தாத்தாவுக்குக ஒர் கடிதம்




நத்தார் தாத்தாவுக்கு மரியாவிடம் இருந்து ஒர் கடிதம்.
வருடா வருடம் நான் தூங்கும் போது என் கட்டிலில் எனக்குத் தெரியாமல் பரிசுகளை வைத்துவிட்டு போகும் என் அருமை நத்தார் தாத்தாவுக்கு மரியா எழுதுவது நான் என் தாத்தாவை மூன்று வயதுக்கு பின் காணவில்லை அவர் ஒரு பிரபல புற்று நோய் வைத்தியர் என்று நான் வளர்ந்த பின் அம்மாவும் அம்மம்மாவும் சொல்லிக் கேள்விப்பட்டேன் . அவர் பல உயர்களை நீண்ட காலம் வாழ வைத்திருகிறார் அவரின் படத்தை என் அம்மா ஸ்டேதெஸ்கோப்புடன் எனக்கு காட்டினாள் . என்ன கம்பீரமான பார்வை அவர் மக்களுக்கு சேவை செய்யவே பிறந்தார் என அம்மா சொல்லுவாள் . அவர் உயரோடு இருக்கும் போத அவர சம்பாதித்த பணமும் .பரிசுகளும், விருதுகளும் ஏராளம். அவர் இறக்க முன் தன் உடலை புற்று நோய் ஆராய்ச்சிக்கு தானம் செய்து விட்டார். தன் செல்வத்தை புற்று நோய் ஆஸ்பத்திரிக்கு கொடுத்து விட்டார். அப்படிப்பட்ட நல்ல குணமும்,உள்ளமும் உள்ள படித்த மாமனிதர் அவர். அவர் இறந்தது இரத்த புற்று நோயால். நான் பிறக்கும் அவர் எனக்கு வைத்த பெயர் தான் மரியா . அது அவரின் தாயின் பெயர் கூட நான் மூன்று வயது சிறுமியாக இருக்கும் போது என் தாத்தா எங்களை விட்டு போய் விட்டார். அவருக்கு நான் அவரைப் போல் படித்து பிரபல டாக்டராக வரவேண்டும் என்று ஆசை என்று என் அம்மா சொலுவாள்.
இங்கு கடும் குளிர். இந்த முறை வெள்ளை நத்தார் இல்லை என்று என நினைக்கிறேன் . நாங்கள் எலோரும் இரவு பத்திரண்டு மணி பூசைக்கு சேர்சுக்குப் போக இருக்கிறோம் . என் அப்பவும் அம்மாவும் டாக்டர்கள். நான் ஒருத்தி தான் அவரக்ளுக்கு மகள் . நான் கேட்டதெல்லாம் வாங்கிதருவார்கள் ;. லப் டாப், ஐ போன் எல்லாம் எனக்கு பரிசாக கிடைத்தது. போன வருடம் நீங்கள் தந்த பாபி போம்மை தான் என் சகோதரி அவளுக்கு சில்வியா என்று பெயர் வைத்திருக்கிறேன் . என்னோடு தூங்குவாள் நான் அவளோடு பேசுவேன். அவள் பேசமாட்டாள். அவளோடு சேர்ந்து உணவு உண்பேன்.விதம் விதமான ஆடை அவளுக்கு அணிவிப்பேன்.
அடுத்த வருடம் எனக்கு பரிசுகள் வேண்டாம், ஏன் என்று கேட்டுகுறீர்களா? . எனக்கு உங்களுக்கு சொல்ல கவலையாக இருக்கு. சில மாதங்களுக்கு முன் என்க்கு இரத்த புற்று என்று டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள் . என் தாத்தா இறந்ததும் இரத்த புற்று நோயினால். இது மரபணுவவோடு தொடர்புள்ளது அதனால் எனக்கு அந்த நோய் வந்தது என்று என் அப்பா சொன்னார்.
எனக்கு கடந்த ஒரு மாதமாக கீமோதிரபி சிகிச்சை நடக்குது ; கருமையான் நீண்ட என் தலைமயிர் கொட்டி விட்டது. நான் தினமும் மெலிந்து வருகிறேன். சாப்பிட மனமில்லை . ஜேசுவிடம் என்னை காப்பாற்று என்று தினமும் மன்றாடுகிறேன். அவர் என்னை பல வருடங்கள் வாழ்ந்து டாக்டராக வர விடுவார் என்ற நம்பிக்கை உண்டு. உங்களுக்கு தான் அவர் தெரிந்தவர், அவரிடம் என் நிலமை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
நீங்கள் எனக்கு தரும் தரும் நத்தார் பரிசை என்னால் அனுபவிக்க முடியாது . அடுத்த வருடம் நீங்கள் எனக்கு நத்தார் பரிசு தர நான் இருப்பனோ தெரியாது. என் பிறந்த நாள் நத்தார் தினமன்று.. என் சிநேகிதிளை கூப்பிட்டு ஓர் பெரிய கொண்ட்டாட்டம் வீட்டில் என் அம்மாவும் அப்பாவும் வைக்க இருக்கிறார்கள.. அடுத்த வருடம் என் பதினோராவது பிறந்தநாள் கொண்டாட நான் இருப்பனோ தெரியாது உங்களிடம் என் ஒரு வேண்டுகோள் . நான் உயிரோடு இல்லாவிட்டால் எனக்கு தரும் பரிசை புற்று நோயால் கஷ்டப்படும் என்னை போன்ற பிள்ளைகளுக்கு கொடுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களுக்கும, பாட்டிக்கும் என் புதுவருட, , நத்தார் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
செல்வி மரியா ஜெபநேசன் .