நில விழுக்காடும் நிலையழிந்த மனிதர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2025
பார்வையிட்டோர்: 946 
 
 

வீடு சாஸ்வதமில்லை சத்தியம் ஒரு தனிப் பெரும் இருப்பு கண் முன்னால், காட்சி கொண்டு, உலவுகிற மனிதர்களே திடீரென்று காணாமல் போய் விடுகிறார்கள். அவர்கள் போய் மறைகிற இடம், தான் எல்லோருக்கும் பொதுவானது தலைக்கு மேலே, மரணச் சுழல், இதன் கீழ் இருந்தவாறே, அல்லது வாழ்ந்து கொண்டே அதை ஒரு நொடியில் மறந்து போய் விடுகிற,சுபாவம் தான் பல பேருக்கு அவர்களில் ஒருத்தி போலாகாமல், அன்பு வழிபாடு செய்வதொன்றையே தன் மூச்சாக உணர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதிக்கு இடம் பெயர்ந்து கொழும்புக்கு வந்த பின், நிழற், கோலங்களைப் பார்க்கிற, போதெல்லாம், கண்ணை இருட்டிக் கொண்டு, வந்தது. கல்யாணமானாலும் அவள் இந்த உலகத்தினுள் வராமல், இற்றை நாள் வரை, ஒரு தபஸ்வினி போல, வாழ்ந்து, கழித்ததெல்லாம், வெறும் கனவல்ல.

அப்படி வாழ்வதற்கான தகுதி, அவள் இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று கடவுள் கொடுத்த வரம் அந்தக் கடவுளை நினைக்கும் போதெல்லாம் சாடை மாடையாக, வல்ல முழுசாக, அப்பா முகமே தெரியும் எடுபட்ட கோலமாக, இல்லாமல், அவர் வாழ்ந்த, கதை அத்துணை சிறப்பு வாய்ந்தது. இப்போது அவர் இல்லையென்ற, உணர்வு மயக்கத்தை விட, நிலத்தை சொந்த இருப்பை, இழந்து விட்ட பெரும் சோகமே அவளைப் பெரிதும் நிலை குலைய வைக்கும்.

அப்படியாக நிகழ்ந்து விட்ட பெரும் சோகத்தின் காரண புருஷர்களாக வழி, தவறிப் போன அரசியல் பிரமுகர்களை நினைக்கும் போதெல்லாம் தீராத மன உளைச்சலே ஏற்படும். அவள் தமிழின் மீதும் அதன் சமூகத்தின் மீதும் கொண்டிருக்கிற ஆழ்ந்த பக்திக்கு நிகராக வேறு எதுவுமேயில்லை. இப்போது அதைப் பற்றி மனம், திறந்து பேசக் கூட ஆள் கிடையாது . எல்லாம் தூர என்ன மறு துருவமாகவே போய் விட்ட மந்த நிலைமை தான்.

அவள் இருட்டு யுகத்தின் சரியான கணிப்பு இதுவே. அவள் எங்கே வந்து நிற்கிறாள்? சாகிற போது, இந்த மண் கூட இல்லை கொழும்பிலே வந்து சாகவேண்டு மென்பதே இன்றைய விதி, இதற்கு பலியான பலபேர்களில் ஒருத்தியாக இன்று அவளும் மூச்சிழந்து கிடக்கிறாள். அவளைச் சுற்றிலும் முழுவதுமாக சிங்கள பிரதேசம் சிங்களவர்களோடு, வரிந்து காட்டிக் கொண்டு, சண்டை போட்டதன் விளைவே, இன்று அவளும் முடியிழந்து கிடக்கிறாள். இந்த முடியிழப்புக்குக் காரணம் தீராத பகை தான். இதை விரிவுபடுத்தி எழுதப் போனால், அரசியல் சகதிக்குள்ளேயே அவளும் போய் விழநேரிடும். அதை வெறுமனே வேடிக்கை பார்க்க மட்டும் தான் முடிந்தது. இதன் பொருட்டு, தன் தாய்த் தமிழும் கண் சிமிட்டி, கை கொட்டிச் சிரிப்பதாக, ஓரு உள் தோன்றல், உறுத்தல் சாகும் வரை இது போகாது.

இனி என்ன எழத்தான் முடியுமா? விடியுமா வாழ்வு? தமிழ் மண்ணே காலியாகி விட்ட பின் அஸ்தமன சூரியன் இருப்புக் கொள்ளாமல், அலைவது போல் பட்டது. இந்தப் படுதலின் உச்ச விளிம்பில் , இருந்து கொண்டு பகட்டு வாழ்க்கையில் பகற் கனவு காணும் மனிதர்கள் குறித்து அவர்கள் அந்த வெளிநாட்டு வாசிகள் எல்லாம் அடைந்து, சுகபோகிகளாய் ஒளிர்ந்து சிறப்புற்ரு, வாழ்வது போல், பட்டாலும் உண்மை அதுவல்ல. இந்த மாயத் தோற்றத்துக்கு அப்பால் , நிதர்ஸ்னமான உண்மை யின் தெய்வீக இருப்புக்கு இது சாவு மணி அடித்து விட்டதாகவே தோன்றும் . இந்த அரை வேக்காட்டு தமிழர்களை பார்க்கும் போதெல்லாம் இத பேரிழப்பை எண்ணிவாய் விட்டு அழ வேண்டு ம் போல் தோன்றும். இனி இழப்பதற்கு, ஒன்றுமில்லை.

மூத்த மகனின் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, ரகு லண்டனை விட்டு மனைவியுடன் பாரதியின் இருப்பிடம் தேடி வந்திருந்தான். அதுவும் வேர் கழன்று போன ஒன்று தான் அவளுக்கு மூச்சு விட மறந்த நிலை.

மண் மீட்புக்காகப் போராடி, கடைசியில் இருந்த கொடியும் அறுந்த வீழ்ந்து விட்ட நிலை தான் உண்மையில் இந்த சண்டை எதற்காக நடந்தது? சுதந்திரம் என்றால், என்ன? வெள்ளை மண்ணிலே, போய் எல்லாம் தோலுரிந்து வாழ்வதைவிட , தாய் மண்ணில் செத்தே போயிருக்கலாம் அப்பேர்பட்ட மண்.

அவளுக்கு மகனைக் கண்ட போது, இதற்காக அவனைக் கட்டிக் கொண்டு அழலாம் போல், துயரம் முட்டியதுஅப்போது, அப்படி அவள் கலங்கி நிற்பதைப் பார்த்து, கவலையாக அவன் சொன்னான்.

இதுக்குத்தான் அப்பவே நான் சொன்னன்.

என்ன சொன்னனி?

சொல்லுறன் அப்பாவும் போய் விட்டார் தனிய உங்களை விட்டால் எங்களுக்கலே பெரும் பாவம் . எங்களோடு வந்திடுங்கோ அம்மா. என்றுசொன்னதை , நீங்கள் மறுத்திட்டியள். இனி வருவியளோ தெரியேலை. இப்பவும் சொல்லுறன் அங்கை நீங்கள் வந்திட்டால்,பூவாய் உங்களை வைச்சிருப்பம்,

வாழ்ந்த காலம் சிறக்கேலை எத்தனையோ இழப்புகள் நடுவே இழந்ததையே இன்னும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் இழப்பதற்கு இப்ப ஒரு பிடி மண் கூட இல்லை உனக்கு இது குறையாகப்படவில்லையா?

என்னம்மா பகிடிக் கதை சொல்லுறியள்? காசிலே படுத்துப் புரண்டு கொண்டு வாழ்க்கையை விடுறது, அல்லது வாழாமல் போறது, எந்தவிதத்திலே நியாயம் என்று எனக்கு விளங்கேலை. நாங்கள் பிறந்தது மண்ணை கட்டிக் கொண்டு அழவல்ல , அனுபவிக்கத்தான் அது கிடைச்சிருக்கே , இதை நினைச்சு சந்தோஷப்படாமல், மண்ணும் மண்ணாங்கட்டியும் இது ஆருக்கு வேணும்? சொல்லுங்கோவம்மா என்றான் அவன் உணர்ச்சி கொந்தளிக்க,

அதற்கு பாரதி கூறினாள் எனக்கு வயசு எழுபதாகுது. நான் சொன்னால் நீ நம்பமாட்டாய். விழுந்து விழுந்து சிரிப்பாய் இப்ப நீ வாழ்கிற உலக ம் இது தான் காசு வந்த, பின் ஊரிலே வாழ்ந்த கதையை நீ நம்பப் போறதில்லை ஆனால் இது தான் நிஜம். இந்த பகற் கனவு வாழ்க்கைக்கு முன் நீ என்ன, நானும் பொய் தான்.

என்னம்மா குழப்புறியள்,?

உன்னைக் குழப்பி அதிலை குளிர் காய்கிற ஆள் நானில்லை உண்மையை சொல்ல நேர்ந்தற்காக இப நான் வெட்கப்படுறன் நீ இதை அறிய வேண்டும் .ஆணி வேரே கழன்று போச்சு இனி ஆன்மா எதற்கு? என்னை தனிய இருக்க விடு. இப்படி விதேசிகளாய் இருந்து, சாவதை விட இது மேல் சொந்த மண் கொஞ்சமாவது ஒட்டும்.

போதும் நிறுத்துங்கோவம்மா இந்தப் பழம் புராணத்தைக் கேட்க எனக்குத் தலை சுத்துது.

நான் இனிப் பேச வரேலை. என்ரை மனசிலே, முட்டி வழிகிற சோகத்துக்கு வடிகால் தேடி இதையெல்லாம் நான் சொல்ல வரேலை என்ரை பிள்ளை நீ, இரத்தத்தின் இரத்தம் நீ 1இப்படி பிரிந்து போனதுக்கும் இது தான் காரணம் காசு வழியைக் கண்ட உன்னிடம் போய் கடவுள் பேச்சை எடுத்ததே பெரும் பிழை. நான் கடவுளாகவே இருந்திட்டு போறன் . நீ காசிலே கரைந்து போன வெறும் நிழல் தான் என்று நினைக்குப் போது தான் பெரும் மனவருத்தமாக இருக்கு நீ வந்த காரியத்தைப் பார் . நான் கண்ணை மூடிக் கொள்கிறன்.

பாரதி கனவுலகிலிருந்து பேசுவது போல் ரகுவின் செவிகளுக்கு அது ஜீரணமாகவில்லை பெரும் மனவருத்ததோடு அவன் நினைவுகூர்ந்தான். அம்மாவுக்கு புத்தி மாறாட்டம் தான் நேர்ந்து விட்டது . இந்த வயசுக்கு இது என்ன புத்தி கூட குழம்பிப் போகும் யாருக்கு புத்தி மாறாட்டம் குழப்பம் மயக்கம் எதில் என்பதை அவனென்ன, கடவுள் தான், தீர்மானிக்க வேண்டும்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *