பாரம் சுமப்போம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 159
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆதிகாலத்து ரோமர்கள் பிறந்த குழந்தைகளைக் கையிலெடுத்து முகத்தை ஆகாயத்துக்கு நேரே வைத்து ‘மேலானவைகளையே நாடுங்கள்’ என்று சொல்லிப் பிரதிஷ்டை செய்வார்களாம்.
சில இஸ்லாமியர் முகமதுவின் கல்லறையைப் பார்த்தபின் தங்கள் கண்களைப் பிடுங்கிப் போடுவது பண்டை வழக்கமாம்,
மகிமையான கல்லறையைப் பார்த்தபின் கேவல மானவைகளைப் பார்த்துக் கண்களைத் தீட்டுப் படுத்தக் கூடாதென்பது அவர்கள் எண்ணம். அதாவது மேலான வைகளைத் தவிர கீழான ஒன்றையும் நாடக்கூடாதென் பது பொருள். சிமியோன் கிறிஸ்துவைப் பார்த்தவுடன் அந்த மேலான செய்தியை எடுத்துச் சொல்ல, என்னைச் சமாதானத்துடன் போகவிடும், என்றான்.
பறவைகளைப் பற்றி ஒரு கதை உண்டு.
பறவைகளுக்கு முதலில் இறக்கைகள் கிடையாது. இனியகுரலும் தோகைகளும் மட்டுமே உண்டு. சிறு சுமைகளை அனுப்பி ‘எனக்காகச் சுமந்து கொண்டு வாருங்கள்,’ என்று கடவுள் சொன்னாராம்.
பறவைகளும் அவ்வாறே செய்தன. பாரம் சுமந்து சுமந்து பழகவே இறக்கைகள் தோன்றி விட்டனவாம். அப்படியே நமக்கிருக்கிற சிலுவையாகிய சுமையைப் பொறுமையோடும் பூரிப்போடும் சுமப்போமானால் பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளை நாடும் படி பறந்து போகக்கூடிய இறக்கைகளாகிய விசுவாச மும் பற்றுறுதியும் அன்பும் வளர்ந்து நிலைக்கும்.
“கடினமான வேலையையும் . …. பாரமான நுகத்தையும் லகுவாக்கும்.” [1 இராஜாக்கள் 12:4]
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” [கொலோசெயர் 3;2]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
