கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 3,503 
 
 

மதுரை தனியார் பேருந்து நிற்கும் இடம்,

சென்னை செல்லும் பேருந்து முன் வந்து நின்றது. பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் என்பதால் அவளோ நெரிசல் இல்லை.

ஒரு சில பூர்த்தி செய்யபடாத இருக்கைகள் இருந்ததால் , அந்த இருக்கைக்கு ஆள் சேர்ப்பு வேலையை கவனித்து வந்தார் , பேருந்தின் நடத்துனர்.

சற்று நேரத்தில் புறப்பட தயாராக இருந்தது , அந்த பேருந்து.

அப்போது , அதன் எதிர் பெட்டி கடையில் ,

பெரியவர் மீனாட்சி சுந்தரம் டீ குடித்து கொண்டு இருந்தார்.

அப்போது அவரின் அருகில் செல்போனை பேசியபடி , இளந்தாரி விஸ்வா புகைத்த படி வந்து நின்றான்.

ஸ்டைலா புகைத்து புகையை வெளியிட்டு கொண்டு இருந்தான் விஸ்வா.

அந்த புகை அருகில் இருந்த மீனாட்சி சுந்தரத்தை மிகவும் சுவாசிக்க சிரம படுத்தியது.

“தம்பி , அந்த ஓரமா போய் , புகைய விட வேண்டியது தான ? மூச்சு விட சிரமமா இருக்கு பா?” என்று பணிவுடன் கேட்டார் மீனாட்சி சுந்தரம்.

போன் பேசிய படி , அவரின் பேச்சை கேட்டவன் , போன் பேசுவதை நிறுத்தி விட்டு,

“பெருசு, நீ அங்க போய் குடி, நான் எதுக்கு அந்த பக்கம் போகணும். நீ போயா. உனக்கு சிரமமா இருந்தா நீ தான் போகணும். என்னைய போக சொல்ற” என்று மரியாதையை குறைவாய் பேசினான் விஸ்வா.

“தம்பி பொது இடத்தில் , புகை பிடிப்பது தப்பு தான. மற்றவர்களுக்கு இடஞ்சல் செய்ற மாதிரி இருந்தா அந்த வேலையை நாம் பார்க்க கூடாது. அது மட்டும் இல்லாம புகை பிடிப்பது உடம்புக்கு கெடுதி தான. அத எதுக்கு நாம காசு கொடுத்து வாங்கி , உடம்ப கெடுத்துகனும் தம்பி.” என்று மீனாட்சி சுந்தரம் கூறினார்.

“நான் அப்படி தான் புகை பிடிப்பேன். இங்க நின்னு தான் புகைப்பேன். உன்னால என்ன முடியுமோ நீ செய். பார்த்துகிறேன். நான் இளந்தாரி பய அப்படிதான் புகைப்பேன். என் உடம்பு ஏதையும் ஏத்துக்கும். உன் உடம்பு ஏத்துக்கலனா , நான் என்ன பண்ண முடியும். போய் நல்ல டாக்டர் போய் பாரு பெருசு” என்று விஸ்வா சற்று மரியாதை குறைவாக மீனாட்சி சுந்தரத்தை பேசினான்.

விஸ்வாவின் பேச்சு அவருக்கு மனதை கஷ்ட படுத்தியது. அங்கிருந்து புறப்பட்டார் மீனாட்சி சுந்தரம்.

அங்கிருந்து முழுதுமாக புகைத்து விட்டு சென்னை செல்லும் பேருந்தை நோக்கி நகர்ந்தான் விஸ்வா.

நடத்துனரிடம் தன் இருக்கை பதிவு செய்த ரசீதை காண்பித்து பேருந்தில் ஏறி அமர்ந்தான் விஸ்வா.

பேருந்து புறப்பட்டது. பேருந்தில் இருந்த அனைவரும் உறங்க ஆரம்பித்தனர்.

கடும் பனி பொலிவு. அனைவரும் இருக்கை ஓர ஜன்னலை அடைத்து வைத்து காதுக்கு குல்லா மாட்டிய படி உறங்கி கொண்டு இருந்தனர்.

விஸ்வா முன் இருக்கையின் ஜன்னல் மட்டும் அடைக்கவில்லை. அதிலுருந்து பனி காற்று மிகவும் குளிர செய்தது.

அந்த ஜன்னல் ஓரம் அமர்ந்து இருப்பவரிடம் ஜன்னலை சாற்றும் படி கேட்டான்.

அதற்க்கு பதில் இல்லை. கோவமாக எழுந்தான் , ஜன்னலை மூட முயன்றான் விஸ்வா.

“தம்பி , ஜன்னல் ஓர சீட்டு என்னது. நான் காசு கொடுத்து புக் பண்ணிருக்கேன். எனக்கு காற்று வேணும் , உனக்கு காற்று வேணாம் என்றால் , வேறு இடம் பாருப்பா” என்று கூறிய படி , விஸ்வாவை பார்த்தார், மீனாட்சி சுந்தரம்.

கோவமாக அவரை முறைத்தான் விஸ்வா. இந்த பெருசா என்று மனதில் ஓட்டம்.

“தம்பி, நீங்களா. வாங்க வாங்க , இளந்தாரி பய நீங்க , உங்களுக்கு இந்த பனிகாற்று சேர மாட்டேங்குதுன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு. வயசான காலத்திலில் இருக்கிற பெருசு நான் எனக்கு சேரும் பனி காத்து , இந்த இளந்தாரி பயலுக்கு சேரமட்டேங்குது அப்டின்றது அதிசியம் , டாக்டர போய் பாருங்க , உடம்புல எதுவும் பிரச்சனையான்னு” என்று மீனாட்சி சுந்தரம் கூற,

விஸ்வாவிற்கு கோவம் தலைக்கேறியது. இருப்பினும் அவரின் பேச்சு அவனுக்கு பதிலடி கொடுப்பது போல் இருந்தது.

“தம்பி , நான் உன் அப்பா ஸ்தானத்துல இருந்து , உனக்கு அறிவுரை கூறினேன். நீ அத அலட்சிய படுத்திட்ட. ஆனா நான் அப்படி செய்ய மாட்டேன். பொது இடத்தில் எப்படி இருக்கணும்னு எனக்கு தெரியும். பொது இடத்தில் சில விசயங்கள்ல விட்டு கொடுத்து தான் போகணும். உனக்கு இந்த பனி காற்று சேரலன்னு சொல்ற , ஆனா எனக்கு அந்த காற்று எனக்கு வேணும். இருந்தாலும் மத்தவங்களுக்கு இது எடஞ்சலாக இருப்பதால் இந்த ஜன்னல் கதவை மூடி விடறேன்.” என்று மீனாட்சி சுந்தரம் கூறி முடித்தார்.

விஸ்வாவிற்கு மீனாட்சி சுந்தரத்தின் பேச்சு சற்று புரிய ஆரம்பித்தது.

பொது இடங்களில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் வேலையை நாம் செய்ய கூடாது.

புகை உடலுக்கு கேடு தரும்.

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *