சொப்பன சுந்தரி
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
அமானுஷம்
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 212

(மாயாஜால குட்டி சிறுகதை)
நிலவின் ஒளியில் சொப்பன சுந்தரியை,கோவிந்தன் முதல் முதலாக ஒரு நாள் சந்தித்தான். மதி மயங்கி போனான். அன்றிலிருந்து அவள் தினமும் அவனின் கனவில் வாழும் தேவதையானாள்.
ஒருநாள், நான் நிஜம் இல்லை என்று அவள் சொன்னபோது, அவன் நம்பவில்லை. அவளை காதலித்து, எப்படியும் நிஜ வாழ்க்கையில் மனைவியாக அடைந்தே தீரவேண்டும் என முடிவெடுத்தான். அவளுக்காக ஒரு மந்திரவாதியை அழைத்து ஆலோசனை கேட்டேன்.
அந்த மந்திரவாதி ஒரு மாய கண்ணாடியை கொடுத்து, நீ கனவில் அவளை சந்திக்கும் போது, இந்த கண்ணாடியில் அவளது உருவத்தை பிடி என்றார் .கோவிந்தன் அவ்வாறே செய்தான். கண்ணாடிக்குள் சொப்பன சுந்தரியின் பிம்பம் சிக்கியது .
அடுத்த நாள் கண்ணாடியை திறந்து பார்த்தபோது, அவளது பிம்பம் இல்லை. அதற்கு பதிலாக அவனது பிம்பம் தெரிந்தது. கோவிந்தன் குழம்பிப் போனான் .ஒரு குரல் சிரித்தது. சொப்பன சுந்தரி உன் கனவில் நீ உருவாக்கிய கற்பனை தேவதை என்றது அந்த குரல். அந்தக் குரல் அவனின் மனசாட்சி.
அப்போது திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியை எடுத்து பேசிய கோவிந்தனுக்கு, சொல்ல முடியாத அதிர்ச்சி. மகிழ்ச்சி.
மறுமுனையில் ஒரு பெண். என் பெயர் சுந்தரி. “உன்னை நான் இன்று நிஜ உலகில் சந்திக்கலாமா?” என்று கேட்டாள். கோவிந்தனின் உள்ளத்தில் பட்டாம்பூச்சி சிறகடித்தது.
அவளை சந்திக்கப் புறப்பட்டான். அவனது கனவு , அவனின் ஆழமான, திடமான அந்த நம்பிக்கை, உண்மையிலேயே நிஜமாகப் போகிறது.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
