சூரியனின் சூட்சமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 192 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கடவுள் நம்மைப் பார்க்கிறவர்’ என்று சொல்லு கிறீரே, அந்தக் கடவுளை எனக்குக் காட்டும்’ என்றார் திரேஜன் சக்கரவர்த்தி யூத ரபியிடம்.

‘கடவுள் ஆவியாய் இருக்கிறாரே – அவரைக் சுண் ணால் பார்க்கமுடியாதே என்றார் யூத ரபி. ‘நாம் பார்க்கமுடியாத கடவுள் நம்மை எப்படிப் பார்ப்பார், இது பித்தலாட்டம்; மேலும் நீர் சொல்வதை நான் நம்பமுடியாது, கடவுளை இப்பொழுது எனக்குக் காட் டத்தான் வேண்டும்’ எனறு வற்புறுத்திக் கட்டாயப் படுத்தினார் சக்கரவர்த்தி.

மத்தியானம் 12 மணிக்கு சக்கரவர்த்தியை அழைத்துக்கொண்டு வெளியே போய் “இப்பொழுது சூரியனைப் பாரும்” என்றார் யூதரபி.

“கண் கூசுகிறதே, சூரியனை என்னால் எப்படிப் பார்க்கமுடியும்?” என்றார் சக்கரவர்த்தி.

“கடவுளால் படைக்கப்பட்டவைகளில் ஒன்றாகிய சூரியனையே உம்மால் பார்க்கமுடியவில்லையே, சிருஷ்டி கராகிய கடவுளை எப்படிப் பார்க்கமுடியும்” எனச் சொல்லிச்சென்றார் ரபி.

சக்கரவர்த்திக்குப் பேச நாவெழவில்லை.

“தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.” [சங்கீதம் 14:1]

“கர்த்தரே, நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்”. [வெளிப்படுத்தல் 4:11]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *