நாளும் மாற்றமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 56 
 
 

நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது.

லிங்காபுரம் என்ற ஒரு கிராமம் இருந்தது, அந்த கிராமம் மிகவும் செழிப்பான ஒரு கிராமம். அதில் சேகர் என்ற ஒரு விவசாயி வசித்து வந்தார். அவர் மிகவும் தாழ்மையானவர், அமைதியானவர், கடினமாக உழைப்பவர் அவருக்கு மகன், மகள் இருந்தார்கள் அவருடைய மனைவியும் அவர் செய்யும் தொழிலுக்கு எல்லாம் துணையாக இருப்பாள்.

சேகர் ஒரு வெங்காயம் நாத்து நடும் விவசாயி இவர் நிலத்தில் மட்டும் நடுத்தர விளைச்சல் பலன் மட்டுமே தரும் ஆனால் இவருடைய நண்பர்கள் நிலத்தில் எல்லாம் அதிக அளவில் விளைச்சல் தரும்.

இதைப் பார்த்த சேகர் அவர்கள் மீது சிறிது அளவு கூட பொறாமைப்பட மாட்டார் அவர்களுடன் போட்டியும் போட மாட்டார் இவர் உண்டு இவர் வேலை உண்டு என்று இருப்பார்.

சேகர் தன்னுடைய நிலத்தில் நல்ல விளைச்சல் பலன் தருவதற்கு எவ்வளவோ முயற்சிகளை செய்து கொண்டிருந்தார். அவர் மனைவி அவரைப் பார்த்து ஒரு நாள் நீங்கள் வேறு ஏதாவது விளைச்சல் செய்யலாமே ஏன் இந்த வெங்காயம் விளைச்சலை செய்து விட்டு இதுவே விதி என்று கிடக்கிறீர்கள் இதை விட்டு விடுங்கள் வேறு ஏதாவது செய்யலாம் வாருங்கள் என்றாள்.

அதற்கு சேகர் கொஞ்சம் பொறு எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறாது என்று சொல்லி தன் வேலையை பார்த்தார். ஒரு நாள் நன்கு காற்று மழை அதிகமாக வீசியது அந்த மாவட்டம் முழுதும் வீசியது நல்ல காற்று மழை அனைத்து விவசாயிகளின் விளைச்சலும் பாழாயின அனைத்து செடிகளும் மிளகாய், வெங்காயம், கத்திரிக்காய், போன்ற செடிகள் எல்லாம் வேருடன் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு போயின கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு மழை காற்று தொடர்ந்து இருந்தது.

சேகரின் வெங்காயச் செடியும் மண்ணில் இருந்து வெளியே வந்தன. ஆனால், சேகரின் எல்லா செடியிலும் கொத்து கொத்தாக வெங்காயம் இருந்தது மற்ற யார் நிலத்திலும் இந்த அளவில் இல்லை பிஞ்சுகளாக தான் இருந்தது. அந்த நேரம் பார்த்து வெங்காயம் விலை மிக அதிகமாக உயர தொடங்கினது ஒரு கிலோவே மிக அதிக விலையில் இருந்தது. லிங்காபுரம் கிராமத்திலேயே சேகரின் நிலத்தில் மாத்திரம் தான் அந்த நேரம் பார்த்து நன்கு விளைச்சல் பலன் கொடுத்து. அவர் அதிக விலைக்கு விற்று அதிக லாபம் பார்த்து இன்னொரு நிலத்தையே வாங்கி விட்டார்.

பிறகு சேகர் தன் மனைவியை பார்த்து மிகவும் சந்தோஷத்துடன் நான் சொன்னது போலவே நடந்திருச்சு பார்த்தியா ” நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது”.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *