சட்டென்று விழுந்த நீல மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 6,041 
 
 

நீல வானம் மேகங்கள் இல்லாமல் தன்னந்தனியே குனிந்து நிலத்தை பார்த்து கொண்டு நின்றது. வெண்ணிற கொக்குகள் பாடிக் கொண்டே கூட்டுக்கு பறந்து சென்றது. சூரியன் வண்ண ஓவியங்களை மேற்கு நோக்கி தீட்ட நகர்ந்தது.

வழக்கம் போல் இல்லாமல் பள்ளிக்கூடம் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. பள்ளிக் கூடமும் மாணவர்கள் போல் விடுமுறையை எண்ணி புதிய உற்சாகத்தில் இருந்தது. ராஜா விடுமுறை என்பதால் பர பரப்பிலிருந்து கொஞ்சம் விடுபட்டு ஓய்வாக உணர்ந்தான்.

முன்னதாகவே பள்ளியில் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. எப்போதும் பள்ளி வேலையும் விடுமுறையும் பொருத்தமாக வரும். இன்று அவ்வாறு இல்லை என்பது மகிழ்ச்சி. வேறு பள்ளியிலிருந்து தன் குழந்தைகளை தினமும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

வேறு எண்ணங்கள் வந்து சென்றது. அவன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூட சாலை வண்டி ஓட்டி பயிற்சி எடுக்க சரியான இடம். நகரின் மொத்த கூட்டமும் அந்த வழியாக தான் விருப்பத்தோடு செல்லும் வேறு வழியில்லை என்ற எண்ணம். பல ஆண்டுகளாக பழகி விட்டார்கள். ஆனால் பல வழிகள் உண்டு. அதை நினைத்தவுடன் பள்ளியை நோக்கி பறக்க தொடங்கி விட்டான்.

நெறுக்கடிகள் அரசியல் கட்சி கூட்டம் போல் வரும் அல்லது தேர் ஓட்ட திருவிழா போல் மகிழ்ச்சி பொங்கி வரும். இன்று எந்த வேலையும் இல்லை. ஒரு சிறந்த திட்டம் உண்டு விடுமுறையை பயன்படுத்த. அது எப்போதும் வெள்ளி மாலை தொடங்கி தொடர் வண்டி போல் நிற்காமல் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் ஒரு நாவலை எடுத்து கொண்டு படித்து முடித்து விடலாம். அவன் இந்த திட்டத்தில் சேர்ந்து தான் பல நாவல்களை படித்திருக்கிறான். அவன் நண்பர்களுக்கும் இத்திட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இடை இடையே சிறு சிறு வேலைகள் வந்தாலும் கூட நாவலில் புகுந்து விடுதலை அடைவது உறுதி. எப்போதும் பகுதி நேர வேலைகள் அழைப்புகளாக ஒன்றன் பின் ஒன்றாக வரும். ஆனாலும் எல்லாவற்றையும் முடிக்கும் திட்டம் உண்டு.

முதல் அழைப்பு இணையத்தில் பொருட்கள் வாங்கியது தொடர்பாக அவனுடைய நண்பன் பொருட்டு வந்த அழைப்பு. பொருட்களை வினியோகம் செய்யும் பிரதிநிதியும் அவனுடைய நண்பனும் கான்பரன்ஸ் காலில் பேசினார்கள். அவனுடைய வீட்டின் வேலி கதவுக்கு முன்பாக நின்று கொண்டு வீடு எங்கு இருக்கிறது என்றனர். நீங்க நிற்பது தான் என் வீடு. சந்தோஷ் பிரதிநிதியிடம் வேலி கதவை திறந்து மூடினால் பக்கத்து வீட்டு நாய் கத்தும். எனவே கதவை திறங்க என்றான். பிரதிநிதி திறந்தவுடன் அவன் சொல்லியது போல் நாய் கத்தியது. அவன் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. உடனே அவன் மனைவி சிவாவிற்கு அழைத்து பொருட்களை வாங்குமாறு கேட்டான். உடனே தான் அவள் வந்து வாங்கினாள். இவன் வேலை முடிந்தது. சரி என்று வேகமாக அழைப்பை அணைத்து விட்டான்.

இரண்டு பூதங்கள் தொலைக்காட்சி மற்றும் கைபேசி எல்லா வீட்டையும் காத்து கொண்டு இருக்கிறது யாரும் வெளியே வர முடியாமல். நிறுத்திய வண்டியை எடுக்கலாம் என்றால் அடுத்த அழைப்பு. அவன் மனைவியிடம் இருந்து வந்தது. இன்று கூட்டுறவு காலனி வார சந்தை ஒரு காய்கறியும் வீட்டில் இல்லை. வழக்கம் போல் எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க . அதுவும் நாளை அமாவாசை பார்த்துக்கோங்க என்றாள். சரி என்று வைத்து விட்டு நீல குறிஞ்சியை தாண்டி பனியன் மில்லை தாண்டி வந்து கொண்டு இருந்தான். அவனுக்கு எதிர் புறத்தில் இரண்டு பேருந்துகள் போட்டி போட்டு முந்தி கொண்டு இவனை காளமாடு முட்ட வருவது போன்று வந்தது. இவன் சுதாரித்து கொண்டு சாலையை விட்டு ஓரம் போனான் அடுத்து பெரிய பள்ளம் எனவே சட்டென்று நிறுத்தி விட்டான்.

அவனுடைய அண்ணன் குமார் அழைத்தார். சொந்த அண்ணன் இல்லை அவனுக்கு பல வருட பழக்கம். அண்ணா சொல்லுங்க என்றான். நாளைக்கு வேலை இல்லையே. அப்படியே இருந்தாலும் எல்லா வேலைகளையும் தள்ளி போட்டுவிடு. நாளைக்கு பெரிய அலுவலர்கள் பெரிய கோயிலை பார்வையிட வருகிறார்கள். நமக்கு தெரிந்த மிகவும் வேண்டப்பட்ட ஒருவரும் அந்த குழுவில் வருகிறார். நிச்சயம் பெரிய கோயில் சுதை சிற்பங்கள் ஓவியங்கள், ஆடல் சிலைகள் மற்றும் கோயில் உள் கூடுகளை பார்வையிடுவார்கள். நமக்கு நல்ல வாய்ப்பு. தயாராக இரு அழைக்கிறேன் காலை பத்து மணிக்குமேல் என்றார். அண்ணே உங்க கால காட்டுங்க என்றான்.

இப்போது அவனுக்கு வண்ண பலூன்கள் பறப்பது போல் இருந்தது. நகரத்தில் உள்ளே நுழைந்தவுடன் எப்போதும் தேநீர் குடிக்கும் கடையை இடம் மாற்றி விட்டு புதிய கடைக்கு வந்து விட்டார்கள். அதுவும் அதே சாலையின் அடுத்த நிறுத்தத்தில். அவன் வண்டி தானாக மெல்ல நின்று திரும்பி உள்ளே நுழைந்து நின்றது. இப்போது தான் தெரிந்தது அந்த கடை ஆளுங்கட்சி பிரமுகர் நடத்தும் கடை என்று. அதன் உரிமையாளர் கஞ்சி போட்ட கரை வேட்டி சட்டையுடன் திரும்பி நின்று கொண்டு இருந்தார். அந்த கடை மாஸ்டர் கொஞ்சம் நகைச்சுவையாக பேசும் மனிதர். அவனை கண்டு கொண்டு முருகா நீங்க வருவீங்க என்று நினைத்தேன் வந்துட்டீங்க வாங்க முருகா என்றார். அவர் எல்லோரையும் முருகா முருகா என்று தான் அழைப்பார். ஒரு அதட்டல் குரல் கேட்டது ராஜா என்று. திரும்பி பார்த்தான்.

அட நம்ப சின்னதம்பி அண்ணா என்று கண்டு கொண்டான். அவனுடைய அண்ணன் சரவணனுடன் படித்தவர். அவர் எல்லோரிடமும் அன்பாக இருப்பார் எல்லா உதவிகளும் செய்பவர். அந்த பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளவர். அதனால் எல்லோருக்கும் பிடிக்கும். தம்பி வா நல்லா இருக்கியா என்றார்.

அவன் உடனே அண்ணா உங்க கடையா தெரியல. உடனே டீ வட கொடு தம்பிக்கு என்று ஒரு அதட்டல் போட்டார். அடுத்து அவரை விட பெரியப் பட்டையுடன் ஒரு கரை வேட்டி வந்தார். உடனே தம்பி சாப்பிட்டு இரு போய்டாதே வந்தர்ரேன் என்று நகர்ந்தார். அவனும் அடுத்த அழைப்புக்காக நகர்ந்தான்.

அவன் செல்லும் டால்ஸ்டாய் புக் ஸ்டோரிலிருந்து வந்தது. அவன் கேட்ட சுந்தர் சருக்கையின் “பிராத்தனை பின்தொடருதல்” நாவல் வந்து விட்டது. இரண்டு பிரதி தான் உள்ளது. போகும் போது எடுத்துட்டு போங்க என்றனர்.

புத்தகம் என்றாலே மயில் மாணிக்கம் போல் சிவந்த வெண்ணிரமும் மயக்கும் மணமும் எண்ணங்களை அசைத்து பார்க்கும் விசை கொண்டது. புத்தகத்தை ஒளித்து வையுங்கள் கண்டிப்பாக வந்து எடுத்து கொள்கிறேன் என்று புத்தகத்தின் வாசலை தேடி சென்றான்.

இரயிலடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வெகு நாட்கள் ஆகிறது. தபால் நிலையம் எதிரில் குழந்தைகள் ஆடும் வண்ண மர குதிரைகள் கலைக்கூடம் மற்றும் பேருந்து நிழற்குடை நடுவே தள்ளுவண்டி வடை கடை எல்லாவற்றுக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஓடியது. அவன் எண்ணத்தை நிறுத்தியது அடுத்த அழைப்பு.

எட்வேர்ட் தான் அழைத்தான். அவன் தினமும் ஏழு மணிக்கு மேல் தான் அழைப்பான். இப்போது அழைக்கிறானே என்று எண்ணி கொண்டே அவன் எடுத்தான். ராஜா எங்க இருக்க என்றான். குழந்தை யேசு கோயில் ரோடுல இருக்கேன் சொல்லு என்ன என்றான்.

அவன் குரல் ஒருவித பதட்டத்துடன் இருந்தது. கீழே விழுந்துட்டேன் கைல நல்ல அடி. நான் ஆட்டோ புடிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போறேன் நீ வந்து விடு என்றான். நீ எங்க இருக்க. பழைய காந்திஜி ரோடு ஜி.ஆர் நகர் ல இருக்கேன். என்ன ஹெல்மட் போட்டு இருந்தியா. போட்டு இருந்தேன். இடது கைல மட்டும் தான் அடி. நல்ல வேல.Thank god. அங்கயே இரு. வேர மருத்துவமனைக்கு போகலாம்.

நம்ம நாகுவ வர சொல்லுரேன். நம்மலோட படிச்சவன். நீ மறந்துருப்ப அதான் ஆட்டோ மாமா பையன். நாகுக்கு விபரம் கூறியவுடன் உடனே அழைக்க சென்று விட்டான். ராஜா வீட்டுக்கு அழைத்தான் சிவா எடுத்தாள். எட்வேர்ட்க்கு கைல அடி மருத்துவமனைக்கு போரேன். நீங்க பிள்ளைகள பள்ளியிலிருந்து அழைச்சிட்டு வாங்க . அவள் நானும் பிள்ளைகள விட்டு வர வா என்றாள். இல்லை வேண்டாம் நான் பார்த்துகரேன் என்றான். அவனுக்கு எட்வேர்ட் பற்றி எண்ணங்கள் ஓட தொடங்கியது.

எட்வேர்ட் கேபிள் டீவி வைத்திருந்தான் நல்ல வருமானம். ராஜாவிற்கு பொருள் உதவி பல செய்துள்ளான். எதுவும் திருப்பி தந்ததில்லை. சட்டென்று வீசும் புயல் நம் வாழ்க்கையை திருப்பி புரட்டி விடும். அவனுடைய பொறுப்புகள் எல்லாம் கடன்களாக மாறி அவனிடம் உள்ள எல்லா செல்வங்களையும் எடுத்து கொண்டது.

மனிதனை புயல் ஒன்றும் செய்து விட முடியாது. மனித இனம் மட்டும் எல்லா சூழலுக்கும் ஏற்றவாறு முன் நகர்ந்து செல்லும். இப்போது அவன் இணைய விற்பனை முகவராக இருக்கிறான். சந்தோஷ் அவனிடமும் சுபியிடமும் பல முறை கூறி விட்டான் சொந்தமாக கடை தொடங்குங்கள் நான் வங்கி கடன் ஏற்பாடு செய்கிறேன் என்றான். இருந்தாலும் எட்வேர்ட் போராடி கொண்டு தான் இருக்கிறான்.

நாகு ராஜா வை அழைத்தான். எங்க அழைச்சிட்டு வரணும் என்றான். நம்ம சிந்துஜாவுக்கு அழைத்து கொண்டு வா என்றான். டாக்டர் சிந்துஜா அவனுடைய மாமா பொண்ணு ஆர்தோ டாக்டரா இருக்கார். எப்போதும் ஏதாவது படித்து கொண்டே தான் இருப்பார். அவன் சிந்துஜாவை அழைத்தான். அவள் எடுக்க வில்லை. பிறகு அவளே அழைத்தாள். மாமா ஸாரி. சொல்லுங்க. நம்ம மருத்துவமனையில தான் இருக்கேன். என்ன ஆச்சு. எட்வேர்ட் கீழ விழுந்து கைல அடி. எலும்பு முறிவா இருக்கும் போல சரியா தெரியல. யாரு உங்க நண்பரா சரி ஒன்னும் பிரச்சனையில்ல ஹாஸ்பிட்டல சுஜானு இருப்பா அவள்ட கொடுங்க. அவன் சுஜா விடம் கொடுத்தான்.

சுஜா பேசிவிட்டு நோயாளி எங்க இருக்காங்க என்றாள். வந்துட்டு இருக்காங்க என்றான். கொஞ்ச நேரத்தில் எட்வேர்ட் வந்து இறங்கினான். நாகு அவனை அழைத்து வந்தான். எட்வேர்ட் ராஜாவிடம் பிரைவேட் ஹாஸ்பிட்டல் வேண்டாம் செலவாகும் என்றான். நம்ம ஹாஸ்பிடல் தான் பார்த்து கொள்ளலாம் என்றான்.

இடது கை மூட்டு நழுவி உள்ளது. சாலை ஓரத்தில் தண்ணீர் குழாய் பதிப்பதற்காக வெட்டி போட்ட மண் மூடாமல் காய்ந்து ஓரத்தில் இருந்திருக்கிறது. அவன் இரு சக்கர வாகனத்தை திருப்பும் போது சறுக்கி விழுந்து விட்டான். அவன் கொஞ்சம் கலங்கி இருந்தான். வலியில் துடித்து கொண்டு இருந்தான். சுஜாவும் நர்சும் அழைத்து சென்றார்கள்.

ராஜா ராஜா என்று வலியில் கத்தினான். நர்சு டாக்டரிடம் பேசிவிட்டு சிகிச்சையை தொடங்கினாள். ராஜா நர்சிடம் வலிக்கு ஏதாவது கொடுங்க என்றான். அவன் வலிக்கு ஊசி போட்டார்கள். கொஞ்சம் அமைதி கொண்டான். எக்ஸ்ரே விற்கு அழைத்து செல்ல சொன்னார்கள்.

நர்சு மொபைல் எக்ஸ்ரேவ இங்கேயே கொண்டு வாங்க என்றாள். எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஒரு பொண்ணு பில் கட்ட சொன்னாள். நர்சு உடனே பில்ல சுஜாட்ட கொடு. இவுங்க மேடம் family என்றாள். கொஞ்ச நேரத்தில் ராஜா வை டாக்டர் அழைத்தார். மாமா நான் வந்துட்டு இருக்கேன் எக்ஸ்ரே பாத்துட்டேன். எலும்பு முறிவு இல்ல மூட்டு தான் dislocate ஆகி இருக்கு. பயப்பட வேண்டியது இல்ல என்றாள். எட்வேர்ட் மனைவி சுபி வந்தாள்.

ராஜாவை பார்த்தவுடன் சத்தம் இல்லாமல் கண்ணீர் விட்டாள். அண்ணே இவருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று புலம்பினாள். எட்வேர்ட் மயக்கத்தில் இருந்தான். சுபியிடம் ராஜா பயப்படும் படி ஒன்றும் இல்லை என்றான் ராஜா.

ஏற்கனவே பரபரப்பாக இருந்த மருத்துவமனை சிந்து வந்தவுடன் மேலும் பரபரப்பாக இருந்தது. டாக்டர் என்றாலே ஒரு வித மிடுக்கு வந்து விடுகிறது. அதுவும் கூட்டம் சேரும் டாக்டர் என்றால் நிமிர்வு தான். வேகமாக வந்தாள் வெண்மையில் கருப்பு பூக்கள் போட்ட ஆடையில் வந்தாள். அவளுடன் அவளுடைய உதவி மருத்துவர்கள் போல இரண்டு பேர் வந்தார்கள். மாமா என்று ராஜாவின் கைகளை பிடித்து கொண்டே எட்வேர்ட் இருக்கும் Casuality சென்றாள்.

சிந்து அம்மாவை போலவே அவளும் கைகளை இருக்க பற்றினாள். மாமா என்ன டல்லா இருக்கீங்க. எட்வேர்ட் எழுந்து உட்கார்ந்தான். சார் ஒன்றும் எலும்பு முறிவு இல்லை மூட்டு தான் நழுவி இருக்கு. membrane ஐ Check பண்ணணும் அதை பிறகு பார்த்துக்கலாம். சிந்து நர்சை பார்த்தாள். நர்சு உடனே எல்லோரையும் வெளியே அனுப்பினாள்.

ராஜாவும் நகர்ந்தான். சிந்து மாமா நீங்க இருங்க. சிந்து எட்வேர்ட் டிடம் இப்ப கை மூட்டை சேர்க்க போறோம் கொஞ்சம் Support பண்ணுங்க பயப்படாதீங்க. ஒரு மருத்துவர் எட்வேர்ட்டை பிடித்து கொண்டார்.

இன்னொரு மருத்துவர் கட்டிலில் ஏறி நின்று கொண்டு ஒரு துணியை எட்வேர்ட் கையில் குறுக்காக போட்டு ஒரு குழந்தையை தொட்டிலுடன் தூக்குவது போல் லாவகமாக தூக்கி விலகிய மூட்டை சேர்த்து விட்டார். சிந்து உடனே கட்டு போடுங்க மறுபடியும் எக்ஸ்ரே எடுக்கணும் என்றாள்.

எட்வேர்ட் டிடம் சிந்து கட்டு போட்டவுடன் வந்து பார்க்கறேன். பார்த்தவுடன் வீட்டுக்கு போகலாம். சுபியை பார்த்து சிந்து சிரித்து கொண்டு பயப்படாதீங்க உட்காருங்க. மாமா வாங்க என்றாள்.

அவங்க பார்த்து பாங்க. சுஜா நின்று கொண்டு இருந்தாள். சிந்து சுஜாவிடம் எல்லாத்துக்கும் காபி கொடு. எந்த பீஸ்சும் எதுவும் வாங்காத சரியா. மருந்தும் நீயே வாங்கி கொடு. கட்டு போட்ட உடனே கூப்பிடு. சிந்து ஒவ்வொரு நோயாளியாக பார்த்து கொண்டே இருந்தாள்.

சுஜா சிந்துவிடம் மேடம் கட்டு போட்டாச்சு என்றாள். சிந்து எக்ஸ்ரேவை பார்த்தாள். மூட்டு நல்லா சேர்த்து இருக்கு என்று சிறு புன்னையுடன் வீட்டுக்கு போலாம் என்றாள்.

இரண்டு வாரத்திற்கு பிறகு வாங்க. எந்த வேலையும் செய்யாதீங்க. ஓய்வில் இருங்க என்றாள்.

ராஜா எட்வேர்ட் டிடம் நாகு ஆட்டோவில் வீட்டுக்கு போங்க இந்த வேலைய வீட்டுடு நமக்கு வேண்டாம். சுபியும் ஆமாம் அண்ணே என்றாள்.

எட்வேர்ட் Thanks என்றான். ராஜா நாளைக்கு வந்து பார்க்கரேன் என்றான்.

நம்மிடம் உள்ள எல்லா மகிழ்ச்சியும் மருந்துமனைக்கு செல்வதற்கு முன்பு வரை தான். நாகுவின் ஆட்டோ சாரளில் நனைந்த படியே தெற்கு நோக்கி தென்றலுடன் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *