சிக்கனம்..! – ஒரு பக்க கதை





“அப்பா, தினமும் பக்கத்து வீட்டுலேர்ந்து ஓசி பேப்பர் கேட்டு வாங்கி வருவது எனக்கு அவமானமா இருக்கு” என்றான் அபிஷேக்.
இதிலென்ன வெட்கம்? பக்கத்து வீட்டு மாமா பேப்பரைப் படித்துவிட்டுப் போட்டுட்டுப் போறார். அதை நான் படிக்கிறேன். அதனால் அவருக்கென்ன நஷ்டம்?
எனக்குத்தான் தினமும் பேப்பர் வாங்கும் காசு மிச்சம். சிக்கனமாக இருக்க கத்துக்க.. என்றான் முகுந்தன்.
அப்பாவை ஏறிட்டு பார்த்தான். அப்பா, நீ சிகரெட்டுக்காக தினமும் பத்து பதினைந்து ரூபாய் செலவழிக்கிற. அதை நீ நிறுத்தினால் அந்தப் பணத்தில் ஒன்றல்ல
மூணு பத்திரிகை வாங்கலாம். உங்கள் உடலுக்கு நல்லது ஓசி பேப்பருக்காக அலைய வேண்டாம்.
முகுந்தன் அதிர்ந்து போனார். ஸாரிடா கண்ணா, இந்த சிகரெட் பாக்கெட்டைக் குப்பை தொட்டியில் போட்டு விட்டு கடைக்குப் போய் ஒரு பேப்பர் வாங்கி வா,
என்றார்.
– கே.என்.சுப்பிரமணியன் (செப்டம்பர் 2011)