கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 1,975 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குழந்தைகள் எல்லோரும் போய்விட்டார்கள். வாசகசாலையின் கதவுகளை ஜேம்ஸ் சாத்திடத் தொடங்கிவிட்டான். பீட்டர் சிவராஜ் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வந்து காரில் வைத்துவிட்டு தேவாலயத்தினுள் மறுபடியும் நுழைகிறான். பிரார்த்தனை மண்டபத்தில் ஆண்டவரின் முன்பு நிற்கிறான். கண்களில் அந்தத் தேவகுமாரனின் முழுஉருவமும் பதிவாகும்வரை இமைக்காமல் நோக்குகின்றான். உதடுகள் மந்திரங்களை ஜபித்துக்கொண்டிருந்தன. மனதுக்குள் ஒரு சிறு புனல் பொங்க ஆரம்பிக்கின்றது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இதேபோன்ற நேரத்தில் வாசகசாலைக்கு அவசர அவசரமாய் நுழைந்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஏதோ கவனத்தில் காரைத் திருப்பிய பீட்டர் தன் பக்கத்திலேயே வந்து கொண்டிருந்த அந்த ஆறாம்படிவ மாணவியின் சைக்கிளை மோதிவிட அது தடுமாறி சாலையில் விழ அந்த மாணவியின் கைகள் கால்களில் குருதி சொட்ட ஆரம்பிக்கின்றது.

சாலையில் கூட்டம் கூடி அவனை மோசமாகத் திட்டிவிட்டு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது, அவள் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அவனிடம் வந்து மன்னிப்பு கேட்டாள்.

தனது கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என்று சொல்லி அந்தக் கூட்டத்தை அனுப்பிவிட்டுத் தன் சைக்கிளைத் தூக்க முயன்றபோது, அது அவளுக்கு உதவ முடியாத நிலையில் கிடந்தது. பீட்டர் அவளைத் தன் காரில் அழைத்துப் போய் மருத்துவமனையில் வெளிநோயாளியாகச் சிகிச்சை பெறச்செய்து பின்பு தானே அவளது வீட்டிலும் கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்பினாள். அந்த எதிர்பாராத சந்திப்பே அவர்களை நண்பர்களாக்கியது. அவள் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தான். வேலைநேரம் போக ஓய்வு நேரங்களில் வசதி குறைவாள் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இலவசமாகக் கல்வி போதித்து வந்தாள். ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் அவளுக்கு அளவு கடந்த பிரியம்.

அவளது அந்த பரோபகார குணம் பீட்டரை மிகவும் கவர்ந்தது. அவனுக்கு ஓய்வு கிடைக்கும்போது அவளைப் பார்க்க அவளது வீட்டுக்குப் போவான். நீண்ட நேரம் பேசுவார்கள். வீடு திரும்பும்போது வாசல்வரை வந்து அவனுக்குக் கைகாட்டி வழியனுப்புவாள் அவள்.

அவனது வாசகசாலைக்கு மாலை நேரங்களில அவள் செல்வாள். அவளது வருகை அவனது மனதுக்கு ஊக்கமளிக்கும். அவனது நேர்த்தியான செயல்களில் அவள் மனம் ஆழமாய்ப் பதியும். பெருமிதத்துடன் வீடு திரும்புவாள்.

சில மாதங்களில் இரண்டு குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களின் திருமணம் நடந்தது. கீதா பீட்டரின் மனைவியான பின்பு வேலைக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டாள். கணவனின் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.

தனக்காகவும், தன்மேல் கொண்டுவிட்ட காதலுக்காகவும் எல்லாவற்றையும் துறந்துவிட்டு வந்து விட்ட அவளுக்கு எல்லாம் தானாகி நின்றான் அவள்.

“கர்த்தரே! வந்த அன்பான பெண்ணுக்கு எந்தக் குறையும் வைக்காதவனாய் என்னைக் காத்தருளும்” என்று வேண்டிக் கொண்டான். எந்தக் காலகட்டத்திலும் அவள் மனம் வாடாமல் கண்கலங்காமல் நான் அவளைக் காத்திருப்பேன் என்று உறுதியிலிருந்து நான் நழுவாமல் இருக்க எனைக் காத்தருளும் என்று மண்டியிட்டான். ஆனால் அவனுக்கு கர்த்தர் கொடுத்த சோதனையாகவோ என்னவோ அவர்களின் அன்பான வாழ்க்கைக்கு ஒரு அடையாளம் இன்னும் அந்த வீட்டில் நடமாடவில்லை. பலவித முயற்சிகளும் தோற்றுப்போய் கடைசியாக இருவரது மருத்துவ சோதனையில் கீதா தாய்மை அடைய முடியாத நிலையில் இருப்பது தெரிய வந்தது.

கீதா பெருந்தன்மையோடு அவனிடம் பேசினாள். “நமக்கொரு குழந்தை வேண்டுமானால் நீங்கள் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அதுதான் நம் குறையைப் போக்கும். எனக்கும் மகிழ்ச்சி கிடைக்கும். என்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை நிச்சயமாய்க் கிடைக்கும் என்று மன்றாடினாள். அவன் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான்.

பீட்டரின் மனதில் எதுவோ பெரும்புயலாக வீசிக் கொண்டிருந்தது. அவளுடன் இணைந்தபின் வரும் ஐந்தாவது கிருஸ்துமஸ் இரவு அது. எல்லா வீடுகளிலும் கர்த்தர் குழந்தையாய் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்போது தங்கள் வீடு மட்டும் வெறிச்சோடி கிடப்பது போன்ற பிரமை அவனுக்கு.

மனதுக்குள்ளேயே விம்மி அழுதான். ‘கர்த்தரே! எனக்கு ஏன் இந்த சோதனை! கீதாவின் விருப்பத்திற்காக அவளின் சந்தோஷத்திற்காக நான் இன்னொருத்தியை மணம் புரிந்துகொண்டால் அவளுக்கு குழந்தை பிறக்கும் என்பது என்ன நிச்சயம்!

அப்படியே ஒரு குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தை இவளை அம்மா என்ற அழைக்க அதன் தாய் எப்படி ஒத்துக் கொள்வாள்! அவள் நல்லவளாக இல்லாமல் பொல்லாதவளாக இருந்துவிட்டால் இப்போதுள்ள இந்த நிம்மதியும் செத்துப் போகுமே ஆண்டவரே!

‘எனக்கு தெளிவைக் கொடுங்கள். என் மனதுக்குள் அமைதி நிலவ வழிகாட்டுங்கள்..’ மண்டியிட்டுக் கண்மூடி கையேந்தி அமர்ந்திருந்த பீட்டரிடம் ஜேம்ஸ் ஓடிவந்தாள். “சீக்கிரமாய் வெளியே வந்து பாருங்கள்” என்றழைத்தாள். அந்த மங்கிய இருளில் தேவாலய நுழைவு வாயிலில் ஒரு அட்டைப் பெட்டிக்குள் ஒரு சிறுமழலையை யாரோ அழுக்குத் துணியில் சுற்றி வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். கண்ணில் நீர் ததும்ப வந்து காட்டினாள்.

“இது யாருடைய குழந்தை ஜேம்ஸ்” ஆவலுடன் கேட்டாள்.

“தெரியல பீட்டர். இங்கேதான் நிக்கிறேன். இதை யார் கொண்டாந்து போட்டார்கள்னு தெரியல” என்று தலையை ஆட்டினாள்.

அந்தக் குழந்தையை, ஜேம்ஸ் மாறி மாறிப் பார்க்கிறான். கண்கள் அங்கிருந்து தாவி அந்த தேவகுமாரனின் இல்லத்தில் பதிகின்றது. மனதில் நிறைவு… முகத்திலும் தெளிவு!

அட்டைப் பெட்டியில் ஏதேனும் தடயங்கள் காணப்படுகின்றனவா என்று துழவினாள். ஒரு டைரியும் இரண்டு சோடி சட்டைகளும் இருந்தன. டைரியைத் திறந்தபோது…

“அன்புள்ளம் கொண்ட நண்பரே! இந்தக் குழந்தை உங்களிடம் கிடைத்தால் அதை வீசி விடாதீர்கள். இது உங்கள் குழந்தை என்ற உரிமையுடன் வளர்த்து வாழ வையுங்கள். காலம் பார்த்துக் கர்த்தர் என் வழியாக இந்த செல்வத்தை உங்களுக்கு வழங்குகிறார். இது கர்த்தரின் கருணை. அந்த தேவகுமாரனின் திரு உள்ளம் மறுக்காமல் எடுத்துச் செல்வீராக..” என்று டைரியில் எழுதப் பட்டிருந்தது.

ஜேம்ஸ் இன்றைக்கு எங்கள் இல்லத்திலும் தேவகுமாரன் எழுந்திருக்கப் போகிறார். நீயும் எங்கள் வீட்டுக்கு வந்து விசேஷத்தில் கலந்துக்கோ. காரினுள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது அந்த சின்னஞ்சிறு சிலுவை.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *