நம்பிக்கை!





என்னயிது எந்த நேரமும் செய்தி செய்தியெனக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமிருக்குறீங்க! கொஞ்சம் மாற்றித்தான் பாருங்களேன். மற்றைய சேனல்களில் பாட்டு அல்லது படமேதும் போட்டால் அதைப் பார்த்துக் கேட்டு மனசைக் கொஞ்சம் இலகுவாக வைத்துக் கொள்ளலாமே!. நான் சொல்லித்தானே. இருக்கின்றேன். ஒரு நாளைக்கு ஏதாவது ஒருச்செய்தியை மட்டும் கேட்போம். இந்தத் தொற்று சூழ்நிலமைகள் கொஞ்சம் குறைந்து வேறு வேறு தகவல்களை தொடரும் வரை.! இல்லையேல் பயமும் மன அழுத்தங்களும் ஏற்படடு வெவ்வேறான நோய்கள், பிரச்சினைகளை ஏற்படுத்தி வாழ்வுச் சிக்கல்களைத் தந்து விடுமென்று. மனுசனுக்கு இப்படியான செய்திகளையே கேட்டுப் பார்த்து தலை வலியாயிருக்கின்றது என்றாள் காந்தனைப் பார்த்து ஜெயா.
என்னதான் செய்ய!. வானொலியை தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலே கொரோனா தொற்றுப் பற்றிய இன்றைய நிலை!. இத்தனைப் பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தனைப் பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இத்தனைப்பேர் இறந்துள்ளார்கள்.
இந்தப் பிரதேசங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. இப்படியான அறிவித்தல்கள் தான் ஒலி ஒளிபரப்பப் படுகின்றன.. விரும்பியோ விரும்பாமலோ கேட்டும் பாரத்தும் தான் ஆக வேண்டும் என ஜெயாவைப் பார்த்து காந்தன் கூறிக்கொண்டேத் தொடர்ந்தான்.
கேட்கும் பார்க்கும் போது ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனதெல்லாம் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் என்னடா புதுமையாயிருக்கின்றது என்றும் ஆழமாய் சிந்திக்குமளவிற்கு புதிது புதிதாய் செய்திகள். கிராமங்கள் ஊர்கள் என எல்லாம் முடங்கிய நிலையில் பல்கலைக்கழகங்கள் பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள், பொதுயிடங்கள் மூடப்பட்டு நாட்டில் அனைத்துமே அமைதியான சூழ்நிலையில் நகர்ந்துக் கொண்டிருந்தன. திடீரென ஏற்பட்டத் தொற்று இத்தனை சீக்கிரம் பெருமளவில் மனித உயிர்களைக் காவுக் கொண்டு பழித்தீர்த்துக் கொள்ளுமென்று யாரும் நினைக்கவில்லை.
பணம் பணமென்று பணத்தின் பின்னே ஓடிய பலபேர் கடவுளிடம் உயிர் பிழைத்தால் போதுமென்று வேண்டிக் கொள்ளுமளவிற்கு மனதெல்லாம் இறுகிய நிலமை. வாழ்க்கையில் அடிக்கடிக் கேட்டிடாத புதியப் புதிய வார்த்தைப் பிரயோகங்கள்.
கோவிட் 19,தனிமைப் படுத்தல், முடக்கம் போன்ற வார்த்தைகள் அடிக்கடி உச்சரிக்கப் பட்டன. இவையெல்லாம் பழக்கப்பட்டு புதுப் புது அனுபவங்கள், பழக்க வழக்கஙகள், உணவு முறைகள் கைக் குழுக்கிய அனைவரும் புதுமையிலிருந்து பழமைக்கு மாறி இரு கைகளையும் கூப்பி ஒருவரையொருவர் வரவேற்கப் பழக்கிக் கொண்ட நகைச்சுவையாய் நினைத்த சம்பிரதாயங்கள் மீண்டும் பழக்கத்தில் தலை நிமிர்ந்ததை நினைக்க சந்தோசமான நிகழ்வாகயிருந்தன.
விழாக்களும் விருந்துகளும் வரையரையின்றி தொட்டதெல்லாவற்றையும் பெரிய மனிதக் கூட்டத்தைச் சேர்த்து கொண்டாடிட முடக்கமொரு முட்டுக் கட்டையாய் அமைந்தது கொஞ்சம் கவலையாகத் தானிருந்தன. இப்படி ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஒவ்வொரு சிக்கல்கள். காந்தனும் ஜெயாவும் இந்தக் காலங்களை சமாளிக்க ரொம்பவும் சிரமப் பட்டார்கள். கட்டாயத் தேவைகளை எந்த வகையிலேனும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டியக் கட்டாயம் எல்லோருக்குமிருந்தது. முழு நேரக் கடையடைப்பு, தொழிலிடங்கள் மூடல் இதனால் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப் பட்டு மனிதர்களின் உழைப்பு குறைவடைந்து எல்லோருக்குமான வேலைகள் இழக்கப் பட்டதோடு, போக்குவரத்து சிக்கல்கள், அவசரகால சட்ட திட்டங்களை மீறினால் காவல் துரையினரின் கட்டுப்பாட்டு சட்டத்திட்டங்கள்!.. அப்பப்பா சிரமங்களும் பிரச்சினைகளும் சொல்லில் அடக்கிட முடியாதவைகள். ஏற்கனவே காந்தனும் ஜெயாவும் மூன்று பிள்ளைகளுடன் குறைவான வருமானத்தில் தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். அன்றாடக் கடமைகளில் யதார்த்த வாழ்வுச் சக்கரத்தில் எத்தனை துன்பங்கள், கஷ்டங்கள், வறுமை, இயலாமை. எந்தவொரு சிக்களுமே ஒரே நாளில் வந்து விடுவதுமில்லை .ஒரே நாளில் தீர்ந்து விடுவதுமில்லை. நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி கடக்கின்றப் போதுதான் சொல்லொனாத் துயரங்கள் ஒவ்வொருத்தரையும் வாட்டி வதைக்கத் தொடங்குகின்றன.
முடக்கம் ஏற்பட்ட ஆரம்ப நாட்களில் உறவுகளுக்கிடையேயும், நட்புகளுக்கிடையேயும் தொலைப்பேசி மூலம் அக்கறையோடு உரையாடிக் கொண்டார்கள். செய்திகளில் அப்படிச் சொன்னார்கள் ,இப்படிச் சொன்னார்கள், உங்கள் பிரதேசத்தை தனிமைப்படுத்தியுள்ளார்களாமே!.
தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறி வெளியில் செல்லாதீர்கள்.
சுடுநீரில் தேசிக்காய் இலைகளைப் போட்டு நன்றாக ஆவிப் பிடி;யுங்கள்.
இஞ்சிப் பூண்டுத் தட்டிப் போட்டு கொத்தமல்லி அவித்துக் குடியுங்கள்.
காரமான ரசம் வைத்து சுடச் சுடச் சோற்றுடன் சாப்பிடுங்கள்.
சத்தான நோயெதிர்ப்புச் சக்திக் கொண்ட உணவுகளையேச் சாப்பிடுங்கள்.
கைகளை ஒவ்வொருத் தடவையும் நன்றாகக் கழுவுங்கள்.
முகக்கவசமின்றி வெளியில் வர வேண்டாம்.
வெளியிலிருந்து வரும் பொருட்களை உப்பு, மஞ்சள், நீர்க் கொண்டு நன்றாகக் கழுவி வெயிலில் சிறிது நேரம் காய வைத்து உள்ளே எடுங்கள்.
ஒரு முறையணிந்த உடைகளை சுத்தமாகக் கழுவி காய வைத்து அயன் செய்து திரும்பவும் உபயோகியுங்கள்.
குளிரூட்டப் பட்ட அறைகளில் ரொம்ப நேரமிருக்காதீர்கள், ஒருவர் இருவருக்கு மேல் மக்கள் கூடுமிடங்களை முடிந்தவரைத் தவிர்த்திடுங்கள்.
தகுந்த தடுப்பு ஊசிகள் போடும் போது கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள்.தெரிவு செய்யப்பட்ட ஊசிகளுக்காகக் காத்து நிற்க வேண்டாம். இப்படி விடயம் தெரிந்தவர் தெரியாதவர் என்றில்லாமல் யாரெல்லாம் யாரோடு எப்பொழுது உரையாடினாலும் இந்த மாதிரியான அறிவுறுத்தல்கள் கட்டாயமிருக்கும். பிறகுப் பிறகு கொஞ்ச நஞ்சயிருப்புகளிலிருந்த பணமும் முடிவடைந்த போது பணமிருந்தால் பொருள் தட்டுப்பாடு, பொருளிருந்தால் பணத்தட்டுப்பாடு. இந்த சூழ்நிலைகளில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு விதமான சங்கடங்கள்.வருமானத்தைக் கொஞ்சம் இறுக்கிப்பிடித்து வைத்திருக்கும் சில உறவுகளும் நட்புகளும் உயர்வான மனிதர்களின்;; சிறந்த குணவியல்புகளை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளிலிருந்தப்படியே தொலைப்பேசி இணையதல வசதிகளுடன் வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் தனது தனது உறவுகளுக்கும் நட்புகளுக்கும் உதவுகின்ற மனப்பாங்குடன் அவரவர் வங்கிக் கணக்குகளைக் கேட்டு இருக்கும் பணத்தில் கொஞ்சம் பகிர்ந்து பண உதவிகள் செய்துக் கொண்டார்கள்.
இவைகளைப் பார்க்கும் போது மனிதம் இன்னும் சாகவில்லை. உயிருடன் தானிருக்கின்றது என பெருமையாக நினைக்கத் தோண்றுகின்றது.இpருந்தும் சில்லறைக் கடை எனும் பெயரில் மலிகைப் பொருட்கள் விற்கும் பலர் இந்த முடக்கச் சூழ்நிலமையை தத் தமக்கு சார்பாகப் பயண் படுத்திக் கொள்ள பழகி விட்டார்கள். பொருட்களின் தட்டுப்பாட்டை பொய்யாகப் பரப்பி விட்டு பொருட்களின் தரத்தை உயர்த்திக் காட்டி அதிக விலைக்கு விற்று சம்பாதித்துக் கொள்ள ஒரு உத்தியாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். இந்த சிலருக்கு உயிர்ப்பயம் கடவுள் பயமெல்லாமில்லாது உழைப்பின் ஆர்வம் மட்டுமே தலைதூக்கி நின்றது. ஒரு சில விற்பனையாளர்கள் மனிதாபிமானத்துடன் பொருட்களுக்கு தகுந்த விலையில் எல்லோருக்கும் பகிர்ந்தளித்து மனசாட்சிக்குப் பயந்து நேர்மையைக் கடைப் பிடித்தார்கள். அதை நினைக்கும் போது பரவாயில்லையே! யாரும் பசியோடிருக்கக் கூடாது என நினைத்து செயற்பட்ட சமூகநலவாதிகள் !.இவர்களைப் பெருமையோடு புகழ்ந்திடலாம். அதேப் போன்று மருந்தகங்கள் தெரிந்தவர்களுக்கு ஒரு விதமாகவும், தெரியாதவர்களுக்கு ஒரு விதமாகவும் கையிருப்பிலிருக்கும் தொகைகளை பகிர்ந்;தளித்துக் கொண்டதில் சிலப் பிழையான முறைகளைக் காணக் கூடியதாயிருந்தது. ஆனரலும் ஒன்றும் பேச முடியவில்லை. காரணம் கட்டாயமாய் எடுக்க வேண்டிய மருந்துகளை வாங்கியே ஆக வேண்டிய தருணங்கள்.
விமான நிலையங்கள் மூடப்பட்டன. சேவைகள் நிறுத்தப்பட்டு, விசேட விமான சேவைகள் மாத்திரமே நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. நாட்டுக்கு வருபவர்கள் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, வீ;டடுக்கு அனுப்பி வீட்டிலேயும் பதினான்கு நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு முடிவடைந்தப் பின்தான் வேலைகள் ஆரம்பிக்க வேண்டும். இதனால் தாமதங்கள் ஏற்பட்டு நாட்கள் போதாமையின் காரணமாக திருமணங்கள் சரியான நேரத்தில் செய்து கொள்ள முடியாமல் நிறுத்தப்பட்டன. இது சிலருக்கு ஒருவிதமான மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
நெறுங்கிய உறவுகளின் நோய் நொடிகளின் போதும் துயரங்களின் போதும் சுகம் விசாரித்து நேரில் கலந்து கொள்ள போக முடியாத நிலை வேதனைக்கு மேல் வேதனையைத் தந்தது. பலர் இயல்பு வாழ்க்கையைப் பிரச்சினையாக்கி முடித்துக் கொள்ளத் தெரியாமல் தடுமாறித் தவித்தார்கள். வருமானக் குறைவினால் கணவன் மனைவிப் பிரச்சினைகள் மட்டுமன்றி இணையதல கல்வி முறையும் ஒரு பிரச்சினையாக மாறியது. சாதாரண இலக்கங்கள் கொண்ட தொலைப்பேசி ஒன்றையே வாங்க முடியாத வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பலர் ஏக்கத்தோடு வாழும் போது கெமரா உள்ள ஸ்மார்ட் ஒன்றை வாங்கிட இந்த நேரங்களில் எப்படி முயற்சிப்பது. இதுவுமொரு தலையாயப் பிரச்சினையாய் பலரின் வாழ்வில் உருவெடுத்தது. சண்டையும் சச்சரவுமாய் பல குடும்பங்கள் நிம்மதியிழந்து இயல்புத் தன்மையே மாறிப்போனது. பலரது வாழ்ககையில் புதிதாய் முளைத்த காளான்களாய் புதிய புதிய வடிவிலான சிக்கல்கள். கணவரின் இயலாமை, சேமிப்பின் குறைப்பாடு, பற்றாக்குறை, புதிய நிலவரத்தின் கொடுமையை பொருத்து அழகாக வழிநடத்திடத் தெரியாத, அறியாத, புரிதலில்லாத செயற்பாடுகளின் விளைவு !அத்தியாவசியங்களின் இல்லாமை, எந்த நேரமும் எல்லோரும் ஒரேயிடத்தில் அதிக நேரம் இருப்பதால் பார்வைகளின் நுணுக்கங்கள் அவள் செய்குறை அவனுக்கும், அவன் செய்குறை அவளுக்குமாய் தகறாறுகள் வளர்ந்திட ஏதுவாயமைந்தன.
உதவிகள் ஒத்தாசைகள் கடண்கலென யாரிடமும் கேட்டிட முடியவில்லை. காரணம் எல்லோரின் நிலமையும் ஒரே மாதிரியாகவேயிருந்தது. நிவாரணம் எனும் பெயரில் ஆரம்பத்தில் ஒரு சில செல்வந்தர்களிடமிருந்து கிடைத்தாலும் போகப் போக முடக்கத்தின் நாட்கள் அதிகரித்ததின் கொடுமை நிவாரணமும் யாராலும் கொடுக்க முடியாமையினால் யாருக்கும் கிடைக்காமல் போனது. இருந்தால் அனுபவித்து இல்லாவிட்டால் தடுமாறித் தவிப்போடு ஏங்கிக் குறைக்காணும் மனிதயியல்பு நாளை
என்ன செய்யப் போகிறோமென நினைத்து பலர் மன அழுத்தத்தினால் வேறுவிதமான நோய்வாய்ப்பட்டு சிரமத்துக்குள்ளானார்கள். அழுத்தங்கள் திடீர் சுகயீனங்களை ஏற்படுத்திவிட்டன.
முடக்கத்தின் தொடக்கத்தில் எல்லாவற்றையுமே கொஞ்சம் சமாளித்து விடலாமென நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் பிறகுப் பிறகு கஷ்டப்பட்ட வாழ்க்கையாய் மனசுகளை வதைக்க ஆரம்பித்து விட்டன. காந்தனுக்கும் ஜெயாவுக்கும் இதே நிலைத்தான். முடிவில் இருவரும் ஒருமித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். கோவிட்-19 எனும் புதிய வார்த்தை!. எமக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல உலகத்தில் பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் காலத்தின் கொடுமை, எதிர்ப் பார்க்காமலேயே நேரங்கள் நாட்கள் வாரங்கள் மாதங்கள் மறந்து எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றமாக்கப்பட்டு பணக்காரனுக்கும் ஏழைக்குமென்றில்லாது எல்லோருக்கும் ஒரே நிலையென உணர்வதற்கு இறைவன் கொடுத்தக் காலமிது. அவன் நினைப்பதுதானே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும். நானோ நீயோயெல்லை மீறி குடும்பத்துக்கு ஏற்றுக்கக் கூடாத தவறுகளை இன்றைக்கு நாளைக்கு என்றைக்குமே செய்ய மாட்டோம்.ஆக நீசெய்யும் சின்னச் சின்ன தவறுகளை நானும் கண்டுக் கொள்ள மாட்டேன். நான் விடும் சிறிய சிறிய பிழைகளை நீயும் கண்டுக் கொள்ள வேண்டாம்.இந்த மாதிரியான புரிந்துணர்வுகள் தான் நம்மைச் சரியாக வாழவைக்கும். எதிலும் பிழையாகக் கண்டுக்காது தொற்றுக்களிலிருந்து உயிர் பிழைத்து வாழ்ந்தால் அதுவே பெரிய விடயம் என நினைத்து ,நாளை வேண்டுமென நினைத்து கருமியாய் இன்றைய நாளை வீணடித்திடாது இருப்பதை வைத்து சந்தோசயாய் அனுபவித்து அன்பால் வாழ்ந்தால் அதுதான் அன்றைய வாழ்க்கையின் வெற்றி. ஆயள் ஆரோக்கியத்தோடு வாழ வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றிகள் பலக்கூறி எல்லாம் கடந்துப்போகும் என்ற உறுதியில் இதுவும் கடந்துப் போகுமென நம்பி வாழ்ந்து சிறப்பிப்பதுதான் சரியான முடிவுயென உறுதிக்கொண்டார்கள்.
எம்மால் யாருக்கும் பணத்தால் உதவி செய்ய முடியாது. உடம்பால் மனித சக்தியால் உதவி ஒத்தாசைகள் செய்து கொண்டிருந்தோம். இப்போது ஒருத்தருக்கு ஒருத்தர் நேருக்கு நேர் பேசி நேரடியாக உறவாடி எதுகும் செய்திட முடியாத நிலை.! என்ன செய்வது.
எல்லாமே மாறும்!. மாற்றமொன்றே மாறாதது. இதனடிப்படையில் ஆரம்பித்த படைத்தவனுக்குத் தெரியும் எப்போ எப்படி முடித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று. ஆக அதுவரை நாம் பொருமையோடிருந்துதான் காலம் கழிக்க வேண்டும்மென எண்ணி உறுதியோடு வாழ்வோமெனக் கூறி அவர்களுக்கு அவர்களே நம்பிக்கையூட்டிக் கொண்டார்கள்.
காந்தன் ஜெயா எடுத்த இந்த முடி;வு பலருக்கும் பலவிதமான வாழ்க்கைத் தெளிவையேற்படுத்தும் என்பது யதார்த்த வாழ்க்கையில் பலரது நம்பிக்கையான வெற்றிக்கு உறுதுணையான தெம்பாய் அமைந்திடும் என்பதில் நூறு உண்மைகள் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.
நம்பிக்கையே வாழ்க்கை! வாழ்ந்து தான் அனைத்தையும் காத்துப் பாதுகாத்திடுவோமே!.
![]() |
பெயர்:திருமதி பவானி சச்சிதானந்தன்கொழும்பு, இலங்கைEmail: Satchubawani1@gmail.comதொழில்:தையற்கலை நிபுணர், BS CREATIONS Director கலை:எழுத்தாளர் கவிஞர்,கருத்தாளர்,நூல் ஆய்வாளர், கனடா தமிழாழி தொலைக்காட்சி "கவிக்களம்" நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவேன். நான், கணவர் மகன் மகளுடன் சுய தொழிலுடன் இல்லத்தரசியாக வத்தளையில் வசிக்கின்றேன் . இல 65 போலகல வீதி ,வெரல்லகம ,கண்டி என்ற முகவரியில் திரு திருமதி துரைசாமி ராமாயி தம்பதியினருக்கு அன்பு மகளாய் பிறந்து உடன் பிறந்த ஆறு சகோதர சகோதர…மேலும் படிக்க... |