குறை – ஒரு பக்க கதை





சரிதா டாக்டர் முன் அமர்ந்திருந்தாள்.
”உங்க இரண்டு பேருடைய ரிசல்டும் வந்திருச்சும்மா..மிஸ்டர் பரிதிகிட்டேதான் குறை…ஸாரி, அவரால அப்பாவாக முடியாது!”
அதைக் கேட்டு சரிதா கொஞ்சம் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
”டாக்டர், எனக்காக நீங்க ஒரு உதவி செய்யணும்..” என்றாள் மெல்லிய குரலில்.
”சொல்லும்மா!”
”மேடம், இதை என் ஹஸ்பெண்ட்கிட்டே சொல்ல வேணாம். குற்ற உணர்ச்சியில் அவர் சங்கடப் -படுவதை என்னால தாங்கிக்க முடியாது. அதனால, என்கிட்ட குறை இருக்கற மாதிரி
அவர்கிட்டே சொல்லிடுங்க…ப்ளீஸ்! எனக்காக இந்த உதவியை நீங்க செய்யணும்!
மறுநாள்..
டாக்டரைப் பார்க்க பரிதி வந்திருந்தான். ”என்ன டாக்டர்…நான் சொன்னமாதிரியே…என் வொய்ப்ஃகிட்டே சொன்னீங்களா? அதை நம்பிட்டாளா? அவகிட்டேதான் குறைன்னு தெரிஞ்சா துடிச்சுப் போயிடுவா! சொல்லுங்க டாக்டர், நீங்க சொன்னதை நம்பிட்டாளா?
சரிதா சொன்னதை டாக்டர் சொல்ல…பரிதி நெகிழ்ந்தான்!
– எஸ்.எஸ்.பூங்கதிர் (28-12-09)