கைத்தொழில்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாம் உயிரோடிருந்து நலமுடன் வாழ்வதற்கு வேண் டிய பொருள்கள் மண்ணிலிருந்தே உண்டாகும்படி கட வுள் உலகத்தைப் படைத்திருக்கின்றார். ஆனாலும், அப் பொருள்களை நாம் உழைத்துப் பண்படுத்திக்கொள்ளாமல் பயன்படுத்த முடிகிறதில்லை; மேலும் அவை போதுமான அளவு காணப்படுவதுமில்லை. நெல்லை முளைக்கப்டோட்டு வளர்த்துக் கதிர்களை அறுத்துக்கொள்ளவேண்டும். கனிப் பொருள்களைத தோண்டியெடுத்து வேலை செய்து கட்டு முட்டுகளாகச் செய்துகொள்ளவேண்டும். நாரும், மயிரும், பஞ்சும் ஆகிய இவைகளை நூற்றெடுத்துத் துணிகளாக நெய்துகொள்ளவேண்டும். இவ்வாறு உழைத்து வேலை செய்தால்தான் மக்களுக்கும், நாட்டுக்கும் செல்வம் உண் டாகும். மக்களால் வேண்டப்படும் ஊண், உடை ஏனைய உதவிப் பொருள்கள் எல்லாம் அவர்களின் உ உழைப்பினா லேயே அடையப்படவேண்டும். உழைப்பில்லாத மக்களின் வாழ்க்கை கேடுகெட்டதாகும்; அவர்கள் நல்ல ஊண் உடையில்லாமல் வறுமைக்கு ஆளாவர். மேலும் அவர்கள் எதிர்காலத்துக்கென்று ஒன்றும் சேர்த்துவைக்க முடியாமல் பட்டினி கிடந்து வருந்தி உயிரிழப்பர்.

உழைப்பாளிகளே உயர்வாழ்வடைவர்; உழைப்பாளி கள் பயிர் செய்வர்; ஆடுமாடுகள் வைத்துக் காப்பர்; குடி யிருக்கத் தங்கள் வீடுகளைத் தாங்களே கட்டிக்கொள்வர்; அயல்நாட்டுப் பொருள்களைக் கப்பலில் கொண்டுவந்து பயன்படுத்துவர்; தம் நாட்டின்கண் பொருள்களை உண்டு பண்ணி அயல் நாட்டுக்கனுப்புவித்துப் பெருவாணிபர் ஆவர். உழைப்புடை மக்கள் வாழும் நாட்டில மக்கள் நிறைந்து பொருள் பெருகி மகிழ்வுடன் வாழ்வர். மனத் தினாலாவது உடம்பினாலாவது உழைத்து வேலை செய்யாத வன் உடல்நலமடைந்திரான்; மனமகிழ்வு கொண்டிரான். உடல் நலத்துக்கும் மனத்திடத்துக்கும் தக்கபடி அளவாக உழைக்கவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் மக்கள் உடலா லும், மனத்தாலும் நோயடைவர். அது சோம்பேறித் தனத்தின் நினைவைக் காட்டிலும் மிக்க கேட்டைத் தரும். பகலிரவு (அறுபது நாழிகையில்) மூன்றிலொரு பங்கு வேலைமேலிருந்தாற் போதும். மிகுந்த நேரம் ஓய்வு நேரமே.
1. நிலக்கிழவனும் அவன் மைந்தரும்
ஒருவனிடம் நல்ல வயல்நிலம் ஒன்று இருந்தது. அவன் நாட்க ளெல்லாம் தன் வயலிலேயே பயிர்த்தொழில் செய்துவந்தான். அவனுக்குக் கிழப்பருவம் வந்தது; அவன் சாகுந் தறுவாயிலிலிருந்தான். தன் பிள்ளைகளும் பயிர்த்வொழிலையே செய்து வாழவேண்டுமென்னும் எண்ணம் அவனுக்குண்டு. அத்தொழிலில் அவர்களை ஊக்குவிக்க வேண்டி ஒரு தந்திரஞ்செய்தான்; அவன் அவர்களைத் தன் படுக்கையறைக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு அவர்களை நோக்கி, எனக்கிருக்கும் சொத்தெல்லாம் என் வயலே; அதனை உங்கட்கெல்லாம் பொதுச் சொத்தாக வைத் திருக்கிறேன். அஃது உங்கள் கையை விட்டுப் போகக்கூடாது. இவ்வயலில் ஓரிடத்தில் யான் ஒரு புதையல் வைத்திருக்கின்றேன். அஃது அங்கு தரைக்குக் கீழ் ஓரடி யாழத்தில் எங்கேயோ இருக்கின்றது; நினைவில்லை, எனறு சொன்னான்; பிறகு, சிலநாட்களில் விண்ணுலகு சென்றான்.
பிள்ளைகள் யாவரும் தந்தை உயிர்விட்டவுடனே புதையலைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டனர். வயலில் அப்புதையலை யடைய நிலங்களையெல்லாம் ஓரடியாழம் வெட்டித் தோண்டிப் பார்த்தனர். புதையலைக் கண்டாரில்லை. ஆயினும் அவ்வாண்டில் அவ்வயலை உழுது பயிர் செய்தனர்: பயிர் செழித்து வளாந்து பருத்து நீண்ட திர்கள் விட்டன. அவை பின் விளைந்தன. அவற்றை அறுவடை செய்து அடித்துத் தூற்றினர். நெல்லில் பதர்கள் என்பதே காணவில்லை. கண்டுமுதல் நெல்லோ அம் பாரம் அம்பாரமாகக் குவிந்து விட்டன! அதுவே உண்மையான நீடித்த புதையலாயிற்று.
2. பெருநிலக் கிழவன்
இத்தாலி நாட்டில் பெருநிலக் கிழவன் ஒருவன் இருந்தான். அவனுடைய வயல் அளவுக்கு மிஞ்சின செழிப்புக்கொண்டு கண் கவரத்தக்க நேர்த்தியும் அழகும் படைத்திருந்தது. இது மற்றமுத லாளிகளுக்கு மட்டற்ற பொறாமையை உண்டுபண்ணிவிட்டது. இதனால் அவர்கள் உழவனை ஒரு மந்திரக்காரன் என்று நினைத்து நீதிமன்றத்துக்கு இழுத்துவிட்டார்கள். அவன் தன் உடலுர முள்ள பெண்ணையும், தன்னுடைய ஆடுமாடுகளையும், பயிர்த் தொழில் கருவிகளையும் உடன்கொண்டு நீதிமன்றம் சென்றான். நீதித்தலைவர் உழவனைக் கூப்பிட்டு வழக்கின் செய்திகளைக் கேட்க அவன், ‘ஆண்டவரே, இதோ பாருங்கள் என்னுடைய பெண் இவள் அவ்வப்போது வயலில் முளைக்கிற களைப் புற்களையெல் லாம் ஒன்றுவிடாமல் பிடுங்கிப் போட்டுவிடுகிறாள்; இதுவே நாள் முழுவதும் அவளுக்குண்டான வேலை; அவ்வப்போது நிலங்களுக் குத் தக்க உரங்களை ஆராய்ந்தறிந்து சேர்த்து நிலங்களிற் பெய்து வைக்கின்றேன். இதோ நீங்கள் காணும் என்னுடைய கருவிகளை யெல்லாம் அவ்வப்போது பழுது பார்த்துச் சிறந்த நிலைமையில் வைத்துக்கொண்டிருக்கிறேன். இதோ பாருங்கள் என் னுடைய ஆடுமாடுகள். இவைகளை அன்றாடம் குளிப்பாட்டி நல்ல இரை கொடுத்துப் பருத்துக் கொழுத்திருக்கச் செய்கின்றேன்; மேலும் மாடுகளிடம் அளவாக வேலை வாங்கிக்கொள்கின்றேன் இவை தாம் என்னுடைய வயலில் யான் செய்யும் மந்திர தந்திரங்கள். எங்களைப்போலவே இப்போது வழக்குக் கொண்டுவந்திருக்கும் முதலாளிகள் செய்துகொள்வது கூடாத காரியமன்று, எளிதே யாகும். இவ்வாறே அவர்கள் என்னைப்போல் வியப்புக்கொடுக்கும் வயற்பலன்களையெல்லாம் அடையலாமே!” என்றான்.
நீதித் தலைவர் உழவனின் கைத்தொழில் திறமையை மெய்ச்சி வழக்கைத் தள்ளுபடி செய்தவிட்டார்
3. முயற்சியுடைய கிளாரிகன்
ராணி நாட்டில் கிளாரிகன் என்னும் ஒரு தச்சுவேலைக் காரன் இருந்தான். அவன் ஒருநாள் நீதிமன்றத்துக்கென்று ஒரு விசிப்பலகை செய்தான். அவன் அஃது இருக்கும் இடத்தைமட்டப் படுத்தி மிருதுவாக்கப் படாதபாடுபட்டுழைப்பதைப் பார்த்து எல் வோரும் நகை செய்தனர். அவர்களைப் பார்த்து அத் தச்சு வேலைக்காரன், ”ஐபன்மீர், இதனை யான எனக்காகவே செய்கின் றேன்; இதன்மேல் உட்காரும் உரிமையை அடையாமல் யான் சாகமாட்டேன்,” என்றான். அவன் மனம்டோலவே அது முடிந் தத; வ்வாறெனில் அவன் விடாமுயற்சி கொண்டவன்; மேலும் உண்மையும் மரியாதையும் அன்பு மன மும் உடையவன. இத்த கைய முயற்சிகளின் மூலம் அவன் படிப்படியாகப் பிறரிடம் சார்ந் திருக்கும் நிலைமையை நீக்கிக்கொண்டு நேர்மையான அரைகுறை யற்ற தற்சார்பு நிலைமை பெற்றுக்கொண்டான் அவனுக்குச் செவப் பெருக்கோடு குணத்தூய்மையும் செம்மை நிலைமையில் அமைந்துவிட்டது பிரகு சில நாட்களுக்கெல்லாம் அவன் நீதி மன்றத் தலைவனாய்த் தான் பண்படுத்திய அந்த விசிப்பலகையின் மேலே வீற்றிருக்கத்தக்க சிறப்பு நிலைமை அடைந்த பின்னரே உலக வாழ்க்கையை நீத்தான்.
4. பென்ஜமின் பிராங்க்ளின்
வட அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மெழுகுவர்த்திசெய்து வாழ்ந்துவந்த ஒருவனுக்கு மகனாகப் பிறந்தான் பென்ஜமின் பிராங்க்ளின். குடும்பமோ ஏழைக் குடும்பம் அவனைத் தந்தை யார் அச்சக வேலைசெய்ய விட்டிருந்தார். நூல்களைப் படிப்பதில் அவனுக்குப் பேரவா அவன் வருவாயில் மிச்சப்படுத்திச்சேர்த்த பணத்தையெல்லாம் புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவு செய் தான். ஆனாலும், அவன் ஒருபோதும் அச்சகவேலையைப் புறக்கணிக்கவில்லை. அவன் வீண்காலப் போக்குச் செய்யாமல் சிக்கனமாக வாழ்ந்து வந்தான்.
பிறகு அவன் பிலடெல்பியாவுக்குச் சென்று கீமர் என்னும் அச்ச சசுக்காரனிடம் சிலகாலம் வேலை செய்திருந்தான். அவன் கருத் தும் திறமையுங்கொண்டு சிறந்த மொழிநடை எழுதப் பழக்கங் கொண்டுவிட்டான். அவன் எழுதியிருந்த ஒரு கடிதத்தைக்கண்டு அம்மாகாணத் தலைவரே அவனை மெச்சிக்கொண்டார்.
அதன் பிறகு பிராங்க்ளின் இலண்டன் நகர் சென்று அங்குச் சில நாட்கள் பற்பல அச்சகக்காரரிடம் வேலைசெய்து வந்தார். அங்கும் அவர் சிக்கன வாழ்க்கையை மேற்கொண்டு மிகு பணம் சேர்த்துக்கொண்டார். அவர் தம் இருபதாம் அகவையிலேயே செய்தொழிலில் வல்லவராகவும் செல்வத்தில் மிக்கவராகவும் மதிக்கப்பட்டு வந்தார். அவர் மறுபடியும் பிலடெல்பியாவுக்கே திரும்பிவந்து பழைய தலைவராகிய கீமருடனேயே கூட்டாக ஓர் அச்சகம் ஏற்படுத்திக்கொண்டார். அச்சகத்து வேலைகளைப் பார்த் துக்கொண்டே ஒவ்வொரு நாளும் ஒரு பக்கத்துக்குக் குறையா மல் அச்செழுத்துக்கள் பொறுக்கி அடுக்கிக் கொடுத்துக்கொண்டு வந்தார் பிராங்க்ளின் விடா முயற்சியையும், உண்மைத் தன்மை யையும், தவறுபடாத நடக்கையையும் கண்ட அக்கம் பக்கத்தா அளவு படாத அச்சு வேலைகளை அவரிடமே கொடுத்துக்கொண்டு வந்தனர். இப்படியிருக்க அவருக்குச் செல்வக் குறைவுண்டோ!
இவ்வாறானாலும் அவர் எளிய உடையே உடுப்பார்; சிக்கன வாழ்க் கையே செய்வார் அவர் சில வேளைகளில் தம் அலுவலகத் துககென்று வாங்கிய தாள் கட்டுக்களைத்தாமே வண்டியில்வைத்து இழுத்துக்கொண்டு போவார் இவைகளால் அவர்தம் செல்வத்தி னால் ஆரவார வாழ்க்கையை மேற்கொண்டாரில்லை என்பது அறி யக்கிடக்கின்றதல்லவா?
அவர் பிறகு ஒரு செய்தித்தாள் ஒன்று வெளிப்படுத்தலானார். முற்சூழ்ச்சியுடனும் திறமையுடனும் அத்தாளை நடத்திவர, ஆயிரக்கணக்கான மக்கள் அத்தாளை வாங்கிப் படித்து அதற்குப் பெருந்துணை புரிந்துவந்தனர்.
அதன் பிறகு பிராங்க்ளின் கடையொன்றுவைத்து அதனில் காகிதத்தாள், எழுதுகோல், சிறு கத்திகள் முதலியவைகளை வைத்து வாணிபம் செய்துவந்தார். அதனுடன் கையொப்ப நூல் நிலையம் ஒன்று நிறுவி அதன்மூலம் (Poor Richerd Almanac) என்ற ஆண்டுத்தாள் ஒன்றை வெளிப்படுத்தி வந்தார். அத்தாளில் முற்சூழ்ச்சி கற்பிப்பதும், அறிவகலச் செய்வது மாகிய பொருள்களைப் பற்றி எழுதி வந்தார். மேலும் பற்பல சிறந்த பொருள்கொண்ட முதுமொழிகளையும் அதனில் தந்து வந்தார்.
பற்பல அலுவல்களால் பென்ஜமின் உடலுழைப்பிலும் மனக் கவலையிலும் ஈடுபட்டிருந்தபோதிலும் அறிவு வளர்ச்சிக்கு அவருக்கு நேரங்காணாமற் போகவில்லை. அவர் முப்பதாமகவை எய்து முன்னரே நாட்டாரெல்லாராலும் நன்கு மதிக்கப்பட்டார். சின்னாட்களில் பென்ஜமின் மாகாண சபையில் ஓர் உயர்நிலை யடைந்து, அடுத்த ஆண்டிலேயே அஞ்சல் நிலையத் தலைவராயினர். அரசாங்கத்தில் உயர்நிலை பெற்றிருந்தபோதிலும தம் வல்லமை யையும் திறமையையும் தம்முடன் மக்களை உயர்த்துவதிற் பயன் படுத்தவேண்டுமென்பதை அவர் மறந்தாரில்லை. மக்களின் அறிவு வளர்ச்சிக்கென்று கலையறிவுக் கழகங்களையும், கல்லூரிகளையும் நிலைநாட்டி வைத்தனர். அவர் இதுவேயன்றி இடரால் தீயினால் நேரும் கேடுகளுக் ஈடுபடுத்தக் கேட்டீடு கூட்டச்சாலைகளையும் மக்களின் நன்மைக்கென்று நிறுவி நடக்கச் செய்தனர். சுருங்கச் சொல்லின் மாகாணத்தின் பொது நன்மைக்கான அலுவல்களை யெல்லாம் இவரே முதனின்று நடத்துவித்தார்.
இதன் பிறகு இவர் கலையறிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். உராய்தலால் உண்டாகும் சூடும், மின்னற்சூடும் ஒன்றேயென்று முதன்முதல் கண்டுபிடித்து அறிவித்தவர் பிராங்க்ளினே. அது முதல்தான் அவ்வாற்றல் மின்சாரம் என்று பெயர் பெற்றது. கலை யாராய்ச்சியிற் கண்ட இப்பயனால் இவர் பெயர் ஐரோப்பாவெல் லாம் ஓங்கி உலகெங்கும் பரவிற்று. அமெரிக்காவின் தன்னுரி மைப் போராட்டத்தில் இவர் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். இதன் பிறகு இவர் இங்கிலாந்தின் அரசப்பெருந் தூதராக பிராஞ்சு அரசர் அவையில் வீற்றிருந்தார். ‘வேலையில் விடா முயற்சியுள்ளவன் அரசர் முன்னே நிற்பான்’ என்னும் பழ மொழிக்கு இவர் தக்க எடுத்துக்காட்டாயினர். பென்ஜமின் பிராங்க்ளின் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து எளிய வேலையில் அமர்ந்து தமது விடாமுயற்சியால் பெரிய வேலைகளைச் செய்து அறிவையும் வளர்த்துக்கொண்டு அரசராலும் மதிக்கப்பெற்றுச் செல்வத்திலும் செல்வாக்கிலும் மிகுந்து சீரும் சிறப்பும் பெற்றது எல்லா மக்களாலும் இயலுவதொன்றாகுமோ ! இத்தகைய தனிப் பெருமை இவர்க்கே உரியது. பென்ஜமின் பிராங்க்ளின் எவ்வாறு உலகில் முதன்மைப்படி யேறினார் என்பதை அவர் தாமே தம் இலக்கியங்களில் தெரிவித்திருக்கின்றார். அஃதாவது, “செல்வம் சேர்ந்தார்க்கு வழி, கடைக்குப் போவதேபோல் யாவருமறிந்ததே. அஃது இரண்டே மொழிகளில் அடங்கியிருசகின்றது. விடா முயற்சி; சிக்கனம் என்பவையே. இதன் பொருள் என்ன? காலத்தை வீண் போககாதே ! பணத்தைப் பாழாக்காதே ! இவ் விரண்டையும் சிறந்த வழிகளிற பயன்படுத்திக்கொள். இவ்விரண்டு மின்றி ஒன்றுமாகாது; இவைகள் உண்டேல் எல்லாமாகும். இவ்விரண்டுக்கும் இரண்டாவது ஈச்செயலிலும் நேர்ந்த வறுமை, நேர்மை மறவாமை ஆகிய இவையேயன்றி வேறொன்றில்லை. விடாமுயற்சிக்கே கடவுள் எல்லாம் அளக்கின்றார். இன்றுள வேலையை இன்றே செய்துமுடி. ஏனெனில் நாளைக்கு நேரும். தடைகளை யாமறியோம். நீ ஒரு வேலைக்காரனாக இருந்தால் நீ சோம்பியிருக்கத் தலைவர் கண்டால் அஃது உனக்கு மானக் கேடல்லவா! உனக்குத் தலைவன் நீயே என்று அறிந்தால் அஃது உனக்கு மானக்கேடென்று நீ அறிவாய்.
5. வேலையின் இன்றியமையாமை
யாருக்கும் வேலையென்பதொன்று கட்டாயம் இருந்தே தீர வேண்டும். இன்றேல் அவர்களுக்கு அறிவும் ஐம்பொறிகளும் பய னற்றுப்போய்விடும். ஒரு காலத்தில் பிரான்சில் ஒருவன் பாஸ்டில் சிறைச்சாலையில் ஏழு ஆண்டுகள் அடைபட்டுக்கிடந்தான். அங்கு அவனுக்கு வேலை செய்வதற்கு ஒன்றும் இலை. அவன் அறை யில் ஒருநாள் பல குண்டூசிகள் அவனுக்குக் கிடைத்தன. அவன் அவைகளை எடுத்து அறையில் சிதறிப்போட்டு மறுபடியும் அவை களைப் பொறுக்கிச் சேர்ப்பான். இப்படிச் சில நாட்கள் செய்து வந்தான். நாட்களாகவாக அவனுக்கு அவ்வொரே நிலைமையான வேலையில் வெறுப்புத் தோன்றியது. பிறகு சிதறிச் சேகரித்த குண்டூசிகளைக் கொண்டு பற்பல உருவங்களாக அடுக்கிப் பார்த் துக்கொண்டிருந்தான். இப்படியே அவன் சிறைச்சாலை வாழ்க்கையைக் கழித்துக் கொண்டான். அவன் வெளிப்பட்டுத் தன்னூர்க்கு வந்திருந்தபோது அவன் தன் நண்பர்களிடம் யான் அவ்வாறு ஒரு வேலை கண்டு செய்திராமற்போனால் எனது ஐம்புல அறிவை முற்றும் இழந்தேயிருப்பேன்,” என் ன்று சொல்லிக் கொள்வான்.
ஸ்பினோலாவும், வியரும்
க. ஸ்பினோலா :-வியரே! உம் தமையனார் எதனால் இறந்து போனார்?
வியர்:- அவர் வேலையில்லாமையினால் இறந்துபோனார்.
ஸ்பினோலா:- எந்த வீரனையுங் கொல்ல அஃதொன்று போதுமே !
உ. சோம்பேறியே! எறும்பினிடத்துக்குப்போ! அறிவுள்ளவனாகு! எறும்புக்கு வழிகாட்டியில்லை ; மேற் பார்வைக்காரன் இல்லை; ஆள்வோனில்லை. ஆயினும் அது வேனிற்காலத்தில் இறைச்சி உணவு தேடி வைத்துக் கொள்ளுகிறது; அறுவடை காலத்தில் நெல் உணவைச் சேகரித்துக்கொள்கிறது.
ங. விடா முயற்சியுடைய ஒருவனை நீ கண்டிருக்கி றாயா? அவன் அரசன் முன்னிலையிலே நிற்பான்; அற்பர் முன்னிலையில் நிற்கமாட்டான்.
-பழமொழிகள்
ச. நாம் ஒன்றுங்கொடுக்காமல் ஒருவன் சோற்றைத் தின்கிறதில்லை. பாடுபட்டு உழைத்துவநத உணவையே உட்கொள்வோம், ஒருவனுக்கும் கடமைப்பட்டிருக்கமாட் டோம். எவன் வேலை செய்யவில்லையோ அவன் உணவை விரும்பக்கூடாது. – பவுல்
ரு. சுறுசுறுப்புள்ள தேனீக்கள் நாளெல்லாம் பறந்து பறந்து ஓடி, பூப்பூவாக நடி, தேனைத்தேடிக்கொண்டுவந்து தம் கூட்டில் சேர்த்து வைக்கின்றன பார்!
சு. உழைப்பிலும் திறமையிலும் யான் அத்தேனீக் கள் போலவே இருக்க விரும்புகின்றேன்.
எ. சோம்பேறியினிடத்தில் சாத்தான் இருந்து கொண்டு குறும்புகள் செய்கிறான். புத்தகத்திலும், வேலை லும், விளையாட்டிலும் என் காலத்தை நல்லதாகவே கழிப்பேன். யான் கடைசிக் காலத்தில் நாட்கணக்குக் கொடுக்கவேண்டுமல்லவா? -வாட்ஸ்
உலகின் கண் பேர்பெற்ற மக்களெல்லாம் தத்தம் உழைப்பினாலேயே பேரெடுத்திருக்கிறார்கள். அவர்கள் அறிவிலும் நடக்கையிலும் வெவ்வேறு வகைப்பட்டவர்களா யிருந்தபோதிலும், அவர்களுக்கெல்லாம் உழைப்பே அடிப் படையாய் நின்றிருக்கின்றது. அவர்களில் எத்தனைபேர் எத்தனை நாள் பட்டினிகிடந்து வருந்தியிருக்கின்றார்கள்! அவர்கள் எத்தனைபேர் உறக்கமின்றி ஊறுபட்டிருக்கின்றனர்! எத்தனைபேர் போர்க்களங்களில் எவ்வளவு நாட்கள் கழித்திருக்கின்றனர்! எத்தனைபேர் மந்திரிகளாக இருந்து கவலையுடன் நாட்டுக்கு நன்மை தேடியிருக்கின்றனர் ! எத்தனைபேர் நீதி மன்றத்திலிருந்து இரவும் பகலும் மனத் தால் உழைத்து நாட்டில் நன்னடக்கையை நிலைநாட்டி இருக்கின்றனா ! அவர்கள் தங்களுக்கு உதவியாளர்களாக எத்தனை பேர்களை வைத்துக்கொண்டிருந்தனர் – சுருங்கச் சொல்லின் அவர்களெல்லாம விடா முயற்சியுடன் உழைத்த வர்களே. வரலாற்று நூல்களில் இவைகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டுக்கள் எத்தனையோ காணப்படும். -ஆன்வெல்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |