி வந்தவன் முகம் போல இருக்கிறது.
“நான் நன்றாகக் கறி வெட்டுவேன்” என்கிறான் காத்தவராயன். “முத்தையாவோட செத்துப் போன மாட்டைக் கூட நாங்க தான் கறி போட்டோம். “ஒரு வேலை தர்றோணும்.” தோளில் கிடந்த துண்டு இடுப்பில் இறங்கியது.
“ஒனக்கு வேலை தெரியும்னு எப்படி நம்புறது ?” என்று கேட்பவனைப் போலக் கடைக் காரனின் முகம் இருப்பதாக நினைக்கிறான். கக்கத்திலிருந்த துணி மூட்டையைக் கீழே வைக்கிறான். அலுமினியக் கூடையில் கிடந்த குடலை எடுத்து அலசுகிறான். கசாப்புக் கடைக்காரன் மற்றொருவனிடம் எதோ சொல்லிச் சிரிக்கிறான். அவர்கள் சிரிப்புச் சத்தமாகக் கேட்கிறது. காத்தவராயன் பேச்க, வேலை யெல்லாம் அதனிடையே அமிழ்ந்து போகின்றன.
அவன் பாலத்தின் மீது நடந்து கொண்டிருக்கிறான். தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுக்கிறான். வெயில் உச்சிக்கு ஏறியிருக்கிறது. அவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. “பசி மிக அதிகமாக இருக்கு, வயிறு கடகடவென்கிறது. ஊரிலேயே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்திருக்கலாம்” என்று எண்ணுகிறான். முழங்கைக்குக் கீழே மணிக் கட்டுப் பகுதியை அடிக்கடி மோந்து பார்க்கிறான். முகம் சுளிக்கிறான் செரித்துடி செரிக்காத இலை, தழை, பிழுக்கையின் வாசம் தான் மிஞ்சியது.
பெரிய ஊர்வலம் ஒன்று வருகிறது_ பெரிய தட்டிகளில் வாசகங்கள் பளிச்சிடுகின்றன. ஊர்வலம் நீண்டுகொண்டே வருகிறது. முழக்கங்கள் விண்ணைத் தொடுகின்றன. அவை அடுக்கு மொழிகளாக, இருக்கின்றன. காத்தவராயனுக்கு அவ்வளவாக விளங்கவில்லை. உற்றுக் கேட்க முயற்சி செய்தான். “தலைவர் வாழ்க !…” அது மட்டுந்தான் புரிந்தது. மேலை வீட்டு வேலாயுதம் கிழவன் நினைவுக்கு வந்தான்: “ஆடு மேய்க்கிறவங்களெல்லாம் அவரைத் தான் தலைவரும்பாங்க. அவருக்கு நெறைய நிலம் உழுவாமச் சும்மாக் கிடந்தது. அதுல ஆடு மேய்க்கத்தான், நைச்சியமா எல்லாரும் அவரைத் ‘தலைவர்!’
அவன் எண்ண ஓட்டம் நின்றது ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. முகங்களில் உற்சாகமில்லை. அவர்களின் குடும்பப் பிரச்சினை முகங்களில் இருந்தது. அவர்கள் சோர்ந்து, போயிருந்தனர். அவர்கள் வெயிலில் வியர்த்துச், சட்டை முதுகுப் புறங்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் நடுப் பகுதியில் சிலர் அரசியல், சமூகப் பிரச்சினைகளை அலசிக் கொண்டு சென்றார்கள்:
“பொழுது சாயறத்துக்குள்ளே ஊரு போயிச் சேர்ந்திடுவமா முதலாமவன் உறுதி செய்து கொள்ள விரும்பினான்.
“போயிடலாம்னுதான் நெனைக்கிறேன்!” இரண்டாமவன் அவனுக்கு ஓரளவு நம்பிக்கை ஊட்டினான் “இரண்டு பொழுது வீணாப் போச்சு. அவன் கொடுத்த ஐம்பது ரூபாயிலே ஒண்ணும் மிஞ்சினபாட்டைக் காணும்”- முதலாமவன் சற்று அலுத்துக் கொண்டான்.
“சரக்குத் தான் மிச்சம். சும்மா சுர்ருனு ஏறுச்சில்ல ?!” சாராயத்தின் வேகத்தை உச்சியில் ஏற்றினான்,
“என்னத்துக்கு ஊர்வலம் ?” வெள்ளைச் சட்டை போட்டவன் இடை வெட்டாக இடையிலே நுழைந்தான்.
“இட ஒதுக்கீடாம்” மூன்றாமவன் குறுக்கிட்டான். “இல்ல, ஒயின்ஸ மூடச் சொல்லிக், கள்ளுக் கடையைத் திறக்கச் சொல்லி” இரண்டாமவன் கூறினான்.
“குழந்தைங்க நலப் போராட்டமாம்” நான்காமவன் வேறு ஒரு காரணம் சொன்னான்.
“இவன் தப்பாச் சொல்றான். தலைவரோடே சின்ன வீட்டுக்குப் பொறந்த ஐந்தாவது குழந்தை செத்துப் போச்சாம். அதுக்கு மருத்துவரை நீக்கச் சொல்லிக்” “கால் சராய் போட்டவன் சற்று விரிவாக விளக்கம் கொடுத்தான் “போடா மடையா !தலைவருக்கு இன்னும் கல்யாணமே ஆகலைடா! அவர் என்றும் பதினாறு வயகச் சிங்கமடா’ !” கட்சி வேட்டி கட்டியவன் கட்சி கட்டினான். “மத்தியானம் ஒரு மணிக்கு ஊர்வலம் முடிஞ்கருமா ? போட்டது போட்டபடிக் கெடக்கும் வீட்ல” வீட்டுக் கவலை வந்துவிட்டது.
“சம்சாரமெல்லாம் இருப்பாங்கல்ல ?” நான்காமவன் கேட்டான் “அவ ஏதோ மகளிர் போராட்டம்னு போயிருக்கா அதுக்கு இருபத்தைந்து ரூவாய் கிடைக்கும்”. முதலாமவன் மகளிர் போராட்டம் என்றது இலவசம் இல்லை என்பது போலப் பேசினான்.
…?! நான்காமவனுக்கு வாய் அடைத்துவிட்டது. ஊர்வலத்தின் கடைசியில் வேறு இருவர் நெரிசலைத் தவிர்க்கின்ற முயற்சியில் முனைப்பா இருந்தனர் “இன்னித் தேதிக்கு நாடே கெட்டுப் போச்சு, எதுக்கெடுத்தாலும் போராட்டம் தான்…” வயதானவர் கூறினார்.
“அப்ப நீங்களும் தானே வர்றிங்க !” மற்றொருவர் கேட்டார். “அட,நீ ஒண்ணு நான் ஓய்வூதியப் பணம் வாங்கப் போகணும். அப்படியே “இராகம்” திரை அரங்கிலே ஓடற பலான படத்துக்குப் போகணும். நெறையக் “காட்சிகள்” இருக்காம் !”-வயதானவர். “அப்ப நானும் வர்றேன்” மற்றொருவர். ஊர்வலத்தின் ஓரமாக வந்து கொண்டு இருந்தனர். இளைஞர்கள் இருவர் “உனக்குத் தெரியுமா ? இராகவனும், தேவியும் காதல் பண்றாங்களாம்!” “ஓ அப்படியா! என்னால் இதை எந்நாளும் நம்ப முடியாது. நல்ல அழகு !ஆகா நான் எதிர்பார்க்காத செய்தி ஆனாலும் அவளுக்கு மிகவும் திமிர். இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
“ஆம், நீ சரியாச் சொல்லிவிட்டாய். அவளுக்குக் கொழுப்பு அதிகம்தான். உனக்குத் தெரியுமா?நான்கூட அவளுக்குக் காதல் கடிதம் கொடுத்தேன்.”
“ஆகா… அழகு. நல்ல பொருத்தம். அப்புறம் ?”-தொப்பி இல்லா இளைஞன். “அப்புறம் என்ன அப்புறம்… என் கண்முன்னே கிழித்துப் போட்டு விட்டாள்” தொப்பி பேட்ட இளைஞன்.
(மனத்திற்குள் நினைத்துக்கொள்கிறான்) “என்னுடையதையும் தான்”- தொப்பி இல்லா இளைஞன்.
“அவளுக்கு மிகவும் திமிருதான். இந்தச் சோகத்தை மறக்கக் “குடிப்பகம்” போகலாமா?” இருவரும் ஒரே குரபில் கேட்டனர்.
“ஆகா, அருமையான யோசனை, எனக்கும் என் காதவி ஞாபகம் வந்திருச்சி. அதை மறக்கக் குடிப்பகம் போகலாம்” மூன்றாவதாக ஒரு தாடிக்காரன், அந்த இருவருக்கும் ஆலோசனை கூறினான்.
“உங்கள் காதலி மாற்றானைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டாளா?”- தொப்பி போட்ட இளைஞன் வினவினான்
“இல்லை அவள்தான் என் மனைவி”-தாடிக்காரன்.
“ … …!? மற்ற இருவரும் விழித்தனர்:
கரத்தவராயன் வாய் பிளந்து ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு மாதிரிக் காலை மாற்றிச் சாய்ந்து நிற்கிறான்.
கட்சிக் கொடியைத் தலையில் கட்டியிருக்கின்ற ஒருவன் ஊர்வலத்திலிருந்து வெளியேறிக் காத்தவராயனிடம் வந்து நிற்கிறான்.
“இங்கே நின்னுக்கிட்டு என்ன பண்ணறே ?”
“ஐயா”
“காவலர் வந்தா என்னாவறது ? உன் பேர்என்ன?”
“காத்தவராயனுங்க…”
“ஏன் இவ்வளவு தாமதம் ?”
“என்னங்க ஐயா?, புரியலியே?”
“அப்ப, நீங்கதான் ஆத்தாவோட சின்னம்மா கணவனோடத் தங்கச்சி மருமானா?”
“என்னது ?”
“ஆத்தாவோட சின்னம்மா கணவனா ?”
“சீக்கிரம் வா:. ஜயா கோவிச்சுக்குவாரு…” கட்சிக் கொடிக்காரன் காத்தவராயனைத் தலைவரிடம் அழைத்துப்போகிறான்.
“ஐயா இவன் நம்ம ஆளுங்க. ஊர்வலத்துக்கினே கூட்டியாந்திருக்கேன். வரக் கொஞ்சம் தாமதமாயிடுச்சாம்: என்னோடக் கணக்கு அம்பத்தி நாலு பேருங்க…” காத்தவராயனிடம் ஒரு தட்டியைக் கொடுத்து ஊர்வலத்திற்கு முன் புறம் கொண்டு வந்து நிறுத்துகிறான்.
“எங்கே வீரமுழுக்கமிடு, பார்க்கலாம்!தானைத் தலைவனே! எங்களின் உயிரே, ஏழைகளின் இறைவனே, நீ வாழ்க!” எங்கே சொல்லு பார்க்கலாம்” என்றான் கட்சிக் கொடி கட்டியவன்.
“ஆகா !அருமைத் தலைவருக்கு இப்படியும் ஒரு பேர் இருக்கா மடையன் இதை எங்கிட்டச் சொல்லவே இல்லையே !சாராயத்துக்குக் காசு கேட்கட்டும்: உதைக்கிறேன் அவனோட நெஞ்சிலே…!”
“யாருங்க அது ஏழைகளின் இறைவன், மதுரை வீரன் சாமிங்களா?”
ஊர்வலத்தின் நீளம் குறைந்திருந்தது. நிறைய இடைவெளி, பலரும் வாடிப்போயிருந்தனர். தள்ளு வண்டிக்காரன் ஊர்வலத்தின் ஊடே மோர் விற்றுக் கொண்டிருந்தான். எவனோ ஒருவன் மட்டும் தீனக் குரலில் ஏதோ கத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு கையில் தட்டியும், மற்றொரு கையில் துணி மூட்டையும் ஏந்திக் காத்தவராயன் நடந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் பசியால் இருண்டு கொண்டிருந்தன.
ஊர்வலம் காந்தி சிலையை அடைந்துவிட்டது. தலைவர் சீருந்திலிருந்து இறங்கி ஊர்வலத்தின் பின் புறமிருந்து, முன்புறம் போனார். தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார்.
ஏதோ பத்துப்பேர் தீனக் குரலில் முழக்கம் இட்டனர். மற்றவர்கள் எப்பொழுது ஊர்வலம் முடியும் என எம்பி எம்பிப் பார்த்தனர். அவர்கள் உடல் வியர்த்து ஒழுகியது.
தலைவர் முகவர்களை முறைத்தார். முகவர், காக வாங்கிக் கொண்டு ஊர்வலத்துக்கு வந்தவர்களை முறைத்தார். அனைவரும் “தலைவர் வாழ்க!” என்றனர்.
காத்தவராயன் விழி பிதுங்க நின்று கொண்டிருந்தான். தலைவர் தொண்டர்களைத் தட்டி கொடுத்தார். ஒருவன் காலில் விழுந்து ஆசி பெற்றான். தலைவர் காத்தவராயனிடம் வந்தார்.
“ஐயா தி நகர்க்கு எப்படிங்க ஐயா போகணும் ?”
“கட்சியின் இளஞ்சிங்கமே ! சொல். உன் கோரிக்கையை நான் நிறைவேற்றுகிறேன். இளைய இரத்தமே, தீயில் கட்டுப் பொசுக்குவோம் அநீதியை…”
“ஐயா… தி. நகருக்கு”
“அவன் தலைவர்க்கிட்டே என்ன கேட்கறான்?”-
“தி.நகர்…”- இரண்டாமவன்.
“தீயில் சுட்டுப் பொசுக்பகுவோம்ங்கறாங்க” – மூன்றாமவன்:
“என்னவாம்:.”-நான்காமவன்.
“தீ ங்கறாங்க” – ஐந்தாமவன்.
“என்னது !தீயா .. எங்கே? எங்கே? ஐயோ! நான் ஊருக்குப் போகணுமே!” -நான்காமவன்.
ஊர்வலத்தின் நடுப்பகுதியில் விட்ட உரையாடல் தொடர்கிறது:
“என்ன சொல்றாங்க” ? –ஒருவன்
“தீக்குளிக்கறானாம்… ஒரு கிராமத்தான்.” – மற்றொருவர்
“என்னது?கிராமத்தானா… ? இல்லையப்பா அணிச் செயலாளர்” – கட்சி வேட்டி கட்டி இருந்தவர்.
“டேய்… பெட்ரோல் கேனை எடுடா: கொண்டா இப்படி” வாங்கிக் கொண்டு வேகமாக முன்னோக்கி ஒடுகிறான் – கட்சித் துண்டு கட்டியவன்.
“ஏய்… பெட்ரோல் எதுக்கு” இரண்டாமவன்
“இளைஞர் அணிச் செயலாளர் தீக் குளிக்கிறாராம்!”-ஐந்தாமவன்
“என்னது ?! இளைஞர் அணிச் செயலாளர் தீக்குளிக்கிறாரா நான் தாண்டா” அவன். ஊர்வலத்திலிருந்து தப்பி ஓடுகிறான். இரண்டாமவன்.
கட்சித் துண்டு கட்டியவன் காத்தவராயன்மீது பெட்ரோலை ஊற்றுகிறான். மழையில் நனைந்த கோழி மாதிரி வெடவெடத்து நிற்கிறான். காததவராயன்.
“இளைஞர் அணிச் செயலாளர் வாழ்க !தீக்குளிக்கின்ற தீரனே! வாழ்க !” முழக்கம் வானைப் பிளந்தது. காத்தவராயன் தப்பி ஓடப் பார்க்கிறான். ஆனால், முடியவில்லை.
எவனோ நெருப்புக் குச்சி எடுத்து உரககிறான்.
“ஐயோ…! ஆத்தா !”காத்தவராயன் எரிகிறான். யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. காசு வாங்கிய தொண்டர்கள் வெடவெடத்து ஓடுகிறார்கள். காவலர்கள் ஓடி வருகிறார்கள்! காத்தவராயன் எரிந்து சாய்கிறான். காந்தி சிலை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தலைவர் கண்ணாடிக் குவளையில் இருக்கின்ற விஸ்கிக்குள் பனிக் கட்டிகளை எடுத்துப் போடுகிறார்.
“எலேய் !… தீக்குளித்த தொண்டன் யாருலே?”
“நம்ம மகளிர் அணித் தலைவி முத்தம்மாவோட தம்பிங்க”
“அப்படியா!… கட்சி நிதியிபிருந்து முத்தம்மாளுக்குக் கொடுக்கச் சொல்லு…”
“சரிங்க, ஐயா…”
முத்தம்மாள் மாராப்பு இல்லாமல் கட்சித் துண்டு கட்டியவனுக்குக் காலை அமுக்கிக்கொண்டிருக்கிறாள்.
முத்தம்மாள் “அது யாருய்யா… ? என்னோட தம்பி கறுப்பு சாமி?”
“யாருக்குத் தெரியும்… ?!”- கட்சித் துண்டு.
காத்தவராயனுடைய ஆத்தாள், “மகன் திரும்பி வருவான்” என்று பேருந்து நிறுத்தத்திலேயே காத்துக்கொண்டிருக்கிறாளாம் பைத்தியமாக. யாரேனும் அவளைப் பார்த்தால், காத்தவராயனைப்பற்றி அவளிடம் சொல்லுங்கள்.
– ஜி.இரமேஷ், சேலம்
– மனங்கவர் மலர்கள் , முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்