கலைவாணரின் கண்டிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 40 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலைஞர்க்கும் கண்டிப்புக்கும் மிகத் தொலைவு என்று சொல்வதுண்டு. ஆனால் இதற்கு விலக் கானவர் டீன் ஸ்விஃப்ட்டு என்ற ஆங்கில ஆசிரி யர். 

ஸ்விஃப்ட்டிடம் மிகுதியும் அன்பும் நன்மதிப் புங்கொண்ட செல்வர் ஒருவர் அவரை விருந்தினராகப் பாராட்டி வரவேற்றார். அச்செல்வரின் பணி யாளும் முறைப்படி ஸ்விஃப்ட்டின் பணியாளை விருந்தினனாக மதித்துப் பாராட்டினான். 

ஸ்விஃப்ட்டு அச்செல்வரிடம் விடைபெற்று வர நேரமாயிற்று. அதற்குள் செல்வரின் பணி யாள் உதவியால் ஸ்விஃப்ட்டின் பணி யாள் தன் குதிரை மீதேறி ஸ்விஃப்ட்டுடன் செல்ல ஆயத்தமாக நின்றான். ஸ்விஃப்ட்டு வந்ததும் அவருக்கும் குதிரை ஏறச் செல்வரின் பணியாளே உதவிசெய்ய வேண்டியதாயிற்று. 

குதிரையிலேறியதும் ஸ்விஃப்ட்டு தம் பணி யாளை மகிழ்ந்து நோக்கிய வண்ணம், செல்வர் பணியாளைச் சுட்டிக்காட்டி, “எனக்கு உதவி செய்த இந்நண்பனுக்கு இரண்டு வெள்ளி பரிசு கொடுக்க லாமல்லவா?” என்றார். 

பணியாளன் ‘கொடுக்கலாம்’ என்றான். 

பணியாள் இச்சிறு நிகழ்ச்சியை ஒரு நாகரிக முறை என்றெண்ணி மறந்துவிட்டான். 

ஆனால் ஊதியம் பெறும் நாளில் ஸ்விஃப்ட்டு தம் பணியாளுக்கு ஊதியத்தில் இரண்டு வெள்ளி யைக் குறைத்துக் கொடுத்தார். அவன், “ஐயனே! இரண்டு வெள்ளி குறைவுற்றதே,”என்று கேட்க, அவர், “உனது தொழிலை ஒருவனுக்குக் கொடுப் பது உனது பொருளை ஒருவனுக்குக் கொடுப்ப தையே ஒக்கும் என்று உணர்க!” என்றார். 

வேலையாள் தன் பிழையறிந்து வெட்கினான். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *