சிறந்த மாதிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 154 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொழிற் சாலையிலுள்ள ஒரு பையனிடம் சில இரும்புக் கம்பிகளைக் கொடுத்து கம்பிகளில் துவாரமிடும்படி ஒரு ‘மாதிரிக் கம்பியும் கொடுக்கப்பட்டது. மாதிரிப்படியே சில கம்பிகளில் துவாரமிட்டான். எப்படியோ அந்த ‘மாதிரிக் கம்பியைத்’ தொலைத்துவிட்டான். தான் துவாரமிட்ட கம்பிகளை வைத்துக்கொண்டு அதன்படி செய்ய ஆரம்பித்தான். முதல் கம்பியில் துவாரம சற்று விலகிவிட்டது. அதைப் பார்த்து அடுத்த கம்பியைத் துவாரமிட அதிலும் முந்தினதைவிடச் சற்று விலகி விட்டது.

இப்படியே வரவரத் தப்பு அதிகமானது.

இறுதியாக தொழிற்சாலையின் அதிபர் வந்து பார்த்தபோது நூற்றுக்கணக்கான கம்பிகளில் துவாரம் விலகி விடவே அவைகள் மாதிரிப்படி இல்லாததால் அவைகளைத் தூர எறிந்துவிட வேண்டியதாயிற்று.

நமது வாழ்க்கைக்கு மாதிரியாகக் கொடுக்கப் பட்டவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. நாம் அவரை மறந்து நமது போக்குப்படி நடப்போமானால் பரம பிதாவாகிய தேவன் நம்மைப் பார்க்கும்போது நாம் கிறிஸ்துவின் வாழ்க்கைக்கு முற்றிலும் விரோத மாயிருக்கிறதைக் கண்டு நம்மையும் தள்ளிப்போடு வார். எனவே, நாம் இயேசுவின் சிறந்த மாதிரியை மட்டும் பின்பற்றி நடககக் கவனமாய் இருப்போம்.

“உனக்குத் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே..செய்ய எச்சரிக்கையாயிரு.” [யாத்திராகமம் 25:40]

“கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் த முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார்.” [1 பேதுரு 2:2]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *