சாத்துபவர்கள் சாத்தான்கள்
கதையாசிரியர்: கடல்புத்திரன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 85

“அருள், இந்த உக்ரேன் பிரச்சனை…என்ன, ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறதே?” கட்டடியிலே சபேஷ், கேட்க கூடி இருந்த உமா,யோகி, நாகேஷ்…எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய தொழில்சங்க அமைப்பில் இருந்தவர். அவனுடைய காலத்தில் அவர் ஒன்றாய் ஒரே விடுதலைக்குழுவில் பிழங்கியவர். மற்றவர்களுக்கு தான் புதியவர். யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகு எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு, பல வருசங்கள் ஓடி விட்டன. யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை.
அன்று, மானிப்பாய்யில் அவரவர் கிராமத்திற்க்குப் போக தீர்மானமின்றி தேனீர்கடை ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு நின்ற போது எதேச்சையாக வந்த குலம் இவர்களை கண்டு விட்டு இறங்கி வர”அண்ணே இன்னொரு தேனீர்”என்று அவனை வரவேற்றார்கள்.”எப்படியடா இருக்கிறீர்கள்? உயிரோடு உங்களைக் காண்கிறதில் ரொம்ப சந்தோசமடா,எங்கடா இங்கே?” எனக் கேட்க “எங்கட இடத்தை ஒருக்கா எட்டிப் பார்த்து விட்டு வருவோமா என நினைக்கிற போது நீ வருகிறாய்”என்று உமா கூறினான். “டேய்,கடைசி வரையில் போகாதீங்கடா, பொறுப்பாளர்களைத் தான் அவங்கள் பிடிக்கிறாங்கள்.”என்று எச்சரித்தான். பக்கத்திலே தான் திரிந்த நிலம், உயிர் கிராமம் இருக்கிறது. ‘போக முடியவில்லை என்ற மனவருத்தம் ‘ உள்ளே வெகுவாக அரித்தது.”உனக்கொன்றும் பிரச்சனை இல்லையா குலம் ?”என்று சபேஷன் கேட்டான்.”நான் கல்யாணம் கட்டியவன். சங்க வேலைகளை அப்பையே நிறுத்தி விட்டோம். குழுவைச் சேர்ந்தவனில்லை, தொழில்ச்சங்கம் வேற என்பது அவங்களுக்கு தெரியும். தப்பித்திருக்கிறேன்”என்றவன் இரண்டொரு மாதங்களிலே முடிந்து போனான்.கிராமத்துத் தோழர்கள்,’இவர்கள் கொழும்புக்கு எப்பையோ போய் வெளிநாடும் போய் விட்டார்கள் ‘ என்றே பதிலளித்து வருகிறார்கள். சாடைமாடையாய் தெரிந்திருந்தாலும் மூச்சு விடுவதில்லை.ஒருமுறை பயணித்த பஸ் வயலில் இறங்கிய போது சபேஷன் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்க்கு இழை பிடித்ததுடன்,குலத்தின் அபாயக்குரல் நினைவில் வர ‘தலைவாறலையும் கொஞ்சம் மாற்றி, உடையையும் மாற்றி விட்டிருந்தான். முன்பெல்லாம் யூனிபோர்ம் போல ஒரே சாரத்துடன் திரிந்தவன். தாடியும், சாரமுமே அவன் அடையாளங்கள்.கல்யாணமாகிய பின் முதலில் செய்தது தாடியை வழித்தது தான்.மாறிய முகம்.மீசையை நரைக்கும் வரையில் காத்திருந்து இப்பத்தான் எடுத்திருக்கிறான். தெரிந்தவர் கூட மட்டுக்கட்டுவது சிரமம் தான்.
தொன்னூறுகளிலே கைதானவர்… வதைப்பட்டு வானுலகம் போய் விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன . தாமரையிலே பெரும்பாலும் கொலையுண்டு போனவர்கள் பொறுப்பாளர்கள் தாம். அன்று அரசியலை படிக்க..மதிப்பாய் பொறுப்பாளர் என ஒவ்வொருவரையும் நியமிச்சது இப்படி பாம்பாக மாறும் என்று எவருக்குத் தெரியும். இவன் சேர்ந்த சமயம் ரவி, பொறுப்பாளர். அவர் …குழுவில் பாண்டி சேர்ந்திருந்தான். சமூகச்சூழலில் 5ம் வகுப்பு கூட படியாத அவன் சண்டை சச்சரவு என கிராமத்தில் திரிந்து கொண்டிருந்தவன். வேலு, பாண்டியின் நண்பன். சபேஷன் பாண்டி மூலமாகவே தோழராக சேர்ந்தவன். அவன் பெற்றோர் கிராமத்தில் மதிப்பானவர்கள். அவர்களில் கூடுதலாக படித்தவன் சபேஷன். அவனை கிராமத்தார் முழுதினருக்கும் தெரியும். ரவி, ஓரளவு பாண்டியை நேர்ப்படுத்தி இருந்தான். மும்மூர்த்திகளாகவே திரிந்தார்கள். பிறகு, சபேஷன் பொறுப்பாளரான போது பாண்டி வலதுகையாக மாறி விட்டான். அவனுடைய தாய்க்கு ஏனோ…’ சபேஷன் தான் தன் பிள்ளையை திருத்தினவன் என்ற நினைப்பு ‘.எவ்வளவு பாசத்தைப் பொழிந்தார். அன்றைய நிலமை… பாதுகாப்பாகவே இருந்தது. அது மெல்ல மெல்ல எதிராக திரும்பிப் போனது. அவன் கொழும்புக்குப் போனதுபலருக்கு தெரியும். திரும்பி வந்தது, யாழ்ப்பாணத்திலே…இருப்பது தெரியாது.
இந்த கட்டுக்கு வார முன்னாள் கழுகுக்கிழம் ஒன்று.”டேய், உவங்களில் யாரை போய்க் கேட்டாலும் பொறுப்பு, பொறுப்பு என்கிற.. நாய்ப்பயல்கள். ஒருத்தன் கூட தோழன் கிடையாது “என்று …சொல்லி கெக்கலிட்டுச் சிரிக்கும். கலை இலக்கியத்துக்கு…பொறுப்பு, விவசாயத்திற்கு ஒன்று, கூட்டுப்பண்ணையை நோக்கி தொழிற்ச்சங்களுடன் இயங்கிறதுக்கு ஒன்று…என புது ரத்தம் பாய்ச்சி இயங்கியும்,’தாக்கிறபோது புயலாகத் தான் தாக்குவோம் ‘ எனத் தயார்படுத்திய குழுவை உள்பிரச்சனைகளே சாப்பிட்டு விடும் போலாகி போனது.குழப்பத்தின் வித்துக்களில் ஒன்று கழுகு . குழுவின் நிலை, வெளியில் இயங்கிற அரசியல் கட்சியைப் போன்றதா? என்ன ?. குழப்பத்தை நீக்க உள்ளே இருந்து போராட வேண்டும். இவர்களின் தலைவர்களை கழுகு தாறுமாறக அழித்து வந்தது ஒருபுறம் சிப்பிலி ஆட்டியது. நம்பிக்கையீனமும் வளர்ந்தது. அதற்கு ரஸ்யப்புரட்சிக்கட்சியைப் போல … கட்டியதை இடைநடுவே விட்டிட்டு ஓடிப் போய் விட முடியுமா… குழப்பத்தை நீக்க உள்ளேயும் போராட வேண்டிய நிலை. கனவுகள் அழிபடவேக் கூடாது. அழிக்கப்பட விட மாட்டோம் என்று எத்தனை உள்ளங்கள் இரத்தக்கண்ணீர் வடித்தன . வெறுமனே அழிக்கப்பட்டுத் தான் போய் விடுவோமெனத் தெரியுமா !. இது தான் விடுதலைப் பாதையா, இல்லை விதியா ?. கழுகு, குழுவின் கனவை எரித்திருக்கிறது . ஈழவரசு விடுதலையை அழித்திருக்கிறது.
“உவங்கள் உவங்களை தான் அழிச்சாங்கள்”என்று கூறி சிரிக்கிற எதிரிக்கு தன், கொடூரங்களை…மூன்றாம் தரத்திற்கு தள்ளி விடுற வஞ்சகமும் காவி கிடக்கிறது. கிட்லர் காலத்து இருகோடுத் தத்துவம். ஒரு கோட்டை பெரிசாக்கி சொல்லிக் கொண்டு வர மற்றது சிறிசாகி விடுகிறது.. இப்ப, அமெரிக்காவும் அல்லைக்கைகளும் சேர்ந்து பயன்படுத்தியும் வருகின்றன.1008, 9/11 களை இஸ்ரேல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. ஆனால் பழையது… தான் என்றும் ‘கொடூர தாக்குதல் !’. இதில், எங்கே ஈழத்தமிழரை உலகம் கணக்கில் எடுக்கப் போகிறது. அஞ்சலி செய்யலாம். வலிந்தவன் கையில் மயிர் மண்ணாங்கட்டி…ஊடகம், எல்லாம் சிக்குப்பட்டுக் கிடக்கிறது. ஏழை எப்பவும் ஏழை தான். தமிழர் நிலத்தில் துறைமுகம், விமான நிலையம்…எங்கிலும் காலூன்றி நிற்கும் படைத்தரப்பினர். சுதந்திரம் மருந்துக்கு கூட இல்லை. பாலாஸ்தீனப் பிரச்சனை தீர்ந்தால் தான் ஈழபிரச்சனையும் ஒருவேளை தீருமோ ?.
உக்ரேனைப் போல இங்கேயும் அரச தலைவர்கள் கிடையாது. அரசியல்வாதி தொட்டு எல்லாரும் ராணுவ படைதளபதிககளாக தான் இருக்கிறார்கள். தற்போதைய தொப்பிக்குள்ள கொஞ்சம் கருணை…காணப்படுகிறது. வேற புதிதாய் இல்லை. பள்ளி விசேங்களிலும் கூட தமிழ் அரசியல் தலைவர்கள் போல படைத்தரப்பே எலிப்படை, பூனைப்படையுடன் விஜயம் செய்கிறது”சிவில் உடையில் வா”என்று அவையிடம் சொல்லக் கூட நாதி இல்லை.
இப்படியான வாழ்வு எவ்வளவு காலத்திற்கு என்று கரைகிற கவிஞர்களும் சிறுத்துப் போய்…. பெடியள்கள் கட்டெறுப்பாய்யாகி, பெடியகளே இல்லை என்றாகி ஊர்களில் எல்லாம் பேய்கள் அடித்துப் பிடித்து வாழ்கின்றன. கிராமங்கள்…தொட்டு எல்லாமே இருண்டு போய் கிடக்கின்றன. இப்ப குலத்தின் மகள் கூட பேத்தியைப் பெற்றிருக்கும். குலத்தால் தப்பியவர்கள். இல்லா விட்டால் இந்த மண்ணை முத்தமிட்டவர்களாகி மண்ணுக்குக் கீழே எலும்புக்கூடாகியும் இருப்பார்கள். சபேஷன்ர மனைவியின் தங்கச்சியை நாகேஷ் கட்டியிருக்கிறான். மச்சான், தூரத்து உறவு என புதிய உறவுகள் வாழ்கிறது.
“மச்சினிச்சி வந்த நேரம் மண் மணக்கிறது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்கிறது
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்றைக் கட்டி வைச்சேன் ஆட்டம் ஆட
தேவதையைக் கூட்டி வாங்க வாசல் தோறும் கோலம் போட…!” என்று…
சந்தோசமாய் பாடிக் களிக்கிற இயல்பான பழைய வாழ்க்கை எல்லாம் எமக்கு எப்ப வரப் போகிறதோ, கிடைக்கவே மாட்டாதா ?. . அவனைப் பார்த்து மனிசி, பிள்ளைகள் அழுது வடிகிறதும்..சூழ அழுது வடியும் முகங்களும். அவன் நடை பிணமாகி விட்டான்.
அவர்களின் பனைவளம் கொழித்த பழைய யாழ்ப்பாணத்தை நினைத்துப் பார்த்து ஏக்கமுற வைக்கிறது.’பஞ்சவர்ண கிளிகள் பறக்கிறது’ கூட அருகிப் போய் விட்டது..’ போர் ‘மரங்களுக்குக் கூட எதிரானது. தமிழர் நிலங்களில் மூன்றில் ஒரு பனைமரங்களையும் அல்லவா அழித்து விட்டது. அதில் உறைந்த பஞ்சவர்ணக் கிளிக் கூட்டங்களும் மறைந்து விட்டன. மரம், பறவைகள் என்ன பாவம் செய்தன ?
மரமும் கூட உயிரினம் தான். காதைக் கிழிக்கும் சத்தம், உடலைக் கிழிக்கும் சன்னம். அவற்றையும் அதிகமாக பாதிக்க வைக்கின்றன. ஈழம் மல்டிக் காலனிசம் உள்ள நாடு என்பது உண்மை தான். போத்துக்கீசர் காலத்தில் சிலுவைகள் முளைத்தன. இப்ப, சிலைகள் முளைக்கின்றன. தடுக்க முடியாது முளைக்கிறதுகள் களைகளாக வளர்கின்றது. இனத்துவேஷங்களைக் காவிக்கிடக்கும் அமைச்சுக்களாலும் , தோரணங்களாலும் தமிழ்த்தாயகம் மூடிக் கிடக்கிறது. செயலிழந்த நீதித்துறைகள். எப்படி தடுத்து…நிறுத்தப் போகிறார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தே ஆக வேண்டும்.பாலாஸ்தீனத்தில், இஸ்ரேல் தலைவரை மட்டுமில்லை அமெரிக்கத்தலைவரையும் கூட போர்க்குற்றவாளி என்றே அறிவித்திருக்க வேண்டும். அல்லைக்கைகள் காலம் முழுதும் மெளனித்துக் கொண்டே இருப்பர். ஈழத்திலும் தொடரும் மெளன விரதம்.
கையாலாகாத்தனம் தான் தற்போதைய அரசை அதிகமாக எதிர் பார்க்க வைக்கிறது.
தொடக்கக் காலத்தில் சேர். பொன். இராமநாதன், வடக்கு கிழக்கில் ஒரு மரையன் கல்லூரிகள் கட்டாயம் நிறுவப் பட வேண்டும் ‘என்ற கோரிக்கையை முன் வைத்தார்.வடக்கு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம்(பெனிசுலா). கிழக்கு கடலோரமாக அமைந்த பிரதேசங்கள். அவசியத்தை உணர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கை. அன்று உயிர்த்த புறக்கணிப்பு இப்பவும் வாழ்கிறது. கல்வி,தொழில் கலாச்சார உரிமைகளிற்குள் வருகிறது. ஏன் புரிய மாட்டேன் என்கிறது. கெளரவமா, திமிரா, அல்லது உடலோடு ஒட்டிப் பிறந்ததுவோ..?.எல்லா தேரர்களையும் சுட்டவில்லை.சிலர் கலாச்சார உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். எழுத்தாளர் தேவகாந்தன் நாவல்களில் வருகிற…வணக்கத்திர்குரியவர்களிடம் சபேஷன் கூட ஆசி பெற விரும்பியிருக்கிறான். தற்போதைய அரசு ‘ நாம் ஈழவர்’ என்று கூறுகிறது. ஆனால் வெளியில் இருக்கிற எதிர்ப்புக் குரல்களை…எப்படி ஓரணிக்குள் கொண்டு வரப் போகிறார்கள். பேசாமல் இவர்களும் வெளியணியோடு சேர்ந்து விட்டால் தமிழர்களுக்கும் வீணே கனவுகளை வளர்க்க வேண்டியுமிருக்காது.
அவர்களுடைய அரசியல் வேதப்புத்தகத்தில் தமிழர்களுக்கு’கலாச்சார உரிமைகளும் அளிக்கப்பட கூடாது என்கிற பிடிவாதமும் நிலவுகிறது . மாகாணவரசு இயங்காமல் விட்டால் கலாச்சார உரிமைகளும்… இல்லை. ஒற்றை ஆட்சியாய் குறுக்கிக் கொண்டு…கல்லூரியை கட்டுப்பெத்தையில் கொண்டு போய் நிறுவியது.அதற்கு பின்னால் காலனி மேய்ப்ப்பாளரின் கட்டளையும் கிடக்கலாம்.இனப்படுகொலை தொட்டு, எல்லா விவாகாரங்களுமே நாடுகளில் இரகசியமாக கூடி கூடி திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
முடிவில், ‘நான் அவனில்லை’ சுத்தி விடப்படுகிறது.புகை இருந்தால் தானே தேவதூதர்கள் இறங்கிவருவார்கள். பிரச்சனைகளே இல்லாமல் ஆக்க… புதிய பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டுமல்லவா. மேல்மக்கள், பிறகு, தம் மேன்நிலையை எப்படி தக்க வைத்துக் கொள்கிறதாம். ‘அரசியல் விசம் ‘ எல்லாத்திலும் பரவியிருக்கிறது.
நல்லபடியாக இந்தியா ‘ சமாதான ஒப்பந்தம் ‘ தூக்கலாக எழுதியது. சமாதான அவைகள் அதற்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றி வைத்திருக்கலாம். இந்தியா எழுதியதாலே… அல்லைக்கைகளுக்கு அமுலாக்க சம்மதம் இல்லை. நிறைவேற்றப்பட்டால் இவர்களுக்கு ஏது மரியாதை . உக்ரேன் தலைவர் போல ஒருத்தரும் இந்தியாவிலும் இல்லை. கூடவே கூடாது. பதிலுக்கு இவர்கள் தயாரிக்கிற தடைசெய்யப்பட்ட ஆயுதம் ஈறாக…மற்றயவைகளையும் கொண்டு போய் இறக்கினார்கள் . அமெரிக்கத் தயாரிப்பான 500, 1000 இறாத்தல் குண்டுகள் எல்லாம் போரில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. முதலாளித்துவ நாடுகள் பச்சைத்தண்ணீயிலே பலகாரம் சுடுறவை. தடையாக நின்ற இந்தியத்தலைவர் கொல்லப்படுகிறார்.
ஒரு கல்லூரி நிறுவது செலவுடையது தான். சுயாதீன நிதி நிலமைகள் இருந்திருந்தாலும் தமிழர்கள் மரையன் கல்லூரிகளை எப்படியாவது நிறுவி விட்டிருப்பார்கள். கல்லூரியை முறைசார் வழியிலே மட்டும் தான் நிறுவ வேண்டும் என்பதில்லை. தொழிற்சங்க மூலமும் கூட ஏற்படுத்திக் கொள்ளலாம். கலாச்சார உரிமைகளுக்குள்ளளேயே வருகின்றன. இவர்களுக்கு கட்டளை இடுவது பிரிட்டனாக கிடக்கிறதே…எல்லாத்திற்குமே தடைகள் . ஈழம் தொடர்ந்தும் ஒரு நவகாலனி நாடாகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஈழவரசு வெறும் பொம்மை அரசு. முட்டாள் அரசுக்கு இனத்துவேஷம் என்ற பையித்தியம் வேற பிடித்திருக்கிறது. விதி இவர்களுகெதிராக… விளையாடுகிறது. நாடு, படு பிற்போக்குத்தனத்தில் சிக்கிக் கிடக்கிறது. அன்றே பிரிட்டனை விட்டு உண்மையாக விலகி இருந்தால் இன்று ஈழம் சிறந்து நாடாக விளங்கி இருக்கும். இன்றைய இனப்படுகொலையைச் செய்து ஊனத்தை, ஊத்தையை சுமந்து கிடக்காது. இயற்கையை அழித்தும், மா(சு)சாகிப் போயும் கீழ்மை நிலை எய்தி கிடக்காது.
தமிழர்களை உள்ளேயும் சரி, வெளியேயும் சரி ‘அகதி ‘எனக்கூறுவது சரியாகப் படவில்லை.அது ஒன்றும் அசரிரீயும் கிடையாது.அக்குரல் ‘ பிடுங்கி எறியப்பட்டவர்கள்’ என்பதை சதா குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது . எந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கும் இணங்கிப் போக வேண்டும் என்ற கட்டாயமும் எமக்கில்லை . இடதுகுரல்களுடன் சேர்ந்து ஒலிப்பதே புத்திசாலித்தனமாக இருக்கும் எனத் தோன்றுகிறது . ஆனால் பல முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. கிடையாது. கட்சிகள் இல்லாவிட்டால் என்ன, தடையற்ற நாடுகளிலே ஏற்படுத்திக் கொள்கிறது. அத்தகையக் கட்சிகளை ஏற்படுத்தி குரல் எழுப்பி வரல் வேண்டும். சுயம் இழந்த மக்கள் எப்படியும் தம்மை ஒரு கட்சியுடனே இனம் காட்டிக் கொள்ள முடியும்.
இப்ப, இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு புதிதாய் தெரிந்தவர்கள் . பலவருசம் ஓடி விட்டாலும்…புதுமுகங்கள் தாம். சனப்புழக்கம் குறைந்து விட்ட நிலையிலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மந்தித்துப் போய் கிடக்கிறது. ஏற்கனவே யாழ்ப்பாணம் ஒரு நகரம். சொந்தக்காரரை விட வேற எவரையும் அறியும் அக்கறையின்மை கூடிய இடம். இங்கே தொடர்மாடிக் கட்டங்கள் இல்லை. இருந்தால் அயலவருடன் கூட பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். நகரச் சாயல்களும் அங்காங்கே காணப்படுகின்றன.தமிழர்கள் காணி, வேலிச் சண்டைக்கு வேறு பேர் போனவர்கள். கிராமத்தில் பல சாதிகள் இருந்தாலும் எல்லாரும்..எல்லாரையுமே அறிந்திருப்பர். கோயில், கல்யாணவீடு,செத்த வீட்டிலே மட்டுமே…விலகலைப் பார்க்கலாம். அது அன்று. இன்று…எல்லாமே சிறுத்து… பேச்சுத்துணைக்கு… அயலவரும் இல்லையென்றால் பையித்தியமே பிடித்து விடும் நிலமை.
இன்றைய சுய விமர்சனத்தில் சாதியும்….அலசப்படுகிறது. தென்னிலம் அதற்கு அழுத்தம் கொடுக்கவும் முயல்வதாய்ப்படுகிறது. அவர்களுடைய வேதப்புத்தகத்திலே கை வைக்க கூசுகிறவர்கள். இந்த சாதிவேதப்புத்தகம் ஈழத்தமிழருடையதுமில்லை . இதில் பேசுவது எந்தளவில் சரி எனப் புரியவில்லை. தமிழர்களால் அதில் சீர்த்திருத்தங்களை மட்டுமே ஏற்படுத்த
முடியும். கணிசமாகவும் முன் சென்றிருக்கிறார்கள் தான்.. அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்காத…… தென்னிழத்திற்கு அவ்வளவாக பேச உரிமையும் இல்லை. ஆனால், எம் தரப்பில் வி ழிப்புணர்வை எற்படுத்த உண்மையாக , பேசுவாராயின் ஏற்றுக் கொள்ளலாம் தான். அதை எப்படிக் கண்டு பிடிப்பது ? …சட்டம் நீக்கப்படாதிருக்கும் நிலையில் போலி சாயம் பரவவேச் செய்யும்.
“அருள் அண்ணே, இந்தப் போர் , ரஸ்யப்போரா இல்லை ரஸ்ய உக்ரேன் போரா ? புரியவில்லையே?” என்ற சபேசனின் கேள்வியும், எல்லார் மனதிலும் இருக்கவே செய்கிறது. கேட்டான்.
“டேய், இப்படி பாருங்கடா, ஈழத்திலே ஒரு ஆட்சி கிடக்கிறது தானே. வெளிநாட்டுக்காரன், இங்கே உள்ள ஒரு முறைசாரா குழுவொன்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி, ஸ்பிரிங் புரட்சியிலேயே செயற்கை நுண்னறிவை பயன்படுத்தியோ இங்கிருக்கிற ஆட்சியை கவிழ்த்து தம் சார்ப்பானவர்களையும் புகுத்தி புதிய ஆட்சியை அமைத்து தேசீயம் பேசினால் எப்படி இருக்கும் ?, வடக்கு, கிழக்கிலே சிங்களத்தை ஆட்சி மொழியா திணித்த போதே போதே நாம் இங்கே ஆயுதம் ஏந்திய இருக்க வேண்டும். எம்மவர்க்கு அது தெரியவே தெரியாத பாடம். தெற்கு இளைஞர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பிறகே, நாமும் இவயளைப் போல போராடலாம் என்ற சிந்தனை வந்து…ஆயுதங்களை ஏந்தினோம்.
உக்ரேனில், ரஸ்ய மொழி பேசுறவர்கள் எல்லா இடங்களிலும் பரந்திருக்கிறார்கள். நம்மைப் போல கிரீமியாவில், தெற்கு, கிழக்கு மாகாணங்களில் தாயகமாக செரிந்தும் இருக்கிறார்கள். சோவியயூனியனின் குடியரசாக இருந்த போது ரஸ்ய மொழியும், உக்ரேன் மொழியுடன் ஆட்சி மொழியாக்கப்பட்டிருந்தது. பிறகு, தொன்னூறுகளில் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு உக்ரேன் தனிநாடாகிய போதும் அரசியல் வேதப்புத்தகத்தில் மாற்றமே இல்லை. இரண்டுமே ஆட்சி…மொழி தான். மொழி பிரச்சனையாகவும் இருக்கவில்லை, நாட்டிற்கு உபத்திரமாய் இருக்கவில்லை. பரந்துபட்ட மக்களின் ஜனநாயகப் பண்பாகவே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் அது”நம்நாடு உக்ரேன், நாம் உக்ரேனியர்”என்ற உணர்வை பதித்திருந்தது. தற்போது, ரஸ்யமொழி உக்ரேன் மொழியின் வளர்ச்சியை தடைப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. ஜார்காலம், அதற்கு முந்திய காலத்தில் உக்ரேனே என்ற நாடே இருக்கவில்லை. ரஸ்ய மக்களும் அவ்வாட்சியால் நசுங்குண்டு போயே….துயரப்பட்டவர்கள். அந்நிலமையே புரட்சிக்கும் தள்ளியது.உக்ரேனியப்பகுதியில் சோவியத் கட்டமைப்புக்களை ஏற்படுத்த தேவையாகவிருந்தது அந்த வகையிலும், பரந்து பட்ட குடிகளாலும் தற்போதைய நிலையில் ரஸ்யமொழியும் ஜனநாயகம் என்ற வரைபில் ஆட்சிமொழியில் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. அமெரிக்காவும், அல்லைக்கைகளும் பழைய மொழித் திணிப்பின் தொடர்ச்சியாக சோவியத் ஆட்சி தொடர்சியையும் கூறுகின்றன. அது உக்ரேன் போருக்காக சிண்டு முடியப்பட்ட செயற்கைப் பிரச்சாரம்.கனடாவின் சத்த அலைகள்….கியூபெக்கையும் தாக்கியது. அதிகரித்திருந்தால்…அம்மாநிலம் பிரான்சுடன் போய் சேர்ந்து விடும். கணனித்திருடர்களாய் (சோசல்மீடியா வழியில்) ஊடுருவி, இவர்களின் ஆட்களும் கூட இறக்கப்பட்டு (பலவழிகளிலும் நிகழ்த்தலாம்)சோவியத் கால அடையாளங்களை, உடைத்து, சிலைகளை வீழ்த்தி…மத்திய கிழக்கில் நடத்தியது போல செயல்படுத்தியது. பார்வையில் உக்ரேனியரின் கிளர்ச்சி,புரட்சி போன்ற வடிவம். அரபு நாடுகளில் நடத்துவதை ரஸ்ய அயல் நாடுகளில் போய் நடத்தினால் சாயம் வெளுத்து விடும் எனத் தெரியாத பாப்பாகள். ஜி8 நாடுகளிலிருந்து ரஸ்யாவை விலத்தியது ஆரம்பம் எனத் தோன்றுகிறது.
கியூபெக் மாகாணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே கலாச்சார உரிமை அளிக்கப்பட்டிருந்தது.
அது போதவில்லை என கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.கனடா,முன்னம் பிரெஞ்சுதேசம்.பிரான்சு தான் முதல் காலனிப்படுத்தி இருந்தது. தமிழ் சிங்கள மோதல், போர்கள் எல்லாம் கடந்தே ஆட்சி பறிக்கப்பட்டே ஆங்கிலயரின் கீழ் வருக்கிறது. பிரான்ஸும் லண்டனைப் போல பெரிய ராட்ஸியம். வரலாறு, ஆனைக்கொரு காலம், பூனைக்கொரு காலம் என் ஏறி இறங்கிற ஒன்று தானே. இப்ப, லண்டன்..பிரான்சுடன் மல்லுக்கட்ட விரும்பவில்லை.கனடாவில் கியூபெக் மாநிலத்திற்குள் நுழைகிற போது….அதை நேரிலே நீங்களும் பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடொன்றுக்குள் நுழைகிற உணர்வையே முழுமையாகப் பெறுவீர்கள். ஆங்கிலத்தை…துப்பரிவாளர் போலதான் பூதக்கண்ணாடியை கையில் வைத்துக் கொண்டே தேட வேண்டியிருக்கும். சுத்தமாக வேற உலகம். தொலைக்காட்சி,வானொலியிலும் அவ்வளவு எளிதாய்…காதில் ஆங்கிலதேன் வந்து பாயாது. சில வரைபடம்…ஆங்கில எழுத்தில் என்றிருக்கும்.அதை சொல்கிற உச்சரிக்கிற போது புரியவே புரியாது. பிரெஞ்சு உச்சரிப்பில்…சில எழுத்துக்கள் மாயம். மெளனித்து விட்டிருக்கும். இரண்டுக்குமிங்கு குத்துச் சண்டை இல்லை.பகையும் இல்லை. கலாச்சார உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அதை கியூபெக்கர் விட்டுக் கொடுக்க விரும்புவதேயில்லை. வடக்கு,கிழக்கில்”எமக்கு இப்படியான கலாச்சார உரிமைகளாவது கிடைக்காதா ?…” என ஈழத்தமிழரை நிச்சியம் கேவவே வைத்து விடும்.பஞ்சிப்பட்டு,பஞ்சிப்பட்டு 70களிலே தான் பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாக்க உடன்பட்டார்கள். கிள்ளுக்கீரைக் கணக்கில் பேசினால் மறுபடியும் சந்தேகம் எழத் தொடங்கி விடும். அப்பர் ஏற்படுத்தியதை பையன் கெடுத்தான் என்றில்லாமல் ஒரு இருள்மேகம்…நல்லகாலத்திற்கு கலைந்து போனது.
அதற்குப்பிறகு வந்த பிரதமர் உக்ரேன் தலைவருடன் 108 சந்திப்புகள், வரவேற்புகள் என்றெல்லாம் நடத்துவதில்லை.
இருந்தாலும் கனடா பிரிட்டனின் பிள்ளை . அல்லைக்கைகளின் கூட்டு வேணும், உக்ரேனை உசுப்ப சேவைகள் செய்யவும் வேண்டும். மாறுபடு சூழலில் சேர்ந்து இயங்கவும் வேண்டும். அச்சமயங்களில் கனடா பிள்ளையாய் மட்டுமே நடக்கும்.மனித உரிமை நாடாக…இருக்காது. ரயில் தடம் புரண்டும் ஓடுகிறதும் இல்லையா. அமெரிக்கன் வெறும் தண்ணீயிலே காரை ஓட்டி வர்த்தகம் செய்பவன், செய்விப்பவன்.கனவானான பிரான்ஸே,சுதந்திரம்,சுயநிர்ணயம்,சுயாட்சை பற்றி பேசினால் …தூக்கலாக இருக்கும் !. அதற்கு பேச வைக்கப்பட்டிருக்கிறது.USSR கூட்டிலிருந்த ஒன்றை பெயர்தெடுப்பது என்றால்…லேசுபட்ட காரியமா, என்ன. ‘கனடாப்பையன் ரிப்பன் வெட்டினார்’அவ்வளவு தான் என…பகிடியாக அருளர் சொன்னார் .
USSR நாடுகள் உட்கட்சிப் போராட்டம் போலவே பாதையை எடுத்திருக்க வேண்டும் .அல்லது இவை சுயமாக கூட்டாகி தம்மை சீர்படுத்த முயன்றிருக்க வேண்டுமே தவிரதெரிந்தே வேறொரு பம்மாத்து கூட்டணியில்…சேர போயிருக்கக் கூடாது. உக்ரேனில், குறும் தேசீயவாதிகள் ஏற்கனவே இருந்தார்கள். புரிகிறதா…உக்ரேன், இப்ப யார் கையில் விழுந்திருக்கிறது என்று பூடகமாக அருளர் பேசினார். ஆங்கிலம் தெரியாதவரிடம்…ஆங்கிலதில் பேசுவது போல இருந்தது. இன்று சார்ப்பு நிலையிலே தான் எல்லோரும் வரலாற்றைப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள்.புனைந்தும்…தொடர்கிறார்கள்.
. உக்ரேனில்,கசாக்(கோசாக்) புல்வெளி மக்கள் ரஸ்யப்புரட்சியை பிடிக்காது ஜேர்மன் நாஜிகளுடன் தொடர்புபட்டும் , போலாந்து, லித்துவேனியா, ஆஜார்பையான் ஆமிகளில் சேர்ந்தியங்கியும் கணிசமாக கிடக்கிறார்கள்.அவர்களின் வாரிசினர். நாஜியராகவும் இருக்கின்றனர். ஜேர்மனிய ஒட்டுக்கு இது தான் பெரும் காரணமாக இருக்க வேண்டும். வரலாற்றிலே எந்தவொரு சமாதான வரைபையும் எழுதாத ஜேர்மனி, இந்தியாவைப் போல் மியும்ஸ் சமாதான வரைபை எழுத பிரான்சுடன் கிளம்பி போகிறது. இவர்களில் ஒரு பிரிவினர் சோவியத்யூனியன் படையிலும் வீரம் காட்டியும் இருக்கிறார்கள். 2ம் உலகப்போருக்கு பின் ஜோசப் ஸ்டாலின் அந்தபடையமைப்பைக் கலைத்து விடுகிறார். ஏன்…ஏதும் காரணம் இருக்கலாம். இவர்களுக்கென கலாச்சாரமும் கிடக்கிறது. உக்ரேனில் ‘இவர்களுக்கென ஒரு நாடு ‘ என்ற குறும் தேசியக் கனவை வளர்த்து வருபவர்கள். அல்லக்கைகளால் இவர்களின் அசோவ் குழு உக்ரேனின் கண்ணியப்புரட்சிக்கு தெரியப்படுகிறது.அச்சமயம் குழு, ஈழக்குழுவைப் போல எல்லாத்திலும் வறுமையை எதிர் கொண்டிருந்தது. அதற்கு,ஒரு யூத பணக்காரர் நிதிவுதவி செய்கிறார், பதிலுக்கு ஜெலன்ஸ்கி தலைவராக வர வேண்டும் என்கிற நிபந்தனை ஏதும் இருந்திருக்க வேண்டும். இஸ்ரேலின் நிழல் அங்கேயும் உள்ளது.உக்ரேன் அடிப்படையில் ரஸ்ய நாடு. எனவே, ஐரோப்பியருக்கு ரஸ்யாவே உடைத்து அழிப்பதிலும் ஒரு குரூர திருப்தி நிலவுகிறது. இன்றைய அமெரிக்க தலைவரின் வருகைக்குப் பிறகே, இமேஜை உடைத்தெறியிற மாதிரி ரஸ்யாவின் அடிகள் பலமாக அதிகரித்திருக்கின்றன.நொட்டிக் கொண்டிருந்த கிரிக்கெட் மச்சில் சிக்ஸர் அடிக்கிற சூடு பிடித்திருக்கிறது. அல்லைக்கைகள்( ஐரோப்பியர்)பந்து வீச்சாளர்களை மாத்தி, மாத்தி போட்டு முயன்று கொண்டே இருக்கிறார்கள். இப்படி பேசுறது தவறில்லை. பாலாஸ்தீனப் படுகொலைகள் நடைபெறுகிற போது..கால்பந்தாட்டப்போட்டி நடை பெறுகிறது, ஒலிம்பிக் நடை பெறுகிறது. ஈழக்கொலைகள் நடைபெறுகிற போது கிரிக்கெட்மச்சுக்கள் நதை பெற்றிருக்கும்.அருளர் உணர்ச்சியில் பேசிக் கொண்டே போகிறார்.
இப்பதான் கனடாவில் இருமொழி பேசமுடியாதவர் தலைவராக வர முடியாதது இருக்கிறது. இது முக்கிய சாதனை சரத்து தான்.இருமொழி தெரிந்தவர் தான் ஈழத்திற்கு தலைவராக வர முடியும் என்றால்… இந்த கர்மானந்தம் ஈழத்திற்கு சரிப்பட்டு வராது. சிங்களவருக்கு தமிழ் வராது. தமிழருக்கு சிங்களம் கொஞ்சம் வருகிறது. ஆனால், ஒரு தமிழர் ஈழத்தலைவராக வர முடியாது. கனடாஐயர் உக்ரேனில் போய் ‘இந்த சரத்தை உடைக்கிறது’ என்றால் தனக்கு மட்டும் தான் நன்மையை வைத்திருப்பார்,மற்றவருக்கில்லை…என்பது போல இல்லையா. இவர்கள் எல்லாம் பாலாஸ்தீன மக்களைக் கொல்வதில் வேற கூட்டாளிகள். நாளை இந்தியா மீது இந்த கூட்டும் படை எடுக்கலாம். சரித்திரம் மாறவில்லை. அப்படியேத் தான் கிடக்கிறது. ஜனநாயகப்புரட்சி எழுந்த போது அது பூத்தோட்டம்.மலர்கள் மலர்ந்து விட்டதாக நினைத்திருப்பது வெறும் கானல்.வெறும் மாயை.ஈழத்தில் ‘ சிங்களம் ‘மட்டுமே என எழுதப்பட்டிருக்கிறது. உக்ரேனின் புதிய அரசு, ரஸ்ய மொழியை அகற்றிய உடனேயே அங்கே கலகம் வெடித்து விட்டது. கிரீமியா, தெற்கு மாகாணங்களும் பிரிவினைக் கேட்டு சர்வசன வாக்கெடுப்பில் இறங்கி விட்டன. ரஸ்யா, கிரீமியாவை மட்டும் ஏற்றுக்கொள்ள அந்த முறைசாரா உக்ரேன் அரசை வெளிநாடுகள் வரிந்து கட்டிக் கொண்டு அங்கீகரித்ததோடு ஆயுதங்களையும் கணக்கின்றி வழங்க, அது மோசமாக தெற்கு மாகாணங்கள் மீது, இங்கே வடக்கு,கிழக்கில் போரை தொடுத்தது போல வான், தரை என வேற தொடுத்து விட்டது.ரஸ்யா அந்த மாகாண பிரிவினைக்குழுக்களுக்கு சிறியரக ஆயுதங்களையே வழங்கி வந்திருந்தது .
தெற்குமாகணங்களில் இனப்படுகொலையையே நிகழ்த்தி விட்டது.இந்தியாவைப் போல ரஸ்யாவே இது ‘ இனப்படுலை’ என சொல்ல வந்தது. நடந்த பிறகே,பிரான்சும், ஜேர்மனியும் விளையாட்டாக மியூன் அமைதி ஒப்பந்தம்கள் எழுத வெளிக்கிட்டன. உக்ரேன், மீறவே, ரஸ்யா அம்மாநிலங்களின் பிரிவினைகளையும் ஏற்றுக் கொண்டு படைகளையும் அனுப்பி போரை புரிந்து வருகிறது. உக்ரேன் அரசு, சமாதானத்திற்கு இறங்கி வரும் என நினைத்து தற்காலிக தாக்குதல் எனக் கூறி போரில் மென்ரக ஆயுதங்களையே பாவித்து வந்தது ; நகர்களை அழிய தாக்காது விரதமும் இருந்தது. அதன் தலைவர் வெளிநாடுகளின் கைப்பொம்மையாகி பனிப்போரில் குதிக்க முழுப்போராக இறங்கி விட்டிருக்கிறது.இப்ப அவர் நாட்டின் தலைவரில்லை.வெறும் படைத்தளபதி. இஸ்ரேல், காஸாவை அடித்ததையும் இதையும் ஒரு தரம் ஒப்பிட்டுப் பாருங்கள். அது சுடுகாடு. இது அதை விட மிக மிகக் குறைவு .”நிதானித்தார். அண்ணர் கூறி முடிக்க விளங்கிறது போல இருந்தது.
” அது சரி போரை புரியாது உக்ரேன் ஏன் பேச்சுவார்த்தைகளுக்கு போகவில்லை”நாகேஷ், நாகேஷ் போல விளங்காது கேட்டான்.
ஈழத்திற்கும் அல்லைக்கைகளுக்கும் என்ன சம்பந்தம் ? ராணுவத்தலைவர்கள் ஓடர் ஒபேயில் இயங்கிறவர்கள். அடுத்த கட்டளை வரவில்லை. கையோடு மனைவி,பிள்ளைகளை இஸ்ரேலில் கொண்டு போய் இறக்கி விட்டும் வந்து விட்டார்.
ஈழத்தில் இஸ்ரேலின் நிழல்
நதிகளை மறித்து அணைகளைக் கட்டி ஆற்றல், குடியேற்றங்களை ஏற்படுத்த என.ஏமியார் (Amy Yar ), ஒரு இஸ்ரேலியருடன் ஈழவரசு திட்டமிட்டது என என்ற வரலாறு கடந்திருக்கிறது. மலையகத்திலிருந்து வார மகாவலி அபிவிருத்தி வீடமைப்புத் திட்டத்திற்கு, ஜே. ஆரின் நெருங்கிய உறவினர் ‘ விவசாய நிபுணர்’ என்ற பெயரில் இஸ்ரேலியக்கட்டடக்கலைஞர் உல்ரிக் பிளெஸ்னர் 1982ம் ஆண்டில் கொண்டு வரப்படுகிறார் . குறிப்பாக தமிழர் தாயகத்தில் இனப்பரம்பலை மாற்றும் இராணுவ மயமாக்கப்பட்ட இவரின் செயற்பாட்டில் , அபிவிருத்தி, இடப்பெயர்வு, இராணுவ மயமாக்கல்…ஒன்றோ ஒன்று இணைக்கப்பட்டு தேசத்தைக்கட்டி எழுப்பும் நிகழ்வுகள் இற்றை வரையில் நடைப்பெற்று வருகிறது .. என ஒரு நூல் தற்போது சிங்களப் பேராசிரியர் புன்சர அமரசிங்கவால் எழுதப்பட்டிருக்கிறது. இது பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கத்துடன் முழுமையாக ஒப்பிடக் கூடியதாக இருக்கிறது என ஆசிரியர் மேலும் குறிப்பிடுகிறார். இலங்கையில் குடியேறியவர்களின் கொள்கைகளின் பின்னால் இஸ்ரேலின் நிழல்”என்பது அப்புத்தகத்தின் பெயர். அந்த (பத்திரிக்கை) செய்தியில் பட்டுத் தெறிக்கவும் அருளர் பேசிக் கொண்டு போகிறார்..
தற்போதைய அரசு,சுயவிமர்சனம் செய்வது போல நூல்களும், செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதே போல…மறுபுறத்தில் விடுதலையின் சுயவிமர்சனமும் நடைப்பெறுவதாகப் படுகிறது. அதற்கு வரலாற்றில்,….இரண்டுமே விடுதலைக்குழுவாக இருந்தது…காரணமாக இருக்கலாம். சபேஷனும் கூட பூடகமாக சிந்திக்கிறான்.
தமிழர்களையும் குடியேற்றுவது. பிறகு, முறைசாரா குழுவொன்றை அனுப்பி இனக் கொலைகளை புரிந்து துரத்தி அடிப்பது. போலிஸ், படை கள் எதையுமே பார்க்கவில்லை என மறுப்பக்கத்தைக் காட்டிக் கொள்வது, ’ ஊடக செய்திகளை ‘ தற்போதைய பிபிசி, சி.என்.என்….போல வாசிப்பது. உண்மையில் , வாகனம் எரிபொருள் தொட்டு…வழங்குனர் படைத்தரப்பே. சாதாரண உடையில் இறங்கி பங்களிப்பும் செய்திருக்கின்றன. வேலியே பயிரை மேய்ந்தது. திரும்பவும் வழங்கி, வழங்கி குடியேற விடாது மறிப்புகளைப் போட்டு அடக்கப்பட்ட துயரங்கள் எத்தனை…எத்தனை ??. மனம் பிரழ்ந்த பிரசன்னத்துடன் சிங்களவர், தேரர்கள்…அபகரிப்பர்.இஸ்ரேலியர், பழைய ஏற்பாட்டில் ( பைபிளில்) நிலத்தைக் கோருவது போல, தேவநம்பிய தீசன் காலத்தில் எங்கட நிலமாக இருந்தது…என்ற அவியல்களை எல்லாம் அவித்தும் (சான்றாக) கொட்டப்படுகிறது. எனவே,ஈழத்தில் … நீதிப்பிரிவு ஒன்று இருக்கப் போவதில்லை என்பது திண்ணம் . நீதித்துறை இல்லையென்றால் ஜனநாயகமும் இல்லை.
இனியென்ன பொய்களை தலைகீழாக வாசிக்கும் . லங்காபுவத் மூலம் எப்பையோ ஆரம்பித்து விட்டது. அரசியலில் அரசுத்தலைவர்கள் தேரர்களின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்ளும் அரங்கேற்றம் , படைத்தரப்பின் கீழ் நிலத்தை சேமிப்பர். வேற இடம் வழங்கப்படும் எனவாய்ப்பந்தல் . கடைசி வரையில் தமிழருக்கு நிலம் வழங்கப்பட மாட்டாது. ஆட்சிகள் மாறும். வேதத்தில் தமிழர்களுகென இருக்கிற சரத்துக்களை அரசு பாராளமன்றத்தில் கண்டுக்கிறதே இல்லை. எழுதியும் வரலாம். கனடா கூறுகிற மாதிரி சிஸ்டத்தில் பிழை என அடிக்கடிக் கூறத் தவறாது . இன்னொரு தேரர் இன்னொரு விகாரையையும் எழுப்பி அது சிங்களவர் நிலம் தான் என சான்றுகளை கூறி விடுவார். அமெரிக்கனும், பிரிட்டனும் குத்தினால் தவறாக மாட்டாதே ! . கனடாவின் பழங்குடியினரின் பிரச்சனையைப் போல அது மறக்கடிக்கப்பட்டு விடும். “இது திருத்தப்பட முடியாத ரக வாகனம் ” என துயரம் தொடரும்.உக்ரேனின் எஜமானர்களும் இவர்களே. அங்கே என்ன நடக்கிறதோ ?…அதுவே இங்கேயும் நடக்கும்.
சமூகம் 24மணிநேரமும் குரல் கொடுக்கத் தள்ளப்படுகிறது. ஏழ்மை இன்னம் ஏழ்மையில் சீரழிக்கிறது. சுனாமியின் போது…ஈழத்துக்கு வந்த உதவிகளை தமிழருக்கு கிடையாமல் மடை திருப்பப்பட்டது. வார உதவிகளும் பாலாஸ்தீனருக்கு போய்ச் சேராது மாதிரி, பொறுப்பாய்ப் போய்ச்சேர மாட்டாது. ஒன்றில் சட்டச்சிக்கலை எடுத்து பேசும்.அல்லது ‘பயங்கரவாத அமைப்புகளுக்கு இடமில்லை ‘ எனக் கூறி ‘காந்தியம்’போன்ற உண்மையான சேவை அமைப்புகளையும் சிவப்பு நாடாவுக்குள் தள்ளி விடும்.’ஈழம் உள்விவகாரங்களை தானே கவனித்துக் கொள்ளும் என தேசியம் பேசி நூதன அரசியலை முன் எடுத்து வருகிறது. அல்லைக்கைகளின் அரைகுறை ஜன்நாயகம் உலகம் முழுதையும் 99ஆண்டுகள் மேலாக குத்தகை எடுத்து விட்டிருக்கிறது . கனடாவிலும் எதிர்க்கட்சி அதையொட்டியே..அதிக சிறைச்சாலைகளை திறக்க வேண்டுமென பேசி வருகிறது.
பாதிக்கப்பட்ட சமூகங்களை மேலும்,மேலும் குழப்புகிறது. வாழ்வே வெறுத்துப் போகுமளவிற்கு கொலைகள் மலிந்து போகிற சமூகமாக மாறியும் போய் விடுகிறது ஜேர்மனியில் தோன்றிய நாஜியம் இன்று முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் மீள கிளை விட்டு பரவியிருக்கிறது.பல்லின (ஒன்றிற்கு மேல்பட்டசமூக)மாக இருந்தால் மேலே கூறிய வழி. ஒரே சமூகத்தில் நிகழ்ந்தால் ‘கம்யூனிசக்கலக்கத்தை உருவேற்றி, சாமியாடி அந்த அரசாங்கமே முட்டாள்தனமாக தம் இளைஞர்களை அழித்தொழிக்க வகை செய்வது . அல்லைக்கை நாடுகளின், அரசியல் தலையீடுகள் மோசமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கனடா, ஈழத்தின் தீர்வுக்காக கியூபெக் அனுபவத்தை வலியுறுத்த முயன்றது. அதன் ஒருபக்கம் ஆட்சிமொழி… சிக்கலாக இருந்தால் கலாச்சார உரிமைகளாவதை வழங்கி செயல்படுத்த இடது சிந்தனையுள்ள பொப்ரே என்பரை அனுப்பியது. ஈழவரசு விசா வழங்கி வரவேற்கவேயில்லை. மற்றைய அல்லைக்கைகளை விட கனடாகொஞ்சம் பரவாயில்லை. ஓரளவு மனிதவுரிமைகளை நிறைவேற்றுற குணம் இருக்கிறது. அதன் மாற்றத்திற்கு இந்திய விடுதலைப் போராட்டமும் ஒரு காரணம்என்றால் நம்புவீர்களா?. ஜாலியன்வாலா படுகொலை புரிந்த தலைகளை பழி தீர்க்க…அன்றைய அமைப்பு ஒன்று முடிவெடுத்து.தேடித் திரிந்தது. இரு அதிகாரிகளில் ஒருவர் இயற்கையெய்தி விட்டிருந்தார். மற்றவர் கனடாவில் ஆளுனராக பதவி உயர்வு பெற்றிருந்தார். பகவத்சிங் போன்ற இருபது வயது மதிக்கக்கூடிய சீக்கிய இளைஞன் ஒருவன் , இங்கே (வான்கூவர் பகுதியாக இருக்க வேண்டும்) கூட்டமொன்றில் நேரே வந்து ஆளுனரை மனைவி, பிள்ளைகள் அருகில் இருக்க துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். அவர்களையும் பார்த்து புன்முறுவலித்து அவன் துவக்கையும் கீழே வைத்து சரண் அடைந்தது. மனைவிக்கு, பாசம் மேலிட வைத்து விட்டது. அவன் வயதில் அவருக்கு பையன் கூட இருந்திருக்கலாம். பயங்கரவாதிகள் குடும்பத்தையும் கொன்று விடுவார்கள்.”அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்க வேண்டாம்”என இரந்து கேட்டிருக்கிறார். தூக்கிலே தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தலைமையில் பெண்கள் போராட்டம் நடத்தி…கனடாவில் மரணதண்டனையை ஒழித்திருக்கிறார்கள்.
காந்தி நாட்டில் கூட நடக்காதது இங்கே நடக்கிறது . இன்றும்…கனடாவில் மரண தண்டனை இல்லை. அமெரிக்காவில் இருக்கிறது. எதிர்க்கட்சி கொண்டு வர முயற்சிக்கிறது.அருளர் கூறித் தான் இந்த விசயமும் சபேஷனுக்குத் தெரியும்.
சிலேவிய மொழி அடியில் எழுந்த உக்ரேனியம் மொழியை பேசுகிற நாடு. திராவிட குடும்பம் போல ரஸ்யமொழியும் அதில் எழுந்த ஒன்று தான். அடிப்படையில் ஒரே குடும்பம் . உக்ரேனிய தேசியப்படையான அசோவ்வில் அதிகமானவர் ரஸ்யமொழியும் பேச வல்லவர்கள். காசாக்கினியர் ரஸ்யாவின் தென்பகுதியிலும் கூட ரஸ்சியர்களாக வாழ்கிறார்கள்.இவர்களின் குறும் தேசியம் உக்ரேனின் தேசியமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டத்திலும் மட்டரகமாக ஆடத் தொடங்குவதில்லையா ?.
உக்ரேனை. இருகொரியாவாக்கி இடையில் ஒரு சூனியப் பிரதேசம். அது தான் தற்போதையத் திட்டம் . திரைப்படக்கதை நாளை வேறு நடை போடலாம். முதலே தெரிந்து விடுகின்றன. இல்லாததைச் சொல்லல், மெளனவிப்பவர், பனிகளுக்கு ஜால்ரா போடுற பலதரப்பட்ட நாடுகள் தொகை…எல்லாமே கூடி விட்டிருக்கிறது. ஐரோப்பாவிலே,உக்ரேன் பெரிய நாடு. இயற்கை வளங்களுக்கும் குறைவில்லை. ரஸ்யப்புரட்சியின் பின்பு ஜனநாயகத்தை வேறு தூக்கலாக காவிக் கிடக்கிறது. இங்கே இருக்கிறளவிற்கு பெண்களுக்கான சம உரிமைகள், மற்றும் சுயவுரிமைகள்…மற்ற எந்த முதலாளித்துவ அல்லைக்கை நாடுகளிலும் கூட கிடையாது. சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையாக சமவுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
முதலாளித்துவத்திற்கு பனிப்போர் வீடியோ விளையாட்டு . சோவியத் யூனியன் அஸ்தமித்து விட்டது. ஆயுத வர்த்தகம் படுத்து விட்டது. பாதுகாப்பில்லை, அதில்லை, இதில்லை…உலகத்திலுள்ள நிறைய கல்ட் அமைப்புகளிற்கும் மார்க்சிசம் பிடிக்காத விசயம். ஈழத்தில் ஆயுதக்குழுக்கள் சமாதானக்காலத்தில் எத்தனை களையெடுப்புக்களை புரிந்தன. அதே பெருப்பித்த நிலமையே உலகிலும் காணப்படுகின்றன. ஈழ இனப்படுகொலை போல, உக்ரேன் பிரச்சனையும்…அவசியமாகி போயிருக்கிறது .
இதற்கு ஆரேஞ், நீலம் …என நிறமூட்டி ஒளிர விடுற விட்டால் தானே நல்லாயிருக்கும். அதிலுள்ள அரசியல் நியாய தர்மத்தை யோசிக்க சனம் பேராசிரியர்களா..என்ன!. உக்ரேனுக்கு மிண்டு கொடுக்கிறவை எல்லாமே பழைய காலனிப்படுத்தலில் காதல் கொண்டிருந்த நாடுகள். வியட்னாம் போர்க்குற்றமே சரிவர விசாரிக்கப்படவில்லை. பாலாஸ்தீனத்தில்…பிரச்சனை, இன்னொருபுறத்தில் உக்ரேன்.
சபேஷனின் நண்பன் ஒருத்தன் வாற்ஸ் அப்பில்”தினமும் தொலைக்காட்சியில் ஈழக்காட்சிகளை, பாலாஸ்தீனம், உக்ரேனை பார்த்து மண்டை விறைத்துப் போய் விட்டது. கியூபெக்கிற்கு….போய் வந்ததில்…கொஞ்சம் சுகமாயிருக்கிறேன்’ என எழுதி இருந்தான்.
உக்ரேன் பிரச்சனையை அருளர் அவர் பார்வையில் கூறிக் கொண்டிருக்கிறார்.
உக்ரேனிலும் தெற்குப்பகுதியில் அசோவ், கடலோரக் கிராமங்களில் கணிசமான் சிலேவிய மொழி பேசிய கோசாக்மக்களின்(கசாக்..) வாரிசுகள். (முன்னோர் புல்வெளி நாடோடியர் ) என சரித்திரம் கூறுகிறது. அரைவாசிப்பேரினர், படைகளில் காதல் கொண்ட …இந்தியாவிலிலுள்ள சீக்கியர் போன்றவர்கள். இராணுவசேவையில் பெருமை கொள்பவர் வேட்டையில் சாகசம் விரும்புறவர் என்பது கூடுதலான விசயம்.
தெற்கு உக்ரேனில் (தரையில்) அசோவ் குழு திரிந்து,திரிந்தும் தாக்கியிருக்கிறது .
அல்லைக்கைகள் ரஸ்யாவின் இக்கூற்றுக்களை மறைக்க அதன் ஊடகச்சேவைகளுக்கு உடனடியாகத் தடைகளை விதித்தன.
ரஸ்யக்குரல் ஈழக்குரல்…போன்றதல்ல. சமாதான அவையிலே அதிர்ந்து எதிரொலிக்கிற குரல். கனடாவில், பேச்சு, எழுத்து,கருத்துச் சுதந்திரத்தை (சார்ட்டட் ரைட்ஸ்) மதிக்கிற நாடு என தன்னைப் பீற்றிக் கொள்றது இருந்தது. கன்டாவிலும், பாரீஸிலும் தான் அமெரிக்காவிலும்,மற்றையவற்றிலும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.மாறுபடும் தன்மை கொண்டிருக்கிறது.
கோவிற்றுப் பிறகு போரே தேவையற்ற ஒன்று. எதைப்பற்றி எவருக்கு கவலை.
கனடா, கோவிற்றின் போது ஐரோப்பா நாடுகளிலே, தனிக்கவனம் எடுத்து இறப்பு வீதத்தைக் குறைத்த நாடு.எனவே தான் கனடாதமிழர் சார்பு எடுக்கிறார்கள் போல தோன்றுகிறது. கனடாவில் பழையச் சிக்கல் ஒன்றும் வெளிப்படுகிறது. ஈழத்தைப் போல மண்ணைக் கிண்ட கிண்ட, முதலாம் குடியின் எலுப்புகள் கிடைத்து கலாச்சாரப்படுகொலை புரிந்திருக்கிறது ‘ என்ற உண்மை வெளிப்படுகிறது. ஒண்டடிமண்டியாகத் தான் பாவங்கள் சேர வரும்.
‘சுற்றவாளிகள்’என்று எந்த நாடுகளுமே இல்லை. காந்தி கூறிய வழியில் பிராயச்சித்தம் செய்து தூய்மைப் படுத்த்துவதே கிடக்கிற ஒரே வழி .தமிழருக்கு ஈழக் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோபம் உச்சிக்கு ஏறுவது வழமை. பிராயச்சித்ததை மேற்கொள்ளத் தொடங்கினால்…அவர்களும் கூட மன்னிக்கச் செய்வார்கள்.
முதலில், ஈழம் ‘ மரணதண்டனை முறை’யையே ஒழித்து விடவே வேண்டும். மனிதரை மனிதர் கொல்வதற்கு அதிகாரம் இல்லை. இந்த செங்கல்லிருந்தே இனப்பகை தொட்டு அனைத்து கொலைகளுமே அகற்றப்பட வேண்டும்.
.கொல்லாமையை உபதேசிக்கும் சிறந்த புத்தமதத்தை வைத்திருக்கிற நாடுகளிலே தான்…எல்லா அநியாங்களுமே நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. இது வெட்ககேடு இல்லையா ?
உக்ரேனும் சிறந்த நாடாக இருந்த காலம் உண்டு. பொருளாதாரம் மட்டும் ஒரு நாட்டின் ஜீவன் கிடையாது. ஈழத்தமிழர்கள் வாயூறப் பார்த்து ஏங்கிய காலம் .
ஈழத்து பிரச்சனைளுக்கு காரணமானவர்களே உக்ரேன்பிரச்சனையும்… எழுப்பியவர்கள்.ராஜிவ் கொலையில் வெளியார்கள் இருப்பது போல இதிலும் வெளியார்கள் இருக்கிறார்.
கனி இருந்தும் உக்ரேனின் பலவீனத்தால் அழகிய நகர்களையும் மக்களையும் அழிய விட்டுக் கொண்டு கிடக்கிறது. ஈழத்திலும் தமிழும் ஆட்சி மொழியானாலும் கூட அதன் ஆயுள் நிறைவாக இருக்கப் போவதில்லை என்பதையே உக்ரேன் போர் காட்டுகிறது.
மீளவும் கொலைக்களமாகும் என்ற பயங்கரம் கூடவே சுமந்தும் கிடக்கிறது.
பிரான்சு நாடும் ஜனநாயக எதிர்ப்புரட்சியைசார்ந்து நிற்பது வெட்கக்கேடு . ஒருவேளை ரஸ்யப்புரட்சியின் தொடர்ச்சி ரஸ்யாவிலேயே தொடரலாம். கசாக்கின் அமைப்புகள் பல கனடாவில் இருக்கின்றன. அல்லைக்கை நாடுகளின் .. ஆட்டத்தில் அமைப்புகள் பகடைக்காய்களாக உருட்டப்படுகின்றன.வேர் நிலத்தைக் கொண்டிருப்பவையைக் கூட கூட்டுக்கான அரசியலில் …தவறாக பாவித்துக் கொள்ளப்படுவது ஓர் துயரம்.
கனடாவில், சின்ன ட்டுரோ, அவரின் தவறுகளை விட பழங்குடியினருக்கு நண்பராக விளங்கியது சிறப்பு. அல்லைக்கைகளிற்கு இரண்டு வீதம் நாட்டுப்பணம் செல்வதை தடுத்தே நின்றார். வான் பாதுக்கப்பு வலையமைப்பு அமைக்கப்படுவதை.ஏற்காது தடுத்தே வந்தார். தற்போதையர் கோல்ட்மெடலர். இரண்டையும் தவற விட்டு விட்டார்.பெரிய ட்டுரோ, கியூபா,சீனா, ரஸ்யாவிடம் நட்பு பாராட்டியவர். தற்போது நட்புற்கு அர்த்தமே இல்லை. சுயநலம் தீமையானது. இந்திய தாந்தீரீய சாமியர்களிடம் போய் கேளுங்கள்.”எல்லாத் துன்பங்களுக்கும் சுயநலமே காரணம்”என்கிறார்கள்.புத்தர் கூட தாந்தரியர் தான். அவர் அதை ‘கவலை’ என்றார். அதன் பிறப்பிடம் சுயநலமே. கடைசியில் ஏகாதிப்பத்தியங்கள் விழுந்து நொறுங்கும் என்கிறார்கள். பூமி அப்படியே தான் இருக்கும். விஞ்ஞானம் உலகத்தை சுடுகாடாக்கும் . தெரியாமை,அறியாமைகளை வில்லத்தி அச்சமில்லை ,அச்சமில்லை… என்று நடைபோடுபவர்களே வாழ்வார்கள்.
காந்தி அன்னிய ஆடைகளை எரித்தார். அன்னிய ஆசைகளை எரித்தார் . வடக்கு, கிழக்கு மண், தமிழர்களின் மண் !. காலத்திலாவது சுதந்தர உணர்வுடன் அங்கே அவர்கள் வாழ வேண்டும். துறைமுகங்கள், விமான் நிலையங்கள்,வர்த்தக நிலங்கள், கோவில், வயல், நீர்நிலை,நதி…எங்குமே சப்பாத்துக்கால்கள் பதியிறதை தடுத்து, வெறும் கால்களுடனே நுழைய வேண்டும் என்ற சட்டங்கள் ஒன்றிய அரசிடமில்லை.
தேர்த்தல் இல்லாமலே, உக்ரேன் தலைவரும் அதிக காலம் தளபதியாய் இருந்து விட்டார். அல்லக்கைகளின் நண்பர் என்ற தகுதி பொம்மையாகக் காட்டுகிறது. அரைகுறை ஜனநாயங்களைக் கொண்ட ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் இவரை, இராணுவத் தலைவராக்கி கொலைகளைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது. ரஸ்யா இவர் மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்கும்.
இனி, ரஸ்யா, புதிய தேர்த்தல் வென்று வார.. தலைவருடன் தான் பேசும். இஸ்ரேலின் நிழல் படிந்தவர்களிடமோ, நவநாஜிகளின் நிழல் படிந்தவர்களிடமோ…பேச்சுகள் இல்லை. கொரியப்பிரிப்பும் கிடையாது. உக்ரேன் உக்ரேனாகவும்….நகர்களும், மக்களும் காப்பாற்ற ரஸ்யாவின் நிபந்தனைகளை (தெளிவாக இருக்கின்றன)ஏற்றாக வேண்டும் .
நாடுகள், கணனிப்புரட்சி என்று கூறி நடத்தும் கூத்துக்கள் உலகில் அதிகளவில் வெற்றியளிக்கப் போவதில்லை. விண்னுலகம் சென்றாலும் போரிடுவதை நிறுத்த மாட்டார்கள். அருளின் பேச்சுக்கள் அவர்களை பெருமூச்செரிய வைக்கின்றன.
அன்றைய கேணிக்கட்டு சுருட்டைப் புகைத்து பொக்கு வாயை காறி துப்பி விட்டு, இருளில் பளபளக்கும் நீர்ப்பரப்பையும் ஒரு தடவை பார்த்து விட்டு கலைகிறது.
நீராவியடியிலிருந்து சைக்கிளில் திரும்புற சபேஷ்னுக்கு, பல சிந்தனை ஊசிகளும் தலயில் குத்திக் கொண்டிருந்தன. நிலத்திற்கான வரிகளை வடக்கு, கிழக்கில் எந்த அரசாங்கங்களுமே அகற்றி விடப்போவதில்லை. அரசர் காலத்திலும் நில வரியை அறவிடத் தொடங்கி விட்டது. ஆனால், அது மக்களின் நிலம். எப்ப அரசு என்றது தோன்றியதோ, நிலத்தை பறிப்பதில் அரசு முனைப்பு காட்டி வரி அற விட்டு..வாடகைக்குரியது என்ற அடிமைப்படிவை ஏற்படுத்தி வருகிறது. பாஞ்சாலகுறிஞ்சிச் சிங்கம் கட்டப்பொம்மனின்…வசனங்கள்…திரும்பத் திரும்ப அவசியம் உச்சரிக்கப்பட வேண்டியவை. நிலம் மக்களுக்கே சொந்தம். எந்த அரசர்களுக்குமில்லை, ஆட்சிகளுக்குமில்லை. அதிலிருந்தே சுதந்திர உணர்வு பிறக்கிறது. அதற்கு பணத்தைச் செலுத்த வேண்டும் என்றால் பூச்சி பறக்கத் தொடங்கி விடுகிறது. எப்படி…விட்டுக் கொடுப்பது ?. அதனால் தான் தமிழர் உயிரை இழக்க வேண்டி ஏற்பட்டிருந்த போதிலும் போராடினார்கள் . இழந்திருக்கிற நிலையில் மேலும்…துயர் தொடர்ந்து கொண்டே கிடக்கப் போகிறது. பட்ட காலே படுகிறது. உயிர் வாழ வேண்டுமானால் போராடவே வேண்டும்.
இதுவரையில்”யூனியன் ஒவ் த சோவியத் சோசலிஸ்ட் ரிப்பளிக்” USSRஐப் புரியாது. அதில் உள்ள ‘ ஆர்’ எழுத்தை ‘ரஸ்யா ‘ என நினைத்திருந்தான். அது குடியரசு. மக்களரசு அமைப்பு. அங்கே நிலம் மக்கள் அமைப்பிற்குச்சொந்தமாக இருந்தது. நிலத்திற்கான வரி அற விட்டிருக்காது எனப்படுகிறது.
தமிழர் மேல் அறவிட அனுமதிக்கவேக் கூடாது. மொழியை விட…முதலில், நிலமே மனிதனோடப் பிணைக்கப்பட்டிருக்கிறது. வாய்மொழி எல்லாமே தாய்மொழியும் அல்ல….இல்லாமல் கூட போகலாம் . ஆனால், நிலம்…அப்படி இல்லை.தாய் நிலம். வெளியார் கைகளுக்குள் போவதும் அடிமை படுத்துகிறதும் ஒன்று தான் . சுயவரசு ஏற்பட்டாலும் இந்த வரி அறவிடுவதை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும். வேண்டும். வேலை வாய்ப்புக்காக அன்னிய கார்ப்பேட் கம்பனிகளை வரவழத்து 99ஆண்டுகால குத்தகைக்கெல்லாம் கொடுக்கிறது ஈழவரசோட முடிய வேண்டும் . அபிவிருத்தித் திட்டங்களை எம்கைகளாலேயே நாமே செய்தல் வேண்டும். இனாமாக செய்வதாகக் கூறினாலும் கூட… அது தூண்டிலில் போடப்படுற புழு என்பதைப் புரிந்து கொள்ளும் தெரிமை வேண்டும்.ஈழத்திலுள்ள மின்சார அணை அபிவிருத்தித்திட்டம் அனைத்திலுமே தமிழலின் இரத்தமும்,துயரமும் படிந்தே கிடக்கின்றன.அமெரிக்க வெங்கலாந்திகளைப் போல குற்றம் புரிந்தவர்கள் இங்கேயும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலை மாற வேண்டும்.மரணத்தண்டனை தான் வேண்டாம் என்கிறோமே தவிர குறந்தப்பட்சம் அவர்களை பதவிகளிலிருந்து ஓய்வையாவது கொடுத்து விலத்துவதை வலியுறுத்துகிறோம்.
கப்பம் பெற ஏற்படுத்தி விட்ட நடைமுறை அதிகாரங்கள் வேண்டாமே.
தற்போதைய அரசு ‘நடுநிலை’ எனக் கூறுகிறது. சிலதை செயலில் காட்டி வந்தாலும் அத்திவாரம் பழைமையானது. ஈழத்தில் இந்த USSR பூத்து நாடு பச்சைப்பசேலாகி விடாதா?. சிங்களவர் இனச்சுவரை எழுப்புறதை நிறுத்தி கைகோர்க்க முன் வரார்களா ?. முஸ்லிம்களும் யூதர்களைப் போல நிலவுற விலகலை… விலத்தி , முற்போக்காக’நாகப்பட்டின நடை ‘ போட முயல மாட்டார்களா. ஜனநாயக அமைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து…மதத்திற்குப் புறம்பாக இருந்தாலும் புறநடை, தளிர்நடையை ஆரம்பிக்க மாட்டார்களா ?. தமிழ் நிலத்தில் திரியும் ஆவிகளுக்கு நற்செய்தியை அளித்து..கரைந்து போக வைக்க மாட்டார்களா ?. ஆவிகளும் கெட்ட சக்திகள் அல்ல. கெட்ட சக்திகள் மனிதர்களிடம் தான் குடியிருக்கின்றன. மனிதர்களுக்குத் தான் அவசியம் வைத்தியம் தேவை.. காலனிச்சிந்தனைகள் அதிகமாகி,அதிகப்பட்டு மேலாசைகளை நிறைவேற்றவே துடிக்கின்றன. தனிமனிசர்களுக்கான இந்த சிக்கல் அகல்வதில்லை, மனிசர், மனிசர்களாகவே…விளங்க அற்புதநேசம்.பிறக்க வேண்டும் பிரேமதாசகாலத்தில், தொலைகாட்சியில்,வானொலியில்…இசைத்த அவருடைய கவிதைகளை அவன் எவ்வளவு ரசித்தான். எவரிடமும் ‘நல்ல குணம்’ இருக்கவே செய்கிறது. வெளிப்படுற போது, ‘ பூமழை’ பொழிகிறது.. இயல்பாக இந்த நாடுமே ஏன் ஆகக் கூடாது ?. உலகதிற்கு அறிவிப்பாக ஒரு நட்சத்திரமாக எழக் மாட்டாதா ?. மல்டி காலனிசத்திலிருந்து விடுபட்டு கனவே கலையாதே . உக்ரேன், படுமுட்டாள் !, எதனுடனும்.. கூட்டுச் சேர், சீரழி, நிலத்தில் பேயாட்சி நடக்கட்டும்.
கனடாவில்,பழங்குடிமக்களுக்கு ஒதுக்குநிலங்கள்.என கொடுத்தும் கூட அதிலும் வரிகளை அறவிடுவதையும் பார்க்கலாம். பாவம் சொந்தக்காரர்களுக்கே சொந்த நிலம் கிடையாது. தமிழருடையவை போல..வாடகை,ஒதுக்கு நிலங்கள். இன,நிற வாத, பேய், நோய் பரவ அமைச்சுக்கள் ஆட்டிபடைக்கின்றன. தற்போதைய நாட்டில் அமைச்சுக்கள் குறுநில மன்னர் போல மேலே இருப்பர் எஜமானர் போல…ஏன் இந்த நிலை ?. இயற்கையை காப்பாற்றுறோம் என்ற மறைவிலும் …சதி . சரித்திரம் எல்லா விதத்திலும் குத்தி கிழிக்கப்பட்டு புனையப்படுகின்றன. கடைசியில், தமிழனைப் போல…நாமம்,அழுக்கு,வேதனை, குமுறல் அழுகைகள். உக்ரேனியரும் பாவம் தான். எதிர்காலத்தில் இதிலே, இருந்து புதிய மதம் ஒன்று எழுந்து கூட உலகை ஆட்டிப் படைக்கலாம். ஒரு தடவை சைக்கிளிலை பாதைமாறி ஒட்டி யாழ்பேருந்து நிலையத்திற்குள் வந்து விட்டான்.
புத்தகக்கடையில் தொங்கிய குமுதத்தில்…இவ்வளவு காலத்திலும் பிறகு இந்தக் கட்டுரையா?…என வியப்பு தோன்ற விரயச்செலவு கொடுத்து வாங்கி வாசித்தான். அதைப்பற்றி கேணியில்… மூச்சு விடல்விலை.பத்திரிகை விலை அதிகம். வீட்டுச் செலவு தங்கிணத்தோம் போடுற போது இது தேவையா ? என்ற மனைவியின் ஏச்சை சமாளிக்க வேண்டி இருந்தது. பழையப் பேப்பர் தரித்திரம் என்ற திக்கிலிருந்து வந்தவளுக்கு புரியப் போவதில்லை. நிலமை புரிகிறது.பள்ளிக்கூட நேரத்தையும் கூட்ட வேண்டும் என அரசு தீர்மானிப்பதும் நினைவுக்கு வருகிறது. இஞ்சைப் பாரு கல்வி நாட்டைக் காப்பாற்றப் போகிறதாம். பிரயோசனமற்றக் கல்வி. சீனக்கல்வியை ஏற்கனவே கொண்டு வந்து…தரப்படுத்தலையும் வைத்து சீரழித்தது. கலாச்சார உரிமையைக் கூட தமிழரின் கையில் கொடுக்க தயங்கிற அரசுக்கு கல்வியும் அதில் கிடப்பது புரியவா போகிறது . இப்பவிருக்கிற நேரமே போதும். மிச்சம் இருக்கிற நேரத்தில் சுயதொழில் ஒன்றைக் கற்றுக் கொள்கிறது தான் நல்லது.இந்த நாட்டில் சுய தொழிலே சோறு போடும். மேம்பாடானது. வெற்றிடம் இருக்கிற அரசியலில்… புழுக்கள் எல்லாம் புகுந்து சமூகத்தை வேறு சீரழிக்கின்றன. இடதுகளுக்கும் தமிழ் ஆசிரியனின் கைப்பிரம்பை அந்த ஆசிரியன்டமே கொடுத்து விட வேண்டும் என்ற சிந்தனை என்று ஏற்படப் போகிறதோ ?. பெருமூச்சு விடுகிறான்.
விடுதலைக்குழுக்களையும் கூட வெளியார் அறியாமையைப் பயன்படுத்தி மாற்றி செயல்பட வைத்து….அக்குழுக்களை ஒன்றுமில்லாது அழித்தும் விடுகின்றன . இந்தியப்பெண்மணி இந்திராவை…அகற்ற ராஜ்புத்ரகுலத்தில் தோன்றியதுகள் தடம்மாறிச்செல்கிறது. 17.9.25திகதி குமுதத்தில் வந்த விபரம். சாத்திரி எழுதிய ஆயுதஎழுத்து 2 நூலில் , அவர் மகனையும் அகற்ற… லண்டனில் கூட்டம் நடைபெறுவதாக விபரிக்கப்படுகிறது.
பாலாஸ்தீன அழுகைகளுக்கு….’ அ ‘, அல்லைக்கை நாடுகள் இருப்பது போல உலகில் தாறுமாறாக நடக்கிற நிகழ்வுகளுக்கும் பின்னால் மல்டிக் காலனிசங்கள்
இருக்கின்றன. இயற்கையை, மாக்களை (மனிதர்), நிலத்தை,சுதந்திரத்தை மாசுவாக கருதிச் செய்யும் வலிய கரங்கள், ஊத்தைவாளி நாடுகளிடமிருந்து எப்படி ஜனநாயகத்தைக் , காப்பாற்றப் போகிறோம் ?. அங்கே கூடி மதுவைக் குடித்து தடுமாறிக் கொண்டிருக்கிற 1008 நகைச்சுவைக் கூட்ட கோப்பைகளில் பயங்கரங்கள் வழிந்து கொண்டு தானிருக்கின்றன . கிரீக்தேசத்தில்,அந்த அரசே தம் இளைஞர்களை கம்யூனிஸ்ட்டுக்கள் என கூறி அழிக்கிறது. அழிக்கப் படுகிறது. அதன் ஆத்மா அழிகிறது.ஈழத்திலும், சி..கிளர்ச்சிகள் ஒடுக்கப்படுகின்றன. அவற்றால், பயிற்றுவிக்கப்பட்ட பெற்ற படைகள் ஈழக்கனவை வேட்டையாடி நிலம், பறவை,மரம்…எங்கும் குருதியைக் பெருக்கோட வைத்திருக்கிறது.
ஈழமும் உக்ரேன் போன்ற குறும் தேசியவாத அரசு தான். முழுத்தேசியமாக உரிமை கோர விழைகிறது. சிங்களமும், புத்தமும் அங்கேயே தோன்றியவை இல்லை. தேவநம்பியதீசன், கைமுனு கூட பேசிய மொழி தமிழாக..அல்லது அந்த அடியில் உதித்த ஒரு மொழியாக…இருக்கலாம். கலிங்க தொடர்பு கொண்டிருக்கிறது. மகத நாடு, கலிங்கப்பகையில் வந்த குடியேறிகள், அசோகன் மூலம் வந்திறங்கிய புத்தமதம், இதிலும் குழப்பத்தைக் காவிக்கிடக்கிறது. மகாஜான புத்தமதத்தை இவர்கள் பின்பற்றவில்லை, கலிங்கரும் பின்பற்றவில்லை எனவேப் படுகிறது. அசோகனை வன்ம எதிரியாக நினைத்தவர்கள்…, மகாஜானம்…தமிழ் பெளத்தமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. பர்மாவிலிருந்து தேரவாதம் பரவியதோ எனத் தோன்றுகிறது. கசாக்கைப் போல எல்லாத்தையும் சேர்த்து…பெரும்பான்மையினர் என்ற மயக்கத்தை ஏற்படுத்தி…ஈழம், ஈழத்தின் இறைமை….உக்ரேனில் வாசிக்கிறதே இங்கேயும் வாசிக்கப்படுகிறது. கனடாவில்..வெறும் இனப்படுகொலைச் சின்னத்திற்கு கண்டனம்… என ஒழுங்கமைப்பில் நிறைவேறுகிறது. நிகழ்த்தியவை பாரிய மீறல்கள். அவற்றை பரிசீலிக்க தயார் இல்லை. அன்னையர் முன்னணியரை…புறக்கணிக்கிறது. பெண்கள் உலகமெங்கும் பரிதாபத்திற்குரிய பிறவிகளாக இருக்கிறார்கள். கனடாவை….மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் நாடாக மாற்றியவர் பெண்தரப்பு. நோர்வேயை ஒளிவீசச் செய்தவர் பெண்தரப்பினர். அவமதிக்கிற ஈழத்தையும் ஒரு நாள் மாற்றி வைப்பர். அந்த இனம்…தனித்துவச் சலுகைச் சட்டங்களை ஏற்படுத்தி வைத்திருப்பதும், பிடிவாதமாக ஜனநாயக உரிமைகளுக்கு மறுப்பு தெரிவிப்பது…குறும்தேசியர் என்பதை அவர்களும் உணர்ந்திருப்பது தெரிகிறது. ஆக…ஈழாரசு கூட கழுகைப் போன்ற ஒரு அமைப்பு தான். மரபுரீதியாக அரசாகி தன்னை நிறுத்த பாசிசத்தை முன்னெடுத்து வருகிறது. கழுகு, கொடூரங்களை நிகழ்த்திய போதிலும் அதை எதிர்த்தே மற்றைய குழுக்கள் நின்றன. அடிப்படையில்…இதுவும் ஒரு குழு அமைப்பே. இஸ்ரேல், உக்ரேன், ஈழம்…இன்னும் எத்தனை புதிய நாடுகள் உருப்பெற்று தலைவலியைக் கொடுக்கப் போகிறதோ ?. ரஸ்யப்புரட்சியின் தொடர்ச்சிக்கு உலகம் காத்திருக்கவே போகிறது .
எத்தனை சோகங்கள் எத்தனை வேதனைகள் எத்தனை குழிகள்…. ஈழப்பொருளாதாரம், 99 வருசம் அல்ல இன்னும் நீள, நீள காலத்திற்கும் படுகுழியிலிருந்து மீள முடியாது வீழ்ந்தே கிடக்கவே போகிறது. ஏனெனில் இங்கே சுதந்திரங்கள் இல்லை. இங்கே வருகிற வெளிநாட்டு கம்பெனிகளிற்கே ., அபிவிருத்தித் திட்டங்கள்..எல்லாத்தையுமே கொடுத்து விட்டு அந்நிறுவனகளிற்கே அடிமையாகிக் கிடக்கின்றது. ஒப்பந்தம் என்பது வேலை வாய்ப்பு தொட்டு முழுதையுமே வறுகிற(அவறிடமே கொடுத்து விடுகிற) ஒன்று. கடனைக் கொடுத்து வேலைவாய்ப்புக்களை இலவசமா… வாங்கி , சிறுவேலைகள் மட்டும்( சீப்பானவற்றை) வழங்கி…கடனுக்கு குட்டிவேற போட, வட்டியைப் பெற்று இங்குள்ள வளங்களை மட்ட விலையில் பெற்று….நிறவாதங்களில் இங்குள்ளோரை குடிகாரர்கள் போல அடிபட விடுற மது,போதை… வழங்கிற இசத்தை கையில் வைத்திருக்கின்றன. ஈழவரசும் அதைத் தானே போருக்குப்பின் வடக்கு கிழக்கில் அரங்கேற்றின.
கணனிவலைய விஞ்ஞானம்… ஒரு சூது.கிடக்கவே கிடக்கிறது. முட்டாச்சனம் …அதிலே விழுந்தா, கையை வைசா மீளவே மாட்டார்கள். விரைவிலே அடிட்டாகிப் போய் விடுவர். வைத்து சூடாடி குட்டிச்சுவராக்க…ஊடகங்களும் கிடக்கின்றன. கூச்சலிட்டு நெடுகவே அரசை கவிழ்க்க இந்த அடிமைகள் மயக்கத்தில் கிடக்கின்றன. அரபு நாடுகளில், நேபாளம்,வங்களா தேசத்தில் எங்கும்….நவீனப்புரட்சிகள் நடக்கின்றன. மசாலப்படமாய் தமிழ்ச்சினிமா படங்களை தயாரிக்கும். வசூல் பிய்ச்சுக் கொண்டு கொட்டும்.இரசிக்க இங்கிருக்கும் படித்த சருகுகள் ஏராளம் !. ஈழத்தில்,சிங்களவரை எப்பவும் கதாநாயகராக எடுக்க வேண்டும். தமிழர் தான் எப்பவும் நம்பியார் என்ற எழுதாத விதி இருக்கிறது. இது வேற கிடையாது.அதிலே மாற்றம் இது வேற கிடையாது. பிக்குகளின் கட்டளைகளை. அடியாட்கள் சுப்பராக நிறைவேற்றி கலவரங்களை செய்கிறாரில்லை…!. ….நாடு பின் நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. ஈழப்பொருளாதாரத்த்தை காடையர்கள் உடைத்தெறியிறார்கள். உறுஞ்சுறவை கால்மேல் கால் போட்டுக் கொண்டு கிடக்கின்றன.நம் குழுவும் கூட, ‘பயங்கர ஆயுதம் தா ‘அந்த இந்த தலையை எடுக்கிறேன் ‘ என எடுத்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஆயுதவியாபாரிகள் புல்லரித்து போய் விடுகிறார்கள். இஸ்ரேல், உக்ரேன் போரை நிறுத்தினால் (ஒருவேளை) கரீபியனில் மற்றொரு களம் திறக்கப்படுகிறது.
எரிபொருளை வைத்தே பல நாடுகளை பொறியில் வைத்திருக்க நவீன உலகத்தால் முடியும். சனம் முட்டாள் அடிமைகள்.
எல்லாமே வெளிநாட்டு சிஸ்டத்திலேயே இயங்கிறது.
ஒரு காரை இறக்குமதி செய்வதிலும் பார்க்க ரெடிமேட்டாகவே வருகிறதிலும் பார்க்க .( பிரதான) எஞ்சினை மட்டும் வாங்கி மற்றவேலைகளை எல்லாம் கைவேலையாகச் செய்ய பழக வேண்டும். வர்த்தகங்களில் அதற்கு அனுமதி இருக்காது என தோன்றுகிறது. இல்லையேல் வேணாம், நாமே தயாரிக்கிறோம்…என கிளம்ப வேண்டும். அரசு என்பது…மானியம் கொடுத்து லாபத்தையும் கொடுத்து சாயாத துறையாக கட்டி நிற்க வேண்டும். ஆனால் ஈழத்திற்கு தமிழனை அடிக்கிறது தான் முக்கிய, முதல் வேலை.எவ்வளவு கேவலமான சித்திரம். தமிழனை நிர்வாணமாக்கி அவனை எரித்துக் கொல்வது. ஈழத்தின் அடையாளமும் அமெரிக்காவின் அடிமைகளை தூக்கில் தொங்கிற சித்தரம் போலவே பொறிக்கப்பட்டு விட்டதே.
அட நொய் நொய் என காதைக் கிழிக்கிறச் சத்தம்.எங்கைப்பார்த்தாலும் இன வன்முறைச்சட்டங்கள். ஈழஅரசு உடுப்பை எல்லாம் கழற்றிக் கொண்டு திரியவேண்டிய குழு. அதன் படைகள்…மரபார்ந்த கூலிகள். நம்பக்கம் மரபார்ந்த தோழர்கள். கழுகு, உள்ளே ஈழமுகத்தை வைத்துக் கொண்டு… மரபார்ந்த நிலையிலே படை அமைத்து சண்டை போட்டது. இந்த தேசம் ப் காப்பாற்றபட வேண்டாமா? . இருக்கும் வேதாளம் மறுபடியும் ஏறி அமர…மாற்றத்திற்கு இடமில்லை என்ற பிடிவாதம் நிலவுகிறது மரபார்ந்த அந்த ஒழுங்கு எப்படியும் பழக்கத்தில் வந்து விடுகிறது. ஒருபிடி மண் நிலம்…தொட்டு எல்லாத்திலும் சுதந்திரம் வேண்டும்.
கணனி தொழில் நுட்பங்கள் ஒன்றும் பிராயண வாயுவும் இல்லை எமக்கு அவசியமா இல்லையா என்பதை தீர்மான்ப்பவர் நாமாகவே இருக்க வேண்டும். விஞ்ஞானம் அங்க பறக்கிறது, இங்க பறக்கிறது. எங்கையும் பறக்கட்டும்.கற்காலத்தில் கிடக்கிறோம் என்கிற…(மொழிப்) பேச்சுக்களில் பசப்பு வேண்டாம், பிரித்தறியும் அன்னத்தின் மொழியை கற்போம்.
எதுவும் இல்லை என்றால் தமிழ்நாடும் கொந்தளிக்கும்.தான்.அதுவும்…வேண்டாம். எந்த நாடு கொந்தளிக்கிறது முக்கியமில்லை சுயமே முக்கியம். பால் பொங்கி வழிகிறது. நல்ல நாடு, நல்ல தேசம், நல்ல மக்கள்…அச்சச்சோ மாக்களடி.”ஆங்கொரு ஆண்டை சுதந்திரத்தை வாங்கினானடி, தூக்கிப் போட்டு, போட்டு நிலத்தில் உடைத்தானடி”. வடக்கு, கிழக்கில் ஆயுதத்தரிப்புகள். அந்த நாட்டுக்கூலிப்படையே நிறுத்தப்பட்டிருக்கிறது. மதுவையும், போதையையும் கொடு. அதையும் வழங்க கொடுத்துக் கொண்டு… ஒருபுறம்,அவற்றால் தேசம் சீரழிகிறது.
நல்லரசுகள், முதலில் எதை ஒழிக்கும்?.
திட்டங்களை வழங்வார்?.
அமைதிஅவைகள் வீரப்பத்திரங்கள் வழங்க…எப்பவும் சுப்பர்ஸ்டாரின் படங்கள் தாம் கொட்டோ கொட்டென கொட்டுதில்லை. இளையதுகளும் படு முட்டாளாகி விட்டன. ‘இனி முதியவர் விலகி விட வேண்டும்.புது இரத்தம் பாய்ச்ச ‘ ஓட விட ‘வேண்டும் ‘. (எதிரியும் அதைத் தான் செய்கிறான்). எங்கையோ கேட்ட குரலாய் கிடக்கிறதே. அட நம்ம தலைவரின் அரசியல் . வாரிசு நதி பாய்கிறது. வீடியோக்கேம்களை இனித்தான் கண்டு பிடிக்க வேண்டும் என்பதில்லை.ஏற்கனவே கண்டு பிடிச்சு அது தான் வாழ்க்கையாய் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
சுயமாக…செய்து வந்தால் முன்னேறி விட முடியும். எம்மால் செய்யக் கூடிய எதையுமே, செய்தல் வேண்டும். சுயத்தை நோக்கி காலை முன் வைப்பது.”சுயமே இலட்சியமாய் கொள்ளடா !”. எதற்குமே அரசுகளின் அனுமதிகள் தேவை இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். எங்குமே அரசுகள் மக்களுக்கான அரசாக இல்லை. அது தான் பெரிய குறை.ஈழத்திலுள்ள நிலையே கனடாவில், அமெரிக்காவிலும் கூட உள்ளது.
ஒரு கொலிச்ஜில் நீவீர்…கோர்ஸ் ஒன்றை படித்து தேறலாம். பிறகு நீர் தேறல்களை( பியர்) வாங்கிக் குடித்து தான் மகிழலாம். ஸ்டாட்டப் (தொடக்கி வைத்தல் ) இல்லை. பலதைப்படித்து கூழ்பானையாகிற பழமொழி இங்கே இருந்து தான் வந்தது. கள்ளர், கிள்ளர், முடிச்சு மாறிகள்…போல தவறான வழியில்…இருப்பவர் தான் வேலையைப் பெற்றுக் கொள்ளலாம் போன்ற ஒரு நிலை. சோவியத் யூனியனில் படிப்பவருக்கு லெட்டரை கொடுத்து அதே வேலையில் ஈடுபடுத்தும் நிலை இருந்தது. மாடு மேய்ப்பவன் அதே துறையில் பிஎச்டி படித்து அதிலே நிமிர்ந்து நிற்பான். அது தான் முறை. ராஜாஜி கூறிய குலக்கல்வி முறை என்றால் அதே குலத்தைச் சேர்ந்தவர் மட்டுமே கல்வியைக் கற்பதென்பதில்லை. அங்கெல்லாம் வாசிகசாலைக் குழு எழுவது போல தொழிர்சங்களை எழுப்பி அதனூடாக கல்வியைப் பயில விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் செயல்முறையில் கற்பித்து,பள்ளிக்கூடமிராது, செயற்களம் மட்டுமே இருக்கும்…கற்று தொழிலை புரிவதாகும்.
அரசர் காலத்தில் கோயில்களை கல்விக்கூடத்திற்காகத் தான் ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்கள். மீள கூட பயன்படுத்த முடியும். சிலை, கல்வெட்டு தொட்டு….செய்யப்படும் பூஜையிலும்…கூட கல்வி இருந்தது. காலப்போக்கில் கலப்பிடமாகியும் சேதப்பட்டு விட்டது. இன்றும் சில கோவில்களில் நூலகமும் இருப்பதை, இயங்குவதைப் பார்க்கிறோம். சபேஷனின் சிவங்கோவிலும் கூட சேர வாசிகசாலை இருப்பதைப் பார்த்திருக்கிறான். அதை சனசமூக நிலையமாக…அரச அமைப்புப்பகுதியாக பாவித்ததில் அவன் அதனோடச் சேர்ந்த ஒன்றாக அறியத் தவறியிருந்தான். இனறு ஈழத்தில் இருக்கும் எந்த கல்விநிலையம் வாசிப்பு பற்றி ஒன்றிருப்பதைப் அறிந்திருக்கிறது. படிப்பிக்கும் ஒரு ஆசிரியர் வெளிவாரியில்…ஒரு கதை,ஒரு நாவலாவது வாசித்திருப்பாரா ?காசை சுண்டிப் பார்த்து தான் அறிய வேண்டியிருக்கிறது. அவர் கணக்கிலே புலி, விலங்கியலில் ‘புலி’…இப்படி தான் இங்கேயும், எதிர்ப்பக்கத்தில்.. ‘சிங்கம்’ என்றுமே இருக்கிற போக்கு. ‘சுயம்’ அதை ஏற்றும் அறிவு….இல்லை. வடபகுதியில் புலி (மிருகம்) கிடையாது, ஈழத்திலே சிங்கமே கிடையாது. இல்லாதை பிடித்து வைத்துக் கொண்டு சண்டையிடும்…கழன்ற ஜென்மங்கள். ஒருவேளை சரக்கடித்தால் மட்டுமே மண்டை வேலை செய்கிறதோ?.
அரசுகள் மத,இன, கழிச்சன்,புழிச்சன் என தினுசுகளில் கிடக்கின்றன, எதுமே உருப்படியாக இல்லை. அரசியல்வாதிகள் ஒரு வேலைவாய்ப்புக்காகத் தான் அரசியலுக்கே வாரார்கள். அந்த மண்ணுகளிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா ?. உறுதி, அனுமதி, பத்திரம் கொடுக்கிற ஒபிஸ்காரர்கள் அவர்கள். சட்டரீதியான ஊழல்ப்பெருஞ்சாலிகள். நடந்திருக்காதே. புலிச்சாயம் காட்டியது செல்லுபடியாகி போய் விட்டிருக்குமே.மற்போக்கு அரசும் முற்போக்குத் தனமாக வழுவி நிற்கிறது. ஓராண்டு சாதனை பொறித்து விட்டது. இனி ஈராண்டு…என கடந்து விடப் போகிறது. அன்று வீசிய காற்றில் தமிழர் இருந்தார்கள். இன்று சிங்களவர் இருக்கிறார்கள். மாகாணவரசு அலகிருந்தால்…மேற்கத்தைய ஜனநாயகத்தை தூக்கி எறிந்து போட்டு கூட்டரசாகி இருக்கலாமே. சோவியத் யூனியன். குடியரசுக்கூட்டு. இரண்டு இருந்தால் என்ன,பலது இருந்தால் என்ன…கூட்டு பலம் தானே.
படிக்கிற போதே ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கிற முறை நல்லதே. மாணவன் படிக்கிற மெசின், அதை செய்ய வேண்டாம், இதை செய்ய வேண்டாம் என்ற வேதம் எதுவுமே வேண்டாமே. மாணவன் புதுபுதுத் தொழில்களையும் கற்றுக் கொள்ளும் தேடல்காரனாகியும் கிடப்பான். விளையாட்டுக்களுக்கும், மரதன்,சைக்கிள் ஓட்டங்களுக்கு வாசிகசாலைகள்.சனசமூக நிலையங்கள் எத்தகைய முறையில் பங்களித்தன என்பது…கிராமத்தவருக்கு நன்குத் தெரியும். அதேமுறையில் தொழிச்சங்களும் பங்களிப்பை நிகழ்த்தி வர….வேலையில்லாப் பிரச்சனை ஒரு பிரச்சனையாயும் இராது.
தற்போதைய எந்த அரசியலாலும் இன்று இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. ராஜாஜி பிரமாணியத்தில் பிறந்தாலும் சாதியரில்லை. சேர்.பொன்.இராமநாதனும் கூட….மரைன் கல்லூரி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்…சாதியரில்லை. சாதியருக்கு எல்லாரையுமே சாதியருக்குள் தள்ளி விடுவதிலே ஆசை. அதிலே, மேல், கீழ்…என வித்தியாசம் கிடையாது. அரசியல் அதிகாரத்தைக் கொடுக்க…பயங்கரவாரச்சட்டத்தின் கீழ்,மட்டுமே தமிழரை கைது செய்யும் ஈழத்துப்போலிஸை …பற்றி தெரியாதவர்கள் இல்லை. அரசுக்கு அதிகாரம் பத்தவில்லை போலிஸும், நிலமும் கொடுக்கவே முடியாது…எனக் கூறி நிற்கிறது.பிறகும் என்னப் பிரச்சனை ?, சட்டம்,மயிர்…என இன்று வரையில் மாகாணவரசு தேர்த்தலையே பின்போட்டுக் கொண்டு வருகிறது. ஒரு படியிலாவது நேர்மையில் உறுதியாக நின்றிருந்தால்…இந்த இனப்படுகொலைப்போரே தேவைப்பட்டிருக்காதே. இத்தனை சேதம். தமிழர் கைகால்மனம் உடைந்து யானைக்கு வெட்டிய குழிக்குள் கிடக்கிறார்கள். வெறும் தரகர்களாக.ஏஜென்டுகளாக புத்திஜீவிகள் கூட…இழுபடுகிறது, சனம் நசிபடுறது மாற வேண்டும். இதற்கு மேலே அவர்களின் ஆயுதங்களை பரிசீலித்துப் பார்க்கும் களமாக நாட்டை வழங்றதும் ஒழிக்கப்பட வேண்டும் . மற்ற நாடுகளைப் போல பாதுகாப்பு, மண்ணாங்கட்டி என..வெளியாருக்கு படைமுகாம்களை அளிக்க நிலத்தை விற்கும் ஒருஈன நாடாக மாறக் கூடாது.யப்பான், துருக்கி, ஜேர்மனி, கட்டார்…இருகிறதுக்காக…இருக்க வேண்டியதில்லை.
அமைச்சுகள் எல்லாமே அரசியல் ஊது குழலாய் கிடக்கிறதை விட்டுவிட்டு அறிவுடன் செயல்படுவதாக மாறவே மாட்டாவா ?. தொல்பொருள்…அமைச்சு தமிழ்ப்பகுதிகளில்…மாகாணவரசின் சிந்தனையில்லாது…தடிகளை நடுகிறது குழிப்பறிக்கிறது. போலிஸும், நீதித்துறையும் மாறவே இல்லை. பிடுங்கிளாக சட்டம்பிகளாக வீம்புநடை போடுகின்றன.. நடுவரிற்கு…மூச்சுக்காற்று கூட கசிவதில்லை. நடைபெறும் தவறுகள் திருத்தப்படுவதேயில்லை. நிரந்தர இருப்பு தான். கயவாளிக் கூட்டங்களாக இருந்தால் சுயம்கள் எப்படி வெளிப்படும் ?.திறமைகள் எப்படி வெளிப்படும்.நாடு பற்றிய சிந்தனையின்றிய, எல்லா வாதங்களையும் நினைக்கிற குறும் தேசியங்கள் உண்மையிலடிமைப்பட்டுக் கிடப்பவையே !.
இந்த சாதனையை ஈழவரசு புரிந்தே வருகிறது . ஆசாமிகளின் ஆட்சியில் பெண்மையின் இரக்கம் சிறுதுளியும் காணப்படவே இல்லை. இஸ்ரேல், பாலாஸ்தீன நிலத்திலிருந்து எப்ப வெளியேறுகிறதோ, அப்பவே ஈழத்தமிழருக்கும் விடியத் தொடங்கும் என்பது என்ன தலைவிதி. முட்டாள்தனம் இல்லையா ?. அங்கே ஒரு ஜனநாயகம், இங்கே ஒரு ஜனநாயகம் கிடையாது . எங்குமே ஜனநாயகம் ஒன்று தான்.சம ஜனநாயகம். அங்கே அல்லைக்கைகள் வரைவிலக்கணத்தை மாற்றி எழுதுவார்கள். நாம் காத்திருக்க வேண்டியதில்லை.
அது இந்த ஜென்மத்தில் நடக்க மாட்டாது.தெரிகிறது. எந்த ஜென்மத்தில் நடக்கப் போகிறதோ..?. தென் அமெரிக்கா, இச்சூழலை ‘கடன் பொறி’ என விமர்சிக்கிறது. உலகம் பிரெஞ்சுப்புரட்சியைப் பின்பற்றி இருந்தால் …இங்கே கனவுகள் ஏன் வருகின்றன ?. தற்போதைய பிரான்சு நாடு …அழிப்பதிலும் கூட்டு. அது ஏற்படுத்தி, வளர்த்து விட்ட அமெரிக்காவும், அல்லைக்கைகளும் பெரும்பூதங்களாக உருவெடுத்து அதன் முன்னால் எழுந்து நிற்கின்றன. நாடுகளின் வலையமைப்புகளில்…இரகசியக் கூட்டங்களை வைக்காமல் பகிரங்கமா வைத்திருந்தால் ஒருவேளை இந்த சூறாவளிகள் வீசாமல் போய் விட்டிருக்குமா?.
சூறாவளி வீசினால் வெளிக்க நீண்ட காலம் இன்னமும் எடுக்கிறது !. இதில், நம் வாழ்வு கருகி சுயமும் மக்கி மனசுக்குள்ள பஞ்சவர்ணக் கிளி பறக்காமலே போய் விடுகிறது. மனிதவாழ்வு இருப்பை தக்க வைக்க பிள்ளைகளைப் பெற்று புளுதியில்… எறிந்து நாட்களும் கழிந்து கொண்டிருக்கிறது.
கனடாவில் ஏற்பட்ட….காந்திக்கதிரை தற்போதைய ஈழ அரசும் சிறுக பற்ற வைக்க முயல்வது போல…மயக்கம் காட்டுகிறது. அது வளர்ச்சியுற்று ஜனநாயகத்தை நோக்கி நடை போடுமா…?. செயற்கை தொழினுட்பத்திற்க்கு கூட தெரியாத சங்கதி. எந்தக்காலத்திலும் வன்முறை தடம்…மனிதக்குலத்திற்கு ஆரோக்கியமானதில்லை. A I காந்தி உருவாகவே முடியாது. ஈழத்தைப் போல கோடூரங்கள் நிகழ்ந்த தென் ஆபிரிக்காவில்…மலர்ச்சி காணப்படவில்லையா ! தனிமனிதர்கள், ஆமாம், காந்தி, ஆபிரகாம்லிங்கன், மண்டலா…ஈழத்திலும் தனி மனிதர்களாலும் அவர்களைச் சூழ்ந்த அணியினினாலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதோ…????.
வீட்டுக்கு வர வழமை போலவேயாகி விட்டது.
வீட்டோட நடத்துற கடையை செல்வன் மூடிவிட்டிருந்தான். பெடியள்களின் களமும் சுடுகாடாய் கிடக்கின்றன.
ஒருகாலத்தில் விளையாட்டுக்கழகம் என புளுதி கிளப்பிய நிலங்களை… பத்தை மேய்ந்து போய்க் கிடக்கின்றன. தற்போதைய இருச்சக்கர கலாச்சாரத்தில், வாற்ஸப்பில்…பெடியளுக்கு எதற்குமே நேரமில்லை. அரசியல் ஒரு சூரியன் !. அதை கருமேகங்கள் மூடி இருளாக்கி கிடக்கிறது. பிச்சை எடுத்தாலும் கல்வி கற்க வேண்டும் என்ற வள்ளுவனைக் கேட்டு, உதைக்க…பல கேள்விகள் உள்ளே பிரவாகிக்கின்றன. பதினாலு வயசுப் பொடியன் கடையிலே பழியாய்க் கிடக்கிறான்.ஒரு அப்பன் மட்டும் பிள்ளைகளுக்கு தோழனாக, தோழர்களாக இருக்க முடியாது.வெளியில் கலகல தோழமை சுயம் நிலவ வேண்டும். குழந்தைகள் மகிழ குழந்தைகள் மத்தியிலே தான் விடப்படுகிறார்கள்.
எங்கே போனாலும் . இந்த ‘ அரசியலில் விடுதலை வேண்டும்’ என்றதுக்கே…கடைசியில் வந்து விழுந்து விடுகிறான்.. சுருக்கம் விழுந்து போன கைத்தோல்…முந்தியும்…தூக்க பலமில்லாத கைகள் என மனம் நொந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது. முட்டாள் சனம் !. வீரம் கொழித்த இனம். 20 வயதிலே வீரர்களாக ஓடித்திரிந்த சரித்திரம் கிடக்கிறது. பிரிட்டீஸ் முறைகளையும்,சிங்கள முறைகளையும் வேதங்கள் என மூளையில் பச்சைக்குத்திக் கொண்டு கிடக்கிற அறுந்த சனம்… ???, சுயமுறைகளை தேடி அறியும் சுயம் கூட கிடையாது கிடக்கிறது. காலுக்க, கையிலே ஆயுதங்கள் தரித்து ஊறுகிற புழுபூச்சிகள் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தேசத்தையுமே அழித்து விடும் என்பது எவருக்குமே புரியவில்லை . ஆயுதங்களில் போய் காதல் கொண்டிருக்கிற இந்த சமூகங்களை என்ன செய்வது?. கதவைத் திறந்து நுழைகிறான். அவனும் முந்தி ஒரு குழுவில் இருந்தது மனைவிக்குத் தெரியவே தெரியாது. தெரிந்தால்…வேற பயப்படுவாள்”என்னங்க, இவ்வளவு நேரம். நித்திரையும் வேணுமப்பா!”என்று மனைவியின் குரலில் அன்பு இழையோடுகிறது. ‘தனிச்சுப்போன பறவையாய் ஊரில் இருக்கிறான் ‘ என்றதை அவளும் புரிந்து தான் இருக்கிறாள். வெளிநாடு ?…அது இன்னொரு மலச்சிக்கல் மட்டுமில்லை சகதியும் கூட தான். எல்லாமே விடுதலை உணர்வையையும் நலமடித்துக் கொண்டிருக்கிறவை.
சோவியத் யூனியன், USSR கூட்டு ஆசியப்பகுதியிலும் ஏற்பட்டிருந்தால் எவ்வளவு நல்லாய் இருந்திருக்கும்.ஈழத்தமிழரும் ஜனநாயக உரிமைகள் பெற்றிருப்பர்,”நாமும் ஈழவர்”என்ற நினைப்பில் விவசாயம், தொழில்த்துறையில் சுதந்திரமாக கவனத்தைப் பதித்து…தமிழ், சிங்கள பேதமில்லாது முன்னேறிக் கொண்டிருப்போம். பகல்க்கனவுகள் .
சிங்களவரை …சந்தேகப்பிராணி என வெறுத்திருக்க மாட்டோம். சிலைகளையும்,பெயர்பலகைகளும் நட்டு மண்ணின் வாசனையை மறக்கடிக்கிறதை சகித்தும் நினைப்புகளும் துரத்திக் கொண்டிருக்க அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிற மாட்டோம் . மொத்தத்தில், பகைவர், வஞ்சகர், காலைவாரிகள், எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ என்று சதா அச்சத்தில் உழன்று கொண்டிருக்கிற வாழ்வு வாழ மாட்டோம். இனப்படுகொலைகளை, ஊனத்தை சுமந்து கொண்டு….பாலாஸ்தீனமாக்கப்பட்ட ஈழமண்ணில் பழைய வாழ்க்கையை நோக்கி ஏங்கிக் கொண்டிருக்கிறோம் . தற்போதைய அரசால் அவற்றையெல்லாம் மீட்டுக் கொடுத்து விட முடியுமா ?. கதை விடுறது போலவும் படுகிறது. கொஞ்சம் நட்பைச் சுமந்த முகங்கள் என்பது உணரப்படுகிறது . நம்பி மறுபடியும் ஏமாந்து விடப் போறோமோ ?. அது தானே வழமை.
பழைய அரசுகளைப் போலவே, பெண்னுரிமைகளை காலில் போட்டு மிதித்துஅன்னையர் முன்னணியினரை உதாசீனப்படுத்தி, அன்னியப்படுத்தி வருவது…தவறாகப்படுகிறது. இணைப்பை பிரித்து, எதிராக நின்ற இவர்களின் பழைய செயற்பாடுகள் சிலவும்…குறுக்கே வருகின்றன. கடைசியில், இவர்களும் குறும் தேசீகள் தானோ ? என்ற ஐயமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. மாகாண தேர்த்தலைகளை வைத்து அப்பிரச்சனையை தமிழரிடம் பாரப்படுத்தி விட்டால்…வரவு செலவு திட்டதிலும் நிதி ஒதுக்கி, ஒதுக்கி புறக்கணிக்க்கிறதை நிறுத்தி விட்டால்…, நல்ல ஆட்களிடம் போய் கேட்பதாகவும் படுகிறது. காதல் சுகமானது. சிலவேளை ‘கனவும் மெய் படலாம் ‘. ஒரு காலத்தில், ரூபவாகிணியில்,வானொலியில்…ஒலித்த பிரேமதாசாவின் கவிதைகள் …அந்த நட்பைச் சுமந்த குறுகிய காலமும் நினைவில் வந்து போக தவறவில்லை. தற்போதைய அரசு முதல்வரும்…பிரேமரைப் போல நட்புமுகம் காட்டி நிற்கிறார். பிரேமரின் மகனிலும் அதே முகம்…காணப்படுகிறது. இருவரும் சேர்ந்தால் நல்லாய் இருக்குமே. ஆனால் சேர மாட்டார்கள். எதிர்பார்க்க…நம்மில் எந்த விடுதலைக்குழு இணைந்தது. இணைந்திருந்தால்…இன்னும் கொஞ்சம் வீரம் வெளிப்பட்டிருக்கும். உதிரிகளாக உருப்படாமல் அழிந்தது தானே மிச்சம்.
உலகத்தின் மனசாட்சி பாலாஸ்தீன மக்களை பேரம் பேசுவது போல..பேச முடிந்திருக்கும். இங்கே, எழுதுற ஒப்பந்தம் ஈரம் காயமுதலே கிழித்தெறியபடுகிறது வெளியில் யாருக்குத் தெரிகிறது ? இஸ்ரேலால்,ஈழத்தால் ஒரு தீர்வைக் கூட முன்வைக்க முடியாது. அது தான் நெடுக கலவரம்,கொலையென மும்மணித்தாக்குதல்கள். அமெரிக்காவிற்கு எதிராக ஒவ்வொரு நாடும் சிறுகவாவது ஒரே ஒரு தடை உலகளவில் எடுக்கிற போது…ஏற்கனவே, காந்திக்கிழவர் அன்றே அன்னிய ஆடை எரித்திருக்கிறார், அதற்கு அமெரிக்கா காட்டூனில், சப்பாத்தில், காலுறையில்….காந்திப்படத்துடன் மிதிக்கிற…ஒருவித அவமதிப்புகளை செய்கிறது , காந்திக்கு கிட்ட அமெரிக்கா நெருங்க முடிவதில்லை, இஸ்ரேலின் கோட்டையில் வெடிப்பு ஏற்பட்டு விடும். தெனாபிரிக்காவில் இவர்களின் போர்க்குற்றங்கள் விசாரிக்கிற போது பலபலவென விடியிற போரற்ற அழகான வானத்தை கூடப்பார்க்கலாம்.அதுவரையில், சேரனின் கவிதையில் வருவது போல எல்லோரும் நிர்வாணமாக திரிய வேண்டியது தான். அமெரிக்காவிற்கு என்ன ஐரோப்பாவிற்கே பிடித்ததாயிற்றே !”தையன தையன தா !”. ஆயுதங்களைக் கொண்டு ஒருபோதும் பசியாற முடியாது தம்பிகளா. பகட்டு, ஆயுதங்களை… விட குணமே முக்கியம் ! கடைசியில் தர்மமே வெல்லும். மகாபாரதப்போரிலே சொல்லப்படுற அதே தர்மம் தான் !. தர்மம் தன்னை சூது கவ்வும். அது மீண்டு…தன் வெற்றியையும் பொறிக்கும் !.
உணவுப்பொருட்களை அனுப்புவதை தடைபடுத்திக் கொண்டு வரும் போது ஆயுதம் மெலிந்து உருக்குலைந்து போய் விடும் .ஈழம் போல சிறிய தீவிற்கு என்னத்திற்கு 500, 1000… இறாத்தல், கிலோ வெடிகுண்டுகள் ?. வழங்கியவை அவை.பங்குச்சந்தை முறை ஒழியட்டும். இவர்களுக்கு அதை நன்மைக்கு பாவிக்கவேத் தெரியாது. ஆசியருக்குத் தான் மண்ணை அள்ளி வீசி சாபம் இடும் முறைமை இருக்கிறதே. பழைய காலத்தில்…கலம்பகம் பாடும் முறைமையும் இருக்கிறது. எழுத்து எட்டுத் திக்கும் பறை அறிவிக்கட்டும்.
நடைமுறை அரசியலை ஒதுக்கி கடந்து போகவும் முடியவில்லை. சதா முட்களைக் கொட்டி விடுற தலைவர்களாக இருக்கிறார்கள். எந்த தலைவரையும் நேர்மையாக எதிர்பார்க்க முடியவில்லை…!. இங்கேயும்,எந்த ஈழத்தலைவர் பூவாரிக் கொட்டியிருக்கிறார் ?. இருந்தாலும் கைகோர்த்த அந்தக் கவிதைகள்… வரிகள்..? நிச்சியம் ஒரு கவிஞன் உள்ளத்தால் பாடுகிறவன். பிரேமரை பொய்யர் எனக் கூற அவனுக்கு மனம் வரவே இல்லை. சிலவேளை கற்பனைகளும் சுகமானவை . தடம் புரழ்ந்தாலும் கூட தற்போதையரின் மலையகப் பேச்சும் பொறித்து நிற்கிறது.
உக்ரேனை அறிய கிளம்பி கடைசியில், ஈழத்தின் ஒரு குறுக்குவெட்டை அறிந்தது.. மிச்சம் ! அதன் குறும் தேசீகளால் பொருளாதாரவளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது, கொள்கைகளை சீர் செய்யா விடில் கானல் நீராகவே இருக்கவும் போகிறது . அருளரின் வகுப்பு அயர்ச்சியைக் கொடுத்திருந்தது.
எல்லாமே மறுபடியுமா ?. மூளையில் இலத்திரன்கள் குறுக்கு மருக்காய் ஓடுகின்றன கேள்விக்குறிகள் மாறாது அப்படியே தான்…நகர அலங்காரக் கோபுரங்களாக நிற்கின்றன.விழுவது எழுவதற்குத் தானே. ஒரேஒரு செங்கல்லை எடுத்து வைக்கிற போது…துளியாகி விடுகிறது. முன்னோரை புறந்தள்ளி விடாது முயற்சியுடையவராய் இருப்போம்.இகழ்ச்சியடைய மாட்டோ. யார் இந்தக் கண்ணன், இடையில் வந்து பகவத்கீதை சொல்வது ? அசரீயையாய் இருக்க வேண்டும் !
ஒருமுறை தோமஸ் அல்வா எடிசன் மின்சார குமிழ்விளக்கை முதலில் தயாரிக்கிற ஆய்வுக்கூடம் முழுமையாக நெருப்பில் எரிந்து போன போது மனைவியிடம் காட்டி”இந்தக்காட்சியை ரசி”என்று கூறி சந்தோசமாக கூறினாராம். அயலவர், நண்பரையும் கூட்டி பார்ட்டியும் வைத்தார். மீள ஆய்வுக்கூடத்தைக் கட்டி எழுப்பி…இன்று நாம் மின்சார விளக்குகளைப் பெற்றுக் கொண்திருக்கிறோம். எப்படி நிகழ்ந்தது. இந்த மண் எங்களுக்கு சொந்த மண் !
தோல்விகள் என்றும் தோல்விகள் கிடையாது.”மனமே ! வழி நடத்து. தவறுகள் மலிந்து தோல்வியுற்ற போதிலும்…வீரம் கொப்பளித்திருக்கிறது, தோழமைகள் சிறக்கடித்திருக்கிறது, பள்ளிச்சிறைகளிலே அடைப்பட்டிருந்த இளைஞர்களிற்கு..வெளியில் நிலவும் சீர்கேடுகள் முதல் தடவையாக தெரிந்திருக்கிறது. இரத்தமும், வலியும்…மரணமும், எல்லா பெண்களுமே வாழ்வில் நிதம் கடக்கிற கண்டம் தான் . அதை அவர்கள் இயல்பாய் ஏற்றுக் கொள்ளவில்லையா ?. இப்ப ஆண்களும் கண்டத்தை கடந்திருக்கிறார்கள். அனுபவித்திருக்கிறார்கள். மாறுபாடு அது தான். முதல் தடவை அழுகை என்றால் என்னவென்று தெரிய வந்திருக்கிறது. ஆண்பிள்ளைகள் அழவும்செய்வார்களா?. செய்கிறார்கள். அழுகை நிச்சியம் புரட்சி செய்யும்.
“இன்னுமா நித்திரை கொள்ளவில்லை, எதையும் யோசிக்காமல் கண்ணை மூடிக் கொள்ளுங்கள். நித்திரை வரும்”என்கிற மனிசியின் குரலும் பாயில் அவனை நெருக்கி அணைத்துக் கொண்டதும்…ஆறுதலாகவே கிடக்கிறது.