ஜீவ நதி
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாரத நாட்டின் வடக்கு எல்லையில், நாட்டுக்கு அரணாக அமைந்து மக்களைக் காத்து நின்ற பனிச் சிகரங் களின் கற்பனை கடந்த உச்சியிலே, நீலகண்ட மகேச்வரன் யோகத்தில் ஆழ்ந்திருந்தான்.
மாதங்கள் பறந்தன. வருஷங்கள் ஓடின. பருவ காலங்கள் சுழன்றன. அந்தப் பனிச்சிகரங்களின் கோடி யிலே நீலகண்ட மகேச்வரன் நிஷ்டை கலையாமல் மோனத் தவத்தில் மூழ்கி இருந்தான்.
மேகங்கள் ஈச்வரனுடைய கேசத்தில் வட்டமிட்டன. சூரியன் அந்த மேகங்களில் உதித்தான்; அஸ்தமித்தான். சந்திரன் அந்த மேகங்களிலே ஊர்ந்தான்; தேய்ந்தான். ஆனால் மகேச்வரன் அப்படியே அசையாமல் யோகத் திலே, அந்த அற்புதமான நிஷ்டையிலே லயித்து, உலகங்களை – தான் படைத்த அண்டபிண்ட சராசரங்களை யெல்லாம்–மறந்து மகத்தான தவத்தில் ஒன்றி இருந்தான்.
பனி பெய்தது. வெயில் எரித்தது. மழை பொழிந் தது. மின்னல்கள் மின்னி இடிகள் இடித்தன. அந்தத் தவம் கலையவில்லை. அந்த மோனம் சிதையவில்லை.
எத்தனையோ வருஷங்கள் இப்படியே இறைவனுடைய நிஷ்டையில் கழிந்தன.
ஆர்ய வர்த்தத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. இது வரை கண்டிராத கோடை. மனிதர்கள் இதுவரை அனுபவித்திராத வெப்பம். மரங்கள் பட்டு வீழ்ந்தன. மட்டைகள் எல்லாம் வெடித்து உரிந்தன. ஜீவராசிகள் அனைத்தும் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் வெம்பின.
நீர் நிலைகளிலே பூமி வெடித்து பூதாகாரமாகக் காட்சி தந்தது. எங்கும் வெப்பம். நெருப்பு. உலகமே ஒரு பாலைவனமாக அனல் விட்டது. ‘தண்ணீர் தண்ணீர்’ என்று மக்கள் தவித்தார்கள்!
ஹிமாசலத்தின் பனிக்குன்றுகளில் மகேச்வரன் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தான். ‘இது என்ன தெய்வ சோதனை’ என்று தெரியாமல் இயற்கை அன்னை கண்ணீர் வடிக்கவுங்கூடத் தண்ணீர் இன்றி வறண்டு நின்றாள்.
ஹேமராஜன்-ஆரிய வர்த்தத்தின் வேந்தன் – என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தான். மந்திரி களைக் கூப்பிட்டு ஆலோசனை செய்தான். புத்தி சாதுரியத் தில் இணையற்ற தனது ஹேமராணியிடங்கூட யோசனை கேட்டான். ஒருவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை. அந்த வெப்பத்தில் எல்லாருடைய மூளையுமே வறண்டு கிடந்தது.
“ஏ வானமே, காற்றே, நெருப்பே, புனலே, புவியே நீங்களாவது சொல்லுங்கள். ஆர்ய வர்த்தத்தி மக்கள் தவிக்கிறார்கள்” என்று மன்னன் பஞ்ச பூதங்க யும் இரங்கி வேண்டினான். அவனுடைய குரலில், வறண்டு தவிக்கும் மக்கள் அனைவருடைய தாபமும் ஒருங்கே கேட்டது. அப்பொழுது மேகங்கள் அசைந்தன. வானத்தில், ஒரு அசரீரி உண்டாயிற்று.
“இந்தப் பனி மலை போன்று புனிதமானவளும், இந்தப் பனிக்கட்டி போன்று வெண்மையானவளுமான ஒரு குமரி, தன் பந்தங்களை யெல்லாம் களைந்து, தியாக சிந்தனையுடன் மலையிலிருந்து கீழே இறங்குவாள். அப்பொழுது மழை பெய்யும்; பூமி செழிக்கும்; மக்கள் இன்பம் அடைவார்கள்!”
ஹேமராஜன் கூர்ந்து கேட்டான். அந்தக் குரல் வானத்திலிருந்துதான் வந்தது!
2
ஹிமாசலத்தின் உச்சியில், மோனத் தவம் இருந்த பரமேச்வரனுடைய கேசத்தில், பனிகள் விழுந்து உறைந்து குகை குகையாக அமைந்து நின்ற பனிச் சரிவு களில், சூரியனுடைய கதிர்கள் பாய்ந்து விளையாடுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றாள் குமாரி கங்கா. உதய சூரியனுடைய கிரணம் அந்தப் பனிக் குகைக்குள்ளே ஓடி ஏழு வர்ணங்களுடன் பிரதிபலித்து மீள்வதைக் கண்டு, தன்னுடைய பனிக்கட்டி போன்ற பற்களிலிருந்து ஒளி வீச அவள் நகைத்தாள். தண்மையான அந்தச் சிரிப்பொலி பனிக் குகையிலே எதிரொலித்து அந்தப் னிப் பிரதேசம் எங்கும் ஒரு கலகலப்பைக் கொடுத்தது.
ஹேமராஜன் அசரீரி சொன்ன தியாக கன்னியைத் தடிக்கொண்டே அந்தப் பனிக் குன்றுகளில் அலைந் Tன். அவனுடைய உள்ளத்தின் அழைப்புக்கு இங்கிதம் தருவதுபோல, எங்கிருந்தோ ஒரு குமரியின் சிரிப்பொலி வந்தது! ஹேமராஜனுக்கு அப்பொழுதுதான் மனத்தில் ஒரு நம்பிக்கை உண்டாயிற்று. மகேச்வரனுடைய கேசத்தில் உறைந்து கிடந்த பனிக்குகைகளில் ஒரு கன்னி ஒளிந்து விளையாடுகிறாள்’ என்று கண்டு கொண்டான்!
“குமாரி, என்ன விளையாட்டு இது. கால்கள் சோர உன்னை எங்கெல்லாம் தேடுகிறேன்.”
பனித் திட்டுக்கள் சிதறிச் சரியும்படியாக, ஒரு சிரிப்புச் சிரித்துக்கொண்டே அவள் ஓடி வந்தாள். திவலை திவலையாக அவளுடைய கூந்தலிலிருந்து பனி முத்துக்கள் உதிர்ந்தன.
“பனி அழகி, சற்று நேரத்துக்கு முன் ஒலித்த அசரீரி உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் ஹேமராஜன்.
பிரிந்து கிடந்த தனது அடர்த்தியான கூந்தலை அலட்சியமாக எடுத்துச் செருகிக் கொண்டே, “எனக்கு அசரீரியில் நம்பிக்கை கிடையாது!” என்று சொன்னாள் அந்தப் பெண். அவளுடைய பிராயத்தையும் மீறின விம்மிதம் அந்த வார்த்தைகளில் தொனித்தது.
“அம்மா, பனிமலை போன்று பரிசுத்தமானவளும், பனிக்கட்டி போன்று வெண்மையானவளுமான ஒரு குமாரி”
“அதற்குமேல் சொல்லாதீர்கள். நான் இந்தப் பனிக்குகையை விட்டு நகரமாட்டேன். இங்கே வந்து பாருங்கள். என்ன குளிர்ச்சி! செங்கதிர் குகைக்குள் பாய்ந்து விளையாடும்போது எத்தனை எத்தனை வர்ணம்!
அவள், விடாமல் வர்ணித்துக்கொண்டே போனாள். ஹேமராஜன் ஏதேதோ சொல்லிக் கெஞ்சினான். குமரியின் மனம் உறைந்த பனிக்கட்டிபோல இறுகிக் கிடந்தது.
திடீர் என்று-என்ன ஆச்சரியம்-ஒரு குழந்தை அழும் குரல் கேட்டது. ஹேமராணி கையில் எதையோ எடுத்துக்கொண்டு அங்கு வந்தாள்.
“என்ன! என்ன இது?” என்று கேட்டான் வேந்தன்
அவனுக்கு உடல் எல்லாம் பதறியது!
“குழந்தைதான், சற்று நேரத்துக்கு முன் அழுதது இப்பொழுது அழக்கூட ஜீவன் இல்லை-அத்தனை வறட்சி தாகம் தாங்காமல், கவனிப்பாரற்றுக் காய்ந்து கிடக்கிறது!”
பனிக்குமரி தன் நெற்றியைக் கைகளால் துடைத்து விட்டுக்கொண்டு, திரும்பிப் பார்த்தாள்.
“குழந்தையா! பாலைமரக் கட்டைபோல உரிந்து கிடக்கிறதே!”
ஹேமராணி அந்தக் குழந்தையைக் குமாரியில் கையிலே கொடுத்தாள். பனிக்கன்னி அன்போடு அை எடுத்து அணைத்தாள். அந்த நேரத்தில் அவளுடைய கூந்தற் செறிவிலிருந்து ஒரு பனிக்கட்டி நழுவி வந்து வறண்டுபோன அந்தப் ‘பாலைமரக் கட்டை’யின் நாவிலே விழுந்தது. என்ன விந்தை! கட்டை கண்ணைத் திறந்தது. உடலை நெளித்தது. மறுகணம் ‘வீல்’ என்று அழ ஆரம் இப்பெரமுது ‘ஜீவன்’.
– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.
-மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 215
