கஷ்டங்களே அனுபவங்களாக

வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகம் வரவில்லை என்றால் நமக்கு பல விஷயங்கள் தெரியாமலே போய்விடும்.
சங்கர் என்கிற ஒரு தொழிலதிபர் இருந்தார் அவர் பல தொழிலுக்கு முதலாளியாக இருந்தார்.
இவர் சங்கர் ஓட்டல், சங்கர் மளிகை கடை, சங்கர் துணிக்கடை ,சங்கர் ஆட்டோ, சங்கர் டிராவல்ஸ் என இவர் பல தொழிலுக்கு முதலாளியாக இருந்தார். இவருக்கு சண்முகம் என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு நாள் சங்கரிடம் வந்து, நீ மட்டும் எப்படி இத்தனை தொழிலுக்கு முதலாளியாக இருக்கிறாய். எப்படி, இத்தனை தொழில்களை செய்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு சங்கர் எனக்கு பல தொழில்களின் விஷயங்களைப் பற்றி தெரியும் எனவே என்னால் இத்தனை தொழில்களையும் நம்பிக்கையாக செய்ய முடிகிறது என்றான். அதற்கு சண்முகம் அதுதான் எப்படி என்று கேட்டார்,
சங்கர் அதற்கு என் தந்தை எனக்கு அறிவு தெரிவதற்கு முன்பே இருந்து போய்விட்டார் என் தாய் எனக்கு அறிவு தெரிந்த உடன் இருந்து போய்விட்டார். மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலைக்கு ஆளானேன். அதன் பிறகு என்னை நானே பார்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு முதலாவது ஒரு ஓட்டலில் பாத்திரங்களை கழுவும் வேலைக்கு சேர்ந்தேன் சிறிது நேரம் அங்கே வேலை பார்த்தேன் ஹோட்டல் எப்படி நடத்துவது என்று கற்றுக் கொண்டேன்,
பிறகு எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடை கடைக்கு மளிகை சாமான் போடுவார் அவருடன் சிறிது நாள் கூட வேலை செய்தேன். அதன்பிறகு ஒரு டிராவல்ஸ் ஏஜென்சியில் வண்டிகளை சுத்தம் செய்யும் வேலைக்கு சேர்ந்தேன். அங்கிருந்த ட்ராவல்ஸ் உரிமையாளர் எனக்கு ஆட்டோ ஓட்டும் வேலையை கற்றுக் கொடுத்தார் அங்கே நான் ஆட்டோவும் ஓட்ட கற்றுக் கொண்டேன் டிராவல்ஸ் எப்படி நடத்த வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன், பிறகு எனக்கு சிறுவயதில் நெருங்கிய நண்பர் ஒருவன் இருந்தான் அவன் துணிக்கடையை நடத்தினான் அவனுடன் சிறிது காலம் பார்ட்னராக இருந்தேன் இவ்வளவு விஷயங்கள் தொழிலில் எனக்கு தெரியும். ஒவ்வொரு படியாக தொழில் பற்றி கற்றுக் கொண்டேன்.
ஒவ்வொரு இடத்திலும் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு ஒவ்வொரு வேலையும் கற்றுக் கொண்டேன். இப்பொழுது நான் கற்றுக் கொண்ட வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கி நானே முதலாளியாக இருந்து நடத்துகிறேன்
“நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகம் வரவில்லை என்றால் நமக்கு பல விஷயங்கள் தெரியாமலே போய்விடும்”
என்று சங்கர் அவர் நண்பர் சண்முகத்தை பார்த்து இதுதான் நான் கடந்து வந்து பாதை என்று சொன்னார்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 57