காதலில் மாற்றம் ஒன்றே தீர்வு
கலைந்தோடும் வெண் மேகங்களுடன்
கலையாத அவளின் நினைவுகள் யாவும்
கார்மேகமாய் என்னுல்
சூழ்ந்து மழையாய் பொழிந்து
என் சுயநினைவை இழக்கவைக்கின்றதே!
அவளின் கண்பார்வை ஒன்றே
என் உலகம்.
காதல் எப்படி வரும் எதை பார்த்து வரும் என்று யாராலும் சொல்லமுடியாது உதாரணம் ஒரு செடியில் அறும்பு வளர்கின்றதென வைத்துக் கொள்வோம். அந்த வழியாக வரும் வண்டு பறவைகள் மற்றும் மனிதர்கள் வரையிலும் கவர்ந்திழுக்கும் அளவிற்கு அழகை தரும். இயற்கையாகவே மலர்களை வண்டுகள் காதலிக்கும். பூவில் உள்ள தேன்களை உணவாக எடுத்துக் கொண்டு அதன் மகரந்த துகள்களை மற்ற இடங்களுக்கு பரவச் செய்யும் இது அதன் இயற்கையின் நீதி.

ஆனால் இதுவே மனிதர்களின் பார்வையில் எவ்வாறாக இருக்கும்?
அவர்கள் மனதில் என்ன தோன்றும்?
ஏய் அந்த பூவ பாரேன் எவ்வளவு அழகாக உள்ளது என்று அதன் மீது ஆசை வைத்தாலும் அந்த மலரைக் கடந்துவிடுவார்கள். அதில் சிலர் அந்த மலர் எனக்கு மட்டுமே சொந்தமென்று அதனை பறிக்கவும் தயங்கமாட்டார்கள்.
மலரின் அழகிற்கும் மனிதர்களின் ஆசைக்கும் பறவை வண்டினத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால் “காதல்” ஒன்றே என்பேன்.
மலர் மீது மனிதர்களுக்கு வருவது ஆசை காதல் அதுவே பறவை வண்டினங்களுக்கு அது அவர்களின் பணி உணவு போன்றவையாகும்.
இவை அனைத்திருக்கும் தலைமை தாங்கி ஆசைகளை துறந்து தன் காதல் என்ற பாசத்தோடு இயற்கையும் எல்லா உயிர்களையும் வழி நடத்த வேண்டியது மனிதக்குலமான நமது கடைமையாகும். ஆனால் நாம் என்ன செய்கின்றோம்?
மனிதர்களின் உணர்வை மட்டுமல்லாம் எதையுமே நாம் பார்ப்பதில்லை மதிப்பதில்லை சிலரைத் தவிர. அதை பற்றி தான் கதையாக நாம் பார்க்கப் போகின்றோம்.
மனித உணர்வுகளின் கோளாறுகளை பற்றின காதல் கதையே இவை காதல் என்றாலே பெற்றோர்களுக்கு ஏன் அவ்வளவு பயம் வருகின்றதே ஏன்? என்று நண்பன் அருள் வினாவினார்?
அதற்கு மாதவ் சொன்னார்.
தோழரே அவர்களின் பயம் காதலில் மட்டுமல்ல காதலிப்பவனின் மதம் சாதி கலாச்சாரம் பற்றின பயமும் தான். நம் வீட்டுப் பெண் எப்படி எங்கே சென்று வாழும் அவர்களின் கலாச்சாரம் ஒத்துவருமா எவ்வாறு அவளை பார்த்துக் கொள்வார்கள் அவளின் வாழ்க்கை நன்றாக அமையாவிட்டால் என்னச் செய்வது விளையாட்டு பிள்ளை நமது கண்முன்பு கஷ்டப்பட்டால் அதை தாங்கிக்கொள்ள முடியாது எதுவாகினும் நமது விருப்படியே நடக்க வேண்டுமென்று தான் மதம் சாதி என்ற மனப் போக்கை அழமாக கையாளுகின்றனர் அதை தான் நீங்கள் பயம் என்கிறீர்கள்?
மாதவ் அப்படி என்றால் காதல் திருமணமே வேண்டாம் என்கிறீர்களா? சமத்துவம் காதலில் தொடங்கமாக அமையட்டுமே சாதி மதம் பார்த்தால் பிறகு எப்படி மனிதர்களை சமமாக பார்க்க முடியும்?
நீங்க நினைப்பதைப் போன்று அவ்வளவு எளிதான விஷயமில்லை காதல்?
காதல் திருமணத்தால் என்னென்ன நிழகப் போகின்றது என்றால்? எல்லாம் சாதியை வைத்து தான் நடக்கின்றது என்ற ஒற்றைக் கருத்துடன் முடித்துக் கொள்வதும் சரியாகாது. அதைத்தாண்டின பலச் சமூகப் பிரச்சனைகளையும் உள்ளடக்கியுள்ளது.
உதாரணத்திற்கு ஒரு காதலர்களின் கதையை சொல்கிறேன் கேளுங்கள்.
லதா ரகு இவர்கள் கல்லூரி வாழ்க்கையின் போதே காதலால் இணைந்துவிட்டார்கள் வேற்று மதம் என்றாலும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டார்கள் ஒரு கட்டத்திள்குமேல் நீ இல்லை என்றால் நான் இல்லையென்ற நிலைமைக்கே வந்து விட்டார்கள் எனினும் அவர்கள் அவசரப்படவில்லை.ல எதிலும் நிதானத்தை கடமைப்பிடிதார்கள் எதைச் செய்தாலும் சிந்தித்து செயல்படுமளவுக்கு பக்கவப்பட்டார்களாக இருந்தார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் இரு வீட்டிருக்கும் இவர்களின் காதலை தெரியப் படுத்துகிறார்கள். இதில் இரு வீட்டாருக்கும் உடன்பாடு இல்லை. இரண்டு குடும்பத்திற்கும் முதல் பிரச்சனை “மதம்” இரண்டாவது பிரச்சனை சாதி ஒன்றுக்கொன்று முறன்பாடுகளுடன் இருந்தது இதில் ஒன்றில் சமரசம் ஆனாலும் மற்றொன்று தடுக்கின்றது. இரு வீட்டாரையும் எவ்வாறு சமாதானம் செய்யவதுயென திகைத்தார்கள் அந்தக் காதல் ஜோடிகள்.
அதில் ரகு வீட்டார் மதநம்பிக்கையுடையவர்கள் என்றாலும் மனிதவுணர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்களின் நிலைபாடு மதம் என்பது அவரவர் நம்பிக்கை கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் அவர்களின் வாழ்வியல் முறை போன்றவற்றை ஆதாரமாக்குவது தான் ‘மதம்’. இதில் சாதி இரண்டாம் பட்சம் என்றாலும் கூட மதம் வேதையென்றால் வைத்துக் கொள்வோம் இல்லையேல் தூக்கி ஏறிந்துவிடோவோம் என்பார்.
இந்தமத உணர்களை யாராலும்விட்டுத்தர முடியாது ஆனாலும் மனிதர்களின் உணர்வைவிட மதச் சாதி உணர்வு பெரியதல்ல மனிதர்கள் அனவரும் சமம் என்று கருதுபவர்.
ஆனால் லதா குடும்பத்தார் இதற்கு நேர் எதிர்.
சரி மாதவ் பிறகு எப்படி இவர்களின் திருமணம் நடக்கும் மதம் சாதியை பார்பவர்கள் இதற்கு ஒற்றுக் கொண்டிருக்க மாட்டார்களே!?
ஆமாம் உண்மை தான்.
இருவிட்டார்களும் நாங்கள் இப்படி அப்படி என்று விவாதிட்டு கடைசியில் முடிவை அவரவர் பிள்ளைகளிடமே விட்டுவிடுகிறார்கள்.
பிறகு என்ன நடந்தது மாதவ்?
சொல்கிறேன் கேள் அருண்.
நீங்கள் எங்களை எவ்வளவு தான் எதிர்த்தாலும் சரி நாங்கள் எங்கள் காதலை விட்டுத்தறுவதாக இல்லை. ஆனால் ஒன்று உங்கள் ஆதரவில்லாமல் இக்கல்யாணம் நடைபெறாது.
எங்களை என்னச் செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள் மரணம் ஒன்று மட்டும் திர்வாகது உங்கள் முன்பாகநாங்கள் எங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம் அப்படி ஒருவேளை வாழ்ந்துக் காட்டவில்லை என்றால் எங்கள் உயிரை நாங்களே மாய்த்துத் கொள்கின்றோம் என்றார்கள்.
மாதவ், அதற்கு அவர்களின் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள்?
ம்ம்ம் சொல்றேன் இரண்டு குடும்பமும் அவர்களை அங்கையே கைக்கழுவிச் சென்றது.
மூன்று வருடங்கள் மிகக்கடுமையான ஊழைப்பால் உயர்ந்து இச்சமூகத்தில் வாழ்ந்துக்காட்டினார்கள் அவர்களின் காதலை தியாகம் செய்து.
ஆம் அவர்களின் காதலை உடைத்துக் கொண்டு அவரவர் வாழ்க்கைத் துணைவியை வழிநடந்தி சாதித்துக்காட்டினார்கள்.
அட என்ன மாதவ் ஆசையா காதலிச்சவங்க ஏன் கல்யாணம் பண்ணிக்காமல் பிரிந்தார்கள்? இதற்கா இருவரும் கஷ்டப்பட்டு காதலித்தார்கள்?
இல்லை அன்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து திருமணம் செய்திருந்தால் இவர்களின் நிலைமை யோசித்துக்கூட பார்த்திருக்க முடியாது இரண்டில் ஒரு இடத்தில் ஆணவக் கொலை நடந்திருக்கும்.
ஆனால் இவர்களின் காதலை பிரிந்து சமூகத்தில் சாதி மதம் கடந்தவை காதல் என்பதை நிரூபணம் செய்துக் காட்டவேண்டுமென்று நன்றாக யோசித்து பிரிந்தார்கள்.
எச்சமூகம் நம்மை ஒன்று சேரவிடவில்லையோ அதை மாற்றும் வழியாக முன்னோடியாக நாம் இருக்க வேண்டுமென்று ஒற்றைக் கருத்துடன் பிரிந்தார்கள்.
ஆம் அவர்களின் குழந்தைகளுக்கு சாதி மதம் பார்க்காமல் காதல் திருமணத்தை நடத்திக் காட்டினார்கள் இச்சமூகத்திற்கு மனிதவுணர்களை விட மத சாதி உணர்வுக்கு எப்போதுமே முக்கியமில்லை என்பதை விளக்கினார்கள்.
மாதவ், ஆனாலும் அவர்கள் செய்தவை தவறு தானே இவர்களின் பிள்ளைகளின் திருமணத்தால் என்ன பெரியமாற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றது?
என்னது தவறா? அன்றே அவர்கள் திருமணம் செய்திருந்தால் அது கொலைக் கதையாக முடிந்த்திருக்கும். சமூக ஒற்றுமையின்மை இல்லாமல் கலவரம் வரை சென்றிருக்கும் ஆனால் அவர்கள் யோசித்தவையே வேறு.
மனிதர்களிடம் சாதி மத ஏற்றுத்தாழ்வுகளை போக்க வேண்டுமானால் காதல் திருமணம் ஒன்றே திர்வு என்றாலும் அதை ஏற்கும் பெற்றோர்களாக மாறுவதே சரி. அப்போது தான் இச்சமூகத்தை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது அதை தான் அவர்களும் செய்துக் காட்டியுள்ளார்கள். அன்று ஒரு திருமணம் நடக்க தடையாக இருந்த சாதி மதமும் இன்று நான்கு திருமணத்தை எவ்வித தடையுமின்றி நடத்தினார்கள். இந்த நிகழ்வை பார்த்தவர்களின் மனதிலும் இத்தாக்கம் புகுந்திருக்கும். யோசிக்க வைத்திருக்கும். நிச்சயம் சாமூக மாற்றம் நடைபெறும் என்று சாதிக்கவைத்தார்கள். காதலர்களின் நம்பிக்கைக்கும் பெற்றோர்களின் தரத்தையும் மேல்நோக்க செய்தார்கள்.
காதலில் மத சாதியால் பிரிந்தவர்களின் மனம் திருந்தினால் போதும் இச்சமூகத்தில் மாற்றம் கொண்டு வரமுடியும்.
சமத்துவம் நம்மிடம் தான் உள்ளது.
மிக அருமையா சொன்னீங்க மாதவ்.
இது கதையா?
இல்லை என் வாழ்க்கையில் நடந்தவற்றை சொன்னேன் என்றார் மாதவ்.