சாத்தான்களின் மாநாடு
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 161
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மானுட வர்க்கத்தை நாசமாக்க சாத்தான்களெல் லாம் கூடி ஒரு மாநாடு நடத்தின.
ஞானிகளான சில பிசாசுகள் தங்கள் ஆலோசனை களைக் கூறின:
முதற்பிசாசு:
தலைவரவர்களே! கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று நாம் பிரச்சாரம் செய்யவேண்டும். கடவுளுக்குப்பயப்படுகிற பயம் மட்டும் இல்லாது போனால் மக்களைப் பம்பரம போன்று ஆட்டிப் படைக்கலாம்.
மாநாட்டுத் தலைவர்:
கூடவே கூடாது மிகச்சிலர்தான் இந்த யோசனை யை அங்கீகரிப்பார்களே ஒழிய எல்லோரும் அங்கீகரிக்க மாட்டார்கள். வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங் களைக்கண்டு ‘கடவுள் ஒருவர் இருக்கவேண்டும்’ என்று நிச்சயம் சொல்வார்கள். ஆகவே உன் ஆலோசனை எடுபடாது.
இரண்டாவது பிசாசு:
எஜமானே! பைபிள் தேவனுடைய வார்த்தை அல்ல வென்று பிரச்சாரம் செய்வோம். மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டால் விசுவாசமே எடு பட்டுப்போம். அப்படியானால் எல்லோரும் நரகத் துக்கே போய் விடுவார்கள்.
தலைமைச் சாத்தான்:
இல்லவே இல்லை. வெகு சிலரே இதனை நம்புவர். வேதம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது என்பதை மற்றும் அநேகர் நம்புகிறார்கள். ஆகவே அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உருப்படியாக இல்லை.
மூன்றாவது பிசாசு:
பேய்களின் பிரபுவே! இயேசுகிறிஸ்து தேவனு டைய குமாரன் அல்லவென்று பிரச்சாரம் செய்வோ மே! இவ்வெண்ணத்தை வேரூன்றச் செய்து விட்டால் அவர்களுக்கு இரட்சகர் கிடையாது போய்விடும். யாவரும் வெகு எளிதாக நரகத்திற்குப் போய்விடுவர்.
பிசாசுகளின் பிரசிடெண்ட்:
தப்பு, தப்பு! உன் யோசனையும் தகாது. பாலில் ஊ றிய பழம் போலும், உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றும் ‘கிறிஸ்துவே இரட்சகர்’ என்று ஊறிப் போயிருக்கிற கிறிஸ்தவர்களை ஏமாற்றமுடியாது. ஒரு சிலரே இதனை ஏற்றுக்கொள்வார்களே தவிர எல்லோ ரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உபயோகமற்றது.
வேலும் பல பேய்கள் வேறு வேறு ஆலோசனை களைக் கூறின. தலைமைச் சாத்தான் அங்கீகரிக்கவில்லை. இறுதயாகப் பெரிய பேய் ஒன்று அடக்கத்துடன் எழும்பி மிக அமைதலுடன் பேசியது:
எஜமானே! ‘தெய்வம் உண்டு; பைபிள் உண்மை: இயேசு தெய்வ குமாரன்; அவரே இரட்சகர்’ என்று தெளிவாய்ச் சொல்வோம். ஆனால் இரட்சிக்கப்படுவதற்கு இன்னும் போதுமான காலம் இருக்கிறது. அதற்காக இப்பொழுதே ஆத்திரப்படவேண்டாம் என்று பிரசங்கம் செய்வோம்.
முதன்மைச் சாத்தான்:
சபாஷ்! சரியான யோசனை! இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என்று கோரவே எல்லாப் பிசாசு களும் கரகோஷம் செய்தன.
சாத்தான் இக்காலம் மேற்கொள்ளும் முறை இது தான். நாளை நாளை என்று காலம் கடத்தவே பிரயாசப் படடு வருகிறான்.
வீணாகக் காலத்தைக் கடத்தாது விழிப்பாய் இருப் போம். இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் சூரியக் கடிகாரம் ஒன்று இருக்கிறது. அதில், ‘நீங்கள் என்னை வீணாகச் செலவழிக்கலாம், ஆனால் என்னை நீங்கள் நிறுத்திவிட முடியாது,’ என்று எழுதியிருக்கிறது.
“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்’. [சங்கீதம் 90:12]
“இதோ. இப்பொழுதே அனுக்கிரக காலம்; இப்பொழுதே இரட்சண்ய நாள்” [2 கொரிந்தியர் 6:2]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
