கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 6,291 
 
 

அம்மிக்கல்லைத்தூக்கி வாசற்படியில்படுத்துத் தாங்கிக் கொண்டிருந்த கணவன் தலையில் பொத்தென்று போட்டாள் பொம்மி.

‘மப்புல ஆளு மட்டையாயிட்டான்போல கல்லைப் போட்டும் சத்தமே வரலையே.. ?!’ 

இருந்தாலும் ஸ்டேஷனில் போய் சரணடைந்துவிடுவது என்று போலீஸ் ஸ்டேஷன் போனாள் பொம்மி.

‘தெனந்தெனம் உம்புருஷனை டாஸ்மாக் கடையில் பார்த்தேன்’ என்று இளக்காரமாய்ச் சொல்லிச் சிரித்தால் யாருக்குத்தான் கோபம் வராது?. வந்தது மொம்மிக்கு.

கல்லைப்போட்டுவிட்டு போலீஸ் போய்க் கொண்டிருந்தாள்.

விவரம் கேட்டுக்கொண்டு ஸ்பாட் இன்ஸ்பெக்ஷனுக்குக் கிளம்பினார் எஸ்ஐ.

எங்கே தான் டாஸ்மாக் கடைக்கு வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டாளோ என்று சந்தேகித்த சபாஷ்டியன், பகல் வேலை முடிந்து வந்ததும், வராந்தாவில் படுத்துக் கொள்வதாக பொம்மியிடம் சொல்லிவிட்டு, தினமும் வாசற்படியில் படுத்திருப்பதுபோல தலையணை போர்வையை ஆள்போல  செட்டப் பண்ணி வைத்துவிட்டு, டாஸ்மாக் கடைக்கு வழக்கமாய் போபவன், அன்று அங்கு சம்பாதித்த கைநிறைந்த காசோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான், போலீஸ் வீட்டை நெருங்கும் வேளையில்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *