காடுவெறித்து மண்ணில் ஒரு கடவுளின் இருப்பு
மலர்விழிக்கு வயிறு நிறைய பிள்ளை வாழ்க்கையோ மறு துருவம் வாழ்க்கை என்றால் என்ன? உடல் கூடி உயிர் மறக்கும் நிலையல்ல வாழ்வு உயிர் ஒன்றுபட்டு பொருந்தாமல் போனால் இருட்டு யுகத்தின் தனிமை சூனியம் தான்.
ஆம் மலர்விழி அன்றைய இருள் கனத்த யுகத்தில் அவள் துன்பம் அவளோடு. காலையில் இருந்து எதையோ யாசித்து வரம் கேட்டு அவள் முழு உபவாசமாய் அவள் அந்த தனியறைக்குள் ஒரே குப்பைக் காடாய் அது இருக்கையில் நிறை மாதக் கர்ப்பிணியான அவளுக்கு மூச்சு விடுவதே ஒரு சவாலாக, இருந்தது எனினும் இதை விட்டால் வேறு விதியில்லை, இது விதி வகுத்த ஒரு பாவக் கணக்கு பாவியர் உலகில் அவள் அவள் கன்ணீர் விட்டாலும் கதறிஅழுதாலும் கேட்க நாதியற்றுப் போன நிலை அவளுக்கு
அவள் எதை வரம் கேட்டு, தவமிருக்கிறாள்? பிறவி வேண்டாமென்றா, காலையிலிருந்து வெறும் பச்சைத் தண்ணீர் கூட அருந்த மனமின்றி, அவளுடைய இந்த நெடுந் தவம் அவளைத் தாலி கட்டி ஏற்றுக் கொண்ட, கணவனுக்கே இதைத் தட்டிக் கேட்க சுரணையில்லை. அவன் எப்படிக் கேட்பான்? அன்பு இருந்தால் தானே அடி நெஞ்சில் ஈரம் வரும்.
வேண்டா வெறுப்பாக ஒரு கல்யாணம் அவனுக்கு முத்தவளாய் அக்கா ஒருத்தி இருக்க அவனை விலங்கு மாட்டித் தான் இங்கு வந்து கொழுவி விட்டார்கள் அப்படி ஒரு விபரீதம், விபத்து நடந்ததற்கு அவளா பொறுப்பு? எல்லாம் புரோக்கரின் வேலை காசு செய்த கொடுமை.
அவள் நல்லவன் ஒருவனை மனம் விரும்பி காதலித்து இருக்க அந்த இலட்சியவாதி, மாமனிதனைபுறம் தள்ளி விட்டு, இவளைக் கருவறுத்து கொன்று விடுவதற்கே இந்த பாவக் கணக்கு அவள் தலை மீது வந்து விடிந்தது.
அவள் கணவனுக்கு நீதி மன்றத்தில் ஒரு சாதாரண கிளார்க் வேலை. குடும்ப பளு சுமக்கிற, நிலையில் உயர் பதவி வேண்டிய, ஒரு இண்டர்வியூவில் கலந்து கொள்வதற்காகவே நேற்று மாலை அவன் கொழும்புக்கு புறப்பட்டு போயிருக்கிறான். அவன் திரும்பி வர ஒரு கிழமைக்கு மேலாகும் அதற்குள் தாய் வீடு போய் வாழ்ந்து களிக்க வேண்டுமென்பதை முன் வைத்தே, அவளின் இந்த பட்டினிப் போராட்டம் அந்த வீட்டில் யாரும் அதைக் கண்டு, கொள்ளவில்லை அவளுக்குத் தெரியும் இது தேவ பூமியல்ல சாத்தான் வசம் தான் இவர்கள் இருப்பெல்லாம் அவள் கணவனின் தந்தையே இதற்கு காட்டி பெரும் கிரிமினல், அவரோடு மோதியே அவள் சாக வேண்டிய நிலை
மங்கலான இருட்டிலே அவள் கிடக்க, வாசலுக்கு வெளியே அவர் குரல் கேட்டது
உனக்கு அங்கு அலுவல்லில்லை.
அவள் முழு விழிப்புமாக இருந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதுவும் முழுப்பட்டினியோடு கேட்க நேர்ந்த துயரம். அவளுக்கு ஒரு மகாபாரதப் போரே இங்கு நடக்கிறது சின்னாபின்னமாக, உடைந்து சிதற அவளுக்கு இப்படியொரு வாழ்க்கை பெற்ற வீடும் பிறந்த பொன் நாடும் என்றால் அவளுக்கு உயிர். அதெப்படி அங்கு அவள் போகாமலிருக்க முடியும். பாலும் பழமும் பஞ்சணை சுகமுமாய் என்னவொரு தேவலோக வாழ்க்கை, அவளுக்கு அப்படிச் சொல்வதும் தவறு. தர்மம் கோலோச்ச ஒரு சாந்தி மண்ணில் வாழ்ந்து, களித்த அவள் ஒரு சாதாரண மானுடப்பிறவியல்ல அவள் கால் பதித்து நடந்த இடமெல்லாம் தெய்வீகம் உயிர்த்தெழும் சாந்தி இருப்பு ஒன்றே தவமாயவவந்து, நிற்கும் பிறர் துயரம் கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கிற அவளுக்கா இப்படியொரு தீக்குளிக்கும் சோதனை.
வாழ்க்கை பூட்டிக் கொண்ட, கல்யாண விலங்கின் நிமித்தமே அவள் கழுவாய் சுமந்து கரை ஏற முடியாமல், கண்ணீர் கடலில் மூழ்கி செத்து விட இருக்கிறாள். அவள் அப்படி செத்தாலும் மகிழ்ச்சி கொண்டுகிற ஒரு கணவன் தான் அவளுக்கு. அவன் மட்டுமல்ல ஆம் மனித நேயம் படைத்த புண்ணிய லோகமல்ல அது அந்தப் பிணம் தின்னும் காட்டிலே தான் வந்து வாழவல்ல செத்து தொலைந்து போக, இப்படியொரு தீக்குளிக்கும் நிலைமையில் அவள்.
மாமாவின் அந்த பாவக் கறை படிந்த வாயிலிருந்து வேதமா வரும். பூதம் தான் வந்தது அதைக் கேட்டும் கோபம் வரவில்லையென்றால் உண்மையில் அன்பு வழிபாடு ஒன்றே, நிலை பெற்ற அவள் ஓர் ஆதர்ஸ தேவதை தான் உமையில் அதைக் கேட்க நேர்ந்த, பாவத்திற்காக, அவள் நிலை குலைந்து குமுறி வெடித்து ஆவேசம் கொண்டு, அவரை அப்படியே பஸ்பமாக்கி கொன்று தீர்ப்பதற்கு பதிலாக அவள் ஒரு சமாதான தேவதையாக சாந்தி இருப்பில் அவள் ஆற்றுகின்ற இந்த அருந்தவ வாழ்க்கைக்கு மேலாக அவள் பெறக் கூடிய வெற்றி இனி என்ன வரப் போகிறது. நீதி செத்தவிட்ட மண்ணின் கறை கூட படியாமல் பளிங்கு உயிர் வார்ப்பாய் அவள் புனிதம் காத்து நிற்கிறாளேயென்றால் அவள் கொண்டு வந்த பிறந்த வீட்டின் மகிமையை என்னவென்று விபரித்து எழுதுவது?பழுதற்றஅவள் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு அவளை விழுங்கிக் கொண்டிருக்கும் அந்த இருட்டுக் குகையே போதும் மனிதம் வாழாத காடு வெறித்த அம் மண்ணில் அவள் இப்படி சாகக் கிடக்கிறாளே இதை அவள் அம்மா அறிந்தால் அவ்வளவு தான்.
அவளை இப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாறற அந்த நெடுந் தொலைவிலிருந்து பஸ் ஏறி வந்தும் விடுவாள். அவள் வரவில் வீடே பற்றி எரியும் அவர்கள் பார்வையில் அவள் ஒரு சூனியக் காரியாம் என்னவொரு விவஸ்தை கெட்ட அறியாமை மனம் அவர்களுக்கு யாரை எங்கே வைத்து கணிப்பதென்று புரியாமல் அவர்களை சூழ்ந்திருக்கிற அந்தகாரம் . அதை எதிர்த்து போர் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை அவளுக்கு மிலேச்ச குணம் மேலோங்கி வாழ்ந்து கெடுகிறவர்களுக்கு முன்னால் தெய்வீக இருப்பிலே நிலை கொண்டிருக்கும் அவள் தூசுக்கு சமம் இங்கு நிகழும் அவளின் பூரணஉபவாச வேள்வி கூட வெறும் கேலிக் கூத்தாகவே அவர்களுக்குப் படும் அப்படுதலினல் தான் அவர் உணர்சி சூடேறிக் கிடந்தது. ஒரு மிருகம் முன்னாலிருந்து கர்ச்சிப்பது போல் பட்டது அதை உள் வாங்கிய சோகம் மாறாமல். அவரிடம் நீதி கேட்கும் ரணகளாமாய் பற்றி எரியும் நெஞ்சத்தோடு அவள் வாசலைகடந்து ஆவேசமாய் வெளியே வரும் போது, அவர் ஒன்றுமே நடவாத பாவனையில் அவர் வழக்கம் போல முற்றத்து சாய்மனையில் படுத்தபடியே சுருட்டு பற்ற வைத்துக் கொண்டிருந்தார் சுருட்டு பிடிப்பது அவர் பொழுது போக்கல்ல;
அதுவே ஜீவதாரம் வெளிவராந்தாவுக்குப் போனால் அந்த மணத்திலேயேகுடலைப் புரட்டிக் கொண்டு வரும் அத் தொழிலும் ஒழுங்காக நடப்பதில்லை. சாராயக் குடி வேறு ஒரு குடிகாரன் வீட்டில் கொள்ளைக் காரன் வீட்டில் வாழ வந்த பேதை அவள் அவனை எதிர்த்து தர்மத்தின் சார்பாகவும் சத்தியத்தின் பொருட்டும் நீதி கேட்டு புறப்பட்டு வந்த ஒரு தர்மதேவதை போல அவளெழுச்சி கொண்டு வந்திருக்கிறாள் அடி வயிற்றில் நெருப்பையே சுமந்து நின்ற அவள் கோலம் பெரும் காலாக்கினியாய் வந்து அவனை சூழ்ந்து எரிப்பது போல அந்த வீடே தடுமாறிப் போனது எனினும் சுதாரித்துக் கொண்டு அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க எதிர்த்திசையிலிருந்து அவள் குரல் ஆக்ரோஷமாய்க் கேட்டது.
என்ன சொன்னியள்?
உனக்கு அங்கை அலுவலில்லை என்கிறன் இதை நூறு தடவை சொல்லுவன். நீ போ எழுந்திருச்சு அலுவலை பார்.
போதும் நிறுத்துங்கோ மாமா இந்த உறவு முறையே எனக்கு மறந்து போச்சு இதைச் சொல்லுறதுக்கு வெட்கப்படுறன் நான் கேக்கிறன் நான் எங்கையி ருந்துவந்தனான் ஒன்றும் ஆகாயத்திலிருந்து வரேலையே ஒரு புண்ணிய பூமியிலிருந்து வந்திருக்கிற என்னைப் பாத்து என்ன கதை சொல்லுறியள்? நான் ஒன்றும்மிருகத்துகுப் பிறக்கேலை கோவில் மாதிரி என்ரை வீடு, அப்பா அம்மா எல்லாம் என்ரை தெய்வங்கள்
அதைக் கேட்டு நிலமும் அதிர்ந்தது அவரும் வாயடைத்துப் போய் பேசும் திராணியற்று கிடந்தார் போட்டாளே ஒரு போடு அவள் முன்னால் காடு பற்றிக் கிடக்கிறது. மனிதர்களெல்லம் அங்கு வாழும் மிருகங்கள். மிருகமாய் பிறப்பவனுக்கே இப்படி புத்தி ஸ்தம்பித்துப் போகும் நாக்கு தடம் புரளும் இதை சொல்லிக் காட்ட அவள் யார்? அந்த வீட்டிற்கு வந்த ஒரு தேவதை அவள் சொன்னதைக் கேட்ட பிறகுஅவருக்கு மட்டுமல்ல அதைக் கேட்க நேர்ந்த அவமானத்தால் அவர்களுக்கும் தான் பேச நா எழவில்லை.