சந்தன மரப் பேர்வழிகள்!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 166
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சந்தனமரம் போன்று உலக வாசனையைக் கொடுத்துக்கொண்டே மற்றவர்களைக் கெடுக்கும் பேர்வழிகள் நிறைய இருக்கிறார்கள்.
சந்தனமரம் எப்போதும் தனித்து நிற்பதில்லை. பல மரங்களுக்குப் பக்கத்திலேதான் நிற்கும். சந்தன மரத்தின் வேர் தூரத்தில் போய் உணவு தேடுவதில்லை. பக்கத்து மரங்களிலுள்ள வேர்களிலிருந்து தனக்கு வேண்டிய உணவை எடுத்துக்கொள்கிறது. இதனால் தான் சந்தனமரத்தின் அண்மையில் பல பட்டுப்போன மரங்களைப் பார்க்கலாம்.
இதிலிருந்து சந்தனமரப் பேர்வழிகளை நாம் புரிந்து கொள்ளலாம். அடுத்துக் கெடுப்பவர்கள். தாங்கள் வாழப் பிறரைச் சுரண்டிக் கொழுப்பார்கள்.
கடவுளில் பற்றுறுதி உள்ளவர்களைக்கூட சந்தேகப் பேர்வழியாக்கி விடுவார்கள்.
விசுவாசிகள் விழிப்பாயிருக்க வேண்டும்.
”நீ எச்சரிக்கையாயிருந்து உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதை யாய்க் காத்துக்கொள்.” [உபாகமம் 4:10]
“ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” (கலாத்தியர் 5:15)
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
