காளை மாடு கன்று போட்டது




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ரெண்டு வேரு இருந்திருக்காங்க. ரெண்டு வேரு வீடும் எதுக்க – எதுக்க இருக்கு. ரெண்டு வேரும் சினேகிதமா இருக்கயில, ஒருத்த வீட்ல இருக்ற பண்டத்த, ஒருத்த எடுத்துப் புழங்கிக்கிருவாங்க.
ஒருநா, ரெண்டு வேருக்கும் சண்ட வந்திருச்சு. அவ் வீட்டுக்கு, இவ் போறதில்ல. இவ் வீட்டுக்கு, அவ் போறதில்ல.
ஒருத்தி வீட்ல மாடு இருக்கு. இன்னொருத்த வீட்டுல மாடு இல்ல அப்ப: சாணி கூட எடுத்து, வீடு மொழுக முடியல. மாடு இல்லாதவ், எப்படியாவது ஒரு மாடு புடிக்கணும்ண்டு நெனக்கிறர்.
அண்ணக்கி விடியங்காட்டில எந்திருச்சு, ஒரே நோக்கமா, மாடு புடிக்க, வடக்குத் தெசய நோக்கிப் போறா.
போயி -, ஒரு மாடு புடுச்சுக்கிட்டு நடந்தே… வாரா. வரயில, பட்டாணிக் கள்ளய (கடலை) வாங்கி மடியில கட்டிக்கிட்டு, திண்டுக்கிட்டே வரா. வரபாதையில, ஒரு கொளம் இருக்குது. அந்தக் கொளத்துக் கரமேல ஒரு நரி நிண்டுகிட்டு, அண்ணே! கொஞ்சம் பட்டாணிக் கள்ள குடுண்டு நரி கேக்குது .
கேக்கவும், வக்காலோளி நரிக்கு, மப்பப் (திமிர் ) பார்ராண்டு, கல்ல எடுத்து எறிஞ்சா. எறியவும், இப்ப எறியிரயா? எறி. ஒரு நாளக்கி, எங்கிட்ட வருவண்ட்டு, நரி ஓடிப் போச்சு. நேரா வீட்டுக்கு வாரர். வீதில, காடி போட்டுப் பசு – மாட்டக் கட்டி வச்சர். அப்ப எதுத்த வீட்டுக்காரனும், தன்னோட காளமாட்ட, வீ தியில காடி போட்டுக் கட்டி வச்சிருக்கா.
ஒருநா ராத்ரில், இவ் பசுமாடு ஈண்டுகிருச்சு. எதுத்த வீட்டுக்கார என்னா செஞ்சாண்டா, கண்டு குட்டியப் புடுச்சுட்டுப் போயிக் காளமாட்டுக்கிட்ட விட்டுட்டா. விடிஞ்சு வந்து பாக்கயில், காள மாட்டுக்கிட்ட கண்டுகுட்டி இருக்கு. இருக்கவும், எங் காளமாடுதர் குட்டி போட்டுச்சு. காளமாடுதர் குட்டி போட்டுச்சுண்டு காளமாட்டுக்கிர சொல்றா. இல்ல! எம் பசுமாடுதா குட்டி போட்டுச்சுண்டு, பசு மாட்டுக்கார சொல்றா.
ரெண்டு பேருக்குள்ள தகராறு ஆகி, சண்டைகளாகி, விவகாரம், ஊர்ப் பஞ்சாயத்துக்கு வந்துருச்சு. பஞ்சாயத்துல, எல்லாரும், காள மாட்டுக்காரனுக்கு சார்பாப் பேசுறாங்க. பசு மாட்டுக்காரனுக்கு ஆளில்ல. காள மாடுதா குட்டி போட்டிருக்குகண்டு சொல்றாங்க. ஆனா – பசு மாடுதர் குட்டி போட்டது. எல்லாம் அவனுக்கு சார்பா பேசவும், பேசுறதுக்கு, இவனுக்கு ஆள் இல்லாமப் போச்சு.
சாட்சிக்கு ஆளுக தேடி அடுத்த ஊருக்குப் போறர். போற வழில, அந்த நரி ஒக்காந்திருக்குது. ஒக்காந்துகிட்டு, அண்ணே!! எங்க போறண்டு கேட்டுச்சு.
எம் பசுமாடு கண்டு போட்டுச்சு. அந்தக் கண்டு போயி, காளமாடுகிட்ட நிண்டிருந்திச்சு. நிக்கவும், எல்லாரும் காளமாடுதா குட்டி போட்டுருக்குண்டு சொல்றாங்க. பசுமாடு குட்டி போட்டுருக்கும்ண்டு, ஒருத்தங் கூடப் பேச மாட்டேங்குறாங்கண்டு, நரிகிட்டச் சொல்றா.
அப்ப நரி சொல்லுது, அது யாருடா? காளமாடு கண்டு போட்டதுண்டு சொல்றது. சரி: அண்ணே!! நீ போ, நாளாக்கிப் பஞ்சாயத்துக்கு நீர் வரே. நிய்யி போயி, அந்த ஊர்ல இருக்கிற நாய்களப் புடுச்சுக் கட்டிப் போடச் சொல்லுண்டு சொல்லிட்டு, அவன ஊருக்குப் போகச் சொல்லிருச்சு.
திரும்பி வீட்டுக்கு வாரர். வந்து, ஊர்ல போயி, நரி பஞ்சாயத்துக்கு வருது. பஞ்சாயத்த கூட்டுங்கண்டு சொல்றர்.
இவ் பேச்சக் கேட்டு, நரி பஞ்சாயத்துப் பண்ண வருதாம்ண்டு ஊரே உற்சாகமாகக் கூடியிருக்கு. நரி, பஞ்சாயத்துப் பண்றதப் பாக்க, ஊரே கூடியிருக்கு. ஆணும் பெண்ணுங் கெடக்குக.
அப்ப நரியக் காணோம். வரல, ரெம்ப நேரமாச்சு. ரெம்ப நேரங்கழிச்சுப் பையா நரி வருது. வந்து, பஞ்சாயத்து நடுவுல வந்து ஒக்காந்துச்சு. எல்லாம் பேசிக்கிட்டிருக்கயில, நரி ஒக்காந்த வாக்குல ஒரங்கிருச்சு.
வக்காலோளி நரி! பஞ்சாயத்துக்கு வந்திட்டு, ஒறங்குறதப் பாருடாண்டு, கூட்டத்ல ஒருத்த சொல்றா. சொல்லவும், நரி படக்குண்டு முழிச்சுக்கிருச்சு.
முழிச்சதும், யாருடா இவங்க சின்னப் பயக. “கடல்ல திய்யி புடுச்சு,நர், வரகம் வைக்கலப் போட்டு அணச்சுட்டு வந்திருக்கேண்டு, அசால்ட்டாச் சொல்லுது. சொல்லவும் என்னாடா! கடல்ல திய்யிப் புடிக்க, வரகம் வைக்கலப் போட்டு அமத்துச்சாம்ல்ல, வக்காலோளி நரி பொய் சொல்றதப் பாருடாண்டு, கசமுசண்டு கூட்டத்ல பேசுறாங்க. பேசிக்கிட்டிருக்கயில, தலவரு கையாட்டுனாரு. கையாட்டவும், கூட்டம் கப்ண்டு பேசாம இருந்திச்சு. அப்ப: தலவரு கேட்டாரு ஏ.. நரியே! கடல்ல எப்டித் திய்யிப் பிடிக்கும்? தண்ணியில போயி, திய்யிப் பிடிக்குமாண்டு கேக்குறாரு.
அப்ப நரி: சொல்லுது, கடல்ல திய்யிப் பிடிக்காது. உம்மதர். கடல்ல திய்யிப் பிடிக்காதபோது, காளமாடு எப்டியா கண்டு போடும்ண்டு கேட்டுச்சு.
ஒருத்தரும் ஒண்ணும் பேசல. ஆமா! காளமாடு எப்டி கண்டு போடும்? பசு மாடுதான் கண்டு போடும். ஆம்பள எப்டியா பிள்ள பெறுவாண்டு ஒருத்தனுக்கொருத்த பேசுறாங்க.
பேசி முடிச்சிட்டு, காளமாடு குட்டி போட்டிருக்காது. பசு மாடுதர் போட்டிருக்கும். அவ் பொய் சொல்றர். புடிங்க அடிங்கண்டு கூட்டம் எந்திருச்சுச்சு. கூட்டத்தோட கூட்டமா நரியும் எந்திரிச்சு, ஓடிப் போச்சு.
கண்டு குட்டிய புடிச்சு, பசுமாட்டுக்காரக்கிட்டக் குடுத்துட்டாங்க. தீராத பஞ்சாயத்த தீத்து வச்ச நரியண்ணன, எல்லாரும் பெருமையாப் பேசிகிட்டாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.