கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,592 
 
 

‘’லோக்கல்லே நல்லா மார்க்கெட்டிங் பண்ணினீங்களேன்னுதான் உங்களை சவூதிக்கு அனுப்பி வச்சேன். ஆனா இப்படி சொதப்பட்டீங்களே தேவராஜ்?’’என்று உதவியாளரைத் திட்டினாள், மேனேஜர் பிரபா. முடி வளரச்சிக்கான ‘ஹேர் ஆயில்’ தயாரிக்கும் நிறுவனம் அது.

‘ஒரு பாட்டில் கூட விற்காம லட்சக்கணக்கிலே நஷ்டமாயிடுச்சே, ஏன்?’’

‘வார்த்தைகளை உபயோகிக்காம பத்திகைகள்லேயும் டி.வி.யிலேயும் வெறும் படங்களை வச்சே விளம்பரம் பண்ணினேன் மேடம். நாலஞ்சு இளைஞர்கள் மொட்டைத் தலையோட இருக்கறமாதிரி ஒரு படம். அவங்க நம்ம ஹேர்ஆயிலை யூஸ் பண்ணற மாதிரி இரண்டாவது படம். அவங்களுக்குத் அடர்த்தியாக தலைமுடி வளர்ந்திருக்கற மாதிரி கடைசிப்படம்.’’

‘’நல்ல டெக்னிக்தானே, அப்புறம் எப்படி ஃபெயிலாச்சு?’’

‘’ஒரு சின்னத் தப்பு நடந்து போச்சு மேடம். அரபி எழுத்தை வலது புறத்திலேயிருந்து இடது புறமாப் படிக்கிற பழக்கத்திலே இந்தப் படங்களையும் ரிவர்ஸிலே பார்த்துப் பயந்திட்டாங்களாம்..!’’

– கடையநல்லூர் ஷேக் (22-4-09)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *