காலம் தாழ்த்தாதே
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 180
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஷோபாவின் ராஜஸ்திரீ சாலமோன் ஞானிக்குக் கொடுத்த வெகுமதிகளில் ஒன்று பச்சைக் கற்கள் பதித்த ஒரு பாத்திரம் ஆகும். ராஜஸ்திரீ பாத்திரத் தைக் கொடுத்தவுடன் சாலமோன் ராஜா ஒரு தைலத்தை அதில் ஊற்றி அடைத்து வைத்தாராம்.
அதில் ஒரு சொட்டு சாப்பிட்டால் சாகாமல் என் றுஞ் சீரஞ்சீவியாக வாழலாமாம்.
இதைக்கேள்விப்பட்ட துன்மார்க்க னொருவன் சாலமோனிடம் வந்து அத்தைலத்தில் ஒரு சொட்டுக் கொடுங்கள் என்று கேட்டான்,
‘நீ கொடிய துன்மார்க்கன், நீ சாகாமல் உயிரோ டிருந்தால் பிறருக்குக் கெடுதி: உனக்குக் கொடுக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார்.
நல்ல மனிதர்கள் பலர் வந்து கேட்டபோது; ‘ராஜா தூங்குகிறார், ராஜாங்க அலுவல்களில் ஈடுபட்டி ருக்கிறார்’ என்று அரண்மனை வேலைக்காரர்கள் சொல்லி அனுப்பிவிடுவது வழக்கமாகிவிட்டது. இவ்வாறே ஆண்டுகள் பல கடந்துவிட்டன.
கடைசியாக சாலமோன் வயதுசென்றவரானார். தைலத்தில் ஒரு சொட்டு சாப்பிட பாத்திரத்தைத் திறந்தார். பாத்திரம் காலி, ஒரு சொட்டுக்கூட இல்லை. அனைத்தும் ஆவியாகிவிட்டது.
உபயோகிக்க வேண்டிய காலத்தைத் தவறவிட்டு விட்டார். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவில்லை. எதற்கும் காலம் தாழ்த்தாதே!
“எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப் போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப் போட்டோம்.” [சங்கீதம் 90:9]
“நீங்கள் ஞானமற்றவர்களைப்போல் நடவாமல் நாட்கள் பொல்லாதவைகளானதலால் காலத்தைப் பிரயோஜனம் படுத்திக்கொள்ளுங்கள்”. [எபேசியர் 5:15-16]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
