திரும்பிப் பார்க்காதே. சுடப்படுவாய்
கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 98

வழக்கம் போல வாக்கிங்.
சட்டென ஒரு மெசேஜ்.
அனிச்சையாய் எடுத்துப்பார்த்தார்.
அன்னோன் நம்பர்.
‘திரும்பிப் பார்க்காதே. சுடப்படுவாய்’
பதட்டமானார் வரதன்.
சென்ற வருடம் தான் இஸ்ரோவில் இருந்து ரிட்டயர் ஆகியிருந்தார்.
நாட்டிற்கே பிடித்த விண்வெளி விஞ்ஞானி. நடையைக் கூட்டினார்.
வியர்க்க ஆரம்பித்தது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஈ, காக்கா இல்லை. இவரை விட வயதில் முதிர்ந்த இருவர் சற்றுமுன் நடப்பது தெரிந்தது. அவர்களால் இவரைக் காப்பாற்ற முடியாது.
அவர்களுக்கொன்றென்றால் இவர் தான் காப்பாற்ற வேண்டும்.
‘பின்னாடி யாரா இருக்கும்?’ என யோசித்த வேளை, சட்டென ஒரு கல் தடுக்கி குப்புற விழுந்தார்.
தள்ளிவிட்டாள் லட்சுமி.
‘என்ன இது? மேல வந்து விழுந்துக்கிட்டு, தள்ளிப்படுங்கோ’
விழித்துக்கொண்டார் வரதன்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக அதே கனவு.
டாக்டரிடம் போய் என்னைத்தைச் சொல்ல என நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார்.
மாலை வேளை.
பால்ய நண்பன் வெங்கடாசலம் வந்திருந்தான். எஸ்.பி.ஆக இருந்து ஓய்வு.
சிறிது விசாரிப்புகளுக்குப்பின் தனது கனவைச் சொன்னார்.
“இத இப்படி யோசிச்சுப் பார். கொஞ்சம் மாத்தி. நீ எதாவது பழைய விஷயத்துல இப்போ மூழ்கி இருக்கியா?”
“ஆமா. என் தாத்தாவோட சொத்து ஒன்னு ஒரு ரவுடி கும்பல்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கு. அத மீட்க சில பல பேரைப் பார்த்துட்டு இருக்கேன்”
“ஏன் எங்கிட்டச் சொல்லல?”
“உன் அளவுக்கு அவ்வளவு பெரிய விஷயமில்ல”
“இந்த விஷயம் தான். திரும்பிப்பார்க்காத. பழையத நினைக்காத. அப்படீனு சொல்ற கனவா வருது போல”
“அப்படியா சொல்ற?”
“ஆமா. அப்படித்தான் நெனைக்கிறேன். நீ ஒன்னு பண்ணு. இன்னும் நாளஞ்சு நாளைக்கு அந்த விஷயத்தை ஆறப்போடு. அதப்பத்தியே யோசிக்காத. கனவு தொடருதானு பார்ப்போம்”
“ம். ட்ரை பண்றேன்”
அன்று முதல் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
அது என் தாத்தா நிலம் இல்ல. என் நிலம் இல்ல. அது எனக்கு வேண்டாம்.
நாட்டில் பலருக்கும் என் அனுபவங்களைப் பகிர, இனி பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லப் போகிறேன்.
முதல் கட்டமாக, இதனைப்பற்றி பேச பத்திரிக்கையாளர்களை அழைத்து ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என யோசித்தவாறே தூங்கிப் போனார்.
மீண்டும் வாக்கிங்.
ஒரு மெசேஜ்.
‘திரும்பிப் பார்க்காதே. சுடப்படுவாய்”
பதட்டமானவர், அந்த பதட்டத்திலேயே திரும்பிப்பார்த்தார்.
‘டுமீல்!!!’
யாரோ தெரிந்த முகமாக உள்ளதே என நினைத்தவாறே கீழே விழுந்தார்.
“அட என்னங்க மறுபடியும் மறுபடியும்” இப்போதும் கத்திக் கொண்டிருந்தாள் லட்சுமி.
“சாரி லட்சுமி கனவு”, என்றவாறு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.
தனக்கு தெரிந்த ரவுடிகள் மூலம், அந்த ரவுடிக்கும்பலை முழுவதுமாக உள்ளே தள்ளினார் வரதன்.
பின்னணியில் இருந்து செயல்பட்ட, தன்னுடைய பால்ய நண்பன் வெங்கடாசலம், அன்று கனவில் வந்த தெரிந்த முகத்தை, சட்டப்படி எதிர்கொள்ள வரதனின் பூர்வ நிலம் மீட்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் வாக்கிங்.
ஒரு மெசேஜ்.
‘திரும்பிப் பார்க்காதே. சுடப்படுவாய்’
தைரியமாய் திரும்பிப்பார்த்தார்.
அங்கே பத்ரகாளியாய் நின்று கொண்டிருந்தாள் லட்சுமி.
![]() |
அ.வேளாங்கண்ணி என்பவர் நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி வரும் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் புதுக்கோட்டையில் பிறந்து, கரூரில் வளர்ந்தவர். அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்: இலக்கியப் பங்களிப்பு: 'துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்' மற்றும் 'நீங்காத எண்ணம் ஒன்று' போன்ற நூல்களை எழுதியுள்ளார். சிறுவர் கதைகள் முதல் சமூகம் சார்ந்த புனைவுகள் வரை பல படைப்புகளைப் படைத்துள்ளார். [1, 2,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
August 13, 2026
மாயச் சுவடுகள்
ஹேக நிஷாலினி சந்திரன்
July 23, 2026
இரு துருவங்கள்: நிழலின் கணக்கு
அபினேஸ்வரி தோமஸ்
July 23, 2026
