தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 4,685 
 
 

‘சுகர் பார்டர்ல இருக்கு!! தினம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடந்துட்டு வந்தீங்கன்னா, மாத்திரை மருந்து இல்லாமலேயே குணமாக வாய்ப்புண்டு. கொஞ்சம் மைதா புராடட்ஸ், ‘நான்’.. ‘பிசா’ இதெல்லாம் நாக்குக்கு நல்லா இருந்தாலும் தவிர்க்கறது நல்லது!. அப்புறம் உங்க இஸ்டம்!’ என்றார் டாக்டர்.

‘அதென்ன டாக்டர் அப்படிச் சொல்லீட்டீங்க…?! பச்! வாக்கிங்க் போன்னு சொன்னா! நான், போகப்போறேன்?! அப்புறம் எதுக்கு வெறுத்துப்போய்.. ‘அப்புறம் உங்க இஸ்டம்!னு சொல்றீங்க?! என்றார் செல்வராஜ்.

‘டாக்டர்க நாங்க சொல்ற எதைப் பேசண்டுக காதுல போட்டுக்கறாங்க?!’ அதான் அப்படிச் சொன்னேன்!. வாக்கிங்க் போனா எல்லாருக்குமே நல்லது~! என்றார்.

போகத் தொடங்கினார் செல்வராஜ்!. அந்த ரயில்வே டிராக் தாண்டி ஒதுக்குப் புறமான பார்க்கில் வாக்கிங்க் போக தோதாய் நடைபாதைக்கு ‘டைல்’ வேய்ந்திருந்தார்கள். முதல் நாள்… பார்க் திறந்ததும், முதல் ஆளாய் முந்திக் கொண்டு நடந்தார். மெல்லக் கைகளை பவுலர் மாதிரி சுழற்றிச்சுத்தியபபடி.. அந்தத் திருப்பம் நெருங்கும் போது, மழைத்தூறல் போட ஆரம்பித்தது. மேகம் இருட்டைக் கவித்தது.

திபு திபு என்று யாரோ தன் பின் தொடர்ந்து ‘ஹா,, ஊஊ !’ என்று மொழி புரியா சப்தத்தம் எழுப்பி அவரைத் தொடர்ந்து ஓடி வந்து அவர் கைகளைப் பிடிக்க , வேர்த்து வறுவிறுத்துப் போய் கைகளை விடுவிக்க முயன்றால் முடியவில்லை…!

வாக்கிங்க் வந்து பிரஷர் குறைவதற்குப் பதில் எகிறியது! நிதானிப்பதற்குள் ஒரு இருபத்தைந்து வயதுப் பெண் ஓடிவந்தாள். கண்களில் ‘கண்ணீர் அருவி’ கொட்ட, ‘படார்! படார்!’ என்று செல்வராஜ் கைகளைப் பற்றியிருந்த அந்தப் பிஞ்சுக் கரங்களை வெடுக்கெனப் பிடுங்கி இழுத்து அகற்றிவிட்டு, தொடர்ந்து அடிக்க.. அவர் துடித்துப் போனார்.

அந்தக் கரங்களுக்குரிய பிஞ்சுப் பிள்ளைக்கு ஒரு ஐந்து வயது கூட இருக்காது! ‘தாத்தா…! தாத்தா!’ என்று செல்வராஜ் கைகளைப் பற்றிக்கொண்டு விலக மறுத்தது, அடித்தவள் அந்தப் பிள்ளையைப் பெற்றவள்தான்!.

செல்வராஜ் கைகளை பற்றிய அந்தக் குழந்தைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை…! ஆனால்..குழந்தை ஓடிவந்து, அவர் கைகளைப் பற்றுவானேன்??!!. அவர் வழக்கமாய் அங்கு வாக்கிங்க் வருபவருமல்ல.!, டாக்டர் சொன்னதுக்காக இன்றுதான் முதல் தடவையாய் வந்திருக்கார் செல்வராஜ்! அப்புறம் இதெப்படி???!!!.

‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணனான’ அவன் விழிகள் நீர் சொரிய விலகினான் செல்வராஜிடமிருந்து! வாய் ஓரங்களில் எச்சில் வழிந்தது.

குழந்தையிட அதன் தாய் சொன்னாள்… ‘இது நம் தாத்தா அல்ல!’ என்று.

அந்த சிறு பிள்ளையின் வாயில் வழிந்த நீரும் செயல் பாடும் அவன் மெண்டலி ரிட்டார்டர்டு… மூளை வளார்ச்சி இல்லாத மனநலம் குன்றிய குழந்தை என்பதைப் புரிய வைத்தது.

அதற்குள்.. செல்வராஜின் மனைவியும் கூடவே வாக்கிங்க் வந்தவள் கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்… ‘ அந்தக் குழந்தைக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?!’ அது ஏன் உங்களைத் தாத்தா என்கிறது?? என்றாள். நல்லவேளை அந்த பொடிப்பயல் ‘அப்பா!’ என்று அழைக்கவில்லை! அந்த மட்டில் செல்வராஜுக்கு நிம்மதிதான்.

செல்வராஜ மனைவி, கேட்டதைக் கேட்டு குழந்தையின் தாய் மெதுவாக செல்வராஜுக்கும் அவன் மனைவிக்கும் கேட்கும்படி சொன்னாள்.

‘இவன் இப்படி மூளை வளர்ச்சி குன்றியவனாய்ப் பிறந்ததும், இவன் அப்பா, ‘இவன் யாருக்குப் பிறந்தவன்??!! என்று கேட்டுவிட்டு பிரிந்துபோனவர்தான்…’ என்றாள் அழுகையூடே!

அதிர்ந்தார் செல்வராஜ் பிரஷர் கூடியதை வியர்வை விளக்கியது!

டாக்டர்… ஒரு சந்தேகம்…’ வாக்கிங்க் போனா… பிரஷர், சுகர் குறையுமா? கூடிடவும் வாய்ப்பிருக்கு போலிருக்கே…?! அதிருக்கட்டும்!

‘மெண்டலி ரிட்டார்டட் யார்?

‘தத்தி தத்தி ஓடிவந்து கைகளைப் பற்றி ‘தாத்தா!’ என்றதே அந்தக் குழந்தையா.??!! . அது எப்படி உங்களைத் தாத்தானு அழைச்சது?? கேட்ட செல்வராஜ் மனைவியா???!!!

இல்லை..! இவன் யாருக்குப் பிறந்தவன்னு இரக்கமில்லாமல்கேட்டுவிட்டுப் பிரிந்து போன , அந்தக் குழந்தைக்குக் காரணமான அந்தப் பெண்ணின் கணவனா?!!! இவை எதுவுமே இல்லை என்றால்… டாக்டர்….

“டுவிங்க்கிள் டுவிங்க்கிள் லிட்டில் ஸ்டார்….

சந்தேகம் என்னும் ஒண்ணு வந்தா

மொத்த வாழ்க்கையும் நஷ்டம் சார் !! இல்லையா டாக்டர்?!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *