நிழலின் அருமை வெயிலில் தெரியும்
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 246
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மாது பிறவியிலே ஊமையாகவும் செவி டாகவும் இருந்தாள். அவளுக்கு முதற் குழந்தை பிறந்தபின், ஒரு நாள் குழந்தை தொட்டிலிற் கிடந்து உறங்கும் நேரம், அவள் ஒரு பெரிய பாறாங் கல்லுடன் தொட்டிலின் பக்கம் செல்வதை அண்டை அயலிலுள்ளவர்கள் கண்டு, அவள் பித்துப் பிடித்துக் குழந்தையைக் கொல்லப் போகிறாளோ என்று அலறி ஓடினர்.
ஆனால் அவள் தொட்டிலின் அருகில் சென்ற தும் அக்கல்லைத் தலைக்குமேல் உயரத் தூக்கித் தடாலென்று நிலத்தின்மீது ஓங்கி எறிந்தாள். அவ் வொலி கேட்டுக் குழந்தை திடுக்கிட்டு விழித்த வுடன், அவள் அக்குழந்தையை எடுத்து வாரி அணைத்துக்கொண்டு அன்புக் கண்ணீர் விட்டு அழுதாள்.
தன்னைப்போலத் தன் குழந்தையும் செவி டாக இருத்தலாகாதே என்ற கவலையினால் அவள் செய்த தேர்வு அஃது என்று கண்டு, அயலார். அச்சம் நீங்கி அகன்றார்கள்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.